Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலதும்,பத்தும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும் இப் பதிவில் நான் வாசித்த,கேட்ட விடயங்களையும்,எம் மனதில் எழும் கேள்விகள்,சந்தேகங்கள் போன்றவற்றை எழுதப் போகிறேன்...அநேகமான விடயங்கள் புத்தகங்களில் வாசித்ததாவும்,என் மனதில் தோன்றும் சந்தேகங்களாகவும் இருக்கும்...வாசித்து விட்டு என்னைத் திட்டுக :lol:

வெகு நாட்களாக

நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட

என் எதிர் இருக்கை

பருகப்படாமல் வீணாகிறது

உன் வருகையை எதிர்பார்த்து

பகிர்ந்து வைக்கப்படும்

ஒரு கோப்பை தேனீர்

ஒரு கோப்பை மது

[நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது]

நீண்ட‌ என் அழைப்புகள்

ஒரு காத்திருப்பை முன்னிருத்தி

விசும்பலாகி

மெல்லக் கரைகின்றன.

கிழக்கிலிருந்து புறப்பட்டு

மேற்கில் சென்று ஒடுங்குகின்றன

பகல்கள்

ஒரு வயோதிபனைப் போல,

அனேக இர‌வுகளில்

பெரும் புயலென

உருக்கொள்கிறது

தனித்து விட‌ப்பட்டதன்

துக்கம்.

பிர‌ளயத்திற்கு

பிறகான ஓர் அந்தியில்

நீ வந்து அமர்கிறாய்

வசிய பூங்கொத்துட‌ன்

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

(பிரியத்திற்கு...)

  • Replies 584
  • Views 41.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேரத்தோடு எதையும் செய்யவேண்டும் என்பதை தெளிவாகச் சொல்கின்றன இந்த வரிகள்..! :rolleyes: ஆனால் ஆண்களால் இலகுவில் கடைப்பிடிக்க முடியாத தகுதிகளுள் இதுவும் ஒன்று..! :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]எளிய தமிழில் எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றது. நன்றாக இருக்கின்றது. நன்றி :)

[size=1]ஒரு சிறுகுறிப்பு:

"நாட்கள்" என்று எழுதுவது தவறாகும் மாறாக "நாள்கள்" என்பதே சரியான பதமாகும்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை கொடுமையானது.

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்காக நீண்ட காலம் காத்திருந்தால் காத்திருப்பே ஆளைக் கொல்லும். விரைவில் வரவழைக்க வழிவகைகளை ஆராய்திருந்தால் வசிய பூங்கொத்துடன் வந்தவருடன் சந்தோஷமாக இருந்திருக்கலாம்.

எல்லாம் சீராக இருக்கவேண்டும் என்றும் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்றமுடியும் என்ற கொள்கையையுடையவர்கள் (Perfectionists) பல சந்தர்ப்பங்களைத் தவற விடுகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி;இது ஒரு நல்ல காரியம்.இந்தக் நல்ல காரியத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்காது.ஆனால் இந்த நல்ல காரியத்தை செய்யாமல் போனால் பெரிய பாவம் வந்து சேரும்.அந்தப் பாவம் அவனுடைய வம்சத்தையே பாதிக்கும்.அந்த நல்ல காரியம் எது?

...................................................................................................................................................................................................

கூடவே

இருந்தும்

ஒருநாள் சொல்லாமல்

பிரிகிகின்றேன் என்று

கவலைப்படாதே!

நான்

பிரியும் நேர‌த்தை

சொல்லிவிட்டால்

நீ உன்னுடைய

சந்தோச‌த்தை

இழந்து இடுவாய்.

இப்படிக்கு உன் உயிர்

முதலாவது கவிதை நெஞ்சை அழுத்தியது ரதி.

(ஒரு கவிதைக்காக ஒருத்தியை அயுளுக்கு வதைக்க வேண்டுமா ?)

