Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூச்சிகளின் உலகம்

Featured Replies

வணக்கம்,

பூச்சிகள் !!.

என்றும் எங்கள் கவனத்தில் மிகக் கேவலமான ஒரு பிறப்பு. மானுடம் மதிப்பு கொடுக்க மறுக்கும் ஒரு உயிர் வகை. மனுசரை விட பல பில்லியன் எண்ணிக்கை கொண்ட ஒரு உயிர் இனம்.

மிருகவதை வேண்டாம், மரக்கறி சாப்பிடு என்று முழங்கும் அமைப்புகள் கூட பூச்சிகளின் மரணம் பற்றியோ அதன் வாழ்வு பற்றியோ அல்லது அதன் உரிமைகள் பற்றியோ என்றும் சொல்வதில்லை.

காலால் நசித்துப் போகவேண்டிய ஒரு உயிரினம் தானே பூச்சி என்ற மிதப்பு மனுசருக்கு

ஒரு பூச்சியை எடுத்து கண்கள் அருகில் கொண்டு சென்று அதன் கண்களைப் பார்த்துள்ளீர்களா? அதன் பிரகாசமான கண்களை நேர் கொண்டு பார்க்க தைரியம் வந்து இருக்கா உங்களுக்கு? அதன் மெல்லிய கால்களை தடவியுள்ளீர்களா?

அடுத்தமுறை பூச்சிகளை நசிக்க முற்படும் போது அதற்காக ஒரு சொட்டு கண்ணீர் சிந்துவீர்களா?

நான் இந்த திரியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூச்சிகள் பற்றி பேசப் போகின்றேன்.

ஒவ்வொரு பூச்சிக்கும் உயிருண்டு

அதுக்கும் ஒரு வாழ்வுண்டு

அதன் அப்பா அம்மா அதைக் காணாவிட்டால் தேடிப் போவினம்

அதன் துணை சாகடிக்கப்படும் போது அதுவும் அழும்

அதன் பிள்ளைகள் நசுக்கப்படும் போது மிஞ்சின உடலை தேடி ஒப்பாரி வைக்கும்

பயிரே உணவான வாழ்வில் பயிரை சாப்பிட விடாமல் மனுசர் நீங்கள் தடுத்து பூச்சி கொல்லிகளை ஏவும் போது

நாங்கள் எம் சந்ததிகளையே இழக்கின்றோம்

இந்த பதிவுகள் பூச்சிகளின் வாழ்வுக்கானவை.

இதை வாசித்த பின் அடுத்த முறை ஒரு பூச்சியைக் கொல்ல போகும் போது ஒரு கணம் தாமதியுங்கள்;

ஏனென்றால் பூச்சிகளுக்கும் உணர்வுண்டு, வலி உண்டு, வாழ்வும் உண்டு

Edited by பூச்சி

  • தொடங்கியவர்

1. மின்மினிப் பூச்சி

இயற்கையின் அதிசயங்கள் தான் எத்தனை எத்தனை? விந்தைமிக்க உயிரினங்களின் இயல்புகளை அறியும்போது நமக்கே சில வேளைகளையும் ஆச்சர்யத்தையும் அற்புத உணர்வையும் விளைவிக்கிறது அல்லவா? அந்த வகையில் இயற்கையில் ஒளி உமிழும் உடலமைப்பைப் பெற்ற இந்த மின்மினி பூச்சியும் சேருகிறது. பூச்சி வகைகளில் இது முற்றிலும் மாறுப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது. இரவில் ஒளியை உமிழும்(ஒளிரும்) மின்மினிப் பூச்சிக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்.? அது எப்படி ஒளிர்கிறது? நம் வீட்டில் ஒளிரும் மின்விளக்குகள் மின்சாரம் கொண்டுதானே ஒளிர்கிறது!. அப்படியானால் மின்மினிக்கும் மின்சாரம் தேவையா? தானே அந்த மின்சாரத்தை தயாரிக்கிறதா? எப்படி இப்படியொரு ஒளி உமிழும் அதியம் ஏற்படுகிறது? இத்தனை கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இந்த பதிவு. இறுதியில் மின்மினிப் பற்றிய காணொளிகளும் இடம்பெற்றுள்ளது. இனி பதிவைப் பார்ப்போம்.

