Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரை கொலைகாரன் என ஆள்வைத்து பேசவைத்த கருணாநிதியின் துரோகத்தை கண்டிப்போம்!

Featured Replies

மூன்று வருடங்களுக்கு முன்னர் உண்ணா விரத நாடகமாடி 146,000 தமிழரை கொலசெய்ய துணை போன கலைஞரை பிரிப்பதாக ஆக்கங்கள் இப்போது தான் வரத்தொடங்கியிருப்பதாகவும் தாங்கள் அதை யாழில் இப்போதுதான் காணத்தொடங்கியிருப்பது போலவும் நடித்து, அதை எழுதுவோர்கள் இலங்கை அரசின் ஆட்கள் என்று கூற முன்வருவோர் யாழில் தங்களை மறைக்க முயன்று தோற்றுப்போன இயலாமையை யாழின் வாசகர்களுக்கு திறந்து விடுகிறார்கள். உண்மை நிகழ்வுகளுக்கு எதிர்க்கதை சொல்லி அதை சமாதானமாக போதித்தவர்கள் தங்களைத்தாங்கள் மறைக்க முடியாமல் போனவுடன் முழுபூசனிக்கயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசுக்கு பரிசில் வழங்க சென்ற கருணாநிதியை ஏற்றுகொள்ளாதவர்கள் அரசின் அடிவருடிகள் என்று கதை கட்டி தாங்கள் இதுவரையும் யாழில் எழுதி வந்தவை என்ன என்று விளங்க வைக்கிறார்கள். எழுத இல்லாமல் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பதை மறைக்கமுடியாமல் தவிக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கருனாநிதியைத் தூக்கிப்பிடிக்கவேண்டாம். ஒட்டுமொத்த தமிழினத்துக்கே தெரியும் அவர் கடைந்தெடுத்த அயோகியர் என. ஆனால் விமர்சனம் செய்யாதீர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள்

மல்லை: ஒரு வசனத்திலேயே எல்லா தமிழரையும் சாகடசிட்டீங்க (14 60 ,000 - பதினாலு லட்சத்து அறுபதினாயிரம் )

மல்லை: ஒரு வசனத்திலேயே எல்லா தமிழரையும் சாகடசிட்டீங்க (14 60 ,000 - பதினாலு லட்சத்து அறுபதினாயிரம் )

திருத்தி இருக்கிறேன். நன்றி.

<p>தமிழர்களைக் கொல்வதற்கு அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகள் துணை போயின. பொய்யான நாடகங்களை ஆடி விடுதலைப் புலிகளை நம்ப வைத்துக் கழுத்தறுத்தன. ஆயுத முகவர்கள் என்ற பெயரில் சென்று புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்ய முயன்றவர்களை கைது செய்தன.

போரின் வெற்றிக்கு உயிர்நாடியாக இருந்த ஆயுத வழங்கல்களை இல்லாமல் செய்தன. எங்களை தோற்கடித்தன.

இன்றைக்கு எல்லாவற்றையும் மறந்து நாம் அவர்களோடு இணைந்து ஒரு குறுகிய தூரம் என்றாலும் பயணம் செய்யத் தயாராக இருக்கின்றோம். விடுதலைப் பயணம் நீண்டது. இதில் கலைஞரினதும், திமுகவினதும் துணையும் எமக்கு ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்படும்.

நண்பர்கள் இல்லாததால் தோற்றோம் என்று சொல்கின்றோம். நீட்டப்படுகின்ற கரங்களை பற்றாது விட்டாலும் பரவாயில்லை.

அவற்றை தட்டி விட்டு அவமானப்படுத்தாது இருப்போம். நாம் இன்றைக்கு ஆட்டிலறிகளோடு நிற்கவில்லை. யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்டிருக்கின்றோம்.

சமஸ்டி வரை போன சிங்கள அரசு இன்றைக்கு எதுவுமே தர மாட்டோம் என்கின்றது. ஆகக் குறைந்தது 13வது திருத்தச் சட்டம் தரும் உரிமைகளை முழுவதாகப் பெறுவதற்கு என்றாலும் எமக்கு நண்பர்கள் தேவை.

