Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கிழக்கு சீமையிலே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கோ அந்த மதிரிப்போகுது

இன்னும் "அந்த" மாதிரி கட்டத்துக்கு.வரல்ல பா அதுக்குள்ள அவசரம் :D

சூப்பர் கோ தொடருங்கோ ,படங்கள் அந்த மாதிரி .

கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு .

என்ன லைப் ல செட்டில் ஆகியாச்சு mortgage உம் கட்டி முடிச்சாச்சு whatelse ? வெளிக்கிட வேண்டியது தானே? :D

இவளவு தூரம் போயிட்டு மொனோகோ போகம வந்திட்டிங்களே? ச்சை missed it

  • Replies 196
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன் கெதியில சீரகத்தண்ணி மேட்டருக்கு வாங்களேன்.. பதினொருமணி நடுஇரவு - கை அளைகிற துாரத்தில கடல் அலை - கூடவே பெருமழை - கொறிக்க பருத்துறை வடை - பருக சீரகத்தண்ணீர்.. ஆகா.. அற்புதமய்யா அற்புதம்

  • தொடங்கியவர்

தொடருங்கள், கோமகன்!

மணியனின் 'இதயம் பேசுகிறது; வாசித்து அந்த நாடுகளுக்குப் போன போது, எமாற்றமடைந்தவன் நான்!

உதாரணத்திற்கு அவரது 'இங்கிலாந்துப் பயணக் கட்டுரையில்' இருந்து!

லண்டன் நகரத்தின் நிலங் கீழ்ப் புகையிரதத்தில் போய்க்கொண்டிருந்தேன்!

திடீரென 'அந்த ஜாக்கேட்டுகுள்ளாலும்' பயங்கரமாகக் குளிர்ந்தது!

பக்கத்தில் இருந்த வெள்ளையர், எனது முகத்தைப் பார்த்துவிட்டு, நான் கேட்காமலே கூறினார்!

நாங்கள் இப்பொழுது, ஸ்டாக்வெல், புகையிரத நிலையத்தை நோக்கிப் போகிறோம்!

இப்போது, இந்த ரயில், பிரபலமான 'தேம்ஸ்' நதிக்குக் கீழால் போகின்றது!

அது தான் இந்தத் திடீர்க் குளிர்!

???????

உங்கள் கதைகள், உண்மை பேசுகின்றன!

இதே மணியன், மட்டக்களப்பை, மட்டக்களப்பு என்று, எழுத மறுத்து, நாங்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்தியும், பட்டிக்கலோயா என்று தான், தனது இலங்கைப் பயணக் கட்டுரையில் எழுதியவர்!

அந்தளவுக்கு, தமிழ்த் துவேசம் பிடித்தவர்!

நானும் மணியனின் இதயம்பேசுகின்றது படித்திருக்கின்றேன் . என்னைப்பொறுத்தவரையில் தகவல் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் நாம் எல்லோரும் பலவெளிநாடுகளை மணியன் ஊடாகவே கண்டோம் . அவர் கூறிய தகவல்களை சரியா பிழையா என்று உய்த்தறிய முடியாத நிலமை அந்தக் காலம் . ஆனால் இன்று ஒரு வரலாற்று பயணக்கடுரை எழுதுவதென்றால் நம்பகத்தன்மையும் , வாசகர்களைக் கவரும் உத்திகளும் வேண்டப்படுகின்றது . ஏனினில் இன்று உலகம் ஒரு கிராமம் . உங்கள் வருகைக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் புங்கை .

  • தொடங்கியவர்

என்னட்டை இருக்கிற படத்தையும் இணைக்கட்டோ கோமகன் அண்ணா? :rolleyes::lol::icon_idea:

ஆரம்பமே அசத்தலா இருக்கு தொடர்ந்து காக்க வைக்காமல் விரைவாக முடித்து விடுங்கள் அண்ணா. :)

:o :o :o .

காக்க வைக்கிறதிலையும் ஒரு சுவாரசியம் இருக்குத் தானே ? காதலி காதலனை தெரிவு செய்வது போல :lol::D:icon_idea: .

