Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்து மக்களுக்கு அறிவுரை சொல்லும் சீமானுக்கு திறந்த மடல் !

Featured Replies

[size=4]தமிழகத்தில் பிறந்து ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் தமிழ் உணர்வாளர்களில் ஒருவராக எழுச்சி முழக்க உரைகள் மூலம் உணர்வின் எல்லைவரை சென்றுவரும் சீமான் அவர்களுக்கு வணக்கம்![/size]

[size=4]தென்னிந்தியாவின் முன்னணி இசைக்கலைஞராக விளங்குகின்ற இசைஞானி இளையராஜா அவர்களது இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற ஏற்பாடாகி இருப்பது தொடர்பிலும் அதனை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் தெரிவித்து நீங்கள் வெளியிட்டிருந்த காணொலியினை நாங்களும் பார்வையிட்டோம்.[/size]

[size=4]கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்ற உங்களுக்கு அந்த உரிமை இன்னும் சிறப்பாக இருக்கின்றது என்றே கொள்ளலாம். ஆனாலும் நீங்கள் தற்போது கதைப்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கின்ற இரண்டு விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்கவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதால் இந்த மடலினை எழுதுவற்கான சூழல் தவிர்க்க முடியாமல் எம் மீது திணிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று மாவீரர்கள், இரண்டாவது புலம்பெயர்ந்தவர்கள்.[/size]

[size=4]மாவீரர் மாதத்தில் (நவம்பர் 3) இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது பொருத்தம் அல்ல எனவே அதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நீங்கள் கேட்டிருப்பது பொருத்தப்பாடற்றது. குறிப்பாக இவ்வாறான நிகழ்ச்சிகளைப் பார்த்த பின்னர் மாவீரர் நாளுக்காக மக்கள் தயாராக முடியுமா? என்று கேட்டிருக்கிறீர்கள். லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழக நடிகர்கள் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்கு கொண்டிருந்ததாகவும் அதில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பார்வையாளராகக் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள நீங்கள், இவ்வாறான நிகழ்வுகளில் பங்குகொள்பவர்கள் அனைத்தையும் மறந்துவிட்டதாகவும் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குகொள்ளும் இனத்தை எதிரி கொன்று குவிப்பதில் என்ன தப்பிருக்கிறது? என்று உங்களுக்கு எண்ணத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.[/size]

[size=4]இவ்வாறான ஒரு எண்ண ஓட்டம் உங்களிடம் இருப்பது உங்கள் தொடர்பிலும் உங்கள் ஈழ ஆதரவு நிலைப்பாடு தொடர்பிலும் பலத்த சந்கேத்தினை அல்லவா மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது. மாவீரர் நாளுக்கு தயாராவதற்கு எங்கள் மக்கள் மாவீரர்களை சினிமாவில் வரும் கதாபாத்திரங்களாக நினைக்கவில்லை ஐயா. அவர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் உறவுகளை தங்களுக்காக மடிந்தவர்களை தங்கள் மனதிலேயே வைத்திருக்கிறார்கள். மாவீரர் நாள் அன்று எந்த மூலையில் இருந்தாலும் தீபம் ஏற்றும் நேரம் ஒவ்வொருவர் மனங்களும் தங்களை அறியாமலேயே மாவீர்களை நினைந்துருகிக் கொள்ளும். அந்த நாளை மறந்து போவதற்கு புலத்தில் உள்ள மக்கள் ஒன்றும் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்களும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் தான். அங்கு வாழ்பவர்களின் பிள்ளைகளும், உறவுகளும் கரும்புலிகளாக, மாவீரர்களாக தாய் மண்ணில் விதையாகியிருக்கிறார்கள்.[/size]

