Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் அண்ணாவுடன் யாழ் கள உறவுகள் ஓர் இனிய சந்திப்பு

Featured Replies

மதன மோக ரூப சுந்தரா!! எங்க சார் இதுகள இவளவு காலமும் வைச்சிருந்தீங்க.. சிங்கப்பூரில ஒரு கலக்கு கலக்கித்தான் இருக்கிறீங்க.. பாராட்டுக்கள். :D

நன்றி சோழியன் :lol:

என் சகோதரியிடம் இருந்து

அண்மையில் கிடைத்தது.

தரமாக இல்லை.

பலவற்றை பாவிக்க முடியவில்லை. :oops:

  • Replies 226
  • Views 34.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவன் ஆரம்பகாலத்தில் உங்கள் நடிப்பு உரையாடல்கள் மேடைநாடகத்தை போன்று அமைந்திருக்கின்றது எப்படி அதிலிருந்து விடுபட்டீர்கள் (அப்படி இருந்தது என்று ஒத்துக்கொள்கின்றீர்களா?)

அஜிவன் அண்ணா.. super :lol:

நன்றி வசிசுதா

நலமா?

களத்தில் பார்க்கவே முடிவதில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பு நன்றாகத்தான் இருக்கின்றது. :lol:

நடிப்பு நன்றாகத்தான் இருக்கின்றது. :lol:

நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

அட அயீவனா ??? மதனமோக ருப சுந்தரா?? நன்றாக இருக்கிது பாராட்டுகள் இங்கு இணைத்தமைக்கு நன்றிகள்

அஜீவன்

ஆரம்பகாலத்தில் உங்கள் நடிப்பு உரையாடல்கள் மேடைநாடகத்தை போன்று அமைந்திருக்கின்றது

எப்படி அதிலிருந்து விடுபட்டீர்கள் (அப்படி இருந்தது என்று ஒத்துக்கொள்கின்றீர்களா?)

உண்மைதான் வியாசன்!

சிங்கள நாடக மற்றும் திரைப்பட துறையில் பயிற்சி பெற்று

அவற்றில் ஈடுபட்டிருந்தேன்.

அங்கே யதார்த்தமே மேலோங்கி இருந்தது.

அப்படி

எனக்குள் என்ன இருந்தாலும்

நான் சிங்கப்பூர் போன போது

சிங்கப்பூரில் சினிமா கிடையாது.

அதிலும்

நாடக அரங்கம் - ஒலிஒளி - குழந்தைகள் நிகழ்ச்சி இப்படியான பெயர்களில்தான் சிங்கை தொலைக் காட்சி நிகழ்ச்சிகளே நடைபெற்றது.

அவை வாரத்தில் 3 நாட்கள் சீன ஒளிபரப்புக்குள் (SBC Chanel 8ல்) இடம்பிடித்து ஒளிபரப்பாகும் 30 நிமிட குறுகிய நிகழ்ச்சிகளே!

அன்று செட்களை அமைத்தே ஒளிப்பதிவுகளை செய்ய முடிந்தது.

வெளிப்புறப் படப்பிடிப்பே கிடையாது.

கமராவை திருப்பவே கூடாது என்ற சட்டம்.

நான் ஒளிப்பதிவு செய்து சிறு பாத்திரமேற்ற இடத்தில்

உள்ள சிறு செட்டின் நிலை

என்னை ஒரு அடி கூட நகர முடியாமல் கட்டிப் போட்டது. :lol:

இயக்குனர் வேறு ஆடாதேப்பா அசையாதேப்பா என்றே

கட்டளை இட்டார்.

இந்த தொடுப்பில் அது தெரியும்...........

Singapore1_web.jpg

ஆனால் முதன் முதலில் 16.MM சினிமா கமராவை

தமிழ் தொலைக் காட்சி நாடகத்துக்காக வெளியே கொண்டு சென்றேன்.

அப்போதிருந்த வீடியோ கமராக்களை வெளியே கொண்டு போக முடியாது.

16MMல் ஒளிப்பதிவு செய்து யூமெட்டிக் போர்மாட்டில் மாற்றி தொலைக்காட்சியில் உபயோகித்த காலம் அது.

இன்று இதெல்லாம் தலைகீழாகி விட்டது. :P

இன்றோ வீடீயோவில் ஒளிப்பதிவு செய்து சினிமாவாக்கும் காலம்! :P

தமிழுக்குள் வருவதற்கு முன் சீன மலாய் ஆங்கில நிகழ்ச்சிகளில்தான் பணிபுரிந்தேன்.

அப்போது எனது சகோதரி அங்கு ஆங்கில - சீன - மலாய்

பகுதி இணை-இயக்குனராக இருந்தார்.

