Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

10,000 பதிவுகளை தந்த விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்...........!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பொறுப்புடன் களத்தில் எழுதும் சகோதரர்களில் நீங்களும் ஒருவர் மேலும் பல ஆயிரம் கருத்து எழுதி சிறப்புற வாழ்த்துகின்றேன். [/size]

நன்றி சகோதரா

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

இந்த பொறுப்பாக இருத்தல்

எல்லோரரையும் அரவணைத்துப்போதல்

என்பனவற்றிற்காக சில நேரம் கணணியை நிறுததிவிட்டு இருந்திருக்கின்றேன்.

தமிழுக்கும் தாயகத்துக்கும் யாழுக்கும் கிடைத்த பெரும் சொத்து தாங்கள்.

அந்தவகையில் உங்களுடன் நானும் இங்கு இருக்கின்றேன் என்பது பெருமையே.

செய்திகளை இணைக்கும் முன் ஒருசிறு கண்ணோட்டம் விடுங்கள் யாழில். அது ஒரே செய்தி பலதடவை வருவதை தடுக்க ஓரளவு உதவலாம்.

  • Replies 88
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா யாழ்களத்தின் உரிமைக்குரலாய் என்றும் ஒலிக்க

நன்றி சுண்டல் தம்பி

நேரத்துக்கும் வாழ்த்துக்கும் பட்டத்திற்கும்

சுண்டலிடம் உள்ள திறமைகள் கண்டு புல்லரித்ததுண்டு.

இப்பொழுது கூட

சாதாரணமாக எழுத்துப்பிழை விட்டு எழுதும் சுண்டல்

இந்த வாழ்த்தில் எவ்வளவு அழகாக தமிழ் எழுதியுள்ளார்.

உங்களிடம் பிடித்த இன்னுமொன்று

தாயகம் சம்பந்தமான தெளிவான பார்வை.

தங்களின் வாழ்க்கையின்அடுத்தபடிக்காக வேண்டுதல் செய்கின்றேன்.

யாழில் வசனத்தின் நீளத்தைக்குறைத்து சுருக்கமாக எழுதினால் எல்லோராலும் விரும்பப்படுவீர்கள்.

வேண்டுதலுக்கு நன்றி அண்ணா :)

குமாரசாமி அண்ணாவும் ஒரு திரியில் இதனை குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கு சுருக்கமாக எழுத தெரியாது... பார்க்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமென் சொல்லியே பத்தாயிரத்தைத் தொட்ட விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..! :D

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்துக்கும் உள்க்குத்துக்கும்

ஒரு மதம் சம்பந்தமான சொல் என்பதால் அதை பாவிப்பதை நிறுத்திவிட்டேன்.

எங்கள் சகலகலாவல்லவன் தாங்கள்.

இந்த 2 வீட்டுப்பிரச்சினையை :lol: முடித்துவிட்டு வந்து கொஞ்சம்கூடுதலாக எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.. :)

நன்றி தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

எங்கே ஆளைக்காணக்கிடைக்குதில்லை

கவிதை கட்டுரை என வளர்ந்த தாங்கள் அடக்கி வாசிப்பதன் காரணம் யாதோ???

நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா! கனடாக் கட்டுரையை எழுதி முடிச்சிருந்தால் எப்பவோ 10,000 தாண்டி இருக்கலாம்... :D

நன்றி தம்பி குட்டி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

கனடாக்கட்டுரை வரும்

ஆனால் அடுத்தமுறை போய் வந்ததும்.

கனடாக்கட்டுரையில் சிலவற்றை எழுதினேன். அதை வாசித்துப்பார்த்தபோது

ஒரு 15 நாள் நின்றவன் கனடா பற்றி அலசலாமா என்பது போலிருந்தது. ஒருவர் வந்து இதை கேள்வியாக்கினால் நான் வெட்கப்படவேண்டிவரும்.

எனவே அடுத்தமுறை போய் வந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு எழுதுகின்றேன்.

உங்களது எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும் எனக்கு.

ஆனால் ஆளைக்காண முடிவதில்லை தற்போது.

நேரம் கிடைக்கும்போது கருத்துக்களை எழுத மறக்காதீர்கள். இங்கும் யாழ் குடும்பம் உங்களது வருகைக்காக காத்திருக்கு என்பதை நினைவில் வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கு என் வாழ்த்துக்கள்! இது நீங்கள் எழுதிய பத்தாயிரத்திற்கு அல்ல.ஒரு நிஜமனிதனாக நின்று கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டதிற்கு.....நன்றி ஐயா.

