Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கொளுத்தும் வெயிலில் சிங்களத்து சிங்காரிகளின் விளம்பரக் காட்சிகள் (படம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் பார்வையிலேயே எல்லாம் தங்கியுள்ளது

ஒரு சாதாரண மனிதன்

தனது அன்றாட தேவைகளைப்பூர்த்தி செய்வதையே முதலாவதாக பார்ப்பான்

ஒரு வியாபாரி

எந்தவகையில் கூடுதல் இலாபம் அடையலாம் என்றுதான் பார்ப்பான்

ஒரு போராளி

மக்களின் எதிர்கால சுபீட்ச வாழ்வை மழுங்கடிக்கும் ஒரு துளி விசம் எங்கிருந்தாவது வருகிறதா என்பதிலும் அதை தடுப்பதிலும் கண்ணாக இருப்பான்.

அவரவர் பார்வையிலேயே எல்லாம் தங்கியுள்ளது

ஒரு சாதாரண மனிதன்

தனது அன்றாட தேவைகளைப்பூர்த்தி செய்வதையே முதலாவதாக பார்ப்பான்

ஒரு வியாபாரி

எந்தவகையில் கூடுதல் இலாபம் அடையலாம் என்றுதான் பார்ப்பான்

ஒரு போராளி

மக்களின் எதிர்கால சுபீட்ச வாழ்வை மழுங்கடிக்கும் ஒரு துளி விசம் எங்கிருந்தாவது வருகிறதா என்பதிலும் அதை தடுப்பதிலும் கண்ணாக இருப்பான்.

[size=5]சரியா சொன்னிங்க அண்ணா . :)[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தாயகப் பகுதியில் மூலதனமிட்டு தொழில் ரீதியாக முன்னேற வேண்டுமென்றால் இலங்கை அரசினது அனுசரணை கட்டாயம் தேவை. இலங்கை அரசில் உள்ளவர்களையும், அதனது ஆதரவாளர்களையும் தாண்டி தொழில்ரீதியாக முதலீடு செய்வது தற்போதைக்குச் சரிவராது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். மேலும் சுயமாகத் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும் கப்பம் கொடுக்காவிட்டால் உயிராபத்து உள்ளது. இதனால்தான் வட கிழக்குத் தவிர்ந்த பிறபகுதிகளில் பல்வேறு தொழில்துறைகளில் முன்னேறியுள்ள தமிழர்கள் ஏன் வீண் வம்பை விலக்கு வாங்கவேண்டும் என்று தாயகப் பகுதியில் முதலீடு செய்வதில்லை.

கிருபன் அண்ணா நீங்கள் சொல்வதும் உண்மை தான் மறுப்பதற்கில்லை,

ஆனால் உடல் உழைப்புக்களுக்கு கூட ஆட்கள் இல்லாமல் சிங்களன் வந்து வேலை செய்கிற நிலையில் தான் யாழ்ப்பாணம் இருக்கு என்பது தான் கசப்பான உண்மை. :(

இன்றைக்கு மேசன் வேலைக்கு ஆக்கள் இல்லாமல் சிங்களவன் வந்து செய்யுறான்.

தளபாடம் கூட சிங்களவன் தான்,புல்லு பிடுங்க,வெங்காயம் நட ஆக்கள் இல்லை, ஆட்டோ,கார்,மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்கு ஸ்டிக்கர் ஒட்ட,பெயின்ட் அடிக்க இன்னும் பல இஸ்தியாதி..இஸ்தியாதி வேலைக்கு எல்லாம் சிங்களவன் தேவை என்றால் யாருடைய தப்பு?

எங்கண்டையள் வெளிநாட்டுக்காசிலை உடம்பு வளர்க்குதுகள், படிச்சவங்க கூட டொக்டர்,எஞ்சினியர் இல்லாட்டி அரசாங்க வேலை.

சும்மா இருக்கிறதுக்கு தொழில் செய்வம் என்று இல்லை, இல்லை என்றால் இப்படியான வேலை எல்லாம் கௌரவக்குறைச்சல் என்றால் யார் தப்பு?

