Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா?

கருத்து கணிப்பு : கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா? 20 members have voted

  1. 1. கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா?

    • ஆம், இது ஒருகாலத்தில் தமிழினத்தின் ஒரு பகுதியை முழுமையாக அழித்துவிடும்
    • இல்லை, இதன் பாதுகாப்பிலும் இந்திய மாநில மத்திய அரசிலும் நம்பிக்கை உண்டு
      0
    • கருத்து கூற முடியாதுள்ளது

Please sign in or register to vote in this poll.

Featured Replies

[size=5]கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா? [/size]

[size=1][size=4]இன்று பலவகை போராட்டங்களை அகிம்சை வழியில் தமிழக மக்களின் ஒரு பகுதியினர் முன்னெடுத்து வருகின்றனர். இன்று யாழில் ஒட்டியதாக கூறப்படும் ஒரு சுவரொட்டியில் முள்ளிவாய்க்காலின் பின்னராக இந்திய நடுவண் அரசு திட்டமிட்டு அரங்கேற்றிய தமிழின அழிப்புன் அடுத்த கட்டமோ என அஞ்சப்படுவதாக கூறுகின்றது. [/size][/size]

417333_450833534969524_945691732_n.jpg

[size=5]

சில பயனுள்ள திரிகள் :

[/size]

[size=5]அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=108177[/size]

[size=5]ஒரு கைக்கூலியின் கதை.. கூடங்குளம் உதயகுமாரின் கதை[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=108193[/size]

[size=5]கூடன்குளம் எழுப்பும் பிரச்சினைகள்[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=108102[/size]

  • தொடங்கியவர்

[size=6]கதிர்வீச்சு - சிறு அறிமுகம்[/size]

[size=3]

[/size][size=3]

[size=4]கூடங்குளம், கல்பாக்கம் பற்றியும் இந்தியாவின் பல்வேறு அணு மின் உலைகள் பற்றியும் பேச்சு வரும்பொது கதிரியக்கம் பற்றியும் கதிர்வீச்சு பற்றியும் பேச்சு வரும். அதில் புரியாத பல விஷயங்கள் இருக்கும்.

கதிர்வீச்சில் இரண்டு வகை உண்டு. ஒன்று நிறையுள்ள பொருள்கள் அடங்கிய ‘கதிர்’. இவற்றில் ஆல்ஃபா, பீட்டா கதிர்கள் அடங்கும். இவைதவிர நியூட்ரான் கதிர்கள், புரோட்டான் கதிர்கள் ஆகியவையும் சாத்தியம். மற்றொருவகைக் கதிரில் வெறும் ஆற்றல் மட்டும்தான் உண்டு. நிறையுள்ள பொருள் எதுவும் அதில் இல்லை. காமா கதிர்கள் என்று இவற்றுக்குப் பெயர்.

ஆல்ஃபா கதிர்கள் என்பவை அடர்த்தியான ஹீலியம் உட்கருக்களைக் கொண்டவை. அடர்த்தியானவை என்பதனாலேயே காற்றில் அதிக தூரம் இவற்றால் செல்லமுடியாது. எனவே அதன் மூலம் எங்கிருக்கிறதோ அதற்கு அருகிலேயேதான் இதன் செயல்பாடும் இருக்கும். வானில் பரவும்போது எலெக்ட்ரான்களைப் பெற்றுக்கொண்டு ஹீலியம் அணுக்களாக மாறி, வானில் மேலே மேலே எழும்பிக் காணாமல் போய்விடும். பீட்டா கதிர்கள் என்றால் எலெக்ட்ரான்கள் அடங்கியவை. இந்த இரண்டு கதிர்களாலும், நம் உடலின் மேல் தோலைத் தாண்டி உடம்புக்குள் நுழைய முடியாது. ஆனால் நாம் உட்கொண்ட பொருள் உடலுக்கு உள்ளிருந்து ஆல்ஃபா, பீட்டா கதிர்களை வெளிவிடும்போது நிச்சயமாக பாதிப்பு உண்டு. காமா கதிர்கள் என்பவை மின்காந்த அலைகள் கொண்ட கதிர்கள்.

இவற்றை முதன்மைக் கதிர்வீச்சு என்று வைத்துக்கொண்டால், இரண்டாம்நிலைக் கதிர்வீச்சு அடுத்து உருவாகும் வாய்ப்புகள் உண்டு. இந்த முதன்மைக் கதிர்கள் வானில் பரவும்போது அங்கே உள்ள பல்வேறு தனிமங்களுடன் ஊடாடுகின்றன. அப்போது சில தனிமங்களின் சில ஐசோடோப்புகள் கதிரியக்கத் தன்மை கொண்டவையாக மாறுகின்றன. அவை தொடர்ந்து கதிர்வீச்சை வெளிப்படுத்தும். இவைதான் இரண்டாம்நிலைக் கதிர்வீச்சு.

அடுத்ததாக, அணுப்பிளவு ஏற்படும்போது, கதிர்வீச்சு ஒரு பக்கம் இருக்க, ஒரு பெரிய அணு இரண்டு சிறு அணுக்களாக உடைகிறது. அப்படி உருவாகியுள்ள சிறு அணுக்களும் கதிர்வீச்சு கொண்டவையாக இருக்கும். அவை நம் உடலுக்குள் சேரும்போது பிரச்னை பெரிதாக மாறும்.

உதாரணமாக யுரேனியம் நம் உடலில் இருப்பதில்லை. நம் உடலில் பெரும்பாலும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் ஆகியவைதான் உள்ளன. இவைதவிர இரும்பு, அயோடின், சோடியம், பொடாசியம், பாஸ்பரஸ், கால்சியம் என்று ஏகப்பட்ட பிற தனிமங்களும் சிறு அளவில் உள்ளன. உதாரணமாக, ஒவ்வொரு ரத்தச் சிகப்பணுவிலும் இரும்பு உள்ளது. எலும்பில் கால்சியம் உள்ளது. கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பியில் அயோடின் உள்ளது.

