Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறு அறிவித்தல் வரும் வரை தமிழ்நாட்டிற்குச் செல்லவேண்டாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறு அறிவித்தல் வரும் வரை தமிழ்நாட்டிற்குச் செல்லவேண்டாம்!

03 செப்டம்பர் 2012

இலங்கைக் குடி மக்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்

Tamil%20Nadu%20copy_CI.jpg

இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு செல்லும்; இலங்கையர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு, இலங்கை பிரஜைகள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாடுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் 184 இலங்கையர்கள் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை ஏதும் இல்லை எனவும் அது கூறியிருக்கிறது.

சமீப காலங்களில் தமிழ் நாட்டுக்குச் சென்ற இலங்கைச் சுற்றுலா பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாசார துறை தொடர்பானவர்கள், தொழில் முறை பயிற்சிக்காக செல்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்துலுக்கு ஆளாவதாக வெளிநாட்டு அமைச்சு கூறியிருக்கிறது.

அதேவேளை, இந்த விடயத்தில் இலங்கை பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை இலங்கை உத்தியோகபூர்வமாக கேட்டிருக்கிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82411/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பாதுகாப்பு கொடுக்க சொல்லுங்கப்பூ .. அப்போ தான் இன்னும் களம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கம்.. இங்க கைது பண்ணிட்டால் தமிழன் கைது பண்ணிட்டான் இன உணர்வே கிடையாது என்று சொல்லி விடுவார்கள்..அவனவன் அன்று அன்று கிடைச்சத்தை வச்சி சாப்பிடுறான் அவ்வளவுதான்... தமிழ்நாட்டு போலீஸ்காரனுக்கு வேலை போச்சு என்றால் அவனுங்கு நீங்க காசு குடுப்பீங்களா.. ரெல் ரெல் மீ...

டிஸ்கி:

எனக்கு தெரிந்து இதெல்லாம் போலீஸ் க்கும் மீறிய அளவுக்கு வளர்க்கணும். இங்கிட்டு உக்கார்ந்து வாழ்த்துக்கள்/நன்றி என ரைப்படித்து கொண்டு இருந்தால் அதெல்லாம் வேலைக்கு ஆகாது..சத்தியமா வேலைக்கு ஆகாது.. <_< <_<

தமிழ்நாட்டு வெற்றியை தொடர்ந்து தென் இந்திய மாநிலங்கள் முழுவதும் அவர்கள் செல்லாமல் தடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனியாவது சிங்களவனுக்கு தெரியனும் தமிழனுக்கு அண்டை அயல் இருக்குதென்னு.

சிங்களவன் இதை செய்ய உணர.. காரணமாக இருந்த.. அண்ணன் சீமான்... பெரியவர் வை கோ... ஐயா நெடுமாறன் போன்ற தமிழின உணர்வாளர்களுக்கும் தமிழக இளம் தலைமுறை இன உணர்வாளர்களுக்கும் நன்றி...! இனத்துக்கான உங்களின் பெரும் பொறுப்பில் ஒரு சிறிய பகுதியே இது ஆகும்..!

அந்த தெலுங்கன் கருணாநிதி.. இரயில்களில் ஆயுதம் அனுப்பி.. வன்னிப் போரை முன்னெடுக்க ராஜபக்சவிற்கு முண்டு கொடுத்தே.. முதுகெலும்பு சுகமில்லாமல் வந்தது கிடந்தவர். இப்ப அவருக்கு ஒரு வருத்தமும் வாறதில்லை. எல்லாம் முள்ளிவாய்க்காலோட சுகமாகிட்டுது..! :(:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த அறிவித்தலின் பின்னால் கள்ள நோக்கங்களும் இருக்கலாம். ரகசிய பயணங்களை மேற்கொள்ளவும் ஈழத்தில்.. கடலில் தமிழ் மக்கள் மீது கொடுமைகளை அதிகரிக்கவும் இதனை சிங்களமும் ஹிந்தியமும் பாவிக்க முற்படலாம். எனவே தமிழ் மக்களும் ஈழ உணர்வாளர்களும் எப்போதும் போல சிங்கள அரசு தொடர்பிலும் கருணாநிதி மற்றும் இந்திய நடுவன் அரசு தொடர்பிலும்.. மாநில அரசு தொடர்பிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

[size=4]இவ்வாறான ஒரு அறிவித்தலை பிரித்தானியாவும் விட்டுள்ளது, தனது பிரசைகளை இலங்கை செல்லவேண்டாம் என்று. [/size][size=1]

[size=4]எனவே, இப்பொழுது இந்தியாவும் இவ்வாறான அறிக்கையை விடவேண்டும். [/size][/size]

