Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலன்(ம்) பெயர்ந்தவனின் புலம்பல் -(பாகம் 2) - உதுவும் சுத்தத் தமிழ் கதை தான்..

Featured Replies

பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு சுத்தத் தமிழ் படிப்பிக்கிறதைப் பற்றியும் அதுகளுக்கு திருக்குறள் திருவருட்பயன் எண்டு வாய்க்குள்ளை நுழையாததை எல்லாம் பாடமாக்கச் சொல்லி அதுகளும் கிளிப் பிள்ளையைப் போல பாடமாக்கி ஒப்புவிக்கிறதைப் பற்றியும் அதுகள் தமிழை வெறுத்து ஒதுக்கிறதைப் பற்றியும் போன பதிவிலை எழுதியிருந்தன்.

இந்த முறையும் இந்த சுத்தத் தமிழ் த்திலை தண்ட விசயத்தைப் பற்றித் தான் கதைக்கப் போறன்.

தூய தமிழ் எண்ட விசயத்தைப் பற்றி சில பேர் கதைக்கினம். எங்கடை தாய் மொழி தூய்மையானதா பிறமொழிக்கலப்பில்லாமல் இருக்க வேணும் எண்டு சொல்லிப் போட்டு அது தமிழ் இல்லை இது தமிழ் இல்லை எண்டெல்லாம் கதைக்கினம். தங்கடை இஸ்டப்படிஒவ்வொருத்தரும் புதுப்புது தமிழ் சொல்லுகளை கண்டுபிடிச்சு அதுகளைப் பாவிக்கினம்.

ஆனால் இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்த உலகத்திலை இந்த சுத்தத் தமிழ் எண்ட சங்கதி எவ்வளவுக்குச் சாத்தியம் எண்ணதிலை எனக்குச் சந்தேகம் இருக்குது.

உலக ஓட்டத்திலை ஒரு மொழி நிலைச்சு நிக்க வேணுமெண்டால் அது நெகிழ்வுத் தன்மை உடையதா இருக்க வேணும் எண்டது தான் என்ரை கருத்து.

மொழி எண்ணுறது ஒரு தொடர்பு ஊடகம். அப்படிப்பட்ட மொழி கதைக்கிறதுக்கு லேசானதா எல்லாரும் பாவிக்கக் கூடியதா இருக்க வேணும். கணித பாடம் மாதிரியோ அல்லது விஞ:ஙான பாடம் மாதிரியோ யோசிச்சு யோசிச்சுக் கதைக்க எழுத வேண்டியிருந்தால் அது மொழியா இருக்காது.

நாங்கள் காலங் காலமாப் பாவிச்ச சொல்லுகளை எல்லாம் அது தமிழ் இல்லை. இது தமிழ் இல்லை எண்டு சொல்லுறதைப் பாத்தால் தமிழ் எண்ட சொல்லும் தமிழோ இல்லையோ எண்டு சந்தேகம் வருகிது.

இப்படித்தான் எனக்குத் தெரிஞ்ச ஒராள் ஒரு இங்கிலிஸ் கட்டுரையைத் தமிழ் படுத்தித் தரச் சொல்லித் தந்தார்.நானும் தமிழாக்கிக் குடுத்தன். அதிலை ஒரு வசனத்தை 'இந்த நாடுகளில் இருக்கும் தமிழ் சமூகத்தின் வர்த்தக நிலையங்கள் குறித்த புள்ளி விபரம் திரட்டப்பட வேண்டும்' எண்டு எழுதியிருந்தன்.

அதை வாசிச்சுப் போட்டு அந்தப் பெரியவர் தம்பி இதிலை தமிழில்லாத சொல்லெல்லாம் போட்ரடிருக்கிறீர். தமிழ் தமிழ் எண்டு கதைக்கிற நீரே இப்படிச் செய்யலாமோ எண்டு என்னை ஒருபிடி பிடிச்சார். (செல்லமாத் தான்)

அவர் சொன்னது சமூகம் எண்டு வராமல் குமுகம் எண்டு வர வேணுமாம். வர்த்தக நிறுவனங்கள் எண்டு வராமல் அங்காடி என வர வேணுமாம்.

