Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிகின்றதா எங்களை ?????????????

Featured Replies

ஒரு 60 அடி ஆழம் காணுமா

[size=4]நீங்கள் இந்தக்களத்தில் உள்ள 'தேடல்' பகுதியில் சில தேடல்களை செய்யுங்கள். ஆழம் புலப்படும்.[/size]

  • Replies 98
  • Views 5.6k
  • Created
  • Last Reply

ஒரு 60 அடி ஆழம் காணுமா

உங்களுக்கு 60 அடி போதாது..............6000 அடிகளுக்கு மேல் போங்கள் ......

சிலவேளை புலப்படலாம்........... :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதை ஆட்சியலர்களுக்கல்ல உங்களுக்கும் , எனக்குமானது .

கோ அண்ணா இந்த விதண்டாவாதம் எண்டா என்ன எண்டு கேட்டநீங்கால்லோ எனக்கு விடை கிடைச்சிட்டுது . உங்களுக்கு ?

எனக்கும் எந்த பாரபட்சமும் இன்றி அனைத்து தமிழ் பேசும் அரசியல் கைதிகளையும் ஒரே இரவில் விடுவிக்கத்தான் ஆசை. அதைக் கவிதைகளால் மக்களைத் திட்டித்தீர்த்து செய்ய முடியாது.. என்பதிலும் நாங்கள் திடமாக இருக்கிறோம். மக்கள் வெறுமனவே கூச்சல் போட்டு ஆட்சியாளர்கள் மனம் மாறுவார்கள் என்றும் இல்லை. ஆட்சியாளர்கள் மீதான சர்வதேச உள்ளூர் அரசியல் அழுத்தங்களே இதற்கு விடை காண முடியும்..!

உங்க கோமகன் அண்ணா யாழில தான் கவிதை எழுத முடியும். நாங்க பிந்துனுவெவ சம்பவத்தை அடுத்து அந்தக் கைதிகளுக்காக கவிதை எழுதி தாயக நாளிதழான தினக்குரலில் வெளி வந்தும் இருந்தன. ஒன்றுக்கு இரண்டு கவிதைகள். அதனால்.. அந்தக் கைதிகளுக்கு ஒரு விமோசனமும் ஏற்படல்ல. அதற்குப் பிறகு கைதிகளானவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்...! காணாமல் போனோர் இன்னும் இன்னும் பல ஆயிரம்..!

அதுமட்டுமன்றி.. எங்கள் நெருங்கிய உறவினர்களும்.. இந்தக் கைதிகள் வரிசையில் உட்கார்ந்திருந்து காலத்தை கழித்திருக்கிறார்கள். கைதிகளின் அவர்களின் குடும்பங்களின் அவல வாழ்வை நாம் நீண்ட நெடுங்காலம் அனுபவிக்கிறோம்..!

அந்த வகையில்.. சும்மா சிங் சாங் போடாமல்.. யதார்த்தமாக எது நிகழ வேண்டும்.. யார் எதை நிகழ்த்த வேண்டுமோ அவர்களை நோக்கி உங்கள் கவிதைகளை திருப்பி விடுங்கள். மக்களை சாடிக் கொண்டு... காட்டிக் கொடுப்பாளர்களையும் ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் பாதுகாக்கும் இழி செயலை செய்ய அனுமதிக்காதீர்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நாங்களும் உங்களைப்போல்

ரத்தமும் சதையும்

ஆசாபாசங்களும் உடைய மனிதப்பிறவிகள் .

சிங்களத்தின் கையில் சிக்கினாலும்,

உங்களைச் சிக்கவைக்காத

மனிதர்கள் ஐயா!![/size]

இது விடுதலைக்காய் தன்னை அர்ப்பணிக்கும் மாவீரன் மண்டையில் தோன்றும் சிந்தனை போல் எனக்கு தோன்றவில்லை

நான் கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் த.சூ புலிகள் என்ன வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்களா?...அவர்களும் ரத்தமும்,சதையும் உள்ள மனிதர்கள் தான்...அவர்கள் தற்போது படும் கஸ்டம் அவர்களுக்குத் தான் தெரியும்.

