Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டில் தமிழர்கள் படும் துன்பங்கள்

Featured Replies

கள உறவுகளே, நீங்கள் வெளிநாடு வரும்போது அல்லது வந்த பின்னர் பல துன்பங்களை அனுபவித்திருப்பீர்கள்.

எனவே நீங்கள் பட்ட துன்பங்களை இங்கு எழுதுங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் பட்ட அல்லது பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களையும் இங்கு எழுதுங்கள். உங்கள் பிரச்சினை என்று குறிப்பிட விரும்பாதவர்கள் உங்கள் நண்பர்களுக்கு நடந்தது போலும் எழுதலாம். அன்றாடம் நீங்கள் காணும் பிரச்சினையையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இது ஏனைய மக்களுக்கு வெளிநாட்டில் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளை அறிய தரும் சந்தர்ப்பம் என்பதுடன் சில சம்பவங்கள் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையாக அமையும்.

அகதியாக/மாணவ விசாவில்/ திருமணம் செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் பொதுவான திரி..... இது நான் ஆரம்பித்து வைக்கும் திரி என்பதால் உங்களுக்கு எழுத தெரியுமோ தெரியாதோ என்று கவலைப்பட தேவையில்லை. அனைவரும் எழுதலாம்.

முதலாவதாக....

ஜீவா அண்ணா வேறொரு திரியில் தான் பட்ட துன்பத்தை கூறியிருந்தார். அதனை இங்கு இணைக்கிறேன்.

நான் வெளிநாடு போகவேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை எதிர்பாராத விபத்து.

சிவனே என்று படிச்சிட்டு,ஊர் பொடியளோடை மதகிலும்,பாலத்திலும்,ரோட்டிலும் இருந்து அரட்டை அடிச்சு உறவுக்கார வைத்தியர் ஒருவரின் டிஸ்பென்ஸரியில் அவருக்கு உதவியாக அப்பப்ப நின்று பழகி அவற்றை புத்தகங்களைத்தான் வாங்கி படிச்சு கொண்டு இருந்தனான். தினமும் பஸ்சில் போய் வரும்போது வல்லை,இருபாலையில் எல்லாம் ஆமி மறிச்சு சோதனை செய்யும் போது பாக்கில் இருக்கும் ஸ்டெதஸ்கோப்,மாணவர் அடையாள அட்டை பார்த்ததும் உடனே போய் பஸ்சில் ஏறச்சொல்லுவான். வயது போனவர்கள் கூட இறங்கி நடக்கும் போது கல்விக்குரிய மரியாதை தரப்படும் போது மனதில் வரும் சந்தோசம் வார்த்தையில் சொல்லவே முடியாது.

இது நீண்ட காலம் நிலைக்கவில்லை ஒன்றுவிட்ட அண்ணா இனந்தெரியாதவர்களால் காரணம் தெரியாமல் சுட்டுக்கொல்லப்பட்டதும் சிறிது பயம் காரணம் கோவத்தில் யார் சொன்னாலும் கொலை செய்யுமளவுக்கு நிலைமை இருந்தது. நான் வேறை உள்ளை இருந்த சில இயக்க தொடர்புகள்,ஊர்கோவில் நிர்வாகத்தோடு சண்டை போஸ்ரர் ஒட்டின பிரச்சனை என்று இருந்தன். இதுக்குள்ளை நான் பழகுற டிஸ்பென்ஸரியில் என்னுடைய பெயரை கேட்டு யாரோ விசாரித்தார்களாம்,என்னை வெள்ளை வான் தேடுது என்று ஊரிலை கதை. (ஆனால் உண்மையில் என்னை தேடவில்லை என்னுடைய பெயரில் இருந்த இன்னொருத்தரை என்பது பிறகு என்னுடைய பெயரில் இருந்தவரை வெள்ளை வான் கடத்தின பிறகு அதுவும் நான் ஜேர்மனிக்கு வந்த பிறகு தான் தெரியும்)

அம்மா சொல்லிட்டா என் பிள்ளை சாகுறதை பார்க்க கூடாது நீ இயக்கத்துக்கு போ என்று(ஜீவா இதை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை,சத்தியமாக உண்மை) ஆனால் பாதை பூட்டு போக முடியவில்லை. பிறகு தெரிஞ்ச ஒருத்தர் மூலம் சக்கோட்டை ஆமி பெரியவனை பிடிச்சு பாஸ் எடுத்து கொழும்பு வந்து உடனையே பாஸ் போட் எடுத்து சிங்கப்பூருக்கு வந்தன். 15 நாள் விசா தர நான் மலேசியா போட்டேன் 6 மாதத்துக்கு மேல் மலேசியா,சிங்கப்பூர் என்று மாறி,மாறி இருந்து அங்கை ஒரு ஏஜென்சி ஏத்துறேன் என்று ஏத்தலை. எனக்கு வேறை வழி தெரியவில்லை திரும்ப கொழும்பு போய் வேறு ஒரு ஏஜென்சியை நானே பிடித்து பல்கேரியாக்கு மருத்துவம் படிக்க என்று சொல்லி விசா எடுத்து தென்னாபிரிக்கா ட்ரான்சிற்றிலை ஜேர்மனி ப்ராங்போட் வந்தேன். ஜேர்மனி வரும் போது கூட நான் ரிக்கட்டை மட்டும் தான் கிழித்தேன். பாஸ்போட்,அடையாள அட்டை,மாண்வர் அடையாள அட்டை,டெபிட்காட் எல்லாமே வைத்திருந்தேன். விமானத்தில் இருந்து இறங்கி வர ஜேர்மன் போலிஸ் பாஸ்போட் கேட்க குடுத்தேன். தட்டி பார்த்திட்டு விசா எங்கை என்று கேட்க இல்லை என்றேன்.

