Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலதும்,பத்தும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரையோரம் கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படும். யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி மீண்டும் கடல் நீர் கடலுக்குள் செல்லும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம்.

இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.
...
நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.

இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர்.

படித்தும் கண்டும் அறிந்தது...

இயற்கையை ரசித்து இயற்கையாக வாழவும்.See more

563711_573717219321217_480142273_n.jpg
 
by.fb
  • Replies 584
  • Views 41.9k
  • Created
  • Last Reply

 நன்றி பகிர்வுக்கு, இதுவரை கேள்விப்பட்டதில்லை இப்படியொரு நண்டை,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மனிதனாகப் பிறந்து நல்ல தாய்,தந்தையர்களிடையே நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுட‌ன்,அறிவுட‌ன்,அழகுட‌ன்,கல்வியுட‌ன்,நுகழ்ச்சியுட‌ன் திகழ்வதை விட‌ப் பெரிய விச‌யம் மனதில் துணிவுட‌ன் திகழ்வது.ஒருவனுக்கு எல்லாம் இருந்தும் துணிவு மட்டும் இல்லாமல் போகுமானால் அதனாலேயே அனைத்தும் அடிபட்டுப் போகும்.
 
இந்த உலகில் எது வேண்டுமானாலும் நட‌க்கலாம்.அது எப்போது வேண்டுமானாலும் நட‌க்கலாம்.அப்படி ஒன்று நட‌க்கும் போது துணிவிருந்தால் தான் தாங்கிக் கொள்ள முடியும்.அதே சமயம் சில முடிவுகளை சரியான நேர‌த்தில் எடுக்கத் துணிவு மிகவும் அவசியம்.
 
ஆணாயினும்,பெண்ணாயினும் துணிவு தான் அவர்களுக்கான காவற்கார‌ன்.வாழ்க்கைப் போக்கில் தவறான நட்பு,ஒழுக்கக் கேடான செயல்கள்,எதிரிகளால் துன்பம் போன்றவை உருவாகும் போது துணிவிருந்தால் மட்டுமே வென்று வெளியே வர‌ முடியும்.துணிய வேண்டிய நேர‌த்தில் தயக்கமோ,பயமோ குறுக்கிட்டால் வாழ்க்கையே மாறி விடும்.
 
துணிவு பதினெட்டு படிகளில் ஒன்பதாவது படியாகும்.
 
நானும் இன்று தான் கேள்விப்படுகிறேன்...நன்றி யாயினி
 
 இது உண்மை, கோழைகள் ஏதும் சாதித்தில்லை, கோழைகள் உருவாக பெற்றோரும் காரணம்

இது உங்களிடம் ரெம்ப ரெம்ப அதிகம்.

எழுத்தில் மட்டும் தானா அல்லது உண்மையிலேயே நீங்கள் துணிச்சல் மிக்கவரா?

கடற்கரையோரம் கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படும். யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி மீண்டும் கடல் நீர் கடலுக்குள் செல்லும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம்.

இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.

...

நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.

இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர்.

படித்தும் கண்டும் அறிந்தது...

இயற்கையை ரசித்து இயற்கையாக வாழவும்.See more

563711_573717219321217_480142273_n.jpg
 
by.fb

இதுக்கு ஒரு பதில் எழுத ஆசை...ஆனால் யாயினி கோபித்துக் கொண்டு போய் விடுவார்..

