Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திலையும் தான் ஆயுதத்தோட தாங்கிளோட நிண்டான் ஏன் சுட்டான் அதுக்காக மக்கள் முடங்கியா இருந்தார்கள்?

  • Replies 167
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்ஜி.. மக்கள் ஏற்கனவே ஒருதரம் அடிவாங்கினவை.. ஒன்றுக்கு இரண்டுதரம் யோசிப்பார்கள்..! எகிப்தில் அப்படியல்ல.. ஒரே இனத்துக்குள் பிளவு.. தைரியம் அதிகம் இருக்கும்..

சீனாவில் தியனமென் சதுக்கத்தில் இன்னொரு கிளர்ச்சி நடக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அன்று அவர்கள் போராடாவிட்டாலும் இன்று அவர்கள் வீடுவரை பிரச்சனைகள் வந்து நிற்கின்றன. சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் பலத்த இராணுவ புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் மத்தியில் சில அரசியல்வாதிகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். அதை ஒரு மக்கள் போராட்ட ஆரம்பமாக பார்க்கலாம். ஆனால் எமது மக்கள் போராட்டம் இரண்டு - மூன்று இலட்சம் ஆக்கிரமிப்பு இராணுவம் மத்தியில் சாத்தியமாக பலமான பின்புலம் தேவை. அதற்கு மேற்குலக / இந்திய ஆதரவு தேவை. [/size]

உண்மைதான் அகூதா, அதற்க்கான பொறுப்பு புலம்பெயந்த எங்கள் கைகளிலையே உண்டு அந்த வாப்பை தாயகத்தில் இருப்பவர்கள் உருவாக்க முடியாது அதை நாம்தான் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் உருவாக்கவேண்டும். இந்தியாவை கொண்டுவரும் முயற்ச்சி கூட்டமைப்பின் கையில்தான் உள்ளது அதனை அவர்கள் கருத்தில் கொண்டு நகர்வுகளை நகர்த்தவேண்டும் இதெல்லாம் ஒன்று சேர நடக்கும் போது அந்த இறுதி இலட்சியம் நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரபுலக எழுச்சிக்கு காரணமே மக்கள் போராட்டம் தானே அவனுக்கு சுகந்திரம் தேவை பட்டிச்சு பொறுத்தது போதும் எண்டு பொங்கி எழுந்தான் இனைக்கு யாழ் பாணத்தில ஒரு ஆர்பாட்டம் வைச்சா ஒரு 50 பேர் தான் வாறான் வர சொன்ன வீட்ட இருந்து புட்டும் பிலா சுளையும் சாப்பிட்டு இருக்காணுங்க

மல்லையூரான்,

மன்னிக்க வேண்டும். நீங்கள் வேறு வேறு விவாதங்களில் வேறு வேறு காரணங்களின் அடிப்படையில் நான் முன்வைக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு, நான் எழுதுகின்ற அனைத்து இடங்களிலும் எல்லாவற்றையும் கலந்தடித்து பதில் எழுதுவதனால், உங்களுடைய கருத்துக்கள் பதில் அளிப்பதற்கான தரத்தை இழக்கின்றன.

வருந்தத்தக்க வகையில் என்னோடு விவாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாது, என்னை தாக்க வேண்டும் என்கின்ற நோக்கமே உங்களின் என் மீதான அனைத்துக் கருத்துக்களிலும் தென்படுகின்றன.

நீங்கள் ஆவேசமாக எழுதுவதாலோ என்னவோ தெரியவில்லை, நீங்கள் எழுதுவதை இரண்டு மூன்று தடவை படித்து, தேவையான இடங்களில் "கொம" போன்ற அடையாளங்களைப் போட்டு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மனதில் வெறுப்பினை தவிர்த்து ஒரு கள உறவுடன் கருத்தாடுகிறேன் என்ற சிந்தனையோடு உரையாடுங்கள். நல்ல முறையில் விவாதிப்போம்.

எதையாவது எழுதி எழிதி ஒடி விட்டு இடை இடை வெளிப்படாமல் ஒவ்வொன்றாக விவாதிப்போம்.

முதலாவதை எடுப்போம்.