எப்படி வந்தாய் என்றால் தெரியாது என்றேன். உடனே என்னை விமானத்திற்கு கூட்டிச்சென்று எந்த இருக்கையில் அமர்ந்தாய் என்று கேட்க 20K என்று இருக்கையை காட்ட கூட்டி எல்லாம் செக் பண்ணிட்டு

வெளிய கொண்டு வந்து என்ன வேணும் என்று கேட்டான்? ஏன் வந்தாய்? நான் சொன்னேன் ஊரிலை இருக்க முடியாது அசைலம் வேணும் என்று.

உடனை என்னை ஒரு அறைக்கு கூட்டி சென்று இருக்க வச்சு குடிக்க தண்ணி தந்து கேட்டான். எப்படி வந்தாய்? என்ன மாதிரி என்று ? ஆங்கிலம் தெரிஞ்சதால் பிரச்சனை இல்லை எல்லாம் சொல்லி முடிய 2 போலிஸ் காவலோடு பஸ்ஸில் ஏற்றி ஒரு இடத்திற்கு கொண்டு போய் பிங்கர்பிரின்ட் எடுத்திட்டு என்னுடைய ஆவணங்களை வாங்கிவிட்டு விமான நிலைய காம்ப்பிற்கு கொண்டு வந்தார்கள். மறு நாள் சொன்னார்கள் விசாரணை இருக்கு சட்ட வல்லுனர் தேவையா என்று நான் சொன்னேன் தேவை இல்லை என்று ஆனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அவர்களே கூட்டி வந்தார்கள். மறுநாள் விசாரணை நான் புலியையும் சொல்லவில்லை,ஆமியையும் சொல்லவில்லை. இனந்தெரியாத நபர்களால் பிரச்சனை என்று சொல்ல மொழிபெயர்ப்பாளர் சொன்னார் இப்படி சொல்லாதை விசா கிடைக்காது ஆமி,இயக்கம் 2பேரையும் சொல்லு என்று. நான் சொன்னேன் பரவாயில்லை நான் சொன்னதை அப்படியே மொழிமாற்றச்சொல்லி. எல்லாம் முடிந்ததும் மறுபடி பொலிஸ் வாசிச்சுக்காட்ட சரி சொல்லி கையெழுத்து வைக்க 2 நாளின் பின் வேறு இடம் மாற்றினார்கள் அங்கு 2கிழமை இருக்க மறுபடி டுசில்டோவ் இல் விசாரணை அதுக்கும் அவர்களே மொழிபெயர்ப்பாளரை வைத்திருந்தார்கள். சொன்னதையே அப்படியே ஒப்புவித்தேன். முடிந்து வெளியே வர 3மாத விசா தந்து வேறு காம்புகு போக சொன்னர்கள் அங்கு போய் ஒரு மாத காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் அவர்களே வீடு எடுத்து தந்தார்கள் அங்கு தான் இருக்க முடியும் வெளியே செல்வதென்றால் அனுமதி பெற்று போக வேணும். படிக்க போறேன் என்று சொல்லி போக 3மாத விசாவிலை படிக்க முடியாது என்றார்கள்.

1€ வேலைக்கு போக சொல்லி கடிதம் வந்தது 3,4 மாதம் போனேன் வீதி துப்பரவு பணி. அப்போ தான் செத்தாலும் ஓரிலை இருந்திருக்கலாம் என்று தோணிச்சுது. தலை எழுத்தை நினைத்து நொந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டேன். திரும்ப போய் படிக்கட்டா என்று கேட்டேன். நல்ல காலம் நான் அந்த வேலை செய்ததால் கருணை காட்டி என்னை 3மாதம் ஜேர்மன் படிக்க அவர்களே காசும் குடுத்து,போக்குவரத்து செலவும் தந்தார்கள். அதற்கு பிறகு படிக்க இந்த விசாவுக்கு அனுமதி இல்லை என்று சொல்லியாச்சு 2008, 5ம் மாதம் வந்தனான் 2010 ரிஜெக்ட் பண்ணி வந்திச்சுது அதுக்கு பிறகு லோயரிடம் போய் வழக்குக்கு கோட்டுக்கு கூப்பிட போனேன். எந்த மாற்றமும் இல்லை அதையே சொன்னேன். நீதிபதி கேட்டார் நீ சொன்னதை நம்புறேன். ஆனால்

சிங்கப்பூரில் இருந்து திரும்ப கொழும்பு போய் ஜேர்மனி வந்டிருக்கிறாய் பிரச்சனை என்றால் எப்படி கொழும்பு போவாய் என்று? அப்பத்தான் இந்த பாஸ்போட்டை கிழிச்சிருந்திருக்கலாம் என்று தோன்றிச்சு.