  • கருத்துக்கள உறவுகள்
சைமரா மயில்!
*************
இரண்டு மரபணுக்களும் தனித்தனி உடம்புகளுக்கு செல்வதற்குப் பதில் ஒரே உடம்பில் போய் சேரும்போது அந்த மரபணுக்கள் வெவ்வேறு நிறங்களை தோற்றுவிக்கின்றன. அதைத்தான் சைமரா என்று சொல்கிறார்கள். அது மாதிரியான சைமரா மயில் தான் இது. இயற்கையின் அற்புதம்!
  • ஆண் கருவூட்டியும் பெண் முட்டையும் சேர்ந்து கருத்தரிக்கிறது. சில சமயம் இரண்டு முட்டைகள் கருத்தரித்து இரட்டையர்களாகப் பிரசவிக்கின்றது. அப்போது இரண்டு தொகுதி மரபணுக்கள் உண்டாகின்றன. தனித் தனி உடம்பிற்கும் செல்கின்றன. அதற்குப் பதில் அந்த ரெண்டு மரபணுக்களும் தனித்தனி உடம்புகளுக்கு செல்வதற்குப் பதில் ஒரே உடம்பில் போய் சேரும்போது அந்த மரபணுக்கள் வெவ்வேறு நிறங்களை தோற்றுவிக்கின்றன.
 
527713_409289232471395_1844243298_n.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆரோக்கியமான பிறப்பெடுத்து அப்படியே துணிவு வரை ஒன்பது படிகளை கடந்து விட்ட ஒருவனுக்கு அவசியமான இன்னுமொரு தேவை பெருமை!பெருமை விலைக்கு வாங்க முடியாது.பெருமை என்பது அரிய செயற்பாடுகளால் ஒருவர் சம்பாதித்துக் கொள்வதாகும்.ஒருவர் சம்பாதித்துக் கொள்ளும் பெருமை அவரைச் சார்ந்த அத்தனை உறவுகளுக்கும் ஊட்ட சத்து போலப் பரவும்.நம்மைச் சார்ந்தவர்களின் சாதனைகளும்,உயர்வும் தான் நமக்கு பெருமையாக வந்து சேருகின்றன.
 
இதிலிருந்து ஒரு விசயம் புலனாகிறது.எல்லாப் பேறுகளையும் நாம் மட்டும் பெற்றிருந்தால் போதாது.நம்மோடு இருப்பவர்களும் அத்தகைய பேறுகளுக்கு ஆட்பட்டிருக்க வேண்டும்.
 
பெருமை...ஒரு மனிதன் இளம் பிராயத்தில் கட‌க்கும் பத்தாவது படியாகும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

பெரும் பாலைவனங்களும் அவற்றின் பரப்பளவும்.

sahara_desert_620.jpg

பெயர் நாடு பரப்பளவு (ச.கி.மீ)

சஹாரா                          வட ஆப்பிரிக்கா                                   90,04,650

அரேபியன்                      மத்திய கிழக்கு                                    25,89,900

கோபி                              சீனா                                                        12,94,950

படகோனியன்              அர்ஜென்டினா                                       6,73,374

கிரேட் விக்டோரியா   ஆஸ்திரேலியா                                    6,47,475

கலாஹாரி                    தென் ஆப்பிரிக்கா                                 5,82,727

கிரேட் பாசின்                அமெரிக்கா                                            4,92,081

தார்                                 இந்தியா/பாகிஸ்.                                   4,53,232

கிரேட் சாண்டி                  ஆஸ்திரேலியா                                  3,88,485

காரா-கும்                            மேற்கு ஆசியா                                   3,49,636

கொலரேடோ                     மேற்கு அமெரிக்கா                             3,36,687

கிப்சன்                                  ஆஸ்திரேலியா                                   3,10,788

சொனோரன்                      அமெரிக்கா                                             3,10,788

கிசில்-கும்                           மேற்கு ஆசியா                                      2,97,838

தாக்ளாமக்கான்                   சீனா                                                       2,71,939

இரானியன்                           இரான்                                                    2,58,990

சிம்ப்சன்/டோனி                 வட ஆப்பிரிக்கா                                  1,45,034

மோஹேவ்                         அமெரிக்கா                                             1,39,854

அட்டகமா                           சிலி                                                            1,39,854

நமீப்                                  ஆப்பிரிக்கா                                                  33,668

  • கருத்துக்கள உறவுகள்

புகழ்பெற்ற அருவிகள்.