யுரேனியம் பிளக்கும்போது அயோடின்-131 என்ற ஒரு குறிப்பிட்ட அயோடின் ஐசோடோப் உருவாகிறது. சாதாரணமாக நிலையான அயோடின் ஐசோடோப் என்பது அயோடின்-127. இந்த அயோடின்-131-ல் நான்கு நியூட்ரான்கள் அதிகமாக உள்ளன. இந்த (கெட்ட) அயோடின் காற்றில் சேரச் சேர, இது கொஞ்சம் கொஞ்சமாக மனித உடலை நோக்கி வந்து சேருகிறது.

யுரேனியக் கதிர்வீச்சு அதிகமான நாகசாகி, ஹிரோஷிமா, செர்னோபில் ஆகிய இடங்களில் இதுதான் நடந்தது. கழுத்தில் உள்ள தைராய்ட் சுரப்பியின் செல்களில் அயோடின் இருக்கும் என்று சொன்னேன் அல்லவா? நாளடைவில் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் கழுத்துகளில் அயோடின்-127-க்குப் பதில், அயோடின்-131 அதிகமாகச் சேர்ந்துவிடும்.

இந்த அயோடின்-131 பீட்டா கதிர்வீச்சை வெளிப்படுத்தும். அப்படி ஆகும்போது இவை இருக்கும் செல்கள் அழிகின்றன. அதனால் அயோடின்-131 அதிகமானவர்களுக்கு தைராய்டு கேன்சர் கட்டாயம் வரும். செர்னோபில் விபத்தில் இது நன்றாகவே கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்று மருந்துகள் உண்டு. உதாரணமாக, காற்றில் அயோடின்-131 அதிகமாகியுள்ளது என்று தெரிந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோடின்-127 அடங்கிய உப்பை/மாத்திரையை அதிகமாக உட்கொள்ளவேண்டும். அதன் காரணமாக அயோடின்-131 நம் உடலின் உள்ளே புகாமல் வெளியேற ஆரம்பிக்கும்.

***

ஐசோடோப் என்றால் என்ன என்று விரைவாகப் பார்த்துவிடுவோம். ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் உட்கருவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் புரோட்டான்கள் இருக்கும். ஒரு புரோட்டான் என்றால் ஹைட்ரஜன் அணு. இரண்டாவது புரோட்டான் வந்துவிட்டால் அது ஹீலியம். ஆனால் உட்கருவில் நியூட்ரான் என்ற துகளும் உள்ளது. உட்கருவில் நியூட்ரானின் எண்ணிக்கை பொதுவாக புரோட்டானின் எண்ணிக்கைக்கு நெருங்கியதாக, பல நேரங்களில் இணையானதாக இருக்கும். ஆனால் ஒரே தனிமத்தின் சில அணுக்களில் மட்டும் நியூட்ரான் எண்ணிக்கை மற்ற அணுக்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ஆனாலும் அந்த அணுக்கள் யாவும் வேதியியல் பார்வையில் ஒரே மாதிரியாகவே இயங்கும். இப்படிப்பட்ட, ஒரே புரோட்டான் எண்ணிக்கையைக் கொண்ட, ஆனால் வெவ்வேறு நியூட்ரான் எண்ணிக்கையைக் கொண்ட அணுக்களை அந்தக் குறிப்பிட்ட தனிமத்தின் வெவ்வேறு ஐசோடோப்புகள் என்கிறோம். அயோடின் தனிமத்துக்கு அயோடின்-123, அயோடின்-127, அயோடின்-129, அயோடின்-131 என்ற நான்கு ஐசோடோப்புகள் உண்டு. அனைத்தின் அணுக்களிலும் 53 புரோட்டான்கள். ஆனால் நியூட்ரான்களின் எண்ணிக்கை முறையே 70, 74, 76 மற்றும் 78. இதில் அயோடின்-127 என்பதுதான் நிலையானது. மற்றவை எங்கேயோ அணுப்பிளவு நடக்கும்போதுதான் உருவாகும். அதில் அயோடின்-131 மனிதர்களுக்கு ஆபத்தானது.

சில தனிமங்களின் சில ஐசோடோப்புகள்தான் கதிரியக்கத் தன்மை கொண்டவை. உதாரணமாக ஹைட்ரஜன் ஐசோடோப்புகளில் புரோட்டியம், டியூட்டிரியம் ஆகியவை கதிரியக்கத் தன்மை கொண்டவையல்ல. டிரிட்டியம் மட்டும்தான். யுரேனியத்தின் பல்வேறு ஐசோடோப்புகளும் கதிரியக்கத் தன்மை கொண்டவை. ஆனால் மிக மென்மையான கதிரியக்கம்.

கதிரியக்கம் வேகமானதா, குறைவானதா என்பதைப் புரிந்துகொள்ள அரை ஆயுள் என்ற எண்ணிக்கை அவசியம். இது ஒவ்வொரு ஐசோடோப்புக்கும் பிரத்யேகமானது. இது சுவாரசியமான ஒன்று. ஒரு ஐசோடோப்பின் அரை ஆயுள் பத்து நிமிடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஐசோடோப்பை பத்து கிராம் எடுத்து ஒரு தட்டில் வையுங்கள். பத்து நிமிடம் கழித்துப் பார்த்தால் பத்து கிராமில் பாதி அளவு (ஐந்து கிராம்) கதிரியக்கம் ஆகி, வேறு தனிமங்களாக ஆகியிருக்கும். இன்னும் பத்து நிமிடம் கழித்து மீதியுள்ள ஐந்து கிராம் பொருள், அதில் பாதி ஆகியிருக்கும். இன்னும் பத்து நிமிடம் கழித்து மேலும் பாதி... 10, 5, 2.5, 1.25 என்று குறைந்துகொண்டே போகும். ஆனால் எப்போதும் இருப்பதில் பாதி. அதனால்தான் இதற்கு அரை ஆயுள் என்று பெயர்.