[size=4]தாயக விடுதலைப் போராட்டம் தொடக்கம் முதல் அதனைச் சுமந்து சென்றவை இரண்டு தோள்கள் என்றால், ஒன்று தாயகத்தில் உள்ள மக்கள் , இரண்டாவது புலத்தில் உள்ள மக்கள். புலத்து மக்களும் தாயகத்து மக்களும் இணைந்து விடுதலை என்ற பிள்ளையைச் சுமந்து சென்றார்கள். தாயக விடுதலைக்காக அதன் வளர்ச்சிக்காக, அதன் கட்டுமாணங்கள் ஒவ்வொன்றையும் வளர்த்தெடுப்பதற்காக, படைத்துறைகளை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு போராளிகளதும் அன்றாட செலவிற்காக, தமிழீழத்தில் செயற்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் செலவீனத்திற்காக நிறுவனங்களில் பணி செய்த பல பத்தாயிரம் பணியாளர்களின் ஊதியங்களுக்காக, தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவைகளுக்காக, அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இன்னும் எண்ணிவிடமுடியாத பல்லாயிரம் தேவைகளுக்காக செலவிடப்பட்ட நிதிப்பங்களிப்புக்களில் பிரித்துப்பார்க்க முடியாத அளவு அள்ளி இறைத்தவர்கள் புலத்தில் வாழ்க்கின்ற எம் தமிழ் உறவுகள்.[/size]

[size=4]வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு பணம் எதுவும் இனாமாகக் கிடைப்பதில்லை என்பது தங்களுத் தெரிந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் எங்களுக்கில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் கண் துஞ்சாது நித்திரை முழித்து பழக்கமற்ற காலநிலையுடன் போராடி சிறுகச்சிறுகச் சேர்த்தவற்றையே தமது அன்றாட தேவைகளுக்கும் செலவழித்து தாய் நாட்டிற்காகவும் அள்ளிக்கொடுத்தார்கள். இவற்றை விடவும், தேசிய விடுதலைக்காக உழைத்தமைக்காக, அதற்காக குரல் கொடுத்தமைக்காக, அதற்காக ஒத்துழைத்தமைக்காக ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் உறவுகள் புலத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாத நிலையில் தாயகத்தில் வாழும் பெற்றெடுத்த தாயை உடன்பிறந்த சுற்றத்தை தாம் வாழ்ந்த முற்றத்தை எதையுமே பார்க்க முடியாத நிலையில் இன்றுவரையில் வாழ்க்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?[/size]

[size=4]லண்டன் நிகழ்வில் எம் மக்கள் பங்குகொண்டமையால் எதிரி கொன்றுகுவிப்பதில் தப்பில்லை என்று கருதுவதாகத் தெரிவிக்கும் நீங்கள்.. சரத்குமார் ராதிகா நிகழ்வில் இவ்வளவு மக்கள் கலந்துகொண்டதால் கொன்று குவிக்கப்படலாம் என்று கருதுகிறீர்களா? அதாவது கட்சி அரசியல் சார்ந்து சிந்திக்கிறீர்களா? அல்லது புலத்து வாழ் தமிழர்கள் எந்த நிகழ்விலும் பங்குகொள்ளவே கூடாது என்று கருதுகிறீர்களா? என்பதுதான் புரியவில்லை. இவ்வாறு தெரிவிக்கும் நீங்கள் அதே காணொலியிலேயே இந்த விடயத்திற்கு முரண்பட்ட விடயம் ஒன்றையும் தெரிவித்திருக்கின்றீர்கள். இளையராஜாவின் நிகழ்ச்சினை நடத்தவேண்டாம் என்று சொல்லவில்லை ஒக்ரோபர் மாதம் நடத்தலாம் அல்லது டிசம்பர் மாதம் நடத்தலாம் நவம்பர் மாதம் 2ஆம் திகதி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாள்வருகிற படியால் எவ்வாறு மறுநாள் இவ்வாறான நிகழ்வினை நடத்துவது எனக் கேள்வி எழுப்பியிருந்தீர்கள்.[/size]

[size=4]ஐயா சீமான் அவர்களே![/size]

[size=4]எங்கள் தேச விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்கள் அனைவரது நினைவு நாளையும் பார்த்தால் ஆண்டில் வருகின்ற அனைத்து நாட்களிலும் நினைவு நாட்கள் வரும்.. அதற்காகவே முதல் மாவீரன் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளை அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவுநாளாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேர்ந்தெடுத்தார். நீங்கள் கூறிய கருத்தினை முற்றாக நிராகரிப்பதற்காக இன்னும் சில உதாரணங்களை உங்களுக்காகக் குறிப்பிடுகின்றோம்.[/size]

