Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் மார்க்கம் பகுதி......

மாலை செய்தியில் அடுத்து வரும் சில நாட்களுக்கு குளிரின் வேகமும் அதனுடன் கூடிய காற்றும் கடுமையாக இருக்கும் என்ற வானிலை அறிக்கையை பாத்து சலிப்புற்றவர் மேசையில் இருந்த ரெட் லேபலில் இருந்து ஒரு பகுதியை உள்ளே இறக்கினார்......

ஹ்ம்ம் இதுவும் இல்லாட்டி.... எப்பிடி தான் இதை தாங்குறதோ தெரியாது என்று நினைத்தவர்..... பாபு கடையில் வாங்கிட்டு வந்த கொத்து ரொட்டியை எடுத்து சுவைக்க தொடங்கினார்....

திடீர் என்று தொலை பேசி அலறவே எடுத்து காதில் வைத்தவர்......யாரோ இவரை நன்கு அறிந்த நபர் ஒருவர் வெறும் பாட்டை மட்டும் தொலைபேசியில் போட்டார்....

புலி உறுமுது புலி உறுமுது.....

இடி இடிக்குது இடி இடிக்குது......

கொடிபறக்குது கொடிபறக்குது.....

என்று தொடரும் பாட்டை கேட்டவர் அவசர அவசரமா தொலை பேசியை கட் பண்ணிவிட்டு கொத்து ரொட்டியையும் தூக்கி போட்டு விட்டு மேசையில் இருந்த red label லை தூக்கி பச்சையா அடிக்க தொடங்கினார்

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்கு அவசரமா போயிட்டு இருக்கும் போது என்னமோ முழு றோட்டும் தங்களுக்கே சொந்தம் எண்டு நினைச்சு தங்க அழக கண்ணாடியில அடிக்கடி பாத்து ரசிச்சிட்டு கார ஓட்டிட்டு போற பொண்ணுங்கள என்ன செய்யலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் காரில் சென்று கொண்டிருந்த பொது ''சிக்னலில்'' ஒரு தேசியத்தலைவர் பிரபாகரன் படம் பொறித்த பனியன் அணிந்த பையனை இருவர் அடித்துகொண்டிருன்தனர்,அதை பார்த்ததும் நான் காரைவிட்டு இறங்கி ஓடி ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டேன்.அடித்தவர்களும் அடிவாங்கியவரும் நல்லா குடித்திருந்தனர்..மூவரும் நண்பர்களே...அதன் பிறகு நான் சமாதான படுத்தி விட்டு தலைவர் பனியன் போட்ட பையனை தனியே அழைத்து விவரம் கேட்டேன்.அவர் ஒரு தமிழ்தேசிய உணர்வாளர்.தேசிய தலைவர் பிரபாகரன் மீது மரியாதை கொண்டவர்.ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.

அவர் பேசியவைகள் அனைத்தையும் கேட்டுவிட்டு நான் சொன்னேன்.

''இனிமேல் தேசிய தலைவர் படம் போட்ட பனியனை போடாதே ...அவர் பெயரை வாயால் உச்சரிக்காதே.அதற்கு ஒரு அருகதை வேண்டும்.ஒரு கட்டுக்கோப்பான படையணியை கட்டி வழிநடத்திய மாவீரன் படத்தை போட்டுகொண்டு குடிப்பதும்,குடித்துவிட்டு இப்படி தகாத வார்த்தைகள் பேசி நடுரோட்டில் சண்டைபோடுவதும் அயோக்கியத்தனம்'' என்றேன்.நாம் முக்கிய வேலையாக போகிறவன் உன்னை அடிப்பதை பார்த்துவிட்டு நான் ஏன் ஓடி வந்து தடுத்தேன் தெரியுமா?என்று கேட்டேன்.குனிந்து தலைவர் படத்தை பார்த்தான்.கண் கலங்கி விட்டன்.இனிமேல் குடிக்க மட்டை என நம்புகிறேன்.. என்று சொல்லி அனுப்பிவிட்டு புறப்பட்டேன்.