[size=5]2014 தொடங்க முன் கோ அனேகமாக எழுதி முடிப்பார்![/size]

இஞ்சை உந்த விளையாட்டுக்கு நான் வரேலை. இது ரூமச் அலை .

நல்லதொடருக்கு வாழ்த்துக்கள் கோம்ஸ்.. படிக்க ஆவலாக உள்ளோம்..!

மிக்க நன்றிகள் இசை .தொடருடன் தொடர்ந்து இருங்கோ.

  • தொடங்கியவர்

தொடருங்கள் கோ, வாசிக்க ஆவலாக உள்ளோம்.

மிக்க நன்றிகள் நவீனன் .

இதே பிடியைப்பிடியுங்கோ...

இப்பதான் முதல் கியர் போட்டிருக்கிறன் .

ம்ம்ம்

ம்.............ம்.................ம்

வாழ்த்துக்கள் கோ அந்த மதிரிப்போகுது

நன்றிகள் நந்தா .

சூப்பர் கோ தொடருங்கோ ,படங்கள் அந்த மாதிரி .

கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு .

ஏன் சீரகத்தண்ணி கிடைக்காமல் போச்சுதே எண்டோ :lol: :lol: :D:icon_idea: ?

கோமகன் கெதியில சீரகத்தண்ணி மேட்டருக்கு வாங்களேன்.. பதினொருமணி நடுஇரவு - கை அளைகிற துாரத்தில கடல் அலை - கூடவே பெருமழை - கொறிக்க பருத்துறை வடை - பருக சீரகத்தண்ணீர்.. ஆகா.. அற்புதமய்யா அற்புதம்

அவசரப்படுத்தக்கூடாது சொல்லிப்போட்டன் :lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய எழுத்துக்களில் எல்லாவற்றையும்விட பயணக்கட்டுரையே சுவாரசியமாகவும் வாசிக்க ஆவலைதூண்டுவதாகவும் இருக்கும்..பயணக்கட்டுரை உங்களுக்கு கை வந்த கலை.. உங்கள் படைப்புக்களில் எனக்கு ரொம்ப பிடிச்சதும் அவையே...மீண்டும் இன்னொரு மனசுக்குப் பிடித்த பயணக் கட்டுரையுடன்...மகிழ்ச்சியாக இருக்கு வாசிக்க...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நகரத்திலை பனைமரம் நிக்குதெண்டு கேள்விப்பட்டுத்தான் இந்த ஊருக்கே வந்தனான். ஆனால் பிரயோசனம் இல்லை எங்கள் நகரசபை தொப்பிக்கல பூங்காவில் நிற்கும் பனை மரம். படம் உபயம் சயந்தன்

603384_10151386106659951_850053549_n.jpg

  • தொடங்கியவர்

வெளீல புதினம் பாக்க ஏலாத கடுப்பில நான் நித்திரை கொள்ளத்தொடங்கினன். என்ரை மனுசி நாங்கள் என்னென்ன பாக்கவேணும் எண்டு இணையத்தால நோண்டிக்கொண்டிருந்தா . ஒரு பன்ரெண்டுமணிபோல மனுசி வெளியில பாக்கச்சொல்லி என்னை எழுப்பினா . வெய்யில் கண்ணுக்கை குத்தீச்சுது . வெளியில பாத்தால் ஒரு மலையில கோச்சி போகுது . மத்தப்பக்கம் குத்துக்கடல் நீலமாய் விரிஞ்சு கிடக்கு . எனக்கு உடனை திரிகோணமலைப்பக்கம் தான் ஞாபகத்துக்கு வந்திது . வெள்ளைப் புள்ளியளாய் சின்னன் பெரிசு எண்டு படகுகள் போறது தெரிஞ்சுது . மனுசி தன்ரை கமறாவாலை படங்கள் சுட்டுக்கொண்டு வந்தா .