**************************************************************************

தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். என்னைவிட சற்று வயது குறைந்தவள் என்று நினைக்கிறேன். சில வருடங்களிற்கு முன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்தாள். மத்தியான சாப்பாட்டு நேரம் எதையாவது பற்றிக் கதைப்போம். ஒரு நாள் மூட் அவுட்டாக்கும் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கதைக்கும் போது

"எந்தவிதமான காரணமுமின்றி நாம் சிலவேளைகளில் கவலையாக‌ இருப்போமல்லவா" என்றேன்.

அவள் இரக்கமாகப் பார்த்தபடியே சொன்னாள் "[size=4]You are feeling lonely[/size]"

ஆ.. அப்புறம்? :D

ஆ.. அப்புறம்? :D

சிரிப்புத் தாங்க முடியல்லை.

மேட்டருக்கு வராம இடையிலை நிற்பாட்டி ஆர்வத்தைத் தூண்டுகிறார் யுவர் ஆனர். :D

ஆ.. அப்புறம்? :D

அப்புறம் என்ன ?

சினிமா டைரக்டர் சார் ரெண்டு கையையும் "[size=5]L"[/size] ஷேப்பில விரிச்சு சீன் ஓபனாகிற மாதிரி நினைச்சிட்டு உங்க உங்க கற்பனைய ஓபன் பண்ண வேண்டியது தான். :D

அப்புறம் என்ன ?

சினிமா டைரக்டர் சார் ரெண்டு கையையும் "[size=5]L"[/size] ஷேப்பில விரிச்சு சீன் ஓபனாகிற மாதிரி நினைச்சிட்டு உங்க உங்க கற்பனைய ஓபன் பண்ண வேண்டியது தான். :D

Edited by பூச்சாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி;இது ஒரு நல்ல காரியம்.இந்தக் நல்ல காரியத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்காது.ஆனால் இந்த நல்ல காரியத்தை செய்யாமல் போனால் பெரிய பாவம் வந்து சேரும்.அந்தப் பாவம் அவனுடைய வம்சத்தையே பாதிக்கும்.அந்த நல்ல காரியம் எது?

...................................................................................................................................................................................................

பதில்;ஒரு மகன்/மகள் தன் வயதான் பெற்றோரைப் பேணிக் காப்பது

ரதி நல்லாருக்கு.தொடருங்கள்.really like it.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கும்,கீரிக்கும் சண்டை வந்தால்,கீரி மட்டும் வெற்றிக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போவதற்குக் காரணம்,பாம்பின் விசம் அதை பாதிக்காதது தான்.எந்த ஒரு விலங்கையும்,பாம்பு கடித்து விட்டால் ரத்த ஓட்டம் உறைந்து நரம்பு மண்டலம் செயலிழந்து போய் உடனே மரணம் தான்.ஆனால்,கீரிக்கு அந்த மரண பயம் கிடையாது.காரணம்,கீரியின் நாக்கில் உள்ள சொர சொரப்பான பகுதியில் "அன்டி ஸ்நேக் வெனம்" என்ற மருத்துவ குணம் கொண்ட எச்சில் சுரக்கிறது.இந்த எச்சில் வீரியம் கீரியின் ரத்த ஓட்டத்திலும் இருப்பதால் பாம்பின் விசம் ரத்தத்தை உறைய வைப்பதில்லை.இது தவிர கீரிகள் பொதுவாகவே புல் பூண்டுகளுக்கு மத்தியில் மறைந்து இருக்கும் ஒரு மூலிகைத் தாவரமான "மங்கூஸ் வேயில்" எனப்படும் சித்தர் காலத்து செடியைக் கண்டு பிடித்து,அதனுடைய வேரை ருசி பார்க்கிறது.அந்த வேரில் நஞ்சு முறிக்கும் வஸ்து இருப்பதே கீரியை பாம்பின் விசம் தாக்காமல் இருப்பதற்கு காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எல்லா மதத்தவர்களும் விரதம் இருக்கிறார்கள்...விரதம் இருப்பது முக்கியமாக கடவுள் பக்திக்காகவும், மனக் கட்டுப்பாட்டுக்காகவும் ஆகும்...தொடர்ந்து விரதம் இருக்கும் போது பசிக்காது ஏனெனில் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் ஆனால் விரதம் முடிந்து அடுத்த நாளே பசிக்கும்...ஒரு விதத்தில் பார்த்தால் விரதம் மூலம் மனக் கட்டுப்பாடு வரும் என்டாலும் இன்னொரு விதத்தில் பார்த்தால் விரதம் இருப்பவர்கள் போன பிறப்பில் ஏதோ பெரிய பாவம் செய்தவர்களாக இருப்பார்கள் என்றும் நினைக்க தோன்றுகிறது...தண்ணீர் கூட குடிக்க முடியாத அளவிற்கு இருப்பது அவர்கள் செய்த பாவமா அல்லது மனக் கட்டுப்பாடா?