குஞ்சியாச்சி வீட்டை வந்து லொக்குபண்டா வேலை செய்யிற அளவுக்கு நிலமை இருக்கும் போது சிங்களவன் சோப்பு விக்குறான்,சீப்பு விக்குறான்,ம*** பிடுங்குறான் என்று சொன்னால் இந்த நிலைக்கு யார் காரணம்?

முதல் திருந்த வேண்டியது நாம். அவனல்ல..

நாம் உணராத வரையில் இதையும் விட அதிகம் நடக்கும்.. நாம் உணரும் போது எதுவும் இருக்கப்போவதும் இல்லை. இது தான் உண்மை :( :(

எங்களுடைய எல்லாமே வெறும் கானல் நீர் தான். இன்னொரு சிக்கோயினா ஈழத்தமிழர். :wub::(

[size=2](கிருபன் அண்ணா உங்களை காயப்படுத்தும் விதத்தில் எதுவும் எழுதவில்லை,பொதுவாகவே எழுதினேன். உங்களை கஸ்டப்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.)[/size]

  • கருத்துக்கள உறவுகள்
stop-war-patch.jpg

சிங்கள வியாபாரிகள் மோசடி ஏமாறும் முல்லைத்தீவு மக்கள்; வர்ணக் கோழிக்குஞ்சுகள் வெண்ணிறமாகும் அதிசயம்

தென்பகுதியிலிருந்து வரும் சிங்கள வியாபாரிகள் முல்லைத்தீவுப் பகுதியில் மக்களைப் பல்வேறு வழிகளிலும் ஏமாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இராணுவத்தினரின் ஆதரவு இருப்பதால் சிங்கள வியாபாரிகளின் தில்லுமுல்லுகள் பற்றி வாய்திறக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

Color_chicks_for_sale.jpg

முல்லைத்தீவு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு எட்டியும் பார்த்திராத தென்பகுதி சிங்கள வியாபாரிகள் போருக்கு பின்னர் இங்கு தாராளமாக நடமாடுகின்றனர். இராணுவத்தினரின் பூரண பாதுகாப்பு இவர்களுக்கு இருப்பதால் அச்சமின்றிப் பல இடங்களுக்கும் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விதவிதமான பொருள்களுடன் வரும் சிங்கள வியாபாரிகள் அவற்றை எப்படியாவது இங்குள்ள மக்களின் தலையில் கட்டிவிடுவதில் குறியாக உள்ளனர்.

இவ்வாறான சிங்கள வியாபாரிகள் சிலர் அண்மையில் முல்லைத்தீவுக்கு கோழிக்குஞ்சுகளோடு வந்தனர். மிகவும் தந்திரமான வகையில் கோழிக்குஞ்சுகளுக்கு விதவிதமான சாயங்களைப் பூசி, அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நல்லினக் கோழிக்குஞ்சுகள் என்று கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர். இதனை நம்பி முல்லைத்தீவு மக்களும் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கி உள்ளனர்.

எனினும் பல வர்ணங்களில் காட்சியளித்த அந்த நல்லினக் கோழிக்குஞ்சுகள் சில நாள்களில் சாயம் வெளுத்து, வெண்மை நிறத்துக்கு மாறிய பின்னர்தான் தாம் ஏமாற்றப்பட்ட விடயம் மக்களுக்கு புரிந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் மோசடிப் பொருள்களுடன் வரும் இத்தகைய சிங்கள வியாபாரிகளால் மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. ஆனால் இத்தகைய மோசடி வியாபாரிகள் மீது பொலிஸாரோ, படையினரோ நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை எனவும் மாறாக இந்த வியாபாரிகளுக்கு படையினர் துணை புரிந்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

http://www.pathivu.com/news/21609/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை... சிவப்பு.. நீலம்.. குங்குமப்பூ.. கோழிக்குஞ்சு எங்கையாவது இருக்குது... இதை சிங்களவன் காட்ட.. பார்த்து ஏமாறிற அளவிலா முல்லைத்தீவு மக்கள் இருக்கினம்.

பச்சையோ.. சிவப்போ.. நீலமோ.. குஞ்சு வளர்ந்து கோழியா வந்து முட்டை போடுமில்ல.. அது வெள்ளைக் கோழி போட்டாலும்.. முட்டை தானே..! ஏதோ கோழிக்குஞ்சாவது கிடைச்சுதே என்று சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்.

