Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மணம் பலமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் மீண்டும் ஒரு தொடர் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி நெடுக அவலம் எழுதி அடிவாங்கிய காயத்தை இடைக்கிடை இப்படியும் ஏதாவது எழுதிஆற்றி கொள்ளுறன். இதுவும் எனது வழைமைபோல உண்மை சம்பவமே. எனது நண்பனாகிய கதையின் நாயகனும் யாழின் ஒரு உறுப்பினரே எனவே அவனது சம்மதத்துடன் எனது வழைமையான கற்பனை கலந்து ஊத்துறன் எல்லாரும் வாங்கி பருகுங்கோ அதோடை உங்கள் கருத்துக்களையும் கட்டாயம் வையுங்கோ . இந்த கதையை கதையின் நாயகனே சொல்வது போல நகர்த்தி செல்கிறென். இதில் வருகின்ற பெயர்கள் யாவும் கற்பனையே . சரி கதைக்கு போகலாம்.

ஒரு மணம் பலமனம்

அனைவருக்கும் வணக்கம் நான்தான் இந்த கதையின் நாயகன். எனது கதையை கவனமாக கேளுங்கள் கேட்டு விட்டு நான் செய்தவை நான் எடுத்த முடிவுகள் சரியா என்பதனை நீங்கள் கூறுங்கள். சரி இப்பபோ கதைக்கு வருவோம் எனதுபெயர் சுதன் எனக்கு வயது 29 நான் பிரான்ஸ் வந்து பத்து வருடங்களாகின்றது . நான் ஒரு இரவு விடுதியில் அதன் நடத்துனராக வேலை செய்கிறேன்.அரம்பத்தில் இந்த வேலை பிடிக்காவிட்டாலும் நல்ல சம்பளம் முதலாளியும் பிரச்னையில்லையென்பதால் எனது தனி விருப்பு வெறுப்புக்களை தள்ளி வைத்துவிட்டு மற்றைய புலம் பெயர்ந்த தமிழர்களை போலவே பொருதாரத்தை நோக்கிய எனது நோக்கத்தில் கிடைத்த வேலையை செய்கிறென். நான் எனது ஊர் நண்பனொருவனுடன் இங்கு பாரீஸ் நகரில் வசிக்கிறேன்.இப்பொழுது நான் இந்தியா போக புறப்பட்டு கொண்டு இருக்கிறேன். காரணம் எனக்கு திருமணம்.

ஆம் எனக்கு வீட்டில் எனது அம்மா திருமணம் பேசி இருக்கிறார் . நான் திருமணம் செய்ய போகும் பெண் இந்தியாவி்ல் தமிழ் நாட்டில் இருக்கிறார். அந்த பெண் எங்களிற்கு ஒரு உறவு முறைதான் .அந்த பெண்ணை சின்னனில் பார்த்த ஞாபகம் எனக்கு. ஆனாலும் திருமணம் பேசி எனக்கு அந்த பெண்ணின் படம் அனுப்பியிருந்தனர் பார்க்க ஆச்சரியமாக இருந்தது அழகாகவும் இருந்தாள் . வீட்டு காரரும் எல்லா பொருத்தமும் பார்த்து 95 வீதம் பொருந்தியிருக்கு இப்படி ஒரு பொருத்தம் அமையாது எனவே உடைனை புறப்பட்டு இந்தியா வா என்று கூறி விட்டனர்.

எனக்கும் பெண்ணை பிடித்து இருக்கு. பெண்ணின் அம்மா அப்பாவை எனக்கு தெரியும் எண்டபடியா அவர்களுடனும் கதைத்து கலியாண அழைப்பு அடிப்பதிலிருந்து திருமண மண்டப ஒழுங்கு சாப்பாடு என்று எல்லா அலுவலும் எல்லா ஏற்பாடுகளையும் சுலபமா முடித்தாயிற்று .கராணம் தமிழ் நாட்டிலை எங்கடை செந்த காரர் நிறைய பேர் இருக்கினம் . அவையள் எல்லாருக்கும் நான் போய் அழைக்க ஏலாது அந்த வேலையை கூட பெண்வீட்டார் செய்திட்டினம். மாப்பிள்ளை தாலி கட்டுற நேரத்திற்கு வந்தா காணும் எண்டு சொல்லிற்றினம் . அதாலை எனக்கும் கன பாரம் குறைந்த மகிழ்ச்சி. போனதும் முதல் வேலையா அவைக்கு நன்றி சொல்ல வேணும். நளை காலை எனக்கு விமானம் அதுதான் நான் எனது வீட்டு காரர் மற்றது நான் திருமணம் செய்ய போற பெண்வீட்டுகாரர் மற்றும் பெண்ணுக்கு என்றுஆசையா பாத்து பாத்து வாங்கின சாமான் எல்லாம் அடுக்கி கொண்டு இருக்கிறன்.

