Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ????????

Featured Replies

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ????????

600343_10151185901429891_894084362_n.jpg

என்இனமும் என்மண்ணும்

சிறக்க களமாடிய தவக்கொழுந்துகளுக்கு

வடை றோலின் பெயரில்

வணக்க விழாவாவாம்

கூதல் குடிகொண்ட

புலம்பெயர் மண்ணில்

புலன் பெயர்ந்தவர்களால்

புலம்பெயர்க்கப்பட்ட

அந்நியம் தொட்டு

அருவருப்படைந்த

கார்த்திகைப்பூக்கள்

தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை

உங்களை வணங்குகின்றோம்

என்றபெயரில் களியாட்டா விழா

கொதிக்க கொதிக்க கொத்துறொட்டியும்

மொறுமொறுப்பாய் றோல்சும்

கல்லா கட்டும் உணவ(ன்வணக்)க விழாவில்

இவைகளைப் பாராது

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ??

582_10151185900874891_1605091226_n.jpg

என்மண்ணில் உயிருடன் உலாவும்

கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி.........

அவள் வாழ்வும் அவள்

பிள்ளைகளும் நடுறோட்டில் ..........

சிங்களத்தின் கொட்டடியில்

பல கார்த்திகைபூக்கள் மனநிலை

பிறழ்ந்து கருகிப்போயின ........

இவர்களுக்கு வழிசொல்லி ,

கொதிக்க கொதிக்க கொத்துறொட்டி

வித்து மொறுமொறுப்பாக

றோல்சும் சாப்பிட என் கூதல்

நகரத்து மக்களுக்கு மனமில்லை

இவைகளைப்பாராது ஏன்பள்ளி கொண்டீர் ஐயா??

கார்த்திகைப் பூக்களை மனதால்

வரித்தவன் உங்களைப் போல்

மௌனமாகி மனதால்

உங்களை வணங்கி செயலால்

காட்டுகின்றான் கொட்டமடிக்கும்

குள்ளநரிகள் மத்தியில்

அவன் பெற்ற பெயர் துரோகி !!!!!

இவைகளையும் பார்க்காமல்

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ?????????

******** படங்கள் யாழில் இருந்து . நன்றி யாழ் இணையத்திற்கு .

Edited by கோமகன்

  • Replies 99
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றிற்குமே அந்திமக்காலம் என்று ஒன்று இருக்கு, அதே போல இவைகளுக்கும் காலம் அதிகம் இல்லை

இன்னும் ஓரிருவருட்டங்களின் பின்னர் இவையும் காணாமல் போகலாம். மாற்றம் ஒன்று தானே உலகில் மாறாதது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தூயவனும், அருவியும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தார்கள்..! :lol:

இது புலம்பெயர்ந்த எம்மைகேவலப்படுத்தும் சுத்த சுயநலவாதக் கவிதை.அக்காவை வைச்சு பேக்கரி வாங்கின வடிவேலுமாதிரி எங்களைவித்து நீங்கள் கவிதை எழுதிகிழிச்சு என்ன செய்ய போறியள்?

நேற்று தூயவனும், அருவியும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தார்கள்..! :lol:

என்ன சொல்லவாறியள்? இவை ரண்டுபேரும் தேத்தண்ணி குடிக்கதான் அங்கை போனவையோ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லவாறியள்? இவை ரண்டுபேரும் தேத்தண்ணி குடிக்கதான் அங்கை போனவையோ?

அதுவல்ல அதன் சாராம்சம்.. :rolleyes:

ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தால் அதற்குரிய குறைந்தபட்ச வசதிகளை வழங்கவேண்டும் என்பது சட்டம். குறிப்பாக, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, உணவு வசதி (நேர அளவைப் பொறுத்தது.) இவை மேற்குல‌க‌ விதிக‌ள். :unsure:

இங்கே உண‌வு விற்க‌ப்ப‌ட் :rolleyes: ட‌தைக் க‌ண்டித்திருக்கிறார் கோம‌க‌ன். அத‌ன் விளைவால் எழுந்த‌ க‌ருத்தே என‌தும்.

