Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் உலாவிய புலியூர் பிரிவு மண்ணில் மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

27-001.jpg[/size]

[size=4]

27-002.jpg[/size]

[size=4]விடுதலை புலிகளின் முதல் வீர மரணப் போராளி சங்கர்... அவர் வீர மரணமடைந்த நாளான நவ 27ம் தேதியே 1989 இல் இருந்து மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.....சேலம் மேட்டூர் கொளத்தூர் கும்பாரப்பட்டி என்ற பகுதியில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் வீர வணக்கம் செலுத்தப்படுகிறது...[/size]

[size=4]'இங்கு எங்க கிராமத்தில் விடுதலை புலிகள் 80களில் வந்து கிட்டத்தட்ட 7 வருஷம் பயிற்சி செய்து சென்றுள்ளனர்... அவர்கள் பயிற்சி செய்த தடயங்கள் இன்றும் உள்ளன. இங்கு தலைவர் பிரபாகரனும் வந்துள்ளார்..... அப்பொழுது இங்கு தளபதி பொன்னம்மான் மக்களோடு மக்களாக நெருங்கி பழகினார் அவர் மட்டுமல்ல பயிற்சி செய்த அனைத்து புலிகளும் மக்கள் பிரச்சனையை என்றால் ஓடோடி வந்து உதவுவர்... எங்கள் குடும்ப உறுப்பினர் போல இருப்பார்கள். அவர்களை பொடியன்கள் என்று தான் அழைப்பார்கள்... மூர்த்தி சிறுசு ஆனா கீர்த்தி பெருசு என்பது போல அவர்கள் செயல்கள் தீரம் மிக்கதா இருக்கும்...அங்கே நாட்டுல நடந்த ஒரு சமரில் தளபதி பொன்னம்மான் வீர மரணம் அடைய அது எங்களால் தாங்க முடியவில்லை....அப்பொழுதே கிட்டத்தட்ட 5000 பேர்களுக்கு மேல் ஊர்வலமாக மேட்டூர் வரை சென்று எங்கள் வீர வணக்கம் செலுத்தினோம் அவரோட நினைவா இங்க அவருக்கு நினைவு மண்டபம் கட்டி, நவ 27 அன்று, அவர் உட்பட மாவீரர்கள் அனைவருக்கும் நாங்களுக்கும் வீர வணக்கம் செலுத்துவோம் இங்க புலிகள் பயிற்சி செய்ததால புலிகள் ஊர் என சொல்லி சொல்லி மருவி புலியூர் என்றே பெயர் பெற்றுவிட்டது எங்கள் கிராமம்...அந்த வகையில் தமிழகத்திலும் ஒரு 'புலி'யூர் உள்ளதே என்று எங்களுக்கு பெருமையே' என்றார் தி.வி.க தோழர் சூர்யா பிரகாஷ்...மற்றும் அங்கு திரண்ட கருப்பு சட்டையினரும்...[/size]

[size=4]வழக்கமாக மாவீரர் நாள் அன்று ஈழத்தில் மாலை 6.05 மணிக்கு பிரபாகரன் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செய்வார் பின் உரையாற்றுவார் . 2008 ஆம் ஆண்டு பிரபாகரன் ஈழத்தில் மாவீரர்கள் தின உரையாற்றினார் அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் அவர் நவ 27 இல் உரையாற்றுவார் என ஈழ,சர்வதேச தமிழர்கள் எதிர்பார்பதை போல புலியூர் மக்களும் எதிர்பார்த்தே பொன்னம்மான் நினைவு மண்டபம் வந்தனர் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு தங்கள் வீர வணக்கத்தை செலுத்தினர்... பல குழந்தைகள் பெண் சிறுமிகளே.......

'எங்க பிரபாகரன் மாமா சொல்லியிருக்காரு அதனால தான் நாங்க இங்க வர்றோம் அப்பா அம்மா கூட வந்துருக்கோமே...' என்றார் குட்டி பாப்பா யாழினி......

