Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாமை விமர்சித்து சினிமா: லிபியாவில் யுஎஸ் தூதரகம் மீது பயங்கர தாக்குதல்-அமெரிக்க தூதர் பலி

Featured Replies

பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தூதரக அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்தன.

நேற்று இரவு எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும், லிபியாவின் பெங்சாய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். பலர் துப்பாக்கிகளுடன் இருந்தனர்.

பெங்சாய் தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியபடி திடீரென உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். அமெரிக்கக் கொடியை கிழித்து வீசியதோடு, தூதரகத்தையும் சூறையாடி, தீ வைத்தனர்.

இதில் தூதரகத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸை பாதுகாக்க அவரை ஊழியர்கள் ஒரு அறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அந்த அறைக்குள் பரவிய கடும் புகை மூட்டத்தில் மூச்சு முட்டி அவர் இறந்தார். அவருடன் இருந்த 3 ஊழியர்களும் பலியாயினர்.

இந்தத் தாக்குதலில் மேலும் தூதரக ஊழியர்களுக்கு கை, கால்கள் உடைந்தன.

இதையடுத்து லிபிய ராணுவம் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது.

வழக்கமாக தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள தூதரகத்தில் தான் இருப்பார். ஆனால், நேற்றிரவு பணி விஷயமாக பெங்சாய் தூதரகத்துக்கு வந்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

பலியானவர்களின் உடல்கள் இன்று ஜெர்மனி வழியாக அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு கொல்லப்பட்ட லிபிய அதிபர் கடாபியின் ஆதரவாளர்களான 'Islamic law supporters' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந் நிலையில் படத்தைத் தயாரித்த சாம் பேசிலி தலைமறைவாகிவிட்டார்.

எகிப்திலும்...

அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைந்து அந் நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கருப்புக் கொடியை ஏற்றினர்.

உடனடியாக போலீசார் விரைந்து வந்ததால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 11 நியூயார்க் தாக்குதல் நினைவு நாளில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/news/2012/09/12/world-american-killed-as-islamists-storm-us-missions-in-libya-161288.html

தொடர்பு பட்ட செய்தி

US ambassador 'killed in Libya'

The US ambassador to Libya has died after an attack by militiamen on the US consulate in the eastern city of Benghazi, reports say.

Ambassador Christopher Stevens is said to be among four US officials killed in a protest over a US-produced film that is said to insult the Prophet Muhammad.

The US state department has only confirmed the death of one official - but it has not named them.

Protesters have also attacked the US embassy in Cairo over the film.

In the attack in Benghazi, unidentified armed men stormed the grounds, shooting at buildings and throwing handmade bombs into the compound.

Security forces returned fire but Libyan officials say they were overwhelmed.

A Libyan official has said Ambassador Stevens died from suffocation as a result of the attack.

earlier, Secretary of State Hillary Clinton confirmed the death of a US official, saying: "We are heartbroken by this terrible loss".

"Some have sought to justify this vicious behaviour as a response to inflammatory material posted on the Internet," she said in a statement.

"The United States deplores any intentional effort to denigrate the religious beliefs of others. But let me be clear: There is never any justification for violent acts of this kind."

Reports say a militia known as the Ansar al-Sharia brigade was involved in the attack, but the group has denied the claim, the BBC's Rana Jawad in Tripoli says.

Our correspondent says many people are still armed following the conflict that overthrew Col Muammar Gaddafi last year.

The film that sparked the demonstration is said to have been produced by a 52-year-old US citizen from California named Sam Bacile, and promoted by an expatriate Egyptian Copt.

The two men are described as having anti-Islamic views.

_62837115_015953041-1.jpg

In Cairo, the US flag was torn down and set alight by the demonstrators

A trailer of the low-budget movie has appeared on YouTube translated into Arabic.

There were calls on social media networks for protests against US interests in the capital, Tripoli, but no disturbances have been confirmed, our correspondent says.

