Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள வாழ்த்துப்பாடல்

Featured Replies

யாழ்கள வாழ்த்துப்பாடல்

இரண்டு

திறமைசாலிகளின் கை வண்ணத்தில் பிம்ப வடிவம் பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறியத்தருகிறோம் ..............சாஸ்திரி அண்ணா ,சாந்தி அக்கா , .இந்த உறவுகளினதும் கூட்டுமுயற்சியில்

களை பெற்ற இந்த வடிவம் விழா அன்று முழுமையாக உங்கள் பார்வைக்கு வழங்கப்படும் என்பதையும் விழா ஒருங்கிணைப்பு குழு சார்பில் அறிவிக்கப்படுகிறது ............நன்றி

Edited by தமிழ்சூரியன்

  • Replies 87
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் நன்றாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஒவொரு நாடும் வந்து போவது இன்னும் அழகு அதிலும் ஆஸ்திரேலியா முதலில் வருவது அதை விட அழகு

  • கருத்துக்கள உறவுகள்

vaalththukkal

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்துக்கு வரும் உறுப்பினர்களின், நாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில்... அந்நாட்டின் ஊர்களின் படங்களை சேர்த்துக் கொண்டமை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணிப்பதற்கு, வார்த்தைகளைத் தேடுகின்றேன்!

வரலாற்றின் வழியில்,வழுக்கி விழுந்தாலும்,

விதைகளில், இருந்து விருட்சங்களாகி உயர்வோம்!

இதில் பங்கெடுத்த, அனைத்து உறவுகளுக்கும், மனமார்ந்த நன்றிகள்!,

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச் சூரியனின் பண்பட்ட இசையும் தேனிசை செல்லப்பாவின் சாயலில் நாதன் அவர்களின் கம்பீரக் குரலும் பாடலுக்கு மெருகூட்டியுள்ளன. சாத்திரி காட்சிகளை மாற்றி அமைத்திருப்பது இன்னும் அருமை. தமிழ்ச் சூரியன் எனக்கும் பாடுவதற்க்கு உங்கள் இசையில் ஒரு சந்தர்ப்பம் தருவீர்களா எதிர்காலத்தில்????

தமிழ்ச் சூரியனின் பண்பட்ட இசையும் தேனிசை செல்லப்பாவின் சாயலில் நாதன் அவர்களின் கம்பீரக் குரலும் பாடலுக்கு மெருகூட்டியுள்ளன. சாத்திரி காட்சிகளை மாற்றி அமைத்திருப்பது இன்னும் அருமை. தமிழ்ச் சூரியன் எனக்கும் பாடுவதற்க்கு உங்கள் இசையில் ஒரு சந்தர்ப்பம் தருவீர்களா எதிர்காலத்தில்????

அக்கா எங்கே இரிக்குக்கின்றீர்கள் ,எங்கே இருக்கின்றீர்கள் ,எங்கே இருக்கின்றீர்கள் ..............இது எதிரொலியாக உங்கள் காதில் விழட்டும் :):D

உடனடியாய் தொடர்பு கொள்கிறேன் ...............நிச்சயமாக நீங்கள் பாடுகிறீர்கள் .நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூப்பிட்டது காதில விழுந்தது.தமிழ்ச் சூரியன் நான் இங்கே இருக்கிறேன்.

தமிழ்ச் சூரியனின் பண்பட்ட இசையும் தேனிசை செல்லப்பாவின் சாயலில் நாதன் அவர்களின் கம்பீரக் குரலும் பாடலுக்கு மெருகூட்டியுள்ளன. சாத்திரி காட்சிகளை மாற்றி அமைத்திருப்பது இன்னும் அருமை. தமிழ்ச் சூரியன் எனக்கும் பாடுவதற்க்கு உங்கள் இசையில் ஒரு சந்தர்ப்பம் தருவீர்களா எதிர்காலத்தில்????

என்ன தமிழ்சூரியன் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யிற்கு அலைந்துவிட்டீர்கள் போலிருக்கே

தமிழ்ச் சூரியனின் பண்பட்ட இசையும் தேனிசை செல்லப்பாவின் சாயலில் நாதன் அவர்களின் கம்பீரக் குரலும் பாடலுக்கு மெருகூட்டியுள்ளன. சாத்திரி காட்சிகளை மாற்றி அமைத்திருப்பது இன்னும் அருமை. தமிழ்ச் சூரியன் எனக்கும் பாடுவதற்க்கு உங்கள் இசையில் ஒரு சந்தர்ப்பம் தருவீர்களா எதிர்காலத்தில்????