ஏன்.. இப்ப தானே அரசாங்க சிவில் அலகுகள் வேலை செய்யுது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் இருக்குத் தானே. அதனை மக்கள் பாவிச்சா இப்படியான ஏமாற்று பேர்வழிகளை சட்ட ரீதியில் கட்டுப்படுத்தலாமே..! சிங்களவன் மட்டுமல்ல.. நம்ம முஸ்லீம் நானாக்களும் இந்த ஏமாற்று வேலையைச் செய்யலாம்.. ஏன் நம்மாக்களும் இதைச் செய்யலாம். மக்கள்(நுகர்வோர்) :) தான் விழிப்போட இருக்கனும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா நீங்கள் சொல்வதும் உண்மை தான் மறுப்பதற்கில்லை,

ஆனால் உடல் உழைப்புக்களுக்கு கூட ஆட்கள் இல்லாமல் சிங்களன் வந்து வேலை செய்கிற நிலையில் தான் யாழ்ப்பாணம் இருக்கு என்பது தான் கசப்பான உண்மை. :(

இன்றைக்கு மேசன் வேலைக்கு ஆக்கள் இல்லாமல் சிங்களவன் வந்து செய்யுறான்.

தளபாடம் கூட சிங்களவன் தான்,புல்லு பிடுங்க,வெங்காயம் நட ஆக்கள் இல்லை, ஆட்டோ,கார்,மோட்டார் சைக்கிள் போன்றவற்றுக்கு ஸ்டிக்கர் ஒட்ட,பெயின்ட் அடிக்க இன்னும் பல இஸ்தியாதி..இஸ்தியாதி வேலைக்கு எல்லாம் சிங்களவன் தேவை என்றால் யாருடைய தப்பு?

எங்கண்டையள் வெளிநாட்டுக்காசிலை உடம்பு வளர்க்குதுகள், படிச்சவங்க கூட டொக்டர்,எஞ்சினியர் இல்லாட்டி அரசாங்க வேலை.

சும்மா இருக்கிறதுக்கு தொழில் செய்வம் என்று இல்லை, இல்லை என்றால் இப்படியான வேலை எல்லாம் கௌரவக்குறைச்சல் என்றால் யார் தப்பு?

குஞ்சியாச்சி வீட்டை வந்து லொக்குபண்டா வேலை செய்யிற அளவுக்கு நிலமை இருக்கும் போது சிங்களவன் சோப்பு விக்குறான்,சீப்பு விக்குறான்,ம*** பிடுங்குறான் என்று சொன்னால் இந்த நிலைக்கு யார் காரணம்?

முதல் திருந்த வேண்டியது நாம். அவனல்ல..

நாம் உணராத வரையில் இதையும் விட அதிகம் நடக்கும்.. நாம் உணரும் போது எதுவும் இருக்கப்போவதும் இல்லை. இது தான் உண்மை :( :(

எங்களுடைய எல்லாமே வெறும் கானல் நீர் தான். இன்னொரு சிக்கோயினா ஈழத்தமிழர். :wub::(

[size=2](கிருபன் அண்ணா உங்களை காயப்படுத்தும் விதத்தில் எதுவும் எழுதவில்லை,பொதுவாகவே எழுதினேன். உங்களை கஸ்டப்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.)[/size]

தமிழர்கள் எல்லாம் சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள் என்றில்லை. நீங்கள் சுட்டுவது வெளிநாட்டுப் பணத்தில் ஊர் உலாத்துபவர்களுக்குப் பொருந்தும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். அதேவேளை வெளிநாட்டுச் உறவுகளின் உதவியின்றியும் பலரும் இருக்கின்றனர். அவர்கள் சோம்பேறிகளாக இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். அவர்களுக்கு வேலைகளைச் செய்யத் தகுதிகளும் அனுபவங்களும் இல்லை. எனவே அனுபவம் நிறைந்த வெளியூர்க்காரர்கள் வந்து செய்யவேண்டிய நிலை. சரியான முறையில் பயிற்சிகளை வழங்கினால் தமிழர்களாலும் கட்டுமானத்துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யமுடியும்.