பொறுங்கோ வாறன் என்ரை நண்பன் வேலையாலை வாறான் .வீடு முழுக்க சாமான்கள் பரவின படியிருக்கு கொஞ்சம் ஒதுக்கிட்டு வாறன்.பிறகு அவன் கத்துவான் என்ரைஅவசரத்திலை நண்பனின்ரை பெயரை சொல்ல மறந்திட்டன் அவனின்ரை பெயர் ஆனந்தன் அவனும் நானும் பள்ளி தோழர்கள் நல்லவன் ஆனால் கொஞ்சம் அறுவை அவ்வளவுதான் அவன் ஏதோ சொல்ல வாறான் என்ணெண்டு கேட்பம். கதைவை திறந்து உள்ளே வந்த ஆனந்தன். என்னடா இவவ்வளவு சாமானையும் இங்கையிருந்து காவி கொண்டு போக போறியா பேசாமல் காசை கொண்டுபோய் அங்கை வாங்கி குடுக்கலாம் உனக்கு எத்தனை தரம் சொல்லிட்டன் நீ கேட்கமாட்டாய் . அதுசரி என்ன மனிசியின்ரை படத்தை மேசையிலை வைச்சிட்டு பாத்து பாத்து உடுப்பு அடுக்கிறாய் போல கிடக்கு. சரி நான் வேலையிடத்திலை சொல்லிட்டு வந்தனான் நாளைக்கு பிந்திதான் வருவனெண்டு உன்னோடை எயா போட்டுக்கு வந்திட்டு நான் அப்பிடியே வேலைக்கு போறன்.

எல்லாம் சரி அவளிட்டை சொல்லிட்டியா நீ கலியாணத்திற்கு போகிற விசயம். என்று கேட்டு விட்டு என்னை பார்த்தான் ஆனந்தன். ம் இல்லையடா இண்டைக்குதான் சொல்லப் போறன் வேலையிடத்திலை இந்தியா போறனெண்டு தெரியும் ஏணெண்டு ஒருதருக்கும் சொல்லேல்லை இண்டைக்குதான் சொல்லிட்டு ஒரு பாட்டி மாதிரி வைப்பம் எண்டு யோசிச்சு இருக்கிறன்.ஏற்கனவே சாடை மாடையா அவளிட்டை சொல்லியிருக்கிறன் நான் ஒரு என்ரை ஊர்காரியை தான் செய்ய பொறனெண்டு. பாப்பம் இண்டைக்கு என்ன நடக்குதெண்டு . என்று கூறிவிட்டு நண்பனிடம் விடை பெற்றுகொண்டு நான் வேலைசெய்யும் அந்த இரவு விடதிக்கு வந்தேன் என்னுடன் வேலை செய்யும் மற்றைய நண்பர்களிற்கு வணக்கம் சொல்லி விட்டு அவள் நிக்கிறாளா ??என தேடினேன் காணவில்லை இன்னமும் அவள் வரவில்லை மற்றைய நண்பர்களிடம் திருமணத்திற்கு போகும் விடயத்தை கூறி அவர்களது வாழ்த்தை பெற்று கொண்டு ஒரு தேனீரை எடுத்து குடித்தபடி அவளின் வருகைக்காக காத்திருந்தேன் . அங்கு என்னுடன் வேலை செய்த மற்றை எல்லா நண்பர்களின் கேள்வியும் அதே கேள்விதான் . அவளிடம் சொல்லி விட்டாயா??? இல்லை எனது பதில். இதோ அவள் வருகிறாள் என்னை கண்டதும் ஒரு மின்னல் புன்னகையுடன் என்னருகில் வருகிறாள்் :arrow: :wink:

