Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது– விக்கிலீக்ஸ்- தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கியது– விக்கிலீக்ஸ்- தமிழாக்கம் குளோபல் தமிழ்ச்செய்திகள்
27 டிசம்பர் 2012
 
Rajiv_CI.jpg

 

1988ம் ஆண்டில் இந்திய அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு 580 மில்லியன் இந்திய ரூபாவினை உதவியாக வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய இலங்கை உடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பினை ஈடு செய்யும் நோக்கில் இவ்வாறு இந்திய மத்திய அரசாங்கம் மாதாந்தம் ஐந்து மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது.

 

1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால், வொஷிங்டனுக்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

ஜூலை மாத இறுதியில் பணம் கொடுக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இடைக்கால நிர்வாக சபையில் இணைந்து கொள்வதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்தே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.

 

Rajiv%20Praba1.jpg

 

இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாக புலிகளின் பேச்சாளர் ஒருவர் இந்தியாவில் வைத்து குறிப்பிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

விக்கிலீக்ஸ் தமிழிலில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86968/language/ta-IN/article.aspx

  • Replies 69
  • Views 3.9k
  • Created
  • Last Reply

எது எவ்வாறாயினும் ரஜிவ் காலத்தில் றோவின் ஆசியுடன் இலங்கை தமிழர் மத்தியில்  கிட்டத்தட்ட 22 வெவ்வேறு இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.இதனை முன்னோடியாக இந்திய அரசுதான் செய்தது.இதற்கான காரணத்தை தலைவர் ஒருவரே புரிந்து வைத்திருந்தார்.எங்கள் கட்டுப்பாட்டை மீறினால் அடிபட்டே தமிழினம் அழிய வேண்டும்,இதுதான் ரஜீவின் கொள்கை வகுப்பு

இந்திய அரசு 37 இயக்கங்களை வளர்த்தது,பின்னர் அவர்களுக்குள் அடிபட சொன்னது அப்ப நாங்கள் விரல் சூப்பி கொண்டிருந்தம்.

 

புலிகளும் ஈரோசும் காசை வேண்டியது அனைவரும் அறிந்த விடயம் தான் .

 

நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

மாலைதீவு வள்ளக்கதை இதில் இங்கே வந்து சேர்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய அரசு 37 இயக்கங்களை வளர்த்தது,பின்னர் அவர்களுக்குள் அடிபட சொன்னது அப்ப நாங்கள் விரல் சூப்பி கொண்டிருந்தம்.

 

புலிகளும் ஈரோசும் காசை வேண்டியது அனைவரும் அறிந்த விடயம் தான் .

 

நியானி: ஒரு வரி தணிக்கை

 

பொட்கொவில்லில்  எடுத்த ஆயுதங்களின் பெரும்தொகை டேலோவிட்கே கொடுத்தார்கள். எனக்கு சரியாக ஞாபகம் இல்லை (சாத்ரியாருக்கு தெரிய வாய்ப்பிருக்கும்) புலிகளுக்கு 15 வரையான ஏகே கொடுத்திருக்க வேண்டும் ஆனால் புலிகளுக்க் முதன் முதலில்  ஆர் பி ஜி  ராக்கெட் லோஞ்சர் ஒன்றை கொடுத்தார்கள். அதை குபரப்பா புலேந்திரன் அவர்களுடன் சயனட் அடித்த அப்பதுல்லா வைத்திருந்தார்.

இந்திய அரசு புலிகளுக்கு காசு கொடுத்ததாக புலிகள் ஒரு போதும் சொல்லவில்லை.
 
நீங்கள் எழுதியது பழைய கதை. 
1988ஆம் ஆண்டு  ராஜீவ் காசு கொடுத்தார் என்பதுதான் வில்லங்கமான விடயம். இந்த கால பகுதியில்தான் சிக்மெட் இரண்டு தாக்குதால் இந்திய படைகளால் அலம்பில் காட்டில் முன்னெடுக்க  பட்டுகொண்டிருன்தது. வடக்கு  கிழக்கு மாகான சபை தேர்தலுக்கு முன்பு புலிகளின் தலைமையின் கதையை முடித்து விட வேண்டும் என்பது அவர்களுடைய இலக்காக இருந்தது.
 