[size=4]ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி 2007ஆம் ஆண்டு வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நடந்திருந்தது.. உங்களுக்கு நினைவிருக்கும்.. அனுராதபுரம் விமானப்படைத்தளத்தினை இலக்குவைத்து எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சம்பவத்தில் 21 கரும்புலிகள் தம்மையே அழித்து வீரவரலாறாகியிருந்தார்கள். அதேபோல டிசம்பர் 14ஆம் திகதி தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களை விட்டுப்பிரிந்த நினைவுநாள்.. எனவே உங்கள் அரசியல் நோக்கங்களுக்காக எங்கள் மாவீர்களைக் குறிப்பிட்டு இலாபம் ஈட்டுவது பொருத்தப்பாடு அற்ற ஒன்று என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.[/size]

[size=4]தமிழகத்தில் இருக்கின்ற உணர்வாளர்களின் உணர்வுகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. நீங்கள் குறைத்து மதிப்பிடுவதை நாங்கள் ஏற்கப்போவதுமில்லை. 80களில் போராட்டம் தோற்றம் பெற்றது முதல் இறுதிவரை அதற்காக உழைத்து இலைமறை காய்களாக வெளித்தெரியாமல் இருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலான தாய்த்தமிழக மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கின்றோம்.. ஆனாலும் உங்கள் கருத்து அவர்களில் பலரைக் கொச்சைப்படுத்துவதாகவே நாங்கள் உணர்கிறோம். நீங்கள் உங்களது உரையில் ஒரு விடயத்தினைக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இலங்கையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த பல நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு முற்பட்ட பலரை நீங்கள் வீடு வீடாகச் சென்று மறித்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அவ்வாறாயின் அவர்கள் அனைவரும் நிலைமையின் தார்ப்பரியத்தினை அறிந்து கொள்ளாமலா இலங்கை வருவதைத் தவிர்த்தார்கள்? அவர்கள் ஒவ்வொருவரிடமும் தமிழின உணர்வு இல்லையா? இந்திய இராணுவம் இலங்கை வந்து தமிழ் மக்கள் மீது சொல்லிவிடமுடியாத கொடுமைகளைப் புரிந்து வெளியேறிய போதும் இந்திய இராணுவத்திற்கு எதிராக பாடல்களுக்கு இசை அமைத்த கலைஞர்களும் பாடல்களைப் பாடிய பாடகர்களும் இன்றும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.[/size]

[size=4]ஈழத்தமிழர் பிரச்சினையினை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நீங்கள் மாவீர்களை கையில் எடுத்துக்கொண்டு அவர்களைக் காரணம் காட்டி மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு அனுமதிப்பது என்பது சிரமமான விடயம். மாவீரர்களை நினைப்பதற்கு அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு யாரும் வழிகாட்டி அதனைப் பின்பற்றிச் செயற்பட வேண்டிய ஒரு இழிவான நிலையில் புலத்துவாழ் தமிழினம் இல்லை என்பதை தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.[/size]