கோமகன் நீங்கள் புலம் பெயர் மக்களை நோக்கி கவிதை எழுதாமல் யாழில் உள்ள சிலர் எழுதுவது மாதிரி பான்கீன்மூனையும்,பிரணாப் முகர்ஜியையும் நோக்கி கவிதை எழுதுங்கள்...புலம் பெயர் மக்கள் இக் கவிதையை படித்து ஆகப் போறது ஒன்றுமில்லை ஆனால் மூனோ,முகர்ஜியோ கவிதையை படித்துப் போட்டு ஏதாவது செய்வார்கள்

உங்க கண் முன்னால தானே 2009 மே இல் இத்தனை பேரும் சரணடைந்த போது கைதிகளாக்கப்பட்டாங்க..! அதுவும் புலம்பெயர் மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகள் எங்கும் கூக்குரல் இட இட.. கைதிகளாக்கப்பட்டாங்க. மிச்சப் பேர் காணாமல் போகடிக்கப்பட்டாங்க. அப்ப நீங்களும் கோமகனும் என்ன பிடிலா வாசிச்சுக்கிட்டு இருந்தீங்க..! :lol::D

நான் உங்களை மாதிரி உசுப்பேத்திற கவிதையும் எழுதேல்ல...மூனுக்கும் கவிதை எழுதேல்ல :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கவிதை போட்டு நாங்க அவர்களைத் தேடிக் கொண்டிருந்த போது நீங்க என்ன விரல் சூப்பிக்கிட்டு இருந்தீங்களா..???!

எங்கள் அண்ணாக்கள் அக்காக்கள் எங்கே…???!

கார்த்திகை 3, 2009 · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம்

crying_eye1.jpg

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி

வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!

களப்பலியாய் போனவர் போகட்டும்

அவர்களெம் மாவீரச் செல்வங்களாய்

எம்மோடு வாழ்வது உறுதி..!

ஆனால்..

சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்

உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

கவிபாடும் தமிழ் சொல்லாலே

புலியெனப் பாய்ந்த

புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து

ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து

புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன்

பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி

அவன் பொன்னமான் தம்பி

தமிழீழ அரசியல் தத்துவஞானி

எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங்கே..??!

இளம்பிறையாய் யாழ் வீதி எங்கும் ஓடோடி

அரசியல் கருத்துரைத்து

இளைய நெஞ்சங்களில் இடம்பிடித்த

அந்த இளம்பரிதி அண்ணன் எங்கே..??!

தெந்தமிழீழம் தந்த களத்தளபதி

இராணுவப் பேச்சாளன்

உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்

இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!

தமிழீழத் தலைநகராம்

திருமலையின் நிர்வாகி

எழில் மிகு நகரின் தளபதி

எழிலன் அண்ணன் எங்கே…??!

இப்படி எத்தனையோ அண்ணாக்கள்

நேற்று வரை எம்மோடு உறவாடிய

எங்கள் பாச உறவுகள் எங்கே..??!

இனிய தமிழ் பேசி எம் இதயங்களில் வாழ்ந்த

தமிழினிய அக்காக்கள் எங்கே..??!

சிங்களச் சிறை சென்றாரோ

புத்த மைந்தன் மகிந்தவின்

சித்திரவதைக்கு இரையாகிப் போனாரோ..??!

சொந்தங்களை

விலைமதிப்பில்லா அந்தச் செல்வங்களை

தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்

எங்கள் உறவுகள் எங்கே..??!

கண்டவர் சொல்வரோ

காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!

இன்றேல்

மண் வாரி வசை பாடுவரோ

கல் வாரி என் தலை மீது விட்டு எறிவரோ…??!

எனக்குக் கவலை இல்லை..!

என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

காலமே பதில் சொல்

நான் அவர்களை உயிரோடு

காண வேண்டும்

என் சுதந்திர தேசத்தின்

தேச பிதாக்களை

தரிசிக்க வேண்டும்..!

அவர்கள் மூச்சாய் வாழும்

தமிழீழக் காற்றே

தேடி வந்து ஒரு சேதி சொல்

என் சொந்தங்களைக்

கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி

உயிரோடு கண்டதாய் சொல்..!

காத்திருக்கிறேன்..

விழி எங்கும் நீர் நிறைய…!!!