பலஸ்தீனிய போராட்டமும், தமிழ் மக்கள் போராடமும் சமன் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். நான் சமன் இல்லை என்று எழுதியிருக்கிறேன். அதற்கு பதில் அளியுங்கள்.

இரண்டாவது

தமிழ் அரசுக்கட்சி தொடங்கப்பட்டது கிழக்கில் நடைபெறும் குடியேற்றங்கள் போன்றே இரண்டு மாகாணங்களிலும் தொடரும் என்பதால் மாகணங்களை பாதுகாக்கவே. அதுதான் இன்றைய நிலைக்கு இட்டு வந்திருக்கு. அதாவது செல்வா சொன்ன சிங்கள் அரசாங்கத்திடமிருந்து தமிழரை கடவுள் தன்னும் காக்க முடியாது என்பது சரி. அரசு முழு பலத்துடனும் வடக்கு, கிழக்கை பௌத்த சிங்களமாக்குகிறது. கக்கீம் கிழக்கு தேர்தலில் புத்தச் பிக்குகளை சாட்டி குத்துக்கறணம் போட்டதும் இதனால். இது எப்படி 100 ஆண்டுகளின் தமிழ் ஈழமாக் போகிறதென்பதை கேள்விகளுக்கு இடமில்லாமல் விவரிக்க வேண்டும். எழுதுவதை மொக்கையாக எழுதுவது இருட்டடி போன்று தாக்குதலின் ஒரு வகை. அதை நான் திருப்பி தாக்குவேன்.

பதில் எழுத முடியாமையை எந்த வகையில் போட்டாலும் அது பதில் இல்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இது முழுமையான உண்மை அல்ல. மக்கள் இன்றும் போராட தயாராக உள்ளார்கள், ஆயுதம் ஏந்தி அல்ல.

[size=4]ஆனால், அங்கு அவர்களை சுற்றி உள்ள கெடுபிடிகள், சரியான தலைமை இல்லாமை என்பன முக்கிய காரணிகள். [/size]

தலைமை இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கைக்க இறுதி யுத்தம் நடக்கும் பொது எவனும் வீதில இறங்கல சோ தலைமை இல்லைன்னு சொல்ல முடியா எல்லாம் திருட்டு பசங்க

[size=4]இலங்கையில் இன்று மக்கள் போராட்டம் என்பது ஒன்றில் மகிந்த ஆட்சிக்கு எதிரான போராட்டம், அதை நடாத்துவது பெரும்பாலும் சிங்கள மக்கள். அதுவும் கூட அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்தாலே சாத்தியம் (அண்மையில் நடந்த கல்விக்கான ஆர்ப்பாட்டம் போன்றது ).

தமிழர்கள் நடாத்தும் போராட்டங்கள் சிங்கள நாட்டிற்கு எதிரான போராட்டமாகவே இன்றும் பெரும்பான்மை சிங்களவர்களால் பார்க்கப்படுகின்றது. அதில் மாற்றம் வருவது என்பது கடினம், காரணம் பௌத்த பேரினவாதம். வவுனியாவில், கிளிநொச்சியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்யும்பொழுதும் பெரும்பாலும் முதியவர்களும் அரசியல்வாதிகளுமே காணப்படுவார்கள். இளையவர்கள் ... லலித் / குகன் கடத்தப்பட்ட செய்தி உட்பட்ட அச்சுறுத்தல்கள் தண்டிக்கபடாதவரை யார் தான் முன்னுக்கு வருவார்கள்? [/size]

புலிகள் இருக்கைக்க இறுதி யுத்தம் நடக்கும் பொது எவனும் வீதில இறங்கல சோ தலைமை இல்லைன்னு சொல்ல முடியா எல்லாம் திருட்டு பசங்க

[size=4]முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்கள் போன்று அவர்களும் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? [/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருக்கைக்க இறுதி யுத்தம் நடக்கும் பொது எவனும் வீதில இறங்கல சோ தலைமை இல்லைன்னு சொல்ல முடியா எல்லாம் திருட்டு பசங்க

இப்போது அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் முன்பு புலிகளின் தலையில் எல்லாத்தையும் போட்டுவிட்டு தாங்கள் சுயநலமாக தங்கள் வாழ்க்கையை மட்டும் கவனத்தில் கொண்டு வாழ்ந்தார்கள், இப்போது போராடவிடின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலை வந்ததினால் போராட வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளான். இப்போது அவனுக்கு வழிநடத்த நல்ல தலைமை இல்லை அதனால் தடுமாறிபோய் இருக்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகள் இல்லாம சுதந்திரம் வேணும் எண்டா ரொம்ப கஷ்டம். இணக்க அரசியல் தான் சரி எது வசதி?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

நாடு கடந்த அரசு மேல் நீங்கள் எத்தனைபேர் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்?