சில பொருள்களுக்கு அரை ஆயுள் காலம் மிக மிக அதிகம். பல பில்லியன், பல டிரில்லியன் ஆண்டுகள் என்று இருக்கும். வேறு சிலவற்றுக்கு சில நாள்கள் அல்லது சில நிமிடங்கள்.

இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்கள் சில உள்ளன. அதே நேரம் செயற்கையாகக் கதிரியக்கத் தன்மை புகுத்தப்பட்ட பொருள்களையும் தயாரிக்க முடியும். அணு உலைகளில் நிகழ்வது இந்த இரண்டாவது விஷயம். யுரேனியம்-238 என்ற ஐசோடோப்பை எடுத்து அதன்மீது நியூட்ரான்களை அடித்தால், அது புளூட்டோனியம்-239 ஆக மாறி, பின் அது மேலும் உடைந்து, அதிலிருந்து மேற்கொண்டு நில நியூட்ரான்கள் வெளியே வந்து அவை அருகில் இருக்கும் யுரேனியம்-238-ஐத் தாக்கி, இப்படித் தொடர்ந்து நடப்பதுதான் சங்கிலி வினை.

இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்களைக் கடவுளே வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜாதுகுடாவில் நாம் தோண்டாவிட்டாலும் அங்கே உள்ள யுரேனியம் கதிர்வீச்சை வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது. பூமிக்கு அடியில் இருந்தாலும் அங்கிருந்து கதிர்வீச்சு வெளியேறிக்கொண்டுதான் இருக்கும். அது அருகில் இருக்கும் நீரை மாசுபடுத்துக்கொண்டுதான் இருக்கும்.

அணு உலைகளை நடத்துவதன் காரணமாக மட்டும்தான் கதிர்வீச்சு என்ற அபாயம் உருவாவதுபோலப் பலரும் சொல்வது தவறு. நம் பூமியில் இயற்கையிலேயே கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருள்கள் பல உள்ளன. பிரபஞ்சத்தில் பல இடங்களில் இவை இந்த விநாடியில் உருவாகிக்கொண்டேதான் உள்ளன.

மனிதன் அணு உலைகளில் இவற்றைச் செயற்கையாகவும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். பொதுவாக, செயற்கையாக எதை உருவாக்கினாலும் அது ஏதோ பிரச்னைகளை ஏற்படுத்தத்தான் செய்யும். ஏனெனில் சமநிலை என்பது வேகமாக மாறுகிறது. ஆனால் அணுக் கழிவுகள் என்பது மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்பதுபோலப் பேசுவது தவறு. படிம எரிபொருளை எரித்து நாம் இதுகாறும் உருவாக்கியுள்ள எச்சங்களைவிடக் குறைவானவைதான் அணுக் கழிவுகள். இவற்றைக் கவனமாகக் கையாளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பூமிக்கு அடியில் புதைத்துவைத்தாலும் விடாது கருப்பு என்று இவை நம்மை வந்து துரத்தும் என்பதெல்லாம் மிகையான கூற்றுகள்.

கதிரியக்கப் பொருளை அடர்த்தியாக்க அடர்த்தியாக்க, அதன் கதிரியக்கம் அடர்த்தியாக இருக்கும். நீர்த்துப்போக வைக்கும்போது கதிரியக்கமும் நீர்த்துப்போகும்.

இது தொடர்பான தொழில்நுட்பம் அனைத்தும் எனக்குத் தெரியுமா என்றால் தெரியாது. ஆனால் எதிர்ப்பாளர்கள் சொல்வதுபோல அத்தனை பெரிய ஆபத்தானதாக எனக்குத் தோன்றவில்லை. அணுக் கழிவுகளைக் கையாள்வது சாத்தியம்தான். பூமிக்கு அடியிலோ, கடலுக்கு அடியிலோ, பாலைவனத்திலோ புதைத்துவைப்பதால் மனித இனத்துக்கு எந்தக் கேடும் வந்துவிடாது என்றுதான் நான் கருதுகிறேன்.

ஆனால் இந்திய அரசுக்கு இது தொடர்பாகக் கொள்கை ஒன்று இருக்கவேண்டும், அதனை இந்திய அரசு வெளியிடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.[/size][/size]

http://www.badriseshadri.in/2012/09/blog-post_13.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்!

இதுவும், இந்திய ஆழும் வர்க்கத்தின், தமிழின அழிப்பின், தொடர்ச்சியே!!!

  • தொடங்கியவர்

[size=6]சுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்?[/size]

[size=4]முத்துக்கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில், அணுக்கழிவுகள் பற்றி இப்படி ஓரிடத்தில் வருகிறது: [/size]

[size=4]மேற்கத்திய நாடுகள் தங்களின் அணுக்கழிவுகளைச் சட்டவிரோதமாக சோமாலியா கடல் பகுதிகளில் கொட்டியதும், அது 2004 சுனாமியின்போது அவர்களின் கடற்கரைகளில் வந்து பெரு அலைகளால் வீசப்பட்டது. அதனால் லட்சக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து அதை உலக ஊடகங்கள் காணாமல் கண்களை முடியதும் நம் காலத்தின் வரலாறு. (பக்கம் 36, 37)[/size]

[size=4]லட்சக்கணக்கான (கவனியுங்கள், நூறோ, ஆயிரமோ இல்லை, லட்சம்) உயிர்கள் போயும் அதை யாருமே கவனிக்கவில்லையாம். இந்த ஹைப்பர்போலி தேவையா?

