Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரு பூ பூத்தது?

Featured Replies

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

அண்மையில் யாழ் உறவோசையில் ஓர் விடயம் பற்றி கருத்தாடல் செய்யலாமா என்று யோசித்தேன். "கிணறு வெட்டப்பூதம் கிளம்பிய கதையாய்.. அந்தவிடயம் போகவேண்டாமே" என்று நினைத்த வேகத்திலேயே அதை மறந்துவிட்டேன். புதிய கருத்தாடல்களை மாத்திரமல்ல, இங்கு பதிற்கருத்துக்கள் எழுதநினைக்கும்போதும் இவ்வாறான உளநிலையே எனக்குள் உள்ளது. ஆயினும், சுகன் இன்று எழுதிய கீழுள்ள கருத்தைப்பார்த்ததும் நான் முன்பு நினைத்த விடயம்பற்றி உங்களுடன் சிறிது உரையாடலாமா என்று யோசித்தேன்.

சுகனின் கருத்தின் ஓர் பகுதி:

பல்வேறு அமைப்புக்களின் உறுப்பினர்கள் இங்கே அனாமதேயர்களாக இருக்கின்றார்கள். அமைப்புகள் சார் கருத்துக்களை மக்களில் ஒருவராக முன்வைக்கின்றார்கள். அமைப்பை நேரடியாக சம்மந்தப்படுத்துவதை தவிர்த்து தந்திரமாக தமது கருத்தினூடாக அமைப்பை தக்கவைக்கின்றனர். மேற்சொன்ன கதைகள் 0.01 வீதமென்றாலும் ஒருவனின் மனட்சாட்சியை தொடும் சந்தர்ப்பமாக அமையும். மக்கள் தெளிவாகக் குழம்பிப்போயுள்ளனர் அவர்களை இக்கதைகள் ஒன்று குழப்ப வாய்பே இல்லை.

நான் கூறவரும் விடயம் என்ன என்றால் எனது கடந்த ஆறு ஆண்டுகால யாழ் கருத்தாடற்தளத்தின் அனுபவத்தில் பார்க்கும்போது கருத்துக்களால் பிரிந்துநின்று மட்டுமல்ல, பங்குபெறும் வாதத்தை வெல்லும் நோக்கிலும் நாம் கருத்தாடலில் ஈடுபட்டு யாழ்க்கருத்துக்களம் மூலம் பல ஆக்கபூர்வமான விடயங்களை செய்யமுடியாதபடி நாமனைவரும் ஆளாளுக்கு ஒவ்வோர் கோணத்திற்சென்று பிரிந்துவிட்டோமா என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதை ஏன் கூறவேண்டியுள்ளது என்றால், இணையத்தளத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நம்முடன் பயணித்த பல கருத்தாடற்தளங்களும் பல கட்டங்களாக முன்னேறி தற்போது எங்கோ போய்விட்டன. சில வருடங்களின் முன்தோன்றிய தளங்களும் முன்னேறிச்செல்கின்றன. ஆனால், யாழ் கருத்துக்களம் மட்டும் அதே இடத்திலேயே அப்படியே உள்ளதுபோல் எனக்குத்தோன்றுகின்றது (எனக்கு மட்டும்தான் அப்படியுள்ளதோ தெரியாது).

இதற்கான பிரதான காரணமாக எமக்கிடையேவுள்ள கருத்துவேறுபாடுகள் காரணமாக நாமனைவரும் மென்மேலும் இங்கு பிரிந்துசெல்கின்றோமா என்பதையே சந்தேகப்படவேண்டியுள்ளது.

வேறு கூறுவதற்கு ஒன்றுமில்லை, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான பிரதான காரணமாக எமக்கிடையேவுள்ள கருத்துவேறுபாடுகள் காரணமாக நாமனைவரும் மென்மேலும் இங்கு பிரிந்துசெல்கின்றோமா என்பதையே சந்தேகப்படவேண்டியுள்ளது.