மின்மினிப்பூச்சிகளைப் பற்றிய சில உண்மைகள்

  • அதாவது மின்மினிப்பூச்சிகள் ஒரு சிக்கலான உயிர்வேதியியல் -Bio Chemical முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
  • இதில் ஒளிரக்கூடிய பொருள் லூசிபெரின்(luciferin) என்ற ஒரு கூட்டுப்பொருள்.
  • லூசிபெரின்(luciferin) பூச்சியிலுள்ள ஒளி உமிழ் உறுப்பில் (Light emitting organ) நிறைந்திருக்கிறது.
  • இந்த லூசிபெரின் ஆனது லூசிபெரஸ் என்ற என்சைமில் (enzyme) உள்ள ஆக்சிஜன், உயிரணுக்களில் நிறைந்துள்ள ATP எனும் வேதியியல் பொருள் , மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.
  • இதில் ஏதேனும் ஒரு பொருள் இல்லாவிடினும் ஒளி ஏற்படாதாம்.
  • மின்மினிப்பூச்சி விட்டு விட்டு ஒளிர்வதற்கு காரணமே, அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (Nerve impulses) விட்டு விட்டு தொடர்பற்று செல்வதால்தானாம்.
  • இந்த ஒளி உமிழ்வின்போது வெப்பம் எதுவும் வெளியிடப்படுவதில்லை.
  • இயற்கையாகவே இந்நிகழ்வு பூச்சியினுள்ளே ஏற்படுகிறது.

<a href="http://2.bp.blogspot...i_poochi_1.jpg" style="margin-right: auto; margin-left: auto;">minmini_poochi_1.jpgமின்மினிப் பூச்சி

மின்மினி பூச்சிகளைப் பற்றிய ஒரு சிறிய அலசல்:

மண்ணில் முட்டை வைக்கக்கூடிய தன்மையுடையது பெண் மின்மினிப் பூச்சிகள். 4 வாரங்களில் முட்டையிலிருந்து இளம் புழு வெளியேறிவிடும். வெயில் காலத்திலும், வேனிற்காலத்திலும் உணவினை நன்கு எடுத்துக்கொண்டு வளர்ந்து வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் ஒளிந்திருக்கும்.

உணவு:

இவை தனக்குப் பிடித்தமான நத்தை மற்றும் மண்புழுவை உண்ணும். இது இரையை எடுத்துக்கொள்ளும் விதமே வித்தியாசமாக இருக்கும். முதலில் இரையை மயக்கமடையச் செய்துவிட்டு, தன் முகப்பகுதியில் இருக்கும் கத்திப்போன்ற கொடுக்கை பயன்படுத்துகிறது. கொடுக்கின் மூலம் எதிரியை மயக்கமடைச் செய்யக்கூடிய வேதிப்பொருளை, எதியின் உடலில் செலுத்துவதில் ஒரு தேர்ந்த மருத்துவரின் அணுகுமுறையை கையாள்கிறது.

அதன் பிறகு செரிமான நொதிகள் இரையினுள் செலுத்துகிறது. இதனால் இரையானது ஒரு சில மணி நேரத்தில் கூழ்மமாக மாறிவிடுவதால், அவற்றைச்சுற்றி மின்மினிப் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து கொண்டு தங்களுக்குத் தேவையான உணவை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில் தனது உடலில் அடிவயிற்றுப்பகுயின் முடிவில் விளக்குப் போன்ற வெளிச்சம் உருவாகிறது.

இதன் வெளிச்சத்தன்மையால் ஒரு சில பறவைகள் தனது கூடுகளில் வெளிச்சத்திற்காக பிடித்து வைத்துக்கொள்வதாகவும் தகவல் உண்டு.

http://www.youtube.com/watch?v=pHtOW4DkHNA&feature=player_embedded

thangampalani.com

Edited by பூச்சி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடர். நன்றி பகிர்வுக்கு பூச்சி.