பி.கு: எனக்கும் நேற்று நல்ல தலையிடி. இவர்கள் தேனீர் குடித்ததும் பத்தாது என்று என்னை ஒப்புக்கு கேட்டார்கள்..! நானும் சும்மா மரியாதைக்கு வேண்டாம் எண்டவுடன் அப்படியே கைவிட்டுவிட்டார்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலிலும் தானே, மரக்கறி ரோல்சும், மசாலா தோசையும் விக்கிறார்கள்?

அதற்காகக் கோவிலுக்குப் போகாமல் விடுவதா?

[size=4]என்மண்ணில் உயிருடன் உலாவும்[/size]

[size=4]கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி.........[/size]

மேலுள்ள வரிகளின் மூலம், எல்லோரது மனத்தையும், மாற்றுக்கருத்தாளர்கள் என்று தங்களை அழைப்பவர்களின் மனங்களையும் கூட, நீங்கள் புண் படுத்தி விட்டீர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்!

கவிதைக்கு நன்றிகள், கோமகன்!

  • தொடங்கியவர்

இது புலம்பெயர்ந்த எம்மைகேவலப்படுத்தும் சுத்த சுயநலவாதக் கவிதை.அக்காவை வைச்சு பேக்கரி வாங்கின வடிவேலுமாதிரி எங்களைவித்து நீங்கள் கவிதை எழுதிகிழிச்சு என்ன செய்ய போறியள்?

உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் மிக்க நன்றிகள் வண்டுமுருகன் . உண்மையை எழுதுவதற்கு பெயர் சுயநலமா உங்கள் ஊரில்??? அக்காவை வித்து பேக்கரி வாங்கினது வடிவேலு . நான் என் இனத்தையும் மாவீரர்களையும் இந்த கொத்துரொட்டி வடிவேலுகள் வித்துவிடக் கூடாதென்றுதான் எழுதுகிறேன். . மொத்ததில் வடிவேலு இந்த புலத்து வியாபரிகளும் , அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களும் தான் . .மனச்சாட்சியே இல்லாமல் பொய்களுக்கு துணைபோகும் நீங்களும் மனிதர்களா என்று சற்று உங்கள் மனசாட்சியை தட்டுங்கள் . திறக்கட்டும் துருப்பிடித்த இரக்கமற்ற உங்கள் இதயங்கள் ..... இதயம் முழுதும் ஈரம் நிறைந்த மாவீரர்களுக்காகவாவது......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
556334_10151162292118458_1886863683_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் மாவீரர் நாள் நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். கிட்டத்தட்ட 1 மணிவரை யாரும் உணவகத்தின் பக்கம் போகவில்லை. அதிக தூரத்திலிருந்தது எல்லாம் மக்கள் இதற்காக வருவார்கள் கடும் குளிர் மழை வேறு சிறிய பிள்ளைகள் நிறையப்பேர் வந்திருந்தார்கள். காலை 5 மணிக்கே செயற்பாட்டாளர்கள் வந்துவிட்டனர். வந்த நேரம் தொடக்கம் அவர்களும் ஓடியோடி எதோ ஒரு வேலையைச் செய்துகொண்டு தான் இருந்தார்கள். எல்லோராலும் பசியைப் போருக்க முடியாது.தங்கள் நேரத்தை ஒதுக்கி.வேலைவேட்டிகளை விட்டு,பல மைல்கள் பிரயாணம் செய்து வருபவர்கள் ஒன்றும் உண்ணாமல் குடிக்காமல் விரதம் இருங்கோ என்று நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்டாயம் விரதம் இருந்து மற்றவர்களுக்காக நடிப்பதிலும் விட போசிக்கும் நேரம் உணவு விற்றால் வாங்கி உண்பதில் என்ன தவறு. உணவு விற்பனை கூட மண்டப ஒழுங்குகள் செலவுகளுக்காகத்தானே விற்கப்படுகின்றன. நீங்கள் ஏன் அதை ஊதிப் பெரிதுபடுத்துகிறீர்கள் என்றுதான் எனக்கு விளங்கவில்லை. முதலில் நீங்கள் மாவீரர் தினப் பொது நிகழ்வு எதிலாவது கலந்து கொண்டீர்களா. இல்லை என்பது உங்கள் பதிலாயின் நீங்கள் இதுபற்றிக் கதைக்க உரிமை அற்றவர். நான் போனேன் ஆனா ஒன்றும் உண்ணவில்லை எனில் அது உங்கள் பிரச்சனை. :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எல்லாம் நல்லா எழுதாலாம் ஹால் காசும் செக்யூரிட்டி காசும் mic செட் மற்றும் இதரபல செலவுகளுக்கும் கொத்துரொட்டி காசு தான் அன்னை உதவுது......... தாயாக மாவீரர் தினத்திலும் கலை நிகழ்சிகள் நடந்து தான் இருக்கு அதை நாங்கள் நேரிலையும் பாத்திருக்கம் மற்றது ஒருத்தர் செத்தால் உடன சாப்பாட்டு கொண்டு போய் கொடுக்கிறது தமிழர் பண்பாடு அந்த 31 நாளும் ஒவொரு வீட்டில் இருந்தும் சாப்பாடு வரும்.....

