Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட புங்கையூரானுக்கு நன்றி :).
"இதயக்கனி" படத்திலிருந்து... "இன்பமே.. உந்தன் பேர், வள்ளலோ..."

பாடல் வரிகள்: புலமைப்பித்தன்.
இசையமைப்பு: விஸ்வநாதன்.
பாடியவர்கள்: சௌந்தர்ராஜன். & சுசீலா.
நடிப்பு: எம்.ஜி.ஆர். & ராதா சலுஜா.


  • Replies 2.1k
  • Views 179.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தைபிறந்தால்.... வழி பிறக்கும்"(1958) படத்திலிருந்து... "ஆசையே.... அலை மேலே..." என்ற பாடல், இன்றைய பாடலாக ஒலிக்கின்றது.
பாடல் வரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: மகாதேவன்.
பாடியவர்: திருச்சி லோகநாதன்.
நடிகர்: எஸ். எஸ். ராஜேந்திரன்.


எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு, நன்றி சிறி

 

 

இந்த பாட்டின் வரிகளை தேடியபோது சிக்கியது

 

tamil+teacher+picture.jpg

 

ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’ (கற்பனைப் படைப்பு- ச.சுவாமிநாதன்)

புலவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நக்கீரன். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவ பெருமானையே கண்டித்தவன் நான். ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று சிவனையே தட்டிக் கேட்டவன் நான். கவனமாக உண்மையை மட்டும் பேசுங்கள். இன்றைய தலைப்பு:
“ ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை ”:


1.சேக்கிழார்: என் பெயர் சேக்கிழார். நான் முதலில் பேசிவிடுகிறேன். நான் எழுதிய பெரிய புராணத்திலிருந்து ஒரு சில வரிகள்:
அளவு கூட உரைப்பரிதாயினும்
அளவிலாசை துரப்ப அறைகுவேன்
Though impossible to reach its limits
Insatiable love(desire) drives me to the task

2.கம்பன்: என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தில் சேக்கிழார் அய்யா சொன்னதையே சொல்லி இருக்கிறேன்:
ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

3.அப்பர் பெருமான் எழுந்தார். கருவில் இருந்தபோதே எனக்கு ஒரு ஆசை:
“கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றென் உள்ளமும்.........................”

4.என் பெயர் அருணகிரிநாதன். சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தறுதலைக் காலியாகத் திரிந்தேன். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்ய கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகன் அருள் பெற்று திருப்புகழ் பாடினேன். இதோ ஆசை பற்றி:

புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்
பொறை இலாத கோபீகனந்---------- முழு மூடன்
புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி
பொறிகளோடி போய்வீழு------------- மதி சூதன்
நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி
நெறியிலாத வேமாளி—------------- குலபாதன்
நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்
நினயுமாறு நீமேவி---- யருள்வாயே

4444444
சீத தொங்கலழ காவணிந்து மணம்
வீச மங்கையர்கள் ஆட வெண்கரி
சீற கொம்பு குழல் ஊத தண்டிகயில் -------- அந்தமாகச்
சேர்கனம் பெரிய வாழ்வு கொண்டுழலும்
ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ
சேவை கண்டுனது பாத தொண்டன் என------ அன்புதாராய்.
5555555


5.என் பெயர் திருமூலர், ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் மட்டுமா சொன்னார். நானும்தான் பாடி இருக்கிறேன்:
‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனதம் ஆமே’ (திருமந்திரம் 2615)


6.என் பெயர் திருவள்ளுவர். இதே கருத்தை நான் இவருக்கும் முன்னரே சொல்லிவிட்டேன். ஆசை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக பற்று என்ற தூய தமிழ் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன்:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்)


7.என் பெயர் சுப்பிரமணிய பாரதி.இதோ பாருங்கள், நான் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முன்னுரை: “ காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறர்க்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக”.

இது மட்டுமா: நான் பாடிய

“ஆசை முகம் மறந்து போச்சே—இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம்—எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?” என்ற பாடல் மிகவும் கீர்த்தி பெற்றுவிட்டது.

நன்று நன்று, வேறு யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

8.என் பெயர் கண்ணதாசன். நான் ஒரு கவிஞன். திரைப் படங்களுக்கும் பாடல் எழுதுபவன். என் கருத்தையும் சொல்லிவிடுகிறேன்:

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே ஆடிடுவொமே வாழ் நாளிலே
பருவம் என்னும் காற்றிலே, பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர் , சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?


English
With passions as waves
we dance like the boat
in our passage of life
With the wind of youth,
by flying in the chariot of love,
man and woman make merry, enjoy
and surprise themselves
but who can guess tomorrow's path
today itself?

