Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2012 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசு அண்ணா தனிமடலில் அனுப்பிய வரவேற்ப்புரை

எனதருமை உறவுகளே

முதலில் எமக்காய் எல்லாம்தந்த அந்தமாவீரச்செல்வங்களின் காலடி வணங்கி

ஒரு நிமிட அஞ்சலிக்காக தலை சாய்த்து

எமது பணியை மீண்டும் வேகத்தோடு ஆரம்பிப்போம்.

இன்றைய நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள்.

உலகம் முழுவதும் பரந்திருக்கும் எம்மினம் ஒரு மேடையில் கூடும் நாள்.

சிரித்து

அழுது

கடிபட்டு

பலதையும் கற்று பட்டு

ஆளை ஆள் அரவணைத்து

உறவு கொண்டாடி மகிழும் ஆல மரமாம் யாழின் உறவுகள் என்ற ஒரு கொடியின் கீழ் கூடும் நாள்.

இந்த நாளில்

புத்தரைப்போல் ஆற இடம் தந்து ஒதுங்கி நின்று எம்மை வழி நடாத்தும் மோன் அண்ணாவுக்கு முதல் வணக்கங்கள்

கத்தியை வைத்திருந்தாலும்

எவர் கண்ணிலாவது குத்த நாம் முற்படும்போது மட்டும அந்த தடியை மட்டும் வெட்டி விடும் நிழலி

இணையவன்

புதியவர்களாம் நுணாவிலான் மற்றும் நியானிக்கும் எமது வணக்கம்.

அடுத்து

விமானத்திலும்

காரிலும்

சைக்கிள்களிலும்

ஒட்டகத்திலும்

மற்றும் நடந்தும் தவழ்ந்தும் வந்திருக்கும் உறவுகள் அனைவரையும் யாழ்கள வரவேற்பாளன் என்ற முறையிலே வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

அடுத்து

வந்திருக்கும் உறவுகளுக்கு

கனடா என்ற படியால்முக்கியமாக இடியப்பம் தவிர்த்து

அனைத்து உணவுகளையும் செய்து தந்த எமது கள பெண் உறவுகளுக்கும் எமது வணக்கங்கள்.

மற்றும்

தண்ணீர் விநியோகத்தில் மும்மரமாக ஈடுபட்டிருக்கும் அளைய சமூகத்தினருக்கும் எமது வந்தனங்கள்.

முக்கியமான செய்தி ஒன்று.

தமிழரின் முக்கிய கொள்கையாம் தண்ணீரைக்கண்டால் அதை முற்றாக முழுங்கிவடலுக்கமைய நீங்கள் உங்கள் பெருமையை நிலைநாட்ட லாறிகளில் தண்ணர் வந்து கொண்டிருக்கின்றன. அந்த லாறிகள் திரும்பிப்போகும் போது தங்களை நிரப்பிப்போகும் என்பதனை ஒரு தடியுடன் அறியத்தருகின்றோம். தொடர்ந்து பல்லாயிரம் பேர் பேச இருப்பதால் இத்துடன் விடைபெறுகின்றேன்.

நன்றி

தமிழரின் தாகம்

தமிழீழத்தாயகம்.

Edited by SUNDHAL

  • Replies 269
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது அரங்கத்துக்குள் சாப்பாட்டு வாசனை வர ஆரம்பித்துவிட்டது.. :D எமது இனிய உறவு தமிழரசு அடுப்பைப் பத்தவைத்துவிட்டார் நேயர்களே.. :wub: இன்று மங்கள நிகழ்வு ஆதலால் சைவச் சாப்பாடு வாசனை வந்துகொண்டிருக்கிறது. :rolleyes:

சுங்கத்துறையில் இருந்து வெற்றிகரமாக தனது அண்டாவை மீட்டெடுத்த தமிழரசுவுக்கு எமது நன்றிகள்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மைக்கை கைப்பற்றி விசுகு