  • தொடங்கியவர்

கோவிலிலும் தானே, மரக்கறி ரோல்சும், மசாலா தோசையும் விக்கிறார்கள்?

அதற்காகக் கோவிலுக்குப் போகாமல் விடுவதா?

மேலுள்ள வரிகளின் மூலம், எல்லோரது மனத்தையும், மாற்றுக்கருத்தாளர்கள் என்று தங்களை அழைப்பவர்களின் மனங்களையும் கூட, நீங்கள் புண் படுத்தி விட்டீர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்!

கவிதைக்கு நன்றிகள், கோமகன்!

உங்கள் கருத்துக்களுக்கும் வரவிற்கும் மிக்க நன்றிகள் புங்கையூரான் . மேலும் நான் இந்தக்கவிதையை பொழுதுபோக்குக்காகவோ அல்லது நானும் இருக்கின்றேன் என்று காட்டவோ எழுதவில்லை . எனது கண்ணால் கண்டு வெதும்பி நேரடி ஆதரத்துடன் தான் எழுதினேன் . நிட்சயம் இது எல்லோரையும் கொதிக்கவைக்கும் என்பதும் எனக்குத்தெரியாத விடையமல்ல . மேலும் , மாவீரர்களுடன் சுத்த போலித்தனமான கோயில்களை கொண்டு சென்று நீங்களே ஒப்பிடுவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது . சுத்த போலித்தனங்களும் பிற்போக்குதனங்களும் , ஊட்டி வளர்க்கப்படும் லூசுத்தனமான கோவில்களும் , தன் இனத்துக்காக எல்லாவற்றையும் துறந்து போராடிய புனிதர்களையும் ஒப்பிடுவதா????? அந்த புனிதர்களின் நினைவுகளைக் கொண்டாடும் இடத்தில் றோலும் , பனிசும் சாப்பிட்டு மகிழ்ச்சி விருந்து கொண்டாடுவதா??? அல்லது அவற்றை வித்து காசாக்குவதா???? அந்த இடத்தில் வியாபாரம் செய்வதை எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது???? ஒருமணித்தியாலம் இந்தப் புனிதர்களுக்காக பசி பொறுக்காதவர்கள் தேசியம் பேசுவது முரண்நகை புங்கையூரான் . தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு பக்கத்தில் மாவீரர் நாளில் ஒரு கச்சான் காறியாவது கடலை விற்பதை கண்டிருக்கிறீர்களா??????

அத்துடன் உண்மையைத்தானே அந்த வரிகளில் எழுதினேன் புங்கையூரான் . அப்படித்தானே புலம்பெயர்ந்தவர்கள் அந்த பெண்களை அருவருப்புடன் நோக்குகிறார்கள் . உண்மைகளை அந்த அந்த நேரத்தில் உரத்து பேசாமல் இருப்பது கூட என் இனத்துக்கு செய்யும் ஒருவித துரோகம்தான் புங்கையூரான் . எங்கு தப்பு நடந்தாலும் நான் பேசுவேன் என் இனத்துக்காகவும் ஒரு மனச்சாட்சியுள்ள கவிஞனாகவும் .

