Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்லச் சாகும் தமிழ் மொழி.....

Featured Replies

இணையத்தில் தமிழை எவ்வாறு வளர்ப்பது ?

கனடா பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அளிக்கும் விளக்கம்.

 

  • Replies 81
  • Views 6.3k
  • Created
  • Last Reply

இணைப்புக்கு மிக்க நன்றி அலை அக்கா! :)

நம் தமிழின் வாழ்வும்  அழிவும் நம் கையில்தான் உள்ளது.

அதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயற்பட்டால் தமிழ் தழைத்தோங்கும்!

சீனாவின்  முதல் தமிழ் புத்தகம் எழுதியவர் ...

 

China’s first Tamil author looks to build bridges

 

17TH_TAMIL_IN_CHIN_1333433f.jpg



http://www.thehindu.com/news/international/chinas-first-tamil-author-looks-to-build-bridges/article4316604.ece

  • தொடங்கியவர்

கருத்துக்கள் தெரிவித்த, தெரிவிக்கும் எல்லோருக்கும் நன்றிகள் பல!

நாங்களும் எவ்வளவு போராடுறோம் ..என்னவென்று அயலானிடம் சென்று உன் புகழை சொல்லவில்லை சொந்த மண்ணின் மைந்தனுக்கு உன் சிறப்பை சொல்லி தான் போராடுகிறோம் . இருந்தும் என்ன பயன் உடனே ஓர் கேள்வியை முந்திரி கொட்டை தனமாக கேட்கிறான் டுமிழன் .
என்ன தமிழ் பெரிய தமிழ் ...தமிழ் மொழியில் கார் உதிர்பாகங்களுக்கு எல்லாம் பெயர் வைக்க முடியுமா ?. கண்ணினியில் செய்யும் அன்றாட வேலைகளை செய்ய முடியுமா என்று அற்ப கேள்வியை கேட்கிரானுங்க .

 

485993_4269828220775_1735232403_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வரும் சந்ததிக்கு தமிழை பேச எழுத வாசிக்க தெரியும் போது தமிழ் அழிய வாய்ப்பில்லை.எம்மில் தான் அது தங்கி உள்ளது.வீட்டில் தமிழை பேசினாலே தமிழ் குழந்தைகளுக்கு தானாக வந்து விடும்.

தமிழ் பேசும் சீனர்

 

Dr Dubyanskiy Alexander speech in Tamil

 

  • தொடங்கியவர்

இனைப்புக்கு நன்றி அகூதா

தமிழின் தொன்மையும் மாண்பும்

 

மரபை கற்றுக்கொடு, அடையாளத்தை இழக்காதே - கட்டாயம் பாருங்கள்

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=TnWbRFabSrg

நாங்கள் (தமிழர்)  யார் ?

 

தாய்த்தமிழ்ப் பள்ளி ஆவணப்படம்

 

பார்க்கும் போது மனதைப் ஏதோ செய்தது..

 

Edited by uthayam

பார்க்கும் போது மனதைப் ஏதோ செய்தது..

 

உண்மை உதயம்.

எமக்கு என ஒரு நல்ல அரசியல் இருந்தால் மீண்டும் நாம் தலை தூக்கலாம் !

 தமிழையோ தமிழனையோ காப்பாற்ற தலைவர் பிரபாதான் வேண்டும் 

அழகாக தமிழ் பேசும் தமிழ் பெயர்களையும் கொண்ட இளம்  சீனர்கள்

 

http://tamil.cri.cn/121/2013/02/08/Zt1s125317.htm

இணைத்த காணொளி தலைப்பிற்கு வலுச்சோ;க்கிறதா எதிh;க்கிறதா என்று இணைத்த எனக்கே குழப்பமாக இருப்பதால் நீக்கப்படுகிறது...

Edited by Innumoruvan

காணொளியை பார்த்தேன். அப்படியே அப்பட்டமாக புலம்பெயர் தமிழர்கள் பலரின் நிலையை எடுத்துக்காட்டுகிறது.

வெளிநாட்டுக்கு வருபவர்கள் தமிழ் கதைத்தாலும் அவர்கள் அடுத்தடுத்த சந்ததி தமிழ் கதைக்காது. தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அது தாயகத்திலுள்ள தமிழர்களால் மட்டுமே முடியும். ஆனால் அங்கும் திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றங்களை நிகழ்த்துதல், தமிழ் சிங்கள கலப்பு திருமணங்களை செய்து வைத்தல் போன்றவற்றின் மூலம் தமிழை அழித்துக்கொண்டு வருகிறார்கள். எமக்கென்றொரு நாடு இருந்தால் தான் இவற்றை தவிர்க்க முடியும்.

