Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக சாட்சியங்கள் கிடையாது – அரசாங்கம்

Featured Replies

[size=3]

[/size][size=3]

[/size][size=3]

[/size][size=3]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பிக்கு எதிராக சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முறைப்பாடுகளோ அல்லது சாட்சியங்களோ இன்றி குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்hளார்.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஏனைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை அபிவிருத்திப் பணியில் ஈடுபடுத்தக் கிட்டியமை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக குமரன் பத்மநாதன் வடக்கு கிழக்கு அபிவிருத்தி இலக்காகக் கொண்டு இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவகையில் இந்த அரசாங்கம் இதனை ஒரு வெற்றியாகவே பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட லக்ஷ்மன் ஹூலுகல்ல, தமக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு பயங்கரவாதத் தலைவரை இப்படி இந்த நாட்டின் அபிவிருத்தியில் பங்காளியாக மாற்றியமையினை வெற்றியாக பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆள் அரவமற்று கிடக்கின்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட தமிழ்ச் செல்வனின் வாசஸ்தலத்தை தற்போது குறித்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக கே.பி பயன்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளராகவும், சர்வதேச நிதிக் கொடுக்கல் வாங்கல் வலைமைப்பையும் குமரன் பத்மநாதன் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

க்ளோபல் தமிழ்

[/size]

இலங்கையின் பிரதான மூன்று மொழி பத்திரிகைகளிலும் மன்னிப்பு கோரி பிரசுரங்கள் விடவேண்டும்.

குமரன் பத்மநாதனுக்கு நட்ட ஈடுகள் வழங்கி சிங்கபூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலைவழக்கில் தேடினாங்களே.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது சாட்சியங்கள் அற்ற தேடல்...! ராஜீவ் கொலையில்.. ஒரு சாட்சியமும் மிஞ்சவில்லை. சிறையில் உள்ளது அப்பாவிகள். பற்றரி வாங்கினது.. சிகரெட் வாங்கினது.. என்று தூக்கி உள்ள போட்டு மரண தண்டனை வேற வழங்கி வைச்சிருக்கினம்.

ராஜீவ் கொலை.. சாட்சியமற்ற ஒரு ஜியோபொலிரிக்கல் மேடர்..! அந்த கோப்பை தூக்கி குப்பையில் வீசுவதே இந்தியாவிற்கு நீண்ட கால நன்மை. சாலச்சிறப்பு..! :icon_idea:

தேடப்படும் குற்றவாளியான டக்கிளசை ஒரு விசேட இராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா கைது செய்ய உரிமை கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டதற்காக பிரபாகரனை நோக்கி ஒரு இன அழிப்பு யுத்தத்தை செய்ய இந்தியா உதவலாம் என்றால் ஏன் ஒரு தேடப்படும் ஒளித்து வாழும் குற்றவாளியைப் பிடிக்க இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடாது..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

ராஜீவ் கொலைவழக்கில் தேடினாங்களே.. :rolleyes:

எமக்கெதிராக ஒரு பெரிய திட்டமிட்ட திறமையான கொலையை செய்தவரையே நாம் பங்காளிகளாய் இணைத்ததும் எங்களுக்கு பெரிய வெற்றி என்று இந்தியன் ரோ அறிக்கை விடும் இசை.............. :D

  • கருத்துக்கள உறவுகள்

"கே பி மீது எந்த வழக்கும் இல்லை"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 அக்டோபர், 2012 - 15:31

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் மீது இனிமேல் எந்த குற்றச்சாட்டுக்களையும் பதியும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் புதனன்று பிபிசியிடம் தெரிவித்தார் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் தலைவர் லக்ஷ்மண் ஹுலுகல்ல.

இலங்கையின் உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு கடுமையான சண்டையிடலுடன் முடிவுக்கு வந்தபோது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அந்த அமைப்பின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொல்லப்பட்டார்கள்.இந்த பின்னணியில் பத்மனாதன் தொடர்ந்தும் அரசின் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா என்று கேட்டபோது, இன்றைய நிலையில் அவர் எந்தவித காவலிலும் இல்லை என்றார் ஹுலுகல்ல.

அதேசமயம், இண்டர்போல் எனப்படும் சர்வதேச புலனாய்வுப் போலிஸ் அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் பத்மநாதன் பெயர் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத குற்றங்கள், மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்களை கொண்டு செய்த குற்றச்செயல்கள் தொடர்பில் இந்தியாவினால் அவர் தேடப்பட்டுவருவதாக இண்டர்போல் அமைப்பு கூறுகிறது.