தமிழ் குமுகத்தின் அங்காடிகள் எண்டதைப் பாக்க நல்லாத் தான் இருக்குது. ஆனால் தமிழீழத்திலை பிறந்து தமிழிலேயே படிச்சு வந்த எங்களிலை கன பேருக்கே இந்த வசனம் சிதம்பர சக்கரத்தைப் பேய் பாக்கிற மாதிரி இருக்குதெல்லோ. அப்ப இந்த ஊரிலையே பிறந்து வளந்து தமிழை ரெண்டாம் மொழியாக் கதைக்கிற பிள்ளைகளின்ரை நிலமை எப்படி இருக்கும்.

இங்கை தமிழ் படிப்பிக்கிற ரீச்சர் ஒராள் சொன்னா தான் ஒரு கட்டுரை எழுதச் சொல்ல பிள்ளையொண்டு ஆரோ தமிழ் தெரிஞ:ச ஒராளைப் பிடிச்சு நல்ல திறமான கட்டுரை ஒண்டை எழுதிக் கொண்டு வந்ததாம். அதிலை இந்தக் குமுகம் எண்ட சொல்லைக் கண்டிட்டு தான் பிள்;ளை எழுத்துப் பிழை விட்டிட்டுதாக்கும் எண்டு நினைச்சு சமூகம் எண்டு திருத்தி விட்டிட்டாவாம்.

அப்படியெண்டால் நாங்கள் அடுத்தவங்களின்ரை சொல்லைக் கடன் வாங்கி அதைப் பாவிக்கிறது சரியோ எண்டு நீங்கள் கேக்கிறது என்ரை பாம்புக் காதுக்குக் கேக்குது.

அதிலை என்ன பிழை இருக்குது? உதாரணத்துக்கு இங்கிலீசைப் பாருங்கோ! இங்கிலிசுக்குச் சொந்தமான ஒறிஜினல் சொல்லுகள் 3000 தானாம். மிச்ச சொல்லுகள் எல்லாம் பிறி மொழிகளிலை இருந்து உள்வாங்கினது தானாம். அப்படி உள்வாங்கித் தானே இண்டைக்கு சர்வதேச மொழி எண்ட அந்தஸ்திற்கு வளந்து நிக்குது.

நாங்கள் என்னண்டால் அது தமிழில்லை இது தமிழில்லை எண்டு ஒதுக்கி கடைசியிலை எது தமிழ் எண்டு தெரியாமல் முழிச்சுக் கொண்டு நிக்கிறம்.

சரி இந்த விசயத்திலை என்ரை மனதிலை பட்டதைச் சொல்லி இருக்கிறன். நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டதையும் வந்து பறையுங்கோவன்.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாற்றங்களைளக்காணணும் என்பது உண்மைதான்

ஆனால் என்ன மாதிரியான மாற்றம்???