தனிநாடு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இப்போது கோழிக்குஞ்சுப்பிரச்சனையில் வந்து நிற்கின்றது. சோப்பு, சீப்பு, கோழிக்குஞ்சு... பார்ப்போம்... இனி தும்புமிட்டாஸ், ஐஸ்பழம், சுவிங்கம், கடலை, தோடம்பழ இனிப்பு இன்னும் பல சில்லறைகள் பாக்கி உள்ளன. காத்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்னு புரியல்ல.. கொழும்பில.. பெட்டாவில.. வெள்ளவத்தையில.. பம்பலப்பிட்டியில.. கொல்பிட்டியில..கொட்டகேனவில.. நம்ம தமிழ் ஆக்கள் கடை வைச்சிருக்கல்லையா..???! அங்க சிங்களவன் சாமான் வாங்கலையா. அதில கலப்படம் இருக்கல்லையா..???!

வியாபார நோக்கமா.. மக்கள் (எவர் என்றாலும்) இடம்விட்டு இடம் போறது தப்பில்ல. சொந்தமா நிலம் வாங்கி.. அதில வியாபாரம் செய்யுறது தப்பில்ல. அப்படி அது தப்புன்னா.. மேற்கு நாட்டில ஒரு தமிழனும் இருக்கப்படாது.

பலவந்தமாக நிலங்களை பறிச்சு.. இராணுவ இயந்திரத்தை ஏவி.. மக்களை விரட்டிட்டு.. சிங்களவனை.. முஸ்லீமை குந்திங்க வைக்கிறது தான் தப்பு. அதுதான் இன அழிப்புக்கான.... திட்டமிட்ட குடியேற்றம். அதை எதிர்க்கிறதுக்கும்.. ஏழை.. மத்திம.. சிங்கள.. முஸ்லீம் வியாபாரிங்க வந்து.. வியாபாரம் செய்திட்டு அவங்க ஊருக்கு திரும்பிப் போறதை எதிர்க்கிறதும் ஒன்றல்ல. பின்னையது உண்மையில தமிழர்களின் தப்பு...!

சிங்களவன் வியாபாரம் பண்ண வந்திட்டு.. திரும்பிப் போகாம.. இராணுவத்தை ஏவி விட்டு.. நிலம் பறிச்சு.. நிரந்தரமா குந்திக்கிறது தான் தப்பு. உழைச்சு பணம் சம்பாதிச்சு அதில நிலம் வாங்கி குந்தினா.. அதை நாங்கள் தடுக்க முடியாது. அது மக்கள் எல்லோருக்கும் உள்ள உரிமை தான். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா இங்க தான் நீங்க நிக்கிறிங்க.... I லைக் இட்

எனினும் பல வர்ணங்களில் காட்சியளித்த அந்த நல்லினக் கோழிக்குஞ்சுகள் சில நாள்களில் சாயம் வெளுத்து, வெண்மை நிறத்துக்கு மாறிய பின்னர்தான் தாம் ஏமாற்றப்பட்ட விடயம் மக்களுக்கு புரிந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் மோசடிப் பொருள்களுடன் வரும் இத்தகைய சிங்கள வியாபாரிகளால் மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. [size=5]ஆனால் இத்தகைய மோசடி வியாபாரிகள் மீது பொலிஸாரோ, படையினரோ நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை எனவும் மாறாக இந்த வியாபாரிகளுக்கு படையினர் துணை புரிந்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். [/size]

இந்த தும்பு முட்டஸ் காலியில், அப்பாந்தோட்டையில் விற்கப்படுவதாக இந்த நீயூஸில் இல்லை. நியூசை விளங்கத்தக்க நிலையில் கரும்பு இல்லை. என்ன சொல்ல வருகிறார் என்று விரிவாக எழுதினால் பதில் எழுத முடியும். சறுக்கிச் சறுக்கி சேட்டை விட்டு போராடத்தை கொச்சை படுத்திவிட்டதாக மனதுக்குள் புளுகப் படுவதால் பெரிய தனிப்பட்ட ஆதாயம் வராது. ஏதற்காக போராடத்தை எப்படி இதில் இணைக்கிறார் என்பதை விளங்க வைப்பார் என்பது எனது நம்பிக்கை.

