Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நன்றி- மகேந்திரன் ஆறுமுகம்

thanks-facebook

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

வலியைத் தருகின்ற உண்மை புலவர் . பலகடலோடிகளையும் , தண்டையல்களையும் ஒருகாலத்தில் தன்னகத்தே கொண்டது எமது இனம் . அதே காலம் காலச்சுழற்சியில் மீண்டும் வந்தபொழுது எல்லோரும் சேர்ந்து அமுக்கி எமது இனத்தின் வீரத் தடங்களை " வெற்றிவாகை " என்ற குடையின் கீழ் கொண்டு வந்து , அதே இனத்தால் சுற்றுலாத் தலமாக காட்டும் அலங்கோலங்களும் நடக்கத்தான் செய்கின்றன . நான் தேடிய ஒரு தண்டயலின் வரலாற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.....

அன்னபூரணி தமிழரின் கப்பல்

8b5939712489ca0008657e7b832a930c.jpg

1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையில் இருந்து அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலை கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது.

தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது

ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். “தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.

நன்றி: விக்கிபீடியா இணையம்

http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2

தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.

கி.பி. 300 பல்லவர் கால காசில் கப்பல்

Ship_in_pallavan_coin.gif

http://upload.wikimedia.org/wikipedia/ta/c/c9/Ship_in_pallavan_coin.gif

சங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.

"எங்கோ நடுவில் ஆங்கிலேயர் வருவதற்குச் சற்று முன்பிருந்தே நம் கப்பற்கலை சிறிது சிறிதாக ஒதுக்கப்பட்டு, ஆங்கிலேயரின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் தமது வாணிபம் பொருட்டு எத்துணை அக்கிரமும் செய்வதில் தயங்கவில்லை என்பதை பிறகு வாழ்ந்து மறைந்த வ. உ. சிதம்பரனார் வாழ்க்கையில் இருந்து அறிகின்றோம்" (நரசய்யா, 140).

"1789 இல், கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சாதகமாக கல்கத்தா கெஜட்டில், இந்திய தச்சர்களோ, பணிமனையினரோ, கொல்லரோ, கப்பல்களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" (நரசய்யா, 154)

1906 இல் ஆரம்பிக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் கம்பெனி பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியினதும் அன்றைய காலனித்துவ அரசின் கூட்டுச் சதியினால் அழிவுற்றது. "பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி சுதேசி கம்பெனியைவிடக் குறைவாகக் கட்டணம் விதித்து, துறைமுக அடிவருடி அதிகாரிகளின் தயவால், சுதேசி கம்பெனி கப்பலின் முன்பே சென்று, சிதம்பரம் பிள்ளையின் கப்பலுக்கு வருமானம் இல்லாதவாறு செய்தது." மேலும், "சிதம்பரம் பிள்ளையவர்களை கைது செய்தது" (நரசய்யா, 155).

நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் எழுதிய "நம் நாட்டுக் கப்பற்கலை" என்னும் நூலில் பண்டைய தமிழரின் கப்பற்கலை பற்றிய பல தகவல்கள் உள்ளன.

Valvai_Tamils_Kappal_Paravapathini.JPG

http://upload.wikimedia.org/wikipedia/ta/7/7c/Valvai_Tamils_Kappal_Paravapathini.JPG

1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையில் இருந்து அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலை கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது.

725px-Valvai_Tamils_Kappal_3.JPG

http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/b/be/Valvai_Tamils_Kappal_3.JPG/725px-Valvai_Tamils_Kappal_3.JPG

பண்டைய காலங்களில் தமிழர்களின் கப்பலில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று தற்சமயம் நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டன் அருங்காட்சியகத்தில் "தமிழ்மணி" ஆக உள்ளது.

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.jpg

http://upload.wikimedia.org/wikipedia/ta/3/31/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.jpg

பண்டைக்கால முக்கிய துறைமுகங்கள்

  • கொற்கை - பாண்டியர்களின் துறைமுகம்
  • காவரிப்பூம்பட்டினம் - சோழர்களின் துறைமுகம்
  • வஞ்சி - சேரர்களின் துறைமுகம்
  • மாந்தைத் துறைமுகம்
  • முசிறித் துறைமுகம்
  • பாண்டியர்த் துறைமுகங்கள்

குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு

Portsofpandyantrade.jpg

http://upload.wikimedia.org/wikipedia/ta/9/9f/Portsofpandyantrade.jpg

இக்கால முக்கிய துறைமுகங்கள்

  • திருகோணமலைத் துறைமுகம்
  • சென்னைத் துறைமுகம்
  • தூத்துக்குடித் துறைமுகம்
  • எண்ணூர்த் துறைமுகம்

கப்பல், கடல் கலங்கள் வகைகள்

  • கட்டுமரம்
  • நாவாய்
  • தோணி
  • வத்தை
  • வள்ளம்
  • மிதவை
  • ஓடம்
  • தெப்பம்
  • டிங்கி
  • பட்டுவா
  • வங்கம்
  • அம்பி - பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி.
  • திமில் - பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.