இதை எல்லாம் நாம் இருவரின் தலையில் கட்டி ஒதுங்கியிருந்தோம்

அவர்களுக்களை வணங்குகின்றேன

அவர்கள் சுண்டல்

மற்றும் நம் தமிழ்சிறி அவர்கள்

(சபையிலிருந்து பெரும் கர கோசம்)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசு அண்ணா அருமையானதோர் உரை யாழ் என்றும் யாழ் களத்தின் உரிமைக்குரல் நீங்கள் எண்கள் அழைப்பை ஏற்று இந்த உரையை தந்ததிற்கு மனமார்ந்த நன்றிகள் மீண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகு அண்ணா.. உங்கள் ஆரம்ப உரைக்கு..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து பெண்கள் நாட்டின் இரு கண்கள் என்ற தலைப்பில் பேச neduks அண்ணாவை அழைகின்றோம்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

எங்கை சனத்தை காநோம்.எல்லாரும் குடிச்சுட்டு கவுன்டுட்டுதுகளா அல்லது கடலை போடுதுகளா ஆ

  • தொடங்கியவர்

[size=4]நெடுக்ஸ் நிகழ்ச்சியில் வாசித்த உரை...[/size]

[size=4]அனைவருக்கும் வணக்கம்.[/size]

[size=4]பெண்கள் பக்கம் இருந்து வணக்கம் சுணக்கமாக வருவதை கண்டித்துக்கொண்டு நான் எனதிந்த சிற்றுரையை ஆரம்பிக்கிறேன்.[/size]

[size=4]பெண்கள் என்றால் யார்..? சாறி உடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? சட்டை போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? தோடு குத்தினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வளையல் போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வகுடெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வாய்க்கால் கட்டினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வரப்பெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?நாத்து நட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?இல்லை [size=4]வயலில் களை எடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? [/size][/size]

[size=4][size=4]மானங்கெட்டவளவையே..உங்களுக்கு மஞ்சல் அரைத்து கொடுப்பது யார்..? அஞ்சு முளத்தில் பூ வாங்கிக்கொடுப்பது யார்..? பிஞ்சிலையே உங்களால் வெம்பிப் பழுப்பது யார்..?கெஞ்சவும் கொஞ்சவும் கடையில் நல்லாய்த் திங்கவும் வைப்பது யார்..?திண்ட பின் உங்கள் நண்பிகளுக்கும் சேத்து பில் கட்டுவது யார்..?இதையெல்லாம் செய்வது யார்..? யார்..? யார்...? :D[/size][/size]

[size=4][size=4]( என்று நெடுக்ஸ் உணர்ச்சிவசப்பட்டு எப்பவோ கேட்ட கட்டபொம்மன் வசனங்களை எல்லாம் பிளைபிளையாய் பேசி முடிக்க பெண்களால் நொந்து போய் இருந்த சுண்டால் கூட்டத்தில் இருந்து பாய்ஞ்சு வந்து மேடையில் ஏறி நெடுக்ஸை கட்டிப்பிடித்து எங்கள் தன்மான சிங்கம்,எங்கள் அடிமைத்தனம் ஒளிக்க வந்த கட்டப்பொம்மன் 2 வாழ்க வாழ்க என்று கத்துகிறார்.. இவற்ரை அவதானித்துக்கொண்டிருந்த கனடா மகளீர் அணித்தலைவி சகாற கடும் சினத்துடன் தன் தலையில் குத்தியிருந்த கிளிப்பை கழட்டி நியக்கிளிப்பை எறிவதாக நினைத்துக்கொண்டு வாயால் டமார் எண்டு சத்தம்போட்டபடி சுண்டலை நோக்கி எறிகிறார்.. :o[/size][/size]

[size=4][size=4]சகாறாவை பின்பற்றி பெண் உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் கொண்டையில் குத்தியிருந்த கிளிப்பையும் கொண்டை வைக்காத இளம்பெண்கள் தங்கள் கைகளில் போட்டிருந்த வளையல்களையும் சுண்டலையும் நெடுக்ஸையும் நோக்கி கூச்சல் இட்டபடி வீசி எறிகின்றனர்.. :lol:[/size][/size]

[size=4][size=4]நெடுக்ஸ் தான் பேசிக்கொண்டிருந்த மைக் இருந்த ரேபிலுக்கு பின்னால் நிலையெடுத்து இந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுண்டலோ இவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வந்து விழுந்த கிளிப்புகளுக்கும்,வளையல் துண்டுகளுக்கும் நடுவே இளம்பெண்களின் வளையல்களை மட்டும் முமுரமாக பொறுக்கி சேகரித்துக்கொண்டிருக்கார்.. [/size][/size]