கோச்சியால வரேக்கை சுட்ட படம்

nicevisit2012066.jpg

நான் ரெண்டு பக்கமும் வலுபுழுகமாய் பாத்துக்கொண்டு வந்தன் . ஒரு பன்ரெண்டு அரை போலை கோச்சி கார் நீஸ் வீல் ( Gare Nice Ville ) றெயில்வே ஸ்ரேசனுக்குள்ளை ஆடிப்பாடி நுளைஞ்சுபோய் நிண்டுது . நானும் மனுசியும் சனங்களை இறங்கவிட்டு ஆறுதலாய் இறங்கினம்.

இது தான் நீஸ் வீல் றெயில்வே ஸ்ரேசன் .

gare-thiers-lg.jpg

நான் சுத்தி சுத்தி பாத்தன் சாத்தர் எங்கையாவது நிக்கிறாரோ எண்டு . நாங்கள் றெயில்வே ஸ்ரேசனுக்கு வெளியால வந்து பாத்தம் . ஒரு கறுப்பு நிற ரொயாட்டா ஜீப் மொடல் ( 4 *4 )காறிலை ஒரு உருவம் கறுப்புக்கண்ணாடி போட்டு ஏதோ சீஐடீ கணக்காய் நிண்டீச்சுது :D . அட எங்கடை சாத்தர் தான் அப்பிடி நிண்டவர் . எங்களை கண்டுட்டு கிட்டவந்து கண்ணாடியை கழட்டாமல் , வாங்கோ கோ எப்பிடி பயணங்கள் ? சுகங்கள் :D ? எண்டு கேட்டார் . எனக்கு இவர் ஏன் கண்ணாடியை கழட்டாமல் கதைக்கிறார் எண்டு கடுப்பு வேறை. நாங்கள் இருக்கப்போற கொட்டலுக்குப் போனம் . அங்கை போய் றூமை எடுத்து கொண்டுவந்த சாமானுகளை றூமுக்குள்ளை வைச்சிட்டு திரும்பவும் சாத்தற்ரை வீட்டை போனம் . அங்கை வீட்டு வாசலிலை ஆலாத்தி எடுக்காத குறையா சாத்தற்ரை மனுசி முகம் முட்டச் சிரிப்போட நிண்டா :lol: :icon_idea: . அவாவோடை சாத்தற்றை பாதுகாப்பு படை சிறப்பு தளபதி நிண்டார் :o . நாங்கள் வீட்டை உள்ளட முதல் எங்களை சுத்தி வந்து மணந்து வாலாலை மெற்றல் டிடெக்ற்ர் போட்டுத்தான் வீட்டுக்குள்ளை விட்டர் . சாத்தருக்கு அவ்வளவு பாதுகாப்பு கெடுபிடியள் . நாங்கள் மத்தியானம் சாப்பிட சாத்தர் சாலாட் உம் , பிறென்ஜ் பகற் உம் வாங்கி வைச்சிருந்தார் :lol: . தமிழர்கள் இல்லாத குறையை எங்கள் இருவர் மூலம் நன்றாகவே இருவரும் தீர்த்துக்கொண்டீச்சினம் .

இவர்தான் சாத்தற்ரை சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரி

nicevisit2012297.jpg

அண்டைக்கு பின்னேரம் நாங்கள் மூண்டுபேரும் கடக்கரையில உலாத்தப்போனம் . நாங்கள் கடற்கரையில் நடந்து சென்றபொழுது உல்லாசப்பயணிகள் சூரியக்குளியலிலும் , வேகநடையிலும் , ஒருசிலர் ஓட்டத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . ஒருசிலர் கடலின் நடுவே மிதவைகளில் படுத்துக்கொண்டே கொக்ரெயில் எடுத்துக்கொண்டிருந்தனர் . கடலின் நடுவே சிறிய பெரிய கப்பல்கள் வரிசைகட்டிச் சென்று கொண்டிருந்தன . அகண்ட வீதியின் நடுவே வடலிகள் என்ற பல்ம்கள் வரிசை கட்டி அழகுபடுத்தின . இந்த வீதியின் பெயர் பொறமனாட் டேஸ் ஆங்கிலேய்ஸ் ( Promenade Des L’Anglaise ) .