தமிழகத்தின் பெரிய இரண்டு கட்சிகளில் ஒன்றை, நாளை ஆளும் கட்சியாக வரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ள ஒன்றை பகைப்பது எத்தனை முட்டாள்தனம்?

நாம் இதை செய்வதை சிறிலங்கா அரசுதான் விரும்பும்

கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை தமிழ்நாட்டில் ஆரம்பித்துள்ள நிலையில், அவரையும் ஈழத்தமிழர்களையும் பிரிப்பது போன்றும், இரு தரப்புக்கும் வெறுப்பை வளர்ப்பது போன்றும் வருகின்ற ஆக்கங்களையே நான் சிறிலங்கா அரசிடம் இருந்து வருவதாக நம்புகிறேன்.

உங்கள் கற்பனைகளை நீங்கள் நம்புவது உங்கள் உரிமை!

உங்கள் கற்பனைகளை நாங்கள் நம்பாமல் விடுவது எமது உரிமை!!!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மீது ஈழத்தமிழர்களும்.. தமிழகத் தமிழ் மக்களும் கொண்டுள்ள அதிருப்தி தான் டெசோ மாநாடாக வெளிப்பட்டுள்ளது. இந்த அதிருப்தி சீமான் போன்றவர்களால் வெளிக்காட்டப்பட்டிராவிட்டால்.. கருணாநிதி இன்றும் வெளிப்படையாக ராஜபக்சவிற்கு பொன்னாடை தான் போர்த்திக் கொண்டிருந்திருப்பார்..!

கருணாநிதி உட்பட இந்தியத் தலைமைகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதோடு.. எதிர்ப்பு அரசியல் என்பது தான் அந்தக் குள்ள நரிகளின் போக்கிலும் அவர்கள் விரும்பாத போதும் மாற்றங்களைக் கொண்டு வரும்..! அதுதான் இன்றைய அரசியல் சூழல் தமிழகத்தில்..!

ஈழத்தமிழர்கள் மீதான தார்மீக ஆதரவு என்பது தமிழகத்தில்.. எம் ஜி ஆர் காலத்தோடு செத்துவிட்டது..! (சிறு கட்சிகள் தவிர) :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அண்ணா,

உங்கள் கருத்தை பார்க்க அவன் அடிச்சால் அதான் திருப்பி அடிச்சேன் என்று ப்ள்ளிக்கூட பிள்ளை ரீச்சரிடம் முறையிடுவது போல இருக்கு. தேள்போல அடிப்பாங்கள், பூரான் போல அடிப்பாங்கள் என்று அளவுக்கதிகமான உசுப்பேத்தல்களால் மக்களால் யதார்த்தை உணரமுடியாமலும் அதே அளவு புலம்பெயர்மக்கள் இருக்கிறார்கள் உங்களைக்கைவிடமாட்டார்கள் என்று புலிகளை அளவுக்கதிகமாய் எதிர்பார்க்க வைத்ததும் உங்களைப் போன்ற பத்தி எழுத்தாளர்களையும் சேரும். இந்த நிலைக்கு நீங்களும் காரணம் என்பதை மறந்து விட்டு மீண்டும் வகுப்பெடுக்காதீர்கள்.

ஈழத்தமிழன் யாரும் கருணாநிதிக்கோ,ஜெயலிதாவுக்கோ கடை நிலை தமிழனுக்கோ எதிரியல்ல,அப்படி நினைக்கவும் இல்லை. தமிழ்நாட்டு ஆதரவில்லாமல் எமக்கு ஒரு தீர்வில்லை என்பதும் அசைக்க முடியாத உண்மை. ஆனால் கருணாநிதி போன்ற பச்சோந்திகள் தமது சொந்த அரசியல் சுயலாபத்துக்காக மீண்டும்,மீண்டும் ஈழத்தமிழர் அவலத்தை காசாக்குவதும்,கேலிக்குரியதாக்குவதையும் வெந்து,வேதனைப்பட்டவன் கேள்வி கேட்கக்கூடாது என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்கிறீர்கள்?

