Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் உரிமைக்குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கனடிய பாராளுமன்றத்திற்க்கு முன்னாள் உரிமைக்குரல் நிகழ்வு கனடிய நேரம் 9 மணிமுதல் தொடர்ந்து 11.30 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இNது வேளை இன்று மாலை 6 மணிக்கு மெல்லாஸ்மென் சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் ரொரன்ரோ உரிமைக்குரல் நிகழ்வுக்காக பெரும்பாலனா வர்த்தக நிலையங்கள் முழுமையாகவும், பல வர்த்தக நிலையங்கள் 3 மணிக்கு பின்னரும் புூட்டபபட்டிருக்கும் என வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை கனடாவின் வர்த்தகத் தலைநகரான ரொறன்ரோவில் நடைபெறவிருக்கும் உரிமைக்குரலிற்கு ரொறன்ரோ பொதுப் போக்குவரத்துச் சேவையின் வேலைநிறுத்தமானது பெரும் தடையாக அமைந்துள்ளது. இதனைப் பொருட்படுத்தாது ரொறன்ரோவாழ் தமிழ்மக்கள் தம் உரிமையினை உரத்துக்கூற எத்தடையையும் உடைத்து முன்வரவேண்டும். நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடனும் தொடர்பு கொண்டு போக்குவரத்து ஏற்பாடுகளை ஒழுங்குசெய்து எத்தடை வரினும் எம் உரிமையை விடோம் என எடுத்துரைக்கவேண்டும் என்று எதிர்பார்கிறேன்.

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தொடர்புகளிற்கு:

416-450-2424, 416-450-9828, 647-274-9366, 647-300-1973

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொரன்ரோவில் நடைமுறையில் இருக்கும் பேரூந்து பணியாளர்கள், பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையால் ரொரன்ரோவில் உரிமைக்குரல் நிகழ்வு பாதிப்படையாது எனவும், இன்று மாலைக்குள் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வராவிட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அது பற்றிய விபரங்கள் கால கிரமத்தில் மக்களுக்கு வானொலிகள், மற்றும் இதர ஊடகங்கள் ஊடாக அறிவிக்கப்படும் என அறியப்படுகின்றது. இதே வேளை தன்னார்வ தொண்டர்களாக தமது வாகனங்களை கொண்டு உதவலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

மெல்லாஸ்ற்மன் சதுக்கத்தின் அருகாமையில் பல வாகனத் தரிப்பிடங்கள் உள்ளதனால் மக்கள் தம் வாகனங்களிலும் வந்து சேரக்கூடியதான இருக்கும். தம் நண்பர்கள் உறவினர்களை தமது வாகனங்களில் அழைத்துவருவதன் மூலம் வாகன நெருக்கடியைக் குறைத்து அதிக மக்கள் வந்து சேரக்கூடியதாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டெரிக்கும் வெயிலில் நின்று 2000 க்கு மேற்ப்பட்ட வயது வேறு பாடின்றி, மக்கள் எமது மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து கொண்டிருக்கின்றனர். எங்கே தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதோ அந்த பாராளுமன்றத்தக்கு முன்னாள் மக்கள் கூடியிருக்கின்றனர். இந்த மக்கள் எங்கிருந்தனர்? என்ற கேள்வி எமக்குள் எழும் அளவிற்க்கு அங்கே மக்கள் அணிதிரண்டிருக்கின்றனர். தேசிய ஊடகங்கள் செய்திகளை பதிவாக்கிகொண்டிருக்கின்றனர

எத்தனை தடை போட்டால் என்ன ஒற்றுமையுடன் அதை முறியடித்து எங்கள் உரிமைக்குரலை கொடுக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச சமூகத்துக்கு எங்கள் உணர்ச்சி எத்தகையது என்று எடுத்துக்காட்டாக இருக்கும். நிச்சயமாக எல்லா மக்களும் வந்து இந் நிகழ்ச்சி வெற்றியடைந்து கனிடிய மண்ணில் சரித்திரம் படைக்க உதவ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொர தீப்பந்தம்!!

பாரு அரசே பாரு!! :wink: :P

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொர தீப்பந்தம்!!

பாரு அரசே பாரு!! :wink:  :P

எத்தடை வரினும் எரித்து பொசுக்குவோம்

எம் உரிமையினைப் பெறவே!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஊற்றுவாய் பிளந்து பொங்கிப் பரவிட

வாருங்கள் எம்மக்களே!.........

ஒலி முரசறைந்து

ஒளி முகம் தருவோம்!