நான் கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் த.சூ புலிகள் என்ன வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்களா?...அவர்களும் ரத்தமும்,சதையும் உள்ள மனிதர்கள் தான்...அவர்கள் தற்போது படும் கஸ்டம் அவர்களுக்குத் தான் தெரியும்.

[size=4]இரதி,[/size]

[size=4]சொல்லுகிறேன் என்று கோபிக்க வேண்டாம். போராளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்வுகளையும் தெரிந்தவர்கள் இந்தக்கேள்வியை கேட்கமாட்டார்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களை மாதிரி உசுப்பேத்திற கவிதையும் எழுதேல்ல...மூனுக்கும் கவிதை எழுதேல்ல :lol: :lol: :lol:

ஆனா அவங்க சாவைக் காட்டி அசைலம் மட்டும் அடிச்சிருப்பீங்களே..! :huh::o:rolleyes:

நான் உங்களை மாதிரி உசுப்பேத்திற கவிதையும் எழுதேல்ல...மூனுக்கும் கவிதை எழுதேல்ல :lol: :lol: :lol:

[size=4]மூனுக்கு எழுதுவதை கடிதம் என்று சொல்லுவார்கள். [/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கவிதை போட்டு நாங்க அவர்களைத் தேடிக் கொண்டிருந்த போது நீங்க என்ன விரல் சூப்பிக்கிட்டு இருந்தீங்களா..???!

எங்கள் அண்ணாக்கள் அக்காக்கள் எங்கே…???!

கார்த்திகை 3, 2009 · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம்

crying_eye1.jpg

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி

வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!

களப்பலியாய் போனவர் போகட்டும்

அவர்களெம் மாவீரச் செல்வங்களாய்

எம்மோடு வாழ்வது உறுதி..!

ஆனால்..

சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்

உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

கவிபாடும் தமிழ் சொல்லாலே

புலியெனப் பாய்ந்த

புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து

ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து

புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன்

பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி

அவன் பொன்னமான் தம்பி

தமிழீழ அரசியல் தத்துவஞானி

எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங்கே..??!

இளம்பிறையாய் யாழ் வீதி எங்கும் ஓடோடி

அரசியல் கருத்துரைத்து

இளைய நெஞ்சங்களில் இடம்பிடித்த

அந்த இளம்பரிதி அண்ணன் எங்கே..??!

தெந்தமிழீழம் தந்த களத்தளபதி

இராணுவப் பேச்சாளன்

உலக ஊடகங்களின் கவனக் கவர்வான்

இளந்திரையன் அண்ணன் அவன் எங்கே..??!

தமிழீழத் தலைநகராம்

திருமலையின் நிர்வாகி

எழில் மிகு நகரின் தளபதி

எழிலன் அண்ணன் எங்கே…??!

இப்படி எத்தனையோ அண்ணாக்கள்

நேற்று வரை எம்மோடு உறவாடிய

எங்கள் பாச உறவுகள் எங்கே..??!

இனிய தமிழ் பேசி எம் இதயங்களில் வாழ்ந்த

தமிழினிய அக்காக்கள் எங்கே..??!

சிங்களச் சிறை சென்றாரோ

புத்த மைந்தன் மகிந்தவின்

சித்திரவதைக்கு இரையாகிப் போனாரோ..??!

சொந்தங்களை

விலைமதிப்பில்லா அந்தச் செல்வங்களை

தொலைத்துவிட்டுத் தேடுகிறேன்

எங்கள் உறவுகள் எங்கே..??!

கண்டவர் சொல்வரோ

காட்டிக் கொடுத்தோர் இரங்குவரோ..??!

இன்றேல்

மண் வாரி வசை பாடுவரோ

கல் வாரி என் தலை மீது விட்டு எறிவரோ…??!

எனக்குக் கவலை இல்லை..!

என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

காலமே பதில் சொல்

நான் அவர்களை உயிரோடு

காண வேண்டும்

என் சுதந்திர தேசத்தின்

தேச பிதாக்களை

தரிசிக்க வேண்டும்..!

அவர்கள் மூச்சாய் வாழும்

தமிழீழக் காற்றே

தேடி வந்து ஒரு சேதி சொல்

என் சொந்தங்களைக்

கண்டதாய்.. உயிரற்ற உடலாய் அன்றி

உயிரோடு கண்டதாய் சொல்..!