இந்தியா எல்லோரையும் அடிபட விட்டதாக இப்போது எழுதும் நீங்கள் .............. புலிகள் மேல் தவறாமல் வாந்தியெடுக்கும் நேரம் . இதை லாபகமாக மறைத்து  விடுகிறீர்கள். உண்மைகளை எழுதலாம் அல்லது வாந்தி எடுக்கலாம். இரண்டையும் செய்ய முடியாது. 
அதற்காக நாம் உண்மைகளையே எழுதுகிறோம் என்று சொல்ல முடியாது. எதோ ஒரு சொர்சின்  அல்லது மூன்றாம் தரப்பின்  கதைகளைத்தான் நாமும் எழுதுகிறோம். அந்த சொர்சும்  மூன்றாம் தரப்பும் எவ்ளவு உண்மையானவை என்பதை பொறுத்ததே எமது கருத்துக்களின் உண்மைகளும். நாம் எதையும் நேரில்  இருந்து பார்த்துவிட்டு எழுதவில்லை. 

கவுண்டமணி ஒரு படத்தில் சொன்னது போல ஆமியில் ரொட்டி சுட்டவனேல்லாம் ஆமியில் இருந்ததென்று சொல்வது போல்தான் இங்கு பலர் .

ஈரோஸ்காரன் அந்த பணத்தில் தமிழ் நாட்டில் இறால் பண்ணை தொடங்கியது  வேறு கதை .

பண்டுரிட்டி ராமசந்திரனிடம் கேட்டால் எல்லாம் தெரியும் .ராஜபக்சாவிடமும் அதுதான் செய்ய பார்த்தார்கள் ஆனால் அந்தாளுக்கு அவர்களின் வரலாறு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு தூக்கிப் போட்டது ஜஸ்ட்... 500 மில்லியன் என்றால் (அதையும் அவர்கள் எடுக்கல்ல.. அதுவும் அந்த இந்திய அரசின் துரோகத்தை எதிர்த்து இந்திய இராணுவத்தை எதிர்க்கவே பயன்பட்டிருக்கும்).. ராஜீவின் பொம்மை.. மாகாண சபையை ஏற்று.. சிறீலங்கா சிங்கள அரசியல் தேசிய நீரோட்டத்தில் நுழைந்த மற்றவைக்கு எவ்வளவு கிடைச்சிருக்கும். அத்தோட.. ராஜீவுக்கும் ஜே ஆர் உக்கும் எவ்வளவு கிடைச்சிருக்கும்..??!

 

மொத்தத்தில் காசைக் கொடுத்தும் புலிகளை மட்டும் விலைக்கு வாங்க முடியல்ல. மற்ற எல்லாரும் விலை போயிட்டினம். இப்ப வந்து... அங்க பார் புலி வாங்கி இருக்குது.. என்று ஏளனம் பேசுவது தான் வேடிக்கை. தாங்கள் வாங்கினதிற்கு கணக்கும் இல்ல.. அது எங்க போனது என்பதற்கு முகவரியும் இல்ல..! :):icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்தது  கொஞ்சம்

கடலிலும்  மாலைதீவுக்குள்ளும் வைத்து எடுத்தது வட்டியுடன்....

 

நான் நினைக்கிறேன் MGR கொடுத்ததையும் கணக்கு பார்கிறாங்கள் போல இருக்கு...
UP ட்ரெயினிங் , அந்த ட்ரெயினிங், எல்ல்லாத்துக்குமான கணக்கு வழக்குமா இருக்கும்..



இல்லைனா புலிக்கு கொடுத்தோம்னு சொல்லி ராஜீவ் ஆட்டையை போட்டுட்டானா?
அதாலே தான் தனக்குதானே குண்டு வைச்சு செத்து போய் எங்களையும் நாசமாக்கினானா ?

பணத்தால் புலிகளை கட்டுப்படுத்தவும்,
அது முடியாமல் போக,
ஆயுதத்தால் வெல்லவும்,
அதுவும் முடியாமல் போக,

 

 தமிழினத்தை அழித்தது
கிந்திய வல்லரசு  <_<

 

397758_364924000269836_1616247112_n.jpg

Edited by akootha

யாழ்களத்துக்கும் வரவர பயம் வந்து விட்டது போல?

 

மேல  பலபேர் தனிநபர்தாக்குதல் தான் செய்கிறார்கள் ஆனால்  நிலானி  கருத்தை நீக்கவும் இல்லை தூக்கவுமில்லை.

ஏன் எனில்  அடிக்கடி தமிழ்த்தேசியவாதிகளின் கருத்தை தூக்க போனால்   இழப்பு யாழ்களத்துக்கு தான். :lol::D

 

காசுவிடையத்தில் புலிகள் பிணத்தின் வாயைவிட மோசமானவர்கள் என்பது நாடாறிந்த உண்மை.............