அதன் பின் அங்கே ஈழ பாடல்கள் ஒலிக்கப்பட ,நாடகங்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது...[/size]

[size=4]புலியூரில் நடந்த மாவீரர்கள் தின வீர வணக்க நிகழ்வு வீரத்தை நெஞ்சில் விதைத்தது.....[/size]

[size=4]செய்தி, படங்கள்: இளங்கோவன் [/size]

நன்றி: http://www.nakkheera...ws.aspx?N=87129

Edited by nedukkalapoovan

[size=1]

[size=4]புலிகளை ஆயுத ரீதியாக மௌனிக்க சர்வதேசம் வைத்தபின்னர் நடந்த நான்காவது மாவீரர் தினம் இந்த வருடம். இந்த நான்கு வருடங்களிலும் [/size][size=4]தமிழகத்தில் தொடர்ந்தும் அடிமட்ட அளவில் உறுதியாக உணர்வுகள் வளர்ந்துவருவது மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது. [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் அவதானிக்க முடிகிறது. ஆரம்ப கால மாவீரர் தின அனுஷ்டிப்புக்களில் விடுதலைப்புலிகளே அதிகம் முன்னின்று செயற்பட்டு மக்களை ஊக்குவித்தனர். ஈழ எல்லைக்கு அப்பால் அது பெரிய அளவில் நடந்ததும் இல்லை. ஆனால் இன்று மக்களே முன்னின்று அதனை முன்னெடுக்கின்றனர். ஈழ எல்லையில் மட்டுமன்றி.. உலக எல்லைக் கோடு வரை அது வியாபித்துள்ளது. இதை ஈழப் போராட்டத்தின் மக்கள் புரட்சியின் ஒரு வடிமாகக் கூட காண முடியும்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மூலம் எதிரி எம்மை இன்னோர் வடிவில் பலப்படுத்தி உள்ளான். அது எம்மீது பூசப்பட்ட பயங்கரவாத முலாமை கழுவும் காலத்தையும் கொண்டு வரும்..!

எந்த எதிரி எந்த ஆயுதத்தைக் கொண்டு எம்மை அழித்தானோ அதே ஆயுதங்களுக்கு அவன் பலியாகும் நிலையும் தோன்றலாம். நாம் செய்யத் தேவையில்லை.. சீனாவிடம் நிலத்தை.. கடலை.. ஆகாயத்தை.. இப்போ விண்வெளியை இழந்து நிற்கும் பாரத தேசம்.. அதன் நலன் பேண வேண்டியவர்கள்.. அதைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்..!

சீனா தனது வல்லாதிக்கத்தை வலுவாக்க யாருக்கும் விலைபோகாத புலிகள் என்ற தடையை அகற்ற சிங்களத்துக்கு உதவியது. ஆனால் சோனியா.. சிங்களத்துக்கு வலிந்து உதவப் போய்.. தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்காக சொந்த நாட்டை அதன் நலனை காற்றில் பறக்கவிட்டுள்ளார். இத்தோடு காங்கிரஸிற்கான அழிவையும் அவர் தேட ஆரம்பித்துவிட்டார்..!

கருணாநிதி.. இன்னும் எத்தனை காலம் தான் சோனியாவுக்கு முண்டு கொடுக்கிறார் என்றும் பார்க்கலாம்..! அந்தக் குள்ள நரியருக்கும் அரசியல் அழிவு காலம் நெருங்கிக் கொண்டே உள்ளது.

நிச்சயம் காலம் மாறும். உலகெங்கும் தமிழ் மக்கள் புலிகளாக புதுப்பிறப்பெடுப்பர். தலைவர் வழியில் தாயகம் அமையும். ஆனால் அதற்காக நாம் ஒற்றுமையோடும் புத்திசாலித்தனத்தோடும் பயணிக்க வேண்டிய பாதை இன்னும் நீண்டே இருக்கிறது. மகிழ்ச்சியான விடுதலையைப் பிரசவிக்க இன்னும்.. வலியும் சுமையும் சோகமும் எம் முன்னே காத்தும் நிற்கின்றன. இவற்றை உணர்ந்தே நாம் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம்.