[size=4]உங்களது காணொலியில் மிகப் பௌவியமாக இசைஞானி இளையராஜா அவர்களது மனம் நோகாதபடி பார்த்துக்கொண்டு கதைத்திருக்கிறீர்கள். ஒரு இடத்திலும் அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி அவரைக் கேட்டுக்கொள்ளவே இல்லை. மாறாக அதனை ஏற்பாடு செய்தவர்களும் அதற்குச் செல்பவர்களுமே குற்றவாளிகள் போல தோற்றங்காட்டப்பட்டிருக்கிறது. உங்களது துறை சார்ந்தவர் என்பதாலும் தமிழ்த் திரைத்துறையில் மிக உயர்வான இடத்தில் இருப்பவர் என்பதாலும் நீங்கள் அவர் தொடர்பில் பக்குவமாக கருத்துச் சொல்லியிருக்கலாம். அதில் நியாயமும் இருக்கலாம். உங்களைப்போலவே புலத்துவாழ் எம் மக்களும் அவர் மீது அளவுகடந்த பக்தியும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். மாவீரர்களைக் காரணம் காட்டி ஈழத்தமிழ் உணர்வாளர்களுக்கும் அவ்வாறான கலைஞர்களுக்கும் இடையில் நீங்கள் இடைவெளியினைத் தோற்றுவித்துவிடக்கூடாது என்பதே எங்கள் ஆதங்கம். மாவீரர் நாள் வருகின்ற மாதம் என்பதைச் சொல்லி அவரது நிகழ்ச்சியினைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்துவது இளையராஜாவை நேசிக்கின்ற அதேநேரம் ஈழத்தமிழ் விடுதலையை நேசிக்கின்ற தமிழ் மக்களின் மனதினைக் கூட குழப்பிவிடலாம். எமது விடுதலைக்காக ஆதரவுக்கரம் நீட்டுகின்ற ஒரு உறவினைக்கூட நாம் இழந்துவிடக்கூடாது என்பதும் எங்களது எதிர்பார்ப்பாகும்.[/size]

[size=4]கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் புலத்தில் வாழ்பவர்கள் கலந்கொள்கிறார்கள் என ஆதங்கப்பட்டுக்கொள்ளும் நீங்கள் அந்த விழாக்களில் பங்கேற்போர் உள்ள சினிமாத்துறையில் தானே நீங்களும் இருக்கிறீர்கள், என்பதை ஏன் புரிந்துகொள்ளவில்லை. அல்லது ”ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி” என்ற கிராமத்து பழமொழிக்கு அமைய செயற்படுகின்றீர்களா? என்ற சந்தேகமும் தோன்றுகிறது.. மாவீரர்களையும் புலத்துவாழ் எம்மவர்களையும் கையிலெடுத்து நீங்கள் கதைக்க முற்பட்டதன் விளைவாகவே நாங்கள் இவ்வாறு எழுத நேர்ந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.[/size]

[size=4]எனவே இறுதியாக உங்களிடம் வினயமாக ஒரு வேண்டுகோள்,[/size]

[size=4]எங்கள் விடுதலைக்காக நீங்கள் தொடர்ந்தும் கொடுத்துவருகின்ற குரல்களுக்காக தலைவணங்குகிறோம். ஆனாலும் எங்கள் மாவீரச் செல்வங்களின் பெயர்களைச் சொல்லி எங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்லமுற்பட வேண்டாம் ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவது வாழ்வியலிலும் ஒன்றித்தவர்கள் மாவீரர்கள். மாவீரர்களை வழிபடுவதற்கான வழிகாட்டுதல்களை யாரும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை. காலத்தால் அழியாத சிரஞ்சீவிகளைச் சொல்லி எவராவது கதை சொல்ல முற்பட்டால் எதிர்த்து நிற்போம். எதிர்த்தெழுவோம்.

நன்றி[/size]

[size=4]தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்[/size]

http://www.tamilleader.com/mukiaya/6898-2012-10-17-07-30-38.html

சீமான் அண்ணனின் வேண்டுகோள் காலம் தாழ்த்தி வந்ததுதான் பிரச்சனையே தவிர அதில் உள்ள செய்தி சரியானதே.

இதையே காரணமாக்கி அவர்மீது உங்கள் குப்பைகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வியாபாரத்துக்காக வரும் இளையராஜாவுக்காக வியாபாரத்தை விட்டு எமக்காக குரல்கொடுக்கும் சீமான் போன்றவர்களை தூற்றவேண்டாம்!

இவ்வாறான கீழ்த்தரமான விமர்சனங்களை யாழ் அனுமதிப்பது கவலை தருகிறது.

[size=4]எனவே இறுதியாக உங்களிடம் வினயமாக ஒரு வேண்டுகோள்,[/size]

[size=4]எங்கள் விடுதலைக்காக நீங்கள் தொடர்ந்தும் கொடுத்துவருகின்ற குரல்களுக்காக தலைவணங்குகிறோம். ஆனாலும் எங்கள் மாவீரச் செல்வங்களின் பெயர்களைச் சொல்லி எங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்லமுற்பட வேண்டாம் ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவது வாழ்வியலிலும் ஒன்றித்தவர்கள் மாவீரர்கள். மாவீரர்களை வழிபடுவதற்கான வழிகாட்டுதல்களை யாரும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை. காலத்தால் அழியாத சிரஞ்சீவிகளைச் சொல்லி எவராவது கதை சொல்ல முற்பட்டால் எதிர்த்து நிற்போம். எதிர்த்தெழுவோம்.