 

 

 

மற்ற இயக்கங்களை ஒட்டுக் குழு என்று ஏன் கூறுகிறார்கள்?

 

இந்தியாவுடன் சேர்ந்து   புலிகளை எதிர்த்தார்கள்?

 

இலங்கை அரசுடன் சேர்ந்து  புலிகளை எதிர்த்தார்கள்?

 

 

 

அப்படி என்றால் புலிகளும்  ஒட்டுக்குழுகள் போன்ற மனோநிலையில் இருந்து தங்கள் இருப்புக்காக மாறி மாறி ஓடியவர்கள் தான்.

 

 

இலங்கை அரசை எதிர்த்து போராடியபோது இந்தியாவில் இந்திய பயிற்சி எடுத்தார்கள், இந்திய அரசோடு நடப்பாக இருக்கும் போது மாற்று இயக்கங்களை துரத்தி துரத்தி சுட்டார்கள்.

 

அதே போல் இந்திய இராணுவம் இலங்கை வந்ததும் கட்டாயத்தில் போராட்டம் ஆரம்பித்ததும் அழியியும் சூழ்நிலையில்  பிரேமதாஸாவிடம் சரண் அடைந்ததும்  ஒட்டுக்குழுவாகவ புலிகள் மாறியதை சொல்லாம்.

 

அதே  இறுதி யுத்ததின் போது  முற்று முழுதாக ஜரோப்பியாவையும் அமெரிக்காவையும் நம்பி  காலில் விழுந்தததையும் சொல்லலாம்....

 

 

 

மாற்று இயக்கங்கள் ஒட்டு குழுக்களாக மாறுவதற்க்கு முக்கிய காரணம் புலிகள் மட்டும் தானே ஆனால் புலிகள்  ஓடி ஓடி அலைந்ததுக்கு காரணம்  என்னவாக இருக்கும்???????????? வேற ஒன்றுமில்லை அது நானே ராஜா நானே மந்திரி என்பது போல்  தமிழர்களின் தனித் தலமை என்ற குறுகிய என்ன்அம் கொண்ட பேராசை மட்டுமே.

 

 

ஒட்டுக்குழுக்கள் இறுதிவரை எமது இனத்தை எதிரிக்கு காட்டிக்கொடுத்தல், அழித்தல் போன்ற ஈனத்தொழில்களை செய்பவர்கள். புலிகள் அழிந்த பின்னரும் சிலரின் இந்த பிழைப்பு தொடர்கின்றது....

 

புலிகள் எதிரிகளிடம் பேசினார்கள், பணமும் வாங்கினார்கள், ஆனால் இறுதிவரை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கொள்கையை விட்டுத்தரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் ஒட்டிய இடத்தில் உறிஞ்சி எடுக்க சொந்த இனத்தை அதன் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழித்தவர்கள். காத்தவர்கள் அல்ல.

 

புலிகள் செய்தது இராஜதந்திரம். பெரிய எதிரிகளை ஒரு பலவீனமான இனத்தின் சிறிய போராளி அமைப்பு அதன் இலக்கை அடைய தக்க வைக்க செய்த இராஜதந்திரம். உண்மையான.. புலிகள் போராட்டத்தை என்றுமே காட்டிக்கொடுக்கவில்லை.

 

புலிகள் யார் காலிலும் விழவில்லை. அதற்கு வரலாறு சாட்சி. ஒட்டுக்குழுக்கள்..?????! இன்றும்.. எதிரிகளோடு ஒட்டிக் கொன்று.. மக்களை இனத்தின் விடுதலையை அழிப்பதிலேயே குறியாக..! புலிகள் இல்லாத போதும் திருந்தாதவர்கள்.. புலிகள் இருந்து தான் திருந்தி இருப்பார்களாக்கும். அதிலும் புலிகளின் ஏக பிரதிநிதித்துவ நிலைப்பாடு காலத்தின் அவசியம் மட்டுமன்றி தமிழர்களின் ஒருமித்த குரலின் வெளிப்பாடு..! மக்கள் ஜனநாயக ரீதியிலும் அதனை அங்கீகரித்தே நின்றனர்.

 

நியானி: சீண்டல் வசனம் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அன்று புலிகளுக்கு ஆலவட்டம் பிடித்துவிட்டு இன்று வசை பாடுபவர்கள் ஒட்டுக்குழுக்களைவிட ஆபத்தானவர்கள்..! :D

நேற்றைய ஒட்டுக்குழுக்களின் சேவைகள் :

 

கைதான மாணவர்கள் பயங்கரவாதிகளாம்!- அரசாங்கம் போலியான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

 

541762_395375940548123_804516646_n.jpg

ஒட்டுக்குழுக்கள் இறுதிவரை எமது இனத்தை எதிரிக்கு காட்டிக்கொடுத்தல், அழித்தல் போன்ற ஈனத்தொழில்களை செய்பவர்கள். புலிகள் அழிந்த பின்னரும் சிலரின் இந்த பிழைப்பு தொடர்கின்றது....