Edited by nedukkalapoovan

[size=1]

[size=4]புலம்பெயர் தேசங்களில் சிங்களம் பல சதிகளை உருவாக்கி எம்மை பிரித்து அழிக்க வரிந்து கட்டி நிற்கையில் தமிழகத்தில் அந்த பிரச்சனை இருப்பதாக எள்ளவும் தெரியவில்லை. [/size][/size]

[size=1]

[size=4]இவ்வாறான ஒரு களம் இருப்பது எம்மை ஒற்றுமையாக்கவும் எதிரியின் மனவலிமையை சிதைக்கவும் கவனத்தை திசைதிருப்பவும் உதவும். [/size][/size]

தமிழ்நாட்டின் அமைப்புக்களிலும் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு. ஆனால் அவர்கள் அதை தமிழர்களுக்குள் ஏற்பட்டுள்ள சிந்தனை முரண்பாடுகளாக மட்டும்தான் பார்க்கிறார்கள்.

எம்மைப் போல அவர்கள் வேறு விதமாக சிந்திக்கின்ற ஒருவனை சிங்கள அரசின் கைக்கூலி என்று சொல்வது இல்லை. அவனுடைய நிகழ்வுக்கு போகாதே என்று யாரையும் தடுப்பது இல்லை.

தமிழ்நாட்டில் நிறைய அமைப்புக்குள் தனித் தனியாக மாவீரர் நாளை செய்தார்கள். ஆனால் மாவீரரை நினைவு கொள்வதில் ஒரே சிந்தனையோடு இருந்தார்கள்.

இப்படியான மனப் போக்கே இங்கும் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

அற்றது சரி என்ன சபேசன் அண்ணா மற்ற மாவீரர் தினத்திக்கு போனதா சுண்டலுக்கு புலணாய்வு தகவல் வந்திருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் அமைப்புக்களிலும் ஆயிரம் பிரச்சனைகள் உண்டு. ஆனால் அவர்கள் அதை தமிழர்களுக்குள் ஏற்பட்டுள்ள சிந்தனை முரண்பாடுகளாக மட்டும்தான் பார்க்கிறார்கள்.

எம்மைப் போல அவர்கள் வேறு விதமாக சிந்திக்கின்ற ஒருவனை சிங்கள அரசின் கைக்கூலி என்று சொல்வது இல்லை. அவனுடைய நிகழ்வுக்கு போகாதே என்று யாரையும் தடுப்பது இல்லை.

தமிழ்நாட்டில் நிறைய அமைப்புக்குள் தனித் தனியாக மாவீரர் நாளை செய்தார்கள். ஆனால் மாவீரரை நினைவு கொள்வதில் ஒரே சிந்தனையோடு இருந்தார்கள்.

இப்படியான மனப் போக்கே இங்கும் தேவை.

தயவுசெய்து

உங்களுக்கான தனிப்பட்ட அரசியல் மற்றும் தொழில் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள மாவீரர்களையோ போராளிகளையோ பாவிப்பதை தவிர்க்கவும்.

எல்லாதிரிகளிலும இதையே எழுதுதை பார்க்கும்போது

இவை மாவீர்கள்மீது அல்லது போராளிகள் மீது கொண்ட அன்புக்காக அல்லாது

யாரையோ வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைவது எழுதுவது போல் தெரிகிறது.

அவர்களுடனான தங்கள் சொந்தசிக்கல்களை அல்லது அரசியல் பழிதீர்த்துப்புக்களை வேறுவழிகளில் முயலுங்கள்.

மாவீரர்களை விட்டுவிடுங்கள்.

நன்றி.

Edited by விசுகு

சுண்டல்,

இதில் என்ன புலனாய்வுத் தகவல்? நான் தலைமைச் செயலகம் நடத்திய மாவீரர் தினத்திற்குத்தான் போனேன்.

