Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது

Featured Replies

மையவாதம் என்பது ஒரு கருத்தியல். அனைத்திலும் தானே உயர்ந்தவன் அது கல்வி சாதி சமயம் பிரதேசம் என அனைத்தையும் இணைத்த ஒரு மேட்டுக்குடி கருத்துநிலை. இது தன்னை தக்கவைத்துக்கொள்ள குறிவைப்பத தனது இனத்தையே. இது தன்னினத்துக்குள் இரைதேடும் ஒரு செயல்வடிவம். எதற்காகவும் அனசரிப்பு ஐக்கியப்பாடு விட்டுக்கொடுப்பு என்பத இதனிடம் இல்லை.இது உளவியல் ரீதியல் ஸ்திரமாகிவிட்டது. இதன் விழைவு சிங்களத்துக்கு சாதகமானது. இயக்கங்கள் ஒன்றுபடாத பிடிவாதம் இங்கிருந்ததான் தோற்றம் பெறுகின்றது. இந்த முரண்பாடு ஆட்கொல்லிக் நோயாக மாறும் போது பல இயக்கத்தலமைகள் சிங்களத்திடம் சென்று சேர்ந்தனர். இது பிரிவுகளை பெருக்கிக்கொண்டிருக்கும் ஒரு தளம். நாட்டில் இயக்கங்களாகட்டும் இயக்ங்களுக்குள் பிளவுகளாகட்டும் மத பிரதேச பிளவுகளாகட்டும் புலத்தில் நாடுகடந்த அரசு பின்பு ஜனநாயக நா க அ பிரிவு. ஒரு மாவீரர் தினம் பிறகு ஒன்பது. நாம் எவ்வளவு தூரம் சிதைவு படுகின்றோமோ அவ்வளவு தூரம் அது சிங்களத்துக்கு சாதகமானது. அந்தவகையில் பேரினவாதத்திற்கு சாதகம் செய்யக்கூடிய மையவாதம் அதன் கூட்டாளி என்பதில் மாற்றுக்கருத்திருக்கமுடியாத. எனது வாதம் தமிழ்மக்களுக்கான போராட்டம் பேரினவாதக் கூட்டாளிகளின் கூடாரங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டால் தமிழ்மக்களின் கதி என்ன? டக்ளஸ் மையவாதி அல்ல டக்ளசையும் இன்னும் பல தலைவர்களையும் கொண்டுபோய் பேரினவாதத்திடம் ஒப்படைத்ததே மையவாதம்.

புத்தகத்தில் வாச்சித்தவை விளங்காவிட்டால் அதற்கு நான் பாடு அல்ல.

சரி இப்போதென்ன மைவாதம் கருத்தியலாக காற்றில் மட்டும் இருக்கிறதா அல்லது மேடுக்குடிகளிடமும் இருக்கிறதா?

மேட்டுக்குட்டிகளா இயகங்கள் நடத்தினார்கள்? மேட்டுக்குடிகளா 32 இயக்கங்கள் தனியத் தனிய நடத்தினார்கள்? மேட்டுக்குடிகள் அதிகாரங்களை தக்கவைக்க இயக்கங்களா அமைத்து போராடுபவர்கள்? மேட்டுக்குடிகள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து அடிபட்டு இயக்கங்கள் நடத்தியமை சிங்களவருக்கு சாதகமானது. பின்னர் யாரிடம் இந்த மேட்டு குடிகள் வளைந்து நெளிந்து தங்கள் அதிகாரங்களை தக்க வைக்கிறார்கள்? சிங்களவருடன் சமாதனாமாக மறுக்கும் மேட்டுக்குடிகளிடம் எதற்கு சிங்களவர்கள் இன்னமும் அதிகாரத்தை விட்டு வைத்திருக்கிறார்கள்?

தேவானந்தா மற்றய இயக்கங்களுடன் சேர மறுத்து பிரிந்த போனது மேட்டுக்குடிகளிடம் இனி சவகாசம் வேண்டாம் என்றா பிரிந்து போனார். அப்படி சேர மறுப்பது மேட்டுக்குடி இயல்பா அல்லது தாழ்குடி இயல்பா? தேவானந்தா மற்ற இயக்கங்களுடன் சேர மறுத்தது இனத்துக்காகவா அல்லது இனத்தை தாரைவார்த்து தன் சுயநலத்தை கொண்டு போகவா? K.P. அரசுடன் இணையும் போது புலிகள் என்ற மேட்டுக்குடிகள் வேண்டாம் என்றா இணைந்தார். புலிகளின் அரசியல் காலத்தில், சாதி, மத, பிரிகள் இருக்கக்கூடாது என்று சட்டங்கள் வைத்திருந்தது, ஒரே ஒரு மேட்டுக்குடி மட்டும் இருந்தால் போது மென்றதாலா? புலி மேட்டுக்குடிகள் ஏன் சாதி, மத பிரிவினைகளை அங்கீகரிக்க மறுத்தார்கள்?

தேவானந்தா, யோகேஸ்வரி பற்குணம், சந்திரகுமார் போன்றோர் அரசியல் கூட்டங்களில் எதிர்கட்சியாளர்களுக்கு போத்தல்களால் எறிவது இவர்கள் பண்பாடு இல்லாத இழி குடிகளால் பிறந்து விட்டதாலா அல்லது தாங்கள் மேட்டுக்குடிகள் தங்களை யாரும் எதிர்த்து பேச கூடாதென்பதால?

SJV மேட்டுக்குடியா அல்லது இழிகுடியா? அவர் தமிழ் காங்கிரசை விட்டு பிரிந்தது வழமையான மேட்டுக்குடி பண்பாலா? அவர் UNP அரசில் சேர்ந்தும், SLFP அரசில் சேர்ந்தும் ஒப்பந்தங்கள் எழுதியது எந்த குடி இயல்பு?

இந்தியாவில் பிராமணர்களையும், மேலை நாடுகளில் பிரபுக்கள் குடும்பங்கள் மீதும் வைத்து செய்ய பட்ட ஆராச்சிகளை ஏன் தமிழீழத்தின் மீது திணிக்கிறீகள். தமிழீழத்தில் என்ற நூற்றாண்டில் பரம்பரை அரசியல்வாதிகள் அதிகாரத்துடன் இருந்தார்கள் என்று கூறமுடியுமா? மட்டக்களப்பிலோ அல்லது யாழ்ப்பணத்திலோ பிராமணர்கள் சரித்திரத்தின் எந்த காலத்திலும் ஆட்சியில் இருக்க இல்லை என்பது தெரியுமா? எங்கிருந்து இவர்கள் பரம்பரை பரம்பரையாக வரும் மேட்டுக்குடி பண்பாடுகளை பழகினார்கள் என்று கூறமுடியுமா?

ஆமி கல்லூரிரை மாணவர்களை அடித்தால், அதற்குள் இந்த மேட்டுக்குடி மையவாதம் வந்தவுடன் ஆமியடித்தது சரியாகிவிடுமா?