நன்றி அண்ணா

கருத்துக்கும் நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

ஒரு நியமனிதன்.

இதைத்தான் நான் விரும்புகின்றேன். இதை அடைவதே மனித இலக்கு.

ஆனாலும் மிகவும் கடினமானது அது என்று அனுபவம் சொல்கிறது.

இருந்தாலும் யாழில் அதிலும் இங்கு அண்ணை என்று நான் அழைக்கும் தங்களிடமிருந்து அந்த வாக்கு வந்தது என் பாக்கியம்.

உடம்பைக்கவனியுங்கள் அண்ணா.

ஒரு நாள் உங்களை நான் சந்திப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களில் விசுகு அண்ணரோடு தீவிரமாக முரண்பட்டிருந்தாலும்.. அவரில் சில எல்லை மீறிய எழுத்துக்களுக்காக நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தாலும்.. பொதுவாக எல்லோரையும் அரவணைத்து கருத்துச் சொல்லும் அவரின் பாணி அவருக்கே உரித்தான தனி முத்திரை..!

இன்னும் பல ஆயிரங்களோடு வீறு நடை போட வாழ்த்துக்கள். அப்படியே உங்களுக்கு எழுதவும் யாழை படிக்கவும் சந்தர்ப்பம் வழங்கும் உங்க வீட்டு உறவுகளுக்கும் ஒரு நன்றியை பாஸ் பண்ணிவிடுங்க..! :):icon_idea:

நன்றி நெடுக்குத்தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும் காட்டிக்கொடுப்புக்கும்... :lol:

பொதுவாக எனது எழுத்துக்கள் வெட்டு வாங்குவதில்லை. ஒருத்தரைக்காயப்படுத்தக்கூடாது. அவரின் மனம் புண்படக்கூடாது என்பதிலும் நிர்வாகத்தினருக்கு வேலை வைக்கக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பேன். இருந்தாலும் மறு கருத்தாளரின் வார்த்தை யாலங்கள் என்னையும் இக்கட்டுக்குள் தள்ளிவிடுவதுண்டு. இது பற்றி நானும் யோசித்ததுண்டு. அதில் வந்த பதில் நான் எல்லா திரிக்கும் எல்லா களகருத்தாளருக்கும் பதில் எழுதுவதால் தான் என்பது தெரிந்தது. அதனால் புதிதாக வருபவர்களை வரவேற்ப நிறுத்திக்கொண்டேன்.

தற்பொழுது தங்களையும் யாழில் காணமுடியவில்லை. ஏன்?

அத்துடன் நீங்கள்அதிகம் யாழில் பந்தி பந்தியாக எழுதும்போது ஒரு அண்ணனாக கோபம் வரும். படிப்பதை விட்டுவிட்டு இங்கு மினக்கெடுகிறரா என்று.

வயதும் பக்குவமும் வந்திருந்தாலும் அண்ணனாக அந்த கவனிப்பு என்றுமே உண்டு.

தாயகத்தின் சொத்து தாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களைச் சேரட்டும் [/size]

நன்றி பாட்டி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும் பாராட்டுக்கும்

இவர் எனது குடும்பப்பாட்டி.

இல்லையென்றால் ஒருவரை பாட்டி என்று கருத்துக்களத்தில் எழுதமுடியுமா? எனக்கு மட்டும் அந்த அனுமதி.

பல ஆலோசனைகளை இவரிடமிருந்து பெற்றிருக்கின்றேன்.

அதனால்தான் அவர் ரீச்சர் எனக்கு.

பாட்டி

என்ன ஆளைக்காணக்கிடைக்குதில்லை.

எழுதுங்கள

வாசிக்க காத்திருக்கோம்

  • கருத்துக்கள உறவுகள்

நவரசங்களையும், வெளிப்படுத்தக் கூடிய, ஒரு கருத்தாளர், நீங்கள்!

ஒளிவு, மறைவில்லாத பதிவுகள்! அது எனக்குப் பிடித்தது!

ஆனால், இரண்டு கவலைகள் எனக்கு உண்டு!

முதலாவதாகத், துளசியின் வரிசையில் நாலாவதாகப் போய் விட்டீர்களே என்று!