சோமாலியா நீண்ட கடற்கரையைக் கொண்டது. ஆப்பிரிக்காவின் கிழக்கு, வடக்கு முனையில் உள்ளது. சோமாலியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 1 கோடி. என்னதான் இருந்தாலும் கடற்கரைப் பகுதிகளின் வசிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கமுடியும்? கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் என்று வைத்துக்கொண்டால் அதிகபட்சம் 20% மக்கள்? 20 லட்சம் பேர்? அதில் ஒரு லட்சம் இறந்தார்கள் என்றாலுமே அது பெரும் அதிர்ச்சியான விஷயம் இல்லையா? அதாவது 20 பேருக்கு ஒருவர் மரணம்.

கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தொழிற்சாலைக் கழிவுகள் என்கின்றன செய்திகள். அணுக்கழிவு என்பதற்கு என்ன ஆதாரம் என்பது அடுத்த கேள்வி. விக்கிபீடியா இவ்வாறு சொல்கிறது:[/size]

[size=4]An upsurge in piracy in the Gulf of Aden and the Indian Ocean has also been attributed to the effects of the 26 December 2004 tsunami that devastated local fishing fleets and washed ashore containers filled with toxic waste that had been dumped by European fishing vessels.[/size]

[size=4]அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் மேற்கோளைத் தேடிச் சென்றால், சிகாகோ டிரிப்யூன், இத்தாலியிலிருந்து படகுகள் வந்து ஐரோப்பிய ஆலைக் கழிவுகளைக் கொட்டிவிட்டு மீன் பிடித்துக்கொண்டு சென்றன என்கிறது. கழிவுகளைக் கொட்டிவிட்டு மீன் பிடித்துச் சென்றுள்ளனர் என்றாலே, அது அணுக் கழிவுகளாக இருக்கச் சாத்தியம் இல்லை என்று யூகிக்கலாம் அல்லவா?

எப்படியிருந்தாலும் எந்த அடிப்படையில் “லட்சம்” அல்லது அதற்கொப்ப உயிர்கள் போயுள்ளன என்ற முடிவுக்கு ஆசிரியர் வந்துள்ளார்? சுனாமியால் சுமார் 300 பேர் இறந்துள்ளனர் என்று மட்டும்தான் தகவலே.

விஷக் கழிவுகளின் கதிர்வீச்சினால் சுமார் 300 பேர் இறந்துள்ளனர் என்கிறது ஒரு செய்தி. கதிர்வீச்சு இருந்துள்ளது என்றால் அதில் அணுக்கழிவுகளும் இருக்கலாம் என்றுதான் முடிவு செய்ய முடியும். அனைத்துமே அணுக்கழிவுகள் என்றால் அத்தனை லட்சம் டன் அணுக்கழிவுகள் எங்கிருந்து வந்திருக்க முடியும்? உலகின் அனைத்து அணு உலைகளும் சேர்ந்தாலும் அத்தனை அணுக்கழிவுகள் வந்திருக்க முடியாது. டைம்ஸ் பத்திரிகையில் ஐ.நா சூழலியல் அமைப்பின் பிரதிநிதி, கழிவுகளில் மருத்துவக் கழிவுகள் முதல் ரசாயனக் கழிவுகள் வரை இருந்தன என்கிறார்.

ஆக, விஷக் கழிவுகள் அணுக் கழிவுகள் ஆகிறது. 300 இறப்புகள், லட்சக்கணக்கான இறப்புகளாக மாறுகிறது. புத்தகத்தின் நம்பகத்தன்மை கடுமையாகக் குறைகிறது.[/size]

http://www.badriseshadri.in/2012/09/blog-post_3952.html

  • தொடங்கியவர்

[size=6]Kudankulam Nuclear Power Plant: A Threat To South India[/size]

[size=4]150 million people live in Karnataka, Kerala and Tamil Nadu in the peninsular India , 25 million more than that in Japan . It is the spices capital of the world. People cultivate cardamom, pepper, tea, coffee, ginger, turmeric, coconut, cashew and many more edible crops. Besides, our fishermen harvest exotic fishes high in nutrition and low in carbon footprint from the seas and the backwaters. These reach the food baskets of more than half the population of this planet.[/size]

[size=1][size=4]A large portion of the land in this Spice Capital of the world will be severely contaminated if a Fukushima type event occurs in one of the eight 1000 MW(e) reactors being built/ planned in Kudankulam near Kanyakumari in Tamil Nadu. Besides ruining the lives of our farmers and fishermen, this will deprive billions of people of their spices.[/size][/size]

[size=1][size=4]Map of Kudankulam target area and approximate population living there are given below.[/size][/size]

[size=4]

template_clip_image002_0010.jpg[/size]

http://www.countercu...g/vtp270311.htm

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=6]செர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்?[/size]

[size=3]

[/size][size=3]

[size=4]முத்துக்கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில், செர்னோபில் அணு உலை விபத்தில்[/size]

[size=4]
1984 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் 9,85,000 பேர் புற்றுநோயால் இறந்துவிட்டதை ரஷ்ய அரசு அறிக்கை ஒன்றில் உறுதி செய்கிறது
[/size]
[size=4](பக்கம் 22) என்கிறார்.[/size]

[size=4]ஐ.நாவின் பல அங்கங்களும், ரஷ்யா, பெலாருஸ், உக்ரைன் நாட்டின் அரசுகளும் இணைந்து 2006-ம் ஆண்டு வெளியிட்ட செர்னோபில் பற்றிய முழுமையான ஆவணம் அப்படி ஏதும் சொல்லவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை (பக்கம் 14, 15)[/size]

[size=4]
நேரடியாக

1986-ல் கதிர்வீச்சுக் காயங்களால்: 28 பேர்

பிற வகையில் ஏற்பட்ட காயங்களால்: 2 பேர்

1987-லிருந்து 2004 வரை பல காரணங்களால்: 19 பேர் (ஆனால் அனைவரும் செர்னோபில் விபத்தின் காரணமாகத்தான் இறந்தனர் என்று சொல்ல முடியாது)
[/size]

[size=4]
மறைமுகமாக

கேன்சர் அதிகரிப்பு - மிகக் குறைவான சதவீதம்

ஆனால் தைராய்ட் கேன்சர் அதிகரிப்பு - இளைஞர்கள், குழந்தைகளிடையே இருந்துள்ளது. 4,000-க்கு மேற்பட்ட தைராய்ட் கேன்சர் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதில் 15 பேர் இறந்தனர்.
[/size]

[size=4]மீதத்தை நீங்களே முழுதாகப் படித்துக்கொள்ளுங்கள்.

