Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரிதி அண்ணன் கொலையும் சிறகடிக்கும் கற்பனைக் குதிரைகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

horse.jpg?w=470

குதிரைக்கு

கொம்பு முளைத்த காலமிருந்து

கற்பனைக் குதிரைகளின்

இனப்பெருக்கத்திற்கும்

குறைவில்லை..!

களத்தில் அன்று

ஒரு லங்காபுவத்..!

கடல் கடந்த

தேசங்களில் இன்று

எல்லாமே அதுவாய்…!

இல்லாத…

பிரபா அணி

கிட்டு அணி

சண்டை..!

இருந்த…

கிட்டு மீது பொட்டு தாக்கு

பொட்டு மீது மாத்தையா தாக்கு

மாத்தையா மீது யோகி தாக்கு

யோகி மீது கரடி தாக்கு…..

இப்படியே திண்ணைப் பேச்சில்

பொழுது கழித்த கூட்டம்

புலம்பெயர்ந்து மட்டும்

திருந்தவா போகுது..??!

இறுதியில்…

சூசை மகன் மீது

பிரபா தாக்கு

பிரபா மீது

சூசை கடுப்பு…

அன்ரன் மீது

பிரபா விசனம்

விசனம் மீது

பிரபா கொலைவெறி…

போராட்டம்

நெடுகிலும்

எம்மவரின்

கற்பனைக் குதிரைகளின்

தடாலடி

ஓட்டப் போட்டிகளுக்கும்

குறைச்சலில்லை…!

எதிரியோடு

துரோகிகளும்

மாற்றுக்கருத்து லயங்களும்

திட்டமிட்டு

திறந்துவிட்ட குதிரைகளும்

அவை கக்கிவிட்ட

லத்திகளுக்கும்

வதந்திகளுக்கும்

குறைவேயில்லை..!

இன்று அவை

பரிதி அண்ணன் சாவிலும்

பரிதவிப்பு ஏதும் இன்றி..

குதிரைக் குட்டிகளாய் அன்றி

பட்டி தொட்டி எங்கும்

புலனாய்களாய்

பெருகும் நிலை..!

சந்து பொந்தெங்கும்

அவற்றின் ஊளையிடல்..!

உண்மைக்கும் அங்கே

உறங்கு நிலை..!

சனமோ…

நிஜம் எது

நிழல் எது

சிந்திக்க முதல்

சங்கதிகள்

மாயையில்

வீழ்த்தப்படுகின்றன…!

எதிரிகளின்

திட்டங்கள்

சுலபமாய்

வெல்ல வைக்கப்படுகின்றன…!

சொந்த இனம்

துவண்டு வீழ்ந்தாலும்

சொத்துக் கணக்கு பார்க்கும் கூட்டம்

அடுத்தவன் சொத்தில்

தான் தின்றமை அறியார்..!

தம்

சொந்தத் தோள்களிருந்தும்

அழுக்குப்பட்ட சால்வைகள்

வீழ்வது கூட தாங்கார்..!

Edited by nedukkalapoovan

கவிதை ஒன்றும் பெரிதாக விளங்கவில்லை  :wub: 

ஆனால் ஒற்றுமை அவசியம் என்பது விளங்கியிருக்கின்றது  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பகாலத்தில் பரப்பிவிடப்பட்ட வதந்திகளை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிகள் நெடுக்ஸ்.. :D

நன்றி நெடுக்ஸ் அண்ணா, கற்பனை குதிரை யாழில் மட்டுமல்ல முகநூலிலும் சிறகடிக்கிறது. :D

பச்சை இல்லை. பின்னர் போடுகிறேன். :)

சமகாலத்தில் விழிப்புணர்வு கொண்டுவரும் கவிதை மிக அருமை.

புலம்பெயர் தேசங்களில் சொகுசாக வாழும்  முகவரி இழந்த மனிதர்களுக்கு இந்த கற்பனைக் குதிரைகளே இப்பொழுது முகவரி கொடுக்கிறது. அதனால் பல கற்பனைகள் அள்ளி விடப்படும் நாம் தான் இதுகளை அவதானமாக உள் வாங்க வேண்டும். பலரது வேசங்கள் புதிய கூட்டுக்கள் மூலம் இப்பதான் கலைய தொடக்கி உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் எவ்வளவு புழுகுவார்கள் என்று.   வர வர புலத்துக் கருணாக்கள் புழுத்து விட்டார்கள்.

 எனவே நன்றிகள் நெடுக்ஸ் உங்கள் கவிதைக்கு தங்கள் நேரமின்மை காலத்திலும் இனம் காக்க கவிதை வடித்ததட்கு.

முதலில் மனதில் உள்ளதை அப்படியே நேரடியாக எழுதினேன் ...........பறந்துவிட்டது .....................