அருமை .......இந்தக்கவிதையில் கீழ் உள்ள வசனங்களை மிஸ் பண்ணப்பட்டுள்ளது .இதையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

[size=5]ஒண்டுக்கும் ,இரண்டுக்கும் ,இருக்க மலைசல கூடம் ........[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் விமர்சிச்சாலும் ஏற்றுக்கொள்ளலாம் இவர்கள் எல்லாம் சந்தர்ப்பம் பாத்துக்கொண்டு இருந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுபவர்கள்

  • தொடங்கியவர்

நேற்று தூயவனும், அருவியும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தார்கள்..! :lol:

நன்றி இசை வருகைக்கும் கருத்திற்கும் .

  • தொடங்கியவர்

எல்லாவற்றிற்குமே அந்திமக்காலம் என்று ஒன்று இருக்கு, அதே போல இவைகளுக்கும் காலம் அதிகம் இல்லை

இன்னும் ஓரிருவருட்டங்களின் பின்னர் இவையும் காணாமல் போகலாம். மாற்றம் ஒன்று தானே உலகில் மாறாதது.

உண்மையான யோசிக்க வைக்கும் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் ஜீவா .

கோமகன் அண்ணா உங்கள் கருத்துப் படி நாங்க விரதம் இருந்து வீட்டிலேயே மாவீரர் தினம் அனுஸ்டிச்சா நல்லம் என்று நினைக்கிறீங்க? இதைதான் அரசாங்கம் ஆசைப் படுது. தேசியத்தின் பெயரால் தமிழர் ஒன்று கூடக் கூடாது என்று. நரிகளோ சற்று வித்தியாசமாக புலிகளின் பெயரால் தமிழர் ஒன்று சேரக் கூடாது என்று நினைக்கிறார்கள். நம்ம உள் குத்து ஜனநாயக வாதிகளோ இப்பிடி பிழை பிடிச்சே விருது வாங்குரார்கள். இப்பிடியே கத்தி கத்தி எதிர்காலச் சந்ததிக்கு மாவீரர் தினம் என்றால் என்ன என்று தெரியாமல் ஆக்குங்கோ.மாவீரர் தினத்தில் சாப்பிட வேண்டாம் என்று தலைவர் சொன்னவரோ? இல்லை அந்த நிகழ்வை நாடாத்த வரும் செலவுகளுக்கு இலங்கை அரசு பணம் தருமா? இல்லை அந்த நிகழ்வை நடாத்துவதற்க்காக மூன்று நாலு நாளாக வேலை வெட்டி குடும்பம் விட்டு குளிரில் காயும் அந்த தொண்டர்கள் பட்டினியில் கிடக்க வேண்டுமா? வெறுமனே வந்து தீபம் ஏற்றி உடனே சென்றால் யாருக்கும் பசியோ தாகமோ இருக்காது. முழு எழுச்சி நிகழ்வையும் பார்க்கணுமே அப்பதானே வருங்கால சந்ததி எமது போராட்டம் மாவீரர் பற்றி அறியும். நாட்டிலே சமாதிகள் ஒருக்கா அமைச்சால் வேறு செலவு இல்லை. அங்குள்ள சவுண்டு காரன் சும்மா வந்து லவுஸ் பீக்கர் கட்டுவான்- இங்கு வெள்ளையனுக்கு அதிக காசு கொடுக்கணும் அதுக்கு எங்கே போக? பல நூறு கிலோ மீற்றர் துரத்தில் இருந்து வாறவர்கள் எப்பிடி இருப்பார்கள்? நீங்க மாவீரர் தினம் போனால் கடைப் பக்கம் போகாமல் அந்த நிகழ்விற்கு தேவையான உதவிகள் செய்துவிட்டு விளக்கேற்றி பின்னர் மாவீரர் நிகழ்வு முடிய தேவையான உதவிகளை செய்து விட்டு திரும்ப வேண்டியதுதானே ஏன் கொத்து ரோட்டிய பார்க்குறீங்க கவிதையா கொட்டுறீங்க? ஒரு நாள் முழுதும் விடிய 5 ,6 மணிக்கு போய் உதவி செய்து களைத்து இரவு 12 ,1 மணிக்கு வந்த எவரும் இதை குற்றம் எண்டு சொல்ல மாட்டான். போகாதவனும் அந்த நேரத்திற்கு சினிமா பார்க்க போறா மாதிரி போய் வந்தவனும் தான் இப்பிடி கூறுவார்கள். உண்மையில் கோமகன் நீங்க என்ன டைம் மாவீரர் தினம் போனீங்க அங்கு என்ன செய்தீங்க என்று கூற முடியுமா?