  • Replies 151
  • Views 22.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த அவள் எண்டு சொல்லவே இல்லையே...?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எழுதத் தொடங்கிவிட்டார். மறு படியும் ஒரு நல்ல கதையினை வாசித்த திருப்தி கிடைக்கும் என்று எதிர்பாக்கிறேன். ஏற்கனவே தெறியாத பாதை தெளிவான கதை வாசித்து சாத்திரியின் ரசிகனாகிட்டேன்

ஆகா அடுத்த கதை ஆரம்பிச்சாச்சா.. வாழ்த்துக்கள் கதை உங்களுக்கே உரிய பாணியில் மிக அழகாக செல்கிறது வாசிக்க ஆவலாய் உள்ளோம்

:lol::lol: சாத்ரி தாத்தா எவா அவா? :wink: ஹாஹா இந்தியாக்கு திருமணத்துக்கு போறவர் யாரையோ எதிர்பார்க்கிறாராம். :twisted: ஹாஹா அடுத்த பாகத்தையும் எழுதுங்கோ :arrow:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அவர்களே வணக்கம்.

உங்கள் தொடர்கதைக்கு வாசகர்கள் பலர் களத்திலே உள்ளார்கள் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

உங்கள் முதல் தொடரான "தெரியாத பாதை தெளிவானபோது" என்ற கதையை முன்னர் என்னால் வாசிக்க முடியவில்லை. ஆனால் இன்று முழுவதும் வாசித்தேன். மிகவும் சுவையாகவும், அதேவேளையில் மிகவும் கவலையாகவும் இருக்கின்றது.

உண்மைக்கரு என்னும்போது சிறிது பெருமையாகவும் இருந்தது.

உண்மைக் கருக்களில் நிச்சயம் ஓர் உயிரோட்டம் இருக்கும். அது உங்கள் கதைகளில் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள்.

ஆனால் ஒன்று, மீண்டும் நம்பிவரும் பெண்ணை நோகடிக்க வேண்டாம்.

நன்றி.

சாத்திரியண்ணா கதை மிகவும் எளிமையான தமிழில் எனக்கு புரியக்கூடியதாக இருக்கின்றது.

என்ன உங்களது நண்பர்களின் வாழ்க்கை அப்பிடி இப்படியாக இருக்கின்றது. :P ஏதோ உங்கள் வாழ்க்கை சிறப்பாகப்போகின்றது என நினைக்கிறேன். :lol: அல்லாவிட்டால் அதையே ஒரு தொடர்கதையாக எழுத வெளிக்கிட்டுவிடுவீங்க

:wink:

அடுத்து என்ன நடக்குமோ - என்று வாசிக்க தூண்டும் - தொடக்கம் ...........தொடர்!

நல்லாயிருக்கு.......

அதுக்காக - மின்னல் பார்வையுடன் வந்த 'அவள் '

எங்க முதலாளியின் - ஐந்து வயது மகள் என்னு முடிச்சிடாதீங்க- !:x

நொந்து போயிடுவோம்ல - வாசிக்கிறவங்க !:wink:

தொடர்சிக்காக காத்திருக்கிறோம் -சாத்திரி அவர்களே! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லா இருக்கு சாத்திரி அண்ணா...தொடர்ந்து வாசிக்கணும் போல இருக்கு.....

கதையின் ஆரம்பமும் அதைச் சொல்ற விதமும் நல்லாயிருக்கு.அடுத்த பகுதியை எழுதுங்கண்ணா.

கதை நன்றாகப் போகின்றது ...யார் அவள் என்பதனை அறிய ஆவலாக இருக்கின்றோம் :arrow:

கதை தொடக்கமே நல்லாயிருக்கு சாத்திரி. அடுத்த பாகத்திற்காக எதிர்பார்த்து இருக்கின்றோம்.

அது சரி கள உறுப்பினார் ஒருவரின் கதை என்கிறீர்கள்.வாசிக்கும்போத

கதை தொடக்கமே நல்லாயிருக்கு சாத்திரி. அடுத்த பாகத்திற்காக எதிர்பார்த்து இருக்கின்றோம்.