இப்போ மனதில் உள்ளதை டீசெண்டாக எழுதுகிறேன் ................................ஒரு விடுதலைபோராட்டத்தை விற்போர் ,அல்லது காட்டிக்கொடுப்போர் ,அல்லது துரோகிகள் என்னும் பதத்திற்குள் உள்ளடக்கப்படுவோர் , அல்லது இவை அனைத்தையும் நியாயப்படுத்துமுகமாக மாற்றுகருத்து மாணிக்கங்கள் எனப்படுவோர் எனது பார்வையில் குதிரை கொள்ளை உணவாக உண்டு அது சிறுகுடல் பெருகுடல் வழியாய் உள்சென்று சமிபாடு அடைந்து அதன்பின் தனது மலவாயில் மூலம் வெளிவரும் கழிவைப்போன்றதற்கு சமனாகும் ....................

நன்றிகள் நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

horse.jpg?w=470

குதிரைக்கு

கொம்பு முளைத்த காலமிருந்து

கற்பனைக் குதிரைகளின்

இனப்பெருக்கத்திற்கும்

குறைவில்லை..!

களத்தில் அன்று

ஒரு லங்காபுவத்..!

கடல் கடந்த

தேசங்களில் இன்று

எல்லாமே அதுவாய்…!

இல்லாத…

பிரபா அணி

கிட்டு அணி

சண்டை..!

இருந்த…

கிட்டு மீது பொட்டு தாக்கு

பொட்டு மீது மாத்தையா தாக்கு

மாத்தையா மீது யோகி தாக்கு

யோகி மீது கரடி தாக்கு…..

இப்படியே திண்ணைப் பேச்சில்

பொழுது கழித்த கூட்டம்

புலம்பெயர்ந்து மட்டும்

திருந்தவா போகுது..??!

இறுதியில்…

சூசை மகன் மீது

பிரபா தாக்கு

பிரபா மீது

சூசை கடுப்பு…

அன்ரன் மீது

பிரபா விசனம்

விசனம் மீது

பிரபா கொலைவெறி…

போராட்டம்

நெடுகிலும்

எம்மவரின்

கற்பனைக் குதிரைகளின்

தடாலடி

ஓட்டப் போட்டிகளுக்கும்

குறைச்சலில்லை…!

எதிரியோடு

துரோகிகளும்

மாற்றுக்கருத்து லயங்களும்

திட்டமிட்டு

திறந்துவிட்ட குதிரைகளும்

அவை கக்கிவிட்ட

லத்திகளுக்கும்

வதந்திகளுக்கும்

குறைவேயில்லை..!

இன்று அவை

பரிதி அண்ணன் சாவிலும்

பரிதவிப்பு ஏதும் இன்றி..

குதிரைக் குட்டிகளாய் அன்றி

பட்டி தொட்டி எங்கும்

புலனாய்களாய்

பெருகும் நிலை..!

சந்து பொந்தெங்கும்

அவற்றின் ஊளையிடல்..!

உண்மைக்கும் அங்கே

உறங்கு நிலை..!

சனமோ…

நிஜம் எது

நிழல் எது

சிந்திக்க முதல்

சங்கதிகள்

மாயையில்

வீழ்த்தப்படுகின்றன…!

எதிரிகளின்

திட்டங்கள்

சுலபமாய்

வெல்ல வைக்கப்படுகின்றன…!

சொந்த இனம்

துவண்டு வீழ்ந்தாலும்

சொத்துக் கணக்கு பார்க்கும் கூட்டம்

அடுத்தவன் சொத்தில்

தான் திண்டமை அறியார்..!

தம்

சொந்தத் தோள்களிருந்தும்

அழுக்கப்பட்ட சால்வைகள்

வீழ்வது கூட தாங்கார்..!

ஏன் புலியை நேசிப்பவர்கள் அல்லது தாங்கள் மட்டும் தான்
புலியையும்,தேசியத்தையும் நேசிக்கிறோம் என சொல்பவர்கள் எந்தவித கற்பனையோ,வதந்தியையோ பரப்பவில்லையா?
 
யாழில் இருக்கும் கொஞ்ச பேருக்கு தேசியத்திற்காக உழைத்தவர்கள் சாகும் போகும் தான் இப்படி ஒருத்தர் இருந்தார்கள்,இன்ன செய்தார்கள் என்பது தெரிந்த மாதிரி ஞாபகத்திற்கு வந்து கவிதை வடிப்பார்கள்...எனக்கு எல்லாம் இப்படி போலிக் கவிதை வடிக்க தெரியலேயே :(
 
இந்தக் கவிதையே ஒரு பொய் :lol:ஏதோ தேசியத்தை நேசிக்கும் அனைவரும் ஒரு குடைக்குள் உள்ளது போலவும்,மாற்றுக் கருத்தளாராலும்,சிங்கள் எதிரியாலும் தான் பிரச்சனை என்று கவிதை சொல்லுது...ஜயோ,ஜயோ
 
Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நெடுக்கு கவிதைக்கு

பருதியண்ணாவின் குடும்பம் அரச வீட்டுக்கு பதிந்து அதற்காக காத்திருக்கிறது

சிலர் அவரது இழப்புக்கு பின் அவரது குடும்பத்துக்கு சில  உதவிகளை  செய்ய  முன் வந்தபோது

அந்த அம்மா சொன்னது

நானும எனது பிள்ளையும் வெளிநாட்டிலிருக்கின்றோம்

உழைத்து சாப்பிடுவோம்

ஏதாவது செய்வதாயின் வன்னி  மக்களுக்கு செய்யுங்கள்

அதுவே பருதி  அண்ணாவுக்கு நீங்கள் செய்யும் சாந்தியாக அமையும் என.