இரண்டாவது, இந்த நாலுக்குள்ளும், சுண்டலைக் காணவில்லையே என்று! :icon_idea:

வாழ்த்துக்கள், விசுகர்!!!

நன்றி

தங்கள் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

ஏதோ நம்மால் முடிந்தது.

நமது வரலாற்றை

அதில் நாம் கண்டவற்றை

அனுபவித்தவற்றை

நாம் கடந்து வந்தவைகளை

பதியணும் என்பதே எனது விருப்பும் தேவையும் கூட.

அந்தவகையில் தங்கள் வாழ்த்தின் ஊடாக அதை ஓரளவு நெருங்கியுள்ளேன் என்ற பெருமை கிடைக்கிறது.

எனது ஊரவன் என்ற இன்னுமொரு கூடுதல் பாசம் எனக்கு.

பெயரிலேயே ஊரைக்காவும் அந்த நெஞ்சழுத்தம் எமது இனத்துக்கு வேண்டும்.

பல வகை திறமையுள்ளவர் தாங்கள். இன்னும் கொஞ்சம் நேரமொதுக்கினால் யாழ் மிளிரும்.

காத்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒரு சுயதொழில் செய்துகொண்டே [/size]

[size=4]ஒரு பாசமிகு [/size]குடும்ப தலைவனாக இருந்தும்

நேரத்தை ஒதுக்கி

[size=4]யாழிலும் பலருக்கும் அறிவுரை கூறும் ஆசானாக [/size]

[size=4]குறைகளை சுட்டிக்காடும் நண்பனாக [/size]

[size=4]தாயக மக்களுக்கு ஒளிவிளக்காக வலம் வரும் [/size]

[size=4]விசுகண்ணாவின் பத்தாயிரம் கருத்துக்களுக்கு [/size]

[size=4]மனமார்ந்த நன்றிகள் !!![/size]

நன்றி

கருத்துக்கும் நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

நீங்கள் மேலே எழுதியுள்ளவை உண்மைதான்.

நான் அப்படித்தான் இருக்கின்றேன். இருக்கவே ஆசைப்படுகின்றேன்.

எனது அடுத்த சந்ததியும் அதைத்தான் தொடர்ந்து செய்யணும் என்று எதிர்பார்க்கும் நாம் அதற்கு முன் உதாரணமாக இருக்கவேண்டாமா? என்னைப்பார்த்துத்தானே என்னுடன் இருப்பவர்கள் பாதையை தொடரமுடியும்?

முள்ளி வாய்க்காலில் எல்லாமே முடிந்து விட்டது என்று எவர் சொன்னாலும்

அதுவே எனக்குத்தெரிந்தாலும் எனது பாதையில் எந்தவித மாற்றமும் இல்லை. இலட்சியம் நோக்கியே பயணம். அதில் அவரவர் கடமையை அவரவர் செய்யணும். தொடரணும். பாதையைப்போட்டவர் வழி காட்டியவருக்காக ஒரு நிமிடம் தலை சாய்த்து அடுத்த கணம் நிமிர்ந்து செல்வதே இன்றைய தேவை. அதுவே தமிழனுக்கு ஒரு ஒளி தரும்.

நீங்கள் தாயகத்தின் யாழின் சொத்து

தொடரட்டும் தங்கள் பணி

ஒரு நாள் அந்த முற்றத்தில் குதூகலிக்கலாம் ஒன்றாய்.

மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத நல்வாழ்த்துக்கள், விசுகு அண்ணா.

நன்றி தங்கள் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

திறமையான எல்லா பகுதி திறனுமுள்ள ஒரு எழுத்தாளர் தாங்கள்.

தாயகம் பற்றி தெளிவு என்னைக்கவர்ந்தது.

எந்த நிலையிலும் அதை எவருக்காகவும் விட்டுக்கொடுக்காத தங்கள் உணர்வுபூர்வமான எழுத்துக்கள் என்னை பெருமிதம் கொள்ள வைப்பதுண்டு.

தொடரட்டும் தங்கள் பணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

எங்கே ஆளைக்காணக்கிடைக்குதில்லை

கவிதை கட்டுரை என வளர்ந்த தாங்கள் அடக்கி வாசிப்பதன் காரணம் யாதோ???

நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்

என் உடன்பிறவா அண்ணன் நீங்கள். எல்லாவற்றையும் பகிரும் உறவுகளில் ஒருவர்.