நன்றி[/size]

[size=4]தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்[/size]

http://www.tamillead...7-07-30-38.html

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எங்கள் விடுதலைக்காக நீங்கள் தொடர்ந்தும் கொடுத்துவருகின்ற குரல்களுக்காக தலைவணங்குகிறோம். ஆனாலும் எங்கள் மாவீரச் செல்வங்களின் பெயர்களைச் சொல்லி எங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்லமுற்பட வேண்டாம் ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவது வாழ்வியலிலும் ஒன்றித்தவர்கள் மாவீரர்கள். மாவீரர்களை வழிபடுவதற்கான வழிகாட்டுதல்களை யாரும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை. காலத்தால் அழியாத சிரஞ்சீவிகளைச் சொல்லி எவராவது கதை சொல்ல முற்பட்டால் எதிர்த்து நிற்போம். எதிர்த்தெழுவோம்.[/size]

இப்படிச் சொல்லிச் சொல்லிதான் மாவீரர்களைக் காட்டிக்கொடுத்து அசைலம் அடித்த உங்க வீரத்தையும் சீமான் அறிவார்..! அதையும் வெளிப்படைக்குச் சொல்லுங்க.

சீமானைப் பார்த்து.. இதைச் சொல் அதைச் சொல்லாத என்று சொல்ல.. மாவீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி.. அசைலம் அடித்த தமிழர்களுக்கு உரிமை இருப்பதாகத் தெரியவில்லை..! அதனை தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் முதலில் உள்வாங்கிக் கொண்டு அறிக்கை விட வேண்டும்..! :icon_idea:

உண்மையில் இது காலம் கடந்த செயற்பட்டு இதைக் கண்டும் காணாமல் விட்டு இருக்கலாம் ஆனால் எதிர்ப்பை காட்ட போய் விளம்பரம் தான் மிச்சம்.......

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் போன்ற இனவார்வலர்கள்.. செய்ய வேண்டியது இந்த நன்றி கெட்ட ஈழத்தமிழ் சுயநலவாதிகள் மாவீரர்களை சினிமாவுக்கு முன்னால் தூசென மதிக்கக் கூடியவர்கள் என்ற அடிப்படையை விளங்கிக் கொண்டு தமிழகத்தில் அதன் கலைஞர்களிடம்.. நவம்பர்.. மே மாதங்களைப் புனித மாதங்களாகக் கருதி.. தமிழர்களின் தியாகிகளுக்குரிய மாதங்களாகக் கருதி நிற்கச் செய்து.. வெளிநாடுகளில் இருந்து இந்த மாதங்களில் விடுக்கப்படும் அனைத்து களியாட்ட நிகழ்ச்சிசார் அழைப்புக்களையும் தமிழக கலைஞர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக சுயநலம் சாராது உயிர் துறந்த அனைத்து மறவர்களுக்கும் மக்களுக்குமாக அவர்களை நினைவு கூர்ந்து புறக்கணிக்கச் செய்யவோ அல்லது திகதி மாற்றம் கோரி நிற்கவோ செய்தல் வேண்டும்.