The rally followed a demonstration in Cairo, in which protesters breached the US embassy and tore down the US flag, which was flying at half mast to mark the 9/11 attacks, and replaced it with an Islamist banner.

Thousands of protesters had gathered outside the US embassy in the Egyptian capital.

Egyptian protesters condemned what they said was the humiliation of the Prophet of Islam under the pretext of freedom of speech.

"Both Muslims and Christians are participating in this protest against this offence to Islam," said one protester, according to Associated Press news agency.

http://www.bbc.co.uk/news/world-africa-19570254

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

[size=4]இலிபிய விடுதலையின் [/size] [size=4]பொழுது பெங்காசி மக்களுக்கு அமெரிக்கா முதலில் ஆதரவை வழங்கியது :([/size]

[size=5]"இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்கு"[/size]

சித்தரிப்பது என்பது வேறு விமர்சிப்பது என்பது வேறு...

இஸ்லாம் மதத்தில் விமர்சிக்க நிறையவே விடயங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு தனித்தனி இனக்குழுமங்களுக்காகவே உருவாக்கப்பட்ட நெறி முறைகள் ஆன இஸ்லாமும் கிறிஸ்தவமும் உலகளாவிய ரீதியில் "மதங்களாக" மாற்றப்படும் போதும் மேலதிக " புனிதத்தன்மைகள்" புகுத்தப்படும் போதும் எழும் இத்தகைய சிக்கலான நிலமை பல விமர்சனங்களை எதிர்கொள்ளவே செய்யும்.

அதை சகிப்புத் தன்மையுடன் எதிர்கொள்ள முடியாத இவர்கள் எல்லாம்.. அந்த நெறிமுறைகளைக் கூட சரியாக புரிந்து கொள்ளாதவர்களே...

-எல்லாள மஹாராஜா

மேலுலகில் வாழும் ஹிட்லரே! இவர்களை ஏன் மிச்சம் விட்டீர்.......

இந்த படத்தயாரிப்பாளர் ஒரு யூத இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர கருத்துக்களை மதவாதிகள் வெற்றிகரமாக மூடி போட்டு மூடிவிடுவது கவலைக்குரிய விடயம். இதில் சிறிய சனத்தொகை கொண்ட மேலைநாடுகள்தான் அக்கறை காட்டுகின்றன. அவர்கள் கூட விசுவாசமாக இல்லை. தென் அமெரிக்க நாடுகள் பல மதில் மேல் பூனைகளாக மட்டும் இருக்கின்றன. சனத்தொகை கூடிய இந்தியா கட்டு மிராண்டி ஜனநாயகம் காட்டுகிறது உலகிற்கு. இங்கே கவலைக்குரிய விசையம் மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசுகள் கூட கருத்து சுதந்திரத்தை தான் விரும்பும் போது பந்தாடி விளையாட முடியும். இது "ரீயல் டபுள் பரல் கன்". இந்திய அரசியலின் கேவல ஜனநாயகதை பற்றி வெளிநாட்டு பத்திரிகைகள்தான் உண்மையை எழுத முடியும். சீனாவைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?

இந்த விசையத்தில் பாதுகாப்புசபை போல அதிகாரமுள்ள ஒரு ஐ.நா சபை அமைத்தாலே உலக மக்களுக்கு நியாயம் வழங்கலாம். அதுவரைக்கும் இந்த பாதுகாப்புசபையும், மனித உரிமைகள் சபையும் கூடஉண்மையாக நடக்கவோ அல்லது நடந்தை சொல்லவோ மாட்டா. அதில் நிரந்த உறுப்பினர்களாக வரக்கூடாத நாடுகள் சீனா, ரூஸ்சியா, இந்தியா, அமெரிக்கா.....