நான் சொன்னேன் இல்லை கொழும்பிலை ஒருமாதம் தான் செல்வாக்குள்ள ஒருத்தரை பிடிச்சு தங்கினான். பிரச்சனை இல்லாமல் மருத்துவம் படிச்சிட்டு இங்கை வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொருளாதாரத்தில் அவ்வளவு பிந்தங்கி இல்லை அண்ணா ஜேர்மனியில் இந்த இடத்தில் வசிக்கிறான்,மற்ற அண்ணா லண்டனில் இந்த இடத்தில் என்று சொல்லி சகல தகவல்களையும் குடுத்தேன்.

விசாரணை முடிந்து போக சொல்லியாச்சு 2011 தை வர சொல்லி கடிதம் வந்தது போக அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மனிதாபிமான அடிப்படையில் ஜெர்மனியில் தங்க அனுமதிக்கப்பட்டு எனது இலங்கை பாஸ்போட்டில் விசா தந்தாங்கள். 25வது சட்டம்3வது பிரிவின் கிழ் ஆனால் குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கலாம்,மேற்படிப்பு படிக்க முடியாது என்று.

அங்கை திரும்ப நான் போய் படிக்க போறேன் என்று கேட்க நாங்கள் உதவி செய்ய முடியாது வேலை செய்ய சொல்லி மஞ்சள் நிற விண்ணப்பம் தந்தார்கள். நான் தெரிஞ்ச ஒருத்தரைக்கொண்டு மக்டொனாட்ஸ் இல் வேலை எடுத்து குடுத்திட்டு ஒரு மாதம் போனதும் சொன்னேன். எனக்கு சம்பளம் காணாது வேறு நல்ல வேலை இருக்கு வேறு இடம் மாறப்போகிறேன் என்று அதற்கு அவர்கள் வேலை எடுத்து வா என்று சொல்ல நானும் அண்ணாவின் நீண்ட கால இத்தாலி நண்பன் ஒருவன் தனது உணவகத்தில் நிரந்தர வேலையும் அதிக சம்பளமும் தருவதாக எழுதித்தந்தான் அதை குடுத்து அந்த இடத்திலிருந்து மாறி இங்கை வந்ததும் இந்த நிர்வாகம் எனக்கு இங்கை தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றி எங்கையும் இருப்பதற்கான அனுமதியை தந்தார்கள்.

மற்ற நாடுகளைப்பற்றி தெரியாது ஜேர்மனியில் அரசாங்க உதவி பெறாமல் வேலை செய்தால் எல்லாம் இலகுவில் கிடைக்கும். இப்ப வாழ்க்கையே அப்படியே தலைகீழாய் மாறி விட்டது.

றோட்டில் நடக்கும் போது ஹலோ சொல்ல நாலு பேருக்காவது என்னை தெரியுமளவுக்கு மாறியாச்சு.

ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக சொன்னார்கள்,அப்படிச்செய்,இப்படிச்செய் என்று. எல்லாத்திலும்,எப்போதும் என் முடிவு தான். சரி,என்றாலும், பிழை என்றாலும் நானாக தேடிக்கொண்டது என்று எதையும் செய்யும் தைரியம் வந்து விட்டது.

புலம்பெயர்ந்து வந்து நான் கண்ட அனுபவம் என்றால் தலையே போனாலும் கவலை இல்லை என்ற வைராக்கியமும். எதைச்செய்தும் என்னை நிலைநாட்டக்கூடிய தைரியமும் வந்து விட்டது. இது ஊரில் இருந்திருந்தால் சாத்தியமாய் இருந்திருக்குமா தெரியவில்லை,அந்த வகையில் புலம்பெயர்வாழ்வுக்கு நன்றி தான் சொல்ல வேணும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதில் சொல்ல முடியாத அளவுக்கு மனவலி இருந்தது, தனிய இருந்தே பழக்கப்படாத நான்,அழுது தொலைத்த நாட்கள் போய் அனுப்ப போறியோ,வச்சிருக்க போறியோ போடா..போய் பண்ணுறதை பண்ணு என்ற நிலைக்கு தைரியசாலி ஆக்கிவிட்டது.