விசுகு,

நீங்கள் இன்றைய நிலையை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், திராவிட விடுதலைக் கழகம், மதிமுக என்று நிறைய கட்சிகள், அமைப்புகள் மாவீரர் நாளை செய்தன.

இதில் யாரும் "திருமாவளவன் கருணாநிதியின் ஆள், ராஜபக்ஸவை சந்தித்தவர், அவர்களின் மாவீரர் நிகழ்வுக்கு போகாதே" என்று சொல்லவில்லை. அனைத்துக் கட்சியினரும் தமக்கு அருகில் நடக்கின்ற மாவீரர் நிகழ்வுக்குப் போனார்கள்.

எம்முடைய நிலையும் இன்றைக்கு இதுதான். நாமும் தனித் தனி அமைப்புக்களை வைத்திருக்கிறோம். போராட்டத்தின் நகர்வுகள் குறித்து வேறு வேறு சிந்தனைகளை கொண்டிருக்கிறோம். எம்மிடம் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.

இந்த நிலையில் அந்த அந்த அமைப்புக்கள் தனித் தனியாக மாவீரர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை செய்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது?

ஒரு அமைப்பு தன்னுடைய சார்பில் மாவீரர் நிகழ்வை செய்கின்ற பொழுது, அதை தடுப்பவர்களும், அந்த நிகழ்வை சிங்கள அரசுக்கு ஆதரவானது என்று பரப்புரை செய்பவர்களும்தான் உண்மையில் இங்கே பிரச்சனைக்குரியவர்கள்.

எப்படி தமிழ்நாட்டில் பல அமைப்புக்குள் பல இடங்களில் மாவீரர் நிகழ்வுகளை செய்வதை நாம் ஒருமைப்படுத்தி பார்க்கின்றோமோ, அப்படியே புலம்பெயர் நாடுகளிலும் நாம் பார்த்துப் பழக வேண்டும். அதுதூன் இனிமேல் எம்முடைய பலத்தை வெளிப்படுத்தும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து..

விசுகு அண்ணா.. காலத் தேவைக்கு ஏற்ப.. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். குழப்பவாதிகள் தான் குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதுவே அவர்களை இனங்காட்டவும் உதவுகிறது..! விட்டுத்தள்ளுங்க. இவர்கள் தாங்களவே தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் போது... எதற்கு நாம் இவர்களுக்கு இலவச விளம்பரம் செய்ய வேண்டும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு நிலவரம் என்பது வேறு பல்ல லட்சகணக்கான மக்கள் வாழும் மாநிலம் அது ஆனால் நாங்கள் ஒரு கொஞ்ச பேர் தான் ஒற்றுமையா இருக்கலாம் தானே

தாக்குதல் தளபதியும்

புலனாய்வுத் தளபதியும் ஓன்று சேர்ந்தால் எங்களுக்கு தானே பலம்

எம்முடைய நிலையும் இன்றைக்கு இதுதான். நாமும் தனித் தனி அமைப்புக்களை வைத்திருக்கிறோம். போராட்டத்தின் நகர்வுகள் குறித்து வேறு வேறு சிந்தனைகளை கொண்டிருக்கிறோம். எம்மிடம் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.

இந்த நிலையில் அந்த அந்த அமைப்புக்கள் தனித் தனியாக மாவீரர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை செய்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது?

[size=1]

[size=4]தமிழக கட்சிகள் என்ன செய்கின்றன என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள். அதேவேளை பல புலம்பெயர் அமைப்புக்களும் அதே கட்சிகள் போன்று அரசியல் செய்யலாம், செய்யவேண்டும். அது ஆரோக்கியம். [/size][/size]

[size=1]

[size=4]ஆனால், மாவீரர் நிகழ்வு என்பது அரசியலுக்கு அப்பால்பட்டது. [/size][/size]

[size=1]

[size=4]அதில் அனைத்துகட்சிகளும் ஒன்றுபடல் வேண்டும் இதைத்தான் புலம்பெயர் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை மீண்டும் தெளிவாக இந்த முறையும் கூறியுள்ளார்கள். [/size][/size]

தயவுசெய்து

உங்களுக்கான தனிப்பட்ட அரசியல் மற்றும் தொழில் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள மாவீரர்களையோ போராளிகளையோ பாவிப்பதை தவிர்க்கவும்.