  • Replies 110
  • Views 7.6k
  • Created
  • Last Reply

யாழ்.பல்கலை மாணவ ஒன்றியத்தை இலக்கு வைத்து அரச புலனாய்வாரள்களும் சிறிரெலோ அமைப்பும் களத்தில்

30 நவம்பர் 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகளை இலக்கு வைத்து அவர்களை சிக்க வைக்கும் நாடகமொன்றை இன்று இலங்கை இராணுவ புலனாய்வுப்பிரிவும் பொலிஸ் தரப்பும் இணைந்து அரங்கேற்ற தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிக அண்மையில் அவசர அவசரமாக பல்கலைக்கழக பின் வீதியில் துணை ஆயுதக்குழுவான சிறீடொலோ அமைப்பின் அலுவலகமொன்று திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை தமது அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக அக்கட்சி அலுவலகத்திலிருந்து பத்திரிகைகளுக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.

செய்தியின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகத்தில் கணிசமான பத்திரிகைகள் அதனை பிரசுரிக்க மறுத்துவிட்டன. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலில் குறித்த துணை ஆயுதக்குழுவினது அங்கத்தவர்கள் நேரடியாக பங்கெடுத்தமை அம்பலமாகியும் இருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டது போன்று தமது அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகளை இலக்கு வைத்து அவர்களில் ஏழு பேரது பெயர்கள் குறிப்பிட்டு புகாரொன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டவர்களுள் முன்னாள் மாணவ தலைவர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் அவ்வாறு பெயர் குறி;ப்பிடப்பட்ட பலர் ஏற்கனவே தமது சொந்த இடங்களான வெளிமாவட்டங்களுக்கு தற்போதைய பகிஸ்கரிப்பு காரணமாக சென்றுவிட்டதாகவும் மாணவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த ஏழு மாணவர்களில் இருவர் மட்டுமே சட்டத்தரணிகள் மற்றும் பீடாதிபதிகள் சகிதம் இன்று பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளனர். எனினும் அவர்களை தாம் கைது செய்திருப்பதாக கூறும் பொலிஸ் நீதிமன்றில் ஆஜராகியே தீருவதென அடாவடியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் சக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகள் மற்றும் பீடாதிபதிகள் அதற்கு மறுதலித்து தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தினிலேயே தங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இன்றும் பல்கலைக்கழக சூழல் படைத்தரப்பின் முற்றுகைக்குள் சிக்குண்டுள்ள நிலையில் அதையும் பொருட்படுத்தாது பல்கலைக்கழக ஆசிரிய சங்கப்பிரதிநிகள் அரை நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்ததுடன் கண்டன ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்தனர்.

http://www.globaltam...IN/article.aspx

[size=5]ஸ்ரீடெலோ காரியாலய தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது[/size]

[size=4]திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது நேற்று முன்தினம் அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு - தமிழ்மிரருக்கு தெரிவித்தது.[/size]

[size=4]நேற்று முன்தினம் அதிகாலை ஸ்ரீடெலோ காரியாலயம் மீது இனந்தெரியாத நபர்களினால் சிறிய பெற்றோல் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை. இந்நிலையிலேயே, இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் இன்று சனிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/53855-2012-11-30-19-24-04.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்கலைக்கழக கண்மணிகளா!

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களும் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களும் 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்திய பொங்கு தமிழ் நிகழ்வு போன்று பாரிய எழுச்சி நிகழ்வினை நடத்தி- வன்னியில் மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்த முயற்சி செய்யுங்கள் என்று கேட்டபோது எத்தனை பேர் அன்று பம்மிக் கொண்டு இருந்தீர்கள். எத்தனை பேர் அன்று உங்கள் செல்லிடப்பேசிகளை நிறுத்தி வைத்தீர்கள்.

இப்போது மட்டும் மாவீரர்களை நினைவு கூர விடவில்லை என்று போராட்டம் நடத்துகின்றீர்கள்.

என்ன உலகமடா சாமி.

அன்று யாழில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த போதும் பம்மிக் கொண்டு இருந்தீர்கள்.

இன்று அத்தகைய படுகொலைச் நிகழ்வுகள் குறைந்து உள்ள நிலையில் வீரம் காட்டுகின்றீர்கள். மீண்டும் படுகொலைக் கலாச்சாரத்தினை நீங்களே உருவாக்குகின்றீர்கள். இதனை புலத்தில் இருந்து செயற்படும் தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் பெரிதாக்குகின்றன.

அங்கே உள்ள கஸ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக பண உதவி செய்து அவர்களிடம் மேலதிக பணத்தினைக் கொடுத்து இம்முறை மாவீரர் நிகழ்வுகளை உவ்விடம் செய்துவிட்டு படங்களை எமக்கு அனுப்புங்கள் எமது சார்பு ஊடகங்களில் வெளியிடுகின்றோம் என்று உசுப்பேத்தி விட்டுள்ளனர் புலத்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழக மட்டத்தில் மட்டுமல்ல கிழக்கிலும் வன்னியிலும் அரங்கேற்றி உள்ளனர். தயவுசெய்து அந்த மக்களை இனியாவது நிம்மதியாக வாழ விடுங்கள். உபத்திரங்களை பெற்றுக் கொடுத்து நீங்கள் புலத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு அவர்களை துன்பத்தில் ஆழ்த்தாதீர்கள்.

இதனை நான் கற்பனையில் எழுதுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு சாரார் அங்கே சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் உள்ளனர். அங்கே உள்ள ஊடகங்கள் இவற்றை வெளியிடாது என்பது யாவரும் அறிந்த விடயம். மாணவர்கள் கொந்தளிப்பு அது இது என்று செய்திகளை வெளியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கும் ஊடகப் பசி இருக்கின்றது அல்லவா.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டு இருந்த போது பல்கலைக்கழக மாணவர்களிடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்த விடயத்தினை தப்பி வெளியேறி இருக்கக்கூடிய போராளிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்களப் பயங்கரவாத்திடம் மண்டியிட்டதால் புல சிங்களப்பயங்கரவாதிகளின் கூலிகளுக்கு இப்போது கேபியே தலை ஆகிவிட்டார்! அந்த வகையில் அறிவின் கண்ணை மூடிக் கொண்டு பம்மாத்தை நியம் என்று நம்பவைக்கும் நிர்மலன் போன்றோர் எமக்கு அறிவைப் போதிக்க வருகின்றார்கள்!

நிர்மலா பெண் உறுப்புக்குள் குண்டை வைத்து படுகொலை செய்யும் போது கொண்ட கணவனே பார்த்துக் கொண்டு நிற்கவேண்டிய பயங்கரவாத்தின் இராட்சியம் மாறி கதைக்கின்ற உரிமை ஓரளவு கிடைக்கின்ற போது அவன் தன் எதிர்ப்பைக் காட்டும் போது அப்போது உமது பகுத்தறிவு எதற்குள் ஒழிந்து கொள்ளுமாம்!

முள்ளிவாய்க்கால் படுகொலையை தமிழீழத்தின் ஏனய பகுதிகள் அனைத்தும் பாத்துக் கொள்ள மட்டும் தான் முடியும். ஏன் என்றால் சிங்களத்தின் இரத்த வெறியின் எல்லையைக் காட்ட அதுவே ஒரு அலகு. நூறு ஆயிரங்களில் செய்த கொலையை பூச்சியங்கள் என்று உலகுக்குச் சொல்ல அவனுக்கு இருக்கும் துணிவிற்கு நூறுகளில் கொல்ல அவனுக்கு எவளவு இருக்கும்!