திசைவெளி உடைத்து

தீர்வுகள் தொடுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

.ரொரின்ரோ வாழ் தமிழ் உறவுகளே இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும் வரலாற்றுப் பெருமையைத் தவறவிடாதீர்கள்.இன்று அமெரிக்காவில் விடுமுறை தினம்.அத்துடன் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் ஆர்ப்பாட்டம் ஏதாவது செய்வதானால் ஒரு மாதம் முதலே அனுமதி பெற வேண்டும்எனவே எமது உள்ளக் குமுறல்களைக் கொட்ட முடியாது.உங்களுக்கு கிடைத்திருக்கும் வரலாற்றுக் கடமையை செய்ய அலை அலையாக போய் கலந்து கொள்ளுமாறு அன்பு உறவுகளைக் கேட்டுக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைக்கு ஒரு குரல்

ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும்

ஈழத்துத் தமிழா! நில்!!

வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின்

காலச் சுவடுகளைச் சொல்!

மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள்

தமிழரின் நிலையெங்கும்

கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார்

தடைகளும் போடுறார் பார்!

எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும்

நித்தமும் சூழுது பார்! - இந்த

நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே!

விரைந்து நீர் எழுந்து வாரீர்!

மற்றவர் .

தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை

தர்க்கித்துத் தாக்குகையில்

உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால்

உடனேயே செத்துவிடு! - இல்லை

செப்புகிற நல்லுணர் நாவிருந்தால்

அதை செகத்திற்கு உணர்த்திவிடு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொரன்ரோவில் பிற்பகல் 3.00 தொடக்கம் வர்த்தக நிறுவனங்களும் ஏனைய தனியார் பேரூந்து சேவையாளர்களும், உரிமைக்குரலுக்கான சிறப்பு பேரூந்து வசதிகளைச் செய்துள்ளனர்.இது பற்றிய விபரங்களை நீங்கள் கனடிய தமிழ் வானொலிக்கு அழைத்து பெற்றுக் கொள்ளலாம்.

போக்குவரத்து வசதியில்லாதவர்கள் பேருந்து தரிப்பிடங்களில் வந்து நின்றால் மெல் லாஸ்ற்மன் சதுக்கத்துக்குச் காரில் செல்பவர்கள் இடமிருந்தால் ஏற்றிச்செல்லுமாறும் CTR ல்வேண்டுகோள் விடுத்தார் ஒரு பெரியவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒலிக்கும் எம்மவர் குரல் உலகெங்கும் உரத்துக் கேட்கட்டும்.

தமிழ்மக்களை பலிக்கடாக்களாக்கும் பாதகர் செயல் உலகெங்கும் பரவட்டும்.

காலகாலங்களாக கலங்கும் எம்மக்களுக்கு ஓர் விடிவு விரைவில் பிறக்கட்டும்.

உறவுகள் வாழ்வுக்காய் குரல் கொடு..!

நீ காலாற நடந்த நிலமெங்கும் - இப்போ

காலமானவரை சுமக்கும் ஊர்வலம்

விடியும் பொழுதுக்காய் அங்கு நீ இல்லை

விண் ஊர்தி ஏறி நீ பறந்தாய்

விண் ஊர்தி கொண்டழிக்கின்றார்-அங்கு

சருகாகி போகிறதே தாய் நிலம்

மனசில் சஞ்சலம் ஏதும் உனக்கு உண்டா.....!

தாய் எரிய பார்த்திருந்தாய் உன்னை

தாங்கியவர் உடல் நீறாக பார்த்திருந்தாய்

எட்டுத்திசையும் எரிகிறது பார் தாய் நிலம்

இனி விட்டு விட்டு வீணே கிடப்பாயா?

இன்னும் நீ மனிதனா எப்படியென்று சொல்லு!

உனக்காய் வாழ்ந்தது போதும் இனி

எம் உறவுகள் வாழ்வுக்காய் குரல் கொடு

உறவுகள் அழுத கண்ணீரில்

உடல் சிலிர்க்க நீராடுவாயா?

உரிமைக்காய் குரல் கொடேன்

உன்னை ஈன்ற பூமி

ஒப்பாரியில் மிதந்தாலும்

உன் செய்நன்றிக்காவும் சேர்த்து கண்ணீர்விடும்......!