எல்லாதிரிகளிலும இதையே எழுதுதை பார்க்கும்போது

இவை மாவீர்கள்மீது அல்லது போராளிகள் மீது கொண்ட அன்புக்காக அல்லாது

யாரையோ வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைவது எழுதுவது போல் தெரிகிறது.

அவர்களுடனான தங்கள் சொந்தசிக்கல்களை அல்லது அரசியல் பழிதீர்த்துப்புக்களை வேறுவழிகளில் முயலுங்கள்.

மாவீரர்களை விட்டுவிடுங்கள்.

நன்றி.

இப்படி சிலர் வஞ்சம் தீர்ப்பதிலே குறியா இருக்குறார்கள். கேட்டால் பிறருக்கு உபதேசம் தனக்கு இல்லையாம்.

நன்றி அகூதா அண்ணா சரியான நேரத்தில் சரியான கருத்தை கூறி யதற்கு என்னிடம் பச்சை வேறு இல்லை

Edited by யாழ்அன்பு

சுண்டல்,

இதில் என்ன புலனாய்வுத் தகவல்? நான் தலைமைச் செயலகம் நடத்திய மாவீரர் தினத்திற்குத்தான் போனேன்.

விசுகு,

நீங்கள் இன்றைய நிலையை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், திராவிட விடுதலைக் கழகம், மதிமுக என்று நிறைய கட்சிகள், அமைப்புகள் மாவீரர் நாளை செய்தன.

இதில் யாரும் "திருமாவளவன் கருணாநிதியின் ஆள், ராஜபக்ஸவை சந்தித்தவர், அவர்களின் மாவீரர் நிகழ்வுக்கு போகாதே" என்று சொல்லவில்லை. அனைத்துக் கட்சியினரும் தமக்கு அருகில் நடக்கின்ற மாவீரர் நிகழ்வுக்குப் போனார்கள்.

எம்முடைய நிலையும் இன்றைக்கு இதுதான். நாமும் தனித் தனி அமைப்புக்களை வைத்திருக்கிறோம். போராட்டத்தின் நகர்வுகள் குறித்து வேறு வேறு சிந்தனைகளை கொண்டிருக்கிறோம். எம்மிடம் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.

இந்த நிலையில் அந்த அந்த அமைப்புக்கள் தனித் தனியாக மாவீரர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை செய்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது?

ஒரு அமைப்பு தன்னுடைய சார்பில் மாவீரர் நிகழ்வை செய்கின்ற பொழுது, அதை தடுப்பவர்களும், அந்த நிகழ்வை சிங்கள அரசுக்கு ஆதரவானது என்று பரப்புரை செய்பவர்களும்தான் உண்மையில் இங்கே பிரச்சனைக்குரியவர்கள்.

எப்படி தமிழ்நாட்டில் பல அமைப்புக்குள் பல இடங்களில் மாவீரர் நிகழ்வுகளை செய்வதை நாம் ஒருமைப்படுத்தி பார்க்கின்றோமோ, அப்படியே புலம்பெயர் நாடுகளிலும் நாம் பார்த்துப் பழக வேண்டும். அதுதூன் இனிமேல் எம்முடைய பலத்தை வெளிப்படுத்தும்.