 

புலிகள் எதிரிகளிடம் பேசினார்கள், பணமும் வாங்கினார்கள், ஆனால் இறுதிவரை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கொள்கையை விட்டுத்தரவில்லை.

 

எதை விட்டுத் தரவில்லை?

 

எதிரின் கைகளில் உயிரோடு சரண் அடைவதில்லை என்ற கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லையா?

 

இப்ப கட்டிக் கொடுக்கிறது கூட்டிக் கொடுக்கிறது அனைத்தும் புலிகள்  இல்லையா?

 

  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற சூழ்நிலையில் இராணுவகட்டுப்பாட்டுக்கு போக வெளிக்கிட்ட மக்களை சுட்டுக் கொல்லவில்லையா?

 

 

பலவந்தமாக மக்களை பிடித்து வைத்து இருக்கவில்லையா?

 

உட்பூசலில்  பிரிந்து நின்று  ஆளுக்கு ஆள் போட்டுத்தளவில்லையா?

ஒட்டுக்குழுக்கள் ஒட்டிய இடத்தில் உறிஞ்சி எடுக்க சொந்த இனத்தை அதன் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழித்தவர்கள். காத்தவர்கள் அல்ல.

 

புலிகள் செய்தது இராஜதந்திரம். பெரிய எதிரிகளை ஒரு பலவீனமான இனத்தின் சிறிய போராளி அமைப்பு அதன் இலக்கை அடைய தக்க வைக்க செய்த இராஜதந்திரம். உண்மையான.. புலிகள் போராட்டத்தை என்றுமே காட்டிக்கொடுக்கவில்லை.

 

புலிகள் யார் காலிலும் விழவில்லை. அதற்கு வரலாறு சாட்சி. ஒட்டுக்குழுக்கள்..?????! இன்றும்.. எதிரிகளோடு ஒட்டிக் கொன்று.. மக்களை இனத்தின் விடுதலையை அழிப்பதிலேயே குறியாக..! புலிகள் இல்லாத போதும் திருந்தாதவர்கள்.. புலிகள் இருந்து தான் திருந்தி இருப்பார்களாக்கும். அதிலும் புலிகளின் ஏக பிரதிநிதித்துவ நிலைப்பாடு காலத்தின் அவசியம் மட்டுமன்றி தமிழர்களின் ஒருமித்த குரலின் வெளிப்பாடு..! மக்கள் ஜனநாயக ரீதியிலும் அதனை அங்கீகரித்தே நின்றனர்.

 

புலிகள் செய்தால் ராஜதந்திரம் அதே மற்றவர்கள்  செய்தால் காட்டிக் கொடுப்பு... :D :D

 

 

காலில் விழும்போது போட்டோ எடுத்து வைக்க மறந்து போனேன். :lol:

 

 

காசை கொடுங்கள் ஈழம் பெறுவோம் என படம் காட்டிவிட்டு ஆக்களைக் காணோம் :lol:

 

காணாமல் போனோர் பட்டியலில் புலிகளின் கொள்கைகளும் போட்டுது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்............

 

 

ஆமா புலிகள் செய்தது அரசில தந்திரமில்லை தமிழர்களில் தருத்திரம்ம்ம்.

 

 

அன்று புலிகளுக்கு ஆலவட்டம் பிடித்துவிட்டு இன்று வசை பாடுபவர்கள் ஒட்டுக்குழுக்களைவிட ஆபத்தானவர்கள்..! :D

 

 

 

 நீங்கள்  கேபியை   சொல்லுவது போல் இருக்கு.

 

இருந்தும் கடவுளாக நினைத்து வணக்கியவரால் தான் இத்தனையும் என்ற நிலைவரும் போது  சுயவிமர்சனம் தேவைப்படுகிறது.

 

2 வது போலி தமிழ்த்தேசியம் மக்களை சிந்திக்க விடாது அது புலம்பெயர் நாட்டில் அறவே கூடாது........

 

நியானி: மேற்கோள் தணிக்கை

Edited by நியானி

ஒட்டுக்குழுக்களில் பல ரகங்கள் உண்டு. ஒவ்வொன்றும் தனி ரகம்.