காத்திருக்கிறேன்..

விழி எங்கும் நீர் நிறைய…!!!

நீங்களும் கவிதை தான் எழுதிறீங்கள் கோமகனும் கவிதை தான் எழுதுகிறார்...உங்கள் கவிதையால் எதாவது சாதிக்க முடிந்ததா? பிறகு எதற்கு கோமகனின் கவிதையை பார்த்து ஒரு நக்கல் ^_^

[size=4]இரதி,[/size]

[size=4]சொல்லுகிறேன் என்று கோபிக்க வேண்டாம். போராளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்வுகளையும் தெரிந்தவர்கள் இந்தக்கேள்வியை கேட்கமாட்டார்கள்.[/size]

போராளிகளை நல்லாய் தெரிந்த படியால் தான் சொல்கிறேன்...இன்னும் உசுப்பேத்திறதிலேயே இருங்கள்...போராளிகளும் சாதரண மனிதர்கள் அவர்களை இனிமேலாவது நிம்மதியாய் வாழ விடுங்கள்

ஆனா அவங்க சாவைக் காட்டி அசைலம் மட்டும் அடிச்சிருப்பீங்களே..! :huh::o:rolleyes:

இதோடா இவர் தான் நான் அசேலம் கேட்டுப் போகும் போது என்னோட கூட வந்தவர் :( கருத்துக்கு கருத்து எழுத முடியாத உங்களைப் போல சிலர் தான் தலைப்பையே திசை திருப்புவார்கள்

நீங்களும் கவிதை தான் எழுதிறீங்கள் கோமகனும் கவிதை தான் எழுதுகிறார்...உங்கள் கவிதையால் எதாவது சாதிக்க முடிந்ததா? பிறகு எதற்கு கோமகனின் கவிதையை பார்த்து ஒரு நக்கல் ^_^

[size=4]யாரும் தாராளமாக இங்கே கவிதைகள் எழுதலாம். ஆனால் அவரின் உள்ளே சில பொறிகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவது கடமை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கவிதை

எங்கள் செத்தவீட்டில்

எவரோ வந்து அழுது புரள்வது போலுள்ளது எனக்கு

ஏனோ தெரியவில்லை

இன்று

இதுவே விற்பனையும் ஆகிறது

எனக்கு

என்னை

இன்னொருவர் அறிமுகம் செய்த பரிதவிப்பு எனக்கு

தோளோடு

தோள் நின்றோர் எல்லாம்

தூக்கி எறியப்படும் அவலம்

தன்னை வருத்தி

தன் இளமை தந்து

தனக்காக வாழாதார் பலரும்

புலம் பெயர் வியாபாரிகள் இன்று

உழைப்பதில்

ஒரு பகுதியை

உறவுக்காக

ஒதுக்கிய பாரிகள் எல்லோரும்

திருடர் வரிசையில்.

தமிழர் நிலத்தை மீட்டோம்

தரணிக்கு வழி காட்டியாய் வளர்த்தோம்

பிச்சைக்காரர்

வலது குறைந்தோர்

பெண்கள் பிள்ளைகள்

எல்லோரையும் பராமரித்தோம்.

வீதியில் எவராவது

கைநீட்டியதைக்கண்டீரா?

காப்பாற்றி

கஞ்சியூற்றியது யார்?

நாட்டைக்காக்க

எமது உறவை மீட்க

அவரை வாழ வைக்க

நாம் தயார்

தடுப்பவன் எவன்???

அவனை விலத்துங்கள்

தடையை தகருங்கள்

சுதந்திரமாக

எம்மவரை நாம் காண வழி செய்யுங்கள்.........

போராளிகளை நல்லாய் தெரிந்த படியால் தான் சொல்கிறேன்...இன்னும் உசுப்பேத்திறதிலேயே இருங்கள்...போராளிகளும் சாதரண மனிதர்கள் அவர்களை இனிமேலாவது நிம்மதியாய் வாழ விடுங்கள்

[size=4]அப்படி என்றால் இந்தக்கவிதையே தேவையில்லை என்று சொல்லுங்கள், முடியுமா?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]யாரும் தாராளமாக இங்கே கவிதைகள் எழுதலாம். ஆனால் அவரின் உள்ளே சில பொறிகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவது கடமை.[/size]

நீங்களும்,தமிழ்சூரியனும் மட்டும் தான் உங்களுக்கு பிழை என்ட வசனத்தை சுட்டிக் காட்டினீர்கள் ஆனால் சிலர்?? ????????????????