நீங்களும் விசா கிடைத்தாலும் உங்களை முதலில் நிலைநிறுத்தப்பாருங்கள். எல்லாரும் சொல்கிறார்கள் என்று எல்லாத்தையும் பரீட்சித்துப்பாராதீர்கள். இயன்றளவு சொந்தக்காலில் நில்லுங்கள், தீர்க்கமான முடிவுகளாய் எடுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும். :)

[size=4] நான் அகதியாக வந்தவன். அதை முடிந்தளுக்கு நான் நினைவுபடுத்திக்கொள்ளுவதுண்டு. இங்கே பிறந்த எனது பிள்ளைகளுக்கும் கூறுவதுண்டு. பழையதை (தாயகத்தில் வாழ்ந்த வறுமை வாழ்க்கையை, ஆனால் சந்தோசமான வாழ்க்கையை) மறக்காமால் அதேவேளை இந்த நாட்டின் சட்டவரைபுகளுக்கு அமைய எமது உரிமைகளை விட்டுக்கொடுக்காமலும் வாழ வேண்டும் என முடிந்தளவுக்கு வாழுகின்றேன். [/size]

[size=4]மேற்குலக நாடுகளின் பொருளாதார வலைக்குள் முடிந்தளவு விழுவதில்லை. 'வரவுக்கு ஏற்ற செலவுக்குள் வாழுவது' என்ற பெற்றோரின் கொள்கைக்குள் வாழுகின்றோம். அதனால் நிம்மதியுண்டு. [/size]அதனால் துன்பங்களை குறைந்தளவு குறைத்து வாழ்ந்தாலும் இன்பமாக வாழுகின்றேன் என கூறமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன தான் சொல்ல வாரிங்க அண்ணா இன்பமா துன்பமா ?

அப்ப என்ன தான் சொல்ல வாரிங்க அண்ணா இன்பமா துன்பமா ?

[size=4]எதையும் அவரவர் பார்க்கும் விதத்தில் உள்ளது. அது வயதுடன் மாறுபடுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. [/size]

[size=4]எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் - தாயக வாழ்வில் கூடுதல் திருப்தியுள்ளது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் நானும் இன்னும் சில வருடங்களில் தாயகம் தான் வெளிநாடு life எல்லாம் சுத்த வேஸ்ட் பணம் இருக்கலாம் வசதிகள் இருக்கலாம் பட் எங்கள் நாட்டில் எங்கள் இனத்தோடு வாழனும்

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் Colombo லைப் சுபெர்ப் இன்னும் சில ஆண்டுகளில் பாருங்க வெளிநாடுகல விட அங்கை சிறந்த கட்டமைப்புகள் எல்லாம் வந்திடும்

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் போல வருமா.... அங்க கொஞ்சம் பயம். அந்தப் பயம் இங்க இல்ல..! மற்றும்படி.. ஊர் இஸ் த பெஸ்ட்..!

இப்பவும் எனக்கு ஊருக்குப் போய் (ஊரில போய்.. சிங்கள இராணுவத்தின் கீழோ.. அந்த அரசின் கீழோ இருக்கப் போறது பிடிக்கல்ல... ஆனால் கொழும்பில அவங்கட இடத்தில இருக்கிறது வேற...) அங்க உள்ள மக்கள் உலகமே வியந்து பார்க்கிற அளவுக்கு முன்னேற்றிக் காட்டனும் என்றது தான் விருப்பம். நிச்சயமா அந்த மக்களுக்கு நல்ல வழிகாட்டல் இருந்தால்.. உங்க வெளிநாட்டில இருக்கிறவையை விட அவை துரிதமா வளருவினம்..! பண்பாடு.. தனித்துவமின்னு வாழுவினம். அவையோட சேர்ந்து வாழுறது கூடிய சந்தோசம்..! :icon_idea:

.

வெளிநாட்டு வாழ்க்கை... தாமரை இலைமேல் தண்ணீர்த்துளி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி சொல்லிட்டு இருந்தா சரிவராது போறதுன்னு மனசால முடிவெடுக்கணும் நான் எடுத்திட்டன் அப்ப நீங்க? பட் போறதுன்னா சும்மா போக முடியா சோ நல்லா உழைக்கணும் காசோட போகணும் அதுவும் இலங்கை வங்கிகளில் வட்டி அந்த மாதிரி

  • தொடங்கியவர்

ஐயையோ சண்டையை நிறுத்துங்கோ சுண்டல் அண்ணா. நீங்கள் விரும்பினால் திரும்ப கொழும்புக்கு போங்கோ. உங்களுக்கு அங்கு பிரச்சினை இல்லை போலிருக்கு. பிரச்சினை இல்லாதவர்கள் என்றால் வெளிநாட்டுக்கு ஏன் வாறீங்கள். உங்கள் பிரச்சனைகளை புதிதாக ஒரு திரி ஆரம்பித்து சண்டை பிடியுங்கோ. இல்லாட்டி நிர்வாகத்திடம் உங்கள் கருத்துகளை அகற்றும்படி சொல்லி போடுவன். :lol::icon_idea:

அகதியை தான் பிடிக்கவில்லை என்றால் ஸ்டுடென்ட் விசாவில் வந்தவர்கள் படும் துன்பங்களையாவது எழுதுங்கோ...

--------------------------------------------------------------------------------

சொந்த அண்ணனால் கைவிடப்பட்ட தம்பி.

லண்டனில் ஸ்டுடென்ட் விசாவில் படிப்பதற்காக ஒருவர் தனது சொந்த அண்ணனின் அழைப்பில் வந்தார். இவர் college இல் படிக்க வந்தாரே தவிர university இல் அல்ல. college இற்கான அரைவருட பணமாக £2500 ஐ அவரது அண்ணா கட்டியிருந்தார். பின் வந்து சேர்ந்தவுடன் மீதி பணத்தை கட்டினார்.