உணர்வுகளால் உரக்கச் சொல்லிவிடு

உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து

உலகத்தின் கண்களுக்கு

உண்மையை கொடுக்க

உரிமைக்காய் எழும் குரல்

புலம் பெயர்ந்த நம்மவர்களே

பறி போகின்றது நம் உரிமைகள் அங்கே

துடிக்கின்றது இளம் குஞ்சுகளின் உயிர்கள்

பறிக்கின்றான் எதிரி அவர்கள் உடமைகளை

நாம் தவழ்ந்து பழகின நிலமடா அது

நாதிகளாற்று நம் இனம் மடிகின்றது அங்கே

பாடி பாட்டம் விட்டு வட்டம் அடித்த நிலம் அது

பாவிகள் பறிக்கிறார்கள் நம்ம இள வட்டத்தை அங்கு

எம் நிலத்தை இழந்து கொண்டு இருக்கின்றோம்.

எம் உரிமையை இழந்து கொண்டு இருக்கின்றோம்

எம் உணர்வை இழக்கின்றோம் ஆனாலும்

வாழ்கின்றோம் நடைபிணங்களாய் இங்கு

இழந்து விட்ட நம் தந்தை நினைப்போம்

தாலியை இழந்து விட்ட நம் அன்னையை நினைப்போம்

கற்பை பறி கொண்ட சகோதரி கதறுகின்றாள் அங்கு

கற்பனைகளுடன் காலத்தை போக்கின்றோம் நாம் இங்கு

காலை இழந்து விட்ட அண்ணன் தவழ்கின்றான் அங்கு

காசு தான் கடவுள் என்று அலைகின்றோம் நாம் இங்கு

போதுமாடா பொறுத்தது போதுமடா

நம்மவர் துயர் கேட்கையில் எரியுதடா உள்ளம்

தூயில் கொண்டது போதுமடா

துள்ளி எழுந்து வாடா

கட்டங்கள் உயர்ந்து நிற்கும் ரொன்றோ மாநகரத்தில்

ஒலிக்கட்டும் நம்ம குரல்கள் உரிமைக் குரல்களாக

படைப்போம் நாம் ஒரு அரண் நம்ம இனத்திற்காக

காப்போம் நாம் சந்தியினரை கொடிய அரக்கரிடம் இருந்து

காத்திருந்தது போதுமாடா

உரக்கச் சொல்லிடுவோம் உரிமைக்குரலால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, ரொரன்ரோ பொது போக்குவரத்து சபையின் ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அவர்களது தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. எது எப்படியோ இந்த போக்குவரத்து வழமைக்கு திரும்ப கிட்டத்தட்ட 1 மணி நேரம் எடுக்கும். அதே நேரம் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட வாகன வசதிகள் மூலம் மக்கள் செல்ல முடியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொரன்ரோவில் உரிமைக்குரல் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. சுமார் 10 000 த்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

dsc006776ws.jpg

dsc006871vz.jpg

dsc006897mq.jpg

dsc006906uu.jpg

dsc006936ao.jpg

dsc006973vu.jpg

dsc006982jy.jpg

dsc007024cr.jpg

dsc007047mw.jpg

dsc007069jx.jpg

dsc007071xh.jpg

மாபெரும் மக்கள் அணி திரண்டு வந்திருந்தனர். எந்த தடை வந்தாலும் முறியடிப்போம் என்று கனடியதமிழ் மக்கள் உலகுக்கு காட்டியுள்ளார்கள். இங்கு படங்களை இணைத்தமைக்கு நன்றி ராகவா

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளினை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. நன்றிகள் கனடாவாழ் கல்ந்து கொண்ட சகோதர சகோதரிகளுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dsc007088uv.jpg

dsc007095tw.jpg

dsc007105xu.jpg

dsc007139su.jpg

dsc007141cz.jpg

dsc007152kc.jpg

dsc007249dv.jpg

dsc007319lh.jpg

dsc007349hc.jpg

dsc007364jg.jpg

dsc007399uu.jpg

dsc007466dv.jpg

dsc007493dk.jpg

dsc007753mo.jpg

dsc007857wl.jpg

dsc007972ok.jpg

dsc007997hr.jpg

dsc008010kd.jpg

ஆமாம் பொங்கி எழுந்த மக்கள் படையை பார்த்து கனடிய அரசாங்கம் கட்டாயம் திகைத்து இருக்கும். " இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கை கோசம் எழுப்பி மக்கள் தமது ஆதரவுகளை எழுப்பியிருந்தனார். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் அழகான முறையில் நிகழ்ச்சியை தாயரித்து உணர்வுபுர்வமாக அனுஷ்டிக்க வழி செய்திருந்தனார்கள்.

மறைந்த திரு. ஜோசப்பரராஜாசிங்கம் அவர்களின் மனைவியும் எம்முடன் கலந்து கொண்டு கண்ணீர் மல்க தனது வணக்கத்தை தெரிவித்து இருந்தார். சில பராளமன்ற உறுப்பினார்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து இருந்தார்கள். சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை கைத்தட்டல்களுடன் உரக்க குரல் எழுப்பி இப்போதே நமக்கு சமதானம் வேண்டும். எங்கள் தலைவர் பிரபாகன் என்று உரக்க கத்தினார்கள். மிகவும் உணர்ச்சிபுர்வமாகவும் வெற்றிகரமாகவம் நடைபெற்று முடிந்தது.