  • தொடங்கியவர்

உடையாருக்கு நன்றிகள். தமிழ் பேசும் உலகில் பூச்சிகள் பற்றி பேச முற்படும் என்னை வரவேற்ற முதல் நண்பர் உடையார்

ant.gif2. எறும்பு

எறும்பு என்பது பூச்சியா என்று கேட்க நினைப்பவர்களுக்கு நான் சொல்லக்கூடிய பதில் எறும்பு மனுசரும் இல்லை, 4 legs animal உம் இல்லை, சிறகு கொண்ட பறவையும் இல்லை. ஆகவே எறும்பு ஒரு பூச்சி தான், எம்மை விட பல மில்லியன் ஆண்டுகள் முன் பூமியில் உருவானவை. பைபிளின் படி இயேசுநாதர் ஒளியைப் படைக்க முன்பும்,சிவபெருமான் சக்தியை கலியாணம் கட்ட முன்பும். அல்லாஹ் தன் தூதுவனை அனுப்ப முன்னும் உருவான கல்தோன்றி பின் மண் தோன்றி பிறந்த மூத்த குடி எறும்பு

எறும்பு தமிழ் மொழி பாடல்களில் எவ்வளவு சிறப்பை அடைந்து இருக்கு என்பது, "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது" என்று சுகன்யா வால்ரர் வெற்றிவேலில் பாடும் போதே புரிந்து இருக்கும்.

ஆனால், எங்கள் செருப்புகளில், சப்பாத்துகளில், வெறும் கால்களில் தினமும் மிதிபட்டு, வதை பட்டு சாகும் ஒரு உயிரியான எறும்புக்கும் வாழ்வு, ஒழுக்கம். நேர்மை என்பன இருக்கு என்பதை நாம் உணர மறுக்கின்றோம் என்பது எமக்கு தெரிந்தது தானே

Edited by பூச்சி

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மனிதருக்கு, பிரயோசனம் இல்லாத புல்,பூண்டுகள், காஞ்சோண்டி போன்ற தாவரங்கள் இருக்க....

மனிதனின் உணவான நெல், சோளம், கத்தரிக்காய், வெண்டிக்காய் போன்றவற்றை... பூச்சிகள் சாப்பிட்டால், மனிதன் சும்மா இருப்பானா?

தாவரங்கள் கூட... பூச்சிகளின் அட்டகாசம் தாங்கேலாமல், பூச்சிகளை கொல்கின்றது. :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள். பூச்சி!

பூச்சியினம் அழிந்து விடாமலிருக்க, அவை மிக அதிகமாக இனத்தைப் பெருக்குகின்றன! இயற்கை, இவற்றை அழிந்து விடாது, பார்த்துக் கொள்ளும்!

அத்துடன் இவை, பெரும்பாலான பறவையினங்களின் உணவாகின்றன!

மிகவும் நல்லது பூச்சி,

எனக்கு அகிறினையின் வாழ்கையில் அலாதி பிரியம் உண்டு . பூச்சிகள் பற்றி நீங்கள் எழுதும் தொடரை படிக்க ஆவலாக உள்ளேன் . வாழ்த்துக்கள் . :)

  • தொடங்கியவர்

உலகில் மனிதருக்கு, பிரயோசனம் இல்லாத புல்,பூண்டுகள், காஞ்சோண்டி போன்ற தாவரங்கள் இருக்க....

மனிதனின் உணவான நெல், சோளம், கத்தரிக்காய், வெண்டிக்காய் போன்றவற்றை... பூச்சிகள் சாப்பிட்டால், மனிதன் சும்மா இருப்பானா?

ஆனால் மனிதன் தன் தேவைக்காக மற்ற எல்லா உயிரினங்களின் வகைகளையே முற்றாக அழித்தொழித்து வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் மிஸ்ரர் தமிழ் சிறி? பூச்சிகள் சாப்பிட்டு அழிபடும் தாவரங்களை விட உலகின் முதல் தர வியாபாரிகளால் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி சம்பாதிக்க அழிக்கப்படும் உணவுப் பொருட்களே பல்லாயிரம் மடங்கு அதிகம். அமெரிக்காவால் கடலில் கொட்டப்படும் கோதுமையால் பல வறிய நாடுகளுக்கு உணவழிக்க முடியும்.