ஏன் சபேசன் அண்ணா மாவீரர்தினம் மட்டும் தான் செய்யனுமா. இதுவரை இலங்கை அரசிற்கோ இல்லை ஐநாவிட்கோ எதிரா ஒரு கையெழுத்துப் போராட்டமோ வேறு ஏதாவது போராட்டமோ செய்ய மாட்டினம் ஆனால் மாவீரதினத்தில் மட்டும் தான் தங்கள் கொள்கைகளை காட்டுவினமோ நீங்க போன குழுவினர்.?தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே அப்பிடிதான் பிரிந்து நின்று பல போராட்டங்களை நாடாத்துபவர்கள். ஆனால் இங்குள்ள வீரர்கள் மாவீரர்தினம் மட்டும் தான் அதுவும் முள்ளிவைக்காலுக்கு பின் இரண்டாக நடாத்துவார்கள், தமிழ் நாட்டில் ஆறு கோடிப் பேர் இருக்குறார்கள் எத்தினை நாடாதினாலும் போவார்கள். ஈழத்தில் கூட பல இடங்களில் தானே நடந்தது. ஆனால் புலம்பெயர் தேசங்களில் கணிசமான மக்கள் இருப்பதால் ஒன்றாக நடக்கவேண்டும். இல்லை எண்டால் தலைவர் முந்தியே சொல்லி இருப்பார் புலம்பெயர் மக்களே நீங்கள் பத்து பதினைந்து பிரிவாக மாவீரர் தினத்தை செய்து உங்களில் பல பிரிவினர் இருப்பதை உலகிட்கு காட்டுங்கள் என்று. சும்மா இருக்குற டைமிற்கு மக்கள் போராட்டங்களை நடாத்தலாமே இலங்கை அரசிற்கு எதிரா.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் நாளை தன்னுடைய சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதாக நான் நம்புகிறேன். அங்கே போய் என் போன்றவர்கள் நிற்பதன் ஊடாக பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதிகமான பார்வையாளர்கள் வருவதை ஒருங்கிணைப்புக் குழு தமது குறுகிய அரசியல் நலனுக்கு பயன்படுத்தும். தம்மையே புலம்பெயர் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக காட்டுவார்கள். இதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

நாங்கள் பூ வாங்குவது, உணவு வாங்குவது போன்றதன் ஊடாக அவர்களின் வரவாய் அதிகரிக்கும். கடைசிக் கட்டத்தில் சேர்த்த நிதி பற்றிய கேள்விக்கு மக்களிடம் இவர்கள் பதில் சொல்லும் வரைக்கும் மாவீரர் பெயரிலோ, வேறு எந்தப் பெயரிலோ மீண்டும் வருவாய் சேர்ப்பதை நாம் எப்படி அனுமதிக்கலாம்?

ஆகவே இவர்கள் உண்மையாகவே ஜனநாயகப் பண்புகளை உள்வாங்கி சுயவிமர்சனங்களை மேற்கொண்டு, விட்ட தவறுகளை திருத்தி, மற்ற அமைப்புக்களையும் அங்கீகரித்து, துரோகி பட்டங்கள் வழங்குவதையும் கைவிடுகின்ற வரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்களை பலப்படுத்துகின்ற வேலை எதையும் நான் செய்ய மாட்டேன்.

மாவீரர்கள் மீதும் மண் மீதும் நாம் கொண்டிருக்கின்ற பற்றை தமது அரசியலுக்கும் சொந்த வருவாய்க்கும் இவர்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் வரை என் போன்றவர்களினால் இவர்களின் நிகழ்வுகளின் பங்கு பற்ற முடியாது. ஆகவே நாம் மாற்று அமைப்புக்களின் நிகழ்வுகளின் பங்கு கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க நினைக்கிறோம்.

தயவுசெய்து

உங்களுக்கான தனிப்பட்ட அரசியல் மற்றும் தொழில் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள மாவீரர்களையோ போராளிகளையோ பாவிப்பதை தவிர்க்கவும்.

எல்லாதிரிகளிலும இதையே எழுதுதை பார்க்கும்போது

இவை மாவீர்கள்மீது அல்லது போராளிகள் மீது கொண்ட அன்புக்காக அல்லாது

யாரையோ வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைவது எழுதுவது போல் தெரிகிறது.