நன்று நன்று. இன்னும் ஒருவர் பேசலாம். அத்தோடு கூட்டம் முடிவடையும்.

9.என் பெயர் வைரமுத்து. என் பாட்டுகளும் தமிழ் கூறு நல்லுலகத்தில் பிரசித்தம். இதோ சாம்பிளுக்கு ஒன்று:
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை.


இன்றைய கூட்டம் இத்தோடு நிறைவடைந்தது. அடுத்த வார தலைப்பு: “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”.
எல்லா புலவர்களும் பலத்த கரகோஷம் செய்தனர். கூட்டம் இனிதே முடிந்தது.

 

 

http://www.tamilbrahmins.com/literature/11268-a.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மூன்று பாடல்களையும் ஒன்றாகக் கேட்டேன். அருமை சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்! தத்துவப் பாடல்!

 

அதுவும் நல்லாத் தான் இருக்கு, தமிழ் சிறி! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட.... வந்தியத்தேவன், சுமோ, புங்கையூரானுக்கு நன்றி :).
"பார்த்தால் பசி தீரும்" படத்திலிருந்து, "கொடி அசைந்ததும்... காற்று வந்ததா..."

பாடல் வரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர்கள்: சுசீலா & சௌந்தர்ராஜன்.
ந‌டிப்பு: சிவாஜி க‌ணேச‌ன் & -----


 

  • கருத்துக்கள உறவுகள்

"பார்த்தால் பசி தீரும்" படத்திலிருந்து, "கொடி அசைந்ததும்... காற்று வந்ததா..."

பாடல் வரிகள்: கண்ணதாசன்.

இசையமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன்.

பாடியவர்கள்: சுசீலா & சௌந்தர்ராஜன்.

ந‌டிப்பு: சிவாஜி க‌ணேச‌ன் & -----

 

ஹலோ லொள்ளு சிறி, இதென்ன ----- வெறும் புள்ளி குத்தியுள்ளீர்கள்? 'பைங்கிளி'யை மறைத்தால், உங்களுக்கு செம்புள்ளி குத்திவிடுவோம், கவனம்! :wub:

 

  • கருத்துக்கள உறவுகள்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?

மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?

தாளம் வந்ததும் பாடல் வந்ததா?

பாவம் வந்ததும் ராகம் வந்ததா?

பாவம் வந்ததும் ராகம் வந்ததா?

ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?

காட்சி வந்ததும் கண் திறந்ததா?

பருவம் வந்ததும் ஆசை வந்ததா?

ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?

வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?

பெண்மை என்பதான் நாணம் வந்ததா?

பெண்மை என்பதால் நாணம் வந்ததா?

நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்

பாடி வந்ததும் பார்க்க வந்ததும்

காதல் என்பதா? பாசம் என்பதா?

கருணை என்பதா? உரிமை என்பதா?

(கொடி..)

இந்தப் பாடலில் கவிஞரின் கற்பனை, கரையுடைத்துப் பாய்கின்றது!

 

திரும்பத் திரும்பக் கேட்கும் போதும், தெவிட்டாத பாடல்! :D  

எத்தனை தா? வயசுக்கு வந்ததால்தான் இவ்வளவும் வந்தது, நன்றி பாடலுக்கு சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ லொள்ளு சிறி, இதென்ன ----- வெறும் புள்ளி குத்தியுள்ளீர்கள்? 'பைங்கிளி'யை மறைத்தால், உங்களுக்கு செம்புள்ளி குத்திவிடுவோம், கவனம்! :wub:

 

 

நடிகையின் பெயர் சரியாகத் தெரியவில்லை வன்னியன். கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியா அவர். :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

நடிகையின் பெயர் சரியாகத் தெரியவில்லை வன்னியன். கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியா அவர். :rolleyes:  :D

 

அவரேதான் இவர். ஆனாலும் அவரின் பெயர் மட்டும்தான் தெரியவில்லையா???அல்லது அவரைப் பார்த்தும் யார் என்று தெரியவில்லையா  சிறி ?? எதுக்கும் கண்வைத்தியரிடம் ஒருக்காப் போங்கோ. :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட.... ராஜவன்னியன், புங்கையூரான், வந்தியத்தேவன், சுமோவுக்கு நன்றி :).
"கொடிமலர்"(1966)படத்திலிருந்து, "மௌனமே... பார்வையால்.... ஒரு, பாட்டுப் பாட வேண்டும்"

பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: P.B. ஸ்ரீநிவாஸ்
நடிப்பு: முத்துராமன் & விஜயகுமாரி.