பாராட்டி எழுதிய புங்கையூரானுக்கும், அஃறிணை உயிர்களை மதிக்கும் சுடலைமாடனுக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்

எறும்புகள் பற்றி தொடர்ச்சி

எறும்புகள் பற்றிய சில விடயங்கள்

  • எறும்பில் மொத்தமாக 12000 இற்கும் அதிகமான வகைகள் உண்டு
  • தன் எடையினை விட 20 மடங்கு எடையச் சுமக்க கூடியன
  • ராணி எறும்பால் பல வருடங்கள் வாழ்ந்து மில்லியன் கணக்கில் பிள்ளைகள் பெற முடியும்
  • எறும்புகளுக்கு காதில்லை. vibrations இனை கால்களின் மூலம் இனம் கண்டே உணருகின்றன
  • எறும்புகளின் சண்டை ஈற்றில் சண்டையிட்டு தோற்ற எறும்பு சாவதில் தான் முடியும்
  • எறும்புகளுக்கு சுவாசப்பை (lungs) இல்லை. உடலில் உள்ள நுண் துளைகள் மூலம் ஒட்சிசனை எடுத்து அதே துளைகளின் மூலம் co2 இனை வெளிவிடுகின்றன
  • ராணி எறும்பு செத்துப் போச்சுதென்றால், அதன் கூட்டம் ஒரு சில மாதங்களில் செத்துப் போய்விடும். மாற்றீடு இல்லையாம் ராணிக்கு (மனுசர் மாதிரி இரண்டு மாசம் போனபின் புது மாப்பு ஆக முடியாது)
  • எறும்புகளை 'ecosystem engineers என அழைப்பர். அந்தளவுக்கு பிற உயிர்களின் இனப்பெருக்கத்துக்கும், முக்கியமாக மண்ணின் வளத்துக்கும் அளப்பரிய உதவி செய்கின்றன.

110131133227-large.jpg

676px-Scheme_ant_worker_anatomy-en.svg.png

இனப்பெருக்கமும், விருத்தியும்

  • வழமைபோலவே, எறும்பின் முதல் நிலையாக முட்டையே கருதப்படும். இந்த முட்டையானது கருக்கட்டி விருத்தியடையின், இருமடிய (diploid) நிலையைப்பெற்று அடுத்த சந்ததியின் பெண் எறும்புகளை உருவாக்கும்.

  • கருக்கட்டாத முட்டைகள் விருத்தியடையும்போது, ஒருமடிய (haploid) நிலையில் ஆண் எறும்புகளாக உருவாகும். எல்லாப் பூச்சிகளையும்போல், முட்டைகள் தொடர்ந்த உருமாற்றத்தில் (metamorphosis), முதலில் குடம்பியாகி (larva), பின்னர் கூட்டுப்புழுவாகி (pupa), பின்னர் முழுவளர்ச்சியடைந்த எறும்பாக மாறும்.

  • குடம்பி நிலையில் அவை அசைவற்று இருக்குமாதலால், வேலையாட்கள் அவற்றிற்கு உணவூட்டி கவனித்துக் கொள்ளும். பொதுவாக வேலையாட்கள் தமது உடலினுள் சென்று சமிபாட்டுக்குப் பின்னர் திரவ நிலையை அடைந்த உணவை மீண்டும் எடுத்து குடம்பிகளுக்கு ஊட்டும். சிலநேரம் திண்ம உணவும் வேலையாட்களால் குடம்பிகளுக்கு வழங்கப்படும்.

  • கூட்டுப்புழுக்கள் துணையுறுப்புக்களை (appendages) இழந்து, உறங்கு நிலையில் இருக்கும்.

[size=3]மனிதரும் எறும்புகளும்[/size]

  • சிலவகை எறும்புகளின் குணங்களை வைத்து அவற்றினை பெயரிடவர். சுள்ளெறும்பு இவை பெரும்பாலும் அசைவ உண்ணிகள். மனிதனை கடிக்கும் இயல்புடையவை.
  • சில சைவ உண்ணிகள். இவற்றின் உணவுகள் பெரும்பாலும், மனிதனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளன. இவை மனிதனை கடிக்கும் இயல்பைப் பெற்றிருக்கவில்லை. சிறியதாகக் கறுப்பு நிறத்திலிருக்கும். சாமி எறும்பு என்பர்.ஒப்பிட்டளவில் மிகவேகமாகவே நடக்கும் இயல்புடையவை.
  • கறுப்பாக பெரியதாக இருப்பின் கட்டெறும்பு என்பர்.
  • சுலுக்கெறும்பு உடலின் நடுப்பாகத்தில் இளஞ்சிவப்பு நிறமாகவும், மற்றபாகங்கள் கருநிறமாகவும் இருக்கும். கடித்தால் கடுமையான வலி நீண்ட நேரமிருக்கும்