சொத்துக்களை  எடுத்தவர்கள் என்ற பட்டம்.............???

பணம் பருதியண்ணாவிடம்  இல்லை.

அப்போ...........??? :(  :(  :(

எனக்கு இப்பொழுதெல்லாம் நாம் பழகும் கூட்டம் மனித கூட்டம் தானா என ஐயம் வருகிறது. :(

எனக்கு இப்பொழுதெல்லாம் நாம் பழகும் கூட்டம் மனித கூட்டம் தானா என ஐயம் வருகிறது.

  • தொடங்கியவர்

அவர்களுக்கு மட்டுமல்ல.. ஏன் உங்களுக்கும் இருக்குதே... வரிகளை முழுமையா வாசியுங்கோ.. உணர்ச்சி வசப்பட முதல்..! :lol:

இப்படியே திண்ணைப் பேச்சில்

பொழுது கழித்த கூட்டம்

புலம்பெயர்ந்து மட்டும்

திருந்தவா போகுது..??!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நெடுக்கு கவிதைக்கு

பருதியண்ணாவின் குடும்பம் அரச வீட்டுக்கு பதிந்து அதற்காக காத்திருக்கிறது

சிலர் அவரது இழப்புக்கு பின் அவரது குடும்பத்துக்கு சில  உதவிகளை  செய்ய  முன் வந்தபோது

அந்த அம்மா சொன்னது

நானும எனது பிள்ளையும் வெளிநாட்டிலிருக்கின்றோம்

உழைத்து சாப்பிடுவோம்

ஏதாவது செய்வதாயின் வன்னி  மக்களுக்கு செய்யுங்கள்

அதுவே பருதி  அண்ணாவுக்கு நீங்கள் செய்யும் சாந்தியாக அமையும் என.

சொத்துக்களை  எடுத்தவர்கள் என்ற பட்டம்.............???

பணம் பருதியண்ணாவிடம்  இல்லை.

அப்போ...........??? :(  :(  :(

எனக்கு இப்பொழுதெல்லாம் நாம் பழகும் கூட்டம் மனித கூட்டம் தானா என ஐயம் வருகிறது. :(

அண்ணா.. உங்களைப் போன்றவர்கள் உண்மைகள் ஆதாரங்களோடு கொண்டு வர வேண்டும். பரிதி அண்ணாவின் குடும்பத்தினருடனா உரையாடலை உரை நடையில் என்றாலும் பதியுங்கள்.

அப்போது தான் சோடிப்புகளுடன் வரும் சந்தர்ப்பவாதிகளின் கருத்துக்களை நிராகரிக்க மக்களுக்கு துணிவு வரும். இன்றேல் மக்கள்.. அதுவும் சரியா இருக்குமோ.. இதுவும் சரியா இருக்குமோ என்ற எண்ண ஓட்டத்தில் கிடப்பார்கள். இதனால் துன்பப்படுவது.. பாவம் தங்களை தாய் மண்ணுக்கு ஆகுதியாக்கிய அந்த தன்னலமற்றவர்களும் அவர்கள் சார்ந்தவர்களுமே..!

விடுப்புக் கதைக்கிற கூட்டம் கதைச்சிக்கிட்டு.. ஊரை விட்டு ஓடி தன் பிழைப்பை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கும். சுயநலக் கூட்டத்தை அவ்வளவு இலகுவாக பொது நலக் கூட்டம் ஆக்க முடியாது. அதனையும் தாண்டி நாங்கள் செயற்படன்னுன்னா அதுகளின்ர வாயை அடைக்கனும்..! அதற்கு ஆதாரங்களை மக்கள் முன் மாற்றாக்கி வைக்கனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

செய்பவர்கள் சொல்வதில்லை 

எமது பணி  தொடரும்............ :icon_idea:

புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணமே இப்படி உசுப்பேத்தல் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணமே இப்படி உசுப்பேத்தல் தான்.

அந்தக் காரணங்களைக் கொஞ்சம் விலாவாரியா எடுத்துவிடுங்களன்..!

எல்லாரும் ஒற்றை வரியில காரணம் என்று சொல்லிட்டுப் போறீங்கள். ஆனால் காரணங்கள் என்னவோ.. ஜியோ பாலிரிக்ஸிலும்.. காட்டிக்கொடிப்பிலும் தான் அதிகம் கிடக்கிறதாத் தெரியுது.

உங்கட இஸ்டத்துக்கு எழுதிறது எல்லாம் காரணம் என்றால்.. அவற்றை புலிகள் இலகுவாகவே சமாளித்திருப்பார்கள்.

புலிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மயங்கிற ஆக்களில்லை என்பதை அவர்கள் பலமுறை காட்டிவிட்டார்கள். நீங்கள் சிலர் அதனை இன்னும் புரியாமல்.

மேலும்.. புலி அழிஞ்சிட்டதா எதிரியை விட நீங்களே அதிகம் உச்சரிக்கிறீர்கள். இதே நீங்கள் புலிகள் காலத்தில் போலி தேசியவாதியாக இங்கு வலம் வந்ததையும் நாங்கள் அறிவோம்..! உங்களை விட குழப்பவாதிகளால் குழப்பமடையும் சாதாரண மக்கள் எவ்வளவோ மேல். :lol:

இதில் ஒரு உசுப்பேத்தலும் இல்லை. போராட்டம் நெடுகிலும் எவ்வாறு வதந்திகள் உலகம் எம்மை ஆக்கிரமித்து நின்றன.. அவற்றை யார் யார் வழிநடத்தினார்கள்.. அதன் தொடர்ச்சியே இன்றும் நீள்கின்றன என்பதைச் சொல்லுதே தவிர.. இதில் உசுப்பேத்தல் இருப்பதாக உணர்வது.. உணர்வுத் தவறே அன்றி.. வரிகளின் தவறல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பொழுதெல்லாம் நாம் பழகும் கூட்டம் மனித கூட்டம் தானா என ஐயம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் கருத்துக்கு'''''' You, sathiri, I.V.Sasi and 1 other like this நெடுக்ஸின் கவிதைக்கு'''' You, SUNDHAL, akootha and 6 others like this இரு குழுக்கள் யாழில் .....நான் இரண்டுக்கும் பச்சை...... :D :D :D

 இரண்டு குழுக்கள் என பார்ப்பது தவறு. 

 இரண்டு வேறு கொள்கைகள் / கருத்துக்கள் என பார்க்கலாம், அது ஆரோக்கியமானது  :D

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ரதியின் கருத்துக்கு'''''' You, sathiri, I.V.Sasi and 1 other like this நெடுக்ஸின் கவிதைக்கு'''' You, SUNDHAL, akootha and 6 others like this இரு குழுக்கள் யாழில் .....நான் இரண்டுக்கும் பச்சை...... :D :D :D

 இக்கருத்துடன் எனக்கும் உடன்பாடில்லை புத்து.

நாங்கள் கருத்துக்களின் அடிப்படையில்.. யாரையும் தனிப்பட்ட முறையில் பகைவர்களாகவோ.. துரோகிகளாகவோ நோக்குவதில்லை. அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களில் உள்ள நியாய அநியாயங்களே.. கருத்தாக்கங்கள் தொடர்பில் இரு வேறு நிலைப்பாடுகளை எடுக்கச் செய்கின்றன. எங்கள் எண்ணங்களை அக்கருத்துக்கள் தொடர்பில் பதியச் செய்கின்றன.

எம்மில் ஆயிரம் எழுத்தாளர்கள் இருக்கின்ற போதும்.. ஏன் எம்மால் இன்னொரு சிவராமையோ.. பாலகுமாரையோ உருவாக்க முடியல்ல... காரணம்.. தேடல் அற்ற.. ஆழமற்ற.. ஆதாரமற்ற கற்பனைகளை எழுத்துக்களில் அள்ளிக்குவிப்பதால் ஆகும்..!

கருத்துக்களத்தில் ஒரு பொதுப்பண்புடன் நடக்கத்தவறிய அல்லது கருத்துச் சொல்லத் தவறிய ஒரு சில கருத்தாளர்களோடு அவர்கள் அந்தப் பண்பை வளர்த்துக் கொண்டு பக்குவப்படும் வரை கருத்துரைப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதற்காக நாங்கள் அவர்களை தனிப்பட்ட முறையில் வெறுக்கிறோம் என்பதல்ல அர்த்தம்..! :)

யாழில் இருக்கும் கொஞ்ச பேருக்கு தேசியத்திற்காக உழைத்தவர்கள் சாகும் போகும் தான் இப்படி ஒருத்தர் இருந்தார்கள்,இன்ன செய்தார்கள் என்பது தெரிந்த மாதிரி ஞாபகத்திற்கு வந்து கவிதை வடிப்பார்கள்...எனக்கு எல்லாம் இப்படி போலிக் கவிதை வடிக்க தெரியலேயே :(

பரிதி அண்ணா என்று ஒருவர் இருந்தார், அவர் இன்ன இன்ன செய்தார் என்று இந்த கவிதை ஏதும் சொல்லவில்லையே. மாறாக அன்று தொடக்கம் இன்றுவரை வதந்தியை உண்மை போல் உரைத்தமை பற்றியும் அதில் இறுதியாக பலியானது பரிதி அண்ணா என்ற வகையிலும் தானே கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

பரிதி அண்ணா உயிருடன் இருந்த போது அவர் மேல் குற்றச்சாட்டு வைத்து கட்டுரை எழுதாதவர்கள் எல்லாம் இறந்த பின்னர் அவர் மேல் பலவாறு பழிசுமத்தி கட்டுரை எழுதுகிறார்கள். அதை எல்லாம் கேட்க மாட்டீர்கள்.

