Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழில் எழுத்துப் பிழைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப்பிழையோடு எழுதுவதற்கும் கொச்சைத் தமிழில் எழுதுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. ஒரு நூல் எழுதினாலே, அதில் பல தடவைகள் எழுத்துப்பிழைகளைச் சரி செய்வார்கள். எழுத்துப்பிழை என்பது தெரியாமல், நடக்கின்ற தவறுமாகும்...ஆனால் கொச்சைத் தமிழில் ஆக்கங்கள் எழுதப்படுதல் என்பது வேண்டுமென்றே செய்கின்ற தவறு... அது ஒரு காலத்தில் எம் மொழியை அழிக்கக்கூடிய பயங்கரமான விடயம். இல்லை என்பதை, "இல்ல" என்று எழுதிக் கொண்டிருந்தோமானால், நாளடைவில் இல்லை என்ற சொல் இல்லாது போய்விடும். இது தான் நான் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ள விடயம்..

நண்பர். திரு உடையார் அவர்கள் நான் எழுதிய எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டி, அதற்கு புத்திமதி கூறியிருந்தார். மிக்க நன்றிகள், அதற்குத் தெரிவிக்கும் அதே வேளை, நான் சொல்கின்ற விடயம், நான் செய்கின்ற தவறோ, வேறு யாராவது செய்கின்ற தவறோ பாதிக்கப் போவது எம் மொழியைத் தான். ஏதோ என்னைத் திட்டுவதால் பெருமிதம் அடைவீர்கள் எனில், அதற்குச் சந்தர்ப்பங்களை வழங்கத் தயாராகவே உள்ளேன்.

Edited by தூயவன்

எழுத்துப்பிழையோடு எழுதுவதற்கும் கொச்சைத் தமிழில் எழுதுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. ஒரு நூல் எழுதினாலே, அதில் பல தடவைகள் எழுத்துப்பிழைகளைச் சரி செய்வார்கள். எழுத்துப்பிழை என்பது தெரியாமல், நடக்கின்ற தவறுமாகும்...ஆனால் கொச்சைத் தமிழில் ஆக்கங்கள் எழுதப்படுதல் என்பது வேண்டுமென்றே செய்கின்ற தவறு... அது ஒரு காலத்தில் எம் மொழியை அழிக்கக்கூடிய பயங்கரமான விடயம். இல்லை என்பதை, "இல்ல" என்று எழுதிக் கொண்டிருந்தோமானால், நாளடைவில் இல்லை என்ற சொல் இல்லாது போய்விடும். இது தான் நான் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ள விடயம்..

இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். :rolleyes:

Edited by துளசி

தூயவன், உங்கள் பார்வையில் பார்த்தால் ஆங்கில மொழி எப்போதே அழிந்துபோயிருக்க வேண்டுமே? ஆங்கில மொழியை ஆயிரம் விதமாய் பேசுகின்றார்கள், ஆயிரம் விதமாய் எழுதுகின்றார்கள். ஏறக்குறைய எல்லா மொழிகளிலிருந்தும் சொற்களை இரவல் பெற்று பாவிக்கின்றார்கள். தூய ஆங்கில சொற்கள் எவை என்று கேட்டால் பதில் சொல்வதற்கு தலையைத்தான் சொரியவேண்டும். ஆனால் ஆங்கில மொழி வளர்ந்தே செல்கின்றது. அழியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தை மட்டும் ஏன் ஒப்பீடு செய்கின்றீர்கள். ஆங்கிலம் என்பது ஒரு பொது மொழி நிலையைக் கொண்டுள்ளது. அங்கே, அதற்கு எதை உள்வாங்கினாலும், வெளியேற்றினாலும், அதன் பொதுமொழி நிலமையை மாற்றி விடப்போவதில்லை. தவிரவும் இன்றைய சூழலில் அது வியாபாரமொழியாகவும் இருப்பதால், அதில் பிறமொழிகளின் தாக்கம் என்பது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. உண்மையில் ஆங்கிலத்தோடு, தமிழை ஒப்பீடு செய்வதற்கு, எந்தவொரு பொருத்தமான காரணியும் இல்லை. ஆங்கிலத்தின் நிலமை வேறு. தமிழின் நிலைமை வேறு.