ஒருவேளை புளு பிலிமும், கஞ்சாவும் வித்து ஆமிக்காரர் அலுத்துப்போய்விட்டார்கள் போலிருக்கு. இப்போது சிங்களச் சிறுக்கிகள் சவுக்காரக்காரிகளாக வருகிறார்கள். இதில் கருணாவின் வாதம் கிழக்கில் இல்லை வட்க்கிலும் யாரும் காணிகள் வாங்கி தாம் விரும்பியயடி வியாபாரங்கள் செய்யாலாம் என்பது. இவரகள் 1956 ம் ஆண்டுக்கு நிலைகளுக்கு திரும்பி 65% உத்தியோகங்களையும் தமிழருக்கு தரத்தாயாரா?

நான் சிறுவனாக இருந்த போது வீட்டுக்கு மட்டும் அல்ல தமிழ் நாடகங்களிலும் வரும் சவுக்காரக்காரிகள் தமிழ் பெண்களாவே மட்டும் தான் இருந்தார்கள். மொன்றியலுக்கு இப்படி ஆங்கிலம் மட்டும் தெரிந்த விற்பனை உத்தியோகத்தர்களை ஒரு டொரண்டோ தும்பு முட்டாஸ் கம்பனி அனுப்பி வைக்குமா ? அரசியல் தலைக்குள் ஏறுவது கஸ்டம் அரிசியியல் முதலில் ஏறிவிட்டால். அப்போது இப்படி விளங்காத நாடகங்கள்தான் போடவேண்டி வரும்.

Deceptive Advertisement எல்லாநாடுகளிலும் தண்டிக்கபடும் குற்றம். வாக்குறுத்திற்கேற்ப கோழிக்குஞ்சுகள் வளாரவிட்டால் வியாபாரி தண்டிக்க படவேண்டும். தெல்லிப்பளையில் அகதிகளுக்கு சீனாவிலிருந்து இலவசமாக அனுப்பிவைக்க பட்ட உணவுபொருள்களை வினியோகித்தற்காக அந்த உணவுப்பொருள்கள் ஆமிகளால் பறிமுதல் செய்யபட்டது. காரணம் தமிழர்கள் சீன மொழியில் மட்டும் இருந்த விபரங்களை வாசிக்க முடியாது என்பதாகும். இங்கே Deceptive Advertisement இல்லாவிட்டாலும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கேவலக்கெட்ட இலங்கையில் சட்டத்தை ஆமிக்காரரும் சிங்களவரும் உபயோகப்படுத்துகிறார்கள்.

நியோர்க் சிட்டியில் ஒரு சோடா கப் ஒரு அளவுக்கு மேல் இருக்கக் கூடாது, உணவுகளுக்கு எவ்வளவு உப்பு போடலாம் என்று எல்லாம் இருக்கு. தாங்கள் தெரிந்து வைத்த மேயர் கொண்டுவரும் சட்டங்களை விரும்பிய மக்கள் இரண்டு தடவைக்கு மேல் ஒருவரும் மேயராக வரக்கூடாது என்ற நியுயோர்க் சட்டத்தில் அவருக்கு விதி விலக்கு அளித்து அவரை மூன்றாம் முறையும் தெரிந்திருக்கிறார்கள். அவருக்கு குடியரசுக்கட்சியினரும் வாக்களிக்கிறார்கள். ஜனநாயக்கட்சியினரும் வாக்களிக்கிறார்கள். உலகத்தின் கோடீஸ்வரகளில் ஒருவரான புளூம் பேக்கை தெரிபவர்களில் ஜனநாயக கட்சியினர் பெரும் தொகை இருக்கிறார்கள். ஏன் எனில் அவர் செய்வது மக்களின் நனமையை கருதியே என்று நம்புவதால் அவர் சாப்பாட்டுக்குள் எவ்வளவு உப்பு போடலாம் என்று சட்டம் கொண்டுவந்த பின்னரும் மக்கள் அவரைத் தெரிந்திருக்கிறர்கள்.