மற்றவன் மாயையில் கிடக்கிறான் என்று சொல்லிக்கொண்டு கவிதைகளால்... கதைகளால் சிறையுடைப்புச் செய்யும் புத்திசாலிகளை இங்கு தான் நாம் தாராளமாகக் காண்கிறோமே..!

இவர் இதுவரை கவிதைகளால் கதைகளால் விடுவித்தோரின் எண்ணிக்கை.. என்னவாம்..???!

இப்படி எல்லாரும் கவிதைகளால் சிறை உடைக்க முடிந்திட்டால்.. ஏனாம் இந்தப் புலம்பல்கள்..????! நேரா சிங்களவனுக்கு ஒரு கவிதை எழுதிட வேண்டியது தானே..! :rolleyes::lol:

சிறை விடுவிப்பும்... சிறை உடைப்பும் மக்களின் கைகளில் மட்டுமல்ல.. ஆட்சியாளர்கள் மீதான பல்வேறு அழுத்தங்களால் வருவது..! இவை ஒன்றும் மக்களை திருந்தச் சொல்லி எழுதும் சமூகக் கவிதைகள் செய்யக் கூடியவை அல்ல..! ஆட்சியாளர்களும்..அரசியல்வாதிகளும்.. காட்டிக்கொடுப்பாளர்களும் திருந்தினால் அன்றி.. மக்கள் கூச்சல் போட்டு இவற்றிற்கு விடை காண முடியாது..! :icon_idea:

[size=4]அப்படி என்றால் இந்தக்கவிதையே தேவையில்லை என்று சொல்லுங்கள், முடியுமா?[/size]

ஏன் இக் கவிதை தேவையில்லை என சொல்கிறீர்கள்? கவிதை எழுதுவதும்,எழுதாமல் விடுவதும்,எதைப் பற்றி எழுதுவது என்பதும் அவரவர் விருப்பம்...அதில் உங்களுக்கு எது சரி/பிழை எனப்படுதோ அதை சுட்டிக் காட்டுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் கவிதை தான் எழுதிறீங்கள் கோமகனும் கவிதை தான் எழுதுகிறார்...உங்கள் கவிதையால் எதாவது சாதிக்க முடிந்ததா? பிறகு எதற்கு கோமகனின் கவிதையை பார்த்து ஒரு நக்கல் ^_^

இதோடா இவர் தான் நான் அசேலம் கேட்டுப் போகும் போது என்னோட கூட வந்தவர் :( கருத்துக்கு கருத்து எழுத முடியாத உங்களைப் போல சிலர் தான் தலைப்பையே திசை திருப்புவார்கள்

நாங்க ஒன்னும்.. போராளிகள் இப்படித்தான் யோசிக்கினமுன்னு கவிதை எழுதிக்கிட்டு இருக்கல்ல. எங்க எண்ணத்தில போராளிகள்.. போர்க்கள மக்களின் நிலை பற்றிய ஏக்கத்தை தான் சொல்லி இருக்கிறம்.

எத்தனையோ போராளிங்க தங்கள் வாழ்க்கையை புறக்கணித்து இன்றும் தேசத்துக்காக வாழ நிற்கிறாங்க..! அவங்க உங்களை வந்து கேட்டாங்களா எனக்கு கவிதை எழுதுன்னு..???!

சிறையில் உள்ள எல்லோருக்கும் உள்ள ஒரே எண்ணம்.. எல்லோரையும் விடுவிக்க வேண்டும் என்பது தான். அதில போராளி.. சாதாரணமவன் என்ற எண்ணம் அவங்களுக்க இல்ல. ஆனால் வெளில உள்ளதுகள் அப்படி இல்ல. அது அது தன்ர காழ்ப்புணர்வு எண்ணங்களுக்கு ஏற்ப கவிதை கதை வடிச்சுக்கிட்டு இருக்குதுங்க..!