பெயர் நாடு உயரம் (மீ)

waterfalls_370.jpg

ஏஞ்சல்             வெனிசுவே லா                                                  807

மோன்கிஃ           போசன் நார்வே                                               774

குகேனம்             வெனிசுலா                                                       610

உதிகார்ட்            நார்வே                                                              600

ரிப்பன்             அமெரிக்கா                                                            491

கிங் ஜார்ஜ் VI            கயானா                                                        487

ரோரைமா                  கயானா                                                      457

அப்பர் யோசிமிட்      அமெரிக்கா                                              435

கொலம்போ      தான்சானியா/சாம்பியா                                426

காவர்னீ           பிரான்ஸ்                                                             421

துகேலா            தென்னாப்பிரிக்கா                                            410

தகக்காவ்             கனடா                                                               365

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நத்தார் நெருங்க நெருங்க கடைகளுக்கு சொப்பிங் என்று குடும்பம்,குடும்பமாய் திரிகின்றவர்களை என்ன தான் அப்படி கடைகளில் வாங்குவார்களோ தெரியாது.விலையையும் பார்க்காமல் வாங்குகிறார்கள்.நான் என்டால் ஒரு பொருளை எடுப்பதும்,விலையைப் பார்ப்பதும்,வாங்கட்ட,விட‌ட்டா என யோசித்து,யோசித்து தான் வேண்டுவேன் இதற்காக நான் கஞ்ச‌ப் பிசினாறி இல்லை...ஆனால் ஒன்றையும் யோசியாமல் கடைகளுக்குள் அடிபட்டு,இடிபட்டு பொருட்கள் வாங்குகின்ற ஆட்களைப் பார்த்தால் எரிச்சல்,எரிச்சலாக வருகுது.
 
அதை விட‌ குடும்பமாக கடைகளுக்கு போகின்றவர்களைப் பார்த்தால் இன்னும் எரிச்சல் கூடுகின்றது...மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படும் கெட்ட குணம் என்னையறியாமல் என்னிட‌ம் வந்து விடுமோ என்று பயமாயிருக்குது...வயது போகப்,போக தாழ்வு மனப்பான்மை கூடுது என்று நினைக்கிறேன்.
 
முந்தி என்டால் என்டால் வெளியே போனால் புத்தகங்களைத் தான் மனம் தேடும்.வேறு எதிலும் மனம் பெரிதாக ஆசைப்பட்டதில்லை.இப்பவும் புத்தகங்களுக்குத் தான் முதல் இட‌ம் ஆனால் அதை விட‌ தற்போது அதை வாங்க வேண்டும்,இதை வாங்க வேண்டும் என்று சின்ன,சின்ன ஆசைகளும் தோன்றியுள்ளது...எனது வருமானத்தை மீறி செலவழிப்பதில் இஸ்ட‌மில்லை...மொத்தத்தில் சொல்லப் போனால் மனித மனமே ஒர் விசித்திர‌ம் தான் :)
 
பண்டிகைக் காலம் பணத்தட்டுப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் சந்தோஷமாக இருக்க முயலவேண்டும். அப்போதுதான் மனமும் உடலும் புத்வேகத்துடன் புதிய வருடத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும். இல்லையென்றால் ஒரே சுழற்சி வட்டத்திற்குள் நின்று வாழ்க்கையில் விரக்திகள் தோன்றிவிடலாம். ஒவ்வொரு நாளும் புதியதாகப் பிறக்கும்போது எமது வாழ்விலும் புதியதை (சின்னதோ, பெரியதோ) செய்வது நல்லது.