எண்ணிக்கை ஒன்று சொல்லப்படுகிறது. அதற்கு அடிக்குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் ரஷ்ய அரசே அப்படிச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஏதும் இல்லை, இறப்பு என்பது 100-ஐக்கூடத் தாண்டவில்லை என்பதை நான் மேலே கொடுத்துள்ள ஆவணம் காட்டுகிறது.

100 உயிர்கள் என்றாலும் உயிர்களே. அதற்கு செர்னோபில் முழுக் காரணம். ஆனால் இல்லாத, பொல்லாத எண்ணிக்கை எதற்கு?[/size][/size]

http://www.badriseshadri.in/2012/09/blog-post_4731.html

  • தொடங்கியவர்

[size=4]

வெளிஉலகம் தெரியாத அறிவுசீவிகள் ”கூடன்குளம் ஆரம்பிக்கும்போதே போராடியிருக்கலாமே” என்று கேட்கிறார்கள்..

[/size]

[size=4]

ராஜிவ்காந்தி அடிக்கல் நாட்டுவதற்கு வந்து மதுரையோடு திரும்பி போனதும்..

[/size]

[size=4]

கன்னியாகுமரியில் 1989ல் நடந்த துப்பாக்கிச் சூடும் அவர்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை..

[/size]

[size=4]

மக்கள் போராட்டங்களை பகிருங்கள்..

[/size]

[size=4]( முகநூல் ஊடாக )[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவுக்குத் தான்.... தமிழ்நாட்டை விட மின்சாரம் அவசரமாக தேவைப்படுகின்றது.

அங்கு கொண்டு போய் அணுமின் நிலையத்தை அமைக்க வேண்டியது தானே...

ஆபத்தான காரியம் எல்லாவற்றுக்கும், தமிழன் நிலம் தான்... இவர்களின் கண்களில் முதலில் படுவதேன்?

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம்"

[size=3]

[/size][size=3]

[size=1]484423_260044947446886_1919398488_n.jpg[/size][/size]

இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி… படித்துவிட்டுஅனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் (Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்… நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும்விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்…

புதுதிட்டம்:

நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும்இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொருஅடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம். கேரளா - கொச்சியில் இருந்து கர்நாடக- பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரியஅளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன் & வேலை பெறுவது கேரளா,அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வரகாரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாயகட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர்செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால்அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்குஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும்நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”.கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்தநிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?

தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும்,நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள்,விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும்ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா,மைசூரு வழியாக வந்தால் 470 கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம்என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும்அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல் எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலைஅனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்புமக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்துஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

(முக நூல் வழியாக படித்தது... )

http://kathirvalaipo...og-post_24.html

Edited by purmaal

"ஆம், இது ஒருகாலத்தில் தமிழினத்தின் ஒரு பகுதியை முழுமையாக அழித்துவிடும்" என்பதற்கு வாக்கு போட்டிருக்கிறேன்....

நல்ல பயனுள்ள திரி.

நான் கருத்து கூற முடியாதுவுக்கு தான் போட்டேன். உலை ஆரம்ப வடிவமைப்பு, செயல்பாடு,மின்சாரம் பங்கிடுதல் எல்லாவற்றிலும் அரசியல் தான் முதன்மை பெறுகிறது.

திட்டத்தை புத்துபித்தது இலங்கையுடனான மின்சார ஒப்ந்தங்களால்.

இவற்றை தவிர்த்து விஞ்ஞானத்தில் தங்கி செயல்ப்பட்டால் ஏழை மக்களுக்கு மலிவான மின் விநியோகம் செய்யலாம் என்பது எனது நம்பிக்கை. தமிழ் நாடு தேவைக்கு மேலாக விஞ்ஞானிகளை கொண்டிருக்கு. மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டுமென்றே உதாசீனம் செய்தது மாநில அரசை வளைத்து போடும் உத்திகளில் நேரத்தை செலவிடுகிறது.

கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப் படப் போவது தமிழ்நாடும் வட இலங்கையும்தான். அணு ஆலைகளினால் வெளியேற்றப்படும் செறிவு குறைந்த கழிவுப் பொருட்கள் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சேமித்து வைக்கப்படும். அழிக்க முடியாத இக் கழிவுகள் எப்போதுமே அச்சுறுத்தலாக இருக்கும்.

ஜேர்மனியைத் தொடர்ந்து ஜப்பான் தனது அணுமின் உற்பத்தியை முற்றாகக் கைவிடுவது பற்றி ஆலோசித்து வருகிறது.