 

185386_141503356002680_1481339672_n.jpg

நேற்றைய ஒட்டுக்குழுக்களின் சேவைகள் :

 

கைதான மாணவர்கள் பயங்கரவாதிகளாம்!- அரசாங்கம் போலியான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

 

541762_395375940548123_804516646_n.jpg

 

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தொடர்ச்சியான சந்திப்புக்களை நிகழ்த்தி வந்த பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை அரவணைத்து விட்டிருந்த பிரேமதாச அரசு தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனவினரின் அதிகரித்த வண்ணம் இருந்த அரசுக் கெதிரான தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாக்கும்  நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

பாராளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கும் கடிதம் பிரேமதாசாவினால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேமதாசவினால் அனுப்பி வைக்கப்பட்ட கடித்தத்துக்குப் பதிலளித்திருந்த ராஜீவ்காந்தி இந்தியப் படையை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு கால அட்டவணை போடுவதற்கு முன் நிபந்தனையாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் படைவிலகலும் நிகழும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் பிரமதாசவினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஒரே நோக்கம் இந்தியப் படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவது என்பதாக மட்டும் இருந்திருக்கவில்லை; அத்துடன் வடக்குக்-கிழக்கு இணைந்த மாகாண சபையை செயலற்றதாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

புளொட்டினால் நிகழ்த்தப்பட்ட மாலைதீவுச் சதிப் புரட்சியின் தோல்வியும் அதில் பங்குபற்றிய பல புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையும், தமிழீழ விடுதலைப் புலிகளால் புளொட்டின் மன்னார் முகாம் தாக்கியழிக்கப்பட்டு பல உறுப்பினர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் புளொட்டுக்குள் முரண்பாடுகள் கூர்மையடையவும் உமாமகேஸ்வரன் மேல் புளொட் உறுப்பினர்கள் அதிருப்தி ஏற்படவும் காரணமாக அமைந்திருந்தது,  புளொட் இயக்கம் உருவான நாட்களில் இருந்து உமாமகேஸ்வரனுக்கு விசுவாசமாகச் செயல்பட்டு வந்த அவருக்கு நெருக்கமாகவிருந்த பலர் உமாமகேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். உமாமகேஸ்வரனின் உண்மை சுயரூபத்தை அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் அறிந்து கொண்டதன் விளைவாக உமாமகேஸ்வரன் அவரது மெய்ப்பாதுகாவலர்களாலேயே கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவைக் கொழும்புக்கிளைத் தலைவராக அரசியலில் முன்னணிக்கு வந்த உமாமகேஸ்வரன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டு அதன் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவையடுத்து புளொட் அமைப்பை உருவாக்குவதில் ஒருவராக விளங்கிய உமாமகேஸ்வரன் அதன் தலைவராகவும் ஆனார். இலங்கை அரச படைகளாலும் பிரபாகரனாலும் உமாமகேஸ்வரன் தேடப்பட்ட நிலையில் அவருக்குப் பாதுகாப்பு அளித்து புளொட்டின் வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்தவர்களான சிவனேஸ்வரன் (உடுவில்), சந்ததியார் உட்பட பலரைத் தனது தலைமையின் நலன்களைக் கருத்திற் கொண்டு கொன்றொழித்திருந்த உமாமகேஸ்வரன் அவரை விசுவாசித்த, அவருக்கு மிகவும் நெருக்கமாகத் திகழ்ந்த மெய்ப் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

