Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் கொல்லப்பட்டமை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை

Featured Replies

தென்னாபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அவ்வாறானதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் இன்று சபையில் தெரிவித்தார்.

 

நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கரந்தடிப் படைத்தலைவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீர்வழங்கல், வடிகாலமைப்பு நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=1927

  • கருத்துக்கள உறவுகள்

போரின் முடிவின்போது வேலுப்பிள்ளை ஐயா, பார்வதி அம்மா இருவரும் முகாமில்தான் இருந்தார்கள். டி.என்.ஏ பரிசோதனை செய்ய அப்போது மறந்துவிட்டார்கள். :huh:

  • தொடங்கியவர்

போரின் முடிவின்போது வேலுப்பிள்ளை ஐயா, பார்வதி அம்மா இருவரும் முகாமில்தான் இருந்தார்கள். டி.என்.ஏ பரிசோதனை செய்ய அப்போது மறந்துவிட்டார்கள். :huh:

 

ஒன்றில் மறந்து விட்டார்கள்

இல்லை

மறைத்து விட்டார்கள் !

DNA செய்ததாகத்தான் கூறினார்கள். ஆனால் அது உடலை தகனம் செய்துவிட்டத்தாக கூறிய பின்னர் தான். இதன் உண்மைத் தன்மையை தமிழ் நாட்டு DNA பரிசோதகர்(பெயர் சத்தியமூர்த்தி என்று நினைக்கிறேன்) கேள்விக்குறியாக்கியிருந்தார். அதாவது, உடல் கண்டு பிடிக்கப்பட்டு, 12 மணித்தியாலங்களில் தகனம்செய்யப்பட்ட அந்த நேரம், கோபத்தபயா DNA பரிசோதனை மூலம் உடல் தலைவருடயது என்று நிச்சயிக்கப்பட்ட பின்னர்தான் தகனம் செய்யப்பட்டத்தாக கூறினார். சத்தியமூர்த்தி, தான் இலங்கை அரசின் பாதுகாப்பமைச்சின் DNA ஆலோசகர் என்றும், DNAயை ஆராய ஒருவாரம் வரை எடுக்குமென்றும், அதனால் அறிவிக்கப்பட்ட முடிவில் குழறுபடி இருக்கிறதென்றும் கருத்து கூறியிருந்தார். பொதுவில் இலங்கை அரசின் DNA கதையை யாரும் நம்பவில்லை. மேலும் அதை கோத்தா கூறியபடியால் அது உண்மையாக இருந்தாலும் பலர் அதை சந்தேகிப்பதை தவிர்க்க முடியாது.

Edited by மல்லையூரான்

இவர் டக்கிலசை விட கேவலம் போல கிடக்கு?

இவர் டக்கிலசை விட கேவலம் போல கிடக்கு?

இவர் டக்கிலஸ் சொல்ல முதல் தலைவர் இறந்திருக்க முடியாது என்பது போல் பேசுவதாலும், அர்சுனின் கருத்துப்படி இவர் டக்லஸை விடமோசமனாவராக இருப்பதால் இவர் டக்கிலசுக்கு முன்னோடியாக இருக்கிற சந்தர்ப்பம் இருப்பதாலும், வருங்காலங்களில், விரைவில் டக்கிலஸ், இவரின் மோசத்தனங்களை எட்டிப்பிடித்து, தலைவர் உயிரோடு இருப்பதாக அறிவிப்பார் என்பது அரிச்சுனின் எதிர்வு கூறலாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு யாரவது விளங்கப்படுத்துவீர்களா ?

தலைவர் உண்மையில் இறந்து இருந்தால் சிங்களவன் அவர் உடலை வைத்து ஒரு கண்காட்சியே நடத்தியிருப்பான், செய்திருக்காத பட்சத்தில் அவர் அங்கிருந்து வெளியேறி இருக்கவேண்டும். தவிர இறப்பை சான்று படுத்த பல பொய்களை சொல்லவதை பார்த்திருக்கிறோம். இது கட்டாயம் ராஜபக்ச சகோதரர்களுக்கு தெரிந்து செய்து இருக்க வேண்டும் அப்படியிருக்க எதை வைத்து அவர் இறந்ததை பிடிவாதமாக நிலைநாட்ட துடிக்கிறான்? அவர் திரும்பி வந்தால் அதற்கு பிறகு இவர்களின் அரசியல் செல்லாது போகும் அபாயம் உள்ளது அல்லவா? என்னத்தை வைத்து ராஜபக்சே சகோதரர்கள் , தலைவர் வரமாட்டார் என தமது அரசியல் வாழ்கையை பணயம் வைகிறார்கள்?

  • தொடங்கியவர்

இவர் டக்கிலசை விட கேவலம் போல கிடக்கு?