வேறு பல நாடுகளும் அணு ஆலைகளைக் குறைக்க முயற்சி செய்கின்றன. உலகில் கால்வாசிச் சனத்தொகையைக் கொண்டிருக்கப் போகும் இந்தியா தன்னால் பாதுகாப்பாகக் கையாள முடியாத ஆபத்தான இம் முயற்சியைக் கைவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]"ஆம், இது ஒருகாலத்தில் தமிழினத்தின் ஒரு பகுதியை முழுமையாக அழித்துவிடும்" என்பதற்கு வாக்கு போட்டிருக்கிறேன்.[/size]

  • தொடங்கியவர்

[size=4]சாதாரண மக்களின் மத்தியில் பயத்தை போக்கும் வரை, [/size]

[size=4]மக்களின் நீதியான அகிம்சை போராட்டங்கள் தொரடலாம் [/size]

296746_10151236846159766_1166921123_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=6]செர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்?[/size]

[size=3][size=4]முத்துக்கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில், செர்னோபில் அணு உலை விபத்தில்[/size][/size]

[size=4]
1984 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் 9,85,000 பேர் புற்றுநோயால் இறந்துவிட்டதை ரஷ்ய அரசு அறிக்கை ஒன்றில் உறுதி செய்கிறது
[/size]
[size=4](பக்கம் 22) என்கிறார்.[/size]

[size=4]ஐ.நாவின் பல அங்கங்களும், ரஷ்யா, பெலாருஸ், உக்ரைன் நாட்டின் அரசுகளும் இணைந்து 2006-ம் ஆண்டு வெளியிட்ட செர்னோபில் பற்றிய முழுமையான ஆவணம் அப்படி ஏதும் சொல்லவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை (பக்கம் 14, 15)[/size]

[size=4]
நேரடியாக

1986-ல் கதிர்வீச்சுக் காயங்களால்: 28 பேர்

பிற வகையில் ஏற்பட்ட காயங்களால்: 2 பேர்

1987-லிருந்து 2004 வரை பல காரணங்களால்: 19 பேர் (ஆனால் அனைவரும் செர்னோபில் விபத்தின் காரணமாகத்தான் இறந்தனர் என்று சொல்ல முடியாது)
[/size]

[size=4]
மறைமுகமாக

கேன்சர் அதிகரிப்பு - மிகக் குறைவான சதவீதம்

ஆனால் தைராய்ட் கேன்சர் அதிகரிப்பு - இளைஞர்கள், குழந்தைகளிடையே இருந்துள்ளது. 4,000-க்கு மேற்பட்ட தைராய்ட் கேன்சர் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதில் 15 பேர் இறந்தனர்.
[/size]

[size=4]மீதத்தை நீங்களே முழுதாகப் படித்துக்கொள்ளுங்கள்.

எண்ணிக்கை ஒன்று சொல்லப்படுகிறது. அதற்கு அடிக்குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் ரஷ்ய அரசே அப்படிச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஏதும் இல்லை, இறப்பு என்பது 100-ஐக்கூடத் தாண்டவில்லை என்பதை நான் மேலே கொடுத்துள்ள ஆவணம் காட்டுகிறது.

100 உயிர்கள் என்றாலும் உயிர்களே. அதற்கு செர்னோபில் முழுக் காரணம். ஆனால் இல்லாத, பொல்லாத எண்ணிக்கை எதற்கு?[/size]

http://www.badrisesh...-post_4731.html

சிங்களவன் கூட இறுதிகட்ட போரில் ஒருவர் கூட இறக்கவில்லை என்றுதான் சொல்கிறான். இந்திய ரஷ்ய சீன அரசுகள் சிங்களனை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை அவர்கள் கொடுக்கும் கணக்குகளை எப்படி நம்புறீங்க. தேவை என்றால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளட்டும் ஏற்கனவே அழிக்கப்பட்டு கொண்டு இருக்கும் எங்கள் இனத்தின் தலையில் என் ?

‎(17-09-12)--> தமிழக அரசுக்கு உதயகுமார் விடுத்த அன்பு வேண்டுகோள்!

கேரளாவிலிருந்து கூடங்குளம் அணு உலைக்கு எதிராகக் கிளர்ந்து வந்த மக்கள்,

http://www.youtube.com/watch?v=E9PE-HeNiyY&feature=share

அமெரிக்க ரூசிய உறவுகள் மிக கசப்பாக இருந்த காலத்தின் பின் கோபாச்சோ அதிபரானார். அமெரிக்காவை மிகவும் கடுப்பில் வைத்திருந்த பிரஸ்னோவை அடுத்து இரண்டு தலைவர்கள் விரைவில் மரணமானர்கள். புதிய தலைவர் கோபாச்சோவை ரூசியர் தங்கள் தலைவன் லெனின் திரும்ப பிறந்துவிட்டதாக கொண்டாடினார்கள். ஆனால் அமெரிக்கரின் மனத்தில் சோவியத்தில் இருந்த வெறுப்பால் கோபாச்சோவை அவ்வளவு எளிதாக ஏற்றுகொள்ளத்தயாராக இருக்கவில்லை. அப்போது அமெரிக்காவின் பிரபல TV யான ABC இல் பீட்டர் ஜென்னிங்க்ஸ் என்பவர் பிரதான அறிக்கையாளராக கடமையாற்றி வந்தார். இவரின் பிரபலம், நான் மொன்றியலில் இருந்த போது பலர் அங்கும் இவரின் 6:30PM செய்தியை பார்ப்பார்கள். நாங்கள் இவர் வரும் நேரம் CBC, CTV யை மூடிவிட்டு ABC யைத்தான் பார்ப்போம். அப்போது பீட்டர் வந்து சேனபிலில் 2000 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வாசித்திருந்தார். 2 தான் உண்மையில் கொல்லப்பட்டது என்றதை அறிந்த பின்னர் இவருக்கு சிலநாட்கள் அது இழுக்காக இருந்தது. அதன் பின்னர் ABCயின் "றீம் ரீமும்" மெல்ல மெல்ல உடைத்தொடங்கியது. சாம் டொனால்சன் பதவி இறக்கப்பட்டார். பிறிட் கீயூம் வேறு(CNN) சனலுக்குக்கு சென்றார். ரெட் கொப்பல் இரவிலிருந்து வெளியேறினார். இறுதியில் பீட்டர் புற்று நோயால் இறக்கும் பொழுது நான் அமெரிக்காவில் ABC செய்தியையே பார்ப்பதை நிறுத்திவிட்டேன். இறந்த இருவரை, இரண்டாயிரம் என்று ஒருதடவை பீட்டர் வாசித்தபின்னர் என்னால் என்றுமே அவரின் திறமைகளை மதித்து அதன்பின் அவரின் செய்தியை பார்க்கமுடியவில்லை.