பேச்சுத்தமிழை அப்படியே எழுதுவதற்கும் ஓர் திறமை வேணும். பாராட்டுக்கள் மணிவாசகன்

உங்கள் கருத்துடன் உடன்பட்டாலும் சிறிது வேறுபடுகின்றேன் . ஒரு மொழிக்கு அதன் மொழியாழுமை , இலக்கிய ஆழுமை இன்னும் பல காரணிகள் சேர்ந்து அதை செம்மொழி என்ற தகுதியை அடைகின்றன . அதில் தமிழ் மொழியும் ஒன்று . மொழி ஒரு தொடர்பாடல் ஊடகமாக இருந்தாலும் , நான் மேலே சொன்ன காரணங்கள் அதன் ஆயுட்காலத்தை தீர்மானிக்கின்றன . ஆக தமிழில் போதிய மொழிவழம் உள்ளது . அது வேறு மொழிகளிடமிருந்து தனது மொழிவழத்திற்கு கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லை . இருக்கின்ற தமிழை சரியாகப் பாவித்தாலே அதன் ஆயுட்காலம் நீடிக்கும் . அதாவது மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு போதிய தமிழ்நூல்களோ ஆராய்சிக் கட்டுரைகள் இல்லை . இதற்கு எமது போர்சூழலும் ஒரு காரணம் . முன்பு கலாநிதி இந்திரபாலா , பேராசிரியர் கைலாசபதி , இன்னும்பல அறிஞர்கள் அளப்பரியபங்கை ஆற்றினார்கள் . ஆனால் இப்பொழுது ???????? ஒருபெரிய வெற்றிடமே உள்ளது . ஆக இதில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் வேறு மொழிகளுக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை . அதைவிட முக்கியம் ஆங்கிலத்தில் படித்தால்தான் படிப்பு என்ற அடிமைப் புத்தி இல்லாது இருக்க வேண்டும் . இந்தப்பதிவும் இந்த அடிமைப் புத்தியால் வந்தது என்றே உணருகின்றேன் . ஏனெனில் பலநாடுகளின் பிடியில் இருந்து , ஏறத்தாள பலசந்ததிகளை பறிகொடுத்து தரைமட்டமாக்கப்பட்ட ஜப்பானும் அதன் மக்களும் திரும்பி எழும்பி அடித்தவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்ததிற்கு ஒரே காரணம் அவர்களது மொழிப்பற்று , அடிமைத்தனம் இன்மை . இது நடக்குமா எங்களிடம் ??? நான் எந்தவிதத்திலும் மணியை நோகச் செய்யவில்லை . எனது ஆதங்கத்தை பதிகின்றேன் .

இதற்கு இரண்டு விடையம் அவசியம் .

1. ஒரு பல்துறை சார் குழுவை அமைத்து பாடவிதானங்களை இலகுதமிழில் உருவாக்கல் .

02. பல்கலைக்கழகங்கள் தமிழ்மொழி மூலப் படிப்பை ஊக்குவித்துக் கட்டாயப்படுத்தல் .

ஐரோப்பாவில் சில நாடுகளில் பல்கலைக்களகங்களில் தமிழ் துறை பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன . உதரணமாக ஜேர்மனியில் பேர்ளின் அல்லது பொண் பல்கலைகழகத்தில் தமிழ்துறை உள்ளது ( எனக்கு நகரம் சரியாக நினைவில்லை யாராவது திருத்திவிடுங்கள் )

http://www.yarl.com/...howtopic=101203

இது என்னால் பதியப்பட்ட இணைப்பு . இதில் எமது மொழியின் ஆழம் உள்ளது .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் தமிழ் பாடசாலையில் ஆரம்பக்கல்வி(முதலாம் வகுப்பு) பயில 100 பேர் மட்டில் சேர்வார்கள் பிறகு 5ஆம் வகுப்பு வரும்பொழுது அந்த தொகை அரைவாசியாக (50) ஆக குறையும்.7,8 ஆம் வகுப்பில் 20 ஆக வந்து உயர்தரம்(12 ) எடுப்பத்ற்கு 10 பேர்தான் இருப்பார்கள்.

பேச்சுத்தமிழாவது நிலைத்து நிற்க்க வேண்டும் என்றால் பெற்றோர்தான் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

தமிழ் மாற்றங்களைளக்காணணும் என்பது உண்மைதான்

ஆனால் என்ன மாதிரியான மாற்றம்???

கருத்திற்கு நன்றி அண்ணா!நான் நினைக்கிறேன் தொழினுட்ப ரீதியிலான கண்டுபிடிப்புகளை அவற்றின் பெயர்ககக் கொண்டேஅழைப்பதில் தப்பில்லை என்று .குறிப்பாக சிம்கார்ட் என்ற சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்என்பது என்கருத்து.காரணம் நெகிழ் வட்டு, இறுவட்டு,என்றெல்லாம்பல தமிழ் சொற்களை சொல்கிறார்கள். ஆனால் எத்தனை பேருக்கு இவை தெரியும். அடுத்ததாக விஞ:ஙானக் கண்டுபிடிப்புகளின் வேகம்அதிகம். அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து சொற்களை கண்டுபிடித்து அவற்றை மக்கள் மத்தியில் புழக்கத்தில் விடுவது கடினம்.