அது சரி கள உறுப்பினார் ஒருவரின் கதை என்கிறீர்கள்.வாசிக்கும்போத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 2

அந்த அவள் யாரென்று பலரும் அறிய ஆவலாய் இருக்கிறது விழங்கிது அதனாலை அந்த அவள் எனக்கு கிட்ட வருவதற்கிடையிலை அவள் யாரென்றும் அவளிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றும் உங்களிற்கு சுருக்கமாய் சொல்லிடுறன்.

அவள் பெயர் சுராயா மெக்சிக்கோ நாட்டை சேர்ந்தவள் அவளது தந்தை கியூபா வம்சாவளியை சேர்ந்தவர்.வழமையான லத்தீனோ அமெரிக்க பெண்களிற்கேயுரிய பழுப்பு நிற வழவழப்பான நிறம் நீண்ட சுருட்டையான கரும் கூந்தல் பச்சை கலர் கண்கள் பார்த்தவர்களை இன்னொரு முறை பார்க்க வைக்க தோன்றும் அளகான அழவான உயரமுடைய உடற்தோற்றம் இதுதான் அவள்.

நான் வேலை செய்யுமிடத்தில் ஒருநாள் வந்து தான் ஒரு சட்ட கல்லூரி மாணவி என்று தன்னை அறிமுக படுத்திய அவள் பகுதி நேர வேலை தேடுவதாகவும் அதனால் முதலாளியை பார்க்கவேணடும் என்று அவள் கேட்க நானோ முதலாளியை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை உனது விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கத்தை தந்துவிட்டு போ தேவைப்படின் தொடர்பு கொள்கிறேன் என்று அவளது விபரங்களை வாங்கி வைத்து விட்டு அனுப்பி விட்டேன்.

இரு வாரங்களின் பின்னர் எனக்கு வேலைசெய்யுமிடத்தில் ஒரு பணியாளர் (சேர்வர்) தேவைப்படவே சிலரது விரங்களை எடுத்து பார்த்த நான் அதில் சுராயாவின் விபரத்தை படித்த எனக்கு அவள் ஏற்கனவே வேறு உணவு விடுதிகள் மற்றும் மது சாலைகளில் வேவை செய்த அனுபவங்கள் பிரெஞ்சு ஸ்பானிஸ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேச தெரியும் என்றும் அதைவிட சல்சா நடனம் தெரியும் என்று இருந்ததை பார்த்து அதைவிட அவள் மாணவி என்ற படியால் அவளை அழைத்தால் அவளது படிப்பு செலவிற்கும் உதவியது மாதிரி இருக்கும் என நினைத்து அவளது விபரத்தில் இருந்த அவளது இலக்கத்திற்கு அழைத்து அவளிற்கு வேறு வேலை எதுவும் அதுவரை கிடைக்கவில்லை என்பதை அறிந்து அவளை அன்று வேவைக்கு வரும்படி அழைத்திருந்தேன்.

அவளும் அன்று வந்து வேலையை தொடங்கினாள். அங்கு வேலை செய்த மற்றைய பெண்களை விட அவள் எப்போதும் குறும்பாகவும் கலகலப்பாகவும் இருப்பாள். அதைவிட எங்கள் கடையில் ஒரு இசை குழுவினர் இசையை நேரடியாக வழங்கி கொண்டிருப்பார்கள் சுராயாவும் இடையிடையே சல்சா நடனத்தை ஆடியபடியே வேலையை செய்வாள்.

(சல்சா நடனம் என்பது இந்தியர் மற்றும் எமக்கு பரத நாட்டியம் போல கியூப நாட்டவர்களிற்கு சல்சா நடனம் என்பது தேசிய நடனம் ) சல்சா நடனத்தின் அங்க அசைவுகள் மிகவும் அற்புதமாக இருக்கும் சிலர் ஆடும்போது இறப்பரில் செய்த உடம்பா என சந்தேகம் வரும் . அதுவும் சுராயா போன்ற ஒரு அளகும் இளமையும் நிறைந்த பெண் ஆடினால் கேட்கவும் வேண்டுமா??அவளது நடனத்தை பார்த்து அடித்த மது போதை எல்லாம் இறங்கி மீண்டும் மீண்டும் தங்கள் கிண்ணங்களில் மதுவை நிரப்பி குடித்து விட்டு நடக்க முடியாமல் விழுந்த ஆண்களை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வரும்.