[size=4][size=4]நிலமை கட்டுக்கடங்காமல் போவதை அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி மைக்கை கையில் எடுத்து பெண்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமைதியாக இருந்தால் போகும்போது எல்லாருக்கும் ஏசியன் கடையில் எடுத்த சாறியும் யன்னல் வைத்த பிளவுசும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்க பெண்கள் பக்கம் இருந்து குண்டூசி விழுந்தால் கூட கேட்கும அளவுக்கு அமைதி நிலவுகிறது... [/size][/size]

[size=4][size=4]இதனால் சந்தோசம் அடைந்த தமிழ்சிறி நெடுக்ஸ் பக்கம் திரும்பி "இப்பதாண்ட ஒருமாதிரி நிலமையை கட்டுக்கை கொண்டுவந்திருக்கன் அதைக்கெடுத்துப்போடதையெடாப்பா"என்ன்று கெஞ்சுவது போல் பார்க்கிறார்..எதைப்பற்றியும் கவலைப்படாமல் நெடுக்ஸ் மைக்கை எடுத்து தொடர்கிறார்..)[/size] [/size]

[size=4]நண்பர்களே,தோழர்களே...இந்தப் பெண்களைப் பேய்கள் என்றும் சொல்லலாம்..பெண்களை பேய்கள் இல்லை என்றும் சொல்லலாம்..பேய் என்று சொல்வதெல்லாம் பேயாகிவிடாது..அங்கு பெண்களும் இருக்கின்றனர்..அதே போல் பெண் என்று சொல்வதெல்லாம் பெண் ஆகிவிடாது..அங்கு பேய்களும் இருக்கின்றன..பேய்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்றுவதே தற்பொழுது எனது முதல் பணியாக எடுத்து செய்து கொண்டிருக்கிறேன்.. :o[/size]

[size=4]இந்தப் பணியில் நான் பல சவால்களையும்,தடைகளையும் எதிர்கொண்டாலும் முருங்கை மரத்தில் இருந்து விழுந்த விக்கிரமாதித்தன் போல பேய்களை எதிர்த்து யாழ் உள்ளவரை நான் கீ போட்டில் போராடிக்கொண்டிருப்பேன்..இது என் கீபோட்டின் மேல் சத்தியம்..சத்தியம்..சத்தியம் [/size]

[size=4]( எண்டு ஆவேசம் கொண்டவரைப் போல் நெடுக்ஸ் ஒலிவாங்கி மேசையில் கையால் அடித்துக் கத்துகிறார்.. ஆண்கள் பக்கம் இருந்து பலத்த கரகோசமும் விசில் சத்தமும் வானைப்பிளக்கிறது..[/size]

[size=4]சுண்டல் பொறுக்கமுடியாமல் கூட்டத்தின் நடுவே தான் மட்டும் தனிய எழுந்து நிண்டு கைதட்டுகிறார்..இதை தூரத்தே மேடையின் பின்னால் இருந்து அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி குறுக்காலபோவான் திரும்ப கூட்டத்தை குழப்பபோறான் போல கிடகே எண்டு பதற்றத்துடன் காணப்படுகிறார்.. [/size]

[size=4]ஆனால் ஏசியன் சாறியையும் யன்னல் வைத்த யாக்கெட்டையும் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த பெண்கள் அணி இவற்றினால் எந்த சலனமுமடையாமால் சாறியே குறி என்று அமைதியாக இருக்கின்றனர்.. நெடுக்ஸ் இந்த அமைதியை வாய்ப்பாக பயன்படுத்தி தொடர்கிறார்..) [/size]

[size=4]நாங்கள் கேட்கிறோம்..தெளிவாகக் கேட்கிறோம்...பெண்களை ஏன் இந்த மூடர்கள் கண்கள் என்கிறார்கள்..? ஆண்களுக்கும் கண்கள் இருக்குத்தானே..? எங்கள் கண்கள் மிக அழகானவை..அவற்றின் மூலமே நாம் வண்டுகளையும் பூக்களையும் பார்க்கிறோம்..[/size]