தாயகத்திலும் சில பாடசாலைகளில் ஆங்கில மொழியில் கற்பித்தல் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அது அனைத்து பாடசாலைக்கும் சிறிது சிறிதாக பரவுமானால் அங்கும் பல வருடங்களின் பின் புலம்பெயர் தமிழர்களின் நிலை ஏற்படலாம்.

 

உண்மையைச் சொல்லப் போனால், நிச்சயம் எமது அடுத்ததடுத்த தலைமுறை புலத்தில் தமிழைக் காக்கும் என்பதில் பெரிய நம்பிக்கை கிடையாது. உங்களின், எங்களின் குழந்தைகளுக்குத் தமிழ் தெரியும். ஆனால் அதன் தேவை பற்றி என்ன தெரியும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு ஏன் தமிழ் மொழி பேச வேண்டும் என்பதில் பெரிய தேவை ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தை தமிழைப் பேச வேண்டிய தேவையில்லை. அது தனது அடுத்த தலைமுறைக்குத் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. மொழி என்பது வெறும் ஊடகம். ஆனால் அதை வெறியாகவோ, அடையாளமாகவோ நாங்கள் மாற்றினால் தான் அதைத் தொடர்ந்து காக்க முடியும். மற்றும்படி உங்களின் ஆசைக்காகத் தான் உங்களின் குழந்தை தமிழ் படிக்கின்றது. அவ்வளவு தான். இது உங்களுக்குக் கோபத்தைத் தரலாம். ஆனால் நீங்கள் மொழியின் தேவை பற்றிச் சொல்லி, அவர்களுக்கு அதன் மீது பற்றினை உருவாக்கும் வரைக்கும். நீங்களளே அவதானிப்பீர்கள். இரு குழந்தைகள் இருப்பின், அவர்கள் அந்தந்த நாட்டு மொழியின் தான் கதைத்துக் கொள்வார்கள். ஏன் என்றால் அப்போது அவர்களுக்குத் தமிழ் தேவையே இல்லை... இந்த நிலை தொடர்நதால் தமிழ் மெல்ல அல்ல, அடுத்தடுத்த தலைமுறையில் செத்துவிடும்

 

திரியிலுள்ள கருத்துகளை பார்க்கும் போது தூயவன் அண்ணாவின் இந்த கருத்தை தான் நானும் ஆமோதிக்கிறேன்.

அண்ணா பல்கலைக் கழகம் தொடங்கியுள்ள ஆன்லைன் கணினி அறிவியல் முதுநிலை படிப்பில் சேர விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இன்று மாலை 4.30 மணிக்கு,....

 

  • 2 weeks later...

தமிழ் நெடுங்கணக்கு

 

இரண்டு வருடம் முன்னால் ஒரு வெள்ளைக்காரர் (அவர் பெயர் மறந்து விட்டது) நம் தமிழை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என வந்தார். யாரையோ கேட்டிருக்கிறார் யாராவது அவருக்கு உதவி செய்ய முடியுமா என்று – முன்னால் இம்மாதிரி ‘தமிழ் ஆபத்துதவிப் படை’ வேலைகள் செய்திருந்ததால், அவர்கள் என்னைப் போய் தமிழ் ஐயா என்று காட்டியிருக்கிறார்கள். ஆக, அவருக்கு நான் ஒரு தமிழ் ஐயோ என்று தெரியாத காரணத்தால், பாவம், வசமாக மாட்டிக் கொண்டார்.

 

 

பிரச்சினை என்னவென்றால் எனக்கு இத்தாலியன் என்றால் கிலோ என்ன விலை – அடிப்படையில் ஒரு அழகான க்ராஃபிக்ஸ் டிஸைனரான அவருக்கோ ஆங்கிலம் வராது.


அவருடன் சுமார் மூன்று மணி நேரம் செலவு செய்து மல்லுக்கட்டி அபினயத்துடன், மிகைப்படுத்தப் பட்ட கொனஷ்டை உச்சரிப்புகளுடன் தமிழ் நெடுங்கணக்கைப் பற்றிச் சொன்னேன். எப்படி முடிந்த வரை சரியாக உச்சரிப்பது என்பதற்கான கையேட்டையும், ரெட்ரோஃலெக்ஸிவ், ஃப்ரிக்கெடிவ் என மிகவும் நீர்க்கடித்து, எளிமைப் படுத்தி ஆங்கிலத்தில் கிறுக்கித் தந்தேன். தமிழ் என்பது உலகத்தில் ஒரேஒரு மோனோஸில்லபரி இருக்கும் ஒரேஒரு பாஷை அதுவும் பல்லாயிரம் வருடங்களாகப் புழக்கத்தில் இருக்கும், அற்புதமான பாரம்பரியம் இருக்கும் பழம்பெரும் பாஷை எனவும் பெருமையடித்துக் கொண்டு – தமிழ் பேசும் சூழலில் இருந்தால்தான் உச்சரிப்பு சரியாக வரும் எனவும் போதித்தேன்.