பேச்சுத்தமிழை அப்படியே எழுதுவதற்கும் ஓர் திறமை வேணும். பாராட்டுக்கள் மணிவாசகன்

நன்றி தமிழ்சு+ரியன்.

உங்கள் கருத்துடன் உடன்பட்டாலும் சிறிது வேறுபடுகின்றேன் . ஒரு மொழிக்கு அதன் மொழியாழுமை , இலக்கிய ஆழுமை இன்னும் பல காரணிகள் சேர்ந்து அதை செம்மொழி என்ற தகுதியை அடைகின்றன . அதில் தமிழ் மொழியும் ஒன்று . மொழி ஒரு தொடர்பாடல் ஊடகமாக இருந்தாலும் , நான் மேலே சொன்ன காரணங்கள் அதன் ஆயுட்காலத்தை தீர்மானிக்கின்றன . ஆக தமிழில் போதிய மொழிவழம் உள்ளது . அது வேறு மொழிகளிடமிருந்து தனது மொழிவழத்திற்கு கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லை . இருக்கின்ற தமிழை சரியாகப் பாவித்தாலே அதன் ஆயுட்காலம் நீடிக்கும் . அதாவது மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு போதிய தமிழ்நூல்களோ ஆராய்சிக் கட்டுரைகள் இல்லை . இதற்கு எமது போர்சூழலும் ஒரு காரணம் . முன்பு கலாநிதி இந்திரபாலா , பேராசிரியர் கைலாசபதி , இன்னும்பல அறிஞர்கள் அளப்பரியபங்கை ஆற்றினார்கள் . ஆனால் இப்பொழுது ???????? ஒருபெரிய வெற்றிடமே உள்ளது . ஆக இதில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் வேறு மொழிகளுக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை . அதைவிட முக்கியம் ஆங்கிலத்தில் படித்தால்தான் படிப்பு என்ற அடிமைப் புத்தி இல்லாது இருக்க வேண்டும் . இந்தப்பதிவும் இந்த அடிமைப் புத்தியால் வந்தது என்றே உணருகின்றேன் . ஏனெனில் பலநாடுகளின் பிடியில் இருந்து , ஏறத்தாள பலசந்ததிகளை பறிகொடுத்து தரைமட்டமாக்கப்பட்ட ஜப்பானும் அதன் மக்களும் திரும்பி எழும்பி அடித்தவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்ததிற்கு ஒரே காரணம் அவர்களது மொழிப்பற்று , அடிமைத்தனம் இன்மை . இது நடக்குமா எங்களிடம் ??? நான் எந்தவிதத்திலும் மணியை நோகச் செய்யவில்லை . எனது ஆதங்கத்தை பதிகின்றேன் .

இதற்கு இரண்டு விடையம் அவசியம் .

1. ஒரு பல்துறை சார் குழுவை அமைத்து பாடவிதானங்களை இலகுதமிழில் உருவாக்கல் .

02. பல்கலைக்கழகங்கள் தமிழ்மொழி மூலப் படிப்பை ஊக்குவித்துக் கட்டாயப்படுத்தல் .

ஐரோப்பாவில் சில நாடுகளில் பல்கலைக்களகங்களில் தமிழ் துறை பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன . உதரணமாக ஜேர்மனியில் பேர்ளின் அல்லது பொண் பல்கலைகழகத்தில் தமிழ்துறை உள்ளது ( எனக்கு நகரம் சரியாக நினைவில்லை யாராவது திருத்திவிடுங்கள் )

http://www.yarl.com/...howtopic=101203

இது என்னால் பதியப்பட்ட இணைப்பு . இதில் எமது மொழியின் ஆழம் உள்ளது .

பயனுள்ள பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா!ஏனையவர்களின் கருத்துக்களையும் பார்ப்போமே!