அவர் உதவியால் பகுதிநேர ஒளிப்பதிவாளனாக சிங்கை தொலைக்காட்சிக்குள் நுழைந்தேன்.

அது எனக்கு அந்த நாட்டில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தது.

பின்னர் முழுநேரம்.

(ஆரம்பத்தில் முழுநேரமாக நான் வேலை செய்தது ஜப்பான் கனேக்கா சிங்கப்பூரில்............

http://www.kaneka.co.jp/kaneka-e/index.html )

அன்று என் ஒளிப்பதிவு உதவியாளர் டங்கூட ஒரு சீனர்.

Atfilminstitute_web.jpg

படத்தில் டங் ; அஜீவன் ; தனலக்ஸ்மி(என் சகோதரி) மற்றும் கோபாலி அண்ணா.

நான் அன்று (Indian Tamil Section) இந்தியன் தமிழ் பகுதிக்குள் நுழையும் போது இருந்த

அன்றைய இயக்குனர்கள் எல்லோரும்

MGR சிவாஜி காலத்தை பின்பற்றியவர்கள்.

நான் அங்கே புது முகம்.

அதிலும் அவர்களோடு ஒப்பிடும் போது நான் மிக மிகச் சின்னவன்.

தவிரவும் எனக்கு ஆரம்ப காலத்தில் தமிழே தெரியாது.

அவர்களது அன்புக்கு பாத்திரமானவனாக "சிலோன் பையா"

என்று அழைக்கப்பட்டேன்.

நான் தமிழ் பேசும் போது கிளிப்பிள்ளை மாதிரி கொச்சை தமிழ் பேசுறான் என்று

சிரித்தவர்கள் பின்னர் என் தமிழ் பேச்சை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாயடைத்துப் போனார்கள்.

தினசரி கண்ணாடி முன் நின்று

தமிழோடு சண்டை பிடித்தேன்

பைத்தியம் போல.............. :P

மிகவும் வேதனைகளைத் தாங்கி கொண்டு முயன்றேன்.

மீண்டும் மீண்டும்.............

நிலைப்பதில்

ஒரு வைராக்கியம்.

அது நிஜமானது தமிழ் நாடக பயிற்சி பட்டறை வழிதான்.........

பின்னர்தான் தமிழில் நடிக்கத் தொடங்கினேன்.

"டேய் கமராவை மட்டும் கட்டிப் புடுச்சூட்டு நிக்காதே

பயப்படாம நடிடா.......

நீ அழகா வேற இருக்கே.......

உன்னை வெல்ல இங்க எவணுமே கிடையாது."

என்ற கோபாலி அண்ணாவின் ஆசிகள்............

மற்றும் தினமும் நான் வாங்கிக் கட்டிய திட்டுகள்

டொன் கணக்கில்........... :oops: :P :lol:

இந்த மனுசன் பெரிய தொல்லை என்று

அவமானப்பட்ட போதெல்லாம்

மனதுக்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன்.

அவர் எங்களை விட்டு ஊருக்கு பயணமான போது

நான்தான் அதிகமாக அழுதேன். :oops:

தமிழின் வெற்றி எல்லாமே கோபாலி அண்ணாவால்தான்.

கோபாலி அண்ணா தந்த தமிழ்தான் எனக்குள் விதையாகி வேரானது..........அவர்தான் என் தமிழ் மற்றும் தமிழ் நாடக ஆசான்.

எனக்குள் தமிழ் உணர்வையே ஊட்டியவர்.

இவர் அன்றைய பூனா திரைப்பட கல்லூரி மற்றும் சென்னை தூரதர்சனின் பயிற்சியாளர் மற்றும் இயக்குனர்.

சில காலம் (3 வருடங்கள்) சிங்கை தொலைக் காட்சியின் பயிற்சியாளராக பணியில் இருந்தவர்.

அப்போதுதான் என்னில் அன்பு கொண்டார்.

கோபாலி (நாராயணசாமி) அண்ணா

பிரபல சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்புபயிற்சி குரு.

தவிரவும் பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குனர் அசோக்குமாரின் பால்ய நண்பன்.

அசோக்குமாரின் அனைத்து திரைப்படங்களிலும்

இவர்தான் இணை இயக்குனர் அல்லது அட்வைசர்.

Singaporecamera_web.jpg

அன்றைய SBC சிங்கப்பூர் ஒலி-ஒளிபரப்பு கழக இயக்குனர்

கோபாலி அண்ணாவை சிங்கை விக்டோரியா அரங்கில் அறிமுகம்

செய்து போது.........(நான் இடது பக்கத்தில் கறுப்பு டிரெகியூலா உடுப்பில்........)