உண்மைதான் கலைஞன் . கருத்து வேறுபாடுகள் எதிர்மறை எண்ணங்களால் யாழ்களத்தில் மட்டும்மல்ல நடைமுறை வாழ்விலும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களம் என்பதே வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கும் இடம் தானே..!

யாழ் அடிப்படையில் கருத்துக்களத்தை மையப்படுத்தி இயங்கும் ஓர் இணையத்தளம். மற்றவர்கள் அப்படியானவர்களாக தெரியவில்லை. அவர்கள் கருத்துக்களத்தை இணையத்தின் ஒரு பாகமாக வரைந்து கொண்டவர்கள்..!

யாழ் கருத்துக்கள இயங்கு தளத்தில் இன்னும் வெற்றியோடு தான் உள்ளது. ஆனால் அது முன்னேறிச் செல்ல இன்னும் பல வழிகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

மாறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டும் போது தவறான புரிதல்கள் சாதாரணமானது. அதுவும் ஆளே தெரியாமல் கருத்தை வைத்து ஆக்களை யூகிக்கும் நம்மவர்களிடம் அது மிகச் சாதாரணம். கருத்தை கருத்தால் வெல்ல முயலலாம் அது கருத்தியல் உலகில் தவறல்ல. தவிர கருத்தை தூசணத்தால் வசையால் வெல்ல முடிவு கட்டுவதுதான் யாழின் இருப்புக்கு ஆபத்து..!

எமக்காக உயிர் தந்த வீரமறவர்கள் விடயத்தில் கூட ஒற்றுமையாக நிற்க கஸ்டப்படும் நாம்.. கருத்துக்களத்தில் கருத்தால் மாறுபட்டு நிற்கின்ற சந்தர்ப்பங்கள் கூடிய இடத்தில்.. ஒற்றுமையா நிற்பம்..???!

என்னைக் கேட்டால் யாழ் ஒரு விக்கிபீடியா. யாழும் சரி.. விக்கிபீடியாவும் சரி.. வியாபாரம் கடந்து செல்பவை. என்ன யாழின் சேவைக்கான பணப்பளு ஓரிருவர் தலையில். விக்கிபீடியா வைப் பொறுத்தவரை அது நன்கொடையாக பெற்று இயங்கிக் கொள்கிறது..!

சுதந்திர ஊடக உலகில் யாழ் தமிழர்கள் மத்தியில் தனக்கென்றான தனி இடத்தைக் கொண்டுள்ளது அதனை யாராலும் இப்போதைக்கு தகர்க்க முடியாது. :icon_idea:

உணர்வதும் உணர்த்துவதும் ஆளாளுக்கு வேறு படும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர ஊடக உலகில் யாழ் தமிழர்கள் மத்தியில் தனக்கென்றான தனி இடத்தைக் கொண்டுள்ளது அதனை யாராலும் இப்போதைக்கு தகர்க்க முடியாது. :icon_idea:

உணர்வதும் உணர்த்துவதும் ஆளாளுக்கு வேறு படும்..!

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலின் பின்பு, கொடிகட்டிப் பறந்த, இணையத் தளங்கள் பல, முகவரி இழந்தன, அல்லது சோரம் போயின!

ஆனால், யாழ் மெலிந்து போனாலும், அது மீட்டும் இசையில் எந்த மாற்றமுமின்றி நடை போடுவதே, யாழின் வெற்றியாகும்!

யாழ், இந்த ஊடுருவல்களையும் கடந்து போகும், கலைஞன்!