வந்தவுடன் இவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அண்ணாவுடன் தங்கியிருந்தார். அவருடைய அண்ணா இவருக்கு உணவு கொடுப்பது, இவருக்கான bus ticket பணம் போன்றன ஆரம்பத்தில் வழங்குவார். அதற்காக தனது சொந்த கடையில் சம்பளமில்லாத வேலையாளாக இவரை உபயோகித்தார். அத்துடன் தான் college க்கு கட்டிய பணத்தை எப்பொழுது தருவாய் என்று அவரிடம் கேட்டு கேட்டு வாக்குவாதம் வேறு.... இவரும் வேலை தேடினார். உடனே கிடைக்கவில்லை. அவரது அண்ணா சிறிது நாளின் பின் அவரை தன் பணத்தை தந்துவிட்டு வீட்டுக்குள் நுழையுமாறு கூறி விட்டார்.

இவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. college இல் படிக்கும் நண்பர் ஒருவரிடம் கேட்டு அவர் வீட்டில் சிறிது நாட்கள் தங்கினார். kfc, mcdonalds என்று இவர் வேலை கேட்டு திரிய அங்கு vacancy இல்லை என்று கூறி விட்டார்கள். பின் தமிழர் ஒருவர் நடத்தும் chicken shop இல் தான் வேலை கிடைத்தது. சாதாரணமாக லண்டனில் மணித்தியாலத்துக்கு கிட்டத்தட்ட £6 வழங்க வேண்டும். ஆனால் தமிழர்களோ அதிகமாக அனைத்து கடையிலும் மணித்தியாலத்துக்கு £3 தான் கொடுப்பார்கள். இவருக்கும் அதே சம்பளம் தான். அந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் சொல்லும் வேலையெல்லாம் செய்ய வேண்டும். ஆளையே முறித்து எடுப்பார்கள். (அடிமை போல்).

ஸ்டுடென்ட் விசாவில் வருபவர்கள் 20 மணித்தியாலங்கள் வேலை செய்வதற்கு தான் அனுமதி இருந்தது. (இப்பொழுது வருபவர்களுக்கு 10 மணித்தியாலம் என்று நினைக்கிறேன்). ஆனால் இவர் தனது college க்கு அடுத்த வருட பணம் கட்டுவதற்கு பணம் சேகரிக்க வேண்டும் என்பதால் முறிந்து முறிந்து என்றாலும் அதிக நேரம் வேலை செய்தார். பின்னர் 6, 7 மாதங்களின் பின்னர் தான் வேறொரு வேலை எடுத்தார். இப்பொழுது படித்துக்கொண்டு இரு வேலை செய்து கொண்டு தனியே room எடுத்து தங்கியுள்ளார். இப்பொழுது அவர் சந்திக்கும் வேறு பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரியாது.

- பகிடியாக எழுதியதை சீரியஸாக கருதியதால் முக குறி சேர்க்கப்பட்டுள்ளது -

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஊர் போல வருமா.... அங்க கொஞ்சம் பயம். அந்தப் பயம் இங்க இல்ல..! மற்றும்படி.. ஊர் இஸ் த பெஸ்ட்..!

இப்பவும் எனக்கு ஊருக்குப் போய் (ஊரில போய்.. சிங்கள இராணுவத்தின் கீழோ.. அந்த அரசின் கீழோ இருக்கப் போறது பிடிக்கல்ல... ஆனால் கொழும்பில அவங்கட இடத்தில இருக்கிறது வேற...) அங்க உள்ள மக்கள் உலகமே வியந்து பார்க்கிற அளவுக்கு முன்னேற்றிக் காட்டனும் என்றது தான் விருப்பம். நிச்சயமா அந்த மக்களுக்கு நல்ல வழிகாட்டல் இருந்தால்.. உங்க வெளிநாட்டில இருக்கிறவையை விட அவை துரிதமா வளருவினம்..! பண்பாடு.. தனித்துவமின்னு வாழுவினம். அவையோட சேர்ந்து வாழுறது கூடிய சந்தோசம்..! :icon_idea:

உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள். நிச்சயம் அங்குள்ள மக்களை முன்னேற்ற உங்களை போன்று அக்கறையுடன் செயற்படுபவர்கள் தேவை. எம்மக்கள் முன்னேறிய பின் அவர்களின் முன்னேற்றம் அரசாங்கத்திற்கு அல்லது சிங்களவர்களுக்கு பயன்படும் வகையில் இல்லாமல் தமிழர்களுக்கு பயன்படும் வகையில் இருந்தால் நன்று.

முன்னேறுபவர்களும் மற்றவர்களை முன்னேற்றிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தமிழர்களில் பொதுவாக அந்த குணம் இல்லையே. மற்றவன் முன்னேறினால் அவனை இழுத்து படுகுழிக்குள் விழுத்தி தாம் மட்டும் முன்னேற நினைப்பார்கள்.