SBCIndiansection_web.jpg

"விசப்பரீட்சை" நாடகத்தில் ஒரு காட்சி.

(நான் கறுப்பு டிரெகியூலா உடுப்பில்........)

இந்த தமிழ் மேடை நாடகம் முதன் முறையாக சிங்கை

தொலைக் காட்சியில் நேரடியாக ஒலி-ஒளிபரப்பாகியது.

இதோ அதில் சிறு பகுதி:-

பகுதி.1

பகுதி.2

தொடர்ந்து வந்த

இப்படியான

நாடக பாணியை

ஒரு மரம் நிழலைத் தேடுகிறது

தொலைக் காட்சி நாடகத்தை இயக்கி நடித்த போது

யதார்த்தத்தை நோக்கி

சின்னதாக ஒரு மாற்றத்தை கொண்டு வர முயன்றேன்.

ஆனால் பழம் பெரும் நடிகர்களது பழக்கத்தை

என்னால் முற்றாக மாற்ற சிரமமாகவே இருந்தது.

நான் தமிழில் இயக்கியதை விட

அடுத்தவர்கள் படைப்புகளில் நடித்ததுதான் அதிகம்.

யாரும் செய்ய முடியாது எனும் எந்த பாத்திரத்தையும்

செய்ய என்னை அழைப்பார்கள்................

சின்னதாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்தேன்.

அவர்கள் பின் ஒரு காலத்தில்

என்னை

தன் வீட்டு குழந்தையாக்கிக் கொண்டார்கள்.

இன்றும் சின்ன சின்ன விடயங்களை கூட

விருப்பத்துடன்தான் செய்கிறேன்.

திறமைசாலிகளை புலம் பெயர்

ஊடகங்கள் தமது வளர்ச்சிக்காகவேனும் பயன்படுத்திக் கொள்ளவில்லை

என்பது எனக்குத் தெரியும்.

அந்த வகையில் சிங்கப்பூர் மண்ணும் அங்கு வாழும் தமிழ் மக்களும்

என்னை வளர்த்தவர்கள் என்று பெருமையோடு என்றென்றும் சொல்வேன்.

அட அயீவனா ??? மதனமோக ருப சுந்தரா?? நன்றாக இருக்கிது பாராட்டுகள் இங்கு இணைத்தமைக்கு நன்றிகள்

நன்றி சாத்திரியாரே!

அஜீவன்.

நாடகங்கள் மிகவும் நன்று. உங்கள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் தமிழ்மீது கொண்ட பற்றும் போற்றத்தக்கன. உங்கள் கலைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

அஜீவன்.

நாடகங்கள் மிகவும் நன்று. உங்கள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் தமிழ்மீது கொண்ட பற்றும் போற்றத்தக்கன. உங்கள் கலைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி ஈழத்திருமுருகன்.

நல்ல நேரம் கனடாவில சந்திச்ச பிறகு பார்க்கிறீங்க? :D :P

ஜெர்மன் மொழி புரிந்தவர்களுக்கு புரியும் ரசிகை. :roll:

"அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான்"

-ரசிகை :P

ஜேர்மன் மொழி நல்லா சாரலமாக பேசுறீங்களே...??? நல்ல தேர்ச்சி இருக்கா...??? இல்லை ஏதோ டப்பிங் என்பார்களே அதில் போட்டு நிரப்பிட்டீங்களா...???

இல்லை இங்க வரும் ஜேர்மன் வாழ் மக்கள் விட்டு விட்டு மெதுவாகத்தான் பேசிக்கொள்வதை பார்த்திருக்கிறேன்...! எனக்கு சுத்தமா ஒண்டும் விளங்கினது கிடையாது...!

:P :P :P

அஜீவன் அண்ணா கதவு திறந்த விதத்துல நான் பயந்து போனன். :oops:

நல்லாத்தான் இருக்கு ஆனால் ஒன்றும் புரியவில்லை :roll:

எனக்கும் ஒண்டும் விளங்கேல்லைத்தான்... :oops:

ஆனா ஏதோ கெடுபிடியா செய்யுறார் சொல்லுறார் எண்டது நண்றாக புரிந்தது...! :D

இல்லை 20 ஆயிரம்.

20 ஆயிரம் என்று நான் ஏற்கனவே போனில் பேசியிருக்கிறேன்.

எங்கே அந்த தொமிங்கஸ்.

மெக்ஸிகன்காரன்.

கொப்பத்தாமி சயிசே ( கெட்ட வார்த்தைகளோடு சிட் என்பது)

இந்த சயிசே, கப்பூத்(பழுதாப்போச்சு) எண்ட ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு தெரியும்.....!