ரொன்றோ போக்குவரத்து சபை அறிவித்த வேலை நிறுத்தை முன்னறிவிப்பு இன்றி அறிவித்து இருந்ததையும் மக்கள் பொருட்படுத்தாது திரள் திரளாக வந்து குவிந்தனார். இதில் கனடா வாழ் தமிழ் வர்தகப்பெருமக்களின் பங்கு அளப்பரியது. தமது சேவையை நன்கு வழங்கி இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தவர்கள் இவர்கள். கொழுத்து வெயிலிலும் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் போத்தல்களை வலியாகவே வந்து கைகளில் வைத்து விட்டு சென்றார்கள்.

கைகளில் பாதகையும் ஏந்தி முக்கியமாக அல்லைப்பிட்டியில் நடந்த படுகொலை தான் மக்களை இன்னும் கொதிப்படைய வைத்து திரள வைத்திருக்கின்றது என்பது மக்களின் கைகளில் இருந்த பாதகைள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இத்தகை மக்கள் வெள்ளத்தை கண்டபோது புலம்பெயர்ந்து எமது மக்கள் எவ்வழியிலும் சென்றாலும் தயாகத்தில் இருக்கும் தமிழ் உறவுகளை மறந்து விடவில்லை என்பதும் எமது விடிவுக்கான தூரம் அதிகம் இல்லை என்பதும் புலனாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளினை வாசிக்க தமிழ் மக்களின் ஒன்றுமையினை நினைக்க சந்தோசத்தினால் ஆனந்தக்கண்ணீர் வருகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா உரிமைக்குரலில் கவனிக்க தவறியவை!!!...

:cry: பறவைகள் கவனித்தவை.. :D

அலையேன திரண்டிருந்த கனேடிய தமிழ் மக்களுக்கு முதற்கண் பறவைகளின் பணிவான வணக்கங்கள், வாகன ஒழுங்குகள் மற்றும் அதை ஒழுங்கு படுத்திய மதிப்புக்குரிய வர்த்த நிறுவனங்கள் மற்றும் கனடிய தமிழ் வானொலிக்கும் அனைத்து கனடாவாழ் மக்கள் சார்பாகவும் எமது இதயத்திலிருந்து நன்றிகள். :lol:

மக்கள் வருகை மிகவும் அதிகமாகி, மக்கள் நிற்க இடமில்லை என்ற அளவிற்க்கு மெல்லாஸ்மென்ட் சதுக்கம் நிறைந்ததாக அறிந்தோம். சிவப்பு மஞ்சல் கொடிகளுடன், உரிமைக்குரல் என் தமிழில் அல்லது ஏதொ நேரமிருக்கு வேலையில்லை என்பதற்காக போய் கூடி நிற்ப்பதற்கா? எங்கள் உணர்வுகளை வேற்றினத்தவனுக்கு தமிழில் சொன்னால் யார் காதுக்களுக்கு அது செல்லும்? எத்தனை பேருக்கு அது தெரியும்? சிவப்பு மஞ்சல் கொடிகளிலும், கொலை செய்யப்பட்டவர்களது படம் போட்ட பதாதைகளிலும் ஒன்றுமில்லை. பரப்புரை நேரடியாக மக்களால் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், இந்த உரிமைக்குரல் செய்யத ஒன்றை நிச்சயம் ஒரு தனிமனிதன் முயன்று தனிமனிதனாக சாதிக்க முடியும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. உரையாற்றியவர்கள் தமிழில் உரையாற்றினார்கள் சரி, ஆனால் அவர்கள் உரையில் ஒரு தெளிவின்மை, ஒரு அச்சம் தெரிந்ததை நிகழ்வை பார்த்தவர்கள் அறிந்திருப்பார்கள், உலகத்தமிழர் பத்திரிகை ஆசிரியரை தவிர, ஏனையோர் சும்மா சாட்டுக்கு உரையாற்றினார்கள். உரிமையோடு, எங்கள் மக்களுக்காகா உங்களிடம் வருவோம் என்று எங்களை நம்பி உரையாற்றிய அந்த உள்ளத்துக்கு நன்றிகளும் பாராட்டுகளும் மட்டுமன்றி, உங்களோடு நாமிருக்கிறோம் என்று கூறி விடைபெறுகின்றன பறவைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.