இவர்களை போல் இல்லாமல் உங்களை போன்றவர்கள் தான் மக்களுக்கு அவசியம். உங்கள் அறிவு, படிப்பு என்பன எம்மக்களுக்கு பிரயோசனப்பட வாழ்த்துகிறேன். :)

பி.கு: இதற்கு பதில் கருத்திடாமல் ஸ்டுடென்ட் விசாவில் வந்தவர்கள் பட்ட துன்பம் ஏதாவது எழுதுங்கோ... :)

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் விசாவில் தான் வந்தேன், எதுவித சிரமமும் இருக்கவில்லை. இங்குவந்த பின்னர் தான் யூனி fee கட்ட இரண்டு மூன்று வேலை எண்டு செய்ய வேண்டி இருந்தது. அந்தக் காலத்தைத் தான் கொஞ்சம் கஷ்டம் எனக் கூறுவேன். பல்கலை படிப்பின் அரைவாசியின் போதே ஒரு கணக்கியல் நிறுவனத்தில் பகுத்திநேர Assistant Accountant வேலை கிடைத்தது. இறுதியாண்டில் டிகிரி முடிக்க முன்னரே ஒரு தனியார் நிறுவனத்தில் Financial planning பகுதியில் முழு நேர வேலை கிடைத்தது. அத்துடன் நான் படித்த துறையிலேயே முழு நேர வேலையும் கிடைத்ததால் எனது State government எனது நிரந்தர வதிவிட உரிமைக்கு என்னை சிபாரிசு செய்து குறுகிய காலத்தில் அதுவும் கிடைத்து விட்டது. இப்போது அவுஸ் பிரஜா உரிமையும் வந்து விட்டது, ஆனால் இலங்கை பிரஜா உரிமையையும் வைத்திருக்கிறேன் (Dual citizenship). தற்சமயம் CPA (Certified Practising Accountant) செய்து கொண்டிருக்கிறேன். முடித்த பின்னர் யாராவது ஆறு டிஜிட் சம்பளம் தரக்கூடியவனாப் பாத்து வேலைக்கு சேர வேண்டியது தான்.

இந்த வயதிலே (எனக்கு தற்போது 26) இவ்வளவு இருந்தும் மனசிலே நிம்மதி இல்லை. இதனால் இன்னும் சில வருடங்களில் இலங்கையிலே போய் இருப்பதா ஒரு எண்ணம் இருக்கிறது. CPA முடித்தால் கொழும்பிலே கணக்காளராக வேலை செய்ய முடியும். அவுஸ் எண்ணம் வந்தால் சமரிலே ஒரு கொலிடே வந்திட்டு போக வேண்டியது தான். இங்கே BMW ஓட்டினாலும் ஊருக்கு போகும் போது எங்களின் Corolla ஓட்டும் போது வரும் சுகம் வருவதில்லை. நான் அவுசிலே பட்ட துன்பம் மிகக் குறைவு, எனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய அவுசுக்கு என்றுமே நன்றி. Aussie Aussie Aussie Oi! Oi! Oi!

நான் மாணவனாக லண்டனுக்கு வந்தேன்.

ஏனைய மாணவர்களை விடபல மடங்கு அதிகமான கடடணத்தை கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் செலுதத வேண்டும். (னடாவிலும் இதே நடைமுறையே உள்ளது). குறிப்பிட்ட மணித்தியாலங்களே வேலை செய்யமுடியும்.குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை விசாவைப் புதுப்பிக்கவேண்டும். அதற்கான கட்டணம்அதிகம். இவ்வாறான சில பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும் லண்டனில் நான் சந்தித்த படித்த (பண்பானவர்களும் கூட) உறவினரின் துணையால் பெரிதாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை.

.

ஏன் ஒரு இடத்தை பிடிச்சிருக்கு என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.....

A/L எடுத்துப்போட்டு றோட்டில நிக்கிற காலத்தில நம்ம கேங்க் உறுப்பினர்களுக்கிடையே நடந்த ஒரு சம்பாசணையில் ஞாபகத்தில் நிப்பது..

A: "உனக்கு கொழும்பா.. யாழ்ப்பாணமா.. திருகோணமலையா பிடிக்கும் மச்சான் ? "

B: " எனக்கு நல்லூர் தான் பிடிக்கும் மச்சான். "

A: " இவன் நல்லூரில தான் சாமத்தியப் பட்டிருக்கிறான் மச்சான். "

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் கருத்திடாமல் ஸ்டுடென்ட் விசாவில் வந்தவர்கள் பட்ட துன்பம் ஏதாவது எழுதுங்கோ...

துன்பம் என்பது ஆளாளுக்கு வேறுபடும். என்னைப் பொறுத்தவரை எல்லாத்திற்கும் அதிஸ்டம் வேண்டும். திறமை கூட சரியான அதிஸ்டத்தை சந்தித்தால் தான் இனங்காணப்படும்.

பிரிட்டனைப் பொறுத்தவரை நல்ல காசுப் பின்னணி அல்லது பண உதவி இருந்தால்.. மாணவர் வாழ்வு சுபீட்சம். இன்றேல் சிரமம் தான்.