  • தொடங்கியவர்

கவிதை எல்லாம் நல்லா எழுதாலாம் ஹால் காசும் செக்யூரிட்டி காசும் mic செட் மற்றும் இதரபல செலவுகளுக்கும் கொத்துரொட்டி காசு தான் அன்னை உதவுது......... தாயாக மாவீரர் தினத்திலும் கலை நிகழ்சிகள் நடந்து தான் இருக்கு அதை நாங்கள் நேரிலையும் பாத்திருக்கம் மற்றது ஒருத்தர் செத்தால் உடன சாப்பாட்டு கொண்டு போய் கொடுக்கிறது தமிழர் பண்பாடு அந்த 31 நாளும் ஒவொரு வீட்டில் இருந்தும் சாப்பாடு வரும்.....

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் சுண்டல் மேலும் காசடிக்கிறதுக்கு நல்ல சாட்டு .பணம் சேர்க்க வேறுவழிகளை சிந்திப்பதை விட்டு இப்படியா மாவீரர்நாளை கேவலபடுத்தி கொண்டாடவேணும்? இப்படி கேவலப்படுத்தி காசு சேர்த்து கொண்டாடுவதைவிட வேறுவழிகள் பற்றி சிந்திக்கலாம்.

எனக்கு உங்கள் மாவீரர்நினைவுநாள் சம்பந்தமான அறிவும் புரிந்துணர்வும் புல்லரிக்க வைக்கிறது.வாழ்த்துகள் சுண்டல். :lol::D:icon_idea: .

அருமை .......இந்தக்கவிதையில் கீழ் உள்ள வசனங்களை மிஸ் பண்ணப்பட்டுள்ளது .இதையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

[size=5]ஒண்டுக்கும் ,இரண்டுக்கும் ,இருக்க மலைசல கூடம் ........[/size]

நான் மாவீரர் தினம் சென்றேன் மக்கள் மலசல கூடத்தில் முண்டி அடித்ததைப் பார்க்க வெறுப்பாக இருந்தது. ஒருநாள் இத அடக்க மாட்டார்களா இந்த மக்கள்? நாற நாற மக்கள் இருந்து நிகழ்வைப் பார்க்க வேண்டாமா?இதப் பார்க்க எனக்கும் கவிதை வந்தது ஆனால் நிர்வாகம் விடாது
  • தொடங்கியவர்

அதுவும் ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் விமர்சிச்சாலும் ஏற்றுக்கொள்ளலாம் இவர்கள் எல்லாம் சந்தர்ப்பம் பாத்துக்கொண்டு இருந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுபவர்கள்

ஆக இன்னார் எழுதினால்தான் எடுபடும் எண்ட எழுதாத அடாவடித்தனத்தை கருத்துக்களத்தில் கொண்டுவருகின்றீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உங்கள் புலிகள்

மீதான அக்கறை புல்லரிக்க வைக்கின்றது

ஏன் என்றால் நெருடிய நெருஞ்சி என்ற தொடரை எழுதி மக்களை நன்றாக கவருவது மாதிரி கவர்ந்து இறுதியில் டக்லஸ் தேவன்தா நல்லவர் வல்லவர் அவரிடம் இருக்கும் கூட்டம் தான் சரி இல்லை என்று சொன்னிர்கள் பாருங்கள் அப்பவே உங்களை பற்றி நீங்கள் சொல்லி விட்டீர்கள்

கள உறவுகள் முடிந்தால் நெருடிய நெருஞ்சியை ஒரு

முறை படித்து பாக்கவும்

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் சுண்டல் மேலும் காசடிக்கிறதுக்கு நல்ல சாட்டு .பணம் சேர்க்க வேறுவழிகளை சிந்திப்பதை விட்டு இப்படியா மாவீரர்நாளை கேவலபடுத்தி கொண்டாடவேணும்? இப்படி கேவலப்படுத்தி காசு சேர்த்து கொண்டாடுவதைவிட வேறுவழிகள் பற்றி சிந்திக்கலாம்.