ஆங்கிலம் தவிர்ந்த பிறமொழிகள் நிலமையை யோசியுங்கள். நிச்சயமாக மற்றய எல்லாமொழிகளும் தங்களுடைய அடையாளம் தொலைவது தொடர்பாகப் பயப்படுகின்றன. தமிழ் ஒரு வியாபார மொழியாகவும் நாங்கள் மாற்றவில்லை. அதைப் பொதுமொழியாகவும் நாங்கள் மாற்றவில்லை. அதற்கென்று ஒரு நாடு கூடக் கிடையாது. நாங்கள் தமிழைக் கற்பது என்பது ஒரு மொழி உணர்வுக்காக மட்டுமே. வேறு எந்தத் தேவையையும் தமிழ் கொண்டிருக்கவில்லை. அப்படியான சூழ்நிலையில் எம் மொழியில் செய்கின்ற ஒவ்வொரு தவறும், ஏதோ ஒரு பாதிப்பினை உருவாக்கும்.

குறைந்தபட்சம் பிரதேசரீதியாகவன்றி, மொழிரீதியாகவும் ஒரே எழுத்துப்பழக்கத்தையாவது மேற்கொள்ள வேண்டாமா??

உதாரணத்துக்கு, தமிழில் ஏன் என்பதை ஏனு, ஏன்பா, ஏன்றா என்று பிரதேசத்துக்குப் பிரதேசம் உச்சரித்தால், அங்கே என்னுமொரு மொழி தெலுங்கோ, மலையாளமா தமிழில் உருவாகி விடாதா??

மேலே சொன்னது போன்று, இல்லை என்பதை ஏன், ”இல்ல” என்று எழுதிக் கொள்ள வேண்டிய தேவை?? அப்படி ஒரு தேவை இல்லைத் தானே? பிறமொழி உள்ளீடு என்பது தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களால் அன்றியே தேவையற்ற புகுத்தலை ஆதரிப்பது சரியன்று.

சோழியன் அண்ணா ஒரு தடவை சொன்ன விளக்கம். Light house என்பதை நாங்கள் நேரடி மொழிபெயர்ப்பில் வெளிச்சவீடு என்று தான் உச்சரிக்கின்றோம்? ஏன் அந்தத் தேவை எமக்கு? உண்மையில் கலங்கரை விளக்கு என்று எம்மிடம் ஏற்கனவே சொல் உள்ளதைப் பாவிப்பதில்லை. இதற்குப் பெயர் தான் பிறமொழிகளை உள்வாங்குதலா??

ஆங்கிலத்திற்கு எந்த வரலாறும் கிடையாது. அதற்கு எந்த வரைவிலக்கணவும் பெரிதாகக் கிடையவே கிடையாது. ஆனால் தமிழ் அப்படியா? எந்தத் தகுதிகளை மையப்படுத்தி இரு மொழிகளையும் ஒப்பீடு செய்கின்றீர்கள்??

Edited by தூயவன்

தூயவன், உங்கள் பார்வையில் பார்த்தால் ஆங்கில மொழி எப்போதே அழிந்துபோயிருக்க வேண்டுமே? ஆங்கில மொழியை ஆயிரம் விதமாய் பேசுகின்றார்கள், ஆயிரம் விதமாய் எழுதுகின்றார்கள். ஏறக்குறைய எல்லா மொழிகளிலிருந்தும் சொற்களை இரவல் பெற்று பாவிக்கின்றார்கள். தூய ஆங்கில சொற்கள் எவை என்று கேட்டால் பதில் சொல்வதற்கு தலையைத்தான் சொரியவேண்டும். ஆனால் ஆங்கில மொழி வளர்ந்தே செல்கின்றது. அழியவில்லை.