சிலருக்கு கொஞ்ச முயற்சியோடு.. பெரிய வெற்றி கிடைக்கும். பலருக்கு பெரிய முயற்சி இருந்தும் சிறிய வெற்றி தான் இருக்கும்.

எங்களோடு படித்த பெரும்பாலான நண்பர்கள்.. முதல் தர சித்தி பெற்றும்.. வேலை இன்றி.. இன்று வெவ்வேறு நாடுகளில் தான்.. உள்ளனர். சில மாணவர்கள்.. இங்கையே வேலை எடுத்து.. நிரந்தர வதிவுரிமையும் பெற்றுள்ளனர்..! வேறு சிலர்.. படிச்சும்.. மாணவர் விசாவுக்கு வேலை எடுப்பது கடினம் என்று.. இங்குள்ள விசா உள்ள பெண்களை திருமணம் செய்து.. அப்படியும் முன்னேறி வந்துள்ளனர். வேறு சிலர் படிப்பு என்ன படிப்பு என்று அசைலிகளாக மாறி அந்த வழியிலும் முன்னேறி உள்ளனர். சிலர் எல்லாவற்றையும் இழந்து ஊர் திரும்பியும் உளர்.

எதுஎப்படியோ... முயற்சி இன்றி வெற்றி இல்லை. சிலருக்கு கொஞ்ச முயற்சி கூடிய அதிஸ்டம்.. இது கூடிய மகிழ்ச்சி. சிலருக்கு கனக்க முயற்சி.. கொஞ்ச அதிஸ்டம்.. கூடிய துன்பம்.. கொஞ்ச மகிழ்ச்சி.

எங்களுக்கு இரண்டிலும் 50:50 :icon_idea::)

Edited by nedukkalapoovan

கனடாவில் தான் கூட வருடங்களை எனது வாழ்வில் வாழ்ந்திருக்கிறேன். ஸ்பொன்சரில் வந்தேன். கனடாவில் தான் பள்ளி, பல்கலை எல்லாம்.

கனடாவில் இன்பம் நிறைய கண்டிருக்கிறேன். சுதந்திரம் ஒரு புறம். மறுபுறம் உலகின் நூறு நாட்டு சாப்பாட்டை இங்கு உண்ணலாம்.

பல நாட்டு நண்பர்கள். ஊரிலும் பார்க்க ஸ்கார்புரோவில் கூட உறவினர்கள். உழைப்பவனுக்கு இங்கு மரியாதை.

ஊருக்கு போய் இருப்பத்திரண்டு வருடங்கள். கனடா தான் எனது வளர்ப்பு தாய் நாடு. கனடாவில் துன்பம் என்றால் உலகில் ஒரு இடமும் இன்பம் கிடைக்காது. :D

[size=5]சுயதொழில் செய்து உழைப்பவனுக்கே இங்கு மரியாதை. [/size]

எனக்கு இங்கு ஏற்படும் துன்பத்தை பற்றி நான் எள்ளளவும் கவலைப்படுவதில்லை ...............இந்த துன்பத்தை நானே தேடி இங்கு வந்தேன் ...

எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு ............மற்றவர்கள் மேல் பழியைப்போட்டு எதையும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லை ...........எனக்கு என்ன

பயம் என்றால் தப்பித்தவறி இன்பம் ஏதாவது குறுக்கிட்டு என் வாழ்க்கை மாறுபட்டு அதனால் இந்த வாழ்க்கையும் இல்லாமல் போயிடுமோ

என்பதுதான் ................ஒட்டுமொத்தத்தில் நோய் நொடி இன்றி துன்பத்தோடு வாழுதல் நோய்நொடியுடன் இன்பமாக வாழுதலை விட சிறந்தது ....................என்னங்க ஒரே குழப்பமாய் இருக்கிறதா ...............எனக்கும் தானுங்கோ............. :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் விசால வரணும் ஆனா கஷ்ட்ட படமா படிக்கணுமாம் அந்த அண்ணா thodarnthum உதவி செஞ்சிட்டு இருக்க முடியுமா படனும் கஷ்ட்ட படனும் படிக்கணும் அப்போ தான் வாழ்க்கைனா என்னனு புரியும் அத விட்டுட்டு கூப்பிட்டு விட்டவனை ௫ வருஷமும் உதவி செய்யனும்ன என்ன மாதிரி? நீங்க சொல்லுறது தம்பியோட நியாயத்த மட்டும் தான் அதை மாதிரி அந்த அண்ணன் கிட்ட ketalum சொல்லுவர் தம்பி பத்தி

  • கருத்துக்கள உறவுகள்

தும்பலயன் Atha தான் நானும் சொல்லுறன் அத விட்டுட்டு yeatho நிர்வகாமை இவாவோட கைக்குள்ள இருக்கு மாதிரியும் இவா சொன்ன அவை உடன கேபினம் மாதிரியும் பிலிம் காட்ட கூட