  • தொடங்கியவர்

உண்மைதான் கலைஞன். கருத்து வேறுபாடுகள் எதிர்மறை எண்ணங்களால் யாழ்களத்தில் மட்டும்மல்ல நடைமுறை வாழ்விலும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

ஓர் நாணயத்தின் பக்கங்கள் போல் ஒருமுகமாக நியாயம் உள்ளது, மறுமுகமாக விட்டுக்கொடுப்பு உள்ளது. இரண்டிடையே ஓர் சமநிலை அமைந்தால் நல்லது என்று நினைக்கின்றேன். குறிப்பாக குடும்பமாக வாழும்போது பல சமயங்களில் உங்களில் நியாயம் காணப்பட்டாலும் விட்டுக்கொடுத்து நடக்காவிட்டால் குடும்பம் சிதைந்துவிடும். யாழும் ஓர் குடும்பம் என்று பார்த்தால் விட்டுக்கொடுப்பு அவசியமாகலாம். ஆனால், எழுத்திற்கு அப்பால் இவையெல்லாம் சாத்தியமா என்பது சந்தேகமே!

கருத்துக்களம் என்பதே வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கும் இடம் தானே..!

உண்மைதான்.

உணர்வதும் உணர்த்துவதும் ஆளாளுக்கு வேறுபடும்..!

கால, சூழ்நிலைகளையும் இவற்றுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

முள்ளி வாய்க்காலின் பின்பு, கொடிகட்டிப் பறந்த, இணையத் தளங்கள் பல, முகவரி இழந்தன, அல்லது சோரம் போயின!

நான் தமிழ்த்தளங்களை மட்டும்கூறவில்லை.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு காலக் கண்ணாடியாக உள்ளது. ஒவ்வொருவரும் எத்தகைய சிந்தனைமாற்றங்களை உள்வாங்கினார்கள், அல்லது மாறாமல் இருந்தார்கள் என்பதும் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்ப் பரப்பில் எத்தகைய விடயங்கள் முக்கியப்படுத்தப்பட்டு அலசப்பட்டன என்பனவும் யாழ் களத்தில் உள்ள பதிவுகளில் இருந்து அறியமுடியும். இவையெல்லாம் இன்னும் பல நூறாண்டுகளுக்குப் பின்னரும் பொதுத் தளத்தில் இருக்குமாயிருந்தால் வரலாற்றாய்வாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்!

கருத்துக்கள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது காலங்காலமாக நடப்பதுதான். எனவே இங்கு கருத்தாளர்களாக இருப்பவர்கள் எல்லோரும் ஒரே கோட்டில் பயணிக்கவேண்டிய அவசியமில்லை. எனினும் துகள்கள் எப்படி ஒன்று சேர்ந்து ஒரு பலமான உருண்டையாகின்றதோ, அதுபோன்று கருத்தாளர்களும் சில உருண்டைகளாக உருவாகி உருண்டு பிரள்கின்றார்கள். அப்படி இல்லாவிட்டால் கருத்துக்களத்தில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யாழ்க்களத்தினுள்ளாயினும் சரி, தமிழ்ச்சமூகத்தினுள்ளாயினும் சரி எம்மால் எதிர்கால வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஏதும் கருத்துக்களையும், சுவாரசியமான தடயங்களையும் விட்டுசெல்லமுடிகின்றதேயொழிய கருத்துவேறுபாடுகளிற்கு அப்பால் நிகழ்காலத்தில் தற்போதும், எல்லாக்காலத்திலும் வேறு ஏதும் உருப்படியாய் செய்யமுடியாது என்று சுருக்கமாகக்கூறுங்கள் கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்களத்தினுள்ளாயினும் சரி, தமிழ்ச்சமூகத்தினுள்ளாயினும் சரி எம்மால் எதிர்கால வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஏதும் கருத்துக்களையும், சுவாரசியமான தடயங்களையும் விட்டுசெல்லமுடிகின்றதேயொழிய கருத்துவேறுபாடுகளிற்கு அப்பால் நிகழ்காலத்தில் தற்போதும், எல்லாக்காலத்திலும் வேறு ஏதும் உருப்படியாய் செய்யமுடியாது என்று சுருக்கமாகக்கூறுங்கள் கிருபன்.