D30960404.jpg

[size=5]" '[size=6]இந்தியாவுக்கான பயணத்தை தவி[/size][/size][size=6]ர்[/size][size=5][size=6]க்கவும்[/size]' - [size=6]சிங்கள அரசு[/size] " [/size]

[size=5] கூறும் நாள் வரவேண்டும் ![/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]" '[size=6]இந்தியாவுக்கான பயணத்தை தவி[/size][/size][size=6]ர்[/size][size=5][size=6]க்கவும்[/size]' - [size=6]சிங்கள அரசு[/size] " [/size]

[size=5] [/size]

தமிழ்நாட்டுக்கு எண்டு சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சிங்களப்படை வீரர்கள் பயிற்சிக்கு தமிழ் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

மேலும் இந்த அறிவித்தலின் பின்னால் கள்ள நோக்கங்களும் இருக்கலாம். ரகசிய பயணங்களை மேற்கொள்ளவும் ஈழத்தில்.. கடலில் தமிழ் மக்கள் மீது கொடுமைகளை அதிகரிக்கவும் இதனை சிங்களமும் ஹிந்தியமும் பாவிக்க முற்படலாம். எனவே தமிழ் மக்களும் ஈழ உணர்வாளர்களும் எப்போதும் போல சிங்கள அரசு தொடர்பிலும் கருணாநிதி மற்றும் இந்திய நடுவன் அரசு தொடர்பிலும்.. மாநில அரசு தொடர்பிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். :icon_idea:

மத்திய அரசுதான் கையை விரிச்சிருக்கா போலிருக்கு. சிங்களத்திட்டை நல்லா பட்டிருக்கா இத்தாலி. மலையாளிகள் பொக்கட் நிறைஞ்சவுடன் விழுந்து படுத்துடுவாங்க. கனகாலத்திற்கு பிறகு எண்ணை குதங்களை காப்பாற்ற மேனனை இலங்கை அனுப்பித்தான் வச்சுப்பார்த்தா. எதுவும் நடககல்ல. தமிழ் நாடு தேர்தலுக்கு முதல கொந்தளிக்க போகுதோ எண்டு பயமாயிருக்கு. கருணாநிதி பஸ்தவறுக்கு முதல் ஓடியாடி பிடிக்க முயல்றதை பார்க்க காங்கிரசுக்கு வயித்தை கலக்குது. மலையாளிகளைவிட நம்பிக்கையாக வைத்திருந்த கருணாநிதி காங்கிரசை நட்டாற்றில் விடுவிடு கம்பிநீட்டப்போகிறார். அவர் இன்னொருதடவை காங்கிரசை காலில்கட்டிகோண்டு தேர்தலில் படுதோல்வி தோற்கத்தக்க அடிமாட்டு விசுவாசி அல்ல. அதுதான் மத்தி அம்மா சொல்லிருக்காபோல நான் செய்ய இதில் ஒன்றும் இல்லை. மற்றைய மாநிலங்க்களுக்கு அனுப்பு என்று. புத்தாவினரை பல்லை கூட தமழரின் மாகாணங்களுக்கு அனுப்பிவைக்க விரும்வில்லை ஏனெனில் தமிழ்நாடு கொந்தளிக்கும் என்று பயம் இப்ப இருக்கு. இதை கருணாநிதி 2007,2008 ல் ஏற்படுத்தியிருந்தால் மத்திய அரசு அடக்கி வாசிச்சிருந்திருக்கும்.

இது ஒருவகையில் சிங்கள- ஹிந்திய அரசுகளால் ஜெயலலிதாவிற்கு வைக்கப்படும் "செக்"கென்பதை மறக்காதீர்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகயைக் காரணம் காட்டி மாநில அரசுகளைக் கலைக்கும் சட்டப்பிரிவு 356 ஐ கையிலெடுப்பார்கள். சுமுக உறவு அல்லது ஆட்சிக்கலைப்பு என்பது தான் இந்த செய்தியின் உள்விடயம்.

இதை உணர்ந்து கொள்ளாது ரொம்பவும் பூரித்துப் போகாதீர்கள். வேண்டுமென்றால் பாருங்கள் ஜெயாவின் அந்தர் பல்டியை இன்னும் சில நாட்களில்....

தமிழ்நாட்டுக்கு எண்டு சொல்லுங்கோ

[size=4]இன்று தமிழ்நாட்டை மட்டுமே பற்றி கூறியுள்ள சிங்களம் நாளை முழு இந்தியாவுக்கும் இந்த எச்சரிக்கையை விஸ்தரிக்கவேண்டும் என கூறியிருந்தேன். [/size]

இது ஒருவகையில் சிங்கள- ஹிந்திய அரசுகளால் ஜெயலலிதாவிற்கு வைக்கப்படும் "செக்"கென்பதை மறக்காதீர்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகயைக் காரணம் காட்டி மாநில அரசுகளைக் கலைக்கும் சட்டப்பிரிவு 356 ஐ கையிலெடுப்பார்கள். சுமுக உறவு அல்லது ஆட்சிக்கலைப்பு என்பது தான் இந்த செய்தியின் உள்விடயம்.