ஒருவர் இறந்த பின் அவர் மேல் பழி போடும் போது இறந்தவர் பற்றிய உண்மை நிலையை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயமும் பலருக்கு உள்ளது. அதில் தவறை காண்பது என்பது மிகப்பெரும் தவறு. அதை போலி கவிதை என்று முத்திரை குத்துவது உங்கள் சுயநலம்.

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பரிதி அண்ணா உயிருடன் இருந்த போது அவர் மேல் குற்றச்சாட்டு வைத்து கட்டுரை எழுதாதவர்கள் எல்லாம் இறந்த பின்னர் அவர் மேல் பலவாறு பழிசுமத்தி கட்டுரை எழுதுகிறார்கள். அதை எல்லாம் கேட்க மாட்டீர்கள்.

 இதைப் போய் ரதி அக்கா படித்து... அவா அதனை விளங்கி.. கருத்தெழுதிறது எண்டது.. ம்ம்ம்ம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பரிதி அண்ணா என்று ஒருவர் இருந்தார், அவர் இன்ன இன்ன செய்தார் என்று இந்த கவிதை ஏதும் சொல்லவில்லையே. மாறாக அன்று தொடக்கம் இன்றுவரை வதந்தியை உண்மை போல் உரைத்தமை பற்றியும் அதில் இறுதியாக பலியானது பரிதி அண்ணா என்ற வகையிலும் தானே கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

பரிதி அண்ணா உயிருடன் இருந்த போது அவர் மேல் குற்றச்சாட்டு வைத்து கட்டுரை எழுதாதவர்கள் எல்லாம் இறந்த பின்னர் அவர் மேல் பலவாறு பழிசுமத்தி கட்டுரை எழுதுகிறார்கள். அதை எல்லாம் கேட்க மாட்டீர்கள்.

ஒருவர் இறந்த பின் அவர் மேல் பழி போடும் போது இறந்தவர் பற்றிய உண்மை நிலையை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயமும் பலருக்கு உள்ளது. அதில் தவறை காண்பது என்பது மிகப்பெரும் தவறு. அதை போலி கவிதை என்று முத்திரை குத்துவது உங்கள் சுயநலம்.

உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று கருத்தெழுதும் ஆட்களுக்கு நான் பதில் கருத்து எழுதி எனது நேர‌த்தை வீணாக்குவதில்லை என நினைத்திருந்தேன் ஆனாலும் இந்த பதில் நெடுக்கருக்கும் சேர்த்து...முதலில் நான் எழுதினதை முழுமையாக வாசிக்கவும் அரை குறையாய் வாசிச்சு போட்டு,அதில் கொஞ்ச‌த்தை கொண்டு வந்து போட்டு விட்டு அதற்கொரு விளக்கம் தர‌ வேண்டாம்.
 
நெடுக்கரின்ட‌ கவிதைக்கு நீங்கள் விளக்கம் கொடுக்கிறீங்கள் நீங்கள் ஏதோ அவரோடு சேர்ந்திருந்து கவிதை எழுதின மாதிரி...நீங்கள் சொன்ன விளக்கத்தை மனதில் வைத்து தான் நெடுக்கர் கவிதை எழுதியிருந்தால் நான் கேள்வி கேட்ட உட‌னே இந்த பதிலை நெடுக்கர் எனக்கு எழுதியிருப்பார்...பாவம் நெடுக்கர் தக்க சமயத்தில் வந்து அவருக்கு உதவியிருக்கிறீங்கள்.ஆனால் இதை அவர் எனக்கு பதில் எழுத முதல் எழுதியிருந்தால் அவர் கஸ்ட‌ப்பட்டு திண்ணையில் எந்நேர‌மும் நிற்கும் உங்கள போல ஆட்களையும் சேர்த்து தான் எழுதினேன் என பதில் எழுதியிருக்க மாட்டார்.
 
//
பரிதி அண்ணா உயிருடன் இருந்த போது அவர் மேல் குற்றச்சாட்டு வைத்து கட்டுரை எழுதாதவர்கள் எல்லாம் இறந்த பின்னர் அவர் மேல் பலவாறு பழிசுமத்தி கட்டுரை எழுதுகிறார்கள். அதை எல்லாம் கேட்க மாட்டீர்கள்.//
 
ஓ இந்தக் கவிதையில் இப்படி சொல்லப்பட்டு இருக்குதா? எனக்கு தமிழறிவு இல்லவே இல்லை ஆனால் நான் கேள்வி கேட்ட உட‌னே நெடுக்கர் இந்தப் பதிலை சொல்லியிருக்கலாம்[எப்படி எழுதுவார் நீங்கள் சொல்கின்ற மாதிரி உண்மையிலேயே நினைச்சு கவிதை எழுதியிருந்தால் கட்டாயம் எழுதியிருப்பார்.]...எனக்கு எது பிழை என்று படுதோ அதை நேரடியாய் சாஸ்திரி என்டில்லை யாரிட்டையும் கேட்கின்ற தைரியம் எனக்கு இருக்கு...எனக்குத் தெரியும் எது சரி/பிழை? எதை கேட்க வேண்டும் என்று...இந்த உசுப்பேத்திற வேலையெல்லாம் என்னோட வைத்திருக்க வேண்டாம்
 