நல்லவார்த்தைகள் எப்பிடி நாங்கள் படிப்பமாக்கும்... :D:):(

அஜீவன்.

நாடகங்கள் மிகவும் நன்று. உங்கள் விடாமுயற்சியும் கடின உழைப்பும் தமிழ்மீது கொண்ட பற்றும் போற்றத்தக்கன. உங்கள் கலைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

இதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன்...!

எதிர்கால திரைபட்டத்துறைக்கு தமிழீழத்தை அஜீவன் அண்ணா இட்டுச்செண்றால்.( சென்றால் இல்லை செல்லுவார் என்பது தெரியும் அவரின் மனவுறுதி அதுக்கு சாண்றுகாட்டுகிறது..) யாழ்களத்தில் அவருடன் இருந்தவன் எண்றவகையிலும்.... கொஞ்சம் அதிகமான மகிழ்ச்சி கொள்வேன்...! அஜிவன் அண்ணாவின் பணிதொடர்ந்து வளரவேண்டும்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஒரு கலைஞனும் அவலங்களை சந்திக்காமல் முன்னுக்கு வந்ததில்லை என்பதை உங்கள் நீண்டவிளக்கத்தினூடாக அறிய முடிகின்றது. உங்களுடன் களத்தில் கருத்துக்களை பகிர முடிந்தமைக்கு நன்றி

உன்னைத்தான் நானறிவேன் என் மன்னவனை யார் அறிவார்? :D

எனக்கும் ஒண்டும் விளங்கேல்லைத்தான்... :oops:

ஆனா ஏதோ கெடுபிடியா செய்யுறார் சொல்லுறார் எண்டது நண்றாக புரிந்தது...! :D

ஜேர்மன் மொழி நல்லா சாரலமாக பேசுறீங்களே...??? நல்ல தேர்ச்சி இருக்கா...??? இல்லை ஏதோ டப்பிங் என்பார்களே அதில் போட்டு நிரப்பிட்டீங்களா...???

இல்லை இங்க வரும் ஜேர்மன் வாழ் மக்கள் விட்டு விட்டு மெதுவாகத்தான் பேசிக்கொள்வதை பார்த்திருக்கிறேன்...! எனக்கு சுத்தமா ஒண்டும் விளங்கினது கிடையாது...!

தலா

அது எனது குரலில் நான் பேசுவதுதான்.

பெரிதாக என்று சொல்ல முடியாது.

ஓரளவு சமாளிக்கலாம்.

சொல்வதில் பெரும்பாலானவை விளங்கும்.

நினைப்பது அனைத்தையும் பேச முடியாத நிலை

எனக்குள் தெரிகிறது.

இந்த சயிசே, கப்பூத்(பழுதாப்போச்சு) எண்ட ஒரு சில வார்த்தைகள் தான் எனக்கு தெரியும்.....!

நல்லவார்த்தைகள் எப்பிடி நாங்கள் படிப்பமாக்கும்... :):(:D

யாரும் ஒரு மொழி கற்கும் போது

கெட்ட வார்த்தைகளைத்தான்

விரும்பியோ விரும்பாமலோ

கற்றுக் கொள்கிறான்.

நாம் முதலில் தவறு செய்து

புரியாமலே

வாங்கிக் கட்டிக் கொள்கிறோம்.

பின்னர் அதைத்தான் நாம் மற்றவர்களுக்கும்

சொல்கிறோம்.

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை..........

இதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன்...!

எதிர்கால திரைபட்டத்துறைக்கு தமிழீழத்தை அஜீவன் அண்ணா இட்டுச்செண்றால்.( சென்றால் இல்லை செல்லுவார் என்பது தெரியும் அவரின் மனவுறுதி அதுக்கு சாண்றுகாட்டுகிறது..) யாழ்களத்தில் அவருடன் இருந்தவன் எண்றவகையிலும்.... கொஞ்சம் அதிகமான மகிழ்ச்சி கொள்வேன்...! அஜிவன் அண்ணாவின் பணிதொடர்ந்து வளரவேண்டும்....!

அன்பான வாழ்த்துக்கு நன்றி!

நாம் ஒன்றாய் வாழ்தலே மகிழ்ச்சிதான் தலா........

எந்த ஒரு கலைஞனும் அவலங்களை சந்திக்காமல் முன்னுக்கு வந்ததில்லை என்பதை உங்கள் நீண்டவிளக்கத்தினூடாக அறிய முடிகின்றது. உங்களுடன் களத்தில் கருத்துக்களை பகிர முடிந்தமைக்கு நன்றி

உன்னைத்தான் நானறிவேன் என் மன்னவனை யார் அறிவார்? :D

உங்கள் கேள்விதான்

என்னை எழுத வைத்தது வியாசன்.

உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார் (2)

என் உள்ளமென்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்

(உன்னைத்தான்)

யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம் (2)

நாயகனின் விதி வழியே நாமிருவர் சேர்ந்து வந்தோம் (2)

ஒன்றையே நினைத்து வந்தோம் ஒன்றாகக் கலந்து வந்தோம்

(உன்னைத்தான்)

காதலித்தல் பாவமென்றால் கண்களும் பாவமன்றோ? (2)

கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ? (2)

பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?

(உன்னைத்தான்)

-கவிஞர் கண்ணதாசன்

usauk3.jpg

எனது அமெரிக்க - கனடாவுக்கான முதல் பயணம் இது .5

"இதுதான் அஜீவன்........... வாங்க" என்று சொல்லி விட்டு

சிறீராம் முன்னால் போக நான் அவரைத் தொடர்ந்தேன்.

வீட்டு அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தால் வந்து கதவை திறந்த சிவாவைப் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது?

சிவா என்ற பெயரில் ஒரு வெள்ளைக்காரனா?

சுவிஸில் கூட பல சுவிஸ்காரர்கள் இந்திய மற்றும் தமிழ் பெயர்களில் தனது பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப் பட்டவர்களில் பலர் இந்து சமயத்தை தழுவியவர்களாகவோ அல்லது யோகா செய்பவர்களாகவோ அல்லது பரதநாட்டியம் கற்றுக் கொண்டவர்களாகவோ அல்லது தம்மோடு வாழ்ந்த தமிழர்கள் நினைவாக பெயர் சூட்டிக் கொண்டவர்களாகவோ இருப்பதை காணலாம்.

இவர்களில் சிலர் நன்றாக தமிழ் பேசுவார்கள்.

இந்திய உணவு வகைகளை சமைப்பதிலும் அத்துப்படி......... சமஸ்கிருத சுலோகங்களுக்கு உண்மையான விளக்கங்களை அவர்கள் சொல்லும் போதே நமது அறியாமையை நினைத்து வெட்கப்படத் தோன்றும்..................?

என் நினைவுகள் அப்படி நகர்ந்து கொண்டிருக்கையில்

"மன்னிக்கவும் தவறாக வந்து விட்டேன்" என்று சிறீகாந் அவரிடம் சொன்ன போது நிலமையை புரிந்து கொண்டு நான் சிரிக்க சிறீகாந்தும் முகத்தை சுழித்துக் கொண்டார்.

கதவைத் திறந்தவர் பரவாயில்லை என்று கதவை மெதுவாகவே மூடினார்.

வீட்டு இலக்கத்தை பார்த்தவர் வீட்டின் படிகளை கவனிக்கத் தவறியதால் ஏற்பட்ட நிலைதான் அது..............

அடுத்த கதவை நோக்கி நடந்து அழைப்பு மணியை அழுத்தினால் சிவாதான் கதவைத் திறந்தார்.

"வாங்க...வாங்க........." சிரித்த முகத்தோடு சிவா.

உள்ளே போனதும் பொதுவான அறிமுகம்.

siva%26Thara.jpg

சிவாவும் அவரது துணைவியார் தாராவும் இருந்தார்கள்.

எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு என் பெட்டிகளை சிவா கொண்டு போய் வைத்து விட்டு சிறு விளக்கம் தந்தார்.

சிறீகாந்துக்கும் எனக்கும் அவரது வீட்டை சுற்றிக் காட்டினார்.

சிறிது நேரத்தில் சிறீகாந் என்னை சிவா வீட்டில் விட்டு விட்டு அவர் வீடு நோக்கி பயணமானார்.

என்னோடு வெகு நேரம் சிவா பேசிக் கொண்டிருந்தார்.

அவர் அதிகமாக பேசியது தமிழீழ அரசியல் பற்றியதாகவே இருந்தது.

என் மனதில் பட்டதை மட்டுமல்ல எனக்குள் சரி என்று பட்டதையும் சொல்லும் ஒரு குணம் என் பிறவிக் குணம்.

சில சமயங்களில் கருத்து முரண்பாடுகள்?

எனது பேச்சின் ஊடாக என்னிடமிருந்து எதை எதிர்பார்த்தாரோ தெரியாது.

நான் சில வேளைகளில் வேறு எதையோ பேசத் தலைப்பட்டேன்.

சாப்பாடு பரிமாறும் போது தாரா சற்று பேசினார். தாரா என்னோடு பேசுவதையிட்டு சிவா பெருமை கொண்டார். எல்லோருடனும் தாரா பேசமாட்டார் என்றார். உண்மையிலே அவர் பேசியது மிக மிகக் குறைவுதான். அவருக்காகவும் சேர்த்தே சிவா பேசினார்..........