அரசின் இன்றைய அறிவிப்பை பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது வெளிநாட்டில் இருந்த பத்மநாதன் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று கூறுயிருக்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ஜெயலத் ஜெயவர்த்தன.

கேபியின் மர்மப்பின்னணி

பிரபாகரனின் இறப்புக்குப் பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார். ஆனால் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அவர் மர்மமான முறையில் இலங்கைக்கு திரும்பினார்.

இலங்கையின் புலனாய்வு அமைப்பின் தலையீட்டின் பேரில், அவர் மலேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டதாகவும், சட்டவிரோதமான முறையில் அவர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அப்போது வெளிவந்த செய்திகள் தெரிவித்தன.

அப்போது இலங்கையின் அரச தொலைக்காட்சியில் அவர் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சதிசெய்ததாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியதாகவும் கூறப்பட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கான ஆயுத கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளுக்கு அவர் தலைமை தாங்கிச் செயற்பட்டார்.

கேபி தற்போது எங்கிருக்கிறார்?

இதுநாள் வரை அவர் தடுப்புக்காவலில் இருப்பதாகவே அரச தரப்பில் கூறப்பட்டு வந்தது. அதேசமயம் அவர் இலங்கையின் வடபிராந்தியத்தில் செயற்படும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததோடு, அதற்காக அவர் அடிக்கடி வடக்குப்பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டும் வந்தார்.

தற்போது பத்மநாதன் எங்கிருக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின் தலைமையகமாக செயற்பட்ட கிளிநொச்சியில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது இலங்கை அரசுக்கு வெற்றி என்கிறார் ஹுலுகல்ல. ஒரு காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழர்களுக்காகவும் இருந்தவர், இன்று இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சிகாக உழைப்பதாக தெரிவித்த ஹுலுகல்ல, அதை செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் அதிகார மட்டத்தில் மிகவும் சிறிய பதவிகளை வகித்த பலர் இன்னமும் வழக்குகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில், அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் சுதந்திரமாக நடமாட முடிந்தது எப்படி என்று பிபிசி சார்பில் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, பத்மநாதன் மீது எந்தவிதமான சட்ட ரீதியான புகாரும் இல்லாததால் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121017_nocaseagainstkp.shtml

[size=6]Sri Lanka frees Tiger leader wanted by India[/size]

[size=5]The last leader of Sri Lanka's Tamil Tigers, who is wanted by India over the assassination of former premier Rajiv Gandhi, has been freed from military custody, the defence ministry said Wednesday.[/size]

[size=5]Selvarasa Pathmanathan, who was arrested in August 2009, was no longer in detention and was free to carry out work for a charity he had formed, said Lakshman Hulugalle, the head of the defence ministry's media centre.[/size]

[size=5]The announcement comes less than a month after the closure of the last camps which had housed people who were displaced by the 37-year conflict and amid pressure on the government to pursue reconciliation with minority Tamils.[/size]

[size=5]But the main Tamil political party said the release should not be seen as an act of reconciliation, asserting that Pathmanathan -- who is also known as "KP" -- had cut a deal with the government.[/size]

[size=5]The news emerged when Hulugalle was asked how Pathmanathan, who has an Interpol arrest warrant initiated by India against him, was reportedly living in the island's north.[/size]

[size=5]India regards the 58-year-old Pathmanathan as a key suspect in the May 1991 assassination of Gandhi by a Sri Lankan Tamil suicide bomber during an election rally in the southern Indian state of Tamil Nadu.[/size]

[size=5]"Practically, there is no detention now," Hulugalle told a press conference.[/size]

[size=5]He said Pathmanathan was running a non-government organisation and doing "development work" in the island's north. "There is no court case against him," he added.[/size]

[size=5]"This (transformation of Pathmanathan) is a victory for us. A person who had been working against us and leading Tamil people is now working to develop the country."[/size]

[size=5]Pathmanathan, the chief international arms buyer for Tigers, was appointed the head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) by its elusive leader Velupillai Prabhakaran just before he was killed by Sri Lankan troops in 2009.[/size]

[size=5]Sri Lanka's military victory in May 2009 ended the LTTE's nearly four-decade long struggle for an independent Tamil homeland, one of Asia's longest running ethnic conflicts.[/size]

[size=5]Rights groups have accused Sri Lankan security forces of killing up to 40,000 civilians in the final stages of the ethnic war, a charge vehemently denied by the military.[/size]

[size=5]Sri Lanka is also under international pressure to share political power with the minority ethnic Tamil community and address grievances of racial discrimination that fuelled the LTTE's separatist struggle.[/size]