அவர்கள் தமிழீழத்தை விட்டுக்கொடுக்கின்றோம்

தமிழருக்கு ஒரு தீர்வை முன் வையுங்கள் என்ற நிலை எடுத்தால் அவர்கள் மீதான தங்கள் நம்பிக்கை எவ்வாறு அமையும்?

இந்த திரி இதே ஒழுங்கில் அதன் பின்னரும் தொடருமா?

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகள் இல்லாம சுதந்திரம் வேணும் எண்டா ரொம்ப கஷ்டம். இணக்க அரசியல் தான் சரி எது வசதி?

[size=4]அது எப்படி சாத்தியமாகும் !, இணக்க அரசியலுக்காகவா 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம் ??????[/size]

முதலில்

நாடு கடந்த அரசு மேல் நீங்கள் எத்தனைபேர் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்?

அவர்கள் தமிழீழத்தை விட்டுக்கொடுக்கின்றோம்

தமிழருக்கு ஒரு தீர்வை முன் வையுங்கள் என்ற நிலை எடுத்தால் அவர்கள் மீதான தங்கள் நம்பிக்கை எவ்வாறு அமையும்?

இந்த திரி இதே ஒழுங்கில் அதன் பின்னரும் தொடருமா?

[size=4]எனது ஆதரவு அப்படி ஒரு நகர்விற்கு இருக்கும்.

காரணம் அதன் மூலம் சிங்கள உண்மைமுகம் மீண்டும் வெளியில் தெரியப்படுத்தப்படும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படித்தவர்கள் நாளும் தெரிந்தவர்கள் பல இழப்புகளை சந்தித்தவர்கள் அந்த அமைப்பிலே இருக்கின்றார்கள் அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் கரெக்டா இருக்கும் புலிகளுக்கு அடுத்ததா நான் நம்புறது இவையல தான் சோ என்னூட ஆதரவ முழுசா தெரிவிக்கிறான்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அது எப்படி சாத்தியமாகும் !, இணக்க அரசியலுக்காகவா 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம் ??????[/size]

இன்னும் ஒரு 40000 பேர் போராட தேவை ஒருத்தன் கூட வரமாட்டான் சோ வேற வழி? ஒற்றுமையா நாடு கடந்த அரசின் பின்னால் அணிதிரள்வோம் படித்தவர்கள் பல பண்பாளர்களை கொண்ட அணி அது சோ நாங்கள் தான் அத பலப்படுதணும்

தமிழர்களுக்கு ஒரு குறுகியகாலத் தீர்வாக மாகாணசபையை ஏற்றுக் கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை தந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

மேலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு இடையில் நட்பும் புரிந்துணர்வும் கட்டி எழுப்பப்பட்டு, வேற்றுமையும் இனவாதமும் இல்லாது ஒழிக்கப்படும் இடத்தில் தமிழீழம் பற்றிய கோரிக்கையை கைவிடுவதற்கும் நான் தயராக இருக்கிறேன்.

மற்றது மக்கள் போராட்டம் பற்றியது,

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் சமன் என்று நான் சொல்லவில்லை. இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கின்றன. ஆனால் அங்கே நடக்கின்ற மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டினேன்.

அவசரமான ஒரு சந்திப்பு இருக்கிறது. சில மணித்தியாலங்கள் கழித்து தொடர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையா நாடு கடந்த அரசின் பின்னால் அணிதிரள்வோம் படித்தவர்கள் பல பண்பாளர்களை கொண்ட அணி அது சோ நாங்கள் தான் அத பலப்படுதணும்

ஆமாம். இலட்சிய தீ வளர்த்து அதில் யாகம் செய்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒரு குறுகியகாலத் தீர்வாக மாகாணசபையை ஏற்றுக் கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை தந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

மேலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு இடையில் நட்பும் புரிந்துணர்வும் கட்டி எழுப்பப்பட்டு, வேற்றுமையும் இனவாதமும் இல்லாது ஒழிக்கப்படும் இடத்தில் தமிழீழம் பற்றிய கோரிக்கையை கைவிடுவதற்கும் நான் தயராக இருக்கிறேன்.