என்னுடைய போராட்டம் சம்பந்தப்பட்ட கவிதைகள் எனது மன ஆதங்கத்தைச் சொல்லுமே தவிர.. மற்றவன்... என்ன நினைக்கிறானுன்னு அவனைச் சாட்டி என் காழ்ப்புணர்வை சொல்லுறதில்ல..! அதைத்தான் இங்க கொஞ்சப் பேர் செய்யுறாங்க.

நீங்க அதுக்கு சிங் சாங் போட்டுக்கிட்டு இருக்கீங்க..!

ஆமா.. உங்க விசயம் மட்டும் நாங்க கூட வந்து பார்த்தால் தான் தெரியுமாக்கும். ஆனால் மற்றவங்க விசயத்தை மட்டும் நீங்க உய்த்துணர்ந்து எழுதுவீங்களாம்.. அதுக்கு சிங் சாங் போடுவீங்களாம். இதெல்லாம் ஒரு கருத்தாம்.. அதுக்கு பெரிய விஞ்ஞான விளக்கம் வேற எழுதனுமாமில்ல..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

நான் கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் த.சூ புலிகள் என்ன வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்களா?...அவர்களும் ரத்தமும்,சதையும் உள்ள மனிதர்கள் தான்...அவர்கள் தற்போது படும் கஸ்டம் அவர்களுக்குத் தான் தெரியும்.

கோமகன் நீங்கள் புலம் பெயர் மக்களை நோக்கி கவிதை எழுதாமல் யாழில் உள்ள சிலர் எழுதுவது மாதிரி பான்கீன்மூனையும்,பிரணாப் முகர்ஜியையும் நோக்கி கவிதை எழுதுங்கள்...புலம் பெயர் மக்கள் இக் கவிதையை படித்து ஆகப் போறது ஒன்றுமில்லை ஆனால் மூனோ,முகர்ஜியோ கவிதையை படித்துப் போட்டு ஏதாவது செய்வார்கள்

மிக்க நன்றி அக்கா உங்கள் கருத்திற்கு...............

ஆம் எமது மாவீரரின்,வீரத்தையும்,தியாகத்தையும் .........உன்னதமான கொள்கைகளையும்,இந்த உலகமும்,அவற்றுடன் சேர்ந்த எம்மவரில் உள்ள எட்டப்பன்களும் மூடிமறைத்து எம் வரலாற்றையும்,போராட்ட நியாயங்களையும் திசை திருப்பி பயங்கரவாத பட்டம் சூட்ட கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளை..............தெரியவில்லையா??????????? அல்லது எனக்கு இந்தக்கவிதையை பார்த்தவுடன் இந்த போராளிகள் கட்டாயத்தின் பேரில் போராட திணிக்கப்பட்டார்கள் என்று இந்த உலகம் சொல்லும் பொய்க்கு இந்தக்கவிதை உரமூட்டுகிறது தெரியவில்லையா ?????????????ஒட்டுமொத்தத்தில் என்ன ...........உங்களுக்கு தெரியவில்லை ??????????????? கவிதை எழுதுங்கள் .............நன்றி ............

[size=4]இரதி,[/size]

[size=4]சொல்லுகிறேன் என்று கோபிக்க வேண்டாம். போராளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்வுகளையும் தெரிந்தவர்கள் இந்தக்கேள்வியை கேட்கமாட்டார்கள்.[/size]

நாட்டுக்காக போராட போனபடியால் அவர்களில் ஒரு மதிப்பு ,அவ்வளவும்தான். அதைவிட்டு அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல ஆசா பாசம் அற்றவர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது .அப்படி அவர்களை மூளை சலவை செய்துதான் உலகில் பல போராட்டங்களும் தற்கொலை தாக்குதல்களும் நடைபெறுகின்றது .

போராளிகள் சாதாரண மனிதர்கள் இல்லை என்றால் ,அவர்களை சிறையில் இருந்து எடுக்க வேண்டாம் ,அவர்களுக்கு ஒரு மறுவாழ்வு கொடுக்க வேண்டாம் என்றா சொல்கின்றீர்கள் .