 

உருப்படியாகச் செய்வதற்கு ஆரோக்கியமான வகையில் கருத்தாடல் செய்து சரி, பிழைகளை விவாத்தித்து ஒரு பொதுவான தளத்தை நோக்கி நகரவேண்டும். எல்லோருமே சமாந்தரமான பிரபஞ்சங்களில் உலவிக்கொண்டு தங்களது பிரபஞ்சங்களுக்கு வெளியே இருப்பதைத் தெரியாமல் இருப்பதால் உருப்படியாக எதையும் செய்யமுடியாது, ஆனால் ஏதோ செய்வதாகவே தோன்றும்.

  • தொடங்கியவர்

கலைஞன், எனக்கு தெரிந்த தளங்களில் கருத்தை வெளிப்படுத்த உதவும் ஒரே தளம் யாழ் தான். நான் படிக்கும் தளங்களில் நடுத்தரமானதும் யாழ் தான்.

எனது யோசனை, தமிழீழத்தின் இரண்டாம் மொழியான ஆங்கிலத்தையும் உள்வாங்கி புலம்பெயர் இளையோரின் ஆக்கங்களையும், கருத்துக்களையும் உள்வாங்கலாம்.

 

யாழில் ஆங்கிலத்துக்கு யாழ்திரைகடலோடி பகுதியைவிட வேறு சிறப்பு பிரிவேதும் இல்லை. ஆங்கிலத்தில் கருத்துபரிமாற்றம் செய்வதற்கும் வசதியிருப்பின் நல்லதே.

உருப்படியாகச் செய்வதற்கு ஆரோக்கியமான வகையில் கருத்தாடல் செய்து சரி, பிழைகளை விவாத்தித்து ஒரு பொதுவான தளத்தை நோக்கி நகரவேண்டும். எல்லோருமே சமாந்தரமான பிரபஞ்சங்களில் உலவிக்கொண்டு தங்களது பிரபஞ்சங்களுக்கு வெளியே இருப்பதைத் தெரியாமல் இருப்பதால் உருப்படியாக எதையும் செய்யமுடியாது, ஆனால் ஏதோ செய்வதாகவே தோன்றும்.

 

பொதுவான தளத்தை நோக்கி நகர்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் (யுகங்கள்) தேவை? தமிழாராய்ச்சி மாநாட்டு சகாப்தம், 83 கலவரகால சகாப்தம், ஈழப்போர் சகாப்தம், முள்ளிவாய்க்கால் சகாப்தம், சகாப்தங்கள் இனியும் தொடரும். விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் விடிவு கிடைக்குமா? நான் கூறவந்த பிரதானவிடயம் மீண்டுமொருமுறை.

நான் கூறவரும் விடயம் என்ன என்றால் எனது கடந்த ஆறு ஆண்டுகால யாழ் கருத்தாடற்தளத்தின் அனுபவத்தில் பார்க்கும்போது கருத்துக்களால் பிரிந்துநின்று மட்டுமல்ல, பங்குபெறும் வாதத்தை வெல்லும் நோக்கிலும் நாம் கருத்தாடலில் ஈடுபட்டு யாழ்க்கருத்துக்களம் மூலம் பல ஆக்கபூர்வமான விடயங்களை செய்யமுடியாதபடி நாமனைவரும் ஆளாளுக்கு ஒவ்வோர் கோணத்திற்சென்று பிரிந்துவிட்டோமா என்று எண்ணத்தோன்றுகின்றது.எமக்கிடையேவுள்ள கருத்துவேறுபாடுகள் காரணமாக நாமனைவரும் மென்மேலும் இங்கு பிரிந்துசெல்கின்றோமா என்பதையே சந்தேகப்படவேண்டியுள்ளது.

வேறு கூறுவதற்கு ஒன்றுமில்லை, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
பொதுவான தளத்தை நோக்கி நகர்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் (யுகங்கள்) தேவை? தமிழாராய்ச்சி மாநாட்டு சகாப்தம், 83 கலவரகால சகாப்தம், ஈழப்போர் சகாப்தம், முள்ளிவாய்க்கால் சகாப்தம், சகாப்தங்கள் இனியும் தொடரும். விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் விடிவு கிடைக்குமா? நான் கூறவந்த பிரதானவிடயம் மீண்டுமொருமுறை.