தற்போதைய காலகட்டத்தில் எல்லாமே இணைய அங்காடிகளில் வாங்கக் கூடியதாக இருப்பதனால், ஷொப்பிங் என்று போவது குறைவு. என்றாலும் வேடிக்கை பார்க்கவும், கூட்டத்தில் ஒருவனாக இருக்கவும் பெரிய "ஷொப்பிங் மோல்" களுக்குப் போவது உண்டு,

  • கருத்துக்கள உறவுகள்

பேரீச்ச மரங்கள் - சில தகவல்கள்

மனிதன் முதன் முதலாக பயிரிட ஆரம்பித்த ஒரு சில தாவரங்களுள் முதன்மையானது பேரீச்ச மரங்களாகும்.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னதாக மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இம்மரங்களை பயிரிட ஆரம்பித்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சிகளிலும் பாறைப் படிவங்களிலும் பேரீச்சம் மரம், இலை, காய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் மெசபொட்டேமியா, எகிப்து ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வந்த பேரீச்சம்பழம் பிற்காலங்களில் தான் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. 1765க்கு பின்னர் தன் அமெரிக்க தீவுகளில் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக அரேபிய பாலைவனங்களில் பயிரடப்பட்டு வந்துள்ளது.

பேரீச்ச மரங்கள் மிகவும் பசுமையானவை. மிகக் குறைந்த நீரில் இருந்தாலே உயிர் வாழக் கூடியவை. அதே சமயம் ஒரு ஹெக்டேருக்கு அதிக மகசூல் தரக்கூடிய மரங்களுள் முதன்மையானதும் பேரீச்ச மரங்களேயாகும். ஒரு ஆண்டின் உலக பேரீச்சம்பழ உற்பத்தி சுமார் முப்பது லட்சம் டன் ஆகும்.

பேரீச்சம் பழங்கள் மிகவும் சத்தானவை, உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிப்பவை. ஒரு கிலோ பேரீச்சம் பழம் சுமார் 3000 கலோரிக்கும் அதிகமான எரிசக்தியை தரக்கூடியது. இது பிற உணவுகளையும் பழங்களையும் விட பல மடங்கு அதிகமானதாகும். இதில் மாவுச்சத்து பல விதமான சர்க்கரை ரகங்களாகக் காணப்படுகிறது. குளூகோஸ் ஃப்ரக்டோஸ்களாக பிரிக்கக் கூடிய மாவுச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில ரகங்களில் முழுவதுமே மாவுப்பொருட்கள் உடல் எளிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் கிடைக்கின்றது. இத்தகைய பழங்களை உட்கொள்ளும் பொழுது உடல் அதிக சக்தியை எளிமையாக பெற்றிட முடியும்.

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் காணப்படுகின்றது. (600 மி.கி. 1 கிலோ பேரீச்சம்பழத்தில்) இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. பேரீச்சம்பழத்தை ஒரு நுண்ணூட்டச்சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற நுண்ணூட்டச் சத்துக்களும், தாதுப்பொருட்களும் உள்ளது.

நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம்.

பேரீச்சம்பழங்களை பெரும்பாலும் திறந்த வெளிகளில் உலர வைப்பதால் அவற்றில் அதிகளவு தூசி படிந்திருக்கும். எனவே அவற்றை நன்கு சுத்தம் செய்து உண்பது மிக அவசியம்.

பேரீச்சம்பழத்தை எரித்து சாம்பலாக ஆக்கி அந்த சாம்பலில் என்ன என்ன உலோகங்கள் தாதுப்பொருட்கள் உள்ளன என கண்டறிந்ததில் கீழ்க்கண்டவை இருப்பது தெரிய வந்துள்ளது.

பொட்டாசியம்-50%, குளோரின்-15%, பாஸ்பரஸ்-8%, கால்சியம்-5%, இரும்பு-0.25%, மெக்னீசியம்-12% சல்பர்-10%.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நோயின்மை தான் ஒருவன் கடக்கும் 11 படி. நோயின்மை என்பது உண்ணும் உணவு,சுகாதார‌மான வாழ்க்கை முறையால் மட்டும் வருவதல்ல...அன்னை வயிற்றில் பிண்ட‌க் கருவாய் உருத்திர‌ளும் போதே சேர்ந்து வருவது அது.அழகிய கூந்தல்,அளவான அவயங்கள்,சரியான உயர‌ம்,நல்ல நிறம்,ஞாபக சக்தி,கண் பார்வை,ஜீர‌ண சக்தி,மலச்சிக்கலின்மை,சீரான சுவாச‌ம்,சரியான வியர்வை பெருக்கு...இவை எல்லாம் தான் நோயின்மையின் எதிரொலிகள்.
 