[size=5]The country's main Tamil political party, the Tamil National Alliance (TNA), gave a cool response to the release, saying Pathmanathan had cut his own deal.[/size]

[size=5]"We have nothing against KP, but if he can be released without any charges, what is the justification for holding 800 Tamils in prison -- some for over 10 years -- without any charges," TNA lawmaker Suresh Premachandran told AFP.[/size]

[size=5]"If the government is serious about reconciliation they can start by (releasing) all those Tamils in custody who have no charges against them for long periods."[/size]

[size=5]A senior Asian diplomat, speaking on condition of anonymity, said that the government saw Pathmanathan as a possible ally for local elections in the former war zone next year and even as a potential provincial "chief minister candidate".[/size]

[size=5]Pathmanathan was arrested in August 2009 by undercover Sri Lankan security agents at an undisclosed South East Asian destination and flown to Colombo.[/size]

[size=5]Government spokesman Keheliya Rambukwella described Pathmanathan's arrest at the time as a major blow to LTTE's remnants abroad.[/size]

[size=5]The state-run media had also accused Pathmanathan of a string of criminal activities, including gun running and drug smuggling.[/size]

[size=5]There was no immediate comment from the Indian embassy to Pathmanathan's release which came despite an Interpol arrest warrant against him at the request of the authorities in New Delhi.[/size]

http://my.news.yahoo.com/lanka-frees-tamil-tiger-leader-103109575.html

[size=4]கே.பி. வட மாகாண முதலமைச்சர் பதவிக்கு மகிந்தாவால் நியமிக்கப்பட்டால் / [/size][size=4]போட்டியிட்டால் [/size][size=4]அது இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட சவாலே![/size]

[size=4]

A senior Asian diplomat, speaking on condition of anonymity, said that the government saw Pathmanathan as a possible ally for local elections in the former war zone next year and even as a potential provincial "chief minister candidate".
[/size]
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலைவழக்கில் தேடினாங்களே.. :rolleyes:

சிறிலங்காவில் குற்றவாளியோ சுற்றவாளியோ என்று தீர்மானிப்பதே இந்தியாவின் மேல் மட்டம்தான். இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் கூட இந்தியாவின் வழி நடத்தலிலையே எல்லாம் நடந்ததாம் அப்படி இருக்க KP இன் விவகாரம் ஒரு பெரியவிசயமா ?

கேபி பாவம் அவர் புலியே இல்லை. அப்புறம் எப்பிடி???

நெடுக்கர் சொன்ன மாதிரி குற்றவாளி குத்தியன் டக்குவை பிடிக்க தனிபடையை இலங்கைக்கு ஜெயலலிதா அனுப்ப வேண்டும்.

தமிழ் நாட்டு காவல் துறையை பாதுகாப்பு கொடுக்க வக்கற்றவர்கள் எண்டு சொன்னதற்காகவே இருபது வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குற்றமும் செய்யாமல் சந்தேகத்தினபேரில் கைது செய்யப்பட்டு பலவருடங்கள் சிறைகளில் வாழும் அப்பாவி இளைஞர்கள் யுவதிகளும் குற்றமற்றவர்கள் என்று அரசு சொல்லுமா?

  • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் வக்காலத்து வாங்கும்போதே.... தெரிகிறது,

இவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்(தால்)துக்கு, வேண்டப் பட்டவர் என்று....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குற்றமும் செய்யாமல் சந்தேகத்தினபேரில் கைது செய்யப்பட்டு பலவருடங்கள் சிறைகளில் வாழும் அப்பாவி இளைஞர்கள் யுவதிகளும் குற்றமற்றவர்கள் என்று அரசு சொல்லுமா?

கந்தப்பு

அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதற்கு அரசிடம் ஆதாரங்கள் இருக்கிறதா?

D30944686.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு

அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதற்கு அரசிடம் ஆதாரங்கள் இருக்கிறதா?

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத்தான் ஆதாரத்தை திரட்டுவார்கள். யாரும் குற்றம் செய்யவில்லை என்று நிருபிக்க ஆதாரத்தை தேடிக்கொண்டிருப்பார்களா?

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்தான் இவ்வாறு ஆதரமில்லாமல் ஆண்டுக்கணக்கில் மக்களை அடைத்துவைக்க முடியும்.