[size=4]நான் பல காலத்துக்கு முன்னரே பூக்களை நின்று பார்க்க வெளிக்கிட்டிட்டன்.ஆனால் என்னைப் பிடிக்காத எனது எதிரிகள் சிலர் நான பூக்களை பார்க்கும் சாட்டில் பெண்களையும் பார்ப்பதாக அபாண்டமாக சொல்லித்திரிகிறார்கள்..!அவர்களின் கண்கள் அழுகிப்போக..[/size]

[size=4]பூக்களைத்தான் பறிக்காதீங்க[/size]

[size=4]என் பூக்காதலைத்தான் பிரிக்கதீங்க..[/size]

[size=4](என்று கோரசாக இழுத்து பாடுகிறார்.. அப்பொழுது அவர் கண்ணில் இருந்து சிலதுளிகள் விழுகின்றன..எல்லோரும் பார்க்கும் வகையில் கைக்குட்டையை எடுத்து தன் கண்ணீரை துடைத்துவிட்டு நான் யாரும் பார்க்க என் கவலைகளை நினைத்து அழுவதில்லை என்று சொல்லிவிட்டு தன் பேச்சை தொடர்கிறார்.. ) [/size]

[size=4]பூக்கள் அழகானவை..பூக்களைமொய்க்கும் வண்டுகள் அதைவிட அழகானவை..ஆகையால் பூக்களை இந்தக்கண்களலேயே ரசிக்கிறோம்..பிறகெதற்கு இந்த மாங்காய் மடையர்கள் கவிதை என்ற பேரில் பெண்களை மட்டும் கண்கள் என்கிறார்கள்..?இது சுத்த ஆணடிமைத்தனமே அன்றி வேறுதுவும் இல்லை.. :o ஆகையால் இனிமேல் கவிஞர்கள் ஆண்களையும் கண்கள் என்று சொல்லவேண்டும் என்று ஆண்களின் சார்பில் இந்த இடத்தில் வன்மையாகக் கேட்டுகொள்கிறேன்.. [/size]

[size=4]சிலபலவருடங்களுக்கு முன்னர் நானும் ஓடினேன்.. பெண்கள் இருகண்கள் என்று பாடினேன்..அவள் ஒரு ரோசாப்பூ..வாடாத ரோசாப்பூ..எங்கள் காதல் ஒரு கைபடாத சீடி.. ஆனால் கடைசியில் போடா போடி.. ஆதலால் சொல்கிறேன் ஆண்களே கரண்டுக்காரன் வெட்டி வைத்த குழியில் விழுந்தாலும் காதலில் விழுந்துவிடாதீர்கள்.. [/size]

[size=4]உங்களுக்கு காதலிக்கவேண்டுமென்றால் என்னைப்போல் பூக்களை கதலியுங்கள்..இல்லையெண்டால் புழுவையெண்டாலும் காதலியுங்கள்.. ஆனால் பெண்களை மட்டும் காதலித்துவிடாதீர்கள்..காதலித்துவிடாதீர்கள்..காதலி....த்..து(எனும்போது நெடுக்ஸிற்கு உணர்ச்சிவசப்பட்டதால் பேச்சுவருகிறது இல்லை..கூட்டத்தில் எல்லாரும் அமைதியாக இருப்பதை அவதானித்த குட்டி உடனே எழுந்து நின்று நான் இதை லைக் பட்டினை அமத்தி லைக் பண்னுறன் எண்டு பெரிதாக சொல்லவும் நெடுக்ஸ் உற்சாகம் அடைந்தவராக தொன்டையை சரி செய்துகொடு மீண்டும் பேசத் தொடங்குகிறார்..) [/size]

[size=4]நண்பர்களே..எனக்கு நீண்டகாலமாக ஒரு சந்தேகம் இருக்கிறது..சோத்து ஆன்ரிகள் சோத்தை சாப்பிட்டதால் அன்ரிகள் ஆனார்களா இல்லை அன்ரிகள் ஆனதால்தான் சோற்ரை சாப்பிடுகிறார்களா என்பதுதான் அது... :oஇதை நான் எங்கள் யூனியில் இருந்த எல்லாப் புத்தகங்களிலும் தேடிப்பார்த்துவிட்டேன்..ஆன்ரிகள் நிறையப்பேர் சிக்கிவிட்டனர்.. ஆனால் விடைதான் சிக்கவில்லை...என் தலையில் இருக்கும் முடி எல்லாம் போனாலும் இதற்கு நான் விடைகாணாமல் ஓயமாட்டேன்.. [/size]