உங்கள் கருத்துடன் உடன்பட்டாலும் சிறிது வேறுபடுகின்றேன் . ஒரு மொழிக்கு அதன் மொழியாழுமை , இலக்கிய ஆழுமை இன்னும் பல காரணிகள் சேர்ந்து அதை செம்மொழி என்ற தகுதியை அடைகின்றன . அதில் தமிழ் மொழியும் ஒன்று . மொழி ஒரு தொடர்பாடல் ஊடகமாக இருந்தாலும் , நான் மேலே சொன்ன காரணங்கள் அதன் ஆயுட்காலத்தை தீர்மானிக்கின்றன . ஆக தமிழில் போதிய மொழிவழம் உள்ளது . அது வேறு மொழிகளிடமிருந்து தனது மொழிவழத்திற்கு கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லை . இருக்கின்ற தமிழை சரியாகப் பாவித்தாலே அதன் ஆயுட்காலம் நீடிக்கும் . அதாவது மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு போதிய தமிழ்நூல்களோ ஆராய்சிக் கட்டுரைகள் இல்லை . இதற்கு எமது போர்சூழலும் ஒரு காரணம் . முன்பு கலாநிதி இந்திரபாலா , பேராசிரியர் கைலாசபதி , இன்னும்பல அறிஞர்கள் அளப்பரியபங்கை ஆற்றினார்கள் . ஆனால் இப்பொழுது ???????? ஒருபெரிய வெற்றிடமே உள்ளது . ஆக இதில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் வேறு மொழிகளுக்கு நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை . அதைவிட முக்கியம் ஆங்கிலத்தில் படித்தால்தான் படிப்பு என்ற அடிமைப் புத்தி இல்லாது இருக்க வேண்டும் . இந்தப்பதிவும் இந்த அடிமைப் புத்தியால் வந்தது என்றே உணருகின்றேன் . ஏனெனில் பலநாடுகளின் பிடியில் இருந்து , ஏறத்தாள பலசந்ததிகளை பறிகொடுத்து தரைமட்டமாக்கப்பட்ட ஜப்பானும் அதன் மக்களும் திரும்பி எழும்பி அடித்தவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்ததிற்கு ஒரே காரணம் அவர்களது மொழிப்பற்று , அடிமைத்தனம் இன்மை . இது நடக்குமா எங்களிடம் ??? நான் எந்தவிதத்திலும் மணியை நோகச் செய்யவில்லை . எனது ஆதங்கத்தை பதிகின்றேன் .

இதற்கு இரண்டு விடையம் அவசியம் .

1. ஒரு பல்துறை சார் குழுவை அமைத்து பாடவிதானங்களை இலகுதமிழில் உருவாக்கல் .

02. பல்கலைக்கழகங்கள் தமிழ்மொழி மூலப் படிப்பை ஊக்குவித்துக் கட்டாயப்படுத்தல் .

ஐரோப்பாவில் சில நாடுகளில் பல்கலைக்களகங்களில் தமிழ் துறை பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன . உதரணமாக ஜேர்மனியில் பேர்ளின் அல்லது பொண் பல்கலைகழகத்தில் தமிழ்துறை உள்ளது ( எனக்கு நகரம் சரியாக நினைவில்லை யாராவது திருத்திவிடுங்கள் )

http://www.yarl.com/...howtopic=101203

இது என்னால் பதியப்பட்ட இணைப்பு . இதில் எமது மொழியின் ஆழம் உள்ளது .

பயனுள்ள பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா!ஏனையவர்களின் கருத்துக்களையும் பார்ப்போமே!

சிட்னியில் தமிழ் பாடசாலையில் ஆரம்பக்கல்வி(முதலாம் வகுப்பு) பயில 100 பேர் மட்டில் சேர்வார்கள் பிறகு 5ஆம் வகுப்பு வரும்பொழுது அந்த தொகை அரைவாசியாக (50) ஆக குறையும்.7,8 ஆம் வகுப்பில் 20 ஆக வந்து உயர்தரம்(12 ) எடுப்பத்ற்கு 10 பேர்தான் இருப்பார்கள்.

பேச்சுத்தமிழாவது நிலைத்து நிற்க்க வேண்டும் என்றால் பெற்றோர்தான் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.