[size=4]இலங்கை அரசின் Three Stooges களில் ஒருவரான கெகெலிகிய தனது கொமேடிகளை பி.பி.சி க்கு சொல்லி இருக்கிறார். சட்டங்களில் ஓட்டைகளை கண்டுபிடித்து அவற்றை தங்களுக்கேற்றவகையில் பயன்படுத்த அரசு பின்னிற்க போவதில்லை என்கிறார்.[/size]

[size=5] கே.பி. அரச சார்பற்ற நிறுவனம் நடத்த முடியும்': இலங்கை அரசு[/size]

பல பெயர்களில் மறைந்து வாழ்ந்துள்ள கே.பி. இண்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளார்

விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட 2009-ம் ஆண்டு காலப்பகுதியில் அந்த இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை இலங்கை அரசு எந்த அந்தஸ்தில் வைத்திருக்கிறது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விகளுக்கு அரசிடமிருந்து கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரபூர்வமான, தெளிவான அறிவித்தல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இன்று வெள்ளிக்கிழமை இந்த கேள்விகளை ஊடகவியலாளர்கள் எழுப்பினார்கள்.

30 ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் நாட்டில் நிரந்தர சமாதானத்தை பேணுவதற்காக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பல வகையான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டி இருக்கிறது என்று அமைச்சர் கெஹெலிய இங்கு தெரிவித்தார்.

கே.பி. பற்றி அமைச்சர் பதில்

மாற்று மீடியா வடிவில் இயக்க

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னணியில், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகள் செல்வாக்கு செலுத்துவதாகவும் கே.பி விவகாரத்தை அரசு கையாளுகின்ற முறைமையும் அப்படித்தான் என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்பாக, புலம்பெயர் தமிழர்களை இலங்கைக்கு அழைத்துவந்து ஜனாதிபதி மகிந்த தலைமையில் பேச்சு நடத்தவேண்டிய தேவை அரசுக்கு இருந்துவருவதாகவும் அமைச்சர் கெஹெலிய கூறினார்.

மன்னிப்பு ?

சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள கே.பிக்கு இலங்கை அரசாங்கம் மன்னிப்பு வழங்கிவிட்டதா என்ற கேள்வியை இதன்போது பிபிசி செய்தியாளர் எழுப்பினார்.

'மன்னிப்பு வழங்குவதா அல்லது அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறந்துவிடுவதா என்பது அல்ல இங்குள்ள பிரச்சனை. எமக்கு சட்டத்தில் ஏதாவது வாய்ப்பு இருந்தால், அதனை விரிவான சமூக நீதியின் அடிப்படையில் பரிசீலித்து பார்க்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது' என்றார் கெஹெலிய ரம்புக்வெல்ல.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, இலங்கை அரசு கூட இன்னும் குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ளாதிருக்கின்ற குமரன் பத்மநாதன் எப்படி அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்திச் செல்கிறார், அதற்கு எப்படி அரசு அனுமதியளித்திருக்கிறது என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டது.

'இந்த பிரச்சனை யுத்தத்தின் மூலம் மட்டும் முடிந்துவிடவில்லை என்ற நிலைப்பாட்டில் தான் அரசு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்கிறோம். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்கிறோம். எல்எல்ஆர்சி பரிந்துரைகளில் 50 வீதத்துக்கும் அதிகமானவற்றை நிறைவேற்றியிருப்பது அதற்காகத் தான்' என்று அந்தக் கேள்விக்கு நேரடியாக அமைச்சர் பதில் கூறாமல் விட்டுவிட்டார் அமைச்சர்.

சாட்சியாளர்?

இதன்போது, கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர் கே.பியை அரசின் சாட்சியாளராக கருத இடமிருக்கிறதா என்று கேட்டார்.

'இதுவரை அப்படித்தான் நடக்கிறது. அவர் முன்வைத்துள்ள சில சில வாக்குமூலங்கள் மற்றும் தகவல்கள் மூலமாகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்துள்ளது' என்று அதற்கு கெஹெலிய பதிலளித்தார்.

குமரன் பத்மநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், 'குற்றங்களுக்கு எந்தவித மன்னிப்பும் பெறாத ஒருவர் என்னவென்று ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தை நடத்திச்செல்ல முடியும்' என்ற கேள்வியை பிபிசி செய்தியாளர் மீண்டும் எழுப்பினார்.

[size=4]'குற்றவாளி ஒருவருக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தமுடியாதா? ஏன்முடியாது? அவர் அரச சார்பற்ற நிறுவனத்தை நடத்துவதற்கு நாங்கள் தானே அனுமதி தருகிறோம்' என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதிலளித்தார்[/size]

http://www.bbc.co.uk...pkeheliya.shtml

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.