Edited by மல்லையூரான்

கொடுக்கவேண்டிய விளக்கம் எல்லாம் மேலே கொடுத்தாயிற்று. இனி புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், இப்போது நான் யோசிப்பது என்ன என்றால்... யாழ்ப்பாணத்தில் உள்ள தெரிந்த யாருக்காவது இரண்டு கமெராவை வாங்கி அனுப்பிவிட்டு நானும் தாயகச்செய்திகளை மட்டும் பிரதானமாகக்கொண்டு இயங்கும் இணையத்தளம் ஒன்றைத்திறந்து சூட்டைக்கிளப்பலாமா என்று யோசிக்கின்றேன்.

யார் எனது செய்தித்தளத்திற்கு வந்து பார்க்கிறீனமோ இல்லையோ பரபரப்பாகவும், கிளுகிளுப்பாகவும், உணர்ச்சிகளைக்கிளறும்வகையிலும் இங்கு யாழில் ஊர்ப்புதினத்தில் செய்திகளை (குப்பைகளை) தினமும் தாராளமாகக் கொட்டினால் எனது தளத்தையும் தமிழ்த்தேசிய ஊடகமாக எழுப்பமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்கே பார்ப்போம்.

Superb மாப்பு எல்லாரையும் இனவாதிகள் நிற வெறியர்கள் என்று சொல்லி இப்ப நாங்க தான் இன வெறியர்களாக வந்திட்டு இருக்குறம் இதுக்குள்ள பக்கம் பக்கமா நியாTயபடுதல்கள்வேற....

த.வி.பு கூட ஒருகாலத்திலும் தமது போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் என்று கூறியது கிடையாது.

தாங்கள் எழுதுவதை திருப்பி படித்துப்பார்க்க முடியாமல் "ஏற்கனவே விளக்கம் கொடுபட்டுவிட்டதாக" குயக்கம் எழுதும் தமது குயக்கங்களை விட ஊடகங்கள் கேவலம் விடுவதாக ஏன் நடிக்கிறார்கள். செய்தவற்றை எல்லாம் செய்து விட்டு பின் அதை வெளியே சொல்ல முயலும் ஊடகங்களை கேவல வார்த்தைகளால் திட்டி தீர்க்க கோபத்தபயாவிடமா படித்தார்கள். கோழிக்குஞ்சின் நிறத்தை வைத்து அதன் பின் வரும் Deceptive Marketing தந்திரங்களை அப்பாவி மக்கள் கண்டுகொள்ள வேண்டும் என்று வாதடும் மெஞ்ஞானிகள், ஊடகங்கள் விடும் ஏமாற்றுக்களை(உண்மையில் அப்படி விடுகிறார்கள் என்றால் அதை) நம்பி தாம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டது போல கண்ணீர் வடித்துக் காட்டுவது அப்பாவித்தனம். சட்டம் ஊடகங்கள் சுதந்திரமாக எழுதவிட வேண்டும் என்கிறது. சில இடத்துச் சட்டங்கள் மக்களின் உருசைக்கான ஆர்வத்தைக்கூட தக்காதமுறையில் பாவித்து கம்பனிகள். லாபமீட்ட கூடாதென்கிறது.

இவர்கள் வசிக்கும் நாட்டின் ஊடக சுதந்திர எண் என்ன என்று கூறமுடியுமா? கோபத்தபயா ஆழும் நாடு உலகத்தில் 215க்கு கிட்டவான நாடுகளில் கடைசி நாலாம் இடத்தில் இருக்கிறது அங்கேயா ஊடகங்கள் அளவிற்க்கதிகமாக, தான்தோன்றித்தனமாக, அரசாங்கத்துக்கெதிராக கோழிக்குஞ்சுக்கதை எழுதுவதாக கூற வருகிறார்கள். இவர்கள் ஏன் தாம் எழுதுபவற்றுக்கு விளக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பதற்கு இதையும் விட யாழ்கள வாசகர்களுக்கு இன்னொரு விளக்கம் தேவையில்லை.

நிச்சயமாக யாழ்ப்பாணத்திற்கு நண்பர்களிடம் கமெறா கொடுத்து படம் எடுத்து பிரசுரிக்க வேண்டிய தேவை தாயகத்தில் இருக்கிறது. கோழிகுஞ்சுகள் மாதிரி படங்களை எடுத்து உங்கள் நண்பர்கள் பிரசுரிப்பது மட்டுமல்ல வேளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் கொப்பிகள் அனுப்பி விட வேண்டும் என்று கேட்டுகொள்ளுகிறேன். இந்த வியாபாரங்களின் நோக்கங்கள் என்ன என்று அவர்களும் புரிந்து கொள்வார்கள். அவர்களின் வெளிநாடுகளிளாயின் கோழிகுஞ்சுக்கு பூச்சு அடிக்க முயன்ற வியாபாரியை மிருகவதை தடுப்புக்கள் இதுவரையில் சிறைக்கு அனுப்பியிருக்கும்.