 

தமிழர்களின் இன உணர்வு செயற்கைத்தனமானது. இது தமிழ்த் தேசிய உணர்வு வலுவில்லாமல் இருப்பதானாலேயே ஆகும்.

 

அதற்கான முக்கிய காரணங்கள் தமிழர்கள் இறுக்கமான ஊர், பிரதேச, சாதியக் கட்டமைப்புக்குள் சிக்கியிருப்பதே. இத்தகைய அகவயமான காரணிகள் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தாத போதிலும், புறவயமான காரணியான சிங்கள இன அடக்குமுறை தமிழர்களை ஒரு குவியப் பாதையில் ஒருங்கமைத்தது. ஆனாலும் அந்தக் குவியப்படுத்தலின் பின்னரும் அகவயமான காரணிகள் மேலெழுந்ததாலும், கொள்கை வேறுபாடுகளை ஆயுதங்கள் மூலம் தீர்க்க முனைந்ததாலும் பிளவுகள் அதிகரித்தே சென்றன. இப்படியான பிளவுபட்ட வரலாற்றின் வழி வந்தவர்களையே யாழ் களமும் பிரதிபலிக்கின்றது.

 

தமிழர்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒரு பொதுவான தளத்தில் நின்று வலிமையான தேசிய இனமாக  தம்மை அடையாளப்படுத்தினால்தான் அரசியல் உரிமைகளை வெல்லலாம் என்று அநேகருக்குத் தெரிந்திருந்தாலும், தாம் தாம் இறுகப் பற்றியிருக்கும் பாதையை சரியானது என்றும், பிறரின் பாதை தவறானது என்றும் தொடர்ந்தும் இருக்கும் நிலையானது ஒரு தேக்கத்தை உருவாக்கியுள்ளது.

 

அரசியல் ரீதியான விட்டுக்கொடுப்புகளாலும் ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்வதாலும் இத்தகைய தேக்கத்திலிருந்து விடுபடலாம். அது மெதுவாகவேனும் தாயகத்தில் நடப்பதாகத் தெரிந்தாலும், நெல்லிக்காய் மூட்டை எப்போது பிரியுமோ என்ற பயமும் இருக்கவே செய்கின்றது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தமிழர்களின் ஒற்றுமை என்றதும் உடனடியாக அரசியல் ரீதியாய் கருத்துக்கூறவேண்டியதன் அவசியம் என்ன? எடுத்ததற்கெல்லாம் அரசியல் ரீதியான வியாக்கியானம் அவசியமா? அரசியல் ஓர் சமூகத்தின் அங்கமே. ஆனால், அனைத்தையும் அரசியல்ரீதியாகவே அணுகுவது ஆரோக்கியமான ஒன்றில்லையே! யாழ்கருத்துக்களத்தில் வெவ்வேறு அரசியல் நிலைப்பாட்டைக்கொண்டவர்கள் கருத்தாளர்களாக காணப்படலாம், வாசகர்களாக காணப்படலாம். இவ்வாறே அரசியல்பற்றி அலட்டிக்கொள்ளாத பல கருத்தாளர்கள், வாசகர்களும் காணப்படலாம். இங்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஓர் அடிப்படை விடயம் உள்ளது: தமிழ்மொழியே அது! காரணம், தமிழை வாசிக்கத்தெரியாவிட்டால் இங்கு எழுதப்படும் விடயங்களே ஒருவருக்கு புரியாது. எனவே, ஆரம்பப்புள்ளியாக அரசியலுக்குப்பதிலாக தமிழ்மொழியை கருத்திற்கொள்ளலாமே!