நான் ஏற்கனவே இவருடன் தொலைபேசியில் பேசி இருந்தேன்.

அப்போது பேசியதை விட அதிகமாகவே பேசுவது வியப்பாக இருந்தது.

இவர் பேசும் பேசும் தோரணை தொலைபேசி அழைப்புகளில் தமிழ்சங்க தலைவர் சிவா என்ற பதத்தை அடிக்கடி பாவிப்பதை அவதானித்த போது எனக்குள் சந்தேகம்?

பொறுக்க முடியாமல் "நீங்கள் என்னோடு தொலைபேசியில் முன்ன பேசி இருக்கீங்களா?" என்று கேட்டேன்.

"இல்ல அஜீவன். அந்த சிவா வேற நான் வேற........." என்றார்.

அவர் எழுத்தாளர் பீ.கே.சிவகுமார்.

இவர் தமிழ்சங்க தலைவர் சிவா.

அப்பாடா......என்று மனதுக்கள் நினைக்கும் போதே........

"சிவக்குமார் நீங்க வந்தாச்சாண்ணு முன்ன போண் பண்ணினார்." என்று தொடர்பு கொண்டு பேசச் சொன்னார்.

சிவக்குமாரோடு பேசியதில் சந்தேகங்கள் விலகின.

அன்றைய தினத்துக்கு பிறகு அதாவது அடுத்த நாள் தாரா அவர் சகோதரி வீட்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள போய் விட்டார்.

காலையில் எழுந்தால் என்னைத் தவிர வேறு எவரும் வீட்டில் இல்லை. எட்டிப் பார்த்தால் குப்பை எடுக்க வரும் லாரிகளைத் தவிர வேறு எதுவுமே கண்ணுக்கு புலப்படவில்லை.

வீடுகள் தெரிந்ததே தவிர ஆள் அரவமேயில்லை.

outside%20of%20siva%20house.jpg

காடுகளைத் தவிர இப்படியான அமைதியை நான் கண்ட முதல் இடம் இதுவாகத்தான் இருக்கும் எனப்பட்டது.

எனக்கு இப்படியான அமைதி பிடிக்கவே பிடிக்காது.

நான் இருந்தால் அந்த இடம் கலகலப்பாய் இருக்க வேண்டும். இல்லையோ அந்த இடத்தை விட்டு போய் விடுவேன்.

மயான அமைதியான இடமா இருந்தால் என்னடா பண்ணுவே என்று கேட்ட ஒரு நண்பனுக்கு நான் ஒருமுறை சொன்ன பதில் நினைவலைக்கு வந்தது.

"நான் இருந்தா அந்த இடம் கல கலக்கணும் இல்ல ஒப்பாரியாவது கேட்கணும்டா........."

இனியும் இந்த அமைதி தொடரக் கூடாது.

சிவக்குமாருக்கு என் கைத் தொலைபேசியால் தொடர்பு கொண்டேன். ஏன் உங்க போனில பேசுறீங்க அஜீவன். றோமிங் சாஜ் ஆவுமே....... வீட்டு போனில பேசலாமே என்றார்.

யாருமில்லாதபோது யார் வீட்டு போனையும் பாவிக்க மாட்டேன். இருந்தாலும் கூட அனுமதியில்லாது அதைச் செய்ய மாட்டேன் என்றேன்.

முதல்ல போணை வைங்க என்று சொல்லி விட்டு

சிவா வீட்டு போண் கீழ் மாடியில இருக்கும் போங்க என்று சொல்லி அவரே அழைத்தார்.

கொஞ்ச நேரம் அவரோடு பேசியது ஆறுதலாய் இருந்தது.

பேசி முடித்த கையோடு தமிழ் சங்க சிவா வீட்டுக்குள் வந்தார்.

நான் பீகே சிவா பேசியதை சொன்னேன்.

இதுக்கேல்லாம் போய் ஏன் யோசிக்கிறீங்க. எங்க வேணுமானாலும் போண் போடுங்க என்றார்.

எனக்குத் தெரியும் அதன் பாதிப்புகள்.

இவை பெரிதல்ல என்று நினைப்போம். ஆனால் யாரையும் வீடுகளில் தங்க வைக்க பலர் விரும்பாததற்கு இதுவும் ஒரு காரணம். எனக்கே பலரை வெறுக்க வைத்த நிகழ்வுகள் ஏராளம். அதை நான் செய்வதில்லை.

USA%20Post%20office.jpg

பின்னர் அவரோடு கொஞ்சம் வெளியே போனோம்.

திரும்பி வீடு வந்தோம்.

மாலையில் திரைப் பயிற்சி பட்டறை சிறீகாந் வீட்டில் நடந்தது.