போர்க்குற்ற சிறீலங்காவுக்கு தமிழக திரையுலகத்தினர் செல்லாதிருக்க பார்த்துக் கொண்ட தமிழக திரைத்துறை நிச்சயம்.. தியாகிகளின் பெயரால் இதனை இதய சுத்தியோடு செய்ய முடியும். அப்போதுதான் ஈழத்தமிழ் ஈனர்கள் சிலருக்கு தாம் செய்யும் அநாகரித்தின் பால் அறிவும் திருத்தமும் மாற்றமும் பிறக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

[size=4]ஈழத்தமிழர் பிரச்சினையினை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நீங்கள் மாவீர்களை கையில் எடுத்துக்கொண்டு அவர்களைக் காரணம் காட்டி மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு அனுமதிப்பது என்பது சிரமமான விடயம். மாவீரர்களை நினைப்பதற்கு அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு யாரும் வழிகாட்டி அதனைப் பின்பற்றிச் செயற்பட வேண்டிய ஒரு இழிவான நிலையில் புலத்துவாழ் தமிழினம் இல்லை என்பதை தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.[/size]

[size=4]இவ்வாறான ஒரு எண்ண ஓட்டம் உங்களிடம் இருப்பது உங்கள் தொடர்பிலும் உங்கள் ஈழ ஆதரவு நிலைப்பாடு தொடர்பிலும் பலத்த சந்கேத்தினை அல்லவா மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது. மாவீரர் நாளுக்கு தயாராவதற்கு எங்கள் மக்கள் மாவீரர்களை சினிமாவில் வரும் கதாபாத்திரங்களாக நினைக்கவில்லை ஐயா.[/size]

[size=4]மாவீரர் நாள் வருகின்ற மாதம் என்பதைச் சொல்லி அவரது நிகழ்ச்சியினைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்துவது இளையராஜாவை நேசிக்கின்ற அதேநேரம் ஈழத்தமிழ் விடுதலையை நேசிக்கின்ற தமிழ் மக்களின் மனதினைக் கூட குழப்பிவிடலாம். எமது விடுதலைக்காக ஆதரவுக்கரம் நீட்டுகின்ற ஒரு உறவினைக்கூட நாம் இழந்துவிடக்கூடாது என்பதும் எங்களது எதிர்பார்ப்பாகும்.[/size]

இறுதி யுத்தம் நடக்கும் போது சீமான் மாயாண்டி குடும்பத்தினர் படபிடிப்பில் இருந்தார் அதை யார் கண்டித்தது.

மாவீர்களை மதிப்பவர் ஆனல் என் மாவீரகளின் பாடல்களை கட்சி பாடலாக்கினர்.

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் போன்ற இனவார்வலர்கள்.. செய்ய வேண்டியது இந்த நன்றி கெட்ட ஈழத்தமிழ் சுயநலவாதிகள் மாவீரர்களை சினிமாவுக்கு முன்னால் தூசென மதிக்கக் கூடியவர்கள் என்ற அடிப்படையை விளங்கிக் கொண்டு தமிழகத்தில் அதன் கலைஞர்களிடம்.. நவம்பர்.. மே மாதங்களைப் புனித மாதங்களாகக் கருதி.. தமிழர்களின் தியாகிகளுக்குரிய மாதங்களாகக் கருதி நிற்கச் செய்து.. வெளிநாடுகளில் இருந்து இந்த மாதங்களில் விடுக்கப்படும் அனைத்து களியாட்ட நிகழ்ச்சிசார் அழைப்புக்களையும் தமிழக கலைஞர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக சுயநலம் சாராது உயிர் துறந்த அனைத்து மறவர்களுக்கும் மக்களுக்குமாக அவர்களை நினைவு கூர்ந்து புறக்கணிக்கச் செய்யவோ அல்லது திகதி மாற்றம் கோரி நிற்கவோ செய்தல் வேண்டும்.

போர்க்குற்ற சிறீலங்காவுக்கு தமிழக திரையுலகத்தினர் செல்லாதிருக்க பார்த்துக் கொண்ட தமிழக திரைத்துறை நிச்சயம்.. தியாகிகளின் பெயரால் இதனை இதய சுத்தியோடு செய்ய முடியும். அப்போதுதான் ஈழத்தமிழ் ஈனர்கள் சிலருக்கு தாம் செய்யும் அநாகரித்தின் பால் அறிவும் திருத்தமும் மாற்றமும் பிறக்கும்..! :icon_idea:

எல்லாம் சரி நெடுக்ஸ்..