web-attack.jpg

A[size=5] burnt car is seen after an attack on the U.S. Consulate by protesters angry over a film that ridiculed Islam's Prophet Muhammad in Benghazi, Libya, Wednesday, Sept. 12, 2012.[/size]

[size=5]President Barack Obama is condemning in the “strongest possible terms” an attack on the U.S. consulate in Libya that killed four Americans, including the American ambassador.[/size]

[size=5]Mr. Obama on Wednesday said the U.S. will work with the Libyan government to bring the perpetrators of the attack to justice. He says “no acts of terror” will shake America's resolve.[/size]

[size=4]http://www.theglobeandmail.com/news/world/obama-vows-justice-after-us-ambassador-killed-in-libya/article4538806/[/size]

[size=5]The attack on the U.S. embassy in Benghazi that killed U.S. ambassador Chris Stevens and three other American personnel may have been premeditated, according to U.S. media outlets.[/size]

nw-consulate.jpg

http://www.theglobeandmail.com/news/world/attack-on-us-embassy-in-libya-may-have-been-planned-reports/article4538806/

[size=5]ஒரு திரைப்படத்தால் மத்திய கிழக்கே தீப்பற்றியது[/size]

[size=4]inocent.jpg[/size]

[size=4]இனசன்ஸ் ஒப் முஸ்லீம் என்ற அமெச்சூர் திரைப்படத்தால் வந்த வினை…[/size]

[size=4]லிபியாவுக்கான அமெரிக்கத் தூதுவரும், அவருடன் பயணித்த மேலும் மூன்று தூதராலய ஊழியர்களும் லிபியாவில் இடம்பெற்ற ராக்கட் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.[/size]

[size=4]இனசன்ஸ் ஒப் முஸ்லீம் என்ற அமெரிக்க அமெச்சூர் திரைப்படத்திற்கு எதிராக தற்போது மத்திய கிழக்கில் வெடித்துள்ள ஆர்பாட்டம் அமெரிக்க தூதுவரின் உயிரைப் பதம் பார்க்குமளவுக்கு போயுள்ளது.[/size]

[size=4]இறந்த தூதுவர் ஜே.கிறிஸ்ரோபர் ஸ்ரெபன்ஸ்சின் மரணம் உலகம் முழுவதும் பாரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.[/size]

[size=4]இந்தத் தாக்குதலின் பின்னணியில் காலம் சென்ற முன்னாள் லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் அதரவாளர் இருப்பதாக அமெரிக்கத் தரப்பு தெரிவிக்கிறது.[/size]

[size=4]நேற்று செவ்வாய் கொல்லப்பட்ட இவர்களுடைய உடலங்கள் இன்று அதிகாலைவரை லிபிய வீதியில் கிடந்ததாகவும் பின்னர் வைத்தியசாலை எடுத்துச் செல்லப்பட்டதாகவும் சி.என்.என் கூறுகிறது.[/size]

[size=4]amb.jpg[/size]

[size=4]லிபியாவின் கிழக்கில் உள்ள பெங்காஸியில் அமெரிக்க திரைப்படமொன்று அல்லாவை அவமதிப்பதாக ஆர்பாட்டம் நடந்தபோதே இந்தக் கொலைகள் நடந்துள்ளன.[/size]

[size=4] இனசன்ஸ் ஒப் முஸ்லீம் என்ற பெயரில் சுமார் இரண்டு மணி நேரங்கள் ஓடும் திரைப்படமொன்றின் 8 நிமிட காட்சி தற்போது யூ ரூப்பில் வெளியாகியுள்ளது.[/size]

[size=5]யூத நிறுவனங்கள் 100 இந்தத் திரைப்படத்திற்கு நிதி உதவி செய்து, ஐந்து மில்லியன் டாலர்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]இந்தத் திரைப்படத்தின் மூல மொழி ஆங்கில மொழியாக இருந்தாலும்கூட அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]இந்தப் படத்தில் அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் காட்டப்படுகிறார்கள் அவர்களுடன் முகமது இருப்பது போல காட்டியுள்ளதாக பொலிற்றிக்கன் எழுதியுள்ளது.[/size]

