Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா /ஒன்ராரியோவில் குடும்பத்துடன் போய்ப் பார்க்க கூடிய இடங்கள்: என் அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை பார்ப்பம் என்றால் அது வர ரொம்ப நேரம் எடுக்குதே..சரி விடுவம்....ஏன் இப்படி போகும் இடங்களில் ஏற்படக் கூடிய குருவிகளின் சத்தங்கள் மற்றும் இதர விடையங்களை பதிவு செய்துட்டு வாறதுக்கு ஏன் Recorder பாவிக்க ஏலாது..ஒரு பென் அளவில் கூட Recorder இருக்கிறது தானே..எனக்கு இதில் எல்லாம் சத்தியமாக அனுபவம் ஒன்றும் இல்லை..சும்மா கேக்கிறன்..

Edited by யாயினி

கனடாவில இவ்வளவு விசயம் இருகோ, உந்த குறுக்கால போனதுகள், சங்கானை சந்தைக்கும், ஒடியல் கூழ் என்றும் ஒட்டம் காட்டி களைக்க பண்ணிபோட்டுதுகள். அடுத்த முறை வந்தால் தம்பியை தான் ஆலோசனை கேட்க வேணும்.

நல்ல பதிவு நிழலி. கனடா வரும் பொழுது தங்களை தனி மடலில் தொடர்பு கொள்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பிரயோசனமான பதிவு

  • 2 years later...
  • தொடங்கியவர்

7.  Pinery Provincial Park

2r1zqz6.jpg

ஒன்ராரியோவில் இருக்கும் காடு சார்ந்த பூங்காக்களில் ஒன்று இந்த காடு. கிச்சினர், வோட்டர் லூ வெல்லாம் தாண்டிச் செல்லும் Grand bend கடற்கரை (ஏரி) நகரத்தில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

6gg0w9.jpg

கோடை விடுமுறையில் காட்டுக்குள் சென்று முகாமிடுகின்றவர்களுக்கு ஏற்ற அழகான ஒரு இடம். பைனரி மரங்கள் சோலையாக வளர்ந்து இருக்க, கரையில் இருந்து 200 மீற்றருக்கும் அதிகமான தூரத்துக்கு இடுப்பளவு தண்ணீர் நிரம்பிய Fresh water ஏரி பரந்து இருக்க, hiking இற்கு ஏற்ற Trails கள் பல நீண்டு செல்ல, படகுச் சவாரி செய்யும் ஓடை வளைந்து நெளிய, சைக்கிள் ஓடுகின்றவர்களுக்கு ஏற்ற பாதைகள் விரிந்து செல்ல கோடைக்கு சென்று தங்கி இயற்கையுடன் நெருக்கத்தினை கொண்டாட ஏற்ற காடு இது.

2823l9y.jpg

போன வருடம் வரும் போதே இனி ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு நாட்களாவது இங்கு வந்து தங்க வேண்டும் என்று நினைத்து இருந்தமையால் இரண்டாவது தடவையாக இந்த வருடமும் இங்கு வந்து 3 நாட்கள் முகாமிட்டு இருந்தோம். 

சுத்தமான களிப்பறைகள், குடும்பத்துடன் குளிப்பதற்கு (அதாகப்பட்டது கணவனும் மனைவியும் சேர்ந்து ஒன்றாக குளிக்கக் கூடியது... :lol: .) ஏற்ற குளியலறைகள் எல்லாம் நங்கு பராமரிக்கப்படும் இடங்களில் இதுவும் ஒன்று.

இம்முறை நான் போயிருக்கும் போது 14 நாட்களாக வந்து தங்கி முகாமிட்டு இருக்கும் இரண்டு அமெரிக்க வெள்ளையின குடும்பத்தினருடனும் பழகும் வாய்ப்பு வந்தது. எம் முகாமுக்கு அருகே அழகான பெண்கள் இருவர் தம் காதலர்களுடன் வந்து தங்கி இருந்தனர்.

இங்கு வருகின்றவர்கள் மறக்காமல் செய்யும் விடயங்களில் ஒன்று அங்கு விற்கப்படும் ஐஸ் கிறீமினை ஒரு முறையேனும் உண்பது. ஒரு Scoop பே போதும் வயிறு நிறைவதற்கு.

u4fw1.jpg

இப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் Grand bend கடற்கரை பிரசித்தி பெற்ற கடற்கரைகளில் ஒன்று.  குளிப்பதற்கும் பல அழகானவர்களை கண்டு கழிப்பதற்கும் ஏற்ற இடம்.

14sfeia.jpg

பூங்காவுக்கான இணையத்தளம்: http://www.pinerypark.on.ca/

ரொரன்டோவில் இருந்து இங்கு வருதற்கு கிட்டத்தட்ட 3:30 மணி நேரம் எடுக்கும்.  விவசாய நிலங்கள், தோட்டங்கள், சின்ன சின்ன கிராமங்கள் என்று அழகான ரம்மியமான இடங்களை எல்லாம் செல்லும் வழியில் காணமுடியும்.

நகர்புறத்து  இரைச்சல் நிறைந்த வாழ்க்கையை சில தினங்களாவது மறந்து இயற்கையுடன் நெக்குருவதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று இப் காடு சார்ந்த பூங்கா.