அவர்களுடனான தங்கள் சொந்தசிக்கல்களை அல்லது அரசியல் பழிதீர்த்துப்புக்களை வேறுவழிகளில் முயலுங்கள்.

மாவீரர்களை விட்டுவிடுங்கள்.

நன்றி.

நீங்கள் முதலில் மற்றவர்களை பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் மற்றவர்கள் தானாக திருந்திவிடுவார்கள் .

நீங்கள் முதலில் மற்றவர்களை பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் மற்றவர்கள் தானாக திருந்திவிடுவார்கள் .

நல்லாய் கடாய் வெட்டுறீங்க
  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைமைச் செயலகம் நடத்திய மாவீரர் தினத்திற்குத்தான் போனேன்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நடவடிக்கைகளை விட தலைமைச் செயலகத்தினரின் நடவடிக்கைகள் உயர்வாக உள்ளன என்பதால் போனீர்களா அல்லது ஒரு தரப்பை எதிர்க்கவேண்டும் என்பதற்காக மற்றைய தரப்பின் செயற்பாடுகளை ஆராயமலேயே போனீர்களா?

பல பிரிவுகளாக மாவீரர் தினம் நடாத்துவது பிடிக்கவில்லையென்ற காரணம் இருந்திருந்தால் வீட்டோடு இருந்திருக்கலாம்.

கிருபன்!

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நடவடிக்கைகள் பிடிக்காமலேயே மற்றைய தரப்பின் நிகழ்வுக்கு போனேன். ஆனால் மற்றத் தரப்பின் நடவடிக்கைகள் உயர்ந்ததா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பட்டறிவின் அடிப்படையில் பல நல்ல சிந்தனைகள் அவர்களிடம் இருப்பதை நான் காண்கிறேன் என்பதே இன்றைய நிலை.

நான் வீட்டில் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எனக்குத்தான் இரு தரப்பும் மாவீரர் நிகழ்வுகளை நடத்துவது பிடித்திருக்கிறதே.

இரண்டு தலைப்பில் ஒன்றையே பேசிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். மிகுதியை மற்றைய தலைப்பில் தொடர்வோம்.

[size=1]

[size=4]பல மேற்குலக நாடுகளில் கூட தமது வீரர்களை கௌரவிக்கும் நாள் வருடத்தில் உள்ளது. கனடாவில் அது கார்த்திகை 11.[/size][/size]

[size=1]

[size=4]பல நிகழ்வுகள் நாடு முழுவதும் நடக்கும். அவை யாவற்றிலும் அந்தந்த தரத்தில் உள்ள ( தேசிய , மாநில மற்றும் மாநகரசபை ) அரசியல் கட்சிகள் எல்லாமே ஒற்றுமையாக கட்சி பேதம் இன்றி கலந்து கொள்வார்கள். [/size][/size]

[size=1]

[size=4]அந்த நாளில் அரசியல் கிடையாது. கட்சிகள் கிடையாது. வணக்கம் ஒன்றுதான். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நடவடிக்கைகளை விட தலைமைச் செயலகத்தினரின் நடவடிக்கைகள் உயர்வாக உள்ளன என்பதால் போனீர்களா அல்லது ஒரு தரப்பை எதிர்க்கவேண்டும் என்பதற்காக மற்றைய தரப்பின் செயற்பாடுகளை ஆராயமலேயே போனீர்களா?

பல பிரிவுகளாக மாவீரர் தினம் நடாத்துவது பிடிக்கவில்லையென்ற காரணம் இருந்திருந்தால் வீட்டோடு இருந்திருக்கலாம்.

தயவுசெய்து

உங்களுக்கான தனிப்பட்ட அரசியல் மற்றும் தொழில் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள மாவீரர்களையோ போராளிகளையோ பாவிப்பதை தவிர்க்கவும்.

எல்லாதிரிகளிலும இதையே எழுதுதை பார்க்கும்போது

இவை மாவீர்கள்மீது அல்லது போராளிகள் மீது கொண்ட அன்புக்காக அல்லாது

யாரையோ வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைவது எழுதுவது போல் தெரிகிறது.