 

பூபாளத்தில் பாட அடி கிடைத்துள்ளது ?

  • கருத்துக்கள உறவுகள்

பிழைப்புவாத சுயநல அரசியலுக்காக எதையும் யாரும் கூறலாம். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு. ஆனால் மெய்யெனப்படுவதும் மாற்றப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவகாரத்தில் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தனது கருத்தைப் பதிவு செய்ததில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. விஞ்ஞான ரீதியான தகுந்த ஆதாரம் வெளியிடப்படவில்லை. அப்படி ஒன்று வெளியிடப்பட்டாலும்.. அது உண்மையா என்பதை விஞ்ஞானம் தான் ஆராயனும். அப்படி இருக்க.. எது மெய்யெனப்படுகிறது.. அந்த மெய்யை யார் உறுதிப்படுத்துவது.. இப்படி பல கேள்விகள் தொக்கு நிற்கும் நிலையில்.. ஆதாரங்கள் இன்றி..தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத விடயங்களில் ஒன்றாக இதனை வைத்துக் கொள்வதே சிறப்பு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிழைப்புவாத சுயநல அரசியலுக்காக எதையும் யாரும் கூறலாம். எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு. ஆனால் மெய்யெனப்படுவதும் மாற்றப்படுகின்றது.

முடியல்ல

இதில நீங்க என்ன சொல்ல வாரிங்க இருக்காரா இல்லியா?

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல

இதில நீங்க என்ன சொல்ல வாரிங்க இருக்காரா இல்லியா?

 

இருப்பவர்களுக்கு இருக்கின்றார். இல்லாதவர்களுக்கு இல்லை.

 

நான் எதுவும் இல்லாதவன்!

இதில் கமல் கடவுள் விடையத்தில் சொன்னது போல தான் கூறலாம்.

உயிரோடு இருக்கார் என்பது உண்மை எனில் நல்லா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பவர்களுக்கு இருக்கின்றார். இல்லாதவர்களுக்கு இல்லை.

நான் எதுவும் இல்லாதவன்!

நான் எல்லாம் இருப்பவன் !

தலைவர் இருக்கின்றார் உயிருடன் எம் மனதில். தலைவரை மனதில் நிறுத்தி விடுதலைக்காக எல்லோரும் சேர்ந்து உழைப்போம், இம் முறை மாவீரர் தினம் புத்துணர்ச்சியை எம் மக்களிற்கு ஊட்டியுள்ளது.

இருக்கிறாரோ இல்லையோ தெரியாது. ஆனால் யாழில் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இல்லை என்ற கருத்தை கொண்டுவருவது உண்மையை விளக்கவல்ல. மனத்தால் வலிமை இல்லாதாரை பின்னடைய செய்யவே. எனவே தமிழார் உரிமை பெறும் வரையில் இங்கே மாற்றுக்கருத்தில் இல்லை என்போரை எதிர்த்துத்தான் ஆகனும். போராட்டம் முடிய அதன் பின்னரும் திரும்பிவராவிட்டால் அதன் பின்னர் தேடிப் பார்த்து உண்மையை கண்டறியலாம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

 பிரபாகரன் கொல்லப்பட்டமை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை
 

 

பிரபாகரன் கொல்லப்பட்டமை அஞ்ஞான ரீதியிலும் உறுதிப்படுத்தப்படவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

Blackwhite is defined as follows:

“ ...this word has two mutually contradictory meanings. Applied to an opponent, it means the habit of impudently claiming that black is white, in contradiction of the plain facts. Applied to a Party member, it means a loyal willingness to say that black is white when Party discipline demands this. But it means also the ability to believe that black is white, and more, to know that black is white, and to forget that one has ever believed the contrary. This demands a continuous alteration of the past, made possible by the system of thought which really embraces all the rest, and which is known in Newspeak as doublethink. ”
—Orwell, 1984
 

  • தொடங்கியவர்

"We have not been told the truth about Oswald." on JFK murder 
- Whitewash IV, by Harold Weisberg, p. 21.

இருக்கிறாரோ இல்லையோ தெரியாது. ஆனால் யாழில் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இல்லை என்ற கருத்தை கொண்டுவருவது உண்மையை விளக்கவல்ல. மனத்தால் வலிமை இல்லாதாரை பின்னடைய செய்யவே. எனவே தமிழார் உரிமை பெறும் வரையில் இங்கே மாற்றுக்கருத்தில் இல்லை என்போரை எதிர்த்துத்தான் ஆகனும். போராட்டம் முடிய அதன் பின்னரும் திரும்பிவராவிட்டால் அதன் பின்னர் தேடிப் பார்த்து உண்மையை கண்டறியலாம்.