Edited by தேவன்

148748_224757747656367_562592141_n.jpg

[size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதலைக் கண்டித்தும், பல்கலைக்கழக விடுதிகளுள் அனுமதியின்றி படையினர் புகுந்ததைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 11.00 மணி தொடக்கம் 12 மணிரை இந்த போராட்டம் இலங்கை ஆசிரியார் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.[/size]

[size=3]

[size=4]இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்ள இடம்பெறாமல் தடுப்பதற்கு ஜனநாயக வழியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை, சிறிலங்கைப் படையினரும் பொலிஸாரும் தடுத்து ஒடுக்குமுறையைப் பிரயோகித்ததை சர்வதேசத்திற்குச் சொல்லும் ஒரு போராட்டமாக அமைந்துள்ளது என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட விரிவுரையாளர்கள், “தமிழர்களுக்காக உயிரி நீத்த தியாகிகளுக்கு தமிழர்கள் தீபமேற்றவும் தடையா?”, “யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவத்தினரின் காடைத்தனம்”, “கல்விக் கூடமா? இராணுவமுகாமா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, யாரிந்த ஸ்ரீடெலோ ? முன்னால் டெலோவா??? அவர்களுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளும் இராணுவத்துக்கும் என்ன தொடர்பு ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்தாடும் தேசீயவாதிகள் தம் தேசீயச் சுதியை தக்கவைக்க இழுப்பது புளட் மாலதீவு டக்களஸ் கேபி.

நான் சொல்ல வருவது தவறான இடத்தில் இருந்து போராட்டம் எப்படி ஆரம்பிக்க முடியும் என்பதைப் பற்றியே.

சிங்களப் பேரினவாதம் எப்படி எம் மக்களை வதைத்ததோ அப்டியே மையாதமும் வதைத்தது. சர்வதேசத்தில் போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதில் பெரும் பங்கு வகித்தது UTHR (J) போன்ற முன்னாள் யாழ் பல்கழைக்கழக அமைப்புகள். சிங்களம் செய்த கொலைகளை புலிகள் தலையில் கச்சிதமாக போட்டு அரசுக்கு சாதகமாக போராட்டத்தை பயங்கரவாதமாக்கினார்கள். ஒரு லட்சம் தமிழர்கள் கொல்ப்படுவதற்கு அழமறுத்த இந்த யுனிவர்சிட்டி கோஸ்டி ராஜினி திரணகம என்ற ஒருவருக்காக கால் நூற்றாண்டாக குடம் குடமாக அழுது வர்க்க் கண்ணீர்விட்டுக்கொண்டிருக்கின்றது. இரயகரன் வகையறாக்கள் இந்த யுனிவர்சிட்டி தோற்றுவிப்புக்களே. போரின் பின்னர் யுனிவர்சிட்டிக்குள் நுழைந்த முன்னாள் போராளிகள் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துள்ளனர். பலர் படிப்பே வேண்டாம் என்று விலகியுள்ளனர். மகிந்தனும் சரத்தும் பவ்வியமாக வந்து தரிசிக்கும் இடம் நல்லூர் கந்தன். எத்தனையோ தேவாலயம் கோயில் களுக்கு மேல் குண்டு போட்டாலும் இங்கே எல்லாம் சிங்களம் குண்டுகள் போடாது. காரணம் மையவாதமும் பேரினவாதமும் கூட்டாளிகள். எந்த அடக்குமுறையிலும் இனவாத நெருக்கடியிலும் இந்த மையவாதம் நழுவிக்கொள்ளும். அரச மானியம் அரச உத்தியோகம் என தன்னை நெளிவு சுழிவுகளூடாக தக்கவைத்தக்கொள்ளும். கூட்டாளிகள் நீங்கள் அடிக்கும் கூத்துகளில் கொல்லப்படுவதும் வாழ்வை இழப்பதும் வறுமைப்பட்ட அப்பாவி மக்கள். உங்கள் கருத்தியல் தளம் ஜனநாயகத்துக்கு விரோதமானது குரோதமானது. இங்கிருந்து ஒரு போராட்டம் புறப்பட்டு எஞ்சியுள்ள வறுமைப்பட்ட மக்களை அழித்தொழிக்க கருக்கொண்டுள்ளது. 32க்கும் மேற்பட்ட இயக்கத்தலமையும் யாழ் குடாவின் கோவணத்துக்குள் இருநது புறப்பட்டு ஒன்றை ஒன்று கடிபட்டு கூட இருந்த மக்களையும் கடித்து குதறி சிதைத்து சின்னாபின்னமாக்கிய தளம் இது. இங்கிருந்து மக்கள் போராட்டம் கருக்கொள்ள முடியாது. பேரினவாதத்தின் உண்மையான கூட்டாளிகள் இந்த தளங்களே. இவற்றையே நான் சொல்கின்றேன். போராட்டம் தவறு என்பதல்ல எனது வாதம் அது ஆரம்பிக்கும் இடம் மிக ஆபத்தானது. அது மக்களை கொலைக்களத்துக்கு இழுத்துவிட்டு தான் சிங்களத்துடன் இணைந்துகொள்ளும். இங்கிருக்கும் மையவாதத்தில் ஊறிப்போன தேசீயவாதிகள் உங்கள் போராட்டத்தை உலகம் உற்றுப்பார்கின்றது ஒபாமா வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று பீல விட்டு உசுப்பேத்தி விடுவார்கள். மக்களின் உயிருடன் சிங்களமும் மையவாதமும் மீண்டும் ஒருமுறை விழையாட முற்படும் போது அதற்கு குறுக்காக எழுதவேண்டிய தேவை இருக்கின்றது.

ஒரு சகோதரன் தனக்காக.. தன் இனத்திற்காக.. மண்ணிற்காக வீழ்ந்துபோன உறவுகளை எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் என்ன மையவாதம் உள்ளது...??! அதை செய்வதில் என்ன ஜனநாயக மறுப்பு உள்ளது..???! அது மனிதர்களின் அடிப்படை உரிமை. அதனை மறுக்கும் பேரினவாதத்தையும் அந்தப் பேரினவாதத்தைக் கண்டிக்க மறுக்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் ஒட்டுக்குழு மையவாதங்களையும் கண்டிக்க உள்ள நியாயங்களை ஏன் நீங்கள் வெளிப்படுத்தாமல்.. புலம்பெயர் மக்களையும் தமிழ் தேசியவாதிகளையும் மட்டும் எப்போதும் குறிவைக்கிறீர்கள்..!

யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மனித உரிமை அமைப்பு என்ற அந்த சிங்கள சந்திரிக்கா விசுவாச போலி மனித உரிமை அமைப்புப் பற்றி மக்கள் 1995 இடம்பெயர்வின் போதே அறிந்துவிட்டார்கள். அவர்களின் பொய் முகங்கள் அன்றே கிழித்தெறியப்பட்டுவிட்டன.