இது நீசின் துறைமுகம் வரை வளைவாக கடலை உள்வாங்கி அகண்டு செல்கின்றது . இந்த அகண்ட வீதியின் அழகில் சொக்கிப் போய் சாத்திரியைப் பார்த்து ஏன் இந்த வீதி இப்படியொரு பெயர்வந்தது ? என்ற ஒரு கேள்வியைக் கேட்டேன் சாத்திரி ஒரு சிரிப்புடன் சொன்னார் ...........

இது சாத்தற்ரை மத்தியான சாப்பாடு

nicevisit2012059.jpg

இது பொறமனாட் டேய்ஸ் ஆங்கிலேஸ்

nicevisit2012181.jpg

தொடரும்

Edited by கோமகன்

<p>கோ உங்க பயணக் கட்டுரை அருமை . நன்றாக உரை நடையில் எழுதுகிறிர்கள் வாழ்த்துக்கள்.  சாத்திரியார் கருப்பு பூனைப் பாதுகாப்பில் தான் இன்றும் இருக்குறார் என்று சந்தோசமாய் இருக்கு</p>

இது சாத்தற்ரை மத்தியான சாப்பாடு

nicevisit2012059.jpg

தொடரும்

நன்றாய் இருக்கிறது பயணக் கட்டுரை! கனக்க எழுதினாப் பிறகு போடுங்கோ. எங்களுக்குப் பச்சை குத்தக் கட்டாது.

[size=5]சாத்து என்ன தான் வெள்ளையளின் சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் வெள்ளையாய் வர முடியாது கண்டியளோ!![/size] :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சூடு பிடிக்கத்தொடங்குது. ம்.....ம்

வணக்கம்.... தொடருங்கள்..

(ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிலாந்திலிருந்து பயணம் செய்வதாயின் விமானப் பயணமா இரயில் பயணமா செலவு குறைவானது ?)

Edited by darmaraj

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள்[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன், சாத்திரியின்ரை கறுப்பு பூனைத்தளபதியே ஒராளின்ரை ஆக்கினை தாங்காமல் ஒருநாள் முழுக்க சொல்லாமல் கொள்ளாமல் வெளிய ஓடிட்டுது..

நன்றாக போகிறது கோமகன். தொடர்ந்து எழுதுங்கள், சாத்திரியின் ஆழத்தை நாங்களும் அறிய வேண்டாமா ..?? :lol: :lol:

நான் அறிவை சொன்னேன்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன், சாத்திரியின்ரை கறுப்பு பூனைத்தளபதியே ஒராளின்ரை ஆக்கினை தாங்காமல் ஒருநாள் முழுக்க சொல்லாமல் கொள்ளாமல் வெளிய ஓடிட்டுது..

சயந்தனின் மகளிற்கும் பூனைக்கும் நடந்த சம்பவம்.

சயந்தனின் மகள் பூனையை பார்த்து ...ஏய் பிச்சி ...பிச்சி....பிச்சி...ஓடிவா.

அவரை பாத்த பூனை சிவாஜி ஸ்ரைலில் அம்மா என்னை இன்னிக்கு வரைக்கும் இப்பிடி அன்பா யாருமே கூப்பிட்டதில்லை என்னம்மா வேணும் என்றபடி அருகில் போய் நிக்கிறது.

சயந்தனின் மகள் கையில் ஒரு முறுக்கையும் பருத்துறை வடையையும் எடுத்து இந்தா சாப்பிடு என்று நீட்டுகிறார். அதனை மணந்து பார்த்துவிட்டு கடித்த பூனை அம்மா பூனை என்னாலையே சாப்பிட முடியலையே பாவம் மனுசங்கள் எப்பிடித்தான் சாப்பிடுறாங்களோ? எனக்கு வேண்டாம்.

ஓ உன்னாலை கடிக்க முடியலையா என்றவர் கிளாசில் இருந்த தண்ணியில் நனைத்து திரும்பவும் நீட்டுகிறார்.

