Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியிலிருந்து தேசத்தின் குரல் புதிய பத்திரிகை

Featured Replies

602341_10151145615208801_2066537732_n.jpg

சிறீலங்கா சிங்கள பௌத்த குடியரசு என்பது மகிந்தவின் நீண்ட காலத்திட்டம். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் -மனோ கணேசன் என்ற தலைப்புச் செய்தியுடன் அக்கினீஸ்வரனின் 13ம் சீர்திருத்தச்சட்டம் வரமா சாபமா, தீபச்செல்வனின் நிலத்திற்காக போராட வேண்டிய காலம், இதயசந்திரனின் கொடுத்ததையும் பறிக்கிறதா இலங்கை இந்திய ஒப்பந்தம், சாந்தி. கே. பிள்ளையின் உலக அரசியல் சீனா வச...

மா?, வன்னியில் ஊடகவெளி போன்ற தலைப்பிலான கட்டுரைகளுடன் தரிசனங்கள் என்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் யூனியர் வரணியூரானின் தமிழ் பௌத்தன் சிறுகதை, நடுத்தெரு நமசிவாயம் என்பவற்றுடன் பொன்.காந்தனின் சாமகானம் என்ற நெடுங்கவிதை பகுதியும் உள்ளடங்கி தேசத்தின் குரலின் கன்னி இதழ் வீச்சுடன் கார்த்திகை மாத புனித நினைவுகளையும் சுமந்து வெளிவந்துள்ளது.

from facebook. theebach chelvan.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

வாழ்த்துக்கள்.

மிக மிக பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி.

தகவலுக்கு நன்றி நாரதர்.

பி.கு:

பொதுவாக Facebook இல் இருந்து பெறப்படும் விடயங்களை செய்திகளாக யாழில் இடுவதற்கு சம்மதம் தெரிவிப்பது இல்லை; காரணம் ஆதாரபூர்வமான ஒரு செய்தி தளமாக FB இனை கருதாமையால். ஆனால் இந்த செய்தியை விதிவிலக்காக எடுத்துக்கொள்கின்றோம்.

நிர்வாகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மிக மிக பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி ..... இந்த பத்திரிக்கை சிறிலங்கா அடக்குமுறையாளர் மத்தியில் எவ்வாறு சுதந்திரமாக செய்திகளை காவி வரப்போகின்றதே என்பதே எனது கேள்வி இருக்கும் பத்திரிகைகளுடன் பத்தோடு பதினொன்றாக வரும் பத்திரிகையாக இருக்காமல் மக்களின் அன்றாட அவலங்களையும் சுதந்திரத்தையும் அவசியத்தையும் எழுதவேண்டும்.

தமிழனின் இன்றைய நிலை மாறும்.............மாறும் என்ற சொல்லை தவிர உலகில் எல்லாம் மாறும் ..

தேசத்தின் குரல் பொய்யின் குரல்வளையை நசுக்கி அடைந்து கிடக்கும் உண்மைகளை கக்க வாழ்த்துக்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். கிளிநொச்சி கந்தசாமி கோயிலில் வைத்து வெளியிட்டுள்ளனர்

  • தொடங்கியவர்

பி.கு:

பொதுவாக Facebook இல் இருந்து பெறப்படும் விடயங்களை செய்திகளாக யாழில் இடுவதற்கு சம்மதம் தெரிவிப்பது இல்லை; காரணம் ஆதாரபூர்வமான ஒரு செய்தி தளமாக FB இனை கருதாமையால். ஆனால் இந்த செய்தியை விதிவிலக்காக எடுத்துக்கொள்கின்றோம்.

நிர்வாகம்

நிழலி இந்த ஆதாரபூர்வம் என்றால் என்ன என்பதை விளக்க முடியுமா?

முகனூலில் செய்தியாளர்கள் வழங்கும் செய்திகளைத் தான் அனைத்து தமிழ் தளங்களும் போடுகின்றன. நான் செய்தி தருபவரின் நம்பகத் தன்மை அறிந்தே போடுகிறேன்.இதை விட , இது ஆதாரபூர்வமான செய்தி என்று உறுதிப்படுத்தும் வழியைச் சொன்னால் நாங்கள் அதன் படி இனிச் செய்திகளை இணைக்கலாம். இல்லாது விட்டால் பேசாமல் இருக்கலாம்.

இதழின் பெயரைக் கேட்டவுடன் மனம் சந்தோசம் அடைந்தது. தேசத்தின் குரல் பாலா அண்ணா , தலைவரால் விளித்து கொள்ளப்பட்ட தேசத்தின் ஒட்டு மொத்த குரல் தேசத்தின் குரல் பாலா அண்ணா.

தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

602341_10151145615208801_2066537732_n.jpg

சிறீலங்கா சிங்கள பௌத்த குடியரசு என்பது மகிந்தவின் நீண்ட காலத்திட்டம். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் -மனோ கணேசன் என்ற தலைப்புச் செய்தியுடன் அக்கினீஸ்வரனின் 13ம் சீர்திருத்தச்சட்டம் வரமா சாபமா, தீபச்செல்வனின் நிலத்திற்காக போராட வேண்டிய காலம், இதயசந்திரனின் கொடுத்ததையும் பறிக்கிறதா இலங்கை இந்திய ஒப்பந்தம், சாந்தி. கே. பிள்ளையின் உலக அரசியல் சீனா வச...

மா?, வன்னியில் ஊடகவெளி போன்ற தலைப்பிலான கட்டுரைகளுடன் தரிசனங்கள் என்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் யூனியர் வரணியூரானின் தமிழ் பௌத்தன் சிறுகதை, நடுத்தெரு நமசிவாயம் என்பவற்றுடன் பொன்.காந்தனின் சாமகானம் என்ற நெடுங்கவிதை பகுதியும் உள்ளடங்கி தேசத்தின் குரலின் கன்னி இதழ் வீச்சுடன் கார்த்திகை மாத புனித நினைவுகளையும் சுமந்து வெளிவந்துள்ளது.

from facebook. theebach chelvan.

[size=5]செய்தியிணையத்திலிருந்து....[/size]

கிளிநொச்சியில் "தேசத்தின் குரல்" என்ற பத்திரிகை சிறீதரனால் வெளியீடு.camera_icon.jpeg

[Friday, 2012-11-02 22:19:48]

killinochi-paper-seithy-3-20121102-150.jpg

தமிழர்களின் ஆன்மாவின் சாட்சியாக கிளிநொச்சியில் "தேசத்தின் குரல்" பத்திரிகையின் முதல் இதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்ற மகுட வாசகத்தைத் தாங்கி அறிவகத்தின் வெளியீடான "தேசத்தின் குரல்" எனும் பத்திரிகையின் முதல் இதழ் இன்று வெளிவந்துள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்று மதிய மத அனுட்டானங்களின் பின் வெளியிடப்பட்டுள்ளது. பா.உறுப்பினர் சி.சிறீதரன் இதை சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

"அனுபவங்களை தழுவி அறிவு எனும் பேராயுதத்தின் பின்னே தமிழ்த் தேசிய இனத்தை ஒன்றிணைத்து, பாதுகாப்பு மிகுந்த எதிர்காலம் ஒன்றை எமது சந்ததிக்கு பெற்றுக்கொடுக்கும் அரசியல் பயணத்தின் பங்காளிகளாக தேசத்தின் குரலும் தொடர்ந்து வரும். அன்பு மக்களின் ஆசிகள் இருக்கும் வரை தமிழர் கனவுகள் மெய்ப்பட எழுதுவோம். உணர்த்துவோம்" என ஆசியர் தனது கன்னி ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா சிங்கள பௌத்த குடியரசு என்பது மகிந்தவின் நீண்ட காலத்திட்டம். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் -மனோ கணேசன் என்ற தலைப்புச் செய்தியுடன் அக்கினீஸ்வரனின் 13ம் சீர்திருத்தச்சட்டம் வரமா சாபமா, தீபச்செல்வனின் நிலத்திற்காக போராட வேண்டிய காலம், இதயசந்திரனின் கொடுத்ததையும் பறிக்கிறதா இலங்கை இந்திய ஒப்பந்தம், சாந்தி. கே. பிள்ளையின் உலக அரசியல் சீனா வசமா?, வன்னியில் ஊடகவெளி போன்ற தலைப்பிலான கட்டுரைகளுடன் தரிசனங்கள் என்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் யூனியர் வரணியூரானின் தமிழ் பௌத்தன் சிறுகதை, நடுத்தெரு நமசிவாயம் என்பவற்றுடன் பொன்.காந்தனின் சாமகானம் என்ற நெடுங்கவிதை பகுதியும் உள்ளடங்கி தேசத்தின் குரலின் கன்னி இதழ் வீச்சுடன் கார்த்திகை மாத புனித நினைவுகளையும் சுமந்து வெளிவந்துள்ளது.

killinochi-paper-seithy-20121102-976.jpg

kilinochi-paper-seithy-4-20121102-405.jpg

killinochi-paper-seithy-3-20121102-405.jpg

killinochi-paper-seithy-1-20121102.-312jpg.jpg

http://seithy.com/breifNews.php?newsID=69470&category

பி.கு:

பொதுவாக Facebook இல் இருந்து பெறப்படும் விடயங்களை செய்திகளாக யாழில் இடுவதற்கு சம்மதம் தெரிவிப்பது இல்லை; காரணம் ஆதாரபூர்வமான ஒரு செய்தி தளமாக FB இனை கருதாமையால். ஆனால் இந்த செய்தியை விதிவிலக்காக எடுத்துக்கொள்கின்றோம்.

நிர்வாகம்

நிழலி இந்த ஆதாரபூர்வம் என்றால் என்ன என்பதை விளக்க முடியுமா?