போன பிறப்பு இருந்தால் தானே அதில் பாவ புண்ணியம் இருப்பதற்கு.

விரதம் உடலாரோக்கியத்துக்கு நல்லது. காரணமில்லாமல் சாப்பிடாமல் இருக்க மனம் இடம் கொடுக்காது. கடவுள் என்ற காரணத்தை முன்வைத்த அதன் பெயரில் பயத்தில் பட்டிணியாக இருந்து உடல் பருமனை குறைக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போன பிறப்பு இருந்தால் தானே அதில் பாவ புண்ணியம் இருப்பதற்கு.

கடவுளை நம்புவோருக்கு போன பிறப்பும் இருந்தது, மறு பிறப்பும் இருக்கும் பாவ,புண்ணியத்தைப் பொறுத்து

விரதம் உடலாரோக்கியத்துக்கு நல்லது. காரணமில்லாமல் சாப்பிடாமல் இருக்க மனம் இடம் கொடுக்காது. கடவுள் என்ற காரணத்தை முன்வைத்த அதன் பெயரில் பயத்தில் பட்டிணியாக இருந்து உடல் பருமனை குறைக்கலாம்.

இதுவும் உண்மை தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லட்சத் தீவுகள் என்று அழைக்கப்படும் தீவில் லட்சம் தீவுகள் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அந்தத் தீவில் 27 தீவுகள் மட்டுமே இருக்கின்றன.பிறகு ஏன் அது லட்ச‌த்தீவு என்று அழைக்கப்பட‌ வேண்டும்? 16ம் நூற்றாண்டில் இந்தத் தீவுகள் போர்த்துகீயேச‌ர் வச‌ம் இருந்தன.அதன் பின்னர் கொனார்க் மன்னன் அலிராஜனிட‌ம் இந்தத் தீவுகள் ஒப்படைக்கப்பட்டன.18ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வியாபார‌ம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தத் தீவுகளை கைப்பற்றிக் கொண்டார்கள்.பின்னர் அலிராஜா கேட்டுக் கொண்ட‌தற்கு இணங்க ரூ 1 லட்சத்திற்கு அவருக்கே இந்தத் தீவுகளை விற்றார்கள்.அதிலிருந்து இத் தீவு லட்சத்தீவுகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