இதை உணர்ந்து கொள்ளாது ரொம்பவும் பூரித்துப் போகாதீர்கள். வேண்டுமென்றால் பாருங்கள் ஜெயாவின் அந்தர் பல்டியை இன்னும் சில நாட்களில்....

[size=4]இன்று மத்திய காங்கிரஸ் அரசு பாராளுமன்றத்தையே டெல்லியில் திறக்கமுடியாமல் உள்ளது. ஏற்கனவே காவிரி நீரை மத்திய அரசு உயர்த்தக்கேட்டும் அதை அந்த மாநில அரசு செய்யவில்லை. [/size]

[size=1]

[size=4]இந்த நிலையில் தமிழகத்தில் அந்த மாநில அரசை கலைப்பது காங்கிரசை தமிழகத்தில் மேலும் பலம் இழக்க செய்யும். அத்துடன் மீண்டும் ஜெயா தனிப்பெரும்பன்மையை வெல்ல வழிசமைக்கும்.[/size][/size]

[size=1]

[size=4]எனவே நடுவண் அரசு ஒன்றும் செய்யாது. [/size][/size]

ஜெயா இனி பதவி இழக்கத்தக்கது ஒன்றையும் கண்மூடித்தனமாக செய்ய மாட்டா. கரூணாநிதியைவிட திறமையான இராஜதந்திரி என்று நிருபிக்க முயலப்போகிறா. வைகோ, சீமான் போன்ற தமிழ் பற்றாளர்கள் கவனமாக செயல்ப்பட்டு கருணாநிதி கும்பலின் வாக்குகளைதான் பறித்து முன்னுக்கு வரவேண்டும்.

மத்தி, இப்போதுள்ள நிலைமைகளைப் பார்த்தால், ஜெயாவுடன் பகிடியும் விடமாட்டார்கள். ஜெயா மத்திவரை போனால் சோனியா சென்னை கோடுகளை காண ஒரு சந்தர்ப்பம் இருக்கு.

மத்திய காங்கிரசின் நிலை பரிதாபம். ஆவீன மழை பொழிய இல்லம் வீழ .............த்தான்

இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறும் இலங்கை வெளிநாட்டமைச்சு, எனவே இலங்கை பிரஜைகள் தங்களது பாதுகாப்பை மனதில் கொண்டு, இனி மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாடுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் 184 இலங்கையர்கள் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அவ் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அது கூறியிருக்கிறது.

சமீப காலங்களில் தமிழ் நாட்டுக்கு வந்த இலங்கை சுற்றுலா பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாசார துறை தொடர்பானவர்கள், தொழில் முறை பயிற்சிக்காக வருபவர்கள் என பல்தரப்பட்டவர்கள் இது போன்ற அச்சுறுத்துலுக்கு ஆளாவதாக அது கூறியிருக்கிறது.

அதேவேளை, இந்த விடயத்தில் இலங்கை பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை இலங்கை கேட்டிருக்கிறது.

http://thaaitamil.com/?p=31123

Sri Lanka issues travel warning for southern India

Colombo, Sep 4 (IANS) The Sri Lankan government has issued a travel warning to Sri Lankans visiting southern India following a spate of incidents targeting Sri Lankan nationals, the external affairs ministry said Tuesday.

The external affairs ministry said that it was compelled to issue the travel advisory after 184 Sri Lankan pilgrims visiting a church in Tamil Nadu became the latest victims of intimidation, reported Xinhua.

As a result Sri Lankan nationals have been told by the government to desist from undertaking visits to Tamil Nadu until further notice.

- Indo Asian News Service -

http://in.news.yahoo.com/sri-lanka-issues-travel-warning-southern-india-052406030.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் மீது படை எடுக்க இலங்கை தயாராகி வருது போல எதுக்கும் பதுங்கு குழி அமைச்சு பதுன்குங்க you never know :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதம் சிறிலங்காவில் 20- 20 உலகக்கிண்ண துடுப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழ் நாட்டு சுழல் பந்து வீச்சாளர் அஸ்வீன் கலந்து கொள்கிறார். சிங்கள தேசப்பற்றாளர்கள் இவருக்கு எதிராக சிலவேளை ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும் செய்வார்கள்.

அவுஸ்திரெலியா சிட்னிக்கு இவ்வருடமும் சிங்கள அணி துடுப்பாட்டம் விளையாடவருகிறது........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.