[size=5]உண்மை தான்! ஏனேனில் நம்ம டமிழ்ஸ், இன்டியன்ஸ் பூகோளத்தில் இருக்கும் மட்டும் இங்கிலீசிற்கு ஒரு கேடா?[/size]

உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் அலை. (பச்சை முடிந்துவிட்டது.) :)

உலக ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் வளைந்து, நெளிந்து போகாவிட்டால் முறிந்து கொள்வது ஒன்றே நடக்கும். உயரமான ஆள் என்றாலும் தாழ்வான கதவூடாக உள்ளே போகவேண்டும் என்றால் குனிந்துதான் செல்ல வேண்டும்.

எத்தனையோ பலர் எத்தனையோ பல முக்கு முக்கி செய்ய முடியாத வேலையை, "வை திஸ் கொலை வெறி" பாடல் இலகுவாகச் செய்தது. கொலை வெறி என்றால் என்ன என்று கேட்டு உலகின் வெவ்வேறு மூலையில் வாழ்கின்ற தமிழரல்லாத பலரும் தலையைப்பிய்த்துக்கொண்டனர். யூடியூப்பில் கறுவல், வெள்ளை, மஞ்சள், சிவப்பு என்று எல்லா நிறத்தவரும் கொலை வெறி கொலை வெறி என்று பாடிக்கொண்டு திரிந்தனர். அது தமிழ்மொழி என்று அறிந்துகொண்டனர்.

நாங்கள் தூய தமிழில்தான் கதைப்பம், தூய தமிழில்தான் எழுதுவம், எங்கள் தொன்மையைக் காப்போம், எங்கள் மொழியில் கலப்படத்திற்கு இடங்கொட மாட்டோம் என்று சொல்லி இயங்கிக்கொண்டு இருந்தால் நீங்கள் மட்டுமே தொடர்ந்து அந்த மொழியின் ஆளுகையில் வாழ்வீர்கள். ஆனால், பெருன்பான்மை உலக ஓட்டத்திற்கு ஏற்றவகையிலேயே செல்லும்.

நீரை அடைத்து வைத்தால் அது குளமாகதேங்கி நிற்கும். திறந்துவிட்டால் ஆறாக ஓடும். மொழியை தாழ்ப்பாள் போட்டு பூட்டி வைக்காமல் அதன் வழியிலேயே பரந்து பாய்வதற்கு இடங்கொடுக்கவேண்டும் அப்போதுதான் அது வளர்ச்சி அடையும்.

மாற்றங்கள் இல்லாமல் எல்லாக்காலத்திலும் ஒரே மாதிரியாகவே நிலையாக நீடிக்கும் ஒன்றிற்கு வளர்ச்சி ஏற்படுவதாக கூறுவது கிடையாது. மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடுங்க மாப்ஸ்

:D

இந்த கருத்து எங்களோட அரசியலுக்கும் பொருந்தும் நல்ல சிந்தனை மாப்ஸ்

சுண்டல் அசத்துகின்றீர்கள் .உண்மைதான் .

வளையமாட்டம் என்கின்ற எல்லாம் தான் அழிகின்றன .சின்னனில படிச்சதுதானே புயலுக்கு ஆலமரம் முறிவதும் நாணல் வளைந்து தப்பி போவதும் தான் இயற்கையின் நியதி .