இவர்கள் சுதந்திர நாடுகளில் வசித்துக்கொண்டு ஊடகங்கள் யாழ்பாணத்திற்கு வெளியே அங்கே நடப்பவற்றை கொண்டுவந்து காட்டிவிடுகிறதென கவலைப்பட்டு போராடத்தை கொச்சை படுத்தமுயன்று சொல்ல வந்ததற்கு விளக்கம் சொல்லமுடியாமல் ஊடகங்கள்மீது பழியைபோடுவது சுத்த சுயநலம். என்ன இதுவும் கோபத்தபயாவின் ஊடக எதிர்ப்புக்கு யாழில் இலவச இன்னொரு விளம்பரமா? விளக்கம் தெரியாதவற்றை போதிக்க வரும் நோக்கம் என்ன?

Edited by மல்லையூரான்

த.வி.பு கூட ஒருகாலத்திலும் தமது போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் என்று கூறியது கிடையாது.

ஏன் இந்த மடக்கு எழுத முயலும் முயற்சி. புலிகளின் கொள்கை பற்றியதில்லை இந்த திரி. இன்னொருதடவை விளக்கம் இல்லாமல் போய்விட்டதா? புலிகள் இருந்த காலத்தில் சிங்கள வியாபாரிகள் வன்னியில் பூச்சடித்த கோழிக்குஞ்சுகள் விற்றார்கள் என்பது போல விளக்கம் இல்லாத கதை யாருக்கும் வேண்டுவதல்ல.

சட்டங்களுக்கு அமைவாக சிங்கள தேசங்களில் தமிழரால் வைத்திருந்த கடைகள் எரிக்கபட்டதை சிங்கள ஊடகங்கள் கண்டிக்காததையோ, அல்லது அரசிலிருந்து யாரும் கேட்கவாரததையோதான் எதிர்த்து போராடத்துவங்கினார்கள். நிச்சயமாக அவர்கள் தமிழரின் பொருளாதார, கருத்து, மொழி சுதந்திரங்களுக்காகத்தான் போராடினார்கள். யார் யார் எல்லாம் தமிழரின் எதிரிகளோ அவர்களை எல்லாம் எதிர்க்கத்தக்க வழிமுறைகளை தேடினார்கள். புலிகள் போராடியது ஜனநாயக முறையால் சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசங்கங்களுக்கெதிராக. அந்த அரசாங்கங்கள் சிங்கள மக்களின் விருப்புக்களைத்தான் பிரதிபலித்தார்கள். இந்த மகால்தான் 7க்கும் மேற்பட்ட இனக்கலவரங்களை நடத்தியவர்கள். இனக்கலவரங்கள் போர் மாதிரி இராணுவத்தால் நடத்தப்படுவதல்ல. ஒரு இன மக்கள் இன்னொரு இன மக்களைத்தாக்குவதுதான் அது. இரண்டாம் உலக போரின்போது மனித உரிமையை மிகவும் மதிக்கும் கனடா கூட(அமெரிக்கா மட்டுமல்ல) பாரிய அளவில் யப்பானியர்களை தடுப்புக்காவலில் போட்டார்கள். அதன் கருத்து கனேடியர் கனடாவில் இருந்த யப்பானியருடன் இரண்டாம் உலகயுத்தம் நடத்தினார்களா என்று கேட்பது ஒரு கேள்வியாக முடியாது.

Edited by மல்லையூரான்

ஓர் சொதப்பல் செய்திக்கு வியாக்கியானம் கற்பிக்கும்வகையில் தாங்கள் இன்னோர் சொதப்பல் செய்தியைப்புகுத்தியாயிற்று. உங்களுடன் விதண்டாவாதம் செய்து பக்கம், பக்கமாக திரியை நீட்டுவதைவிட வேறு பல வேலைகள் எனக்கு உள்ளன. நன்றி, வணக்கம்!