நேர்மைக்கும்,கட்டுக்கோப்புக்கும் பெயர் எடுத்தவர்கள் புலிப்படை வீரர்கள்.தலைவரின் தம்பிகளாக இருந்த யாரும் மது குடிப்பதோ?வெண்சுருட்டு,பீடி குடிப்பதோ?வேறு போதை பொருட்களை பயன்படுத்தியதோ இல்லை.

ஆகவே தோழர்களே..

தமிழகத்திலே அரசாங்கமே மது கடைகளை திறந்து வைத்து குடிக்க சொன்னாலும் ''தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்'' அவர்களை மதிக்கிற நேசிக்கிற தம்பிகள் குடியை தவிக்கவும்.அது தான் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.அவரின் போர்படை வீரர்களை போல ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ வேண்டும்.சமூகத்தில் ''பிரபாகரனின் தம்பிகள்'' என்றால் பொது மக்கள் மதிக்கும்அளவுக்கு நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இந்த உறுதியை நாம் ஏற்க வேண்டும்.நமது தோழர்களுக்கும் பரப்புரையும் செய்ய வேண்டும்.

இயக்குனர் களஞ்சியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவின் மார்க்கம் பகுதி......

மாலை செய்தியில் அடுத்து வரும் சில நாட்களுக்கு குளிரின் வேகமும் அதனுடன் கூடிய காற்றும் கடுமையாக இருக்கும் என்ற வானிலை அறிக்கையை பாத்து சலிப்புற்றவர் மேசையில் இருந்த ரெட் லேபலில் இருந்து ஒரு பகுதியை உள்ளே இறக்கினார்......

ஹ்ம்ம் இதுவும் இல்லாட்டி.... எப்பிடி தான் இதை தாங்குறதோ தெரியாது என்று நினைத்தவர்..... பாபு கடையில் வாங்கிட்டு வந்த கொத்து ரொட்டியை எடுத்து சுவைக்க தொடங்கினார்....

திடீர் என்று தொலை பேசி அலறவே எடுத்து காதில் வைத்தவர்......யாரோ இவரை நன்கு அறிந்த நபர் ஒருவர் வெறும் பாட்டை மட்டும் தொலைபேசியில் போட்டார்....

புலி உறுமுது புலி உறுமுது.....

இடி இடிக்குது இடி இடிக்குது......

கொடிபறக்குது கொடிபறக்குது.....

என்று தொடரும் பாட்டை கேட்டவர் அவசர அவசரமா தொலை பேசியை கட் பண்ணிவிட்டு கொத்து ரொட்டியையும் தூக்கி போட்டு விட்டு மேசையில் இருந்த red label லை தூக்கி பச்சையா அடிக்க தொடங்கினார்

 

எனக்கு ஆள் ஆரெண்டு தெரியும் :D ......சொல்லட்டே????? ரெலிபோனிலை பாட்டுப்போட்டு வெறுப்பேத்தின சிங்கனுக்கு கோடிவணக்கம்freu.giffreu.gif

 

திருத்தவேலை நடத்தப்பட்டுள்ளது.

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Wow nice song and beautiful voice

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆள் ஆரெண்டு தெரியும் :D ......சொல்லட்டே????? ரெலிபோனிலை பாட்டுப்போட்டு வெறுப்பேத்தின சிங்கனுக்கு கோடிவணக்கம்freu.giffreu.gif

 

திருத்தவேலை நடத்தப்பட்டுள்ளது.

 

 

நீங்க வேற.........

அந்தாளே

இன்றைக்கு ஒரு காரணமும் கிடைக்கலையே :lol:

சொல்லி  தண்ணி  அடிக்க என  காத்திருந்திருக்கும்.... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலையே ஒரு போலீஸ் commissioner கிட்ட 50 லட்சம் ரூபாய் கப்பம் கேக்கிற அளவுக்கு குற்றவாளிகள் இருக்கும் நாடு இலங்கையா தான் இருக்கும் சட்டம் ஒழுங்கு அப்பிடி இருக்கு

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்த இனத்தை அடக்கி வாழ வந்த இனம் வெற்றிகொண்ட நாள்

இன்று ஆஸ்திரேலியா தினம்

Happy Australia Day

Happy Australia Day

 

இதை யாராவது வாழ்த்துக்கள் பக்கத்தில் திறந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், "ஓமந்தை சரோசா"வை கண்டால், களத்திற்கு வந்து இன்றைய நாட்டு நடப்பைப் பற்றி கருத்து சொல்லச் சொல்லவும்.