//
ஒருவர் இறந்த பின் அவர் மேல் பழி போடும் போது இறந்தவர் பற்றிய உண்மை நிலையை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயமும் பலருக்கு உள்ளது. அதில் தவறை காண்பது என்பது மிகப்பெரும் தவறு. அதை போலி கவிதை என்று முத்திரை குத்துவது உங்கள் சுயநலம்.//
 
இந்த கவிதையில் எங்கே பரிதியின் உண்மை நிலையை தெளிவுபடுத்தி நெடுக்கர் எழுதியிருக்கிறார் என சொன்னால் நல்லது[நீங்களே மேலே சொல்லி இருக்கிறீங்கள் நெடுக்கர் பரிதியை விமர்சித்து கவிதை எழுதவில்லை என்று]...ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றிக் பிழையாக கதைக்க கூடாது அது தானே உங்கட‌ வாதம் சரி ட‌க்லஸ் எப்ப மண்டையை போடுவார் என பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அவர் செத்த பிறகாவது நீங்கள் அவரைப் பற்றி கூடாமல் கதைக்கிறீர்களோ என பார்க்கத் தான்
 
பருதி உயிரோடு இருக்கும் போது அவரைப் பற்றி புகழ்ந்து நெடுக்ஸ் கவிதை எழுதியிருக்கலாம் ஆள் எப்ப மண்டையைப் போடும் என பார்த்திட்டு இருந்து கவிதை எழுதுன மாதிரி இருக்குது...அடுத்தது நெடியவனோ,தனமோ தெரியாது ஆனால் நெடுக்ஸ் இப்பவே இவர்களை பற்றி தெரிஞ்சிட்டு கவிதை வடிக்கிறது நல்லம்...பிறகு எதாவது நட‌ந்த பிறகு சாஸ்திரி கட்டுரை எழுத அதற்கு போட்டியாய் நெடுக்கர் தனக்கு அவர்களை தெரியும் என்ட‌ மாதிரி கவிதை எழுதுறதை விட்டு இப்பவே எல்லாத்திற்கும் ஆயத்தமாய் இருக்கிறது நல்லது...அல்லது சாஸ்திரி கட்டுரை எழுதினால் தான் அதற்கு பதிலாய் நெடுக்கர் கவிதை எழுதுவாரோ தெரியாது...சாஸ்திரி எதாவது எழுதினால் அது பிழை என்டால் போய் நேர‌டியாய் அந்த திரியில் எழுத தைரியமில்லை...ஏதோ ஒன்டை நினைச்சு நெடுக்கர் கவிதை எழுதப் போக அதற்கு விளக்கம் கொடுக்க இன்னொரு காரியதரிசி
 
இதற்கு மேலும் இந்த திரியில் வந்து எழுதி இந்த திரியை வளர்த்துவேன் என எதிர் பார்க்க வேண்டாம் நன்றி வணக்கம்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா..  இந்தக் கவிதை தொடர்பான உங்கள் அடிப்படைப் பார்வையே தவறு. இது பரிதி அண்ணா புகழ்பாடும் கவிதையோ அல்லது நினைவஞ்சலிக் கவிதையோ அல்ல... என்ற அடிப்படையை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

இக் கவிதை எமது போராட்டமும் வதந்திகளும் ஒட்டிப்பிறந்தவை.. என்ற கோணத்தில்.. அதனை செய்பவர்கள் யார் என்பதையும் இனங்காட்டி.. அது மக்களில் செய்யும் செல்வாக்கு.. என்ன என்பதையும் இனங்காட்டி.. அதன் தொடர்ச்சி பரிதி அண்ணாவின் இழப்பில் கூட துன்பத்திற்கு பதில் கற்பனாவாதம் செய்வதையும் கூறி மக்களிடம் அதனை இட்டு  ஒரு விழிப்புணர்வு வேண்டி.. இதனை ஆக்கியுள்ளோம்.

பரிதி அண்ணாவின் படுகொலை பற்றி உலகின் ஒரு வல்லரசு புலன்விசாரணை (அரபாத்தின் மரணத்தைக் கூட அவர்கள் இன்று விசாரிக்கிறார்கள்..) செய்து கொண்டிருக்கும் தருணத்தில்.. ஆதாரமற்ற சில்லறைத்தனமான வதந்திகளுக்கு பதில் எழுத வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கலாம் எமக்கில்லை. எமது நோக்கம் வதந்திகள் குறித்து மக்களை எச்சரிப்பது மட்டுமே. அதனை யார் பரப்புவதாக இருந்தாலும் இது அவர்களை எல்லாம் கண்டிக்கும்.. இனங்காட்டும்.