[size=4](அப்பொழுது ரதி தன் கான்ட் பாக்கில் இருந்த உதட்டுச்சாயத்தை எடுத்து உதட்டில் நன்றாக அப்பிவிட்டு எழுந்து நின்று நெடுக்சின் கருத்துக்கு தான் சிவப்பு புள்ளி குத்துவதாகவும் இதை யாழின் பதிவில் இருந்து தூக்கும்படி இணையவனுக்கு றிப்போட் பட்டினை அமத்தி றிப்போட் பண்ணுவதாகவும் தெரிவிக்கிறார்.. அப்பொழுது பக்கத்தில் இருந்த அலைமகள் ரதியை இழுத்துப்பிடிச்சு கீழே இருத்தி அநியாயமாக ஏசியன் கடை சாறியை மிஸ்பண்ணவேணுமோ எண்டு கேட்க ரதி நான் சாறி கட்டுவதில்லை ஒன்லி குட்டைப்பாவாடைதான் அதாலை தனக்கு கவலை இல்லை எண்டு கூறி மீண்டும் உதட்டு சாயத்தை சரிபார்க்கிரார்.. [/size]

[size=4]ரதியைக் கண்ட உற்சாகத்தில் கிருபன் பக்கத்தில் இருந்த இன்னுமொருவனின் காதில் "நட்பார்க்கும் நட்பாய நட்பல்ல நட்பாகும் நிப்பார்க்கும் போவார்க்கும் நடுவில் போகாமல் எப்போதும் நிண்டு" என்று புதுக்கவிதை சொல்கிறார். :icon_mrgreen:.ரதியைக் கன்ட நெடுக்காலபோவானுக்கும் புது வேகம் பிறக்க தன் சிற்ருரையை தொடர்கிறார்..) [/size]

[size=4]என்னைப்பொறுத்தளவில் பெண்கள் பாதிக்கண்கூட இல்லை..பிறகு எதற்கு வெட்டியாக இருகண்கள் மூண்டு கண்கள் எண்டு பேசிக்கொண்டு..கண்கள் எப்பவும் நாங்கள்தான்..நாங்கள் கண்ணெடுத்து சுட்டால் பெண்கள் காணாமல் போய்விடுவார்கள்..எப்பவும் பேரில் முன்னெழுத்து நாங்கள்தான்..பெண்கள் கார் போல..அதை ஓட்ட எப்பவும் ஒரு ட்ரைவர் வேணும்..அதுதான் நாங்கள்..எங்களின் துணையில்லாமல் பெண்களால் வாழவும் முடியாது சாகவும் முடியாது..ஆனால் நாங்கள் தனியே வாழமுடியும் [/size]

[size=4]( என்று நெடுக்ஸ் சொல்லவும் ஆத்திரம் கொண்ட சகாரா ஏசியன் சாறியும் மயிரும் என்று கத்தியபடி எழும்பி தன்ர குதி உயர்ந்த செருப்பை கழட்டி கையில் எடுத்துகொண்டு மேடையை நோக்கி ஓடிவரவும் மற்ர பெண்களும் சகாறாவை பின் தொடர்ந்து மேடைக்கு ஓடுகின்றனர்.. :lol:[/size]

[size=4]இதைக்கண்ட தமிழ் சிறி அப்படியே பாய்ந்து வந்து நெடுக்ஸை பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்கு பின்னால் ஒடுகிறார்...நெடுக்ஸ் கையில் அகப்படாத ஏமாற்றத்துடன் பெண்கள் அணி திரும்பிச்செல்ல தமிழ் சிறி நெடுக்ஸை பாதுகாப்பாக ஒருகாரின் பின்னால் ஒளித்துவைத்துவிட்டு வந்து மைக்கை பிடித்து இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்..நிகழ்ச்சிகள் சிறிய இடைவேளையின் பின் அறிவித்தபடி தொடரும் என்று சொல்லிவிட்டு பெல்ற்றை அவிட்டுக்கொண்டு பல்லை நெருமியபடி மேடையை விட்டு விறுக்கு விறுக்கெண்டு இறங்கி நெடுக்ஸிடம் செல்கிறார்.. :lol:) [/size]