 

  இருக்கார் இல்லை என்ற பிரச்சனையை உருவாக்கி விட்டதே புலம்பெயர் செய்ற்ப்பாட்டாளர்கள் தான்( சுவிஸில் அடிதடிவரை போனதில் இருந்து 2 மாவீரர் நாள் கொண்டாடினது வரை அணைத்தும் புலம்பெயர் செய்ற்ப்பாட்டாளர்களும் அதன் ஆதரவு குழுவும்)

Blackwhite is defined as follows:

“ ...this word has two mutually contradictory meanings. Applied to an opponent, it means the habit of impudently claiming that black is white, in contradiction of the plain facts. Applied to a Party member, it means a loyal willingness to say that black is white when Party discipline demands this. But it means also the ability to believe that black is white, and more, to know that black is white, and to forget that one has ever believed the contrary. This demands a continuous alteration of the past, made possible by the system of thought which really embraces all the rest, and which is known in Newspeak as doublethink. ”

—Orwell, 1984

 

விசையத்திற்குள் இறங்கி நிருபணங்களை வைக்காமல் பச்சை தண்ணியில் பலகாரம் சுடும் தத்துவம் பேசுவதிலோ அல்லது வெறுவாய் சப்புகிறதிலோ,கிருபன் அண்ணாவுக்கு நிகர் அவரேதான்.

யாராருக்காவது, சிறீதரன், அரசு ஆதரங்களை காட்டவில்லை என்று கூறியதற்கோ, அல்லது இந்திய கோடுகள் ரஜீவ்காந்தியின் வழக்கை, ஆவணங்கள் கோட்டில் சமார்க்கப்படவில்லை என்று கூறி தள்ளுபடி செய்ய மறுத்தபோது போது அதற்கு ஆதாரங்களை சிதம்பரம் இலங்கையிடம் கேட்க, இறுதிவரைக்கும் அதை கொடுக்காமல், இறுதியாக கோபத்தபயா இந்தியா சென்று தனிப்பட்ட விளக்கம் மட்டும் சிதம்பரத்திற்கு கொடுத்து சிதம்பரத்தின் வாயை மூடினாரேயல்லாமல் அந்த வழக்கு இன்னமும் மூடப்படாமல் இருக்கு என்பதற்கும், இந்த பந்திக்கும் என்ன தொடர்பென்று விளங்கவைக்க முடியுமாயிருந்தால் நல்லது. அதாவது இந்த பந்தியை இந்திய நீபதிகளுக்கு இது வரையில் ஒருவரும் காப்பி பண்ண அனுப்பவில்லை, இதை அவர்களுக்கு அனுப்பிவிட்டால் தலைவர் இறந்ததற்கு நிரூபணம் கிடைத்துவிட்டதாக கூறி உடனே வழக்கை தள்ளுபடி செய்வார்கள் என்கிறாரா?

தலைவர் இறந்துவிட்டதாக கூறும் கோபத்தபயாவுக்கு அதை நிறுவ வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருக்க, இது வரையில் ஒரு நிரூபணத்தையும் வெளிவிட அக்கறை காட்டாமல் இருக்க, அவர் இறந்து விட்டார் என்று விளங்கப்படுத்திவிட வேண்டும் பிடிவாதம் பிடிப்பது, எந்த வகை மனநிலையை என்பது விளங்காததாக இருக்கிறது. இதில் விவாதிக்க வரும் கிருபன் அண்ணவோ அல்லது, மற்றைய மாற்றுக்கருத்து மாணிக்கங்க்ளோ ஸ்ரீதரனுக்கு பாரளுமன்றத்தில் என்ன பதில் கொடுக்கபட்டிருந்தது, அல்லது ஏதாவது புதிய ஆவணங்கள் அரசிடம் இனித்தன்னும் இருக்கா என்றதை அறிந்து அதை இங்கே கொண்டுவந்து இணைக்க விரும்பவில்லை. தங்களிடம், தலைவரின் முடிவில் கோபத்தபயாவால் கொடுக்க முடியாமல் திண்டாடும் நிரூபணத்தை விட, நல்ல தொரு விளக்கம் இருக்கிறது என்று தங்களுக்குள் தாங்கள் நம்புவது மட்டுமல்ல மற்றையவர்களையும் நம்பவைக்கலாம் என்று நினப்பது புரியாத புதிராக இருக்கிறது.