குறிப்பாக.. நவாலி தேவாலயப்படுகொலை.. நாகர்கோவில் பள்ளிச் சிறுவர் சிறுமிகள் படுகொலை.. பெரியமடு அகதி முகாம் படுகொலை.. புதுக்குடியிருப்பு சந்தை மீதான படுகொலை.. கண்ணகி அம்மன் ஆலயம் மீதான படுகொலை என்று எத்தனையோ படுகொலைகளைக் கண்டிக்கத் தவறியதுடன்.. இராணுவம் டாங்கிகளை வைத்து வீடுகளை உடைத்த போது.. புலிகள் உடைப்பதாக உலகிற்குக் காட்டியவர்கள் அவர்கள். அதில் செயற்பட்ட சிறிதரன் போன்றவர்கள்.. இன்று முகவரி அற்றவர்களாக ஓடி ஒளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முண்டு கொடுத்த.. கூலைப் பொறுத்தவரை அவர் போரால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்ல. அவரது குடும்பமும் பாதிப்பட்டதல்ல. சொகுசு வாழ்க்கையில் இருந்து மனித உரிமை பற்றி மேட்டுக்குடிகளின் அரச பயங்கரவாதத்திற்கு ஒத்தடம் கொடுத்து பிழைப்பை ஓட்டியவர்கள் அவர்கள்..!

ஆனால்.. இந்த மாணவர்கள் அப்படியல்ல. இவர்கள்.. சொந்த உறவுகளை.. போரில் இழந்தவர்கள். பேரினவாதிகளின் அடக்குமுறைகளுக்கு நேரடியாக முகம் கொடுப்பவர்கள். அதிகார வர்க்கத்தின் பாராமுகத்தின் வேதனையை அனுபவிப்பவர்கள். அதுதான் அவர்களின் போராட்டத்திற்கு உத்துதலை அளித்துள்ளதே தவிர யாரும் தூண்டிவிட்டு துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றும் புத்திகெட்டவர்கள் அல்ல.! அல்லது கடந்த கால வரலாற்றை அறியாமல் செயற்படுபவர்களும் அல்ல. இன்று யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்குள் இருக்கும் குத்துவெட்டுகளை ஊடுருவல்களை மதிப்பிடாதவர்களும் அல்ல.

அவர்களின் கருத்துக்களே அதனை தெளிவாக உணர்த்தும் நிலையில்.. இப்படியான ஜனநாயக ரீதியான மாணவர்களின் போராட்டங்களைப் பலவீனப்படுத்தும் வகையிலும்.. இப்போராட்டங்களுக்கு எதிரான வகையில் எதிரி எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும் மையவாதங்களையும்.. புலம்பெயர் மக்களின் தூண்டுதலையும் வேண்டும் என்றே திணிப்பது ஏற்புடையது அல்ல. அவை சான்றுகள் கொண்ட வாதங்களும் அல்ல..! இவையே அடிப்படையில் ஜனநாயகமற்ற செயற்பாடுகள் ஆகும். எந்தச் சான்றும் இன்றி மக்களின் நியாயமான எண்ண வெளிப்பாட்டை தடுக்கும் பிரச்சாரம் என்பது பாசிசத்தின் ஒரு அடையாளம். சர்வாதிகாரத்தின் இயல்பு ஆகும். நீங்கள் அதைச் செய்து கொண்டு எம்மை நோக்கி ஜனநாயக மறுப்புப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மையவாதம் என்பது ஒரு கருத்தியல். அனைத்திலும் தானே உயர்ந்தவன் அது கல்வி சாதி சமயம் பிரதேசம் என அனைத்தையும் இணைத்த ஒரு மேட்டுக்குடி கருத்துநிலை. இது தன்னை தக்கவைத்துக்கொள்ள குறிவைப்பத தனது இனத்தையே. இது தன்னினத்துக்குள் இரைதேடும் ஒரு செயல்வடிவம். எதற்காகவும் அனசரிப்பு ஐக்கியப்பாடு விட்டுக்கொடுப்பு என்பத இதனிடம் இல்லை.இது உளவியல் ரீதியல் ஸ்திரமாகிவிட்டது. இதன் விழைவு சிங்களத்துக்கு சாதகமானது. இயக்கங்கள் ஒன்றுபடாத பிடிவாதம் இங்கிருந்ததான் தோற்றம் பெறுகின்றது. இந்த முரண்பாடு ஆட்கொல்லிக் நோயாக மாறும் போது பல இயக்கத்தலமைகள் சிங்களத்திடம் சென்று சேர்ந்தனர். இது பிரிவுகளை பெருக்கிக்கொண்டிருக்கும் ஒரு தளம். நாட்டில் இயக்கங்களாகட்டும் இயக்ங்களுக்குள் பிளவுகளாகட்டும் மத பிரதேச பிளவுகளாகட்டும் புலத்தில் நாடுகடந்த அரசு பின்பு ஜனநாயக நா க அ பிரிவு. ஒரு மாவீரர் தினம் பிறகு ஒன்பது. நாம் எவ்வளவு தூரம் சிதைவு படுகின்றோமோ அவ்வளவு தூரம் அது சிங்களத்துக்கு சாதகமானது. அந்தவகையில் பேரினவாதத்திற்கு சாதகம் செய்யக்கூடிய மையவாதம் அதன் கூட்டாளி என்பதில் மாற்றுக்கருத்திருக்கமுடியாத. எனது வாதம் தமிழ்மக்களுக்கான போராட்டம் பேரினவாதக் கூட்டாளிகளின் கூடாரங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டால் தமிழ்மக்களின் கதி என்ன? டக்ளஸ் மையவாதி அல்ல டக்ளசையும் இன்னும் பல தலைவர்களையும் கொண்டுபோய் பேரினவாதத்திடம் ஒப்படைத்ததே மையவாதம்.

இந்த வாதம் ஒரு மண்டைவாதமாய்த்தான் இருக்க முடியும்!

[size=4]

அதுசரி, யாரிந்த ஸ்ரீடெலோ ? முன்னால் டெலோவா??? அவர்களுக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளும் இராணுவத்துக்கும் என்ன தொடர்பு ?

[/size]

[size=4]இணைக்கப்ட்ட செய்திகளின் சிங்கள புலனாய்வு அவசரமாக உருவாக்கி, தாமே கைக்குண்டையும் வீசி அப்பாவி மாணவர்களை கைதுசெய்து உள்ளது. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இணைக்கப்ட்ட செய்திகளின் சிங்கள புலனாய்வு அவசரமாக உருவாக்கி, தாமே கைக்குண்டையும் வீசி அப்பாவி மாணவர்களை கைதுசெய்து உள்ளது. [/size]

புலி இல்லாமல் இருந்தும் இராணுவ ஆக்கிரமிப்பு ஏன் தமிழீத்தில் தேவை ஆகின்றது என்ற கேள்விக்கு இப்போது புரியாதவர்களுக்கும் பதில் கிடைத்திருக்கும்!