மே மாசம் இந்த கிளுகிளுப்பு திரியை ஆரம்பிச்சிருக்கிறீங்களே.. :rolleyes: இது மட்டும் நியாயமா? :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103000

இறுதி யுத்தம் நடக்கும் போது சீமான் மாயாண்டி குடும்பத்தினர் படபிடிப்பில் இருந்தார் அதை யார் கண்டித்தது.

அவர்படப்பிடிப்பில் இருந்தமை கண்டிக்கப் படவேண்டும் என்று நினக்கிறீர்களா? ஏன்? மாவீரர் மாதமல்ல, கிழமையல்ல, 27ம் திகதி தன்னும் புலம் பெயர் மக்கள் தமது வேலகளை கைவிடுகிறார்களா?.

பல தரப்பட்ட வாய்வெளிச்செய்திகள் மூலம் மாவீரர் தினம் இந்த முறை பல தரப்பினராலும் சேர்ந்து ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் நடக்கப்போவதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன................நானும் புலம்பெயர் வாழ தமிழன் என்ற வகையில் இந்த உத்தியோகபூர்வமற்ற செய்தி என் காதுக்கு எட்டியது.............அப்படி நடந்தால் அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சி கொள்ளவேணும்...............ஆனால் இப்போ வரும் , திடீர் திடீர் என்று விசக்கிருமிகள் போல் ,குழப்பங்களை உருவாக்குவது போல் வரும் தலையங்கங்களையும், செய்திகளையும் பார்க்கும்போது .................உண்மையில் மாவீரர் தினம் ஒரு குடையின் கீழ் நடக்கும் என்ற செய்தி உண்மை போலவே தோன்றுகிறது ...........

புரியவில்லையா ...........மாவீரர் தினத்தை ..குழப்புவதற்கு விசக்கிருமிகளால் இயலாவிட்டால் வேறு ஏதாவது மாற்று வழிகளை தானே பின்பற்ற வேண்டும் .............

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி நெடுக்ஸ்..

மே மாசம் இந்த கிளுகிளுப்பு திரியை ஆரம்பிச்சிருக்கிறீங்களே.. :rolleyes: இது மட்டும் நியாயமா? :lol:

http://www.yarl.com/...howtopic=103000

தேசிய துக்க வாரத்தில் அன்றி அதற்குப் பின்னர் தான் கேட்கப்பட்டுள்ளது..!

இது ஒரு நாட்டில் நிகழ்த்தப்பட்ட பல்லாயிரம் பேர் பங்களித்த களியாட்ட நிகழ்வா. ஒரு தனி மனிதன் மற்றும் ஒரு சிறு குழுமம் கேட்கும் பார்க்கும் திரி. அந்த வகையில் அதன் தாக்கம் ஓரிருவருக்குள்.

இருந்தாலும் எதிர்காலத்தில் இதனையும் இயன்றவரை தவிர்க்க இருக்கிறோம்..! உங்கள் கருத்தை மதித்து அதனை நடைமுறைப்படுத்துகிறோம். மாட்டமுன்னு அடம் பிடிக்கேல்ல..! :icon_idea::)

இறுதி யுத்தம் நடக்கும் போது சீமான் மாயாண்டி குடும்பத்தினர் படபிடிப்பில் இருந்தார் அதை யார் கண்டித்தது.

மாவீர்களை மதிப்பவர் ஆனல் என் மாவீரகளின் பாடல்களை கட்சி பாடலாக்கினர்.

இறுதி யுத்தத்தின் போது நீங்கள் செய்யும் தொழிலை விட்டிட்டு வீதியிலா இறங்கி நின்றீர்கள்..????!

தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்த விடயங்களைப் பகிர..ஒருவேளை அவர் தேசிய தலைவரை நேரில் சந்தித்து அதற்கான அனுமதி பெற்றிருக்கக் கூடும். நீங்கள் தேசிய தலைவரை சந்தித்து ஏதாவது பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா..??! அவர் அப்படியல்ல..! அவர் தேசிய தலைவரோடு சிநேகித பூர்வ சந்திப்புக்களை நடத்தியவர்..! கருத்துக்களை பரிமாறிக் கொண்டவர்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தான் ஒரு அரசியல்வாதி இல்லை என்று சொல்லியிருக்கின்றார். உணர்ச்சிகரமாகப் பேசி தமிழரின் அடையாளத்தைக் காக்கமுடியும் என்று நினைக்கின்றார். அதனால்தான் சிலவேளைகளில் உணர்ச்சி மேலீட்டினால் வாயில் இருந்து என்ன வருகின்றது என்று தெரியாமலேயே பேசிவிடுகின்றார்.