நாங்கள் தமிழை கதைக்காமல் மிக்ஸ் பண்ணி கதைப்போம் என்பதன் அர்த்தத்தையே இந்த கருத்தில் இருந்து நான் பார்க்கிறேன்.........................அப்படியானால் ஒரு இனத்தின் அபிவிருத்தி அல்லது ஆளுமை ,அல்லது வளர்ச்சி மொழி என்னும் கருவியில் தங்கியிருக்கவில்லை என்பதே அர்த்தம் ...........ம்ம்ம் போர்த்துக்கேசன் வந்து ,ஒல்லாந்தன் வந்து ,ஆங்கிலேயன் வந்து பரப்பினான் தன மொழியை .ஆனால் அன்று அவன் எம் மொழியை கற்க தயாராய் இருக்கவில்லை .................தன் மொழி உலகில் பரவுவதில் குறியாயிருந்தான் ........நாமோ எம் மொழி அழிந்தாலும் பரவாயில்லை அவன் மொழியில் நாட்டம் கொண்டோம்...............ஒரு இனக்குழுமத்தின் உண்மையான அடையாளமே மொழி ...........மொழி என்பது இனக்குழுமத்தின்மட்டுமல்ல ,ஒரு மனிதனின் அடையாளமுமாகும் .........மொழி என்பது ஒரு கருவியல்ல அது மனித உள்ளம் வடிக்கும் தென் அருவி...........இன்னொரு மொழியை மாற்றான் மொழியை நிச்சயம் நாம் தெரிந்திருக்கவேண்டும் அது அவரவர் அறிவு பூர்வமானது .இது எல்லோராலும் முடியாது ..அவன் பிறந்ததில் இருந்து வாழும்வரை தன்னை சுற்றி உள்ளவர்களுடன் உரையாடுகிறான் தொடர்புகளை உருவாக்குகிறான் .அவன் வாழ்கிறான் ..........அதற்கு அவனுக்கு தெரிந்த மொழி அவசியம் ////// அந்த மனிதன் வாழும் குழுமம் கிராமமாகிறது,நகரமாகிறது ,நாடாகிறது அவனுக்கு என்றொரு அவன் பரீட்சயப்பட்ட ஒரு தொடர்பாடல் தேவைப்படுகிறது அது அவன் மொழியாகிறது .............அவனை நான் இருந்து நீ இருந்து பார் மிக்ஸ் லங்குவேச் தேவையா ...........................வணக்கம் .வாழ்க தமிழ் [மொழி]

  • கருத்துக்கள உறவுகள்

பிற மொழியைக் கலந்து கதைப்பது வரலாற்று ரீதியாக நடப்பதுதான்.. தமிழுடன் சமஸ்கிரதம் கலந்து மலையாளம் வந்தது. :unsure: ஆனால் அவன் இப்ப தண்ணி தரமாட்டெண்டுறான்.. :lol:

சுண்டல் அசத்துகின்றீர்கள் .உண்மைதான் .

வளையமாட்டம் என்கின்ற எல்லாம் தான் அழிகின்றன .சின்னனில படிச்சதுதானே புயலுக்கு ஆலமரம் முறிவதும் நாணல் வளைந்து தப்பி போவதும் தான் இயற்கையின் நியதி .

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்ற பழமொழியையும் சிறு வயதில் படித்தேன்

உலகத்தில் பெரும்பான்மையான நாடுகள காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டு (நூறு வருடங்களுக்கு மேல் ) தமது மொழியை இழக்கவில்லை .சில நாடுகளே இழந்தன.இழந்த அந்த நாடுகளை எடுத்துப்பார்த்தால் அவர்களுக்கு என்று ஒரு ஆழுமையான மொழி இருக்கவில்லை .

இந்தியா ,இலங்கை சீனா போன்ற நாடுகளில் எந்த கொம்பனாலும் ஏற்கனவே நாகரிகமடைந்த மொழிகளை எதுவும் செய்ய முடியவில்லை .ஒரு சில சொற்களை உள்வாங்குவதில் மொழி அழிந்து விடாது .

பேசும் தமிழை தமிழ் நாட்டு தமிழன் குளறுபடி பண்ணினாலும் இலக்கிய தமிழ் எள்ளளவும் அழியவில்லை அங்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை வருடங்கள் எத்தனையோ தேசங்கள் ஆண்டும் அழிக்க முடியாத எம் மொழிய இனி அழிய போகுது?