அதில் பங்குபற்றிய அனைவரும் பணிகளில் இருந்ததால் மாலை வேளைகளில்தான் பயிற்சி வகுப்புகள்.

பயிற்சி வகுப்புகள் என்பதை விட எனக்கு தெரிந்த சிலவற்றை அவர்களோடு பகிர்ந்து கொண்டேன் என்றே சொல்ல வேண்டும்.

பயிற்சி வகுப்புகள் இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அதாவது இரண்டு அல்லது அதிகரித்தால் இரண்டரை மணி நேரம் மாத்திரமே அதி கூடிய காலமாக இருந்தது.

ஆரம்பம் பரவாயில்லை......... 5 பேர்தான்

ஆனால் நேரத்துக்கே அனைவரும் வந்து இருந்தார்கள்.

சங்கரபாண்டி சிறிகாந் பாபு சிவா தீபா இவர்களோடு முதல் நாள் மட்டும் கொஞ்ச நேரம் சிறிகாந் மனைவி பிரியாவும் பங்கு கொண்டார்.

3-4 வருட கல்வியொன்றினை 4-5 நாட்களுக்குள் சாரமாக்கி கொடுப்பது கடினமே?

சினிமாவுக்கான அரிச்சுவடி வழிகாட்டியாக அந்த மணித்துளிகள் இருந்தாலும் அனைவரும் திருப்தியாக இருந்ததாக சொன்னது எனக்கு மகிழ்வாக இருக்கிறது.

பயிற்சி பட்டறை மட்டுமா?

நல்ல சாப்பாடுகளும் பரிமாறப்பட்டது.

இப் பயிற்சிகள் நடக்கும் நாட்களில் நான் அதிகமாக தமிழ்சங்க சிவா வீட்டிலேயே மாலை வேளை தயாரிப்புகளுக்காக காலத்தை செலவழிக்க முடிந்தது.

அவரோடு சுற்றிப் பார்த்தது என்னவோ மிக மிகக் குறைவென்றே சொல்வேன்.

இறுதி பயிற்சி நாளுக்கு முதல்நாள் பயிற்சியாளர்கள் அனைவரும் முன் வைத்த கதைக் கருக்களிலிருந்து தீபாவின் கதையை குறும்படமாக்கலாம் என்று அனைவராலும் முடிவானது.

இது ஒரு குறும்படமாக உருவாக்குவதற்காக அல்ல பயிற்சி குறும்படமாக செய்வது என்பதே குறியாகியது. அடுத்த நாள் நான் தமிழ்சங்க சிவா வீட்டில் இருக்க வேண்டிய இறுதி நாள்.

அதன் பின்னர் சங்கரபாண்டி வீட்டுக்கு போவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

ajeevan.washinton.jpg

எனவே வொசிங்டனை கொஞ்சமாவது சுற்றிக் காட்டுகிறேன் என்று தமிழ்சங்க சிவா என்னை வொசிங்டன் நகருக்கு அழைத்துச் சென்றார்.

வெளிப்புற நகரை சுற்றிக் காட்டினார். வொசிங்டன் நகரின் பெருமைகளையும் அவர் அழைத்து வந்து காட்டியவர்களையும் பற்றி சொல்லிக் கொண்டே வந்தவர் திடீரென "உங்களுக்கு இது அமெரிகா என்று பீலாகுதா?" என்றார்.

எனக்கு அது முதலில் புரியவேயில்லை. அவர் மீண்டும் மீண்டும் அதையே திருப்பிக் கேட்கவே என்னால் அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து மனதுக்கள் சிரிக்காமல் இருக்க முடியவேயில்லை.

நான் நினைக்கிறேன்.............. இந்தியாவில் இருந்து முதன் முறையாக அமெரிக்கா வருவோருக்கு அமெரிக்கா ஒரு மோட்சமான உணர்வை ஏற்படுத்தி அது அவர்களை அதிகளவான மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய தாக்கத்தில் அவர்கள் அதை தாள முடியாமல் ஆகா........ஓகோ.............என பீல் பண்ணியிருக்கலாம்.

இது என்னிடம் காணப்படாததும் அமைதியாக வேறு நான் இருப்பதையும் பார்த்துத்தான் "இவன் என்ன ஜடம் மாதிரி இருக்கிறானே?" என்று தமிழ்சங்க சிவாவுக்கு கேட்கத் தோன்றியிருக்கலாம்.

எனவே "அது கனடா எயார் போட்டில் வெல்கம் டூ அமெரிக்கா என்ற பேர் பலகையை பார்த்ததுமே எனக்கு வந்து விட்டது." என்றேன்.