அரசுக்கு நிச்சயமில்லை தலைவர் இறந்தாரா இல்லையா என்று. 17ம் திகதி போரை முடித்த அரசு 19ம் திகதிவரை மிஞ்சி இருந்தவர்களை எல்லாம் அழித்து, தப்பியவர்களை சோதித்து, பாலசந்திரனை சித்திரைவதை செய்து கொன்று, நடேசன் போன்றவர்களை எல்லாம் சித்திரவதை செய்த்து கொன்றும் தலைவருக்கு என்ன நடந்தது என்ரதை கண்டு பிடிக்கவில்லை. அதன் பின்னர் தலைவர் இறந்தவர்களில் ஒருவராக இறந்துதான் இருக்கவேண்டும் என்ற அனுமானத்தை வைத்து ஒளிப்படங்களை வெளிவிட்டது. பிரேத்தத்தை வைத்திருந்ததாக கூரும் அரசு, பிரேதத்தில் எடுக்கபட்ட தசை இழையங்களை வெளிவிட்டால் சர்வதேச நிறுவனங்கள் தாம் DNA யை சோதித்து உண்மையை உலகிற்கு கூறும். அப்போது நாங்கள் மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் விளக்கவுரைகளில் தங்கி குழம்ப வேண்டியிருக்காது.

தலைவர் இருக்கார் என்பர்கு இலங்கை அரசுக்கு தேவையான ஒன்று.

பிரபாகரன் இல்லை என்றால் அந்த இடத்தை பிடிக்க பலர்(?) முயற்சிகலாம்.

 அல்லது  இல்லை என்றால் அடுத்த வழியை தமிழர்கள் பார்ப்பார்கள் அது   சிங்களவனுக்கு நெருக்குதலாகே இருக்கும்.

இருக்கார் அவர்ர் வந்து  ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் அவர் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவருக்கே  வெளிச்சம் 

 

தலைவர் இருக்கார் என்பர்கு இலங்கை அரசுக்கு தேவையான ஒன்று.

பிரபாகரன் இல்லை என்றால் அந்த இடத்தை பிடிக்க பலர்(?) முயற்சிகலாம்.

 அல்லது  இல்லை என்றால் அடுத்த வழியை தமிழர்கள் பார்ப்பார்கள் அது   சிங்களவனுக்கு நெருக்குதலாகே இருக்கும்.

இருக்கார் அவர்ர் வந்து  ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையில் தமிழர்கள் அவர் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

தலவர் இருக்கிறார் என்பது தனக்கு உதவியாக இருக்கும் என்பதால அரசு இதுவரையில் நிரூபணங்களை பற்றி அக்கறை இல்லாதுபோல் நடந்து கொள்கிறது. அதனாலா அரசு நிரூபிக்க விரும்பாவிட்டாலும் நீங்கள் சிலர் அதை நிரூபித்து அரசை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறீர்கள். நிரூபிக்க முயலாமல் விட்டுவிடுவது தனக்கு நன்மையாக இருக்கும் என்பதையா, சிதமபரம் நிரூபணம் கேட்ட போது கோத்தா அதை கொடுக்காமல் விடுவதற்கான காரணமாக காட்டினார்.

தலைவர் உயிரோடு இருக்கும் போது அவரின் இடத்தை பிடிக்க முயற்சிகள் இருக்கவில்லை என்பதாவாதம்? அரசுடன் சேர்ந்து காட்டிகொடுப்பனவுகளுக்கு தேவை ஒன்றும் இருந்திருக்கவில்லையா?

தமிழருக்குள் இருக்கும் "தலைவர்" போன்ற ஆயிரம் ஆயிரம் தலைவர்கள் தாங்கள் முன்னின்று போராடி தமிழ்ஈழத்தை பெற்றுக்கொள்வதிலும் பார்க்க தலைவருக்கு செய்யும் மரியாதையாக, அவர் உயிரோடு இருப்பதால் அவரரின் இடத்தை பிடித்துவிடக்கூடாது என்ற பெருந்ததன்மை குணத்தால் முன் வந்து போராட மறுக்கிறார்கள் என்பதா விளக்கம்?

புலிகள் இருந்த போது மட்டும் போட்டி போட்ட 32 இயக்கங்களும் இப்போது அவர் வந்து போராடுவார்தனே என்றா ஒதுங்கிவிட்டார்கள். அப்போது எதற்கு புதிதாக சிறிடெலோ அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்படவேண்டியிருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் நடக்கும் ஆர்பாட்டங்களுக்கும் அங்கெல்லாம் தலைவர் வந்து ஆர்ப்பாட்டம் நடத்துவார், நாம் போகவேண்டியதில்லை என்றா இருக்கிறார்கள்.

காட்ட நிரூபணம் இல்லாவிட்டால், நமக்கே விளங்காத, நம்மை நாம் முட்டாள் ஆக்க கூடிய விளக்கங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பது அவ்வளவு அவசியமான செய்லா?

Edited by மல்லையூரான்

சிறிதரனுக்கு மண்டேலா ,அரபாத் எல்லாம் யாரென்று தெரியாது போலகிடக்கு,அதைதான் நான் குறிப்பிட்டிருந்தேன் .மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் பிரதமந்திரி ஆனவர் ,அரபாத் வெள்ளை மாளிகை வரை போனவர் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.