பயங்கரவாதக் கெடுபிடி இல்லாதுவிடால் மக்கள் வெளிப்படுத்தப் போகும் உணர்வும் புலிகளின் பகையைவிட பாதிப்பானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்த உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்விகள்தான். பாதை மூடுவதற்கு முன்னர் புலிகளில் வந்து இணையுமாறு வன்னிக்கு வருமாறு நாள்தோறும் விடப்பட்ட அழைப்புகளை மறுத்து இராணுவத்துடன் அனுசரித்து இருக்கலாம் என்று இருந்தது வரலாறு. இன்று அழிவுகளின் பின் என்னவோ செய்ய முற்படுகின்றனர். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விடயம் இப்போது ஈடுபடுகின்றவர்கள் புதிய இளம் தலைமுறையினர் போலுள்ளது. இருந்தபோதும் எமது சமூகத்தை சிதைக்கும் மையவாதக் கருப்பைகளான யாழ்பல்களைக் கழகம் நல்லூர் கோயில் போன்ற ஆதிக்கத் தலமை அடயாளங்களில் இருந்து ஒட்டுமொத்த ஈழத்துக்குமான தேசீயஇனவிடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க முடியாது. ஆரம்பிப்பவர்கள் ஆரம்பிக்கும் இடங்கள் எல்லாம் கழுவிற தண்ணியில் நழுவிற மீனாக சிங்களத்தில் இருந்து தப்பிவிடும். வறுமைப்பட்ட மக்கள் காவுகொடுக்கப்படுவார்கள். என்னுமொரு முள்ளிவாய்காலுக்கு பூஜைபோடுகின்றார்கள். அதற்கு புலம்பெயர்ந்த தேசீயவாதிகள் சாம்பிராணி போட்டு ஊதிவிடப்பார்க்கின்றார்கள். எமது சமூகத்தை சிதைக்கும் கருத்தளத்தில் இருந்து இனவிடுதலைப்போராட்டம் ஒருபோதும் சாத்தியமில்லை. அஜித்தின் மங்காத்தா கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது விசயின் துப்பாக்கி கட்டவுட்டுக்கு பால் ஊத்துவது எல்லாம் இளைஞர்களின் ஒரு துடிப்பு. அதுபோல் ராணுவ அடக்குமுறையின் மத்தியில் இயக்கப்பாட்டை போட்டு குத்தாட்டம் போடுவது மாவீரர் தினத்துக்கு விளக்கை கொளுத்தி விடுவதும் ஒரு துடிப்பு. இளங்கன்று பயமறியாது என்பார்கள். புலத்து விசிலடிச்சான் தேசீயவாதிகளுக்கு இது ஒரு வாய்பு. பப்பாசி மரத்தில் ஏத்திவிடுவது விழுந்து முறிந்து செத்தால் இவர்களுக்கு என்ன நஸ்டம்.

தாயகத்துத் தமிழனுக்கு தாம் அடக்கப்படுகிறோம், அடிமைப்படுத்தப்படுகிறோம் என்பது கூடத் தெரியாமல்த்தான் இதுவரை வாழ்கிறான் என்கிறீர்கள். ஆகவேதான் புலம்பெயர் புல்லுருவிகள் அவருக்கு இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கொடுத்து அமைதிப்பூங்காவாக இருக்கும் யாழ்ப்பாணத்தைக் கெடுக்கிறார்கள் என்கிற நியாயமான கவலை உங்களுக்கு. தமிழர் தாயகத்தில் இன்று நடக்கும் திட்டமிட்ட இனவழிப்பை வெட்கமின்றி மறுத்து, மக்களின் அடக்குமுறைக்கெதிரான குரலை வெறும் கூத்தாடிகளின் சலசலப்பு என்று சப்பைக் கட்டு கட்டுகிறீர்களே, உங்களுக்கும் அந்தத் துணைப்படை நாய்களுக்கும் என்ன வித்தியாசம். அரசாங்கம் சொல்வதை அப்படியே அச்சுப்பிசகாமல் சொல்லும் நீங்களும், நிர்மலன் எனும் நேர்டோ உறுப்பினரும் இன்று செய்துவருவது பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கைங்கரியத்தைத்தான். உங்களுக்குக் கொடுக்கப்பட்டதை நீங்கள் செய்யத்தானே வேண்டும், பாவம் நீங்கள், வேறு என்னதான் செய்வீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இணைக்கப்ட்ட செய்திகளின் சிங்கள புலனாய்வு அவசரமாக உருவாக்கி, தாமே கைக்குண்டையும் வீசி அப்பாவி மாணவர்களை கைதுசெய்து உள்ளது. [/size]

சரிதான். பாவம் அந்த சிறிடெலோ உறுப்பினர்கள். யாழ்ப்பாணத்து மக்களுக்காக அவர்கள் பாடுபடும்போது, இந்த புலத்துப் புல்லுருவிகளால் உந்தப்பட்ட ஒரு சில மாணவர்கள், அந்த அப்பாவிகள் மீது கைக்குண்டொன்றை எறிந்திருக்கிறார்கள். அந்தக் கைக்குண்டும் புலத்திலிருந்துதான் போனதாகத்தான் தகவல். ஏனென்றால், யாழ்ப்பானத்தில் நிலைகொண்டிருக்கும் 50,000 இராணுவத்திடமும் எந்த ஆயுதமுமில்லை பாருங்கள். அவர்கள் ஒரு கையியில் ஐ.நா சாசனமும், மறு கைய்யில் ஒலிவ் இலையும் ஏந்தி சமாதானத்துக்கான யாகமல்லவா இருக்கிறார்கள் ??? :lol:

148748_224757747656367_562592141_n.jpg

[size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதலைக் கண்டித்தும், பல்கலைக்கழக விடுதிகளுள் அனுமதியின்றி படையினர் புகுந்ததைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 11.00 மணி தொடக்கம் 12 மணிரை இந்த போராட்டம் இலங்கை ஆசிரியார் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.[/size]

[size=3][size=4]இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்ள இடம்பெறாமல் தடுப்பதற்கு ஜனநாயக வழியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை, சிறிலங்கைப் படையினரும் பொலிஸாரும் தடுத்து ஒடுக்குமுறையைப் பிரயோகித்ததை சர்வதேசத்திற்குச் சொல்லும் ஒரு போராட்டமாக அமைந்துள்ளது என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட விரிவுரையாளர்கள், “தமிழர்களுக்காக உயிரி நீத்த தியாகிகளுக்கு தமிழர்கள் தீபமேற்றவும் தடையா?”, “யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவத்தினரின் காடைத்தனம்”, “கல்விக் கூடமா? இராணுவமுகாமா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்[/size][/size]

சிங்களப் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குரல் கொடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது!

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் எம்.பி.தான் பிரச்சினையினை பெரிதாக்கி உள்ளார் என பல்லைக்கழக மாணவர்களே கடுமையாக குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

நாமே எமது போராட்டத்தினை நடத்துகின்றோம். தயவுசெய்து நீங்கள் இதற்குள் வரவேண்டாம் என்று மாணவர்கள் அவரையும் அவரது பத்திரிகை ஆசிரியரையும் வெளியேறுமாறு கேட்டபோது- அவர்கள் வேண்டும் என்றே பிரச்சினையினை வளர்க்கும் நோக்கில் நிற்க-

மாணவர்கள்தான் முதலில் சரணவபவன் குழுவினர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பின்னர் சிறிலங்காப் படையினரும் அவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தி தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர். இதன் பின்னர்தான் அவர்கள் வெளியேற வேண்டி வந்தது.