மற்றது மக்கள் போராட்டம் பற்றியது,

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் சமன் என்று நான் சொல்லவில்லை. இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கின்றன. ஆனால் அங்கே நடக்கின்ற மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டினேன்.

அவசரமான ஒரு சந்திப்பு இருக்கிறது. சில மணித்தியாலங்கள் கழித்து தொடர்கிறேன்.

சூப்பர் சூப்பர்

ஆமாம். இலட்சிய தீ வளர்த்து அதில் யாகம் செய்வோம்!

என்ன செய்யா அண்ணா உங்களை மாதிரி கம்யூனிஸ்ட் கொள்கை உடையவர்களுக்கு பிடிக்காது தான் பட் சனம் கோயில் குளம் எண்டா தான் வருதுகள் :D

தமிழர்களுக்கு ஒரு குறுகியகாலத் தீர்வாக மாகாணசபையை ஏற்றுக் கொள்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை தந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

மேலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு இடையில் நட்பும் புரிந்துணர்வும் கட்டி எழுப்பப்பட்டு, வேற்றுமையும் இனவாதமும் இல்லாது ஒழிக்கப்படும் இடத்தில் தமிழீழம் பற்றிய கோரிக்கையை கைவிடுவதற்கும் நான் தயராக இருக்கிறேன்.

மற்றது மக்கள் போராட்டம் பற்றியது,

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் சமன் என்று நான் சொல்லவில்லை. இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கின்றன. ஆனால் அங்கே நடக்கின்ற மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டினேன்.

அவசரமான ஒரு சந்திப்பு இருக்கிறது. சில மணித்தியாலங்கள் கழித்து தொடர்கிறேன்.

இந்த திரியில் மாகாண சபை தீர்வாகவும், அதில் இப்போது இல்லாத காணி, காவல்த்துறை சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கு. மாகாண சபை, காவல், காணி, என்ற பதங்கள் இங்கே பாவிக்கபட்ட வகையும், கூட்டமைப்பின் குற்றச்சாட்டுதலான வடக்கு-கிழக்கு பிரிப்பு இங்கே பேசப்படாமையும் இங்கே கூறப்படும் மகாண சபைக்கும், 13ம் திருத்ததிற்கும் தொடர்பு கிடையாது. அதாவது 13ம் திருத்ததை அமூல் படுத்த வேண்டும் என்பதல்ல இங்கே கருத்து. அகவே இந்தியாவிடம் 13+ கேட்கும் கருத்து இதனுடன் தொடர்புடையதல்ல. இனி இந்த மாகாண சபை என்பது என்ன என்ற விவாதத்திற்குள் நாம் போக முட்யாது ஏன் எனில் இந்த மொக்கையை எழுதும் போது இது குறுகியகால தீர்வாக மூடி போடப்பட்டிருக்கு. "குறுகிய காலம்" என்றால் குறுகிய காலம்தான் என்பது போல இதை விளங்கிக் கொள்ள வேண்டியது வாசகர்களின் கடமை என விடப்பட்டிருக்கு. நிரந்தரத் தீர்வு 100 ஆண்களின் பின்னர் வரும் என்று இன்னொரு இடத்தில் குறிக்கப்பட்டிருக்கு.(ஆனால் UNSCO தமிழ் மொழிக்கே 50 ஆண்டுதான் வாழ்கை கொடுப்பார்களாம்)