அரசியல் போராட்டம் மட்டுமே எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களுக்கு சீமான் நல்லது செய்யவேண்டுமென்றால் முதலில் அவரைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை இனங்காணும் கெட்டித்தனம் வேண்டும்.

  • தொடங்கியவர்

தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்த விடயங்களைப் பகிர..ஒருவேளை அவர் தேசிய தலைவரை நேரில் சந்தித்து அதற்கான அனுமதி பெற்றிருக்கக் கூடும். நீங்கள் தேசிய தலைவரை சந்தித்து ஏதாவது பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா..??! அவர் அப்படியல்ல..! அவர் தேசிய தலைவரோடு சிநேகித பூர்வ சந்திப்புக்களை நடத்தியவர்..! கருத்துக்களை பரிமாறிக் கொண்டவர்..! :icon_idea:

மாவீர் நாளிலும் தாயக விடுதலைக்காக வித்தாகிய புனிதர்களை துயிலுமில்லத்தில் விதைக்கும்போதும் ஒலிக்கும் ஒரு புனிதமான பாடலைமாற்றி தனது அரசியல் கட்சியின் கொள்கை விளக்கப்பாடலாக மாற்றியதற்கு இப்படி ஒரு சப்பைக் கட்டா? இதற்குத் தேசியத் தலைவரை துணைக்கழைத்து அவரை அவமானப்படுத்தாதீர்கள்.

சீமான் ஈழத்துக்குச் சென்றது நிதர்சனப் போராளிகளுக்கு வகுப்பெடுப்பதற்காகத்தான். பல துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்களும் போராளிகளுக்கு கற்கைநெறி புகட்ட ஈழத்துக்குச் சென்றுள்ளார்கள். அவர்களை சந்திப்பதுபோல்தான் சீமானையும் தலைவர் சந்தித்துள்ளார்.

”வாடா தம்பி” ”என்னடா தம்பி” என்று தலைவர் தன்னைக் கூப்பிட்டதாக சீமான் கதையளப்பதை எம்மவர் பலர் நம்புவதுதான் வேடிக்கையாக உள்ளது.

தலைவரை அறிந்த பலருக்கும் தெரியும் ஒரு திரைப்பட இயக்குனருடன் தலைவர் அரசியல் கதைத்திருக்கமாட்டார் என்று. இன்று சீமான், கருணாநிதியைப் பற்றி தலைவர் இப்படிச் சொன்னவர் ஜெயலலிதாவைப்பற்றி அப்படிச் சொன்னவர் என்று சொல்வதெல்லாம் தனது அரசியல் தேவைக்காகத்தான்.

ஒரு வருடத்துக்கு முதல் நான் பெரியாரின் பேரன் பிரபாகரனின் தம்பி என்று மேடையில் முழங்கியவருக்கு இன்று திடீரென பெரியார் துரோகியாகிவிட்டார். நாளை தனக்கு அரசியலில் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்றால் எம் தலைவரையும் விமர்சிப்பார். இவர் எல்லாம் கொள்கைக்காரன் என்று சொல்வது வேடிக்கையாகவுள்ளது.

அசின் சிறிலங்காவுக்குப் போய் மகிந்த பரிவாரங்களைச் சந்தித்தார். அந்நேரத்தில் அசின் நடித்த காவலன் படத்தை வெளியிடவிடமாட்டோம் என்று சீறிய சீமான் சந்திரசேகரையும் விஜயையும் சந்தித்தபின்பு எதிர்ப்பைக் கைவிட்டார். விஜயை வைத்து ஒரு படம் இயக்க சந்தர்ப்பம் தரப்படும் என உறுதியளித்தவுடன் காவலனுக்கான எதிர்ப்பை விலக்கிக்கொண்ட சீமான் கொள்கை வீரனா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.