பாவம், எவ்வளவு நாளைக்குத்தான் விருந்தினராக வெளிநாட்டில் பேரனோடு இருப்பார் அவர்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சா நெஞ்சனின் அஸ்த்தமனம்?

உண்மையில் மனசுக்குள் இவளவு வேறுபாடுகளையும்.... விஷமத்தையும் வைத்துக்கொண்டு இருக்கும் ஒருவரை கருணாநிதி இப்பொழுதே கட்சியை விட்டு நீக்கியது சரியாகவே தோன்றுகின்றது.....காலம் கடந்து இருந்தால் கட்சி நிச்சியம் கூறு போடபட்டிருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் புலிகளல குறை சொல்லியே புலிகளில் பிழை பிடிச்சே ஒரு 100 வருஷத்த ஓட்டிட்டு போவோம் அதுக்குள்ளே இலங்கையில் தமிழன் இருந்த வரலாற்றுச்சுவடே இல்லாமல் போகும்..... எங்களுக்கு என்னா நாங்க வெளிநாட்டுள்ள வந்து செட்டில் ஆகியாச்சு ஜாலி தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் இஸ்ரேல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று விஷயங்கள்

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......

நேரம்

இறப்பு

வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......

நகை

மனைவி

சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....

புத்தி

கல்வி

நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......

உண்மை

கடமை

இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....

வில்லிலிருந்து அம்பு

வாயிலிருந்து சொல்

உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......

தாய்

தந்தை

இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது......

சொத்து

ஸ்திரி

உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.....

தாய்

தந்தை

குரு

  • கருத்துக்கள உறவுகள்
6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......தாய் தந்தை இளமை.......
இளமை ஒரு சுப்பர் சமான்.....

Edited by putthan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்பிடி வேண்டும் என்றாலும் இருந்திட்டு போகட்டும் ஆனால் பாலு மகேந்திரா தமிழ் திரை உலகின் பொக்கிஷம்.....

தமிழ் திரை உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்களில் முக்கியமானவர்......

பாலாவில் இருந்து பல பெயர் சொல்லும் இயக்குனர்களை தந்தவர்

பாலுவும் இளையராஜாவும் இணைந்து படைத்த திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

News :

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்

சுண்டல்: இவனுங்களுக்கு வேற வேலை இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி ராஜேந்தர கூட்டிட்டு ஹல்லேலுஜா கோஷ்ட்டிங்க நாடு நாடா கெளம்பி வீடு வீட கதவ தட்ட போறாங்க..... யாரும் திறக்காதிங்கப்பா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வரலாறில் எந்த பக்கத்திலும் தங்கள் மீதான விமர்சன குப்பைகளுக்கு பதிலளித்த செய்தியை படிக்க முடியாது !

சிலர் அது புலிகள் செய்யும் மிகப்பெரிய பிழை என அதற்கும் விமர்சன குப்பைகளை வீசியே எறிந்தனர் !

அதையும் எங்களின் செவிப்புலம் இன்று வரை கேட்டதே இல்லை !

ஏனெனில் எங்களுக்கு நன்றாக தெரியும் உங்களால் எழுப்பப்படும் கேள்விகள் விமர்சனங்கள் எங்களை வீழ்த்தவே ஒழிய வாழ்த்த இல்லை !

எங்களிடம் எழுப்பிய கேள்விகளை ஒரு முறை உங்களை நீங்கள் கேட்டு பாருங்கள் !

களத்தில் களமாடும் தோழர்களுக்கு நீங்கள் எவ்வளவு இடையூறு செய்கிறீர்கள் என்று, உங்களால் விளைந்த தீமைகள் தான் அதிகம் என்று புரியும் !