தனிப்பட்ட சபேசன் அண்ணாவுக்கான கேள்வியோ,தனிநபர் தாக்குதலோ அல்ல, இப்படியான எண்ணங்களைக்கொண்டவர்களுக்கான கேள்வி.

கருணாநிதியின் கடந்தகாலவரலாறுகளைப்புரிந்தவர்கள் யாரும் கருணாநிதியை இனியும் நம்பத்தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

மற்றும் திமுக தொண்டர்களுக்கும் தெரியும் இது தப்பு என்று. அதை நிச்சயம் அவர்களும் தட்டிக்கேட்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க தொண்டர்கள் எல்லாம் எப்போடா ஒரு குவாட்டரும் ஒரு புரியாணி பாசலும் கிடைக்கும்னு காத்து இருப்பவங்க அது கொடுத்த உடன வாழ்க தலைவர் நு கோஷம் போட்டுட்டு போய்டுவாங்க

அவங்களுக்கு எல்லாம் ஈழத்தமிழனின் வலிகள் வேதனைகள் நாங்கள் செய்த தியாகங்கள் சிந்திய குருதிகள் எதுவுமே தெரியா

ஜீவா!

தேள், பூரான் கதைகள் நான் எழுதியவைகள் அல்ல. அன்றைக்கு நிறையப் பேர் எழுதியதனால் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடும். அதை விட அவைகள் வெறுமனே இராணுவு ஆய்வுகள்தான். புலிகள் அப்பொழுது தேள் வடிவத்தில் நின்றிருக்கலாம். அதை பத்தி எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கலாம். எதிரி அவற்றை விட திறமையாக திட்டம் வகுத்து பாம்பு வடிவில் எங்களை வென்று விட்டான். இதற்கு பத்தி எழுத்தாளர்கள் என்ன செய்ய முடியும்?

நிலைமைகளை எழுதி வெற்றிகளை பெறுவதற்காகவும், தக்க வைப்பதற்காகவும் அரசியல் ராஜதந்திர நகர்வுகளின் அவசியம் பற்றி அன்றைக்கும் நிறைய எழுதியிருக்கிறேன். இன்றைக்கும் எழுதுகின்றேன்.

சரியான முறையில் அவற்றை தரம் பிரித்து புரிந்து கொள்பவர்கள் அவற்றை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்

ஆனால் சிலர் நாம் "மகிந்தவை லண்டனில் வீதி வீதியாக அடித்து விரட்டினோம், கருணாநிதியின் முகநூலை முடக்கினோம், பிரபாகரன் வந்து தமிழீழம் பெற்றுத் தருவார்" என்று கனவு கண்டு கொண்டிருந்தால் நாம் என்ன செய்ய முடியும்?

முக்கிய குறிப்பு: ஆய்வுகள் பற்றி ஏற்கனவே ஒரு கதை எழுதியிருக்கிறேன். இது பற்றித் தொடர்வது என்றால் அங்கே தொடருங்கள். இதற்குள் சிலர் முஸ்லீம்களையும் இழுக்க முனைந்து அவற்றிற்கு பதில் சொல்வதை தவிர்த்திருக்கிறேன். இங்கே கருணாநிதி சம்பந்தமாக எமது நிலைப்பாடு பற்றி மட்டும் பேசுவோம்

சுண்டல்,

பல திமுக தொண்டர்கள் அப்படி அல்ல. இன்றைக்கு கலைஞர் எமக்கு ஆதரவாக பேச வேண்டி இருப்பதன் காரணம் இந்தத் தொண்டர்கள்தான். இவர்கள்தான் எம்ஜிஆரையும் எமக்கு உதவி செய்ய வைத்தவர்கள்.

உங்கள் கற்பனைகளை நீங்கள் நம்புவது உங்கள் உரிமை!

உங்கள் கற்பனைகளை நாங்கள் நம்பாமல் விடுவது எமது உரிமை!!!