[size=4]மேலும் இந்தப்படத்தில் முஸ்லீம்களுக்கு கோபம் ஏற்படும்படியான விவகாரங்கள் வேண்டுமென்றே தேர்வு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.[/size]

[size=4]மணற்பரப்பிலும், பாலைவனங்களிலும் பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.[/size]

[size=4]பல உதவாக்கரை வேலைகளை இணைத்த இத்திரைப்படம் அமெரிக்காவில் காண்பிக்கப்பட்டபோது அதைப் பார்க்க யாரும் போகவில்லை.[/size]

[size=4]பலத்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ள இத்திரைப்படம் ஒரு அமெச்சூர் நாடகத் தன்மை நிறைந்த தயாரிப்பு என்று கூறப்பட்டாலும் அமெரிக்க தூதுவரின் உயிரைக் குடிக்குமளவுக்கு கோபத்தைக் கிளப்பியுள்ளது.[/size]

[size=4]http://www.alaikal.com/news/?p=113241#more-113241[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ முஸ்லிம் நாடுகள் இருந்தும் லிபியாவிலும் எகிப்திலும் இந்த ஆர்ப்பாட்டங்கள்

தாக்குதல்கள் நடந்தது ஆச்சரியமான விடயம் . அதுவும் அமெரிக்கத் தூதரகம் மீத தாக்குதல்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் 21 இஸ்லாமிய நாடுகள் மத்தியகிழக்கில் இருக்கின்றது என்று இவர்கள் எப்போதும் மேற்கு நாட்டவரின் தயவின்றி இருந்ததாக நான் அறியவில்லை அமெரிக்காவை இந்த இஸ்லாமியநாடுகள் கருவேப்பிலை போல பாவிக்கின்றார்கள் வெளிப்பார்வைக்கு அமேரிக்கா பிளைபோல தெரியும் இதுதான் மத்தியகிழக்கில் அமெரிக்காவின் நிலை ....

[size=4]அமெரிக்கா இந்த தாக்குதல்கள் நேற்றைய இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாளை (9/11) ஒட்டி திட்டமிட்டு நடாத்தப்பட்டதாக சந்தேகிக்கின்றது. அத்துடன் கொன்றவர்களை பிடிக்க அமெரிக்காவின் சிறப்பு படையான 'நேவி சீல்ஸ்' உறுப்பினர்களை அனுப்பி வைத்துள்ளது. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உலகம் இருக்கிற நிலையிலை......முக்கியமாய் இஸ்லாமை விமர்ச்சித்து படம் எடுக்கவேண்டிய கட்டாயம் என்ன? ஈராக்,ஆப்கானிஸ்தான் எண்டு நியூஸ் வரேக்கை குண்டு வெடிப்பிலை50,60 உயிரிழப்பு எண்டு....ஏதோ கடல்லை வலைபோட்டு மீன்பிடிச்ச கணக்காய் நியூஸ் சொல்லுறாங்கள்....இதெல்லாம் தேவையா?

இப்ப உலகம் இருக்கிற நிலையிலை......முக்கியமாய் இஸ்லாமை விமர்ச்சித்து படம் எடுக்கவேண்டிய கட்டாயம் என்ன? ஈராக்,ஆப்கானிஸ்தான் எண்டு நியூஸ் வரேக்கை குண்டு வெடிப்பிலை50,60 உயிரிழப்பு எண்டு....ஏதோ கடல்லை வலைபோட்டு மீன்பிடிச்ச கணக்காய் நியூஸ் சொல்லுறாங்கள்....இதெல்லாம் தேவையா?

[size=4]இஸ்ரேல் அமெரிக்காவை ஈரானுடன் மோதவைக்க எடுக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று .[/size]

netanyahu-obama-embassy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.