Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல மனைவி!

Featured Replies

lady_withfruit.jpg

[size=4]மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது.

’அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பது இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.

இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.

அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.

ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றி விட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.

அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை வளரும்.

அவளைக் காணாத நேரமேல்லாம் கவலைப்படும்.

கனவு காணும்

கற்பனை செய்யும்

மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.[/size]

[size=3][size=4]அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; [/size]நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் [size=4]உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.[/size][/size]

[size=4]ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரிரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.

பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்துவிட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போகிறது.

ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.

எதிர்காலக் குடும்ப நிம்மதியையும் ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷி தாசி

கரணேஷி மந்திரி

ரூபேஷி லட்சுமி

க்ஷமவா தரித்ரி

போத்யேஸூ மாதா

சயனேஸூ வேஸ்யா

சமதர்ம யுக்தா[/size]

[size=3]குலதர்ம பத்தினி[/size]

[size=4]சேவை செய்வதில் தாசியைப் பாலவும், யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும், அழகில் லட்சுமியைப் போலவும், மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும், மஞ்சத்தில் கணிகையைப் போலவும் நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்தச் சுலோகம்.

’கொண்டான் குறிப்பிறிவான் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாள்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமையைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும். (வடமொழியில் தாசி என்றால் அடிமை.)

அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரக்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

’பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார்களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.[/size]

[size=3][size=4]அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருரொருக்குத் [/size]தெரிகிற மாதிரி ஜாக்கேட் போட்டு பாதி வயிற்றையும் [size=4]பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.[/size][/size]

[size=4]காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை, ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடிந்து, மல்லிகைப் பூச்சூடி முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே ’ மகாலட்சுமி பொன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.

”யான்நொக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்”

என்றான் வள்ளுவன்.

’ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்ற அதிர்ச்சியைத் தருமென்றால் மாகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டுவிடுவது போல, அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப் பெண்களால் அது முடியும்.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய்போல் இருக்க வேண்டும்.

’தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளி அறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்.

கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்.

-அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவது இல்லை; வாழக்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகிவிடுகிறான். அவன் முகம் எப்போழுதும் பிரகாசமாயிருக்கிறது.

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும் முட்டாளாகி விடுகிறான். அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.

எல்லாம் சரி.

அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி?

அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.

’தாயைப் பார்த்துப் பெண்ணெடு

தரத்தைப் பார்த்து வரவிடு

நிலத்தைப் பார்த்துப் பயிரிடு

நேரம் பார்த்து முடிவெடு’

-என்பார்கள்.[/size]

lady-144.jpg[size=4][/size]

[size=4]தாயைத் தண்ணீர்த் [/size][size=4]துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார்கள்.

“தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள். தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஜதீகம். அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதி விலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பர்க்க வேண்டியதில்லை.

இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவன் நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் ‘பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி முடிக்கிறார்கள்.

அத்தகைய திருமணங்கள் – நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணஙகள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.[/size]

[size=4]ஆத்திரத்தில் காதல்...

அவசரத்தில் கல்யாணம்...

-என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தோண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறாக பலனையே தந்திருக்கின்றது (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை)

குடிப்பிறப்பு பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.’

’குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதில்லை பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி – மதம் பார்ப்பது பயனற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.[/size]

lady-n-121.jpg

[size=4]இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அநுமன், இராமனிடம் இப்படிச் சொல்கிறான்:

”விற்பெரும் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பின்

நற்பெரும் தவத்த ளாய

நங்கையைக் கண்டே னில்லை;

இற்பிறப் பென்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்!”

”ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

”குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும் ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

”நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் [/size]

[size=4]குலத்தின்கண் ஜயப் படும்”

என்றான் வள்ளுவன்.

”நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டு விட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும், மற்ற குணங்கள் தாய் வழியே வந்திருக்கும்.

பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்கார்ரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

”பத்தாவுக் கெற்ற பதிவிரதை யாமானால்

எத்தாலும் கூடி வாழலாம் – சற்றேனும்

ஏறுமா றாக இருப்பேளே யாமாயின்

கூறாமற் சந்தியாசம் கொள்!”

”சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப் பொல்வடிவு

கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே- தொண்டா

செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்

நெருப்பில் வீழ்ந்திடுதல் நேர்!”

என்றாள் தமிழ் மூதாட்டி..

”கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை

எடுத்(து)

அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)

ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்(து)

உறங்குவாளை

எப்படி நான் நம்புவேன், இறைவா

கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.[/size]

Sneha-6006.jpg

[size=4]சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்தான் நதி மூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்கிறார்கள்.

”இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்”

இதுவும் மூத்தோர் மொழி.

“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள், அவள் அன்பில்லாளாக. அடக்கமில்லாளாக, பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்து விட்டால், உண் வீடு புலி கிடந்த குகைபோல ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!