பின்னர் அவள் கையாலேயே மது வாங்கி குடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் ஜொள்ளர்களும் இருக்கதான் செய்தனர். அவள் நடனமாடும் போது அவளை நோக்கி சில்லறைகளை யும் சிலர்வீசுவார்கள் அவளது வேலை காலமான இரு வாரங்கள் முடிந்த பின்னரும் நான் அவளது வேலை மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் தன்மையையும் பார்த்து அவளிற்கு தொடர்ச்சியாக வேலை செய்யகூடியமாதிரி ஒழுங்குகள் செய்து கொடுத்தேன்.

அதன் காரணமாக அவளும் என்னுடன் நல்லபடியாக மற்றவர்ளை விட ஒரு படி அதிகமாகவே என்னுடன் உரிமை எடுத்து பழகுவாள்.அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது பகல் வேளைகளில் தொலை பேசி அடிப்பாள் எங்காவது வெளியில் போய் உணவருந்துவேம். இப்படியாக இரு மாதங்கள் போயிருக்கும் ஒருநாள் அதிகாலை வேளை நான் எனது மோட்டர் சைக்கிளில் வேலையால் திரும்பி கொண்டிருக்கும் போது மழையும் பெய்து கொண்டிருந்ததால் ஒரு விபத்துக்குள்ளாகி காலில் ஒரு சத்திர சிகிச்சை (ஒப்பிறேசன்)வைத்தியசாலையில் ஒரு வாரங்கள் இருக்கவேண்டி வந்து விட்டது.

அந்த செய்தி அறிந்து முதலில் என்னை பார்க்க வந்தவர்கள் எனது நண்பன் ஆனந்தனும் சுராயாவும்தான்.பின்னரும் ஒவ்வொரு நாளும் மாலையும் கையில் ஒரு மலர் கொத்துடன் வந்து என்னுடன் அரை மணி நேரமாவது இருந்த கதைத்து விட்டுத்தான் போவாள்.வைத்திய சாலையில் எனது அறையில் இன்னொருவன் கை முறிந்து சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்தான்.அவன் என்னை பார்த்து கேட்டான் யாரவள் உனது காதலியா என்றான்.

நானோ இல்லை எனது நண்பி என்றேன். அவனும் அளகான நண்பி உனக்கு என்று சொல்லி பெருமூச்சு விட எனக்கு எரிச்சலாக வந்தது.இப்படியே நான் எனது கைத்தடி ஒன்றின் உதவியுடன் நடக்க தொடங்கியிருந்தேன். அன்று நான் வீட்டிற்கு போக வேண்டிய நாள். சுராயா வழைமையை விட அன்று பெரிய ஒரு பூங்கொத்துடன் வந்தவள் என்னிடம் பேசிக்கெண்டிருந்த போது நீ சீக்கிரமாக வேலைக்கு திரும்பு நீ இல்லாதது எனக்கு வேலை செய்யவே பிடிக்கவில்லை

ஏதோ நீயில்லாதது வேலையிடத்தில் ஒரு வெறுமையை உணர்கிறேன் . யோசித்து பார்த்ததில் எனக்கு ஒன்று புரிந்தது நான் உன்னை காதலிக்கிறேன் ம் மிகவும் உன்னை நேசிக்கிறென் எனக்கு தெரியும் நீயும் என்னை விரும்பகிறாய் என்று. என்றவள் திடீரென எனது கன்னத்தில் இச் என்று ஒரு முத்தத்தை இழுத்துவிட்டு அறை கதைவை நோக்கி சென்றவள் பின்னர் போன் பண்ணுகிறேன் என்று கூறி விட்டு கண்ணடித்த கைகாட்டிவிட்டு சென்று விட்டாள்.