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்
:D :D
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நீலமேகம் அவர்களே.. :lol: அழகான வர்ணனை..!! நிகழ்ச்சிக்கு ஹெல்மட் அணிந்து வந்த உங்கள் முன்னெச்சரிக்கையைப் பாராட்டுகிறேன்..! :icon_mrgreen:

அடுத்ததாக நிகழ்ச்சியின் மிக முக்கியமான பகுதி..! :rolleyes: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டி முடிவுகளை அறிவிக்க .. இதோ வருகிறார்.. சுபேஸ் அவர்கள்..! :D மக்களே உங்கள் பலத்த கரவொலியை எழுப்பி ஆதரவைத் தெரியப்படுத்துங்கள்....!! :wub:

வாங்க சுபேஸ்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவின் வரலாறு காணாத இந்த உரைக்கி நன்றிகள்.........

அடுத்த நிகழ்வை இசை அண்ணா அறிவிப்பார்......

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் அவர்களே.. அடுத்த நிகழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டாகிவிட்டது..! :lol: ஆனால் மண்டபத்தில் சிறு குழப்பம்.. :blink:

தாய்க்குலங்கள் கிளிப்பைக் கழட்டி எறிந்ததால் சில விக்குகள் ஆங்காங்கே சிந்திக் கிடக்கின்றன..! :lol: இவற்றை விவசாயி விக் கண்டெடுத்து இயற்கை உரமாகப் பயன்படுத்தமுடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறார்..!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்
:lol:

வணக்கம் அன்பு உறவுகளே நான் கனடா வருவதற்கு சுவிசில் இருந்து நியுயோர்க் ட்ரான்சிட் எடுத்தேன். அது கவுட்டு விட்டது அமெரிக்க அதிகாரிகளின் பரிசோதனையில் தப்பி வர அங்கிருந்து டொரோண்டோ பிளைட் லேட். அதான் நான் லேட்டா வந்தேன் எல்லோரும் என்னை மன்னியுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் அவர்களே.. அடுத்த நிகழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டாகிவிட்டது..! :lol: ஆனால் மண்டபத்தில் சிறு குழப்பம்.. :blink:

தாய்க்குலங்கள் கிளிப்பைக் கழட்டி எறிந்ததால் சில விக்குகள் ஆங்காங்கே சிந்திக் கிடக்கின்றன..! :lol: இவற்றை விவசாயி விக் கண்டெடுத்து இயற்கை உரமாகப் பயன்படுத்தமுடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறார்..!! :wub:

:D

நெடுக்க்ஸ் அண்ணாவின் சிறப்பு உரைய கேட்க்க முடியலையே யாராவது வன்ஸ் மோர் கேளுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

Late ஆ வந்தாலும் latestaa வந்த அன்பு அண்ணாவை வரவேற்கின்றோம்

துளசியின் எழுச்சி நடனம் முடிந்துவிட்டாதா இல்லை இனி தானா?? எதுக்கும் சுண்டலைக் கேட்டால் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே..நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்சிறி அண்ணா,அகூதா அண்ணா,சுண்டலின் வேண்டுகோளுக்கிணங்க போட்டிக்கா படைப்புகளை தெரிவு செய்திருந்தேன் அவற்றில் இருந்து பல வடிகட்டலின் பின் பரிசு பெறும் ஆக்கம்களாக கீழ் உள்ள மூன்று ஆக்கம் களை தெரிவு செய்துள்ளேன்..அவையாவன..

முதல் பரிசு - "மண்வாசம் தேடும் நெஞ்சம்............."(http://www.yarl.com/forum3/index.php?showtopic=107665)

இரண்டாவது பரிசு - "புலம் பெயர் வாழ்க்கையும்,மன அழுத்தமும்"(http://www.yarl.com/...howtopic=108331)

மூன்றாவது பரிசு - "இணையவெளியில் நாங்கள்.." (http://www.yarl.com/...37)

ஆகிய ஆக்கம்கள் தட்டிக்கொள்கின்றன...

நன்றி உறவுகளே..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி விக் எடுத்து வைச்சிருக்கும் விக்க்கிர்காக சகாரா அக்காவும் அலை அக்காவும் அவருடன் மோதிக்கிண்டு இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் முததல்ல சாப்பாட்டை போடுங்கப்பா :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.