இது எல்லாம் பொய் என்றுதான் இங்கே வாதாடுவீர்கள். ஆனால், இதுதான் உண்மையாக நடந்தது.

அன்று, தந்தை செல்வநாயகம் தமிழீழமே எமக்குத் தீர்வு என்று இளைஞர்களை உசுப்பேற்றினார். அதே செல்வநாயகத்தின் மனைவி செல்வநாயகமும் அருகில் இருக்கும் போதே- அன்று யாழ். வந்த ஜனாதிபதி ஜே.ஆருக்கு கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தினை வெட்டிக் கொடுத்தவாறு யாழ்ப்பாணத்தில்தான் இவ்வாறான கறுத்தக் கொழும்பான் மாம்பழம் சாப்பிடலாம் என கூறி சாப்பிடுமாறு கொடுத்தாராம்.

பின்னர் அமிர்தலிங்கம் (மற்றைய தலைவர்களும் தான்) இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தனது பிள்ளைகளை பக்குவமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டு ஊரார் பிள்ளைகளை தூண்டி விட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களின் பிள்ளைகள் எவரும் தமிழீழ இலட்சியத்துக்காக போராடவில்லை. மாறாக ஊரான் பிள்ளைகள் போராடி மடிந்தார்கள். அதுவும் அநியாயமாக.

அவர்களுக்கே அன்றே தெரிந்த விடயமாக இருந்ததனாலோ என்னவோ தீர்க்கதரினமாக செயற்பட்டனர் என எண்ணத் தோன்றுகின்றேன்.

இங்கே நான் என்ன கூற வருகின்றேன் எனில், அன்றைய தமிழ் அரசியல் தலைமைகளும் சரி- பின்னர் வந்த விடுதலைப் புலிகளின் தலைமையும் சரி- தமிழீழ இலட்சியத்துக்காக போராடுகின்றோம் என்று கூறி சிறிலங்கா மற்றும் இந்திய அரசுடனும் நட்பு பாராட்டவே முனைந்தனர். இதனை தவறு என்று இங்கே நான் கூற வரவில்லை. இராஜதந்திரத்தின் அடிப்படையில் இதுவும் ஒரு நகர்வாகத்தான் கருத முடியும்.

ஆனால், இதில் விடுதலைப் புலிகள் நேர்மையாகச் செயற்பட்டனரா என்றால் அதுதான் இல்லை. அன்று பிரேமதாசா அரசுடன் நட்பு பாராட்டி தமது விடயத்தினை முடித்தவுடன் அவரையும் முடித்தனர்.

பிரேமதாசாவினைக் கொலை செய்யாமல் விட்டிருந்தால் இன்று நாம் ஓரளவு உரிமைகளுடன் வாழ்ந்திருப்போமோ என்னவோ.

மாத்தையா மற்றும் பிரேமதாசா விடயத்தில் அவரசப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ என பின்நாட்களின் விடுதலைப் புலிகளின் தலைமை வருத்தப்பட்டார்கள் என்பது பலருக்குத் தெரியாது. அதனால், இதனையும் நீங்கள் குறித்து வையுங்கள்.

மகிந்தவிடம் பணத்தினை வாங்கிவிட்டு அடிவாங்கிய இயக்கம் என்றால் அதுவும் உலகத்தில் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த வகையில் இன்று பல்கலைக்கழக சமூகத்தினை புலம்பெயர் சமூகமும் யாழில் உள்ள உதயன் பத்திரிகையும் பிழையாக வழி நடத்துகின்றன. இதற்கு உதயன் ஆசிரியரின் சகோதரரும் உடந்தையாக இருக்கின்றார்.

புலத்தில் உள்ள ஊடகங்கள் மிக மகிழ்வாகத்தான் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் செய்தியினை வெளிக்கொண்டு வருகின்றன. ஆனால், அவர்களின் எதிர்காலம் தொடர்பாக யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

புலத்தில் செயற்பட்டாளர்களாக இருக்கக்கூடிய எத்தனையோ பேரின் பிள்ளைகள் எந்தவொரு போராட்டத்திலும் முன்நிற்க மாட்டார்கள். அதனை அவர்களிடம கேட்டால் அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்று பூசி மெழுகுவார்கள்.

ஆக, உங்கள் பிள்ளைகள் எல்லாம் படித்து முன்னேற வேண்டும். வடக்கு - கிழக்கில் உள்ள பிள்ளைகள் போராட்டத்தினை மீண்டும் தொடங்கி மடிய வேண்டும் இதுதான் உங்கள் ஆசை?

யாழ். களத்தில் ஒரு உறவு நான் இறக்கிவிட்ட நிர்மலனோ என்று ஐயுற எழுதி இருக்கின்றார்.

இன்று நான் எழுதியது போன்று- அன்றும் இவ்வாறு சில உண்மையான கருத்துக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைக்கு கூறிய போது- அவர்கள் அக்கருத்தினை உள்வாங்க மறுத்தனர்.

Edited by nirmalan

[size=1]

[size=4]நிர்மலன்,[/size][/size][size=1]

[size=4]நீங்கள் சொல்லுவது எல்லாமே உண்மை, உண்மையைத்தவிர நீங்கள் வேறு எதையும் சொல்வதில்லை :wub: [/size] [/size]

[size=1]

[size=4]நன்றிகள்.[/size][/size]

[size=4]யாழ். களத்தில் ஒரு உறவு நான் இறக்கிவிட்ட நிர்மலனோ என்று ஐயுற எழுதி இருக்கின்றார்.[/size]

[size=4]இன்று நான் எழுதியது போன்று- அன்றும் இவ்வாறு சில உண்மையான கருத்துக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைக்கு கூறிய போது- அவர்கள் அக்கருத்தினை உள்வாங்க மறுத்தனர்.[/size]

அன்றும் தீர்வுக்கு எதிர், இன்றும் தீர்வுக்கு எதிர். அதில் சந்தேக இல்லை.ஆனல் அன்று வைத்த கருத்துக்களுக்கு குறிக்கோள் இருந்தது மாதிரி இருந்தது(புலம் பெயர் மக்களை உசுப்பேத்தி தீர்வை குழப்ப வைப்பது). இன்று தெருவில் அலைபவர்கள் மாதிரி வெறும் புயத்தால் தான் வெளி வருகிறது. இதை யாரும் வாசித்து நம்ப மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே எழுதப்படுவதால் நிச்சயமாக இன்றைய எழுத்துக்கள் குறிகோள் இல்லாதவை. உசுப்பேத்தும் வலு இல்லாதவை.

மேலும் உசுப்பேத்துவது என்ற சொல்லை தெரிந்து கொண்டால் அதை யாருக்கு எந்த இடம் பாவிப்பது தெரியாமல் பாவிப்பதை அண்மைய எழுத்துக்களில்தான் காணக்கூடியத்தாக இருக்கிறது.