வணக்கம் சுமேரியர் அக்கா உங்கள் குரலில் உள்ள பாடலை கேட்டேன் .அற்புதமான குரல் வளம் உங்களுக்கு இருக்கு ...............கீழ் சுதி மிக பிரமாதமாய் இருக்கு ,தாளம் ,சுருதி ,பாவம் இவற்றை குறை சொல்லுமளவிற்கு ஒன்றும் எனக்கு தெரியவில்லை ...........நிச்சயம் உங்களுக்கு ஒரு பாடலை உருவாக்குவேன் ..நன்றி

[size=5]பாடல் அருமை ....[/size][size=1]

[size=5]வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களப் பாடலின் இடையில்....

விடுதலை போராட்டத்தை... பிரதிபலிக்கும் முகமாக....

பொங்குதமிழ் நிகழ்வொன்றின் படத்தையும்... இணைத்திருந்தால், இன்னும்... நன்றாக இருந்திருக்கும்.

Edited by தமிழ் சிறி

பொதுவில் நன்றாக இருக்கின்றன.

ஆனால்

யாழ் வெறுமனே பொழுதுபோக்கு களாமா?

இதுவரையில் அப்படி இல்லை என்பதுதான் பதில்.

முடிவானதாக கொள்ளப்படும் காணொளி இதை பிரதி பலிக்க வேண்டும் என்பதுதான் எனது சிந்தனை. யாழின் கதை என்னும் போது அதில் நமது கதை மறைந்திருக்கிறது. காணொளிகள் நமது நாட்டையும், சூசகமாக நாம் கனம் பண்ணுபவர்களை பற்றியும் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள கானொளியாக இல்லை.

யாழ் என்பதன் பொருள் நாலு படத்தை நாலு இடத்தை போடுவதல்ல.

அது பலருக்கு கனம் செய்யும் ஒரு இடம்.

அது பற்றி ஒரு துளியும் இல்லாதது இதை ஏன் பார்த்தேன் என்று எண்ணத்தோன்றுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்கவும்.

யாழ் இனி இப்படித்தான் பயணிக்கப்போகின்றதா??? :( :( :(

சாத்திரி அண்ணாவுடன் தொடர்புகொள்ள விரும்புகிறேன் யாழ்கள பாடல் சம்பந்தமாக

skaype இல் தொடர்புகொள்ள முயன்றும் முடியாத காரணத்தினால் இங்கே பதிவிடுகிறேன் தயவு செய்து என்னுடன் தொடர்பாடவும் .......முக்கியமான விடயம் நன்றி ..

மதியம் நெடுக்ஸ் இது சம்பந்தமாய் இரு கருத்தை பதிவிட்டார் .......அதில் பல உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது .........அதை என் நிர்வாகம் அழித்தது என்று நான் ஆராய விரும்பவில்லை ......ஆனால் எனக்கு வந்த தனிமடல்களினாலும் ,எனது சொந்த மைலினாலும் வந்த தகவல்களின் அடிப்படையில் சில மாற்றங்கள் இந்த வீடியோவில் செய்யப்பட இருப்பதனாலும் , நானே அவரிடம் இந்த பொறுப்பை கொடுத்த படியினாலும் பொறுப்பு கூறும் கடமையில் நான் இருப்பதாலும் .அவரிடம் மனம் திறந்து பேச விரும்புகிறேன் நன்றி அன்புடன் தமிழ்சூரியன்

இந்த வாழ்த்துக்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன்.