ஆசான் சொல்வது மிக நீளமான கருத்து. இதை விவரிக்க முடியாது. சம்பந்தர் ஏன் ஜெனிவா சென்று அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்யவில்லை என்பதின் உண்மையை வெளியே சொல்லவில்லை. அதே மாதிரியே கருணா, தேவானந்தா போன்றோரும் உண்மையை சொல்வதில்லை. ஆனால் இரண்டு பொய்களையும் ஒரே அலகில் வைத்து வியாக்கியானம் செய்ய முடியாது. "ஈழத்தமிழர் பிரச்சனையில் மேற்கு நாடுகளும் எதிராக நடந்தன; அதனால் கருணாநிதி அப்படி நடந்ததை ஏன் மன்னிக்க முடியாது?" என்ற கேள்வி சுத்த அபத்தமானது. மேலைநாடுகளின் ஜனநாயக அரசியலை கருணாநிதியுடன், காங்கிரசுடன் ஒப்பிடமுடியாது.

தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழரின் பிரச்சனையை கருணாநிதி பொறுப்பெடுக்கட்டும் என்று அவரை தேர்தலில் தெரிந்தெடுத்திருந்திருக்கவில்லை. ஆனால் சுதந்திரமான ஒரே ஒரு தமிழ்ப் பூமி என்ற முறையில், ஈழத்தமிழரின் மட்டுமல்ல அல்ல அகிலத்தமிழரின் நல்வாழ்வுக்கும் கருணாநிதிக்கு மானசீகமான கடமை இருந்தது. இது தமிழுக்காக இரவு-பகல் வாழும் தமிழ் நாட்டு அறிஞர்கள் தொடக்கம், தான் ஏன் வோட்டு போடுகிறேன் என்பதை அறியாத அப்பாவி வரைக்கும் கருணாநிதியிடம் கையளித்த பொறுப்பு. இதை மேற்கு நாடுகள் அரசியல் காரணங்களுக்க ஈழத்தமிழர் பிரச்சனையில் காட்டும் சிரத்தையுடன் ஒப்பிட முடியாது. மேற்குநாடுகள், தனித்தனி சந்தர்பங்களில் எமக்கு எதிரியாக அல்லது நண்பனாக வரலாம். ஆனால் அவர்கள் நம்மில் ஒருவர் அல்ல என்பதால் அவர்கள் கருணாநிதி போலத் துரோகிகளாக முடியாது.

போர்நடந்த காலத்தில் இருந்த அரசுகள் ஒன்றும் மேற்கு நாடுகளில் இன்று இல்லை. மேற்கு நாடுகளில் புலம் பெயர் மக்கள், அந்த நாடுகளின் அரசுகளின் மனமாற்றத்திற்கான பிரசாரங்களை முன்னெடுத்து, புதிய அரசுகள் மனமாற்றத்தை காண்பிக்கின்றன. இந்த காலத்திற்கு காலம் மாறும் ஜெனநாயக அரசுகளை தனிப்பட்ட மனிதன் கருணாநிதியுடன் ஒப்பிடுவது பொருத்தமில்லாது. இவர் திரும்பத்திரும்ப நிமிர்த்த முடியாத நாய்வால் போல் நடந்து கொள்கிறார். டொசோவை மீள ஆரம்பித்த சுயநல நடத்தை இவர் மாற்றம் அடையாத பழைய கருணாநிதி என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. தி.மு.க இவரின் குடும்பக்கட்சி; காங்கிரஸ் இவரின் முதாலாளி; என்ற நிலையை இவர் மாற்றாதவரைக்கும் இவர் மாறிவிட்டதாக யாரும் நம்ப மாட்டார்கள்.