  • கருத்துக்கள உறவுகள்

தும்பலயன் Atha தான் நானும் சொல்லுறன் அத விட்டுட்டு yeatho நிர்வகாமை இவாவோட கைக்குள்ள இருக்கு மாதிரியும் இவா சொன்ன அவை உடன கேபினம் மாதிரியும் பிலிம் காட்ட கூட

என்ன சுண்டல், ஐபோன் app கையை விரிச்சிட்டுது போல? இடைக்கிடை தான் வேலை செய்யுது. அதுசரி பெண் எண்டால் பேயும் இரங்குமாம். யாழ் நிர்வாகம் இற(ர)ங்கி வருமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ சண்டையை நிறுத்துங்கோ சுண்டல் அண்ணா. நீங்கள் விரும்பினால் திரும்ப கொழும்புக்கு போங்கோ. உங்களுக்கு அங்கு பிரச்சினை இல்லை போலிருக்கு. பிரச்சினை இல்லாதவர்கள் என்றால் வெளிநாட்டுக்கு ஏன் வாறீங்கள். உங்கள் பிரச்சனைகளை புதிதாக ஒரு திரி ஆரம்பித்து சண்டை பிடியுங்கோ. இல்லாட்டி நிர்வாகத்திடம் உங்கள் கருத்துகளை அகற்றும்படி சொல்லி போடுவன்.

-------

:o :o

துளசி, உங்களுக்கே.... இது ஓவராகத் தெரியவில்லையா?

ஒருவர் ஒரு தலைப்பை ஆரம்பித்த பின்பு, அந்தத் தலைப்புக்குக்கு எப்படி சொந்தம் கொண்டாடுவீர்கள்.

அதில்... மற்றவர்கள் தமது கருத்தை எழுதுவதை எப்படி தடுக்க முடியும்.

நீங்கள் மேலெ, இப்படிக் கூறுவதால்... உங்கள் மீதுள்ள நல்ல அபிப்பிராயம் அடிபட்டுப் போவதை உணரவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]எனக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் [/size][size=1]

[size=5]படிக்க இடம் கிடைத்தது.ஆனால் குடும்பவறுமை [/size][/size][size=1]

[size=5]காரணமாய் என்னால் போகமுடியாமல் போயிற்று.[/size][/size][size=1]

[size=5]பின் ஒரு காலத்தில் எனக்கு வெளிநாடு போக [/size][/size][size=1]

[size=5]ஒழுங்கு செய்யப்பட்டும் மண்ணை விட்டுப்போக [/size][/size][size=1]

[size=5]மனம் வரவில்லை.இப்போது ஒரு அகதியாய் [/size][/size][size=1]

[size=5]தவித்துக்கொண்டிருக்கிறேன்.[/size][/size]

[size=5]http://leo-malar.blogspot.no/2012/07/blog-post_17.html[/size]

அகதியாகத்தான் இங்கு வந்தேன். கொஞ்சக் காலம் உள்ளுக்குள் வைத்திருந்து, அடிக்கடி ஊருக்கு அனுப்பப் போவதாகச் சொல்லி பின் பிணையில் விட்டார்கள். ஒவ்வொரு கிழமையும் போய் கையெழுத்து வைக்க வேண்டும். உதவித் தொகை எடுக்க முடியாது. 5 வருடங்களின் பின் விசா கிடைத்தது. என்னுடன் உள்ளுக்குள் இருந்த நண்பன் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு சில மாதங்களில் கொல்லப்பட்டான்.

ஆரம்பத்தில், அதிகமாக எல்லா வித கூலித் தொழிலும் செய்திருக்கிறேன். அந்த அனுபவம் இப்பொழுது கை கொடுக்கிறது. பட்ட கஷ்டங்கள் எல்லாம் நன்மைக்கே. சுதந்திரமாக ஓரளவு நல்ல நிலையில் என்னை வைத்திருக்கும் இந்த நாடு பிடித்துள்ளது. கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நிம்மதியாக வாழ்வது பிடிக்கும்.

மற்றும்படி எண்ணம் சிந்தனையெல்லாம் ஊரோடுதான். சந்தர்ப்பம் அமையுமானால்அங்கு போய் வாழுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தும்பலயான் கொஞ்சம் அலுப்பு கொடுக்குது ஆனாலும் நல்ல அப். இதுல என்ன ஜோக் நா இவவா தூக்கி நிர்வாகதில போடபோயிணமாம் எப்பிடி இருக்கும்?யாழ் களத்த பூட்டிட்டு போக வேண்டியது தான் யாழ் இடத்த கொடுக்க போய் மடத்த புடுகின கதையா தான் இருக்கும். அட பொண்ணா ? இந்த காலத்தில எங்கை அண்ணா uni க்கு போற பொண்ணு வாறியள் போறியள் endu எங்கட அம்மம்மா காலத்து தமிழை கதைக்கினம் ?

  • கருத்துக்கள உறவுகள்

இவான்ட கதைய பாத்தா யாழ் நிர்வாகம் இவாவோட பிடியில சிக்கி இருக்கு மாதிரியும் இவா என்ன சொன்னாலும் கேபினம் மாதிரில இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.