யாழிற்கு வந்த பின் என் இன்பம்,துன்பம் எல்லாவற்றிலும் முதலாவதாய் பங்கு கொள்ளும்,பகிரும் உறவு நீங்கள் அதனால் தான் அதிகம் பேசுவதில்லை. பொதுவாகவே என்னுடைய வட்டத்தை குறுக்கி பலநாளாச்சு தங்களையும் , கோமகன் அண்ணாவையும் விட்டால் அதிகம் யாழில் பேசுவது,பகிர்வது இல்லை.

அந்தவகையில் கவிதை அண்ணா,சுபேஸ்,பையனும் உண்டு.

எழுதாதற்கு எந்த காரணமும் இல்லை

அவலத்துக்கும்,உசுப்பேத்தலுக்கும் நடுவே மௌனம் தான் சிறப்பென தோன்றுது.

கற்பனைகளைத்தான் இனி எழுதவேண்டும் போல..

உங்களது என் மீதான அன்புக்கு நன்றியண்ணா. எழுத முயற்சிக்கிறேன். :)

வாழ்த்துகள் விசுகு ,

தொடரட்டும் உங்கள் பதிவுகள் .

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவிற்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்

நன்றி ரதி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

யாழில் ஒரு வித்தியாசமான கருத்தாளர் என்ற பெயர் தங்களுக்குண்டு. காரணம் ஒருவர் எழுத நினைத்தும் அவர் பின் வாங்கிய விடயத்தை நீங்கள் சாதாரணமாக குறிப்பிட்டு எழுதுவீர்கள்.

அந்தவகையில் நீங்கள் இங்கு பிரபலம்.

உங்களுடைய நாட்குறிப்புக்கு பெரும் நேரமொதுக்கி ஒவ்வொரு நாளும் பதிவதை பாராட்டாமல் இருக்கமுடியாது. தொடர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனதினிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் விசுகு.

நன்றி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

உங்களது பல கருத்துக்களில் ஒரு ஆற்றாமை தெரிவதைஅவதானித்துள்ளேன். அதற்கு சிலரின் நடத்தைகள் காரணம் என்பதை அறிவேன். எமக்கும் அந்த நோவு இருக்கிறது.

ஆனாலும் பின் தள்ளப்பட்டதையும் துரோகங்களையும் சுயநலவாதிகளை மட்டும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. நாம் எமது தாயக மக்களை நெருங்கணும். அதற்காக உழைக்கணும். அதற்கு தேவையானவற்றிற்காக முன் வந்தோர் ஒன்று கூடி உழைக்கணும். அதைத்தவிர தமிழருக்கு வேறு வழியில்லை . இல்லையென்றால் இன்னும் சில வருடங்களில் எமது தாயகம் முழுமையாக களவாடப்பட்டு போய்விடும். போய் வந்தோர் சொல்லும் செய்தி இதுதான்.

நல்ல நகைச்சுவை பிரிமுள்ள பல்முக எழுத்தாளர் தாங்கள். ஏனோ அடக்கி வாசிக்ன்றீர்கள். கொஞ்சம் எமக்காக..............?

மேலும் பல கருத்துக்கள் எழுத வாழ்த்துக்கள்.

நன்றி

தங்களது நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

ஒரு விடயம் கேட்டிருந்தீர்கள்

அது பற்றி விசாரித்து வைத்திருந்தேன்.

மீண்டும் தற்பொழுது தான் காண்கின்றேன்.

நல்லதொரு நகைச்சுவை எழுத்தாளர்.

அதற்காக காத்திருக்கின்றோம்.

நேரம் கிடைக்கும்போது யாழிலும் நாலு வரி போடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அட விசுகு அண்ணாவும் 10 ஆயிரம் தாண்டியாச்சா!!!!!

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா தொடந்து லட்சம் தாண்ட வாழ்த்துக்கள்

நன்றி சகோதரி

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

லட்சம் என்பது பேராசை.

முடிந்தளவு தாயக புலத்து நடமுறைகளை எழுதத்தொடங்கினேன்.

இன்றைய தேவையாக அவற்றையே உணர்கின்றேன். விதைக்கின்றேன்.

அத்துடன் இவ்வளவு எழுதுகின்றேன் என்றால் தங்களைப்போன்றோர் எழுதாமல் ஒதுங்கியிருப்பதும் ஒரு காரணம்.

பலமுறை உங்களைக்கேட்டு விட்டேன். எழுதுங்கள். எழுதுங்கள். படையுங்கள்.