நிச்சயமாக புத்தன்.வீட்டிலும் கல்வி நிலையங்களிலும் பேச்சுப் பயிற்சியே இன்றைய அவசிய தேவை. அது தொடர்ந்து பயன்படுத்துவதால் மட்டுமே கிடைக்கும்.இன்னொரு விடயத்தையும் இங்கே சொல்ல வேண்டும். குழந்தை தமிழ் கதைக்க வேண்டும் என்பதற்காக சண் ரீவியையும் விஜய் ரிவியையும் நம்ப வேண்டாம்.என்னுடைய மாணவி ஒருவர் (பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்) ஓரளவு சரளமாக தமிழ் பேசுவார். ஆனால் அப்புறம்,புரிஞ்ச்சிடுத்து என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். கேட்டால் சண் ரிவியின் பாதிப்பாம்...

  • கருத்துக்கள உறவுகள்

வேற்று மொழிச்சொற்களை உள்வாங்குவதால் தமிழ் மொழிக்கு குந்தகம் வராது.

காலத்திற்கேற்ப தமிழும் அதனுடன் சேர்ந்து பயணித்தால் மட்டுமே தமிழ்மொழி

இன்னும் வளர்ச்சியடையும்.

அதே!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வளக்கில் உள்ள தமிழை பாதுகாப்பது அவசியம்.

அதி தீவிர தனித்தமிழ் இயக்கம் வளக்கில் உள்ள தமிழை சிதைக்கும் முயற்ச்சியாகும். அதிதீவிர தனித்தமிழ் இயக்ககாரர் வெற்றிபெற்றால் தமிழ் சமஸ்கிரதம் போல வெறும் ஏட்டுமொழியாக அன்னியப் பட்டுவிடும்.

புலம் பெயர்ந்த தமிழ் குழந்தைகள் இன்று வளக்கில் உள்ள தமிழின் அடிப்படைகளை ழை சிறுவயசில் பெற்றோரிடம் கற்கின்றனர். தமிழ் பள்ளிக்கூடங்கள் வீட்டு தமிழின் தொடற்சியும் மேம்பாடுமாக அமையவேணும். தமிழ் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் தனித்தமிழ் பாடநூல்கள் கைவிடப் படவேணும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் நம் குழந்தைகள் பேச்சுத் தமிழ் இலங்கை இந்திய தொலைக் காட்ச்சி ஊடகங்களிலும் தமிழ் திரைப்படங்களில் இருந்துமே கற்றுக்கொள்கிறார்கள். அதனால் ஊடகங்களுக் தமிழ் பள்ளிகளும் வளக்கில் உள்ள தமிழை சிதைக்காமல் கையாளுவது அவசியம். வளக்கில் உள்ள தமிழை சிதைப்பவர்களும் அதிதீவிர தனித் தமி காரர்களுமே இன்று தமிழுக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தாகும். மற்றப்படி யதார்த்தமான தனித் தமிழ் ஆர்வலர்களின் பங்கு வளக்கில் உள்ள தமிழைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் அவசியமாகும்.

http://malaigal.wordpress.com/2012/07/02/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%90-%E0%AE%9A-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/

Edited by poet

கவனம் மணி ,ஈருந்துருளியில் வந்து வெதுப்பகத்திற்குள் தூக்கி போடப்போகினம்

  • கருத்துக்கள உறவுகள்

வெதுப்பகம்

அழகான தமிழ்மட்டுமல்ல

அர்த்தமும் (காரணம்) கூடிய சொல்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வளக்கில் உள்ள தமிழை பாதுகாப்பது அவசியம்.

அதி தீவிர தனித்தமிழ் இயக்கம் வளக்கில் உள்ள தமிழை சிதைக்கும் முயற்ச்சியாகும். அதிதீவிர தனித்தமிழ் இயக்ககாரர் வெற்றிபெற்றால் தமிழ் சமஸ்கிரதம் போல வெறும் ஏட்டுமொழியாக அன்னியப் பட்டுவிடும்.

புலம் பெயர்ந்த தமிழ் குழந்தைகள் இன்று வளக்கில் உள்ள தமிழின் அடிப்படைகளை ழை சிறுவயசில் பெற்றோரிடம் கற்கின்றனர். தமிழ் பள்ளிக்கூடங்கள் வீட்டு தமிழின் தொடற்சியும் மேம்பாடுமாக அமையவேணும். தமிழ் பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் தனித்தமிழ் பாடநூல்கள் கைவிடப் படவேணும்.