மீண்டும் மணந்து பார்த் பூனை வேணாம்மா.. வேண்டாம்

பூனையை பிடித்து இழுத்து வைத்து இன்னிக்கு சாப்பிட்டுத்தான் ஆகவேணும் இல்லாட்டி விடமாட்டன்.

இப்ப வடிவேலு ஸ்ரைலுக்கு மாறிய பூனை ஆகா...பிச்சி பிச்சி ..எண்டு கூப்பிட்டதுக்கு இப்பதான் அர்த்தம் புரியிது இப்பிடி பிச்சு எடுக்கிறாங்களே ..முடியலை வேணாம் நான் பாவம்.றெம்ப நல்ல பூனை

இன்னிக்கு நீ சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்றபடி அவர் வடையை வாயிலும் முறுக்கை முக்கிலும் செருக திமிறியபடி பாய்ந்து ஓடிய பூனை மதிலில் ஏறி நின்று பேங்கடா உங்கடை வடையும் முறுக்கும். சயந்தன் சுவிசுக்கு போகும் வரைக்கும் நான் இந்தப் பக்கம் வரமாட்டன் என்று விட்டு மதிலாய் பாய்ந்து விட்டது.

இரண்டு நாள் கழித்துத்தான் மீண்டும் வீட்டிற்கு வந்தது :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

க்ளாஸைத் துாக்கி எறிந்ததைச் சேர்க்கவில்லயே :)

  • தொடங்கியவர்

<p>கோ உங்க பயணக் கட்டுரை அருமை . நன்றாக உரை நடையில் எழுதுகிறிர்கள் வாழ்த்துக்கள். சாத்திரியார் கருப்பு பூனைப் பாதுகாப்பில் தான் இன்றும் இருக்குறார் என்று சந்தோசமாய் இருக்கு</p>

அவர் எங்கையும் எச்சரிக்கையாத்தான் இருப்பார் . வருகைக்கு நன்றிகள் யாழ் அன்பு .

  • தொடங்கியவர்

நன்றாய் இருக்கிறது பயணக் கட்டுரை! கனக்க எழுதினாப் பிறகு போடுங்கோ. எங்களுக்குப் பச்சை குத்தக் கட்டாது.

[size=5]சாத்து என்ன தான் வெள்ளையளின் சாப்பாட்டைச் சாப்பிட்டாலும் வெள்ளையாய் வர முடியாது கண்டியளோ!![/size] :lol:

சரி அப்பிடியே செய்யிறன் .ஒருகிழமைக்கு எனக்கு லீவு . பாவம் பிள்ளையள் எண்டு பாத்தால் ......... இவை சரிவரமாட்டினம் .

சாத்தர் சலாட் திண்டு தான் வெள்ளையாகவேணும் எண்டு இல்லை . ஆள் சும்மா மாம்பழ நிறம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆள் சும்மா மாம்பழ நிறம் //

ஓமோம்.. கறுத்தக் கொழும்பான் :D

  • தொடங்கியவர்

சூடு பிடிக்கத்தொடங்குது. ம்.....ம்

அப்ப கொத்து ஒண்டு போடுவமோ !!!!!!!!!

  • தொடங்கியவர்

வணக்கம்.... தொடருங்கள்..

(ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிலாந்திலிருந்து பயணம் செய்வதாயின் விமானப் பயணமா இரயில் பயணமா செலவு குறைவானது ?)

மிக்க நன்றிகள் தர்மறாஜ் உங்களுக்கு நேரம் பிரச்சனை இல்லையென்றால் ரயில் பயணமே சிறந்தது இந்த லிங்கில் http://www.eurail.com/ நீங்கள் நுளைந்தால் நீங்கள் விரும்பிய இடங்களுக்கு முற்பதிவு செய்யலாம் .

  • தொடங்கியவர்

[size=5]தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள் தொடருங்கள்[/size]

தொடர்ந்து இருங்கோ .