தமிழீழ போர்க்காலம், மேற்குநாடுகள் இரண்டாம் உலகயுத்தத்திற்கு அடுத்த பதட்ட நிலையில் இருந்த காலம். கிட்டத்தட்ட எல்லாநாடுகளும் முஸ்லீம் பயங்கரவாததிற்கு எதிராக போரில் ஈடுபட்டிருந்த காலம். கதிர்காமர் போன்றோரின் உதவியால் நமது விடுதலைப் போர் இலகுவாக பயங்கரவாதமாக காட்டப்பட்டுவிட்டது. சிங்கள அரசை அவர்கள் சரியாக கணிக்கத் தவறியதுதான் அவர்களின் பிழை. அவர்கள் வன்முறை இல்லாமல் தீர்வு பெறமுடியும் என்று சிங்கள சந்திரிக்காவாலும் கதிர்காமராலும் நம்பவைக்கபட்டார்கள். நாங்கள் மன்னிப்பது அந்த பிழையை மட்டுமே. கருணாநிதி செய்தது போன்ற துரோக நடத்தை ஒன்றை அல்ல. அவர்கள் தமிழருக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதை காங்கிரசு மாதிரி சந்தர்பத்திற்கு ஏற்ற மாதிரி கதைத்து மறுக்கவில்லை. போர்புரிந்து தனிநாடு பெறுவதை மட்டும்தான் ஏற்கவில்லை.

சீனாவை கட்டுப்படுத்த இலங்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தத்துவம், கருணாநிதி ஒட்டிக்கொண்டிருந்த காங்கிரசால் (பிராதானமாக- பிளேக்கூடாக) மேற்குநாடுகளுக்கு விற்கப்பட்டதால்த்தான் அவர்கள் தளபதி புறூகொடவின் தலைமையின் கீழ் இருந்த கண்காணிப்பு படையை விலக்கி இலங்கை விடுதலை இயக்கத்தை ஒடுக்க சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அதன் பின்னர் தீர்வு வரும் என்று எதிர் பார்த்தார்கள். மேற்கு நாடுகள் இன்று தாம் சிங்கள அரசிடம் ஏமாற்றம் அடைந்ததை வெளிக்காட்டுகின்றன. ஐ.நா அறிக்கை, மனித உரிமைகள் சபை பிரேரணைகள் இதன் அடையாளங்கள். நிச்சயமாக அவர்கள் தமது சிங்கள இலங்கையும் தமிழீழமும் இணந்திருப்பது இந்து சமுத்திரத்திலிருந்து சீனாவை விலக்க உதவும் என்ற கொள்கையை மீளாய்வு செய்யத்தான் போகிறார்கள். அப்போது அவர்களின் மானமாற்றம் மிகவும் பெரிதாக இருக்கபோகிறது.

அவர்கள் தாங்கள் விட்டபிழைகளைத்திருத்தும் காலம் வந்தேயாக வேண்டும். அவர்கள் தமக்கு அரசியல் இலாபம் காட்டப்போவதில்லாத இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கபோவதில்லை. ஆனல் கருணாநிதி தான் செய்த துரோகங்களை ஒத்துக்கொண்டு ஒரு வார்த்தை சொல்ல ஆயத்தம் இல்லை. 146,000 மேலாக கொல்லப்படுவதை கேள்விப்பட்டவுடன் கள்ளத்தனமாக உண்ணாவிரதமிருந்திருக்காமல் அந்தப் புள்ளி விவரத்தை கலைஞர் TV மூலம் வெளிநாடுகள் எல்லாம் தெரிய ஒளிபரப்பியிருக்கலாம். ஆனால் சட்டங்கள் போட்டு இவர் தமிழ் நாட்டில் இருட்டிப்புகள் செய்து எழுச்சியை அடக்கினார்.

சிங்கள அரசு எப்போதும் சமஸ்டி தர ஆயத்தமாக இருக்கவில்லை. சமஸ்டிக்கட்சி ஆரம்பித்ததால்த்தான் 1956ம் ஆண்டய கலகம் UNP யால் ஆரம்பிக்கப்பட்டது. 13ம் திருத்தம் தர இலங்கை ஒருபோதும் ஆயதமாக இருக்கவில்லை. 65 ஆண்டுகள், நான்கு அரசியல் அமைப்புக்கள், 10க்கு மேற்பட்ட அரசுகள் வந்து போய்விட்டன. தீர்வு தரப்படவில்லை. இனி ஒருநாள் அது பிடிங்கி எடுக்கப்படும்.