அதுவரை மகிழ்ச்சியே ////////////

இத்தனை வருடங்கள் எத்தனையோ தேசங்கள் ஆண்டும் அழிக்க முடியாத எம் மொழிய இனி அழிய போகுது?

அது மொழித்திவேசம் ..............கூடாது ...................விரும்பத்தகாது

மொழிப்பற்று ...............................தேவையானது தம்பி சுண்டு............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் வளைந்து, நெளிந்து போகாவிட்டால் முறிந்து கொள்வது ஒன்றே நடக்கும். உயரமான ஆள் என்றாலும் தாழ்வான கதவூடாக உள்ளே போகவேண்டும் என்றால் குனிந்துதான் செல்ல வேண்டும்.

எத்தனையோ பலர் எத்தனையோ பல முக்கு முக்கி செய்ய முடியாத வேலையை, "வை திஸ் கொலை வெறி" பாடல் இலகுவாகச் செய்தது. கொலை வெறி என்றால் என்ன என்று கேட்டு உலகின் வெவ்வேறு மூலையில் வாழ்கின்ற தமிழரல்லாத பலரும் தலையைப்பிய்த்துக்கொண்டனர். யூடியூப்பில் கறுவல், வெள்ளை, மஞ்சள், சிவப்பு என்று எல்லா நிறத்தவரும் கொலை வெறி கொலை வெறி என்று பாடிக்கொண்டு திரிந்தனர். அது தமிழ்மொழி என்று அறிந்துகொண்டனர்.

நாங்கள் தூய தமிழில்தான் கதைப்பம், தூய தமிழில்தான் எழுதுவம், எங்கள் தொன்மையைக் காப்போம், எங்கள் மொழியில் கலப்படத்திற்கு இடங்கொட மாட்டோம் என்று சொல்லி இயங்கிக்கொண்டு இருந்தால் நீங்கள் மட்டுமே தொடர்ந்து அந்த மொழியின் ஆளுகையில் வாழ்வீர்கள். ஆனால், பெருன்பான்மை உலக ஓட்டத்திற்கு ஏற்றவகையிலேயே செல்லும்.

நீரை அடைத்து வைத்தால் அது குளமாகதேங்கி நிற்கும். திறந்துவிட்டால் ஆறாக ஓடும். மொழியை தாழ்ப்பாள் போட்டு பூட்டி வைக்காமல் அதன் வழியிலேயே பரந்து பாய்வதற்கு இடங்கொடுக்கவேண்டும் அப்போதுதான் அது வளர்ச்சி அடையும்.

மாற்றங்கள் இல்லாமல் எல்லாக்காலத்திலும் ஒரே மாதிரியாகவே நிலையாக நீடிக்கும் ஒன்றிற்கு வளர்ச்சி ஏற்படுவதாக கூறுவது கிடையாது. மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி இல்லை.

"Why this Koliveri" என்ற பாடல் தமிழ்ப்பாடல் என்று யார் சொன்னார்கள்? அது ஒருவகையில் தமிழன், அல்லது தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட்ட பாடல் மட்டும் அவ்வளவு தான். மற்றும்படி இதை வைத்துத் தான் தமிழ் பற்றி உலகத்தினர் அறிந்து கொண்டார்கள் என்று சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட தகவல். இதை வைத்துத் தான் தமிழை அறிந்து கொள்ளும் இழிநிலை தமிழுக்குத் தேவையுமில்லை. அப்படித் தமிழைப் பற்றி மற்றவர்கள் அறிய வேண்டிய தேவையும் தமிழிற்குக் கிடையாது.

சுந்தரை ஒரு கொலைவழக்கில் வைத்துத் தான் தெரியும் என்று சொல்வதோ, அன்றி சுந்தர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், அல்லது விஞ்ஞானி என்று சொல்வதிலா பெருமை. தமிழ் என்ன ஒரு தமிழை இல்லாத, ஆங்கிலத்தைக் கொல்லுகின்ற பாடலை வைத்தா, அடையாளம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை??