umamaheswaran.gifஇந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சிறுசிறு மோதல்களும் "மண்டையன் குழு"த் தலைவன் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இளைஞர்களைக் கொண்ட "தமிழ்த் தேசிய இராணுவ" உருவாக்கமும் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்தியப் படையினரதும், பயிற்சி பெற்ற தமிழ்த் தேசிய இராணுவத்தினதும், ஈழமக்கள் ஜனநாயக தேசிய விடுதலை முன்னனியினரதும் வீதிச் சோதனைகளும் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெப்பொழுதையும் விட தீவிரமாகிக் கொண்டிருந்தது. "தீப்பொறி"க் குழுவின் கொள்கை உருவாக்கத்தை நோக்கிய விவாதங்கள் வட்டுக்கோட்டையில் சுகந்தனால் (சிறி) எமக்கு வாடகைக்கு எடுத்துக் கொடுக்கப்பட்ட வீட்டில் தொடர்ந்து கொண்டிருந்தன. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்த முரண்பாடு "தீப்பொறி"க் குழுவுக்குள் கொள்கை உருவாக்குவது குறித்த பிரதான முரண்பாடாகக் காணப்பட்டது. தேசிய இனப் பிரச்சனை குறித்து இரண்டு விதமான கருத்துக்கள், இரண்டு விதமான போக்குகளுக்கிடையில் விவாதம் தொடர்ந்தது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்ற விடயத்தில் நாம் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும், அதுதான் எம்முன்னுள்ள - புரட்சிகர சக்திகள் முன்னுள்ள - கடமையாகும் என்ற கருத்து செயற்குழுவுக்குள், ரகுமான் ஜான், டொமினிக், தேவன், தர்மலிங்கம், சண்முகநாதன் ஆகியோரால் - பெரும்பான்மை உறுப்பினர்களால் - முன்வைக்கப்பட்டது. இக்கருத்து இடதுசாரிகளின் நோக்கு நிலையில் சரியான கருத்தென வாதம் செய்யப்பட்டது.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இடதுசாரிகள் இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட முன்வராதது மட்டுமல்லாமல் அவர்கள் இனவாதத்துக்குள் மூழ்கி விட்டனர் என்றும் இந்நிலையில் 1977 பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தமிழீழக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் அளித்த காரணத்தால் பெரும்பான்மை தமிழ் மக்களின் விருப்பான - வாக்களித்த - தமிழீழக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வது இடதுசாரிகளின் கடமை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்த எனது கருத்தோ மேற்படி கருத்துக்கு முரணானதொன்றாகக் காணப்பட்டது.

rajani%20-1.jpgதமிழீழ விடுதலைப் போராட்டம் அல்லது ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பிரிவினயை மட்டும் முன்னிறுத்தும் ஐக்கியத்தை முன்னிறுத்தாத கருத்து அல்லது போராட்டம் என்பது முதலாளித்துவ நலன்களை - உழைக்கும் மக்களின் நலன்களை அல்ல - பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமது பாராளுமன்ற நலன்களை மட்டுமே முன்னிறுத்தி முன்னணிக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. தமிழர் விடுதலை கூட்டணியினர் "தமிழீழம்" என்ற தமது கருத்து நிலையில் இருந்து பின்னோக்கி காலடி எடுத்து வைக்கையில் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அதே "தமிழீழம்" என்ற கோசத்தை சுவீகரித்துக் கொண்டனர். "தமிழீழம்" என்ற கருத்தும் சரி பிரிவினை என்ற கருத்தும் சரி எந்தவித இடதுசாரியக் கண்ணோட்டத்தின் பாற்பட்டதல்ல என்பதுடன் இடதுசாரிய முலாம் பூசிய கருத்தாகவே காணப்பட்டிருந்தது. "தமிழீழம்" என்ற கருத்தை ஆதரித்து பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள் என்ற காரணத்துக்காக இடதுசாரி எனப்படும் ஒருவர் தமிழ் மக்களின் அத்தகைய முடிவுக்கு மதிப்பளிப்பதானது தமிழ் மக்களின் முடிவு தவறானதென சுட்டிக்காட்டி அவர்களின் தவறான கருத்தின் அடிப்படையில் வந்தடைந்திருக்கும் முடிவுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதையோ அல்லது போராடுவதையோ எந்த வகையிலும் தடுத்து விடுவதில்லை.

எனவே இடதுசாரிகளான நாம் தேசிய இனப் பிரச்சனை குறித்த குறுகிய இனவாதத் தன்மை கொண்ட, பிரிவினையை மட்டுமே முன்னிறுத்திய, ஐக்கியத்தை முன்னிறுத்தாத தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது தவறானது மட்டுமல்ல இத்தகைய தவறான போக்குகளுக்கும் முடிவுகளுக்கும் எதிராகப் போராட வேண்டியவர்களுமாகும். தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் கடந்த காலத்தைய குறுகிய இனவாதத் தன்மை கொண்ட பிரிவினைப்  போராட்டமாக - தமிழீழப் போராட்டமாக - முன்னெடுக்கப்படுவதற்கு மாறாக சுயநிர்ணய அடிப்படையில் அமைந்த போராட்டமாக, சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் - சிங்கள இனவாதிகளுடன் அல்ல - ஐக்கியத்தை முன்னிறுத்தும் போராட்டமாக முன்னெடுக்கப் படவேண்டும் என்ற எனது  கருத்தை முன்வைத்தேன். இதுவே இடதுசாரிகளின் கண்ணோட்டமாகவும் அமைய முடியும். சிங்கள இடதுசாரிகள் இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட முன்வரவில்லை என்ற வாதமும் கூட இங்கு ஏற்புடையதல்ல. இடதுசாரிகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட தமிழர்கள் குறுகிய தேசிய வாதத்துக்கு பலியாகியது எப்படியோ அதே போல சிங்கள  இடதுசாரிகள்  பலரும் - நீண்ட காலமாக சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தும் போராடியும் வந்த சிங்கள் இடது சாரிகள் பலரும் - இனவாததுக்குப் பலியாகியிருந்தனர். இங்குள்ள பிரச்சனை என்னவெனில் சிங்கள இடதுசாரிகளில் ஒருபகுதியினர் இனவாததுக்குப் பலியாகி விட்டனர் என்ற ஒருகாரணம் மட்டுமே இன ஒடுக்குமுறைக்கெதிராக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கு ஆதரவான வாதமாகவோ, சிங்கள இடதுசாரிகள் அனைவரையும் இனவாதிகள் என முத்திரை குத்துவதற்கு ஆதரவான வாதமாகவோ அல்லது சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் சிங்கள உழைக்கும் மக்களுடனும் தமிழ் மக்கள் இணைந்த  ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிரான வாதமாகவோ அமைந்து விடாது.