"நாங்கள் 100 ஆண்டுகளின் பின் மலரும் தமிழ் ஈழத்தை எங்கள் அடுத்த குறுகிய தெரிவாக பிரேரிக்கிறோம். மேலும் நாங்கள் இப்போது எல்லா கோரிக்கைகளையும் கைவிட்டு விட்டு இப்போது 100 ஆண்டுகளுக்கு காணிகளையும், மக்களையும் பாதுகாக்க போகிறோம். இதில் [size=4]மேலும் சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு இடையில் நட்பும் புரிந்துணர்வும் கட்டி எழுப்பப்பட்டு, வேற்றுமையும் இனவாதமும் இல்லாது ஒழிக்கப்படும் இடத்தில் தமிழீழம் பற்றிய கோரிக்கையை கைவிடுவதற்கும் நாம் தயராக இருக்கிறேம். ஆனால் இந்த குறுகிய காலம் நடந்து கொண்டிருக்கும் போது மெனின் பாம் மக்கள் காடுகளுக்குள் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.. கக்கீம் அரசின் புதிய பதவியை பெற ஐ.நா அமர்வுகளுக்கு அமெரிக்கா சென்றுவிட்டார்".[/size]

ஆனால் எதற்கு குறுகிய தீர்வு என்றும் இதில் கூறப்பட்டிருக்கும் மாகாண சபையை யார் தருவார்கள் என்றும், அதை பெற்றுகொள்ளும் வழிகள் என்ன என்றும் ஒருமணித்தியாலத்தின் பின் எழுதினால் போதும். அதே மாதிரி 100 ஆண்டுகளில் மலரவிருக்கும் தமிழ் ஈழம் பற்றி 99 ஆண்டுகளின் பின்னால் தன்னும் எழுதி முடிக்க வேண்டும். இல்லையேல் எழுதி எழுதி விட்டு ஒடும் போது என்னிடம் இருந்து பதில்களை எதிர்பார்க்கலாம்.

நான் இதை இந்த இடத்தில் விட்டு விடுகிறேன். 100 ஆண்டுகளில் மலவிருக்கும் தமிழ் ஈழம் பற்றி எழுதியபின் இதை விரிவாக பார்க்கலாம். இதில் நிறைய கதைக்க இருக்கு.

மக்கள் போராட்டத்திற்கு வருவோம்:

[size=4]மற்றது மக்கள் போராட்டம் பற்றியது,[/size]

[size=4]பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும் சமன் என்று நான் சொல்லவில்லை. இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கின்றன. ஆனால் அங்கே நடக்கின்ற மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டினேன்.[/size]

இங்கே உள்ளப்படையாக சொல்லிருப்பது "நான் ஒரு பிழை விட்டுவிட்டேன். அதற்கு என்ன இப்ப எனபதுதான்."

ஆனால் நாங்கள் வசனங்களின் வெளிப்படை கருத்துகளை மட்டும் கவனித்தால் போதும்.

இங்கே சொல்லியிருப்பதுபோல் எதுவும் இலகுவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கவில்லை. அந்த முழுக்கருத்திலும் தெளிவாக வைக்கபட்ட பிரதான பொருள் தமிழ்மக்கள் பலஸ்தீனியர்மாதிரி போராடமாட்டார்கள், ஏன் எனில்இவர்கள் பணத்திமிர் பிடித்தவர்கள் என்று பொருள் பட எழுதபட்டிருந்தது. மிக மிக ஆழமாக பலஸ்தீனியருடன் சமன் செய்யப்பட்டு இறுக்கமாக இடித்துரைக்கப்பட்டிருந்தது. அங்கு சிறுவரும்(பெண்களும்) துணிச்சலுடன் கல்லெறிவதை கலையார்வமாக நாட பாணியில் எழுதப்பட்டிருந்தது.

இராணுவ அச்சுறத்தல் என்று எல்லாம் பேசாதீர்கள். பாலஸ்தீனத்திலும் இராணுவ அச்சுறுத்தல் இருக்கின்றது. ஆனால் பெரியவரில் இருந்து சிறியவர் வரை கற்களைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு இறங்கி விடுவார்கள். அதை உலகமும் மக்கள் போராட்டம் என்றுதான் சொல்கின்றது.
அது மட்டுமல்ல பலஸ்தீனிய- தமிழ் ஈழப் போராடத்தில் இருந்த மிகப்பெரிய பேதமான தமிழ் மக்கள் பகுதிக்குள் இருக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கை கணிக்கப்படத்தக்கதாக இங்கே காட்டப்படக் கூடாது என்று முன் எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கு. இதன் பின் அதை இலகுவாக சுட்டிக்காட்டியதாயின் நாம் அடுத்த கட்டத்திற்கு போகலாம்.