எல்லாமே அருமை

கவி அருமை

மெட்டு அருமை

இசை அருமை

குரல் அருமை

படக்கலவை அருமை

பாடல் பதிவு அருமை

இதில் பங்கு கொண்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

இதில் பங்கு கொண்டவர்கள் அனைவரும் வாழிய வாழியவே

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் சூரியன் மற்றையவர்களை பேல வெறும் இலவச ஆலோசனைகள் மட்டும் வழங்கி விட்டு போகாமல் நீங்கள் கேட்படியால்தான் இதனை செய்து தர முன்வந்தேன் இப்பொழுது வந்து ஆலேசகைளை மட்டும் அள்ளி வழங்குபவர்கள் அதனை முதலிலேயே செய்து தர முன்வந்திருக்கலாம். காணொளிகளை இணைப்பதது உங்கள் விருப்பம் ஆனால் நான் செய்து இணைத்த காணொளியை நான் அகற்ற மாட்டேன் அது அப்படியே இருக்கும் விரும்பினால் நீங்களும் அல்லது ஆலோசனைகளை வழங்கியவர்கள் அவர்களாக ஒரு காணொளியை செய்து தாராளமாக இணைக்கலாம். இங்கு காணொளி பிரச்சனையா அல்லது சாத்திரி செய்ததால் பிரச்சனையா? யாழ் களம் என்பது குறிப்பிட் ஒரு தரப்பினர்களிற்கானதோ அல்லது குறிப்பிட்ட ஒரு தமிழர் பிரிவின் அடையாளமோ அல்ல என்பதை நினைவில் வைத்துத்தான் படங்களை தேர்ந்தெடுத்திருந்தேன்.அதே போல எல்லா காணொளிகளும் இருக்கட்டும் விரும்பியவர்கள் விரும்பியதை பார்க்கட்டும். ஆனால் இது போன்று ஏதாவது செய்து தர சொல்லி தொடர்பு கொள்ள வேண்டாம். நன்றி வணக்கம்.

Edited by sathiri

தமிழரின் தேசிய கொடியை இணைப்பதில் தவறு இல்ல.

இல்லை என்றால் அந்த வந்தா வெட்டுவேன் என்று வெருட்டுற இபோச சிங்க கொடியை என்றாலும் நீக்குங்கோ சாத்திரியார்

Edited by யாழ்அன்பு

உறவுகளே சாத்திரி அண்ணையுடன் தொடர்புகொண்டு பல விடயங்களை மனம் விட்டு பேசினேன் .............

இவர் மேலுள்ள பதிவை பதிந்த பின்னே அவருடன் தொடர்பு கிடைத்தது ............எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள்

செய்வதாய் என்னிடம் கூறியுள்ளார் ........உண்மையில் சில தவறுகள் நடந்து விட்டன நான் தான் சில விடயங்களை அவரிடம் பகிரவில்லை ...எல்லா தவறும் என்னாலேயே ,நானே பொறுப்பு .....மறப்போம் நாம் எதிர்பார்த்த மாற்றங்களை நிச்சயம் அந்த வீடியோவில் செய்யப்படும் ....நாம் யதார்த்தமாக பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம் ..............சாந்தி அக்காவின் மகனே இந்த வீடியோவை செய்தார் அற்புதமாய் செய்த அவருக்கு எம் நன்றிகள் ....தமிழனின் அடையாளங்களுடன் அந்த காட்சி வரும்போது இன்னும் சிறப்பாய் இருக்கும் .....என்பதுதான் உங்கள் கருத்து ........உண்மை உண்மையில் பல யாழ்கள உறவுகளிடம் கேட்டபின்பும் முடியாது என்ற வார்த்தையே நான் கேட்டேன்,././/தான் செய்கிறேன் என்ற பெருந்தன்மையுடன் அதை பொறுப்பேற்றவர் ........[மதிக்கிறேன் அதை ] புரிந்துகொண்ட நாம் எதிபார்ப்பது [போல் மாற்றுவார் என்ற நம்பிக்கையில் ...........நித்திரைக்கும் செல்கிறேன் ............வாழ்க யாழ் களம் வாழ்க தமிழீழம் ...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் கதைத்திருக்கிறார் மாற்றங்கள் கொண்டுவர முயற்சிக்கிறேன் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D thanks saath annaa ur great
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தைத் தாங்கி நிற்பது தமிழும் தாயக உணர்வும்தான். எனவே தாயகத்தின் வரைப்படம் வந்தால் நல்லது. சிங்க இலச்சினை பொறிக்கப்பட்ட இ.போ.ச பஸ்ஸுக்கும் யாழ் களத்திற்கும் சம்பந்தமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.