நீங்கள் ஒதுங்கியிருக்கும் நிமிடங்கள்.............???

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம்? நூறு நூறு?? ஆயிரம் பத்து??? பத்தாயிரம் பத்துக்களையும் எழுத வாழ்த்துக்கள்!

நன்றி தம்பி

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

ம்ம்ம்

பார்க்கலாம்

நினைத்தால் ஒரே நாளில் பல ஆயிரங்களை எழுதமுடியும். ஆனால் எனது நோக்கம் சம்பந்தமான திரிகளிலும் நகைச்சுவைகளிலுமே நான் நின்று விடுவேன்.

உங்கள் எழுத்து ஒரு தேர் சில்லுக்கு தடை போடுவது போல் பல முறை உணர்ந்துள்ளேன். மிகவும் லாவகரமாக எவரது மனதையும் புண்படுத்தாமல் ஆனால் பட்டென்று சொல்பவர் தாங்கள். யாழின் இன்னொரு சொத்து தாங்கள். தாயகம் சார்ந்து சோர்ந்து போகாதீர்கள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

நன்றி தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

உங்களையும் தற்போது காணமுடிவதில்லை

நேரம் கிடைக்கும்போது ஒரு வார்த்தை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்குத்தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும் காட்டிக்கொடுப்புக்கும்... :lol:

பொதுவாக எனது எழுத்துக்கள் வெட்டு வாங்குவதில்லை. ஒருத்தரைக்காயப்படுத்தக்கூடாது. அவரின் மனம் புண்படக்கூடாது என்பதிலும் நிர்வாகத்தினருக்கு வேலை வைக்கக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பேன். இருந்தாலும் மறு கருத்தாளரின் வார்த்தை யாலங்கள் என்னையும் இக்கட்டுக்குள் தள்ளிவிடுவதுண்டு. இது பற்றி நானும் யோசித்ததுண்டு. அதில் வந்த பதில் நான் எல்லா திரிக்கும் எல்லா களகருத்தாளருக்கும் பதில் எழுதுவதால் தான் என்பது தெரிந்தது. அதனால் புதிதாக வருபவர்களை வரவேற்ப நிறுத்திக்கொண்டேன்.

தற்பொழுது தங்களையும் யாழில் காணமுடியவில்லை. ஏன்?

அத்துடன் நீங்கள்அதிகம் யாழில் பந்தி பந்தியாக எழுதும்போது ஒரு அண்ணனாக கோபம் வரும். படிப்பதை விட்டுவிட்டு இங்கு மினக்கெடுகிறரா என்று.

வயதும் பக்குவமும் வந்திருந்தாலும் அண்ணனாக அந்த கவனிப்பு என்றுமே உண்டு.

தாயகத்தின் சொத்து தாங்கள்.

உண்மையைச் சொல்லுங்கோ அண்ணா அவர் பந்தி,பந்தியாய் எழுதினால் வாசிக்க விசராய் இருக்குது என்று சொன்னீர்களா அல்லது உண்மையிலேயே அவரின்ட படிப்பு குழம்பிடும் என்ட ஆதங்கத்தில் சொன்னீர்களா :unsure:

வாழ்த்ததுக்கள் விசுகு, தொடருங்கள்.

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு விசுகு...

பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்

எழுதாதற்கு எந்த காரணமும் இல்லை

அவலத்துக்கும்,உசுப்பேத்தலுக்கும் நடுவே மௌனம் தான் சிறப்பென தோன்றுது.

கற்பனைகளைத்தான் இனி எழுதவேண்டும் போல..

உங்களது என் மீதான அன்புக்கு நன்றியண்ணா. எழுத முயற்சிக்கிறேன். :)

நன்றி தம்பி

பாசத்துக்கும் நேரத்திற்கும் கருத்துக்கும்

வாழ்த்துகள் விசுகு ,

தொடரட்டும் உங்கள் பதிவுகள் .

நன்றி

தங்கள் நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

நீங்களும் கனக்க எழுதவேண்டும்

தங்கள் அனுபவங்கள்

கண்டவை

அனுபவித்தவை

நாம் இல்லாத காலங்களில் எமது ஆதாரங்கள் இவை தானே.