எனக்கு உங்கள் மாவீரர்நினைவுநாள் சம்பந்தமான அறிவும் புரிந்துணர்வும் புல்லரிக்க வைக்கிறது.வாழ்த்துகள் சுண்டல். :lol::D:icon_idea: .

அவர்கள் காசடிக்கிரார்கள் என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் வாங்கி சாப்பிடாமல் வெளியில் வந்து ஒரு பிட்சாவோ இல்லை கெபாப்போ வாங்கி சாப்பிட்டு அந்நியனை வளர்க்க வேண்டியது தானே- அப்ப உங்க இனத்தை அழிக்கும் அழித்த சிங்கள நாட்டின் பொருட்கள் ஒன்றுமே வாங்குவதில்லை தமிழ்க் கடைகளுக்கும் போவதில்லை உங்கள் இனம் விடுதலை பெறும் வரை வாழ்த்துக்கள் அப்பிடி இருப்பதற்கு
  • கருத்துக்கள உறவுகள்

"அப்பிடி சொல்லாதையுங்கோ . இப்ப சனம் எல்லாம் நல்ல தெளிவு கண்டியளோ . ஆர் தங்களுக்கு பிரையோசனமாய் இருக்கீனமோ , அவைக்குப் பின்னால நிக்குங்கள் . இப்ப டக்கிளசு சனத்துக்கு எவ்வளவோ நல்ல விசையங்களை செய்யிறார் . ஆனா, அவரோடை இருக்கிற கொஞ்ச குறுக்கால போனதுகளால அந்தாளுக்கு கள்ளப் பேர் " .

"ஏன் அவரும் நீங்கள் சொல்லுற ஆக்களை தட்டி நிமித்தலாம் தானே மாமா "?

நீங்கள் என்ன சொல்லுங்கோ , அந்தாள் வந்தாப் பிறகுதான் சனங்களின்ர பிரச்சனையள் எல்லாம் வெட்டிக் கொண்டுவாறார் . எந்த நேரத்திலையும் அவரைப் பாக்கலாம் . சரியான எளிமையான மனசன் பாருங்கோ".

" நாங்களும் இங்கை இருந்து பாத்தனாங்கள் தானே எல்லாற்ர விளையாட்டுகளையும்".

" ஏன் மாமா அப்படிச்சொல்லுறியள் "?

"உங்களுக்கு கனக்கத் தெரியாது தம்பி......... , நாங்கள் எல்லாம் , எல்லா வழியாலையும் பாவப்பட்ட சீவனுகளாய் போனம் . அதுகளை சொல்லுறதெண்டால் நெஞ்சுக் கொதி தான் ஏறும்".

ஏன் மாமா இப்பிடிச் சொல்லுறார் . இதில் எது பொய் ? எது உண்மை ? மக்களின் அடிப்படைத் தேவைகளை யார் தீர்த்து வைகின்றார்களோ , அவர்கள் மக்களால் முன்னிலைப் படுத்துவது மனித இயல்போ ? என்று எனது மனம் பலவாறாக அலைபாய்ந்தது . நானும் மாமாவோட சேர்ந்து புளியம்பழம் உடைச்சுக் கொண்டே கதையைத் தொடர்ந்தேன்,

"ஏன் மாமா இயக்கம் சனத்தை செரியாக் கஸ்ரப்படுத்திப் போட்டாங்களே"?

"அப்பிடி எல்லாம் இல்லை தம்பி......... ஒண்டுரெண்டு கதைக்ககூடிய மட்டத்தில இருந்தாங்கள் . மிச்சமெல்லாம் கதைக்கப் பேசத்தெரியாது . நாங்கள் ஒருத்தரையும் வித்தியாசம் பாக்கேல பாருங்கோ . பசிச்ச வயித்துக்கு சோறு போட்டம் . சில நேரம் சோறு போட்டதுகளுக்கே உலை வைச்சவங்களையும் கண்டிருக்கிறன் ".