இப்போது பழைய மொக்கைக்கு ஒருவசனம் கூட்ட நேர்ந்திருக்கு. யானால் இங்கே மனநிலையில் மற்றம் இல்லை.

இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கின்றன."

அதாவது "வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது, தமிழர் கொஞ்சம் கறுப்பு, அவர்கள் கொஞ்சம் வெள்ளை, அவர்களுக்கு சுருள் தலை மயிர். நமக்கு அப்படி இல்லை. இதில் எல்லாம் போராடத்திற்கு தேவையான பேதம் இருக்க என்று கேட்கிறார்?"

உண்மையான பேதங்களை வெளிப்படையாக போட்டு விவாதிக்க தயாரில்லை. அல்லது விட்ட பிழையை பூசி மெழுக இந்த புதிய வசனம் இணைக்கப் பட்டிருக்கு.

அதற்கு நான் போன கருதிலேயே பதில் அளித்துவிட்டேன்.

[size=4]"பலஸ்தீன் என்று பெயர் தெரிந்த சிறுவர் வரைக்கும் இப்படி மட்டரகமாக எழுதமாட்டார்கள். ஐ.நா வரையிலும் ஏற்கப்பட்டிருக்கும் பலஸ்தீன் தமக்கு என்ன நெத்தினியாகு என்ன செய்கிறார் என்பதை ஐ.நா.வில் வந்து கூறிவிட்டு போகிறார்கள். இங்கு சொல்லும் போராடத்தை ஆரம்பித்து வைத்த அரபாத் நோபல் பரிசு வாங்கத்தக்க சமாதன வாதியாக உலகம் கருதுகிறது. சம்பந்தர் ஐ.நா பிரேரணைக்கு போக்கக் கூடாது; ஏன் எனில் அவரை பயங்கரவாத இயக்கமான புலிகளின் அடையாளமாக உலகம் காண்கிறது என்று யாழில் செயபாலன் விவாதித்த போது அதற்கு யாழில் ஆதரவு அழித்தவர்கள் பலர் யாழில் இருக்கிறார்கள். அவ்வளவு பயங்கரமாகத்தான் தமிழர்கள் கருதப்பட்டார்கள். இதை செய்பவர்கள் கதிர்காமர் போன்ற துரோகிகளே". [/size]

அதாவது யாரும் பலஸ்தீன்- தமிழ் ஈழ போராடத்தை பார்த்து தமிழர்கள் அப்படி போராடவில்லை என்பது அரசியலில் அரிவரி பிள்ளை விடாத தவறு.

[size=4] [/size]

ஆமாம். இலட்சிய தீ வளர்த்து அதில் யாகம் செய்வோம்!

அரிச்சுனனிற்கு மரத்திலிருந்த குருவியில் கழுத்து மட்டும் தெரிந்ததாம். மற்றயவை அவன் கண்ணில் படவில்லை.

கிருபன் அண்ணை இலக்கு வைப்பதில் அரிச்சுனனிற்கு இணையான ஒரு வீரன்.

சபேசன் சொல்வதைத்தான் சம்பந்தர் முதலானோர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மகிந்த தான் இருக்கும் வரை இந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட முடியாது என்று சொல்லி விட்டார். சம்பந்தர் இந்தியாவிடம் போய் முறையிட்டுக் கொண்டு இருக்கிறார்.

சபேசன் நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

நான் சொல்கிறேன் இது எதுவும் எதனையும் தரப் போவதில்லை. சம்பந்தர் இரந்து கொண்டு இருக்கட்டும், மயில் இறகைப் போடப் போவதில்லை.இது எமக்கு வரலாறு கற்றுத் தந்த பாடம்.

எமது போராட்டம் எமக்கு இழைக்கப்பட்ட அனீதியை உலகெங்கும் நீயாயம் கேட்கும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது.எமது மக்களுக்கு சர்வதேச புவிசார் நலங்களின் பொருட்டு இழைக்கப்பட்ட அனீதிக்கான நீயாயம் வழங்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை இதனை ஒட்டியதே புலத்தில் எமது போராட்டம்.இதனைத் தான் நாடு கடந்த அரசு செய்ய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதனைத் தான் மக்கள் திரள் அமைப்புக்கள் செய்யது கொண்டு இருக்கின்றன.இதில் தமீழத்தைக் கைவிடுபவர்கள் விடலாம்.ஆனால் மக்கள் திரள் அமைப்புக்கள் ஒட்டு மொத்த மக்களின் விருப்பின் படியே இயங்க முடியும்.