ஒருவன் தான் நோயின்மையுட‌ன் திகழ அவன் தாயும் ஆரோக்கியமானவளாத் திகழ வேண்டியது மிகமிக அவசியம்.ஆரோக்கியமாகப் பிறந்தால் மட்டும் போதாது.ஆரோக்கியத்தைப் பாதுகாத்தபடியே வளருவதும் மிக முக்கியம்.ஒருவர‌து ஆரோக்கியமான அடித்தளத்திற்குக் கர்மவினைகளும் ஒரு கார‌ணம்.
 
பல பாவங்கள் வியாதியாக மாறித் தான் கணக்குத் தீர்த்துக் கொள்கின்றன.எனவே பாவச் செயல்கள் செய்யாமல் இருப்பதற்கும் நோயற்று இருப்பதற்கும் அதிக தொட‌ர்பு உள்ளது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"களவும் கற்று மற" என்பது பற்றி என்ன நினைக்கிறீங்கள்...எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு ஆசை இங்குள்ள கடைகளில் உள்ள ஏதாவது ஒரு பொருளை காசு கொடுத்து வாங்காமல் எடுத்திட்டு வரனும் என்று உங்கட பாசையில் சொல்லப் போனால் களவெடுத்து பிடிபடாமல் வர வேண்டும் என்பது எனது ஆசை.
 
இன்டைக்கு இங்க மலிவு விற்பனை[சேல்] நடக்குது...நான் ஒரு உடுப்புக் கடைக்குப் போய் எனக்குப் பிடித்த உடுப்புகளை தெரிவு செய்து போட்டு அங்கால பக்கம் போனேனா பெண்கள் அணியும் நகைகள் இருந்திச்சுது...அதில ஒரு நெக்ல்சை பார்த்தேனா எனக்கு பிடிச்சுப் போச்சு இதை எப்படியாவது இன்டைக்கு சுட்டுடோனும் என்று கணக்குப் போட்டுட்டேன் :lol: ...இத்தனைக்கு அது பெரிசாய் விலையில்லை £5 அல்லது £6 இருக்கும்...அங்கால மற்ற நகைகள் எல்லாம் பார்த்திட்டு சிலதுகளை காசு கொடுத்து வாங்க எடுத்து பாஸ்கட்டுக்குள்[கூடைக்குள்] போட்டுட்டு சுட நினைச்ச நகையை மட்டும் எடுத்து நான் போட்டு இருந்த ஜக்கெட் பொக்கட்டுக்குள் போட்டுட்டன்.
 
எல்லாப் பொருட்களும் தெரிவு செய்து முடிந்த காசு கொடுத்து எல்லாம் வாங்கின பின் வெளியால போகும் போது அலாம் அடிக்கத் தொட‌ங்கிட்டுது :( ...கடையில் நின்ட‌ காவலாளி ஓடி வந்து என்னுடைய பையில் இருந்த பொருட்களை அலாமுக்கு கிட்ட கொண்டு போக அலாம் அடிக்கவிலை...எப்படி அடிக்கும் சுட்ட நெக்ல்ஸ் என்ட‌ ஜக்கெட் பொக்கட்டுக்குள் அல்லவா இருந்த்து :D ...அவன் என்ட‌ பை திருப்பி தந்து போகச் சொன்னான் போகும் போது திருப்பி அலாம் அடிச்சுது...அவன் திருப்பியும் உடுப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து செக் பண்ணிப் போட்டு,பையைத் தராமல் என்னை மட்டும் அதற்குள்ளால போக சொன்னான்...எனக்கென்டால் நெஞ்சு டிக்டிக் என அடிச்சுது என்டாலும் பயப்படாமல் போனேன்...என்ட‌ கஸ்ட‌காலம் அலாம் அடிக்கவில்லை :D ...உட‌னே என்ட‌ பையை தந்து என்னை அனுப்பிட்டான்.
 