rajani-dead%202.jpgதேசிய இனப் பிரச்சனை குறித்த "தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மையானவர்களின் கண்ணோட்டமானது தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடமிருந்து தோற்றம் பெற்று ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட கருத்தியலின் தொடர்ச்சியாகவே காணப்பட்டது, செப்டெம்பர் 18, 1989 இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான உடன்படிக்கை இந்தியப் படையை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வது குறித்து கொழும்பில் கைச்சாத்தானது. இவ்வுடன்படிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியப் படையின் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்திருந்த இந்திய அரசு, இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து விலக்கிக் கொள்வதற்கான கால அட்டவணையையும் முன்வைத்திருந்தது. இந்தியப் படையை இலங்கையிலிருந்து வெளியேற்றி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதென்ற பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கனவு இதன்மூலம் நனவாக ஆரம்பித்திருந்தது. ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கெதிரான மூர்க்கத்தனமான தாக்குதலை பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஆரம்பித்திருந்த அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது விரோதிகள் மீதும் "துரோகிகள்" மீதும் மூர்க்கத்தனமான தாக்குதலை வடக்குக்-கிழக்கில் ஆரம்பித்திருந்தனர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும், இலங்கை அரசினதும், இந்தியப் படையினரதும், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் மக்கள் விரோத செயற்பாடுகளை தொகுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவிருந்த ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து முறிந்த பனை என்ற நூலை வெளியிட்டிருந்தவரும், மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரும்,  வடக்குக்-கிழக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்து வந்த "பூரணி இல்லம்" என்ற அமைப்பை உருவாக்கி செயற்பட்டவருமான ரஜனி திரணகம தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பொஸ்கோ என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ரஜனி திரணகம படுகொலையானது "முறிந்த பனை" என்ற நூலை வெளியிட்டதற்கான "பரிசாகவும்", கருத்துச் சுதந்திரத்தின் மீதான தமிழீழ விடுதலைப்  புலிகளின் தொடர்ந்துவரும் தாக்குதலாகவும் இருந்த அதேவேளை நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலையாகவும் இருந்தது. இக்கொலை பொஸ்கோவினால் மேற்கொள்ளப் பட்டிருந்தபோதும் ரஜனி திரணகமவின் நடவடிக்கைகளையும் நடமாட்டத்தையும் உளவு பார்த்து ரஜனியை பொஸ்கோவிற்கு இனங்காட்டியவர்கள் யாழ்ப்பாண கழக மருத்துவ பீடத்தில் ரஜனி திரணகமவின் மாணவர்களாகவிருந்த இருவராகும். 

"நாங்கள் இந்தத் தலைமுறையில் வருந்த வேண்டி இருப்பது கொடியவர்களின் ஈனச் செயல்களுக்காக மட்டுமல்ல நல்லவர்கள் எனப்படுபவர்களின் மௌனத்திற்காகவும்தான்" என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் மேற்கோளுடன் வெளியான "முறிந்த பனை" ஆசிரியர் ரஜனி திரணகமவின் கொலையின் பின்பும் "நல்லவர்கள் எனப்படுபவர்களின் மௌனம்" தொடர்ந்து கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு ரஜனி திரணகமவாக மட்டும் இருந்துவிடவில்லை; இடதுசாரி இயக்கங்களில் அங்கம் வகித்தவர்கள் (அண்ணாமலை, விஜயானந்தன்), புத்திஜீவிகள், தமது கருத்துடன் உடன்பாடு காணதவர்கள் என உரிமை கோரப்படாத படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8492:2012-06-09-07-56-31&catid=348:2011-04-17-18-05-29

ஒட்டுக்குழுக்களில் பல ரகங்கள் உண்டு. ஒவ்வொன்றும் தனி ரகம்.