Edited by கலைஞன்

தமிழர்களின் ஒற்றுமை என்றதும் உடனடியாக அரசியல் ரீதியாய் கருத்துக்கூறவேண்டியதன் அவசியம் என்ன? எடுத்ததற்கெல்லாம் அரசியல் ரீதியான வியாக்கியானம் அவசியமா? அரசியல் ஓர் சமூகத்தின் அங்கமே. ஆனால், அனைத்தையும் அரசியல்ரீதியாகவே அணுகுவது ஆரோக்கியமான ஒன்றில்லையே! யாழ்கருத்துக்களத்தில் வெவ்வேறு அரசியல் நிலைப்பாட்டைக்கொண்டவர்கள் கருத்தாளர்களாக காணப்படலாம், வாசகர்களாக காணப்படலாம். இவ்வாறே அரசியல்பற்றி அலட்டிக்கொள்ளாத பல கருத்தாளர்கள், வாசகர்களும் காணப்படலாம். இங்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஓர் அடிப்படை விடயம் உள்ளது: தமிழ்மொழியே அது! காரணம், தமிழை வாசிக்கத்தெரியாவிட்டால் இங்கு எழுதப்படும் விடயங்களே ஒருவருக்கு புரியாது. எனவே, ஆரம்பப்புள்ளியாக அரசியலுக்குப்பதிலாக தமிழ்மொழியை கருத்திற்கொள்ளலாமே!

 

 

நியாயமான கேள்வியும் ஆதங்கமும் . நீங்கள் குறிப்பிடுகின்ற சமாச்சாரங்களும் " குழும அரசியலுக்குள் "  சிக்குப்பட்டுப் பல திறமைசாலிகள் மௌனித்துவிட்டார்கள் , அல்லது ஓரம் கட்டப்பட்டதும் கருத்துக்களத்தின் வரலாறுகளில் பதியப்பட்டுள்ளது கலைஞன் .

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கலக்காத எந்த விடயமும் இல்லை. வேறுபட்ட அரசியல் பார்வைகள் கொண்டவர்கள் தற்காலிகமாக சிலவற்றில் ஒற்றுமையாக இயங்குவதுபோலத் தோற்றமளிக்கலாம்.  உதாரணமாக பழைய பாடசாலை, பல்கலைக் கழக கலை நிகழ்வுகள், சந்திப்புக்கள், களியாட்டங்கள்.

 

ஆனால் நீண்டகால ரீதியில் சேர்ந்து இயங்கச் சாத்தியம் குறைவு. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும் செயற்பாடுகளையும் அவர் சார்ந்த கொள்கை, கோட்பாடு, அரசியல் தளங்களே தீர்மானிக்கின்றது. ஒரே மொழியைப் பேசுகின்றவர்கள் மொழியில் அடிப்படையில் மாத்திரம் நீண்ட காலச் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள். அப்படித் தன்னலமற்ற கர்ம வீரர்களைக் காண்பதரிது.

பல கருத்துகள், வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், சில பிறந்தநாள் பாட்டி, புது வருடப்பாட்டி, அல்லது வேறு கூடிக்கதைக்கும் பாட்டிகளில் வரும் தனிமனித அபிப்பிராயங்களை வைத்து, "யாழ்ப்பாணத்தமிழர்" என்ற, இல்லாத செயற்கையான, உருவகத்தில் வெறுமனே சித்தரிக்கப்பட்டு அதை பொதுவிதியாக்கி வைக்கபட்ட தத்துவங்கள். எவருமே இது வரையில் "இவர்கள் தான் யாழ்ப்பணத்தமிழர்" என்று எங்கும் உறுதிப்படுத்தியதில்லை.இவற்றில் சில அண்மையில் ஈழத்தமிழருக்காக போராடிய தனி பெரும் இயக்கம் சந்தித்த தோல்விகளுக்கு காரணங்களாக பிரேரிக்கப்பட்டவை மட்டுமே.  மீண்டும், இவை எவையும் நிறுவப்பட்டவை இல்லை. இவை எதுவுமே ஒரு சமுதாய சிந்தனை நூலொன்றின் எந்த பக்கத்திலும் காட்டப்பட்டுவிடக்கூடாதவை.  ஆராச்சிகளில் கண்டுபிடிக்கபட்டதவை என்பது மட்டும் அல்ல ஆழ்ந்த பெருத்த மனம் ஒன்றின் அபிப்பிராயங்களும் இல்லை.