அவர்களுடனான தங்கள் சொந்தசிக்கல்களை அல்லது அரசியல் பழிதீர்த்துப்புக்களை வேறுவழிகளில் முயலுங்கள்.

மாவீரர்களை விட்டுவிடுங்கள்.

நன்றி.

நன்றி கிருபன்

நீங்கள் முதலில் மற்றவர்களை பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் மற்றவர்கள் தானாக திருந்திவிடுவார்கள் .

இங்கே நான்கு விரல்கள் உங்களை சுட்டி நிற்பது அப்படியே தங்களுக்கு பொருந்துகிறது

எனக்கு உபதேசம் செய்ய உங்களை எவர் கூப்பிட்டார்

நீங்கள் எழுதியது உங்களுக்குத்தானே.......???

அதை செய்வீர்களா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் உலாவிய புலியூர் பிரிவு மண்ணில் மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு 2012

1984 தொடக்கம் முதல் புலிகள் உலவிய கொளத்தூர் புலியூர் மண்ணில் திராவிடர் விடுதைலக் கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க தோழர். தா.செ.பழனிசாமி ( கொளத்தூர் மணி அவர்களின் தம்பி) தலைமையில் டி.கே.தேவராசன், தண்டபாணி முன்னிலையில் வீரவணக்க நிகழ்வு தொடங்கியது.

kolathur27112012-5-1024x680.jpg

நிகழ்வில் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், மருத்துவர்கள், குழந்தைகள், ஆசிரியர்கள், கழக தோழர்கள், மாற்று கட்சியினர் உட்பட 700க்கு மேற்பட்டோர் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் மேட்டூர் டி,கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியும், வீதி நாடகக் குழுவின் வீதி நாடகமும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் வந்திருந்த அனைவரினதும் உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக வரவேற்பை பெற்று சிறப்புற அமைந்திருந்தது.

[show as slideshow]

thumbs_kolathur27112012-1.jpg

thumbs_kolathur27112012-10.jpg

thumbs_kolathur27112012-11.jpg

thumbs_kolathur27112012-12.jpg

thumbs_kolathur27112012-13.jpg

thumbs_kolathur27112012-14.jpg

thumbs_kolathur27112012-15.jpg

12

http://www.periyarth...க்கு-நாம்-செலு/

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தமிழக உறவுகளே..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தமிழக உறவுகளே..!

தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.. இணைப்பிற்கு நன்றிகள் நெடுக்ஸ் அண்ணா..

நாங்கள் பூ வாங்குவது, உணவு வாங்குவது போன்றதன் ஊடாக அவர்களின் வரவாய் அதிகரிக்கும். கடைசிக் கட்டத்தில் சேர்த்த நிதி பற்றிய கேள்விக்கு மக்களிடம் இவர்கள் பதில் சொல்லும் வரைக்கும் மாவீரர் பெயரிலோ, வேறு எந்தப் பெயரிலோ மீண்டும் வருவாய் சேர்ப்பதை நாம் எப்படி அனுமதிக்கலாம்?

எல்லா திரிகளிலும் இப்படியான கருத்துகளுக்கு குறைச்சலில்லை. மாவீரர் தினத்துக்கான மண்டப செலவுடன் இதர செலவுகளுக்கு எவ்வளவு காசு முடிந்திருக்கும்? பூக்களையும் கொத்துரொட்டியையும் விற்பதால் அதில் எவ்வளவை பெற்றுக்கொண்டிருக்க முடியும்? கூட்டிக்கழித்து பார்த்தால் அவர்களுக்கு நட்டம் தான் வந்திருக்கும். அதோட பத்தாக்குறைக்கு இப்படியான குற்றச்சாட்டுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய தேவை.

இவற்றையெல்லாம் தாண்டி அவர்கள் மாவீரர் தினத்தை நடத்தியது சிறப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.