கிந்தி இங்லிஸ் எல்லாம் போட்டு ஒரு மிக்ஸ் அடிச்சு பருக்கவேனும் என்று சொல்றீங்கள்?

இருவது வருடங்களுக்கு முன்பு வீட்டில் கதைக்கும் தமிழை நாங்கள் பள்ளி தமிழ் பாடத்தில் படிக்கவில்லை. அப்போது இந்த வின்னானனங்கள் உங்களுக்கும் வரவில்லை.

இப்போ தமிழ் பள்ளியில் தமிழ் படிப்பிக்கிறார்கள் என்பது பெரும் தலியிடியாய் போச்சு.

இதைதான் நானும் தொன்று தொட்டு சொல்லிவருகிறேன் யாரும் கேட்பாரில்லை. ஒரு தமிழனுக்கு இரண்டு மனைவி வேண்டும் வீட்டு வேலைகளை பகிரவ்தட்கு அதற்கு இதற்கு என்று எவளவு இலகுவாக இருக்கும். இந்த அழுத்தங்களால் இப்போ பலர் குடும்பங்களை எட்டியே பார்ப்பதில்லை விவாகரத்து கேட்டு கோட்டைதான் பார்க்கிறார்கள். அகவே அடுத்த தலைமுறை குடும்பம் நடத்த வேண்டும் என்றால் ஒருவனுக்கு இரண்டு மனைவி. அல்லது ஒருத்திக்கு இரண்டு கணவன் என்ற எளிமையான நிலைக்கு மாறவேண்டும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் நம் குழந்தைகள் பேச்சுத் தமிழ் இலங்கை இந்திய தொலைக் காட்ச்சி ஊடகங்களிலும் தமிழ் திரைப்படங்களில் இருந்துமே கற்றுக்கொள்கிறார்கள். அதனால் ஊடகங்களுக் தமிழ் பள்ளிகளும் வளக்கில் உள்ள தமிழை சிதைக்காமல் கையாளுவது அவசியம். வளக்கில் உள்ள தமிழை சிதைப்பவர்களும் அதிதீவிர தனித் தமி காரர்களுமே இன்று தமிழுக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தாகும். மற்றப்படி யதார்த்தமான தனித் தமிழ் ஆர்வலர்களின் பங்கு வளக்கில் உள்ள தமிழைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் அவசியமாகும்.

http://malaigal.word...-ச-ஜெயபாலன்-கவ/

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

எழுதும்போது பேச்சுத்தமிழில் எழுதல் என்பது தமிழைக் கொல்லுகின்ற செயல். இது எல்லாத் தமிழர்களையும் ஒரே கொடிக்குள் கொண்டு வர உதவாது. பிற்பாடு அது ஈழத்தமிழ், மதுரைத் தமிழ் எனத் தனித்தனி மொழியாகப் பிரிந்து போகவும் செய்யக்கூடிய ஆபத்தினைத் தரக்கூடியது.

அக்காலத்தில் பாண்டியர்கள், தமிழில் கொச்சையாக, பிழையாக உச்சரிக்கும் தமிழைக் கொடுந்தமிழ் என்றார்கள். தமிழைக் கொடுத்தல் என்பது பொருளாக இருக்கலாம். சரியான தமிழாக இத்தனை காலமும் கொண்டு சேர்த்ததால் தான் என்னவோ அது இத்தனை காலமும் தன்னுடைய ஆயுளைச் சேமித்து வைத்திருக்கின்றது எனலாம்.

இந்தக் கட்டுரையாளர் சொல்கின்ற குறைபாடு என்பது, உண்மையைச் சொல்லுங்கள்? தமிழுக்கு என்று எந்த அகராதி எம்மிடம் இருக்கின்றது. ஆங்கில-தமிழ் அகராதிகள் மட்டுமே தான் இருக்கின்றவே தவிர, தமிழ் என்றால் இப்படி, இத்தனை சொற்கள் தான் தமிழில் உள்ளன என்பது பற்றி எம்மிடம் எந்த அகராதியும் இல்லை. அதை யாரும் தொகுக்கவும் இல்லை.