18 ஆம் நூற்றாண்டில ஒரு லட்சம் ருபாயின்னா எவ்வளவு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயிலுக்குப் போனால் தான் மன அமைதி கிடைக்கும் என்று உங்களில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.அது தவறு.நீங்கள் மன அமைதியோடு இருப்பதும்,இல்லாததும் உங்கள் கைகளில் இருக்கின்றது.நீங்கள் மன அமைதியோடு,சந்தோசமாக இருக்க வேண்டுமானால் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.எவரையும் குறை கூறாதீர்கள்.குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர்.எது நடந்தாலும் அது கடவுளின் விருப்பத்தால் நடக்கிறது.கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவும் நடப்பது இல்லை.ஏதாவது நடந்தது என்டால் அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்று பொருள்.நீங்கள் பொறுமையோடு இருப்பதை சிலர் கையாலாதவர்கள்,கோழை என்று பேசுவார்கள்.அப்படிப் பேசுபவர்கள் பேசி விட்டுப் போகட்டும்.உங்கள் பொறுமைக்கு உரிய பரிசைக் கடவுள் தரும் போது கேலி பேசியவர்கள் புரிந்து கொள்வார்கள் [வாசித்தது]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை பெய்யும் போது ஓக் மர‌த்திற்கு கீழ் நின்டால் இடி நம்மைத் தாக்காது என சொல்லப்படுவதற்கு கார‌ணம் ஓக் மர‌த்திற்கு ஒரே ஒரு ஆணி வேர் மட்டுமே உண்டு. அந்த வேர் ஒரு நேர் கோட்டைப் போல் செங்குத்தாய் பூமிக்குள் இறங்கி இருப்பதால் அந்த மர‌த்தை இடி தாக்கினாலும் அது வேர் மூலமாகப் பூமிக்குள் சென்று வலு இழந்து விடும்

ஓக் மர‌த்தை யாராவது பார்த்து இருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

oaktree2.jpg

oaktree1.jpg

இதில் ஆணிவேர் மாதிரி தெரியவில்லையே?? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

oaktree2.jpg

oaktree1.jpg

இதில் ஆணிவேர் மாதிரி தெரியவில்லையே?? :rolleyes:

இது தான் ஓக் மரமா நன்றி இசை :)

நாம் ஒரு நிமிடத்திற்கு 10 தடவை கண் சிமிட்டுகிறோம்.

நாம் ஒரு வார்த்தை பேசும் போது 72 தசைகள் அசைகின்றன.

நம் உடலில் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நம் நாக்கில் 3000 சுவை அரும்புகள் உள்ளன.

மனித மூளை 100 கோடி உயிரணுக்களால் உருவாக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு கொஞ்ச பொம்பிளையள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.தாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் விசேடமாக என்ன எல்லாம் சாப்பிட்டோம்,எப்படி எல்லாம் சாப்பிட்டோம் என்டெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கி கதைத்தார்கள் :)...அதற்கு பிறகு திடிரென ஒரு அன்ரி சொன்னார் தான் அண்மையில் ஊருக்குப் போய் வந்ததாகவும் அங்கே போய் தன்னால அங்கத்தைய சாப்பாட்டை சாப்பிட‌ முடியவில்லை என்றும்,சாப்பாடு சுவையே இல்லை என்றும்,ஒன்றுமே தன்னால் பழங்கள் கூட‌ சாப்பிட‌ சுவையாக இல்லை என்றும் சொன்னார் :(.அதை அங்கிருந்த மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள்.அங்க இறைச்சி எல்லாம் கடி படாமல் காட‌க[hard] இருக்குமாம்.இங்கத்தைய சாப்பாடு பழகின பிறகு அங்கத்தைய சாப்பாடு எதுவுமே சுவையில்லாமல் இருக்குதாம் என தங்களுக்குள் கதைத்தார்கள்...நான் இர‌ண்டு வருட‌த்திற்கு முந்தி அம்மாவின் செத்த வீட்டுக்கு போய் வந்தனான் எனக்கு அங்க தனிய பருப்பும் சோறும் தந்தாலே சாப்பிடுவேன் அவ்வளவு சுவையாக இருக்கும் :D

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு போயிருக்கிறேன்.. ஊருக்கு இடையில் போனதில்லை.. :blink:

குத்தரிசி சோறு எனக்கு இப்ப பிடிக்கிறேல்ல.. மற்றபடி மீதி எல்லாம் நல்லாத்தான் இருந்தது.. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.