(கோத்தாபாயாவின் வலதுகரமும், மகிந்தாவின் இடதுகரம் நானே. சிறீ லங்காவில் ஏதும் உதவி தேவைப்படின் அறியத்தாருங்கள். ^_^ )

தமிழனின் அழிவிற்குத் தமிழனே காரணம். தமிழன் எப்போது பொதுநலத்துடன் சிந்திக்கிறானோ அப்போதுதான் எமது இனத்தின் விடிவை நோக்கி நாம் சிந்திக்கவே முடியும்.

ஓர் சொதப்பல் செய்திக்கு வியாக்கியானம் கற்பிக்கும்வகையில் தாங்கள் இன்னோர் சொதப்பல் செய்தியைப்புகுத்தியாயிற்று. உங்களுடன் விதண்டாவாதம் செய்து பக்கம், பக்கமாக திரியை நீட்டுவதைவிட வேறு பல வேலைகள் எனக்கு உள்ளன. நன்றி, வணக்கம்!

(கோத்தாபாயாவின் வலதுகரமும், மகிந்தாவின் இடதுகரம் நானே. சிறீ லங்காவில் ஏதும் உதவி தேவைப்படின் அறியத்தாருங்கள். ^_^ )

அந்த சொதப்பல் செய்திகளை தாங்களும் செய்து காட்ட திறமை இருப்பதாக எனக்கு சவால் விட்டு விட்டு, நான் தாங்கள் செய்து காட்டவேண்டும் என்று கோரிக்கைவிட்ட பின்னரா ஊடக செய்திகள் எல்லாம் விதண்டவாதமாக மகிந்த சித்தாந்த ஞானம் பிறந்தது? :lol: :lol: :lol:

சிறீ லங்காவில் ஏதும் உதவி தேவைப்படின் அறியத்தாருங்கள்.

சிறிலங்கா, தமீழம் போன்றவற்றிலிருந்து எடுத்து அனுப்ப போவதாக கூறிய படங்களை மட்டும் எடுத்து அனுப்பிவைத்தால் இப்போதைக்கு மிக்க உதவியாக இருக்கும்.

:D :D :D

எனக்கு ஏதும் மனஸ்தாபம் இல்லை. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். இது கருத்துகளம் மட்டும்தான். யாரும் எதையும் எழுத முடியும்.

இப்போதைக்கு வணக்கம் :D

Edited by மல்லையூரான்

கொடுக்கவேண்டிய விளக்கம் எல்லாம் மேலே கொடுத்தாயிற்று. இனி புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், இப்போது நான் யோசிப்பது என்ன என்றால்... யாழ்ப்பாணத்தில் உள்ள தெரிந்த யாருக்காவது இரண்டு கமெராவை வாங்கி அனுப்பிவிட்டு நானும் தாயகச்செய்திகளை மட்டும் பிரதானமாகக்கொண்டு இயங்கும் இணையத்தளம் ஒன்றைத்திறந்து சூட்டைக்கிளப்பலாமா என்று யோசிக்கின்றேன்.

யார் எனது செய்தித்தளத்திற்கு வந்து பார்க்கிறீனமோ இல்லையோ பரபரப்பாகவும், கிளுகிளுப்பாகவும், உணர்ச்சிகளைக்கிளறும்வகையிலும் இங்கு யாழில் ஊர்ப்புதினத்தில் செய்திகளை (குப்பைகளை) தினமும் தாராளமாகக் கொட்டினால் எனது தளத்தையும் தமிழ்த்தேசிய ஊடகமாக எழுப்பமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்கே பார்ப்போம்.

[size=4]பொதுவாக யாழில் இணைக்கப்படும் செய்திகளை அவை களத்தின் விதிமுறைகளை மீறாவிடின் அவற்றை இணைப்பதில் எந்த தவறும் இல்லை. [/size]

[size=1]

[size=4]இணைக்கப்படும் செய்திகள் குப்பையா? இல்லை குண்டுமணியா? என்பதை நாளடைவில் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். வாசகர்களின் கருத்திற்கு ஆதரவுக்கு அமைய ஒரு ஊடகம் தேசிய ஊடகமாக வளரும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.