இதிலிருந்து களவு எடுப்பது எவ்வளவு கஸ்ட‌மான தொழில் என்று தெரிகிறது...இனி மேல் இப்படியான திரிலிங் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை என முடிவெடுத்து உள்ளேன்...விலை கூடிய பொருட்களை எடுத்து பிடிபட்டாலும் அதில ஒரு நியாயம் இருக்கும் போயும்,போயும் £5,6 விலையுள்ள பொருளையா களவெடுப்பது? பிடி பட்டால் மானம் என்னாவது?
 
  • கருத்துக்கள உறவுகள்

யப்பா.. ஜெகஜாலக் கில்லாடிகள்தான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.....

கவனம்.

களவெடுத்த, அடித்த பொருட்களுக்கு, பின்னாளில்  நூறு மடங்கு விலை கொடுக்க வேண்டி வரும்.   :D

Edited by தப்பிலி

ரதி, நீங்கள் பிடி படாமல் தப்பினது கண்டு மகிழ்ச்சி!

ஆனாலும், களவும் கற்று மற, என்பதல்ல சரியான பழமொழி!

களவும் அகத்து மற, என்பதே சரியானது என நினைக்கின்றேன்!

காலப்போக்கில், களவும் கற்று மற, என்று மருவி விட்டது! :icon_idea:

இன்டைக்கு இங்க மலிவு விற்பனை[சேல்] நடக்குது...நான் ஒரு உடுப்புக் கடைக்குப் போய் எனக்குப் பிடித்த உடுப்புகளை தெரிவு செய்து போட்டு அங்கால பக்கம் போனேனா பெண்கள் அணியும் நகைகள் இருந்திச்சுது...அதில ஒரு நெக்ல்சை பார்த்தேனா எனக்கு பிடிச்சுப் போச்சு இதை எப்படியாவது இன்டைக்கு சுட்டுடோனும் என்று கணக்குப் போட்டுட்டேன் :lol: ...இத்தனைக்கு அது பெரிசாய் விலையில்லை £5 அல்லது £6 இருக்கும்...அங்கால மற்ற நகைகள் எல்லாம் பார்த்திட்டு சிலதுகளை காசு கொடுத்து வாங்க எடுத்து பாஸ்கட்டுக்குள்[கூடைக்குள்] போட்டுட்டு சுட நினைச்ச நகையை மட்டும் எடுத்து நான் போட்டு இருந்த ஜக்கெட் (இப்ப பொக்கட் வைத்தும் தைக்கின்றார்களா) பொக்கட்டுக்குள் போட்டுட்டன்.
 
எல்லாப் பொருட்களும் தெரிவு செய்து முடிந்த காசு கொடுத்து எல்லாம் வாங்கின பின் வெளியால போகும் போது அலாம் அடிக்கத் தொட‌ங்கிட்டுது :( ...கடையில் நின்ட‌ காவலாளி ஓடி வந்து என்னுடைய பையில் இருந்த பொருட்களை அலாமுக்கு கிட்ட கொண்டு போக அலாம் அடிக்கவிலை...எப்படி அடிக்கும் சுட்ட நெக்ல்ஸ் என்ட‌ ஜக்கெட் பொக்கட்டுக்குள் அல்லவா இருந்த்து :D ...அவன் என்ட‌ பை திருப்பி தந்து போகச் சொன்னான் போகும் போது திருப்பி அலாம் அடிச்சுது...அவன் திருப்பியும் உடுப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து செக் பண்ணிப் போட்டு,பையைத் தராமல் என்னை மட்டும் அதற்குள்ளால போக சொன்னான்...எனக்கென்டால் நெஞ்சு டிக்டிக் என அடிச்சுது என்டாலும் பயப்படாமல் போனேன்...என்ட‌ கஸ்ட‌காலம் அலாம் அடிக்கவில்லை :D ...உட‌னே என்ட‌ பையை தந்து என்னை அனுப்பிட்டான்.