 

http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த, சுமோவுக்கு நன்றி :).
இன்றைய பாடலாக..... "ஹரிதாஸ்" (1944) படத்திலிருந்து,"மன்மத லீலையை வென்றார் உண்டோ?...."
1944-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியான இத்திரைப்படம், சென்னையில் பிராட்வே தியேட்டரில் மட்டும்.... மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடி, ஒரு உலகச் சாதனையைப் படைத்தது :rolleyes:.

பாட‌ல் வ‌ரிக‌ள்: பாபநாசம் சிவன்.
இசையமைப்பு: ஜி. ராமநாதன்.
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்.
ந‌டிகர்கள்: எம்.கே. தியாகராஜ பாகவதர் & டி.ஆர்.ராஜகுமாரி.


 

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை இருத்தி எழுப்புது, இந்தப் பாடல்! :D

 

நன்றிகள், தமிழ்சிறி!

ஆளை இருத்தி எழுப்புது, இந்தப் பாடல்! :D

 

நன்றிகள், தமிழ்சிறி!

 

எந்தாளை? :D

 

அருமையான பாட்டு சிறி, நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி.

 

 

 

ஆளை இருத்தி எழுப்புது, இந்தப் பாடல்! :D

 

கூட்டிக் கழிச்சுப் பாத்தா எல்லா ஆண்களும்......... :D :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய‌ பாடலைக் கேட்டு, சிரிக்க வைக்கும் கருத்தை... எழுதிய‌ புங்கையூரானுக்கும் :D, அதனை... விளங்கிக் கொண்ட பிறகும், தெரியாத மாதிரி கேள்வி கேட்ட வந்தியத்தேவனுக்கும் :lol:, எழுத வந்ததை... அரைவாசியில் நிற்பாட்டி விட்டு, சிரித்த சுமோவுக்கும் :icon_idea:  நன்றிகள். :) 
"அகத்தியர்" படத்திலிருந்து... "தாயிற் சிறந்த கோவிலுமில்லை" இன்றைய பாடலாக ஒலிக்கின்றது.

பாடியவர்: ... கலா.
இசையமைப்பு: குன்னக்குடி வைத்தியநாதன்.


  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் அந்தக்காலத்துக்குச் சரி. இப்போது பல பல பெற்றோர்க்குப் பொருந்தாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடலை ரசித்த, சுமோவுக்கு நன்றி :).

இன்றைய பாடலாக..... "ஹரிதாஸ்" (1944) படத்திலிருந்து,"மன்மத லீலையை வென்றார் உண்டோ?...."

1944-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியான இத்திரைப்படம், சென்னையில் பிராட்வே தியேட்டரில் மட்டும்.... மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடி, ஒரு உலகச் சாதனையைப் படைத்தது :rolleyes:.

பாட‌ல் வ‌ரிக‌ள்: பாபநாசம் சிவன்.

இசையமைப்பு: ஜி. ராமநாதன்.

பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்.

ந‌டிகர்கள்: எம்.கே. தியாகராஜ பாகவதர் & டி.ஆர்.ராஜகுமாரி.

 

வணக்கம் சிறித்தம்பியர்! உந்தப்பாட்டு அந்தக்காலத்திலை பிளையிங் கிஸ்சுக்கு  பேர்போன பாட்டெல்லே :wub:  :wub:  :wub: ....பேந்தப்பேந்த முழிக்கிறவையள் வீடியோவிலை 3.13 நிமிசம் வரேக்கை கவனிச்சு பாருங்கோ.........நம்ம பொண்டுகள் அப்பவே விவரமானவையள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறித்தம்பியர்! உந்தப்பாட்டு அந்தக்காலத்திலை பிளையிங் கிஸ்சுக்கு  பேர்போன பாட்டெல்லே :wub:  :wub:  :wub: ....பேந்தப்பேந்த முழிக்கிறவையள் வீடியோவிலை 3.13 நிமிசம் வரேக்கை கவனிச்சு பாருங்கோ.........நம்ம பொண்டுகள் அப்பவே விவரமானவையள் :D

 

குமாரசாமி அண்ணா, அந்த ஃபிளையிங் கிஸ் கொடுத்த, நடிகை ராஜகுமாரி இலங்கைப் பெண் என, கேள்விப் பட்டுள்ளேன்.

முதன் முதலாக... கோடம்பாக்கத்து சினிமாவில், கதாநாயகிவும் நடித்தது ராஜகுமாரி தான், என நினைக்கின்றேன்.

 

அந்தக் கிஸ்ஸை, இப்ப நாங்கள் குடுத்தால்... காலம் கெட்டுப் போச்சாம்... எண்டு சனம், அழுகுதுகள். Why? :rolleyes:  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த, சுமோவுக்கு நன்றி :).