உங்களுக்கு வரிகளை சரியாகப் படிச்சு விளங்க முடியவில்லை என்பதற்காக பொழிப்புரை எழுதிக் கொண்டிருக்க எனக்கு நீண்ட காலம் தேவை. அதனை எப்போதும் செய்து கொண்டிருக்க முடியாது.

மேலும்.. துளசி வரிகளை சரியாகவே உள்வாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவரின் கருத்தை வரவேற்கிறேன். நீங்களும் பொறுமையாக இருந்து வாசித்து உணர்ந்து.. உங்கள் கருத்தைச்  சொல்லலாமே..?! :lol:

யாழ் கள ( ஊர்த் திண்ணைப் பேச்சையல்ல :lol: ) திண்ணையில் நடக்கும் பிரச்சனைகள் ஏன் இதற்குள்..??! நீங்கள் துளசியை எப்போதுமே திண்ணைப் பிரச்சனையை வைச்சு மட்டம் தட்டுவது சரியான செயலோ நாகரிமான கருத்தியல் முறையோ அல்ல..! இந்தத் தலைப்பையும் அதற்குப் பாவிப்பத்தை வருத்தத்தோடு நோக்குகிறேன்.

தயவுசெய்து.. உங்களுக்குள்ளே உள்ள தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை தலைப்புக்களில் தேவையற்ற கருத்துக்களாக உதிர்ப்பதை தவிருங்கள். அது கள நிர்வாகத்திற்கும் உறவுகளிற்கும் நல்ல காரியம் செய்வதாக அமைவதோடு உங்களுக்கும் மன அமைதி கிட்ட வகை செய்யும்..! :)

Edited by nedukkalapoovan

//
பரிதி அண்ணா உயிருடன் இருந்த போது அவர் மேல் குற்றச்சாட்டு வைத்து கட்டுரை எழுதாதவர்கள் எல்லாம் இறந்த பின்னர் அவர் மேல் பலவாறு பழிசுமத்தி கட்டுரை எழுதுகிறார்கள். அதை எல்லாம் கேட்க மாட்டீர்கள்.//
 
ஓ இந்தக் கவிதையில் இப்படி சொல்லப்பட்டு இருக்குதா? எனக்கு தமிழறிவு இல்லவே இல்லை ஆனால் நான் கேள்வி கேட்ட உட‌னே நெடுக்கர் இந்தப் பதிலை சொல்லியிருக்கலாம்[எப்படி எழுதுவார் நீங்கள் சொல்கின்ற மாதிரி உண்மையிலேயே நினைச்சு கவிதை எழுதியிருந்தால் கட்டாயம் எழுதியிருப்பார்.]...எனக்கு எது பிழை என்று படுதோ அதை நேரடியாய் சாஸ்திரி என்டில்லை யாரிட்டையும் கேட்கின்ற தைரியம் எனக்கு இருக்கு...எனக்குத் தெரியும் எது சரி/பிழை? எதை கேட்க வேண்டும் என்று...இந்த உசுப்பேத்திற வேலையெல்லாம் என்னோட வைத்திருக்க வேண்டாம்
 
அல்லது சாஸ்திரி கட்டுரை எழுதினால் தான் அதற்கு பதிலாய் நெடுக்கர் கவிதை எழுதுவாரோ தெரியாது...சாஸ்திரி எதாவது எழுதினால் அது பிழை என்டால் போய் நேர‌டியாய் அந்த திரியில் எழுத தைரியமில்லை...ஏதோ ஒன்டை நினைச்சு நெடுக்கர் கவிதை எழுதப் போக அதற்கு விளக்கம் கொடுக்க இன்னொரு காரியதரிசி
 
இதற்கு மேலும் இந்த திரியில் வந்து எழுதி இந்த திரியை வளர்த்துவேன் என எதிர் பார்க்க வேண்டாம் நன்றி வணக்கம்
 
துளசிக்கு சாத்திரியிடம் துணிவாக கேட்கும் தைரியம் இல்லை. இவர் அவரோடு சம்பந்தப்பட்டவர் அல்லது இவரை அவர் இனங்கண்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.பல இடங்களில் இவர் சாஸ்த்திரியை கூல் பண்ணி சமாளிச்சு எழுதுவதை கண்டிருக்கிரன்.இப்படி மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் விலாங்குமீன் போல இவர் யாழ்களத்தில் இழுபடுவதை பார்க்கும்போது நான் சில இடங்களில் மனதுக்குள் சிரித்திருக்கிறன்.ஈந்த வித்துவத்தில் இவர் உங்களைபார்த்து அதை கேட்கவில்லை இதைக்கேட்கவில்லை,அவரிடம் கேட்கவில்லை இவரிடம் கேட்கவில்லை என்று எழுதுவதைப்பார்க்க மீண்டும் சிரிப்பை வரவைக்கிற வேலையாக தெரியுது. :lol:  :icon_idea:

திண்ணையில் நடக்கும் பிரச்சனைகள் ஏன் இதற்குள்..??! நீங்கள் எப்போதுமே திண்ணைப் பிரச்சனையை வைச்சு மட்டம் தட்டுவது சரியான செயலோ நாகரிமான கருத்தியல் முறையோ அல்ல..! இந்தத் தலைப்பையும் அதற்குப் பாவிப்பத்தை வருத்தத்தோடு நோக்குகிறேன்.