வேலை முடிந்தது. மறந்து விட்டேன்.

 

http://othisaivu.files.wordpress.com/2013/02/tamizhlphabetver2.pdf

 

http://othisaivu.wordpress.com/2013/02/20/post-166/

 

 



இணையத்தில் எனக்கு முடிந்தவரை தேடியதில் இம்மாதிரி அனைத்து (உயிர்மெய் எழுத்துகளுக்கும் கூட) தனித்தனியான  எளிமையான உச்சரிப்புகளுடன் (pronunciation key) கூடிய தமிழ் நெடுங்கணக்கு எனக்கு அகப்படவேயில்லை – அதிசயமாக இருக்கிறது. (அல்லது நான் தான் சரியாகத் தேடவில்லையோ?)

 

A3 காகிதத்தில் (இதில் தான் பிரிதிறன் – ரெஸெல்யூஷன் – அழகாக வருகிறது) அதனை மூன்று வண்ணப் பிரதிகள் எடுத்து, ப்ளாஸ்டிக் லாமினேஷன் செய்து அதை உபயோகிக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்தேன். (ஒரு பிரதிக்கு சுமார் 70 ரூபாய் ஆயிற்று); அவர்களை, இதனை வைத்துக் கொண்டு, சினிமா, ‘ஆழ்ந்த இரங்கல்,’ ‘நன்றி! நன்றி!! நன்றி!!!’

 

சுவரொட்டிகளையும், ஜெயலலிதா, ரங்கசாமி, திருமாவளவன், கருணாநிதி இத்யாதிகளின் (தமிழுக்கு இவர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது!) ஆபாச ஆனால் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களையும் எழுத்துக் கூட்டிப் படிப்பதிலிருந்து ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறேன்.

549824_565742360110685_1049684769_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நிறைய இருக்கே...

 

Try பண்ணு..
Jump பண்ணு..
Enjoy பண்ணு..

Phone பண்ணு..

Turn பண்ணு..

Cook பண்ணு..

Pump பண்ணு..

 

. :lol:

நானும் இந்த பண்ணு தமிழை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. :D

மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்ற வார்த்தைகளை டி வி நீலகண்டசாஸ்திரி சொன்னார். அதையே தமிழ்த்தாய் என்னும் பாடலில், மிகவும் மனவேதனையுடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கூறியுள்ளார். பாடல் முழுவதையும் படித்துப் பாராது எம்மவர் சிலர் பாரதி சொன்னார் எனச் சொல்லியும் எழுதியும் வருவது வேதனைக்குரியதே. அப்பாடலில் நீலகண்டசாஸ்திரியை திட்டுவதற்காகவே அவர் அதைக் குறிப்பிடுகிறார். மீண்டும் ஒருமுறை அப்பாடலை வாசித்துப் பாருங்கள் அதன் உண்மை புரியும். 'என்றந்தப் பேதை உரைத்தான்' என நீலகண்ட சாஸ்திரியைத் திட்டியதோடு, தமிழ்த்தாய் ஆ! எனத்தொடங்கி ......... எமக்குச் சொல்வதாக அவர் சொன்னதையும் படித்துப் பாருங்கள்.

 

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே - அந்த

மேன்மைக் கலைகள் தமிழில் இல்லை

 

சொல்லவுங் கூடுவதில்லை அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை

மெல்லத் தமிழ்இனிச் சாகும் - அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

 

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!

இந்தவசையெனக் கெய்திட லாமோ

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

 

தந்தை அருள் வலியாலும் - இன்று

சார்ந்த புலவர் தவவலியாலும்

இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்

ஏறிப் புவிமிசை யென்றும் இருப்பேன்.

 

நாம் வேற்று மொழியில் உள்ள நல்ல கலை நுட்பங்களை தமிழ்மொழியில் சேர்த்து அதை வளப்படுத்த வேண்டும் என்பதே பாரதியாரின் கனவு. அப்படிச் செய்தால் நீலகண்ட சாஸ்திரி சொன்ன பழிச்சொல் நீங்கி என்றும் பூமியில் தமிழ் நிலைத்திருக்கும், என்றே மகாகவி சொன்னார்.

 

EMAIL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.