முகனூலில் செய்தியாளர்கள் வழங்கும் செய்திகளைத் தான் அனைத்து தமிழ் தளங்களும் போடுகின்றன. நான் செய்தி தருபவரின் நம்பகத் தன்மை அறிந்தே போடுகிறேன்.இதை விட , இது ஆதாரபூர்வமான செய்தி என்று உறுதிப்படுத்தும் வழியைச் சொன்னால் நாங்கள் அதன் படி இனிச் செய்திகளை இணைக்கலாம். இல்லாது விட்டால் பேசாமல் இருக்கலாம்.

நாரதர்,

சிலர் Facebook இல் நண்பர்களால் பகிரப்பட்ட செய்தியை அதன் இணைப்பு இல்லாமல் இணைப்பது வழக்கம். உதாரணமாக ஒரு செய்தித் தளத்துக்குரிய facebook பக்கத்தில் உள்ள செய்தியை வாசித்து விட்டு அதனை குறிப்பிட்டு மூலம் முகநூல் என்று போட்டு விடுவர். இப்படிச் செய்வதால் செய்திக்கான மூல இணைப்பு இல்லாமல் போகின்றது. எந்தத் தளத்தின் செய்தியாக இருந்தாலும் அதன் இணைப்பைக் கொடுக்க வேண்டும் என்பது விதி மட்டுமல்ல, இதன் மூலம் அந்தந்த செய்தித்தளத்திற்கு நன்றியையும் செலுத்த முடிகின்றது. எனவே தான் பொதுவாக தகவல் முகநூல் என்று போட்டு வருவனவற்றை ஏற்றுக் கொள்வதில்லை.

  • தொடங்கியவர்

தீபச் செல்வனால் முகநூலில் பகிரப்பட்டதை அதன் நம்பகத் தன்மை கருதி இங்கு பதிந்தேன். முகநூலின் வழியாகத் தான் பல செய்தித் தளங்களுக்கும் செய்திகள் வருகின்றன.இது பாதுகாப்பானதும் துரிதமும் ஆன வழியாக இருப்பதால்.

உங்கள் விளக்கத்துக்கு நன்றி இனி முகனூல் வழிச் செய்திகளை யாழ்க் களத்தில் இணைக்கவில்லை. நேரம் மினக்கெட்டு எடுத்துப் போட்டு அது எடுக்கப்படுவதிலும், போடாமல் விடுவது எனது நேரத்தை பிரயோசினமானச் செலவிட உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே படங்களில் இருப்பது சிறிதரன் அல்லவா?? இவரின் சகோதரர் லங்காசிறி , தமிழ்வின் போன்ற இணையத்தளங்களின் பங்கு உரிமையாளர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மீதிப்பங்கிற்கு ஒரு சிங்களப் பெண்மணியும் உரிமையாளர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அப்படியானால், இந்தப்பத்திரிகைக்கும் சிறிதரன் அவர்களுக்கும் என்ன தொடர்பு ? இது லங்காசிறி தமிழ்வின் இணையங்களால் நடத்தப்படும் பத்திரிக்கையா?? இன்று தாயகத்தில் மக்கள் தமது சொந்தக் கருத்துக்களையே கூறப் பயப்படும்போது கிளிநொச்சியில் இருந்து ஒரு பத்திரிக்கை, அதுவும் அரசை விமர்சித்து வருகிறதென்றால் ஆச்சரியப்படத்தக்க விடயமே?? முற்றான இராணுவ அடக்குமுறைக்கும், கண்காணிப்பிற்கும் உள்ளான கிளிநொச்சிப் பகுதியிலிருந்து இப்படியான ஒரு அரசியல் சார்ந்த பத்திரிக்கை வெளிவருவது எப்படி?? தாயகத்தில் நெடுங்காலமாக இயங்கிவரும் உதயன் , முரசொலி போன்ற பத்திரிக்கை நிறுவங்களுக்கும், ஊழியர்களுக்கும் மரண அச்சுருத்தல் விடுத்து வரும் இராணுவமும், துணை இராணுவக் குழுக்களும் இப்படியான ஒரு பத்திரிக்கையை வெளிவர அனுமதித்திருப்பது மிகப்பெரும் ஆச்சரியம்தான் !!!!!

பொறுத்திருந்து பார்ப்போம்.

[size=4]நல்ல கேள்விகள் இரகுநாதன். [/size]

[size=1]

[size=4]சுதந்தர ஊடகங்கள் ஒடுக்கப்படுவரும் வேளையில் எவ்வாறு கிளிநொச்சியில் ஒரு பத்திரிகை சுயாதீனமாக இயங்க முடியும்? நிச்சயம் முடியாது. [/size][/size][size=1]

[size=4]ஒன்றில் சர்வதேசத்திற்கு அங்கு பத்திரிக்கை சுதந்திரம் உள்ளது என காட்டும் முயற்சியாக இருக்கவேண்டும். இல்லை ஒரு பரப்புரை கருவியாக இருக்கவேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]எனக்கு இது இரண்டும் கலந்ததாக இந்த நடவடிக்கை தெரிகின்றது. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.