Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் - இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு விஜயம் செய்து யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தினால் அதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என இந்திய மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டுமன்றி உலகின் எந்தப் பகுதியிலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அதனை இந்தியா மௌனமாக வேடிக்கைப் பார்க்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களை இந்தியா வன்மையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு இடத்திலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு பிரதமர் அனுமதிக்க மாட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போதும் இந்தியா அதற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.yarl.com/...hp?showforum=40

இது உண்மையாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் இல்லையேல் அழிக்கப்படும்.

மகிந்த இந்தியா சென்று தங்களது கேவலம் கெட்ட அரசியல் காய் நகர்த்தல்களை நாராயணசாமிக்கும் கற்பித்துள்ளார் போலும்.

சீனா நாவாய்கள் வைத்து வெகு பழைய காலம் முதல் பயணங்கள் செய்திருக்கு. நாடுகளை அடித்து பிடித்தது கிடையாது. யுத்தங்களை தவிர்க்க பெரும் சுவரை கட்டிய நாடு. இன்னமும் ஆய்வுகளில், சீனா முதலாக வந்தால், உலக சமாதனாத்துக்கு எந்த இடைஞ்சலும் வாராது என்றுதான் பலர் ஆய்வு கூறுகிறார்கள். நானும் அவறை நம்பியதுண்டு. இந்தியாவில் எல்லைகளை இந்தியாவை ஆண்ட பிரித்தானியா விஸ்தரித்ததாக தான் கொண்ட துண்டு. இந்த முத்து மாலையை எல்லாம் அவனவன் வியாபாரத்தந்திரம் என்று கழித்ததுண்டு.

ஆனால் அண்மையில் சீனா, யப்பானுடன் நடந்து கொண்டவிதம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. உறவுகள் அந்த திரியில் விளையாட்டாக யப்பானும், சீனாவும் அடிபட வேண்டும் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் அந்த பகிடிகளுக்கு மேலே போனால் பனித்திராவின் கவலை தோய்ந்த கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. சீனா வந்து, இந்தியா, யப்பான், பிலிப்பைன், வியட்நாம் தாய்வான், ......என்ற எந்த விடையத்திலும் பேச்சுவார்தை முறையை கடைப்பிடிக்காமல், தான் வளர்ந்து வந்து எதையும் வன்முறையால் ஆக்கிரமித்துவிடலாம் என்ற தந்திரத்துடன் நடந்து கொள்வது வெளிப்படை யாகிறது

சீனா தன்னைதான் ஆயத்தம் செய்வதில் மாட்டும்தான் பொழுது போக்குகிறது போலிருக்கு. இந்த முத்துமாலை ஆராச்சிகள் அமெரிக்கா, புஸ் காலத்தில் வெளிவிட்டவை. புஸ் சீனாவுடன் மென் போக்கும் இஸ்லாமியருடன் கடும் போக்கும் கொண்டிருந்தவர். ஆனால் நாடு மிக கடுமையான பொருளாதார சிக்கல்களில் மாட்டியிருந்த போது, சமாதானத்திற்கு நோபல் பரிசெடுத்த ஓபாமா செய்த சுட்டத்தக்க வெளியலுவல், தென் சீனக்கடலுக்கு படைகளை விஸ்தரித்ததும், ஆஸ்திரேலியாவை பலப்படுத்தியதும் தான்.

இதை பார்த்தால் நிறைய சந்தேகங்கள் வெளிவருகின்றன. சீனா சரித்திர கால சீனாவாக இருக்க போகிறதா? பொருளாதார போட்டியை பொருளாதார போட்டியாக மட்டும் எடுத்து கொள்ளத் தயாராக இருக்கிறதா?இந்தியாவுக்கு பாதுகாப்பு கொள்கைகளை ஆக்க ஊழல் தவிர்ந்த அதிகாரிகளை கண்டு பிடிக்க முடியுமா?. பழைய புவியியல் எல்லைகளை பாதுகாத்து உலக சமாதனத்தை தொடரந்து பேணமுடியுமா? மூன்றாம் உலகப்போரை நடத்த நவீன சேர்மனியாக சீனா மாறி வருகிறதா?

இந்த கேள்விகளுக்கு அமெரிக்கா அல்ல விடை அளிக்க வேண்டியது. அது இந்தியா.

Edited by மல்லையூரான்

ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி

நாலும் தெரிஞ்சுக்கிட்டேன் ஞானம் பிறந்திருச்சு கண்மானி என் கண்மணி...................

பச்சைக்குழந்தை என்று பாலூட்டி வளர்த்தேன் ...............பாலை குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி கண்மை என் கண்மணி./...........