தயவுசெய்து.. உங்களுக்குள்ளே உள்ள தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை தலைப்புக்களில் தேவையற்ற கருத்துக்களாக உதிர்ப்பதை தவிருங்கள். அது கள நிர்வாகத்திற்கும் உறவுகளிற்கும் நல்ல காரியம் செய்வதாக அமைவதோடு உங்களுக்கும் மன அமைதி கிட்ட வகை செய்யும்..! :)

இதை அப்படியே துளசிக்கும் அனுப்பிவிடுங்கள். :)

Edited by வண்டுமுருகன்

1) நெடுக்கரின்ட‌ கவிதைக்கு நீங்கள் விளக்கம் கொடுக்கிறீங்கள் நீங்கள் ஏதோ அவரோடு சேர்ந்திருந்து கவிதை எழுதின மாதிரி...நீங்கள் சொன்ன விளக்கத்தை மனதில் வைத்து தான் நெடுக்கர் கவிதை எழுதியிருந்தால் நான் கேள்வி கேட்ட உட‌னே இந்த பதிலை நெடுக்கர் எனக்கு எழுதியிருப்பார்...பாவம் நெடுக்கர் தக்க சமயத்தில் வந்து அவருக்கு உதவியிருக்கிறீங்கள்.ஆனால் இதை அவர் எனக்கு பதில் எழுத முதல் எழுதியிருந்தால் அவர் கஸ்ட‌ப்பட்டு திண்ணையில் எந்நேர‌மும் நிற்கும் உங்கள போல ஆட்களையும் சேர்த்து தான் எழுதினேன் என பதில் எழுதியிருக்க மாட்டார்.
நீங்க கேள்வி கேட்டா உடனே பதில் சொல்லுவதற்கு நெடுக்கர் என்ன யாழிலா வேலை பார்க்குறார்?  அவருக்கு எப்ப நேரம் இருக்கோ அப்ப தான் பதில் சொல்லுவார்.  துளசி திண்ணையில் நிண்டாலும் இனம் சார்ந்த வேலை திட்டங்களை அகூதா அண்ணாவுடன் இணைந்து நிறைய செய்யுறா. வேறு சிலர் போல புளிப்பு கதை பேசவில்லை. புலி வாந்தி எடுக்கவில்லை 
 
2)ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றிக் பிழையாக கதைக்க கூடாது அது தானே உங்கட‌ வாதம் சரி ட‌க்லஸ் எப்ப மண்டையை போடுவார் என பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அவர் செத்த பிறகாவது நீங்கள் அவரைப் பற்றி கூடாமல் கதைக்கிறீர்களோ என பார்க்கத் தான்
டக்ளசும் பருதி அண்ணாவும் உங்களுக்கு ஒண்டா தெரியலாம். ஆனால் எங்களுக்கு டக்லஸ் ஒரு சாக்கடை  பருதி அண்ணா ஒரு புனித நதி. டக்லஸ் சிலவேளை உங்களுக்கு ரொம்ப உயர்வானவரோ தெரியாது.
 
3)அடுத்தது நெடியவனோ,தனமோ தெரியாது ஆனால் நெடுக்ஸ் இப்பவே இவர்களை பற்றி தெரிஞ்சிட்டு கவிதை வடிக்கிறது நல்லம்...பிறகு எதாவது நட‌ந்த பிறகு சாஸ்திரி கட்டுரை எழுத அதற்கு போட்டியாய் நெடுக்கர் தனக்கு அவர்களை தெரியும் என்ட‌ மாதிரி கவிதை எழுதுறதை விட்டு இப்பவே எல்லாத்திற்கும் ஆயத்தமாய் இருக்கிறது நல்லது
கடவுள் இவர் தான் என்று ஒருவருக்கும் கூறவில்லை சிலவேளை நீங்களோ இல்லை டக்ளசோ தெரியாது எதுக்கும் உங்க கதையும் சொல்லுங்கோ நாங்க கவிதை வடிக்க உதவியா இருக்கும் 
  • கருத்துக்கள உறவுகள்

பரிதி அண்ணா France இல் அமைப்பை பலப்படுத்தியார்களில் ஒருவர் அதுவும் விசு அண்ணா அவரின் குடும்பம் சிலர் செய்ய வந்த உதவிகளை மறுத்த பொழுது எண்கள் உள்ளத்தில் எல்லாம் உயர்ந்து நிற்கின்றார்கள் பரிதி அண்ணா சுற்றி சுழண்டு அமைப்பை பலமான முறையில் பிரான்ஸ் இல் வைய்ஹ்திருக்க உதவிய ஒரு தூண்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.