நாங்கள் பேசவேண்டியது ஈழத்தமிழ் மக்கள் பிரச்சனை. அது எல்லாவற்றையும், எல்லாக்காலத்தையும் தொட்டதாக இருக்க வேண்டும். சமஸ்டி அரசியல் அல்ல; கருணாநிதி பிரச்சனை அல்ல; முஸ்லீம் தமிழ் உறவு அல்ல; ஆனல் இதில் சம்பந்தபட்ட இடங்கள் தான் முஸ்லீம், கருணாநிதி,சம்ஸ்டிப் பிரச்சனைகள். இடத்திற்கிடம் ஏற்றாப்போல் கதைப்பதால் தமிழ்ர் தீர்வு ஒன்றை நோக்கி பயணிக்கலாம் என்ற மாயையை எற்படுத்துவது தவறு. இதனால்தான் ஜீவா போன்றோர் சில பழைய எழுத்து வரிகைளை ஞாபகப்படுத்துகிறார்கள் போலிருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து முல்லை.

நன்றி நேரத்துக்கும் எழுத்துக்கும்.

இனி தமிழகத்தில் கருணாநிதி விரும்பினாலும் ஈழத்தமிழரை வைத்து பிழைப்பு நடாத்தமுடியாது என்பதே உண்மை.

Edited by விசுகு

அருமையான கருத்து முல்லை.

நன்றி நக்கலுக்கு(கருத்துக்கும்). முடிந்தவரை திருத்தியிருக்கிறேன். :)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=dUHoXqw3pb0&feature=share

சீமான் சென்னை உரை : ஈழம் அவசியம்

திராவிடத்தை தோலுரித்தார், அங்கே அண்டி வாழும் தமிழ் தலைவர்களை வருத்தெடுத்தார். சாதியத்தால் மண்டிப்போயிருக்கும் தலைவர்களை புறம் தள்ளினார். சாதிகளை விளாசினார். சாதிகளை காரணம் காட்டி கருணாவும், ஜெயாவும் எப்படி தமிழ் கட்சிகளை பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதை தெளிவு படுத்தினார். தேசிய தலைவரின் குணப்பன்புகளை, அவரது பார்வையை , அவருடனான கலந்துரையாடலை பதிவு செய்தார் . அவருடனான சந்திப்புக்கு பிறகு கருணாநிதியின் நேரத்திற்காக சு ப வீ யும் இவரும் அலைந்த கதையை சொன்னார். கருணா தட்டிக்கழித்து தனது துரோக தனத்தை நிறைவேற்றி கொண்டார் என்றும் அவர் நடத்தி வரும் அரசியல் நாடகங்களில் டெசோ வும் ஒன்று என்றார். திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல தவறாத சீமான் அவர் கூறிய கருணாநிதி எதிர்ப்பையே பிழைப்பாக கொண்டிருக்கின்றனர் என்ற விமர்சனத்திற்கு கருணாநிதியை புகழ்வதின் மூலமே பிழைப்பு நடத்தி கொண்டிருக்கின்றார் என்று பதிலடி கொடுக்க தவறவில்லை.

திராவிடம் எப்படியெல்லாம் தமிழர்களின் வாழ்வை சிதைக்கிறது, சிதைத்துக்கொண்டிருக்கிறது என்பதையும், தொழில் துறையில் மாற்று இன மக்களின் ஆளுமை எப்படி தமிழர்களை வீழ்த்திக்கொண்டிருக்கிறது , தமிழன் ஏன் கடைகோடி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டான், யாரால் வாழ்விழந்தும், வாழ வழியின்றும், சென்னையில் இருக்க இடமின்றி அலைந்து திரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றும் எமது உள்ளக்கிடங்கை அப்படியே பிரதி பலித்தார்.

http://www.youtube.com/watch?v=BJ0jcKMzC0c&feature=BFa&list=ULdUHoXqw3pb0 (starts from 2.00 mins)

சீமான் பேட்டி : கேள்விகென்ன பதில் NDTV-HINDU

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.