சபேசன் உங்களின் போராட்ட வழி முறை என்ன ? செயற்பாடு என்ன? நீங்கள் இப்போது எவருடன் செயற்படுகிறீர்கள் என்பதைத் தெளிவாக எழுதவும்.அதனை வைத்தே நாம் விவாதிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் யாழ் பானம் இருந்தபோதும் ஒரு முறை எல்லா கோவில்களிலும் ஒரு பூஜை நடத்தப்பட்டது சரியா யாபகம் இல்லை அப்ப சுண்டல் சரியான சின்ன பையன் ஆனா கோவில்ல தந்த அந்த பென்னாம் பெரிய மோதகம் மட்டும் இன்றும் யாபகம் இருக்கு 80 களின் பிற்பகுதியா இருக்கலாம் அல்லது 90 களின் தொடக்கமா இருக்கலாம் ஆடுற மாட்ட ஆடி கரக்கனுமாம் பாடுற மாட்ட பாடிக்கரகனுமாம் இந்த வழி முறையில் ஒரு 1000 மக்களை திரட்ட முடியும் எண்டா திரட்டுரதில தப்பே இல்லை எண்டுறன்.....

இப்போ ஒருத்தன் சைக்கிள் ஆழ விழுந்திட்டான் ஓடி வாங்க தூக்கி விடுவம் ஏன்டா ஒரு payal வரமாட்டான் இதுவே பிள்ளையார் பால் குடிக்கிறார் எண்டா சமைசிகிட்டு இருக்கிற ஆன்டி மாறும் அத அப்பிடியே விட்டிட்டு ஓடி வருவினம் நம்ம மக்கள் அந்த மாதிரி :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுற மாட்ட ஆடி கரக்கனுமாம் பாடுற மாட்ட பாடிக்கரகனுமாம் இந்த வழி முறையில் ஒரு 1000 மக்களை திரட்ட முடியும் எண்டா திரட்டுரதில தப்பே இல்லை எண்டுறன்.....

இந்தியாவில் தேர்தல் சமயத்தில் மக்களை லாரி லாரியாக ஏற்றிக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்வதுதான் நினைவுக்கு வந்தது சுண்டல்.

நான் ஒரு அலுவலாகப் போய்விட்டு வருவதற்குள் அவசரப்பட்டு மல்லையன் நிறைய எழுதிவிட்டார்.

பாலஸ்தீனத்தின மக்களை அடக்கி ஒடுக்குபவர்கள் சிங்கள அரசுக்கும் எமது மக்களை எப்படி அடக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார்கள். சிங்கள அரசு எம்மீது பயன்படுத்துபவை இஸ்ரேலியர்கள் சொல்லிக் கொடுத்ததையே.

ஆனால் அந்த மக்கள் ரப்பர் குண்டுகள் என்னும் பெயரில் வரும் நியக் குண்டுகளை எதிர்த்து கற்களோடு நின்றார்கள். அவர்களின் விடுதலை இயக்கம் வீதியில் இறங்கு என்று சொன்னவுடன் அவர்கள் இறங்கி நிற்கின்றார்கள்.

ஆனால் ஈழத்தில் என்ன நடந்தது. விடுதலைப் புலிகள் போரடினார்கள். நாம் பார்வையாளர்களாக இருந்து கொண்டு வெற்றி பெறும் போது கைதட்டினோம். தோல்வியுற்ற போது திட்டித் தீர்த்தோம். நாட்டை விட்டு ஓடினோம். எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கூட இயக்கத்தை மீறி ஓடினோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணை இலக்கு வைப்பதில் அரிச்சுனனிற்கு இணையான ஒரு வீரன்.

இலக்கு ஒன்றும் வைப்பதில்லை.. நல்லவற்றை விரும்புவர்களுக்கு நல்லவையே புலப்படும்.. யாகமும் நல்ல விடயம்தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.