Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பர் மாதம் முதல் மதுரை விமான நிலையத்துக்கு, முதன் முதலில் இலங்கை அரசுக்கு சொந்தமான விமானம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri-lanka-mihin_airlines-seithy9712.jpg

[size=4]வெளிநாட்டு விமானங்கள் ஏதும் இதுவரை எட்டிப் பார்க்காத மதுரை விமான நிலையத்துக்கு, முதன் முதலில் வந்து இறங்கப் போவது, இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் விமானம்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் நடத்தப்படும் மிகின் ஏர் விமான நிறுவனத்தின் விமானங்கள் வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து மதுரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]டில்லியிலுள்ள இந்திய விமான நிலைய அதிகார மையம் (AAI Airports Authority of India) மிகின் ஏர் விமானங்கள் வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) மதுரையில் தரையிறங்க அனுமதி வழங்கியுள்ளது. கொழும்புவில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இலங்கை விமானத்தின் வருகையுடன், மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலைய அந்தஸ்தை பெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்த நிலையில், மத்திய அரசின் அனுமதியும் கிட்டியுள்ளது.[/size]

[size=4]அனைத்தும் சுமுகமாக நடைபெற்றால், செப்டெம்பர் முதல் வாரத்தில் இருந்து மிகின் ஏர் விமானங்கள் மதுரையில் இருந்து பறக்க துவங்கிவிடும் என அறிவித்துள்ளார், விமான நிலைய இயக்குநர் கே.சங்கையா பாண்டியன். இலங்கை அரசுக்கு சொந்தமான முழு சேவை விமான நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளது.[/size]

[size=4]குறைந்த கட்டண சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டதுதான், மிகின் ஏர். இலங்கை அதிபர் பெயரில் உள்ள மகிந்த என்பதை சிங்கள மொழியில் சுருக்கமாக அழைக்கும் செல்லப் பெயர் தான், (nickname), மிகின். இப்ப இது மதுரையில் உள்ள சின்னாளம் பட்டு வியாபாரிகளை டாகட் பண்ணி பிசினசை ஆரம்பிக்கிறது. சுருக்கமா சொல்லப்போனால், தமிழர்களிடம் பணம் [/size]

[size=4]http://seithy.com/br...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வெளிநாட்டு விமானங்கள் ஏதும் இதுவரை எட்டிப் பார்க்காத மதுரை விமான நிலையத்துக்கு, முதன் முதலில் வந்து இறங்கப் போவது, இலங்கை அரசுக்கு சொந்தமான smiley4997.gif நிறுவனத்தின் விமானம்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் நடத்தப்படும் மிகின் ஏர் விமான நிறுவனத்தின் விமானங்கள் வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து மதுரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.[/size]

[size=4].... அனைத்தும் சுமுகமாக நடைபெற்றால், செப்டெம்பர் முதல் வாரத்தில் இருந்து மிகின் ஏர் விமானங்கள் மதுரையில் இருந்து பறக்க துவங்கிவிடும் என அறிவித்துள்ளார், விமான நிலைய இயக்குநர் கே.சங்கையா பாண்டியன்.[/size]

[size=4]http://seithy.com/br...&language=tamil[/size]

smiley5900.gifsmiley5907.gifsri-lanka-mihin_airlines-seithy9712.jpgsmiley6765.gif

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் வேலைக்கு ஆகாது .. போராட்டம் எல்லாம் பண்ணி துரத்தி விடுவார்கள்.. அதெல்லாம் கவலைபட தேவையில்லை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உள்ள எமது சகோதரர்கள் இதற்க்கான எதிர்ப்பை தெரிவித்து மகிந்தரின் மிகின் ஏர் விமான நிறுவனத்தின் விமானங்கள் மதுரைக்கு வருவதை தடுக்கவேண்டும்.

அதையும் மீறி வந்து இறங்கும் விமானத்தை திரும்பாது மதுரைக்கே சொந்தமாக்கவேண்டும். :D

கப்பல் சேவை, பிரத்தியேக ரயில் சேவை, இப்போது மிகின் சேவை. இதில் வந்திறங்கும் கள்ள நோட்டுக்களுக்கு மதுரை என்ன சுரங்க அறையா? பட்டுத்தொழிலாளரை வருத்தி மிகினுக்கு கோடி சேர்க்க குடும்பி போடும் திட்டமா இது. கள்ள நோட்டு வருவதை தெரிந்து கொள்ள தமிழ்நாட்டு அரசு பூரண அதிகாரத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுகொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் நாட்டை கள்ள நோட்டுமூலம் பாகிஸ்தானும் மகிந்தாவும் கொள்ளை அடிக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எங்கட சனங்களில் பலர் இந்த விமானத்தில் பயணம் செய்வார்கள். புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் எங்கட சனங்களுக்கு டில்மா தேனீர் குடித்து, சிங்களத்து நாட்டின் நெக்டோ பருகி, சிங்கள தேசத்து விமானத்தில் பறப்பது என்றால் கொள்ளை ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குமுன் இலங்கை விமானசேவை மதுரைக்கு செல்லவில்லை என்பது ஆச்சரியம். பலாலியிலிருந்து மதுரைக்கு விமானசேவை ஒன்று முன்னர் இருந்ததாக ஞாபகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் எங்கட சனங்களில் பலர் இந்த விமானத்தில் பயணம் செய்வார்கள். புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் எங்கட சனங்களுக்கு டில்மா தேனீர் குடித்து, சிங்களத்து நாட்டின் நெக்டோ பருகி, சிங்கள தேசத்து விமானத்தில் பறப்பது என்றால் கொள்ளை ஆசை.

உதென்ன பெரியவிசயம்........இஞ்சை ஜேர்மன்லை ஒரு இடத்திலை இருக்கிற தமிழ்ச்சனம் அத்தனையும் ஒண்டாயே வெளிக்கிட்டு சிரீலன்காவிலை ரூர் அடிக்குதுகள்....அதுக்குள்ளையும் இரண்டுமூண்டு குடும்பம் போகேலாமல் போச்சுதாம்....காரணம் காசு எண்டு நினைக்காதேங்கோ........சிற்றிசன் இன்னும் எடுக்கேல்லையாம் :icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.