ஆங்கிலத்தில் தமிழர்கள் பாடல்கள் எழுதுவது இது ஒன்றும் புதிதல்லவே. மாயா அதைத் திறம்படச் செய்து கொண்டு தான் வருகின்றார்.ஒரு மொழியின் வளர்ச்சி என்பதை எழுந்தமானமாகவும், குருடன் யானைத் தொட்ட கதை போன்றும் கதைப்பதற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. நீங்கள் சொல்வது போன்று மொழியை மாற்றுவதற்கு குறைந்தபட்சம் ஏதாவது ஆராய்ந்தீர்களா? என்ன விளைவுகளாவது வரும் என்றாவது கண்டு கொண்டீர்களா?

இதற்கு மேலும் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆங்கிலத்தில் ஒரு எழுத்துப்பிழையோடு எழுதினாலே, அதைக் கேலி பண்ணுகின்றவர்கள், தமிழில் கொச்சைத் தமிழில் எழுதுவது நாகரீகம், நவீனத்துவம் என்று பேசுவதற்கு நிச்சயம், தீர்வு காணமுடியாது.

இதன் விளைவுகள் எப்படியாக இருக்கும் என்பதை உங்களின் தலைமுறையிலேயே உணர்வீர்கள். இரு வேறுபட்ட பிரதேசத்தில் வாழுகின்ற தமிழர்கள், மற்றவர்களின் தமிழைப் புரிந்து கொள்ளமுடியாத நிலைமை ஏற்படும்போது..... அல்லது அப்போது நீங்கள் இந்த நாகரீக வளர்ச்சியில் ஆங்கிலத்தையே உங்களின் தாய்மொழி எனச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

Edited by தூயவன்

உண்மைதான். மொழியைக் காப்பதும் எமது கடமைகளில் ஒன்றுதான். இங்கு, செவ்விந்தியர்கள் அவர்களது மொழியை இழந்து விட்டார்கள். இருக்கும் மொழியையும் காப்பாற்றுவதற்கு அரசே முன்னின்று செயற்படுகிறது என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சுண்டல் அசத்துகின்றீர்கள் .உண்மைதான் .

வளையமாட்டம் என்கின்ற எல்லாம் தான் அழிகின்றன .சின்னனில படிச்சதுதானே புயலுக்கு ஆலமரம் முறிவதும் நாணல் வளைந்து தப்பி போவதும் தான் இயற்கையின் நியதி .

ஆலமரம் முறியவதாகவும் நாணல் தப்பி நிற்பதாகவும் நீங்கள் படிச்ச கதையை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இங்கே இணைத்துவிட முடியுமா?

நன்றி.

Edited by மல்லையூரான்

தமிழில் இருக்கும் ஒரு நன்மை அதில் இரண்டு பிரிவுகள். அதனால் அது என்றும் உருமாற்றம் அடைந்து மூப்பெய்யாத கன்னி அழகை கொண்டிருக்கிறதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றைய பாசைகளுடன் தொடர்பு கொள்ளும் பொது எடுத்தவாக்கிலேயே பேச்சு தமிழ் தூய்மையை இழந்துவிடுகிறது. ஆனால் செந்தமிழ் இலகுவில் வழைந்து கொடுப்பதில்லை.

நான் பார்த்து ஆச்சரியப்படும் இயல்பு, சங்க பாடல்களை நாம் இன்னமும் படிக்க முடியும். இந்த நிலை வேறு எந்த மொழிக்கு இருக்கு என்றது எனக்கு தெரியாது. அரபு, சீனம் எல்லாம் கூட நன்றாக மாறிவிட்டது.