இந்துப் புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு ஏற்பட்டு விட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.

நன்றி : கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்துமதம்)[/size]

தமிழ்லீடர்

  • கருத்துக்கள உறவுகள்

உடனடியாக இங்கு ஆஜராக வேண்டிய சுண்டலைக் இன்னும் காணலை...லொல்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல, மனைவி என்பவள்,

கணவன்.... யாழ்களத்தில், மினக்கெடும் போது....

திட்டாமல், இருக்கவேண்டும்.

[size=4]கார்யேஷி தாசி

கரணேஷி மந்திரி

ரூபேஷி லட்சுமி

க்ஷமவா தரித்ரி

போத்யேஸூ மாதா

சயனேஸூ வேஸ்யா

சமதர்ம யுக்தா[/size]

[size=3]குலதர்ம பத்தினி[/size]

[size=4]சேவை செய்வதில் தாசியைப் பாலவும், யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும், அழகில் லட்சுமியைப் போலவும், மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும், மஞ்சத்தில் கணிகையைப் போலவும் நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்தச் சுலோகம்.[/size]

ஒவ்வொரு குணத்திற்கும் ஒருவர் இருந்தால் பிரச்சனை இலகுவாக முடிந்துவிடும்.

நல்ல, மனைவி என்பவள்,

கணவன்.... யாழ்களத்தில், மினக்கெடும் போது....

திட்டாமல், இருக்கவேண்டும்.

+ பின்னால் நின்று முதுகுசொறிந்துவிடவேண்டும் என்பதையும் ஆசைக்குச் சேர்க்கலாம்? ஆனால், எதிர்பாராத தருணத்தில் தட்டகப்பையால் முதுகில் சூடுகிடைக்கக்கூடும்.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

+ பின்னால் நின்று முதுகுசொறிந்துவிடவேண்டும் என்பதையும் ஆசைக்குச் சேர்க்கலாம்? ஆனால், எதிர்பாராத தருணத்தில் தட்டகப்பையால் முதுகில் சூடுகிடைக்கக்கூடும்.

எங்கும்... சகவும், சயவும் உண்டு.

நீங்கள், சகவை.. சகவாக, கூட்டினால்.... சய.

சயவை... சயவாக, கூட்டினால்... சக.

சரி, கம, நித, நீ....

என்னும்...போது...

இது, எல்லாம்... உங்களுக்கு விளங்காது...

நான் சொல்லி, உங்கடை மண்டைக்குள்ளை ஏறும், என்று.... நம்ப மாட்டன்.

டோய்..... வயலுக்கு தண்ணி இறைக்கணும், எருமை மாட்டுக்கு.... நாளத்தை பூட்டுங்கடா...

[size=1]

[size=4]நீ விரும்புவளை விட [/size][/size][size=1]

[size=4]உன்னை விரும்புவளை திருமணம் செய் [/size][/size][size=1]

[size=4]வாழ்வு மகிழ்வாய் அமையும் ![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... சொல்லாதிங்க, ஐயா...

நல்ல, கணவனுக்கு எப்படி, வரைவிலக்கணம் இருக்க வேணும்.

கார்யேஷி தாசி

கரணேஷி மந்திரி

ரூபேஷி லட்சுமி

க்ஷமவா தரித்ரி

போத்யேஸூ மாதா

சயனேஸூ வேஸ்யா

சமதர்ம யுக்தா

[[size=4][size=3]குலதர்ம பத்தினி[/size][/size]

சேவை செய்வதில் தாசியைப் பாலவும், யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும், அழகில் லட்சுமியைப் போலவும், மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும், மஞ்சத்தில் கணிகையைப் போலவும் நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்தச் சுலோகம்.

"ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி" என்பது கேட்க நன்றாய் இருக்கும். ஆனால் சயனேஸூ வேஸ்யா என்ற மூதேவி எப்படி குலதர்ம பத்தினி என்ற சீதேவியாவது. கற்பென்ற கருதுகோளிள் குடும்பியா, மொட்டையா என்று இரண்டு மட்டும்தான் உண்டு. இடையில் ஒன்றும் இல்லை. வேண்டியதை பெற்றுக்கொள்!

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ண தாசன் ஒவோருதிட்ட ஒவொரு விதமா அனுபவிச்சிட்டு எழுதிட்டு போய்ட்டாரு நீங்க என்னாடான்னா இன்னும் குண்டு சட்டிகுள்லையே குதுரை ஓட்டிட்டு :D

இப்படி எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தால் இந்த பூலோகத்தில ஒரு ஆண்மகனும் கலியாணம் கட்டேலாது. கலியாணம் கட்டாமயிருக்கிறவையை, கட்டினவை வெறுப்பேத்துகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி நல்ல மனைவியாக அமைவது வாய்க்கும் புருஷன் நல்ல புருசனா என்பதிலேயே தங்கியிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.