கருணாவும் ஒரு போராளிதான் ,பிரிய முதல் ஒரு தாக்குதலில் இறந்திருந்தால் அவரும் ஒரு மாவீரர்தான் .

நாம் எமது பிள்ளைகளை எப்படி நல்ல பழக்க வழக்கங்க்களை திரும்ப திரும்ப சொல்லி வளர்கின்றோமோ அதுபோல் போராளிகளும் திரும்ப திரும்ப நீ நாட்டுக்காக செய்கின்றாய் என்று வளர்க்கபடுகின்றார்கள் .

கடந்த இருபது வருடங்களில் எவ்வளவு போராளிகள் உருவாகிய நாட்டில் ஏன் இப்போ ஒருவரும் உருவாகவில்லை.

நீங்கள் கொடுத்த பலிகள் காணும் என நினைக்கின்றேன் ,இனியாவது அவர்களை வாழவிடுங்கள்.

மற்றவர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து குடும்பமாக ஊனையும் உயிரையும் உருக்கியவராம் ,உருக்கியத்தை ஏன் ஒருக்கா ஊரில போய் உருக்கவில்லை என்று கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு .

[size=4]அவர்களை யார் வாழவிடாமல் தடுத்து வைத்திருப்பது? - அதை எழுதாமல் பல வசனங்களை எழுதி ஏன் உங்களை ஏமாற்றுகிறீர்கள்?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி அக்கா உங்கள் கருத்திற்கு...............

ஆம் எமது மாவீரரின்,வீரத்தையும்,தியாகத்தையும் .........உன்னதமான கொள்கைகளையும்,இந்த உலகமும்,அவற்றுடன் சேர்ந்த எம்மவரில் உள்ள எட்டப்பன்களும் மூடிமறைத்து எம் வரலாற்றையும்,போராட்ட நியாயங்களையும் திசை திருப்பி பயங்கரவாத பட்டம் சூட்ட கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளை..............தெரியவில்லையா??????????? அல்லது எனக்கு இந்தக்கவிதையை பார்த்தவுடன் இந்த போராளிகள் கட்டாயத்தின் பேரில் போராட திணிக்கப்பட்டார்கள் என்று இந்த உலகம் சொல்லும் பொய்க்கு இந்தக்கவிதை உரமூட்டுகிறது தெரியவில்லையா ?????????????ஒட்டுமொத்தத்தில் என்ன ...........உங்களுக்கு தெரியவில்லை ??????????????? கவிதை எழுதுங்கள் .............நன்றி ............

எனக்கு இந்த கவிதையிலோ அல்லது வரிகளிலோ மாவீரர்களையோ,புலிகளையோ கொச்சைப்படுத்திற மாதிரி வசனம் இருப்பதாக படவில்லை...நானும் சில திரிகளில் கோமகனோடு பிரச்சனைப்பட்டு உள்ளேன் ஆனால் இந்தத் திரியில் அப்படி இருப்பதாகப்படவில்லை...ஒவ்வொருவரும் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் ஒரு விடுதலைப் போராளியாக இருந்திருக்கவில்லை என்று கவிதை மூலம் தெரிகின்றது. அர்ப்பணிப்புடன் தமிழீழ இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமென மதித்துப் போராடப் புறப்பட்டவர்கள் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள். மக்களின் விடுதலைக்காக எத்தகைய கொடூரங்களையும், அவலங்களையும் போராட்டத்தின்போது தாங்கியவர்கள், தற்போது அடிமையாக, கைதியாக இருந்தபோதிலும் தமது வைராக்கியத்தை சற்றும் குறைக்காமல் துயரங்களைத் தாங்கிப் போராளிகள் போன்றே இருப்பார்கள். சாதாரண மனிதர்களாக அவர்கள் வாழமுற்படும்போது அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், பராமரித்துக் கொள்ளவும் முனைவார்கள். மற்றையவர்களுக்குப் பாரமாக ஒருபோதும் இருக்க விரும்பமாட்டார்கள்.

Spoiler
புலம்பெயர் தமிழ்த் தேசியவாதியான நான் இப்படித்தான் சிந்திப்பேன்.
  • தொடங்கியவர்

வலிக்கின்றது

வலித்தால் மட்டும் போதாது . சிந்தனைகளில் மாற்றங்கள் வந்தால் சந்தோசமடைவேன் . மிக்க நன்றி நந்தன் 26 .