அதுபோல் தமிழர் நலத்தை ஒன்றையே இலக்காக கொண்டு தமிழர் தலைநிமிர்வை லட்சியமாக கொண்டு களமாடும் தோழர்களும் ஒரு போதும் உங்கள் விமர்சன குப்பைகளால் பின்வாங்க மாட்டார்கள் !

நின்று வென்று தமிழினத்தை தலைநிமிர்த்துவார்கள் !

என்று வரலாறு உங்களுக்கு உணர்த்தும் எனதன்பான எதிரிகளே !

‪#‎உங்கள்‬ கொள்கை உயர்ந்தது தான் ,நீங்கள் மிகவும் மேன்மையானவர்கள் தான் அதன் பொருள் நாங்கள் திருடர்கள் என்றோ முட்டாள்கள் என்றோ அல்ல !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமானுக்கு ஜெயலலிதா காளிமுத்துட மகள கொடுத்து fuse பண்ணிட்டா போல சத்தம் வாறது கம்மியா இருக்கு..... கல்யாணம் ஆனாலே இப்பிடி தான்பா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமீதாவை தங்கள் கட்சியில் சேர்க்க தமிழக கட்சிகளிடையே கடும் போட்டி...,.

சுண்டல்: நமீதாவின் "மச்சான்ஸ்" ஆக போற அந்த அதிர்ஷ்டசாலி தலிவீர் யாரு..,,

.................................

இதோ திருச்சி புறப்பட்டு விட்டேன்...."கலைஞர்" ......

சுண்டல்: அடங் கொய்யாலே எல்லாரும் உச்சி பிள்ளையார் கோயில் பக்கமா ஓடி போய்டுங்க லே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு நாள் diet இருப்பானேன் ..... விதியே மதியே என்று நோவானேன்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிக்க தெரியுமா? எங்க இதனைப் படிங்க பார்ப்போம்!

புத்திசாலிகளால் மட்டும் தான் இத படிக்க முடியுமாம்

உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ.

ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை.

முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.

பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிக்க தெரியுமா? எங்க இதனைப் படிங்க பார்ப்போம்!

புத்திசாலிகளால் மட்டும் தான் இத படிக்க முடியுமாம்

உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ.

ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை.

முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.

பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று.

அதுக்காக, யாழில் தமிழை எழுத்துப் பிழை விட்டு எழுதக்கூடாது! :lol:

 

ஏனெனில் நான் மற்ற நாற்பத்தைந்து வீதத்துக்குள் வருகின்றேன்! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல

கால் பண்ணான்...

நண்பன் 1 :"டேய் மச்சி ... எப்படிடா இருக்க??"

நண்பன் 2:"நல்லா இருக்கேன்டா ... நீ

எப்படி இருக்க?"...

நண்பன் 1 :"ரொம்ப நல்லா இருக்கேன்டா ...

மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா .."

நண்பன் 2 :"அப்படியா?"

நண்பன் 1 :"ஆமாடா ... நான் சொல்லியிருந்தேன்ல

ஒரு பொண்ணை ரூட் விடுறேன்னு ...

அது செட்டாயிரும் போலிருக்குடா ...

நல்ல வசதியான இடம் ... ஒரே பொண்ணு ....

சும்மா உட்கார்ந்தே ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம்டா"

நண்பன் 2 :"ம்ம்ம்"

நண்பன் 1 :"இப்போ எனக்கு நீ

ஒரு உதவி பண்ணனும்டா"

நண்பன் 2 :"சொல்லுடா பண்றேன்"

நண்பன் 1 : "நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள் ...

என்ன கொடுக்கலாம் ... நீ கொஞ்சம் சொல்லேன்"

நண்பன் 2 :"உனக்கு சொல்லாம

யாருக்குடா சொல்ல போறேன் ? என்னோட போன்

நம்பரை கொடுடா"

(("டமார்"னு ஒரு சத்தம் ...

போனை உடைச்சிட்டானோ!))

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.