குறித்த நபரும் இவரிடம் அது தமிழ்ச் சொற்களா எனக் கேட்டதற்கு இது தான் காரணமாமே தவிர, இதற்காக எம் மொழியினை மாற்ற வேண்டும் என்பது எல்லாம் சுத்த முட்டாள்தனம். தமிழ்மொழியில் பற்றிருந்தால் உங்களின் நேரத்தினை ஒதுக்கி தமிழ் அகராதி, அல்லது குழந்தைகளுக்கு கற்பிக்கின்ற விதத்தில் நுால்களை உருவாக்குங்கள்.

இன்றைய புலம்பெயர் கல்வி நுால்கள் உண்மையில் குழந்தைகளுக்கு கற்பிக்கின்ற எந்தத் தரமும் கொண்டு எழுதப்படவில்லை. இதை எங்கே வந்து சொல்ல வேண்டுமானாலும் நான் சொல்வேன். எவ்வாறு ஊரில் நுால் வடிவமைக்கப்பட்டதோ, அவ்வாறு தான் உள்ளதே தவிர, புலம்பெயர்வாழ் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது பற்றி எவ்விதத்திலும் ஆராயப்பட்டு நுால் வடிவமைக்கப்பவே இல்லை.

தவிர, நுால்களில் பல ஆரிய எதிர்ப்பு, திராவிட வளர்ச்சி, பெரியார், இந்திய வரலாறு என்று தேவையற்ற விடயங்களே புகுத்தப்பட்டிருக்கின்றன. புலம்பெயர் குழந்தைகளுக்கு ஏன் இந்திய வரலாறு? கனடாக் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் சமூகம் பற்றியதாகவோ, அல்லது இந்த நிலையில் எங்களின் தமிழ் ஏன் தேவைப்படுகின்றது பற்றியான அறிவுட்டலோ நுால்கள் கொண்டிருக்கவுமுில்லை.

அதை விடவும் தமிழினை எவ்வாறு இலகுவாக்கி கற்பிக்க வேண்டும் என்ற சிந்தனையும் குழந்தைகளின் ஏடுகளில் இல்லை. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு படித்த காலத்திலேயே சில இலக்கணங்கள் புரியாமல் வெறுப்பு வந்தது உண்டு. இங்கு அதைப் பற்றி இந்த நுால்கள் கவலைப்பட்டது போலத் தோன்றவில்லை.

உங்களுக்குரிய சோம்பேறித்தனம், இயலாமைகள் இலகுவான இலக்கினைத் தேட வைக்கின்ற என்பது தான் உண்மை.

வணக்கம் தூயவன்,இந்தப் பதிவு தொடர்பில் தவறான புரிதலைக் கொண்டிருக்கிறீர்கள் என் நினைக்கிறேன்.தமிழ் மொழியை மாற்ற வேண்டும் என இங்கு குறிப்பிடப்பிடவில்லை. மாறாக காலங்காலமாக தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு தமிழழாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட சொற்களை பிற மொழி என ஒதுக்காமல் அவற்றையும் உங்வாங்கி வளர்வோமே என்பதே இதன் சாரம். அதற்காகவே ஆங்கில மொழி உதாரணமாகக் காட்டப்பட்டது.மாறாக அப்பிள் பழம் என்பதற்கு குமுளிப் பழம் என்ற ஒரு சொல் எப்போது உருவானது அல்லது யாரால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை. தற்போது தனித் தமிழ் ஆர்வலர்கள் பலரும் தமது விருப்பத்திற்கேற்ற வகையில் புதிய சொற்களை உருவாக்குகிறார்கள். இவ்வாறு தமது எண்ணத்திற்கேற்ப சொற்களை உருவாக்குவதும் ஒருபுறம் இருக்க இந்தச் சொற்கள் எந்தளவிற்கு எமது பிள்ளைகளை குறிப்பாக இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்கும் பிள்ளைகளைச் சென்றடையப் போகின்றது என்பதையும் சிந்திக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.