பச்சைக்குழந்தை என்று பாலூட்டி வளர்த்தேன் ...............பாலை குடிச்சுப்புட்டு பாம்பாக கொத்துதடி கண்மை என் கண்மணி

இது எவ்வளவு சரியோ தெரியாது. இந்திரா காந்தி திருவனந்தபுரதையும், விஜயவாடா கப்பல் தளத்தையும் உசார் நிலையில்தான் வைத்திருந்தார் என்றுதானே பேசினார்கள்.

ஒரு வேளை "காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்" தான் சரியோ?

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த நாராயணசாமி..?

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த நாராயணசாமி..?

எல்லாம், ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகளே!

இந்தியனைப் பொறுத்தளவில், பசு மாட்டுக்குக் கூட 'ஆன்மா' இருக்கிறது!

ஆனால் தமிழனுக்கு, 'அது' இல்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த நாராயணசாமி..?

அமைச்சர் நாரயணசாமி மன்னிப்பு கேட்கவேண்டும்: உதயகுமார் வக்கீல் நோட்டீஸ்

நெல்லை: நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மத்திய அமைச்சர் நாரயணசாமி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்குழு தலைவர் உதயகுமார், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இடிந்தகரையில் உண்ணாவிரதம், சாலை மறியல், மொட்டை அடிக்கும் போராட்டம் என பல கட்டங்களாக போராட்டம் நடை பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டு நிதியாக ரூ.1 1/2 கோடி வந்துள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளது என்று கூறினார்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சார்பில் அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

மன்னிப்பு கோரவேண்டும்

எனது கட்சிக்காரர் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 1/2 கோடி பணம் வந்துள்ளது என்று கூறி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளீர்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பொதுநலனுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளீர்கள். எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது சிவில் மற்றும் குற்ற வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

http://tamil.oneindia.in/news/2012/02/08/tamilnadu-udayakumar-sends-legal-notice-union-minister-aid0174.html

யார் இந்த நாராயணசாமி..?

பாண்டிச்சேரியை சேர்ந்த இந்த காங்கிரஸ் பயங்கரவாதி நாராயணசாமி இன்னொரு கேகெலிய ரம்புக்வெல.

போற்குற்றவாளி சோனியாவின் அடிவருடியான இவன் பொய்க் கதைகளை அவிழ்த்துவிடுவதில் மன்னன்.

பயங்கரவாதி ராஜபக்சவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து விருந்தளித்ததை மறைக்க கூக்குரலிடுகிறான்!

படுகொலையாளனைச் செம்ங்கம்பளம் விரித்து வரவேற்று, விருந்தளித்து, அடிக்கல் நாட்டச் சொல்லி இந்த அறிக்கையையும் விடுவது வேடிக்காயாக இல்லையா? தமிழ் நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற ஒரு கதை அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பத்திரிகை ராஜபக்சாவின் உறவினர்களால் வாங்கபட்டு விட்டது. Frederica Jansz, Editor பத்திரிகை ஆசிரியர் பதவியை நீக்க பட்டு விட்டார். இந்த செய்தியின் உண்மை தன்மை கேள்விக்கு உரியது.

http://www.thesunday...l-at-intl-fora/

இலங்கை இருநாடுகளையும் பாதிக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச பொதுவான பிரச்சினைகளில் பகிர்ந்து கொள்ள இரு நாடுகளும் தேவையை வலியுறுத்தி இந்தியா ஆதரவு உறுதி

India has assured Sri Lanka of its support at both regional and international spheres emphasizing the need for the two countries to share common ground on issues affecting them.

Informed diplomatic sources reveal that the recently concluded meetings between President Mahinda Rajapaksa and Indian Premier Manmohan Singh has stressed the significance of adopting a common stand on issues both affecting the two countries individually as well as internationally.

It is believed that such an understanding would be reflected upon future international fora where Sri Lanka would come under scrutiny of certain global bodies, indicating what was termed a ‘clear policy shift’ by the Indian government.

India’s latest assurance comes after it voted in support of a US backed resolution on Sri Lanka at the UN Human Rights Council (UNHRC) sessions in Geneva in March.

However, Indian assistance in this instance is keenly sought by Sri Lanka, as the troika that will review the country’s human rights situation will include India with Spain and Benin at the upcoming Universal Periodic Review (UPR).

A mechanism of the Human Rights Council, which comes up every 4,5 years where the human rights situation of UN member states are reviewed during three working group sessions; the next review on Sri Lanka is scheduled to take place on November 1.

The process first scrutinized Sri Lanka in 2008 and made several recommendations. Forty-two member states are reviewed each year and are called for review of the human rights situation, implementation of recommendation between two reviews and a final report issued on the human rights situation in the country since the previous review

-Linked news:

http://www.colombotelegraph.com/index.php/sunday-leader-censored-emil-van-der-poortens-column/

Sunday Leader decided not to publish Emil van der Poorten‘s today as a result of the Sunday Leader’s new owner Asanga Seneviratne’s order that “nothing is to be published against the First Family

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.