மேலும் ஆச்சரியபட வைப்பது சங்கம் மருவும் போது வந்த நீதி நூல்கள். சங்க பாடல்களை படித்தபின்னால் நம்மால் விளங்கி கொள்ள முடிகிறது. ஆனால் படிப்பதற்கு துணை வேண்டியிருக்கிறது. ஆனால் நீதி நூல்களின் நிலை அப்படியல்ல. பலவற்றை எடுத்த எடுப்பிலேயே படித்து விளங்கி கொள்ள முடியும். மிக சிக்கலான இரண்டு வரிக்களுக்குள் முடக்கப்படும் திருகுறள் கூட இதற்கு விதி விலக்கல்ல. அதாவது நீதி நூல்கள் பண்டிதர்களால் செந்தமிழில் எழுதப்பட்டவை. சங்கபாடல்கள் சுவைக்காக ஒரளவு அன்றைய வழக்கிலிருந்த கொடுந்தமிழும் கலந்து எழுதபட்டிருக்கிறது.

எனவே செந்தமிழை தொடந்து பேணிக்கொண்டு, கோடுந்தமிழை தேவையான அளவு விட்டும்கொடுப்பதால் வரும் காலத்திலும் எல்லோரும் இதே த்மிழை பாவிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் அசத்துகின்றீர்கள் .உண்மைதான் .

வளையமாட்டம் என்கின்ற எல்லாம் தான் அழிகின்றன .சின்னனில படிச்சதுதானே புயலுக்கு ஆலமரம் முறிவதும் நாணல் வளைந்து தப்பி போவதும் தான் இயற்கையின் நியதி .

[size=1]

[size=4]ஆலமரம்போல் இருக்க எழுச்சியும் வளர்ச்சியும் வேண்டும்.[/size][/size][size=1]

[size=4]புல்லுபோல கிடக்க புல்லாலேயே முடிகிறது புல்லுருவிகளால் முடியாதா?[/size][/size]

[size=1]

[size=4]ஆக்கங்களுக்குதான் அழிவு உண்டு.......[/size][/size][size=1]

[size=4]ஆகாதது எப்படி அழியும் என்று. மழை விட்டாலும் வீடு போகாமல் பள்ளியில் நிற்பவர்கள்தான் எழுதமுடியும்.[/size][/size]

தென்னையும் நாணலும், தேக்கும் நாணலும், வேம்பும் நாணலும்தான் பஞ்சதந்திரக்கதை.

ஆலைக் காட்டுவது ஒரு சினிமா பாடல் என்று நினைக்கிறேன். அதனால்த்தால் அர்ச்சுன்னிடம் அந்த கதையின் மூலம் எது என்ற காண முயற்சித்தேன்.

ஆல் பல விழுதுகளால் பாதுக்காக்கப்படுவதால் அழிவில்லாததாக வர்ணிக்கப்படும் மரம். காற்றால் ஆகக்கூடியது ஒருகிளையை முறிக்க முடிந்தாலும் மற்றய கிளைகள் எல்லாம் விழுதுகளால் தாங்கப்படும். மேலும் அடிமரம் முறிவதும் இல்லை.

தேக்கு, வேம்பு போன்றா வைரத்துக்கு பேர்போன மரங்களை சாதாரண புயல் காற்றால் விழுத்த முடியாது. ஆனால் நாணல் தென்றல் தழுவ தொடங்கும் போதே தள்ளாட தொடங்கிவிட்டும். புயல் பயங்கர புயலாக மாறும் போது வேம்பு முறியும். ஆனால் நாணல் முறிவதில்லை. வளையும்.

ஒரு இணையதளத்தில ,,

சுத்த தமிழிலில ...எழுதுறதால... தமிழை வளர்க்கவோ /அழிக்கவோ ,, முடியாது,!

அது மனசுல இருந்து வரணும்...

ஆமா மனசுல இருந்து ,,,

எங்க இனம் கூட ,, நேரடியா சுத்த தமிழ் பேசி தமிழை வளர்த்தவங்க ...

ஏம்பா ,,,நம்ம தூயவனை தவிர வேறு யாராச்சும் இருக்கிங்களா?

இருந்தா கைய...... ரைட் எவே மேல தூக்கிடுங்கப்பு!! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.