"கடவுள்தான் தமிழரை காப்பாற்ற வேண்டும்" என்று கூறும் அரசியல்வாதிகள் வரையும் உசுப்பேத்துகிறார்கள் என்று எழுதினால் உசுபேத்துவதின் அரத்தம் தெரியாமல்தான் எழுதுகிறார்கள் என்றுதான் எடுக்க வேண்டும்.

[size=5]ஆட்சியாளரின் மிலேச்சத்தனம் அரசியல் தீர்வு கேள்விக்குறி; யாழ். மறை மாவட்ட கத்தோலிக்க ஆணைக்குழு கண்டனம்[/size]

அண்மைக்காலமாக ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளையும் மக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.

[size=4]இவ்வாறான தாக்குதல்களால் அரசியல் தீர்வு கேள்விக்குறியாக உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size]

[size=4]கார்த்திகைத் தீபமேற்றுவதற்குத் தடையெதுவுமில்லையென்றும் இந்துக்கள் தமது சமயக் கடமைகளை எதுவித அச்சமுமின்றி நிறைவேற்றலாம் என்றும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்திருந்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிட்டி விளக்குகளை ஏற்றி கார்த்திகைத் தீபத்திருநாளைக் கொண்டாடினர்.[/size]

[size=4]அப்போது பல இடங்களில் இராணுவத்தினர் வந்து விளக்குகளைக் கொளுத்தக்கூடாதென எச்சரித்து, விளக்குகளை அணைத்துள்ளனர். சில இடங்களில் உந்துருளிகளில் வந்த "மர்ம நபர்கள்' சிட்டி விளக்குகளைத் தட்டி வீழ்த்தி அச்சுறுத்தும் பாணியில் செயல்பட்டும் உள்ளனர்.[/size]

[size=4]அத்துடன் 27.11.2012 அன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் இராணுவத்தினர் மாணவர், மாணவியரின் விடுதிகளுள் புகுந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளமையையும் பின்னர் 28.11.2012 அன்று காலை அமைதியாகச் சென்ற மாணவர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொண்டமையையும் அங்கு வந்த பத்திரிகையாளர்கள் மீதும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீதும் தாக்குதல் மேற்கொண்டமையையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.[/size]

[size=4]இதுபோன்ற தொடர் செயற்பாடுகள் மக்களின் நல் எண்ணத்தைப் பெற எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. ஏற்கனவே அரசு தாம் முன்னெடுப்பதாகச் சொல்லும் இனப்பிரச்சினைக்கான தீர்வின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் இதுபோன்ற செயற்பாடுகளால் மேலும் உறுதி அடைகின்றன.[/size]

[size=4]தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி ஆட்சியாளரையும் இராணுவத்தையும் பொலிஸாரையும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=102171658301417245

தாயகத்துத் தமிழனுக்கு தாம் அடக்கப்படுகிறோம், அடிமைப்படுத்தப்படுகிறோம் என்பது கூடத் தெரியாமல்த்தான் இதுவரை வாழ்கிறான் என்கிறீர்கள். ஆகவேதான் புலம்பெயர் புல்லுருவிகள் அவருக்கு இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கொடுத்து அமைதிப்பூங்காவாக இருக்கும் யாழ்ப்பாணத்தைக் கெடுக்கிறார்கள் என்கிற நியாயமான கவலை உங்களுக்கு. தமிழர் தாயகத்தில் இன்று நடக்கும் திட்டமிட்ட இனவழிப்பை வெட்கமின்றி மறுத்து, மக்களின் அடக்குமுறைக்கெதிரான குரலை வெறும் கூத்தாடிகளின் சலசலப்பு என்று சப்பைக் கட்டு கட்டுகிறீர்களே, உங்களுக்கும் அந்தத் துணைப்படை நாய்களுக்கும் என்ன வித்தியாசம். அரசாங்கம் சொல்வதை அப்படியே அச்சுப்பிசகாமல் சொல்லும் நீங்களும், நிர்மலன் எனும் நேர்டோ உறுப்பினரும் இன்று செய்துவருவது பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கைங்கரியத்தைத்தான். உங்களுக்குக் கொடுக்கப்பட்டதை நீங்கள் செய்யத்தானே வேண்டும், பாவம் நீங்கள், வேறு என்னதான் செய்வீர்கள் ?

உங்கள் அவசரப் புரிதலுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் தவறென்பதல்ல வாதம் அது ஆரம்பிக்கும் இடம் என்னுமொரு சமூக அடக்குறையின் தளம். இங்கிருந்து ஆரம்பிப்பது எமக்கு பாதகமான விழைவுகளையே தரும் என்பதே நான் சொல்ல முற்பட்ட விசயம்.

இந்தக் கருத்தையே நாடுகடந்த அரசு ஆரம்பிக்கும் போதும் சொன்னேன். இந்த தளம் எமக்கு பாதகமாகவே முடியும். அதற்கும் கொதித்தெழுந்தார்கள்.

மூன்று வருடத்திற்கு மேற்பட்ட ந கா அரசு செய்தது என்ன?

ஒரு அரசு இருக்கின்றது, நாம் பாராளுமன்றம் நடத்துகின்றோம் அமர்வுகள் நடத்துகின்றோம், அறிக்கைகள் விடுகின்றோம். தமிழர்களுக்காக போராடுகின்றோம் என்ற அடயாளத்தைக் காட்டினார்கள். மக்கள் அதைப் பாரத்துக்கொண்டிருந்தார்கள் இருக்கின்றார்கள். மக்களை மீளக் குடியமரத்து மனிதாபிமான புனர்வாழ்வுப் பணிகளை செய் போர்க்குற்ற விசாரணையை செய் என்று மக்கள் வீதியில் இறங்கி போராடுவது நுட்பமாக தடுக்கப்பட்டு மகாருத்திர யாகம் என்று திசை திருப்பப் பட்டனர். மக்களின் போராட்டக் குணம் அறவே மழுங்கடிக்கப்பட்டது. அறிக்கை அரசியலும் பெட்டிசம் போடும் பழைய பாணியும் மீள புதுப்பிக்கப்பட்டது. புலிகள் பேச்சின்றி செயலுக்கே நூறுவீதம் முன்னுரிமை கொடுத்தார்கள் அதற்குக் காரணம் புலிகளுக்கு முந்தய அரசியல் வாதிகள் செயலின்றி அறிக்கை அரசியல் செய்துகொண்டிருந்தார்கள். அதே பாணியில் மீள அரசியலை கட்டமைத்து மக்களை மந்தைகளாக்கும் செயலில் கணிசமான வெற்றியும் பெற்றுவிட்டார்கள். பல பத்தாயிரக்கணக்காக வீதியில் இறங்கிப் போராடிய புலம்பெயர் மக்களை முடக்கி அவர்கள் உணர்வை எவ்வகையிலும் போர்க்குற்றத்திற்கு எதிராக போராடாதபடி மாற்றிய நா கா அரசு போன்ற மையவாதத் தளத்தில் இயங்கும் அமைப்புள் இலங்கை அரசுக்கு செய்யும் உதவியில் ஆயிரத்தில் ஒரு பங்கைத் தன்னிலும் டக்ளஸ் போன்றவர்ளால் செய்ய முடியாது.