கவிதை அற்புதமாய் அமைந்து இருக்கிறது.

அதிலும் இவ்வரிகள் மனதைத் தொடுகிறது.

உங்களையும் தொட்டுதே கறுப்(பி)பன் :lol::D அந்தவகையில சந்தோசம் . உங்களுக்கும் நன்றியுங்கோ :) :) .

இது விடுதலைக்காய் தன்னை அர்ப்பணிக்கும் மாவீரன் மண்டையில் தோன்றும் சிந்தனை போல் எனக்கு தோன்றவில்லை

இதுவே தான் எனது கருத்தும். உண்மையான போராளி தமிழீழம் கிடைக்கும் வரை எந்த கொடுமையையும் தாங்கிக்கொள்வான், எந்த வழியிலும் தமிழீழம் கிடைக்க தன்னால் முடிந்தவரை போராடுவானே தவிர தம்மை மற்றவர்கள் வாழவிடவில்லை என்று கூறி புலம்ப மாட்டான்.

இது அவர்கள் அப்படி நினைப்பார்கள் என்று நினைத்து இவர்கள் எழுதுவது.

கோ அண்ணா இந்த விதண்டாவாதம் எண்டா என்ன எண்டு கேட்டநீங்கால்லோ எனக்கு விடை கிடைச்சிட்டுது . உங்களுக்கு ?

நீங்கள் யாழுக்கு வந்ததிலிருந்து நான் உங்களை அவதானித்ததிலிருந்து உங்களுக்கு பிடித்த ஒருவர் என்ன எழுதினாலும் அதனை ஆதரித்தே கருத்து எழுதுகிறீர்கள். சுயமாக எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

நீங்களும் கவிதை தான் எழுதிறீங்கள் கோமகனும் கவிதை தான் எழுதுகிறார்...உங்கள் கவிதையால் எதாவது சாதிக்க முடிந்ததா? பிறகு எதற்கு கோமகனின் கவிதையை பார்த்து ஒரு நக்கல் ^_^

இருவரின் கவிதைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. கோமகன் அண்ணா எழுதிய இந்த கவிதையை பார்ப்பவர்கள் போராளிகள் பற்றி தவறான அபிப்பிராயத்தை பெற்று இப்பொழுது செய்யும் உதவியையும் நிறுத்திவிட கூடும். நெடுக்ஸ் அண்ணாவின் கவிதையை பார்ப்பவர்கள் போராளிகள் பற்றிய உண்மையான தெளிவை பெற்று அவர்கள் மேல் அன்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்யக்கூடும்.

தமிழீழ ஆதரவாளர்களையும் எது சரி என்று தெரியாமல் தவிப்போர்களையும் கூறினேன். மற்றபடி தமிழீழ எதிர்ப்பாளர்களுக்கும் உங்களைப்போன்ற பாராமுகமாக இருப்பவர்களுக்கும் எதைப்படித்தாலும் மண்டைக்குள் ஏறாது.

கோமகன் ஒரு விடுதலைப் போராளியாக இருந்திருக்கவில்லை என்று கவிதை மூலம் தெரிகின்றது. அர்ப்பணிப்புடன் தமிழீழ இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமென மதித்துப் போராடப் புறப்பட்டவர்கள் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள். மக்களின் விடுதலைக்காக எத்தகைய கொடூரங்களையும், அவலங்களையும் போராட்டத்தின்போது தாங்கியவர்கள், தற்போது அடிமையாக, கைதியாக இருந்தபோதிலும் தமது வைராக்கியத்தை சற்றும் குறைக்காமல் துயரங்களைத் தாங்கிப் போராளிகள் போன்றே இருப்பார்கள். சாதாரண மனிதர்களாக அவர்கள் வாழமுற்படும்போது அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், பராமரித்துக் கொள்ளவும் முனைவார்கள். மற்றையவர்களுக்குப் பாரமாக ஒருபோதும் இருக்க விரும்பமாட்டார்கள்.

Spoiler
புலம்பெயர் தமிழ்த் தேசியவாதியான நான் இப்படித்தான் சிந்திப்பேன்.

அருமையான யதார்த்தமான விளக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.