(இந்தப்பத்தாயிரத்தில் எவ்வளவு உங்களுக்கு எழுதியிருப்பேன்????? :lol::D :D )

உண்மையைச் சொல்லுங்கோ அண்ணா அவர் பந்தி,பந்தியாய் எழுதினால் வாசிக்க விசராய் இருக்குது என்று சொன்னீர்களா அல்லது உண்மையிலேயே அவரின்ட படிப்பு குழம்பிடும் என்ட ஆதங்கத்தில் சொன்னீர்களா :unsure:

அண்ணனாகவும் தாயக நோக்கிலும் அவரது படிப்புத்தான் முக்கியம் எனக்கு.

அதுவே முதலிடத்தில் இருக்கும்.

பந்தி பந்தியாக எழுதினாலும் சுயநலம் சார்ந்ததாக அல்லாது பொது நலம் சார்ந்ததாக இருக்கும் போது அது என்னைப்பாதிப்பதில்லை. நெடுக்கின் தாயக பார்வை இந்த வயதில் பெருமைப்படவேண்டியது.

வாழ்த்ததுக்கள் விசுகு, தொடருங்கள்.

நன்றி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

புதிதாக வந்தாலும் அதிகம் எழுதுவதைக்காணவில்லை.

பதிவுகளிலும் கருத்துக்களத்திலும் எழுதலாமே.

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு விசுகு...

நன்றி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

படிப்பில்தான் சாதிச்சாச்சே

யாழிலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே...........?

உங்களைப்போன்றோர் ஒதுங்கியிருத்தல் பெரும் பின்னடைவு எமக்கு.

பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள் ..

நன்றி சகோதரி

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நேரத்திற்கும்

உங்களது அவதார் படம் தான் எனக்கு உங்களை ஞாபகப்படுத்தும்.

ஆனாலும் அதிகம் காண்பதில்லை இங்கு தற்போது.

நீங்கள் வந்து போகின்றீர்கள் என்பது மட்டுமே தெரிகிறது.

யாழுக்காக ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களை ஒதுக்கலாமே.........?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அன்பு அண்ணன் விசுகுக்கு எனது வாழ்த்துக்கள்...

யாழிழ் இனைந்த காலம் தொட்டு நான் விசுகு அண்ணாவோடை ஒரு நாள் பார்த்து முரன் பட்டது இல்லை..அவரின் ஒற்றுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்...பிரான்ஸ் வந்தா கண்டிப்பாய் உங்களை சந்திப்பேன் அண்ணா...

இன்னும் பல கருத்துக்கள் எழுத வாழத்துகிறேன்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துகள் விசுகு,

இன்னும் பல ஆயிரம் கருத்துக்கள் பதிவிட தொடருங்கள் யாழ் பயணத்தை...!!!

நான் வாழ்த்த விரும்பவில்லை

விசுகு தான் தரித்து இருக்கும் சில உடைகளை உரிந்து விட்டு உள் மனதில் படுவதை நேரிடையாக எழுதும் வரைக்கும் வாழ்த்தப் போவதில்லை. பத்தாயிரம் பதில்களில் முக்கால்வாசிக்கும் மேலாக எழுதியவை "மற்றவர் முன் தன்னை எப்படி Project பண்ண முயலலாம்" எனும் விதத்தில் தான் எழுதப்பட்டவை. தமிழ் தேசியப் போராட்டத்தில் புலம் பெயர் தேசமொன்றில் நேர்மையுடன் பங்களித்த ஒருவர் நேர்மையாக எழுதுவதில்லை என்ற பெருங்குறை எனக்குண்டு. விலாங்கு மீனாக தான் தெரிகின்றார் எனக்கு அவர்.

இது ஒரு மட்டுவாகவோ அல்லது யாழின் பொறுப்பாளராகவோ திமிர் கொண்டு எழுதவில்லை நான். விசுகுவிடம் நிறைய எதிர்பார்த்து எதுவும் கிடைக்காத சக கள உறவாக வெறுப்பில் எழுதுகின்றேன்... அவரின் அனுபவங்களை நேர்மையாக எழுதும் வரைக்கும் என்னால் இப்படித் தான் அவர் பற்றி எழுத முடியும். மன்னிக்கவும்

பி.கு:

இவற்றுக்கும் மேலாக என்னை எக்கணமும் வாழ்த்தும் அண்ணன் அவர். அவரின் ஆசிகள் என் வாழ்க்கையை பலப்படுத்தும் என்று நம்புகின்றேன். எனக்கு ஒரு அண்ணா இல்லை. ஒரு சக மனிதராக எனக்கு அவர் என்றென்றும் ஒரு அண்ணா தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.