தாயக மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் இடையிலான உறவை அரசியல் ரீதியா மேம்படுத்துவது அமைப்புகளுக்குள் இருக்கும் பிளவுகளை குறைப்பது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என எந்தவகையிலும் எந்த ஒரு அரசியல் நகர்வும் இன்றி மிக மோசமான கருத்தியல் கற்பனைகளை விதைத்து மக்களை மடயராக்கும் சிந்தனை முறையை என்னவென்பது? அமரிக்காவோ ஒபாமாவோ சிங்களவரிடம் முரண்பட்டு தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துத் தருவார்கள் அதற்கு முற்கூட்டியே யாப்புகள் செய்து வரைவுகள் செய்து தயாராக இருப்போம். இலங்கை சீனாவுடன் சேர்ந்து செய்மதி அனுப்புகின்றது அப்ப அமரிக்காவும் இந்தியாவும் தமிழர்களுக்கு சாதகமாக நகர்வார்கள். இவ்வாறு மக்களுக்கு மாற்று வழியை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு தீர்வை யாரோ ஒருவன் எங்கிருந்தோ ஒருவன் கொடுப்பான் நீங்கள் பேசாமல் இருங்கள் என்பதுதான் இதன் சூட்சுமம். இதைவிட சிங்களத்துக்குச் சாதகமான விடயம் என்ன இருக்கமுடியும்?

தேசியத்துக்கு எதிரான சிங்களமும் அதனுடன் இணைந்துபோகும் தமிழர்களும், தேசியத்தை குத்தகைக்கு எடுத்து அதனை தனது சுய அடயாளங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளும் தமிழர்களும் என பேரினவாதமும் மையவாதமும் உரசிக்கொண்டே இருக்கின்றது. இழப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமாகின்றது. இந்தப் அவல நிலைக்கு யார் காரணம் என்பதல்ல பிரச்சனை எது காரணம் என்பதே பிரச்சனை. யார் துரோகி என்பதல்ல பிரச்சனை எது துரோகம் என்பதே பிரச்சனை. எங்களுக்கு கொடுக்கப்பட்டதை நாம் செய்வதாக நீங்கள் கண்டுபிடித்தது கூட சிங்களவனுக்கு வெற்றியே அன்றி தமிழர்களுக்கல்ல.

மாற்றுக் கருத்திற்கும் காட்டிக் கொடுப்பின் கருத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் இல்லை காந்தி சொல்லும் அதே கருத்தை தன் எதிரிக்கு திருடனும் சொல்லலாம் அது தன் உடம்பை தழும்பிடம் இருந்து காப்பாற்றும். இப்படி ஒவ்வொரு கருத்தியலுக்கும் பல வேறு அடிப்படைகள் இருக்கலாம்.

திருடுவதே பெரும் குற்றம் அது தன் வாயால் உண்மை சொல்லும் என்று எதிர்பார்ப்பதே அறிவிற்கு அவமானம்! இவ்வாறே துரோகம் செய்பவர் அவர்வாய் அதை ஏற்றுக் கொண்டே செய்யும் என்பதை எதிர்பார்க்க யார் உண்டு இந்தக் களத்தில்?

  • கருத்துக்கள உறவுகள்

பெருமையாக இருக்கிறது

படிக்காத புலம் பெயர் கூட்டம்

பல்கலைக்கழக மாணவர்களையே இங்கிருந்து வழி நடாத்தும் அளவுக்கு வந்திருக்கு என்ற நற்சாட்சிப்பத்திரம் கிடைத்ததையிட்டு.

இப்படித்தான்

என்ன நடந்தாலும் புலிகள் என்று காலைத்தூக்கினார்கள்.

இப்போது புலிகள் இல்லாநிலையில் புலம் பெயர் மக்கள்.

இப்படியே மக்கள் உணர்வை மதிக்காது எங்காவது போட்டுவிட்டு குளிர் காயம் கூட்டம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

PB280010.jpg

PB280016.jpg

PB280024.jpg

PB280025.jpg

PB280030.jpg

PB280033.jpg

[size=4]இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள சுற்றுலா பயணிகளை நாங்கள் திருப்பி அனுப்பியதையே வன்முறை என்று கூச்சலிட்டவர்களும், கண்டித்தவர்களும் இந்த தாக்குதல்கள் பற்றி வாய் திருக்காதது ஏன்? [/size]

[size=4]தங்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய மாணவர்களிடம் ஆயுதம் இருந்ததா? இல்லையே? பிறகு ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினாய் என்று அமெரிக்கா கேட்கிறது. ஆனால் இந்திய அரசும் இங்குள்ள கட்சிகளும் மெளனம் காக்கின்றனவே, ஏன்?

இலங்கையில் வாழ்ந்தாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எம் தமிழருக்கு இன்னல் விளைவித்தால் அதற்காக நாங்கள் கொதித்தெழுவோம். இப்போதும் கூறுகிறோம், யாழ்ப்பாண மாணவர்கள் மீதான சிங்கள படைகளின் அராஜகம் தொடருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். சிங்கள பெளத்த இனவாத அரசின் ஆக்கிரமிப்பில் ஈழத் தமிழினம் சிக்கியிருப்பதாலும், தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருப்பதாலும், எம் இனத்தின் விடுதலை போராட்டம் ஜனநாயக வழிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுதான் வருகிறது.[/size]

[size=4]- சீமான் [/size]

இந்த திரியிலுள்ள பல படங்களை அகூதா அண்ணா தந்த ஐ.நா மனித உரிமை அங்கத்துவ நாடுகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். ஏனையோரும் அனுப்புங்கள்.

ஐ.நா வின் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொள்ள இந்த இணைப்பிற்கு செல்லுங்கள். அங்கு தரப்பட்டுள்ள கடிதத்தையும் அனுப்புங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112504

முகநூலிலும் பகிருங்கள். நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் அறிவியுங்கள்.

இந்த இணைப்பிலும் சென்று கையொப்பமிடுங்கள். (thanks: akootha anna)

http://www.causes.com/causes/153257-liberate-tamil-eezham/actions/1712441?recruiter_id=178586532&utm_campaign=invite&utm_medium=wall&utm_source=fb

The Tamils have lost nearly 300,000 in the 35-years war. They have every right to remember their dead. When the Jaffna University students were peacefully remembering the fallen kith and kins, the SL military and police entered into the gents as well as ladies hostels and assaulted the students, including girls. Even a silent demonstration the following day was attacked. Around 10 university students including girls were injured and were brought to the hospital.

We wish to bring this issue to the Global Community, as we still believe United Nations is one of the supreme authority to condemn the Genocidal Nation Srilanka and take appropriate action against the Government of Srilanka and it's responsible leaders.

http://www.amnesty.org/en/library/asset/ASA37/014/2012/en/e77aed87-6fad-4b9f-9c48-3fc42f3bfd4e/asa370142012en.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.