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே..... ஸ்கார்புரொவில், அதிக தமிழ் கடைகள் உள்ள வீதிகளின் படத்தையும் இணைத்தால், என்னவாம்.... :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதியைத் தொடர்வதற்கு மிக்க நன்றி நிழலியண்ணா..ஊர்வன,நடப்பன,பறப்பன கண்ணில் பட்டதா அவ்வாறன விடையங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..ஏன் எனில் கடந்த சனியும்,ஞாயிறும் மொன்றியல் வல்மோறின் கோயில் போய் இருந்த சமயம் மசுக் குட்டித் தொல்லையாக இருந்தது. ஒரு கணம் ஊரில் நிக்கிறோமா எனவும் நினைக்க தோன்றியது.
 
Edited by யாயினி

பதினான்கு வருடங்களாக இங்கு சென்று வருகிறேன்.  இன்றும் எனது நண்பனுக்கு பாதை சொன்னேன்.

நல்ல கோடையில் சென்றால் பெரிதாக தண்ணி இருக்காது, நீர் வீழ்ச்சியின் பின் செல்லலாம். 

நதியில் மட்டுமா அங்கு செல்பவர்களுக்குமா?  

நன்றி நிழலி தகவல்களுக்கு.

அப்படியே..... ஸ்கார்புரொவில், அதிக தமிழ் கடைகள் உள்ள வீதிகளின் படத்தையும் இணைத்தால், என்னவாம்.... :rolleyes:  :D

ஒன்றா, இரண்டா, ஸ்காபுரோவில் உள்ள அத்தனை  வீதிகளையும் அல்லவா படம் எடுத்து இணைக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா, இரண்டா, ஸ்காபுரோவில் உள்ள அத்தனை  வீதிகளையும் அல்லவா படம் எடுத்து இணைக்கவேண்டும்

சிறி, நீங்கள் ஜேர்மனியில் அல்லவா... வசித்து வந்தனீங்கள்.

இப்போ கனடா வாசியாகி விட்டீர்களா? அல்லது அங்கு விடுமுறையில் நிற்கிறீர்கள?

சிறி, நீங்கள் ஜேர்மனியில் அல்லவா... வசித்து வந்தனீங்கள்.

இப்போ கனடா வாசியாகி விட்டீர்களா? அல்லது அங்கு விடுமுறையில் நிற்கிறீர்கள?

தற்போது விடுமுறையில் கனடா வந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது விடுமுறையில் கனடா வந்துள்ளேன்.

ஜேர்மன் வெறுத்துப் போய்.... கனடாவிற்கு  குடி பெயர்ந்து விட்டீர்களாக்கும் என்று..... நான் நினைத்தேன். :D

அதானே.... ஆருக்கும், ஜேர்மன் வெறுக்குமா?images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

இந்தப் பகுதியைத் தொடர்வதற்கு மிக்க நன்றி நிழலியண்ணா..ஊர்வன,நடப்பன,பறப்பன கண்ணில் பட்டதா அவ்வாறன விடையங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..ஏன் எனில் கடந்த சனியும்,ஞாயிறும் மொன்றியல் வல்மோறின் கோயில் போய் இருந்த சமயம் மசுக் குட்டித் தொல்லையாக இருந்தது. ஒரு கணம் ஊரில் நிக்கிறோமா எனவும் நினைக்க தோன்றியது.

யாயினி, வல்மோறின் கோயில் ( Val Morin) மொன்றியலில் இல்லை. மொன்றியலில் இருந்து 93km தூரத்தில் அமைந்துள்ளது. 

ஜேர்மன் வெறுத்துப் போய்.... கனடாவிற்கு  குடி பெயர்ந்து விட்டீர்களாக்கும் என்று..... நான் நினைத்தேன். :D

அதானே.... ஆருக்கும், ஜேர்மன் வெறுக்குமா?images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

WM 14 முடிந்தபின்தான் இங்கு வந்தேன்.  விமான நிலையத்தால் வெளியில் வந்தால் எனது கண்ணில் தெரிந்த முதலாவது மோட்டார் வண்டியில் ஜெர்மன் கொடி பறந்தது. இங்கு இன்றும் பல மோட்டார்வண்டிகளில் ஜெர்மன் கொடி பறக்கின்றது.images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன் கொடியை பறக்க விடுறதுமட்டுமில்லாமல் அடிக்கடி ஆட்டவும் வேணும்....GermanySmily003.gif  :D

யாயினி, வல்மோறின் கோயில் ( Val Morin) மொன்றியலில் இல்லை. மொன்றியலில் இருந்து 93km தூரத்தில் அமைந்துள்ளது. 

ரொறன்ரோக் காரர் quebecஇல் உள்ள எல்லாவற்றையும் மொன்றியல் என்று தான் சொல்லுவினம்.  :lol:

WM 14 முடிந்தபின்தான் இங்கு வந்தேன்.  விமான நிலையத்தால் வெளியில் வந்தால் எனது கண்ணில் தெரிந்த முதலாவது மோட்டார் வண்டியில் ஜெர்மன் கொடி பறந்தது. இங்கு இன்றும் பல மோட்டார்வண்டிகளில் ஜெர்மன் கொடி பறக்கின்றது.images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.

ஆர்ஜென்ரினா வென்றிருந்தால் ஆர்ஜென்ரினாக் கொடி பறந்திருக்கும்.   :lol:

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.