இவற்றில் பல, இலங்கை தமிழர், 1956ம் ஆண்டுவரை, இலங்கையின் மிக வெற்றிகரமான இனமாக இருந்தது என்றதை கூட வலிந்து மறுதலிக்கின்றன. உதரணத்திற்கு, சங்கிலியன் போத்துக்கீசரிடம் தோற்று, நாம் சிங்களிவரிடம் அடிமையானோம் என்ற சரித்திரத்தை அறிந்தும், பிரபாகரன் சிங்களவரிடம் தோற்றார் என்பதை வைத்து பொதுவிதிகள் ஆக்குகிறார்கள்.

 

ஒரு இனத்தின் வெற்றி பல காரணிகளில் தங்கியிருக்கிறது. இதை ஆராயமல் தோல்வியை வைத்து பொது விதிகள் ஆக்க முயல்வது குறுகிய மனப்பான்மை. உதாரணத்திற்கு, நேருவின் பாஞ்சீலக்கொள்கையில் இருந்து இன்றுவரை இந்தியாவின் பாதுகப்பு கொள்கைகள் பல திருப்பங்களைச் சந்தித்துவிட்டது. கருணாநிதி 2G வழக்கில் மாட்டியிருந்தை சாதகமாக வைத்து இந்திய காங்கிரஸ் மேற்கொண்ட பல தவறுகளை இந்தியாவின் பலமான, பிராந்திய, புவிசார் பாதுகாப்பு கொள்கைளாக பல எழுத்தாளர்கள் வர்ணித்திருந்தார்கள். ஆனால் கருணநிதிக்கு தேர்தலில் நடந்தவற்றை வைத்து மத்தியில், தனது பாதுகாப்பு, வரத்தகம், ... போன்ற பல கொள்கைளில், கங்கிரஸ் பல மாற்றங்களை செய்த்திருக்கிறது.  

 

 

மேலும், அரசியல், சாதரண தமிழ் பேச்சு வழக்கில், ஒரு செயல்பாட்டை நிர்வாகிக்கும் தனி மனித செயல்ப்பாடுகளை சுட்டும். வரவிலக்கணத்தில், இது அரசியல் அறிவியலை சுட்டும்.  இரண்டையும் கலந்து மயங்குவதும் இங்கே காணப்படுகிறது.

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அரசியல் பல சமயங்களில் ஏதாவது ஓர் வகையிலாயினும் அல்லது மறைமுகமாகவேனும் எமது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவனவாயும், அதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் ஏதோவகையில் பிணைக்கப்பட்டவர்களாயும், மேலும், அதிலிருந்து முற்றுமுழுதாக எம்மை விலத்திவைக்கமுடியாதவர்களாயும் உள்ளோம் என்பது உண்மை. ஆனால், எல்லாவற்றையும் அரசியல் ரீதியாகவே அணுகுவதும், அரசியல் இலாப, நட்டக்கணக்கின் அடிப்படையில் வாழ்வியல் சம்மந்தப்பட்ட விடயங்களை அணுகுவதும், அரசியல் விருப்பு, வெறுப்புக்களின் அடைப்படையில் பொதுவாழ்வை தரிசிப்பதுவும் இவை நிச்சயம் ஆரோக்கியமானவை இல்லை. "ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரு பூ பூத்தது" எனும் விடயத்தின் உள்ளார்ந்தத்தை உண்மையில் எத்தனைபேர் சரியாக உள்வாங்கினீர்கள் என்பது எனக்குத்தெரியவில்லை. அல்லது, நான் விளங்கத்தக்கவகையில் எழுதவில்லையோவும் தெரியாது. பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.