இன்றைய பாடலாக..... "ஹரிதாஸ்" (1944) படத்திலிருந்து,"மன்மத லீலையை வென்றார் உண்டோ?...."

1944-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி வெளியான இத்திரைப்படம், சென்னையில் பிராட்வே தியேட்டரில் மட்டும்.... மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடி, ஒரு உலகச் சாதனையைப் படைத்தது :rolleyes:.

பாட‌ல் வ‌ரிக‌ள்: பாபநாசம் சிவன்.

இசையமைப்பு: ஜி. ராமநாதன்.

பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்.

ந‌டிகர்கள்: எம்.கே. தியாகராஜ பாகவதர் & டி.ஆர்.ராஜகுமாரி.

 

 

பாடல் அருமை.தியாகராஜ பாகவதர் பற்றி ஒரு கொசுறு தகவல்: ஒரு முறை பாடல் ஒலிப்பதிவுக்காக தியாகராஜ பாகவதர் அழைக்கப்பட்டிருந்தார்.இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் எல்லோரும் பாடலை ஒலிப்பதிவு செய்ய தயார் படுத்திக்கொண்டிருந்தார்கள். நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.ஆனால் பாகவதரை காணவில்லை.எல்லோரும் தலையை சொறிந்த வண்ணம் இன்று ஒலிப்பதிவு நடக்குமா என எண்ணீக்கொண்டிருக்கையில் பாகவதர் மிதிவண்டி ஒன்றில் வேர்க்க விறுவிறுக்க சரி நேரத்துக்கு வந்தடைந்தார்.எல்லோரும் காருக்கு என்ன நடந்தது என கேட்ட போது வாகன விபத்தொன்று வழியில் நடந்து விட்டதால் என்னால் தொடர்ந்து காரில் பயணம் செய்து நேரத்துக்கு வர முடியாது என தெரிந்தவுடன் மிதிவண்டி ஒன்றை இரவல் பெற்றுக்கொண்டு வந்தேன் என கூறி வியர்வையை  துடைத்த வண்ணம் ஒலிப்பதிவை தொடங்கலாமே என்றாராம்.அவரின் வெற்றிக்கு பின் நேரத்துக்கு சமூகமளித்தல் மிக மிக முக்கியமானது.(தகவல்: இணைய வானொலி 105.9 fm)

 

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்சிறியின் விருப்பத்துக்கு இணங்க
 
பாடல்:தேவன் வந்தாண்டி
படம்:உத்தமன்
இசை:கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்:ரி.எம்.சௌந்தர்ராஜன் & பி.சுசிலா
 
  • கருத்துக்கள உறவுகள்

இளமையில் பூங்கொடி மாதிரி இருக்கும் நடிகைகள் எல்லாம் கொஞ்ச நாட்களில்,தேங்காய் மரத்தின் அடிமரம் மாதிரி, ஏன் தான் மாறி விடுகின்றார்களோ? :o

 

திருமணம் முடிந்ததும் தங்கள் உடலைக் கவனிக்காத பெண்களின் இந்த மனப்பான்மை எதிர் காலத்திலாவது மாறவேண்டும்!

 

வழக்கம் போல, பாட்டு அருமை, தமிழ் சிறி!

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி.



இளமையில் பூங்கொடி மாதிரி இருக்கும் நடிகைகள் எல்லாம் கொஞ்ச நாட்களில்,தேங்காய் மரத்தின் அடிமரம் மாதிரி, ஏன் தான் மாறி விடுகின்றார்களோ? :o

 

திருமணம் முடிந்ததும் தங்கள் உடலைக் கவனிக்காத பெண்களின் இந்த மனப்பான்மை எதிர் காலத்திலாவது மாறவேண்டும்!

 

வழக்கம் போல, பாட்டு அருமை, தமிழ் சிறி!

 

பெண்கள் உங்களைப் போல் ஒரு வேலை செய்துகொண்டு சும்மா இருப்பதில்லை. நீங்கள் பெண்களிடம் எல்லா அலுவல்களையும் தள்ளிவிட்டு நின்மதியாக இருப்பீர்கள். அதனால் பெண்கள் பேரப்பிள்ளையின் அலுவல் கூடப் பாக்கவேண்டும் என்றால் எப்படித் தன உடலைக் கவனிப்பது??? தன்னைக் கவனிக்க அவர்களுக்கும் நேரம் இருந்தால் கடைசிவரை அவர்களும் கொடியிடையுடன் இருக்கலாம்தான்.  இருக்கிறார்களே என்று நீங்கள் கூறலாம் அது அந்தக் கடவுள் செய்யும் ஓரவஞ்சனை. :D
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.