மொத்தத்தில் இது ஒரு கட்டுக்கதை, நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
"களவும் கற்று மற" என்பது பற்றி என்ன நினைக்கிறீங்கள்...எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு ஆசை இங்குள்ள கடைகளில் உள்ள ஏதாவது ஒரு பொருளை காசு கொடுத்து வாங்காமல் எடுத்திட்டு வரனும் என்று உங்கட பாசையில் சொல்லப் போனால் களவெடுத்து பிடிபடாமல் வர வேண்டும் என்பது எனது ஆசை.
 
உளவியல் ஆராய்வுகளின்படி Shoplifting இல் ஈடுபடுபவர்கள் வறுமையாலோ பேராசையாலோ அதனைப் பெரும்பாலும் செய்வதில்லை.  அதிகமானவர்களுக்கு தனிப்பட்ட உளவியல் முரண்பாடுகள், தேவைகளைச் சமாளிப்பதில் திண்டாட்டம் உள்ளதால்  மனச்சோர்வு ஏற்பட்டு பிறந்த தினம், விடுமுறை நாட்களில் இப்படியான  Shoplifting இல் நாட்டம் ஏற்படுகின்றது.

அதிகம் நண்பர்கள் இல்லாமல், பிறருடன் மனம்விட்டுப் பேசமுடியாமல் வீடு, வேலை என்று மாறாத வட்டத்திற்குள் இருக்காமல் வாழ்வில் ஒரு பிடிப்பு வரத்தக்க மாதிரியான சவால்கள் உள்ள விடயங்களில் ஈடுபட்டால் இப்படியான களவும் கற்று மறக்கும் Shoplifting போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Kleptomania is the inability to refrain from the urge to steal items for reasons other than personal use or financial gain. First described in 1816, kleptomania is presently classified in psychiatry as an impulse control disorder.[1] Alternatively, some of the main characteristics of the disorder, which consist of recurring intrusion feelings, an inability to resist the urge to steal, and a release of pressure following the theft, suggest that kleptomania could be an obsessive-compulsive spectrum disorder,[2] although this is disputed.[citation needed]

http://en.wikipedia.org/wiki/Kleptomania

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உண்மையைச் சொல்லுங்கோ சுண்டலோ,இசையோ விளையாட்டுக்குத் தன்னும் ஒரு சின்ன பொருளைக் கூட சுட்டதில்லை :unsure:
 
கவனம்.

களவெடுத்த, அடித்த பொருட்களுக்கு, பின்னாளில்  நூறு மடங்கு விலை கொடுக்க வேண்டி வரும்.   :D

அது என்டால் உண்மை தான் தப்பிலி இப்படியான பொருட்கள்,அடுத்தவரை ஏமாத்தி வரும் காசு ஒன்று கூட நிலைக்காது...என்னவோ முதலில் எழுதிப் போட்டு வெட்டி இருக்கிறீங்களே என்னை கள்ளி என்று எழுதினீங்களா?...அப்படி எழுதியிருந்தாலும் நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன்.
 
ரதி, நீங்கள் பிடி படாமல் தப்பினது கண்டு மகிழ்ச்சி!

ஆனாலும், களவும் கற்று மற, என்பதல்ல சரியான பழமொழி!

களவும் அகத்து மற, என்பதே சரியானது என நினைக்கின்றேன்!

காலப்போக்கில், களவும் கற்று மற, என்று மருவி விட்டது! :icon_idea:

நன்றி புங்கையூரான் சரியான விளக்கத்திற்கு...பழமொழியை எப்படி எல்லாம் தங்களுக்கு ஏற்றாப் போல மாத்தியிருக்கினம்.
 
மொத்தத்தில் இது ஒரு கட்டுக்கதை, நம்ப முடியவில்லை.