நான் எதையாவது கவனிக்கத் தொடங்கி விட்டால் அல்லது அதை மனதில் பதிய வைக்கத் தொடங்கி விட்டால் ஏனைய உலகை மறந்து விடுவேன். அமைதியாகி விடுவேன்.

இதில் எது நம்ம சிவாவை குழப்பத்துக்குள்ளாக்கியது என்பது அவருக்குதான் வெளிச்சம்...................

அமெரிக்கா என்ற பெயர் பலருக்கு ஒரு மாயை உண்டாக்கலாம்.

அதை விட அழகான இடங்கள் ஐரோப்பாவில் உண்டு.

இதுவரை பல நாடுகளுக்கு (20க்கு மேல்) பயணம் செய்து இருக்கிறேன்.

அழகு, அமைதி, பாதுகாப்பு என அனைத்தும் நிறைந்து என்னைக் கவர்ந்த நாடு சுவிஸ்தான்.

பாரீசிலிருக்கும் என் நண்பர்கள் பிரகலாதன் - வசந்தி இருவருமே ஊர் சுற்றுபவர்கள்.................. பாரீஸ் கூட அழகுச் சிலைகளின் உறைவிடம்தான்.

அவர்களே அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் "அஜீவனோடு சேர்ந்து சற்றினால் சுவிஸ் ஈஸ் பெஸ்ட் இன் த வேர்ல்ட்"

சுவிஸ் ஒரு மகிச் சிறிய நாடு. இயற்கை வளம் மட்டுமல்ல பொருளாதார வளமும் நிறைந்த நாடு...................

உண்மையாகவே அமெரிக்கா என்னில் பெரியதொரு மாயை ஏற்படுத்தவேயில்லை என்றே சொல்வேன்.

அங்கு வாழும் நண்பர்களை பார்த்த அன்பை பகிர்ந்து கொண்ட திருப்தி மட்டுமே எனக்குள்!

வொசிங்டனை கூட நுணிப் புல் மேய்வது போல பார்த்து விட்டு திரும்பி நேரத்துக்கு சிறீகாந் வீட்டுக்கு வர வேணும்.

வழி டிரப்பிக்கால் இறுகிப் போய் விட்டது. சிவா திணறிப் போனார். இருந்தாலும் நேரத்துக்கு வந்ததில் என்னை விட சிவாதான் திருப்திப்பட்டார்.

வரும் போதே எல்லோரும் குறும்படத்தை உருவாக்க தயாராக இருந்தார்கள்..................

தொடரும்................

நன்றி ஈழப்பிரியன்.

  • 3 weeks later...

DSCN1047.1.jpg

அவர்களது கலைத் தாகத்தை முழுமையாக என்னால்

தணிக்க முடியாவிட்டாலும்

ஓரளவு தாக சாந்தியாவது பண்ணியாக வேண்டும் என

என் மனது சொன்னது....................

எல்லோரும் என்ன செய்யப் போகிறோம் என்பதை

மீண்டும் கலந்து மேலோட்டமாக பேசினோம்.

யாரும் பெரிதான குறுக்கீடுகள் செய்யவில்லை.

அதற்கான காரணம்

ஆரம்ப விளக்கங்களும்

எல்லோரிடமும் இருந்த புரிதுணர்வும் என்றே

நான் கருதுகிறேன்.

தொடர்ந்து படிப்பதற்கு இங்கே அழுத்துங்கள்.

அஜீவன் அண்ணா அமெரிக்க கனடாப் பயணம் நல்ல சுவாரிசியமாக எழுதி இருக்கிறியள் மிச்சத்தையும் தொடர்ந்து எழுதுங்கோ

அஜீவன் அண்ணா அமெரிக்க கனடாப் பயணம் நல்ல சுவாரிசியமாக எழுதி இருக்கிறியள் மிச்சத்தையும் தொடர்ந்து எழுதுங்கோ

நன்றி ரசிகை.

நல்லவை தொடரும்.............

  • 10 months later...

நான் நினைக்கவில்லை அருவி ஒல்லியா இருப்பார் என்று, நிச்சயம் குண்டாத்தான் இருப்பர், அவரது சின்னவயது படத்தை அவரூரில் போட்டிருக்கிறார் பாருங்கள், யம்மோ ரசிகை இவ்வளவு குண்டா??? சும்மா பகிடிதான்.

கள உறவுகளை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

அது அருவிதான் பிருந்தன் அண்ணா அருவி மெல்லியவர் :P

அது அருவிதான் பிருந்தன் அண்ணா அருவி மெல்லியவர் :P

இதைக் கண்டுபிடித்துச் சொல்ல இவருக்கு ஒரு வருடம் தேவைப்பட்டிருக்கு.. :P :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.