விபத்தில் இறந்தவர்கள் இருவர். சோவியத்தின் மிகச் சிறந்த விமானமோட்டிகள் தாம் இறப்பது திண்ணம் என்று அறிந்த பிறகு உலங்கு வானூர்த்திகளை எடுத்து சென்று கதிர் வீசிகொண்டிருந்த அணு உலை மீதி பலதவைகள் பறந்து அதை காங்கிறீட் போட்டு மூடினார்கள். பின்னர் இவர்கள் வைத்தியசாலைகளில் படுத்திருந்து உருவம் கூட மாறி அணு அணுவாக இறந்தார்கள். உலை வெடித பொது அது வெடிப்பதற்கான (periodical) சோதனைகளில் ஆழ்த்தப்பட்டிருந்தது. சோதனை நடத்திய அதிகாரிகள் மிக திமிர்த்தனத்துடனும், வேண்டா வெறுப்புடனும் நடந்து வெடிக்க விட்டார்கள். சோதனை என்ற பெயரில் ஏற்கனவே அதன் தானியங்கி பாதுகாப்புக்கள் நிறுத்தப்படிருந்தன. சோதனை விதிகளை மீறி அதீத சூழ்நிலைகளுக்கு உலையை தள்ளினார்கள். வெடிப்பதற்கு அணு உலை வெளி தோற்றங்களை காட்டத்தொடங்கிய பின்னரும் அந்த சோதனை அதிகாரிகள் மிக மந்தமாகவே தொழில்ப்பட்டார்கள். உலை வெடித்ததின் ஒரே காரணம் அதை பிழையான வழிகளில் சோதனைக்கு ஆளாக்கிய மனித தவறுகளே.

மக்கள் பெருமளவு காப்பற்றபட்டது அதன் பின்னர் வந்த அவசர நடவடிக்கை போர் அதிகாரிகளாலேயே.

  • தொடங்கியவர்

[size=4]எவ்வளவு பேர் செர்நோபலில் கொல்லப்பட்டனர்? என்பது விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உரியது. காரணம், கதிர்த்தாக்கத்தால் உடனாடியாக இறப்பவர்கள் சிறிதாக இருந்தாலும் அதன் நீண்டகால விளைவில் அதிகம் பாதிப்பக்கப்படுபவர்கள் பிறக்கும் பிள்ளைகள், ஒரு நாட்டின் செல்வங்கள் :([/size]

  • தொடங்கியவர்

[size=5]பல வழிகளில் தமிழகத்தை புறக்கணிக்கும் நடுவண் அரசு, [/size]

[size=5]'மின்சாரத்தில்' மட்டும் அதீத அக்கறை கொண்டுள்ளதா? [/size]

nuclear-power-plants-in-india.jpg

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநல வழக்கு

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2012 20:56

[size=3]கூடங்குளம் அணு உலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு. மத்திய அரசின் முன்னாள் செயலரான ஈ.ஏ.சர்மா, பொதுநல வழக்குகளுக்கான மையம் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் இந்த வழக்கினை தொடர்ந்திருக்கிறார்கள்.[/size]

[size=3]அந்த மனுவில், கூடங்குளம் அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் முழுமையான நஷ்ட ஈடு தர இயலாது என்று ரஷ்யாவோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், பல்வேறு தீர்ப்புகளிலும் சுற்றுச்சூழல் சேதம் அல்லது விபத்து காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கூடங்குளம் விவகாரத்தைப் பொறுத்தவரையில், விபத்து ஏற்பட்டால் அதற்கு ரஷ்யா பொறுப்பல்ல என்ற தொனியில் ஒப்பந்தம் உள்ளது.[/size]

[size=3]யார் சுற்றுச் சூழலுக்கு சேதம் ஏற்படுத்துகிறார்களோ, அவர்களே முழுப் பொறுப்பு என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூடங்குளம் அணு உலைக்கும் பொருந்தும் ஆனால் அதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளத் தவறி விட்டது. அணு உலை விபத்து தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம், விபத்துக்கு காரணமானவர்கள் வெறும் 1500 கோடி கொடுத்தால் போதும் என்று கூறுகிறது. இதன் மூலம், ரஷ்யாவை எந்த விதமான கட்டுப்பாட்டுக்கும் ஆளாக்காமல், இந்தியா காப்பாற்றியுள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.[/size]

[size=3]அணு உலை விபத்து ஏற்பட்டால் அரசு பல லட்சம் கோடி இழப்பீடாக வழங்க வேண்டி வரும். அவ்வாறு வழங்குகையில் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அப்படி ஒப்புதலைப் பெறுவதற்கான வழிவகை கூடங்குளம் ஒப்பந்தத்தில் இல்லை. ரஷ்யாவைப் பாதுகாத்து, அதற்கு நிதி இழப்பீடு ஏற்படாமல், இந்திய அரசின் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மக்களுக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size]

[size=3]இந்த மனு, வரும் வியாழனன்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவோடு சேர்த்து விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.[/size]

[size=3] [/size]

http://www.savukku.net/pidithadu/1646-2012-09-17-15-45-36.html

[size=3]தமிழர்களுக்கு பல 'முள்ளிவாய்க்கால்கள்' காத்திருக்கின்றன. அவை எல்லாவற்றிலும் இந்திய நடுவண் அரசு முக்கிய பங்கு[/size]

[size=3]வகிக்கும். இதற்கு கூடங்குளம் பிரச்சினை ஓர் உதாரணம். அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் காவேரிநதிநீர்ப் பிரச்சினையில்[/size]