நன்றி: விக்கி பீடியா, www.sciencedaily.com, www.pestworldforkids.org

Edited by பூச்சி

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்.. உங்கள் தயவால்.. யுனியில் படித்த Entomology (பூச்சியியல்) ஞாபகம் வந்து போகிறது. எவ்வளவை பாடமாக்கினம்.. ஆனால் பயன்பட்டது கொஞ்சம்..! :lol::icon_idea:

specimen_box.jpg

கொஞ்ச நாள் பூச்சி பிடிக்கிற வலையோட திரிஞ்சதும்... நிலத்தில்.. குழி வெட்டி வைச்சு.. பூச்சிக்கு ஆப்படிச்சதும்... வர்ண ஒளி விளக்குகள் வைச்சு.. பிடிச்சதும்...

பின்னர் அவற்றைக் போமலின் போட்டுக் கொன்று உலர்த்தி சரியான வகையில் குண்டூசி குத்தி.. (சும்மா எல்லாம் குண்டூசி குத்த முடியாது.. பூச்சி வகைக்கு ஏற்ப ஒவ்வொரு முறை உண்டு..குறித்த ஆழம் உண்டு..) ரெஜிபோம் மேடையில் நிலைநிறுத்தியதும்.....

pinning.jpg

fig20.gif

(இதில் படம் A காட்டுவதே சரி)

மேலதிகமாகப் பிடிச்ச பூச்சிகளை.. பிகருகளோட.. பூச்சிகளை பரிமாறிக் கொண்டதும்.....

set1431900.jpg

இப்படி மாதிரிகள் செய்து (insect mounting) வகைப்படுத்தி.. செயன்முறை வகுப்பில் கையளித்து விளக்கியமையும்... ஞாபகம் வருகிறது...........

arthropods.jpg

படங்கள்: இணைய வெளியில் இருந்து..... மற்றும் http://www.ars.usda.gov/

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பொன் வண்டு

ponvandu.jpg

பொன்வண்டு (Sternocera) பூச்சி தொகுதியில் (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற உயிரியல் குடும்பத்தில், ஸ்டேர்னோசெரா (Sternocera) என்ற பேரினத்தை சேர்ந்த வண்டு வகைகளாகும். இவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன. இவ்வகை வண்டுகள் பொதுவாக தாவரவுண்ணிகளாகும்.

மனிதர்கள் பயன்பாட்டில்

இவ்வகை வண்டுகள் பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டிருப்பதால் சில நாடுகளில் ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

தொடருங்கள் பூச்சி.தேனீக்கள் இல்லாவிட்டால் என்னாகும்?

தேனீக்கள் இல்லாவிட்டால் என்னாகும்?

இங்கு தேனீக்களின் தொகை வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது. போதாததற்கு தொடர்ச்சியான மழை. தோட்டத்தில் ஒரு தேனீயையும் காண முடியவில்லை. கடந்த ஒன்றரை மாதங்களாக பயிர்களில் வெறும் பூக்கள்தான் தொடர்ச்சியாகப் பூக்கிறது. செயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்தால்தான் உண்டு. முன்பு தேனீக்கள் இருக்கும் பொழுது காய்கனிகள் நிறையக் கிடைக்கும். இந்த முறை பழம், காய்கறிகளுக்கு விலை கூடும்.

தேனீக்கள் இல்லாவிட்டால் உணவுக்குத் திண்டாட வேண்டி வரும்.

பூச்சி ,ஊரில பொன்வண்டு குறைஞ்சு போனதுக்கு நாங்களும் ஒரு காரணம் . சின்ன நெருபெட்டிகுள்ள யப்பான் இலைகளோட பொன்வண்டையும் அடிச்சு வைச்சு கொண்ட பெருமை எங்களை சாரும் . :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.