"தம்பி உலகத்தில எல்லா இடத்திலையும் நல்லவனும் இருக்கிறாங்கள் , கெட்டவனும் இருக்கிறாங்கள்."

"ஏன் மாமா இதை இங்கை சொல்லுறியள் "?

"எங்கடை பெடியளுக்கு வீரமும் துணிவும் இருக்குது பாருங்கோ. ஆனால் , விவேகம் கொஞ்சம் மட்டு".

" ஏன் அப்பிடி சொல்லுறியள்?"

" நீங்களும் இந்த உலகத்திலதானே இருக்கிறியள் தம்பி."

" எண்டாலும் மாமா நீங்கள் அனுபவசாலிதானே அதுதான் கேட்டனான் என்னை வித்தியாசமாய் எடுக்காதையுங்கோ".

மாமா கெக்கட்டம் விட்டுச் சிரித்தார் . எனக்கு மாமாவின் சிரிப்பின் அர்த்தம் விளங்கவில்லை . அனுபவப்பட்ட பழுத்த பழங்கள் உப்பிடித்தான் கெக்கே பிக்கே எண்டு சிரிப்பார்களோ ? நானும் பொதுவாய் சிரித்தேன் .

இது இவர் நெருடிய நேரின்சியில் புகுத்திய ஒரு பகுதி மக்களே வடிவா வாசியின்கள் இவரின் நோக்கத்தை புரிவீர்கள் தெளிவு பெறுவீர்கள்

மாவீரர் தினங்களை ஒழுங்கு செய்பவர்களுக்குதான் அவற்றின் செலவுகளை பற்றி தெரியும்.

அத்துடன் உணவு என்பது அடிப்படைத்தேவை மக்களுக்கு, தூர இடங்களில் இருந்து பிள்ளைகளுடன் வருபவர்கள் அவர்களுக்கும் தங்களுக்கும் சாப்பிட ஏதாவது தேவை. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதலாம்.

வேலை முடித்து மாவீரர் தினத்துக்கு ஓடி வருபவர்கள் மீண்டும் போய் சமைக்க எவ்வளவு நேரமாகும்?

வேறு யாரிடமாவது வாங்கினால் குற்றமில்லை, இதுதான் உங்கிளின் எண்ணமா கவிதை வடிவில்? உங்களுக்கே விளங்கவில்லை என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று.

இதை கதை கதையாம் பகுதியில் இணைத்திருக்கலாம்...

நானும் வேலை முடித்து மாவீரர் தினத்துக்கு பிள்ளைகளுடன் போய் முடிந்த பின்னர் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து வீடு வர 09:00pm விடிய 04:45am வேலைக்கு போக எழும்பனும், இதே நிலை பலருக்கு இருந்திருக்கும்.

குறை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, நல்ல வழியில் சிந்தியுங்கள்

நேர விரயம்

வெட்டு2?

[size=4]

[/size]

[size=4]கோவிலிலும் தானே, மரக்கறி ரோல்சும், மசாலா தோசையும் விக்கிறார்கள்?

அதற்காகக் கோவிலுக்குப் போகாமல் விடுவதா?

[/size]

[size=4]

[/size]

[size=4]கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை. [/size]

[size=4]

பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும் , அவ்வாறு கெட்டவருக்குத் துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை.[/size]

[size=4]

அவர்கள் காசடிக்கிரார்கள் என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் வாங்கி சாப்பிடாமல் வெளியில் வந்து ஒரு பிட்சாவோ இல்லை கெபாப்போ வாங்கி சாப்பிட்டு அந்நியனை வளர்க்க வேண்டியது தானே- அப்ப உங்க இனத்தை அழிக்கும் அழித்த சிங்கள நாட்டின் பொருட்கள் ஒன்றுமே வாங்குவதில்லை தமிழ்க் கடைகளுக்கும் போவதில்லை உங்கள் இனம் விடுதலை பெறும் வரை வாழ்த்துக்கள் அப்பிடி இருப்பதற்கு

[/size]

[size=4]

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355

எப்பொருள் எத்தன்மையாகத் தோன்றினாலும் , அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும் .

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.