ஏன் வந்தி நீங்கள் பொக்கட் வைத்த ஜக்கெட்(jacket)[கோட்] புலம் பெயர் நாட்டில் காணவில்லையா?
 
உளவியல் ஆராய்வுகளின்படி Shoplifting இல் ஈடுபடுபவர்கள் வறுமையாலோ பேராசையாலோ அதனைப் பெரும்பாலும் செய்வதில்லை.  அதிகமானவர்களுக்கு தனிப்பட்ட உளவியல் முரண்பாடுகள், தேவைகளைச் சமாளிப்பதில் திண்டாட்டம் உள்ளதால்  மனச்சோர்வு ஏற்பட்டு பிறந்த தினம், விடுமுறை நாட்களில் இப்படியான  Shoplifting இல் நாட்டம் ஏற்படுகின்றது.

அதிகம் நண்பர்கள் இல்லாமல், பிறருடன் மனம்விட்டுப் பேசமுடியாமல் வீடு, வேலை என்று மாறாத வட்டத்திற்குள் இருக்காமல் வாழ்வில் ஒரு பிடிப்பு வரத்தக்க மாதிரியான சவால்கள் உள்ள விடயங்களில் ஈடுபட்டால் இப்படியான களவும் கற்று மறக்கும் Shoplifting போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

நன்றி கிருபன் உங்கள் உள ரீதியான விளக்கத்திற்கு...நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்...நான் சுட்டதிற்கு கார‌ணம் ஒரு திரிலிங் தான்
 
  • கருத்துக்கள உறவுகள்
உண்மையைச் சொல்லுங்கோ சுண்டலோ,இசையோ விளையாட்டுக்குத் தன்னும் ஒரு சின்ன பொருளைக் கூட சுட்டதில்லை :unsure:

நான் சுட்டதில்லை. ஆனால் அதுக்காக நல்லவன் என்று அர்த்தமில்லை..  :D  ஒரு பயம்தான் காரணம்..! :rolleyes:

கள்ளி ரதி,

எழுத்துப் பிழை திருத்தும் பொழுது எனது கருத்தையே தவறுதலாக 'quate' பண்ணியிருந்தேன். நீங்களே ஒத்துக் கொண்டபின் , ஏன்  பட்டம்  சூட்டப் போகிறேன். :lol: 

முன்பு ஒரு கடையில் வேலை செய்யும் பொழுது நேர்மையாக கடினமாக உழைத்து வியாபாரத்தைக் கூட்டினேன். ஏதோ குடும்பப் பிரச்சனையால் அவரின் பாகிஸ்தானி மனைவி வியாபாரத்தைப் பொறுப்பெடுத்தார். அடிமை வாழ்க்கை. 15 நிமிட உணவு இடைவேளையில்  3 ஆவது நிமிடத்திலேயே quick  quick என்று அவசரப்படுத்துவார். அவரின் மீது  கோபப்பட்டு காசு அடிப்பேன். அவரின் கண்முன்னாலே ரஜனி ஸ்டையிலில் ஐந்து பவுண்ட் நோட்டை உள்ளங்கையில் வேகமாகச் சுருட்டி பொக்கற்றுக்குள் வைப்பேன். கொஞ்சம் கள்ளக் காசு பார்த்தேன். நினைத்திருந்தால் கடையையே சுருட்டி இருக்கலாம். அது நிலைக்கவும் இல்லை, நிம்மதியாய் வாழ விடவும் இல்லை.

பின்னாள் நேர்மையாக உழைத்தது உயர்வைத் தந்தது.

அது என்டால் உண்மை தான் தப்பிலி இப்படியான பொருட்கள்,அடுத்தவரை ஏமாத்தி வரும் காசு ஒன்று கூட நிலைக்காது...என்னவோ முதலில் எழுதிப் போட்டு வெட்டி இருக்கிறீங்களே என்னை கள்ளி என்று எழுதினீங்களா?...அப்படி எழுதியிருந்தாலும் நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.