[size=3]காட்டப்பட்ட தாமதத்தையும் அசமந்தப்போக்கினையும் வெகுவாகக் கண்டித்தது. 'இரத்த அழுத்தத்தை கூட்டுவதாக உள்ளது' என்றே[/size]

[size=3]குறிப்பிட்டது. தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் அழிப்பது என்று கங்கணம்கட்டி மத்திய அரசு செயற்படுகிறது. தமிழகத்தலைவர்களோ[/size]

[size=3]பதவிக்கும், பணத்திற்கும் விலைபோகும் விலைமாதர்களாக இருக்கிறார்கள்.பிரபாகரன், உதயகுமார் போன்ற கொள்கைவீரர்கள்[/size]

[size=3]அவசியமாகத்தேவைப்படுகிறார்கள். எல்லாத்தமிழர்களும் விழிப்புணர்வுடனும் விவேகத்துடனும் செயற்படவேண்டும்.[/size]

  • தொடங்கியவர்

301071_488731154478473_1124113576_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

State Net summer capacity

(gigawatts) Rank Net generation

(gigawatthours) Rank Alabama 5.043 5 37.941 7 Arizona 3.937 12 31.200 11 Arkansas 1.835 19 15.023 19 California 4.390 8 32.201 10 Connecticut 2.103 18 16.750 17 Florida 3.924 13 23.936 15 Georgia 4.061 10 33.512 8 Illinois 11.441 1 96.190 1 Iowa 0.601 31 4.451 31 Kansas 1.160 27 9.556 26 Louisiana 2.142 16 18.639 16 Maryland 1.705 20 13.994 20 Massachusetts 0.685 29 5.918 29 Michigan 3.947 11 29.625 12 Minnesota 1.594 21 13.478 21 Mississippi 1.251 23 9.643 25 Missouri 1.190 26 8.996 28 Nebraska 1.245 25 11.054 23 New Hampshire 1.247 24 10.910 24 New Jersey 4.108 9 32.771 9 New York 5.271 4 41.870 4 North Carolina 4.958 7 40.740 6 Ohio 2.134 17 15.805 18 Pennsylvania 9.540 2 77.828 2 South Carolina 6.486 3 51.988 3 Tennessee 3.401 15 27.739 13 Texas 4.966 6 41.335 5 Vermont 0.620 30 4.782 30 Virginia 3.501 14 26.572 14 Washington 1.097 28 9.241 27 Wisconsin 1.584 22 13.281 22

http://www.eia.gov/nuclear/state/

அமெரிக்காவின் பல பாகங்களிலும் பல காலமாக உள்ள அணு ஆலைகள் குறிப்பிடத்தக்க அளவு சக்தியை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. என்றாலும் கடந்த 20 வருடங்களாக புதிய அணு ஆலைகள் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா போன்ற 3ம் உலக நாடுகள் மின் சக்தியை பெற அணுசக்தி மூலம் பெற முயற்சிக்கின்றன.ஆனாலும் இந்தியா தேர்ந்தெடுத்தது தமிழ் நாட்டை தான்.ஆபத்து வந்தாலும் தமிழர்கள் தானே இறப்பார்கள் என்ற உள்நோக்கம் கொண்டதே.

ஏனைய மாநிலங்களில் இத்திட்டம் அமுல் படுத்த முடியாமல் போனதுக்கு காரணம் அந்தந்த மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம்.

தமிழ் நாட்டு அரசாங்கம் இவற்றை அனுமதித்தது அரசியல் காரணமோ என்னவோ மக்களின் பாதுகாப்பில் எவ்வளவு அக்கறை காட்டியது என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தி இருந்தால் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பி இருக்காது.மக்களுக்கு பாதுகாப்பு பற்ரி தமிழ்நாட்டு அரசு எதுவும் தெரிவிக்காததால் அப்படி ஒன்று இல்லை என அனுமானிக்க வேண்டியுள்ளது.

அண்மையில் யப்பானில் ஏற்பட்ட அணுக்கசிவால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் யாவரும் அறிந்ததே.இதனால் பல அணு உலைகளை அவர்களே மூடும் போது தமிழ்நாடு ஏன் கட்டியே ஆக வேண்டும் என நிற்கின்றது என விளங்கவில்லை.ஏற்கனவே சுனாமி தமிழ் நாட்டை ஒரு முறை தாக்கியுள்ளது. மீண்டும் தாக்கது என்பது என்ன நிச்சயம்.

  • தொடங்கியவர்

[size=5]அணுமின்நிலையத்தை திறக்கக்கோரி தீக்குளிப்பு போராட்டம்: மூப்பனார் பேரவை முடிவு[/size]

[size=4]கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்கக்கோரி தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என மூப்பனார் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size]

[size=4]சிதம்பரம் மேலவீதியில் மூப்பனார் பேரவை நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.[/size]

[size=3]

[size=4]கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:[/size][/size]

[size=4]கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிபுணர்குழுவும், நீதிமன்றமும் ஆய்வு செய்து பாதுகாப்பாக உள்ளது என்றும், எரிபொருள் நிரப்பி கூடங்குளம் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கலாம் என அறிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகளும் பாதுகாப்பானது என அறிவித்துள்ளனர். இந்நிலையில் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். உதயகுமாரை கைது செய்யாவிடில் சிதம்பரம் காந்திசிலை அருகே மூப்பனார் பேரவை நிர்வாகிகள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size]

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&artid=663238&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]இப்படி தீர்மானங்களை நிறைவேற்றம் செய்பவர்கள் ஏனோ தீக்குளிப்பது இல்லை :rolleyes:[/size][/size][size=1]

[size=4]அவர்களுக்கே தெரியும் தாங்கள் கூறுவது எல்லாம் பொய் என்று :icon_mrgreen:[/size][/size]

  • தொடங்கியவர்
564329_4548064577938_1755744353_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.