கோமகன், சாத்திரியின்ரை கறுப்பு பூனைத்தளபதியே ஒராளின்ரை ஆக்கினை தாங்காமல் ஒருநாள் முழுக்க சொல்லாமல் கொள்ளாமல் வெளிய ஓடிட்டுது..

சாத்தர் உங்களுக்கு மறுமொழி தந்திருக்கிறார் சயந்தன் .

நன்றாக போகிறது கோமகன். தொடர்ந்து எழுதுங்கள், சாத்திரியின் ஆழத்தை நாங்களும் அறிய வேண்டாமா ..?

நான் அறிவை சொன்னேன்... :lol:

:o :o :o . அவற்றை ஆழத்தை ஆராலையுமே அழக்கேலாது .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

சயந்தனின் மகளிற்கும் பூனைக்கும் நடந்த சம்பவம்.

சயந்தனின் மகள் பூனையை பார்த்து ...ஏய் பிச்சி ...பிச்சி....பிச்சி...ஓடிவா.

அவரை பாத்த பூனை சிவாஜி ஸ்ரைலில் அம்மா என்னை இன்னிக்கு வரைக்கும் இப்பிடி அன்பா யாருமே கூப்பிட்டதில்லை என்னம்மா வேணும் என்றபடி அருகில் போய் நிக்கிறது.

சயந்தனின் மகள் கையில் ஒரு முறுக்கையும் பருத்துறை வடையையும் எடுத்து இந்தா சாப்பிடு என்று நீட்டுகிறார். அதனை மணந்து பார்த்துவிட்டு கடித்த பூனை அம்மா பூனை என்னாலையே சாப்பிட முடியலையே பாவம் மனுசங்கள் எப்பிடித்தான் சாப்பிடுறாங்களோ? எனக்கு வேண்டாம்.

ஓ உன்னாலை கடிக்க முடியலையா என்றவர் கிளாசில் இருந்த தண்ணியில் நனைத்து திரும்பவும் நீட்டுகிறார்.

மீண்டும் மணந்து பார்த் பூனை வேணாம்மா.. வேண்டாம்

பூனையை பிடித்து இழுத்து வைத்து இன்னிக்கு சாப்பிட்டுத்தான் ஆகவேணும் இல்லாட்டி விடமாட்டன்.

இப்ப வடிவேலு ஸ்ரைலுக்கு மாறிய பூனை ஆகா...பிச்சி பிச்சி ..எண்டு கூப்பிட்டதுக்கு இப்பதான் அர்த்தம் புரியிது இப்பிடி பிச்சு எடுக்கிறாங்களே ..முடியலை வேணாம் நான் பாவம்.றெம்ப நல்ல பூனை

இன்னிக்கு நீ சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்றபடி அவர் வடையை வாயிலும் முறுக்கை முக்கிலும் செருக திமிறியபடி பாய்ந்து ஓடிய பூனை மதிலில் ஏறி நின்று பேங்கடா உங்கடை வடையும் முறுக்கும். சயந்தன் சுவிசுக்கு போகும் வரைக்கும் நான் இந்தப் பக்கம் வரமாட்டன் என்று விட்டு மதிலாய் பாய்ந்து விட்டது.

இரண்டு நாள் கழித்துத்தான் மீண்டும் வீட்டிற்கு வந்தது :lol:

சாத்தற்ரை சிறப்பு பாதுகாப்பு படைத்தளபதிக்கு ஒரு ஆள் ஓ........... பிச்சி........... பிச்சி........... பிச்சி............. ஓடியா............. ஓடியா............. பருத்துறைவடையும் முறுக்கும் சாப்பிடுடா எண்டு போக்கு காட்ட , படைத்தளபதி ரென்சனாகி மூஞ்சையைபொத்தி ஒரு அறை விட சேதாரத்தோட பிச்சி........ பிச்சி........... பிச்சி............. பே முழி முழிச்சிது :lol: :lol: :D:D .

ஆள் சும்மா மாம்பழ நிறம் //

ஓமோம்.. கறுத்தக் கொழும்பான் :D

:lol:

பெடி கேள்விப்பட்டா .........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.