  • லெப்டிணன்ட் வாக்கர் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1811இல் நமது கப்பல்களைக் கண்டு வியந்து பின்வருமாறு கூறினார். 'பிரிட்டிஷ் காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துச் செய்து தீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை."

  • செங்கடல் செலவு குறிப்பிடும் துறைமுகங்கள்
  • 640px-Map_of_the_Periplus_of_the_Erythraean_Sea.jpg
  • http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a5/Map_of_the_Periplus_of_the_Erythraean_Sea.jpg/640px-Map_of_the_Periplus_of_the_Erythraean_Sea.jpg

  • http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88

இப்படியான பதிவுகளை வரவேற்கிறேன். முயற்சிக்கும் பதிவுக்கும் புலவர், கோமகன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இப்படியான பதிவுகள் இன்றைய காலகட்டத்தில் கட்டாயம் தேவை.

இளைய தலைமுறையினர் இதனைப் பயன்படுத்த வழி செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவுக்கு நன்றி புலவர். ஒத்தாசையாக இருந்த கோமனுக்கும் நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பலப்பல

  • கருத்துக்கள உறவுகள்

மேலோட்டமாக வாசிக்க, நல்ல பதிவு போல்... உள்ளது.

நேரம் கிடைக்கும் போது... நிச்சயம் வாசிப்பேன்.

பசுபிக் கடலில் கண்டெடுக்கப்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான கப்பல் பற்றிய மேலதிக தகவல்களை வழங்கக் கூடிய இணைப்புக்கள் ஏதாவது இருக்கின்றனவா?

கட்டுரையில் தகவல் வெறும் மொட்டையாக இருக்கின்றது. எப்பொழுது கண்டுபிடித்தார்கள், யார் கண்டுபிடித்தார்கள் என்று எதுவுமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பசுபிக் கடலில் கண்டெடுக்கப்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான கப்பல் பற்றிய மேலதிக தகவல்களை வழங்கக் கூடிய இணைப்புக்கள் ஏதாவது இருக்கின்றனவா?

கட்டுரையில் தகவல் வெறும் மொட்டையாக இருக்கின்றது. எப்பொழுது கண்டுபிடித்தார்கள், யார் கண்டுபிடித்தார்கள் என்று எதுவுமே இல்லை.

அறுவது வருசத்க்கு முன் இழந்த கந்தளாய், நீர்கொழும்பு, அம்பாறை, மதவாச்சியை.... பற்றிய தகவலே.. கிடைக்காமல், திண்டாடுறம் சபேசா...

2500 வருசம் முன்னர்... புத்தரே... பிறக்கவில்லை. ஏன்... இயேசு கூட.. லேற்றாகத்தான்... பிறந்தார்.

கப்பலை யார் ஓட்டிக் கொண்டு போனார்கள் என்று நான் கேட்கவில்லை. பசுபிக் கடலில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்று கட்டுரை சொல்கின்றது அல்லவா? அந்த நிகழ்வு எத்தனையாம் ஆண்டு நடந்தது என்றுதான் கேட்கிறேன். அந்தக் கப்பலை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு பெயர் இருக்கும் அல்லவா? அவர்களைப் பற்றியும் கேட்கிறேன்.

ஏற்கனவே எம்மிடம் ஒழுங்கான வரலாறு இல்லை. அதைக் குற்றச்சாட்டாக சொல்கின்ற ஒரு கட்டுரை இது போன்ற கண்டுபிடிப்புக்களின் தரவுகளை சரியாக தர வேண்டாமா? வெறுமனே ஆராய்ச்சியாளர்கள் ஒரு கப்பலை பசுபிக் கடலில் கண்டுபிடித்தார்கள் என்று சொன்னால் போதுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள்.

புலவர்,

நான் கேட்பது உங்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். சரி, வேறு சொற்களில் கேட்கிறேன்.

இப்படி ஒரு கப்பல் பசுபிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? நான் இப்படி ஒரு கப்பலையே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்கிறேன். இந்தக் கட்டுரை சும்மா புலுடா விடுகிறது என்று சொல்கிறேன்.

இப்பொழுது இதற்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்? இந்தக் கப்பலைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அதுபற்றி எங்காவது எழுதி வைத்திருப்பார்கள் அல்லவா? அது குறித்த தகவலை தர முடியுமா?

சபேசன் உங்கள் கருத்தும் தட்டமுடியாததே . நானும் எனது பங்கிற்கு தேடிக்கொண்டு இருக்கின்றேன் . கிடைத்தால் நிச்சயம் இணைக்கின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்கள் கேள்வி நியாமானதுதான். இது ஒரு கட்டுரை.இந்தக் கட்டுரை பல தேடல்களுக்கும் புதிய கண்டு பிடிப்புக்களுக்கும் வழிஜகாட்டும் என்று நினைக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி புலவர் அண்ணா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.