 

185386_141503356002680_1481339672_n.jpg

 

ஏன் கே பியின் படம் கிடைக்கவில்லையா?

 

கஜன் ,நாதன், மாத்தையா, போன்றோரின் படங்கள் இல்லையோ?

ஒட்டுக்குழுக்களுக்கு சமர்ப்பணம் !

 

10392_320118031423727_2069833186_n.jpg

ஈ.பி.டி.பி உறுப்பினரை திருமணம் செய்ய கனடாவில் இருந்து சென்ற பெண் யாழில் எரித்து படுகொலை! : 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113577



rajani-dead%202.jpg




யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும், இலங்கை அரசினதும், இந்தியப் படையினரதும், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் மக்கள் விரோத செயற்பாடுகளை தொகுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவிருந்த ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து முறிந்த பனை என்ற நூலை வெளியிட்டிருந்தவரும், மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரும்,  வடக்குக்-கிழக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்து வந்த "பூரணி இல்லம்" என்ற அமைப்பை உருவாக்கி செயற்பட்டவருமான ரஜனி திரணகம தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.



ஈ.பி.டி.பி உறுப்பினரை திருமணம் செய்ய கனடாவில் இருந்து சென்ற பெண் யாழில் எரித்து படுகொலை! : 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113577

 

ஈ பி டி பி என்ற துரோகியை திருமணம் செய்ய போன பெண்ணை தமிழ்த்தேசியவாதிகள் எரிச்சவையாமோ? :D

ஈ.பி.டி.பி உறுப்பினரை திருமணம் செய்ய கனடாவில் இருந்து சென்ற பெண் யாழில் எரித்து படுகொலை! : 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113577

 

 ஒட்டுக்குழு என்பது எதிரிக்கு - ஒரு வேள்விக்கு வளர்க்கும் கிடாய் ஆடு போன்றது  :(

பாதுகாக்க முனையும் அராஜகவாதிகளுக்கெதிராகவும், “அனுபவமுதிர்ச்சி” கொண்ட “இடதுசாரி”களின் மௌனத்துக்கும், திசைவிலகல்களுக்கும் எதிராகவும் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர்.

selvi2.jpg

செல்வி(செல்வநிதி தியாகராஜா) புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைகளின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

vimal-300x287.jpg

விமலேஸ்வரன்

unna-1024x558.jpg

மக்களுக்கெதிரான அனைத்து இயக்கங்களின் அராஜகங்களுக்கும் கடத்தப்பட்டு காணாமல் போன பல்கலைக்கழக மாணவர் விஜிதரனை விடுவிக்கக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரதப் போராளிகளில் ஒருவராக விமலேஸ்வரன். பின்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய அரசு 37 இயக்கங்களை வளர்த்தது,பின்னர் அவர்களுக்குள் அடிபட சொன்னது அப்ப நாங்கள் விரல் சூப்பி கொண்டிருந்தம்.

 

புலிகளும் ஈரோசும் காசை வேண்டியது அனைவரும் அறிந்த விடயம் தான் .

 

நியானி: ஒரு வரி தணிக்கை

 

 

கிளிநொச்சி, கிண்ணியா வங்கியில் அடித்த பணம் தமிழ் மக்களுக்கு புளட்டினால் பயன்படுத்தப்பட்டதா?
முழு இலங்கையையும் பிடிக்கபோகிறோம் என்று சொல்லி லொஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு வைத்தியருடன் 2 மில்லியன் டொலர்  உமா மகேஸ்வரனால் வாங்கப்பட்டது. பின்னர் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு யாருக்கும் உதவாமல் கடலில் போட்ட காசாகி விட்டது.
 
விரல் சூப்பும் பவாவுக்கு  இவை தெரியாதோ??
 
 
அட புலிகளும் ஈரோசும் காசை வாங்கி போட்டாங்கள்.இந்திய அரசுடன் சேர்ந்து புலிகளை பின்னாளில் அழித்தவர்களுக்கு இந்திய  அரசு எல்லாம் வழங்கியதை உலகம் நன்கு அறியும்.தலையை மண்ணுக்குள் புதைத்தால் உலகம் தெரியாது என்று உங்களை போன்றவர்கள் நினைக்கிறார்கள்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.