அவள் ஈர உதடுகள் தந்த இச்சில் ஒருகணம் தடுமாறி மீண்டும் என்னை சுதாகரித்து எனத கன்னத்தை தடவிய படி அவளுடன் கதைக்க எத்தனிக்க முதலேயே அவள் அங்கிருந்து போய்விட்டாள்.அருகிலிருந்த கட்டில் காரனோ என்னை பாத்து முறியாத மற்ற கையின் கட்டை விரலை உயர்த்தி காட்டி அதிஸ்ர காரன் நீ என்று அவன் பங்கிற்கு வேறு கண்ணடித்தான். எனக்கு எதுவுமே செய்ய தேன்றாது அவள் வைத்த விட்டு போன அந்த மலர் கொத்தையே பார்த்தபடி அமர்ந்து விட்டேன் :wink: :arrow:

எனது இந்த தொடர் ஒவ்வொரு திங்கட்கிழைமையுமே வரும் என்பதனையும் அறிய தருகிறேன்அன்பான உறவுகளே 8)

சாத்ரி எனக்கென்னவோ உது படிக்க படிக்க உமது சொந்தக்கதை மாதிரிக் கிடக்கு.... :lol:

கதை நல்லாத் தான் போகுது.. :wink:

சாத்ரி எனக்கென்னவோ உது படிக்க படிக்க உமது சொந்தக்கதை மாதிரிக் கிடக்கு.... :lol:

கதை நல்லாத் தான் போகுது.. :wink:

ஹீ ஹீ எனக்கும் அப்படித்தான் அண்ணா இருக்கு.

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்தக்கதையின் நாயகனுக்கு திருமணம் என்றியளா.. வாழ்த்துக்கள் அண்ணா..... சுவாரசியமாக இருக்கிறது தொடருங்கள் சாத்திரி.. உண்மை என்று நம்புவோமாக... :wink: :P

ஆகா சாத்திரி சொந்தக்கதை சொல்லி வம்பில் மாட்டுப்பட போகின்றீர்.

எதற்கும் மற்ற தொடரையும் வாசிக்க காத்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்ரி எனக்கென்னவோ உது படிக்க படிக்க உமது சொந்தக்கதை மாதிரிக் கிடக்கு.... :lol:  

கதை  நல்லாத் தான் போகுது.. :wink:

இருக்கும்!! அந்தப் பெண் மெக்சிக்கோ எண்டு போட்டதை இந்தியா என்று போட்டால் சில வேளை சொந்தக் கதை போல வரும்!! :wink: :P

ஆகா சாத்ரி தாத்தா என்ன சொந்தக்கதை எல்லாம் எழுதுறியள் போலிருக்கு. நல்லா எழுதுங்கோ. :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாருக்கும் என்னோடை லொள்ளு கூடிட்டுது :evil: :evil:

புரியாத ஆக்களா இருக்கிறிங்களே சும்மா ஒரு பெண்ணு என்னை பாத்து சிரித்தாலே எனக்கு நித்தரை வாராது

:P :P

அதுவும் சுராயா மாதிரி ஒரு அழகான பெண் என்னை பாத்து i love you டா எண்டு சொன்னா இந்த கதையின் நாயகனை போல சும்மா பாத்துகொண்டா நிப்பன் ஒரு வழி பண்ணியிருக்க மாட்டனா?? :wink: :wink:

என்ன எல்லாருக்கும் என்னோடை லொள்ளு கூடிட்டுது  :evil:  :evil:  

புரியாத ஆக்களா இருக்கிறிங்களே சும்மா ஒரு பெண்ணு என்னை பாத்து சிரித்தாலே எனக்கு நித்தரை வாராது  

:P  :P  

அதுவும் சுராயா மாதிரி ஒரு அழகான பெண் என்னை பாத்து  i love you   டா எண்டு சொன்னா இந்த கதையின் நாயகனை  போல சும்மா பாத்துகொண்டா நிப்பன் ஒரு வழி பண்ணியிருக்க மாட்டனா?? :wink:  :wink:

அதுதானே. இப்படி கதை எழுதிட்டு யாழ் களத்திலா இருப்பியள் என்ன? சுராயாவோடு சேர்ந்து சாராய பாரில் எல்லோ................... :P இருப்பியள். அப்படி தானே தாத்தா.

சாத்திரி அங்கிள் கதை நல்லாயிருக்கு

இது உங்கட சொந்தக கதையில்லையா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.