Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாங்கள் யாழ்ப்பாண‌த்தார் (we are from Jaffna)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை .பச்சையை மறக்காமல் நாளைக்கு போடவும் :D

அப்பவே போட்டிட்டம்ல... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது புத்தா :lol: :lol: :icon_idea: . உங்களைப்போலை பரியாரியள் எப்பவுமே இந்த சனங்களுக்கு தேள்வை கண்டியளோ :) :) .

எப்ப செருப்பால அடிவிழுதோ தெரியாது :D thank you komakan

அப்பவே போட்டிட்டம்ல... :D

Thank you isai :D

புத்தா, மற்றைய பிள்ளைகளோடு ஒப்பிட்டு எங்கள் பிள்ளைகளை வதைக்கிற கலை ஐரோப்பியத் தமிழர்களிடமும் அதிகமாய் இருக்கிறது. போட்டிகள் கூட பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப நடைபெறுவதில்லை. யதார்த்தத்தை அப்படியே சின்ன நகைச்சுவையோடு சேர்த்து தந்திருக்கிறீங்கள்.

நன்றிகள் சாந்தி....

தரமான பதிவு புத்தன் அண்ணா,

நான் நினைக்கிறேன் அனேகம் இது எல்லார் வீடுகளிலும் நடந்திருக்கும் என்று, நாங்கள் பட்ட அவஸ்தையளை கதையாக்கி இருக்கிறிங்கள்.

நாங்கள் திருப்திப்பட்டுக்கொண்டால் கூட வீட்டுக்காரர் விடமாட்டினம். பாவம் பிள்ளையள் அவுஸ்ரேலியா,ஜரோப்பா என்ற படியால் இப்படியாவது கேட்குதுகள் யவ்னா வா இருந்தால், சொல்லவா வேணும் ..!! :(

நன்றி புத்தன் அண்ணா.

(பச்சை முடிஞ்சு போச்சு)

நன்றிகள் ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்து இந்த copy - cat யாழ்ப்பாண மக்களிடம் மட்டுமில்லை. மேலும் பலரிடம் இருக்கக் காண்கிறோம். மலையாளத்தாரிடம் இவையை விட மோசம். வீடுகளைப் பார்த்தீங்கன்னா.. அப்படியே அச்சடிச்ச மாதிரி ஒருவரை ஒருவர் கொப்பி பண்ணி வைச்சிருக்கிறதைக் கண்டிருக்கிறன். அப்படிப் பார்க்கிறப்போ.. யாழ்ப்பாண மக்கள்.. கொஞ்சம் பறுவாயில்லை. இப்படியாப்பட்ட யாழ்ப்பாண மக்களை கொப்பி பண்ணுற மற்றவையை என்ன சொல்லுறது..??!

அதுசரி.. இப்படி "யாழ்ப்பாணத்தார்" என்று பிரதேசவாதம் கதைக்கிறது.. யாழில அனுமதிக்கப்பட்டிருக்கோ..???! இல்ல.. அதுக்கு (பிரதேசவாதம்) தடை என்று சில தினங்களுக்கு முன்னர் யாரோ சொல்லிச்சினமே..??! அல்லது "யாழ்ப்பாணத்தார்" என்று சொல்லுறது பிரதேசவாதம் இல்லை என்று யாழ் சுய கணிப்பு கணிச்சு வைச்சிருக்குதோ..??!

அது என்னமோ தெரியல்ல.. யாழ்ப்பாணம் தெருப் பிள்ளையார் போல. எவனும் வந்து தேங்காய் அடிச்சுட்டிப் போகலாம். அது அழுகல் தேங்காயாய் இருந்தால் என்ன கொப்புறான்னா என்ன.. எவரும் கவலைப்பட மாட்டினம். ஆனால்.. இதையே மற்றவைக்குச் செய்திட்டா.. கத்தி.. பொல்லு.. துவக்கு.. துரத்தல்.. தண்டனை என்று கொண்டு வந்திடுவினம். யாழ்ப்பாண மக்கள். வடிவேல் போல.. நல்லா அடிவாங்கிட்டு நல்லவன் என்றான்னு அடங்கிடுவினம் என்று நினைக்கினமோ என்னமோ..?! :icon_idea::)

நன்றிகள் நெடுக்ஸ்....யாழ்ப்பாணத்தார் என்று சொல்வதில் பிரதேசவாதம் இருப்பதாக எனக்கு படவில்லை...நான் பிறந்த மண்ணை அடையளாமாக சொல்வதில் என்ன பிரதேசவாதம்...யாழ்ப்பாணத்தானுக்கு யாழ்ப்பாணத்தை பற்றி சொல்ல சகல் உரிமையும் இருக்கு...என்பது என் கருத்து....மீண்டும் நன்றிகள்

Edited by putthan

இந்த நிலை தாண்டி பலர் எங்கேயோ போய்விட்டார்கள் .இப்பவும் சிலர் இல்லையென்றும்  இல்லை .

சிலர்  இன்னமும் பழையதையே கட்டி பிடித்துக்கொண்டு நிற்கின்றார்கள்  போலிருக்கு.

பிச்சைக்காரர்களுக்கு பணக்காரர்களைப் பார்த்துப் பொறாமை வருவதில்லை. தம்மைவிட வசதியான பிச்சைக்காரர்களைப் பார்த்துத்தான் பொறாமைகொள்வார்களாம்.

பக்கத்து வீட்டுப் பொண்ணு டொக்ராக வந்தால் நம்ம பொண்ணும் டொக்ராக வேண்டும், பக்கத்து வீட்டுப் பையன் என்ஜினீயர் என்றால் நம்ம பையனும் என்ஜீனியராக வரவேண்டும் என்ற சிந்தனையோடு வளர்ந்தவர்கள். 

ஆனால் பிள்ளைகள் அதைப் பின்பற்றி வளரவில்லை என்ற நல்ல விடயத்தைக் காட்டிய புத்தனைப் பாராட்டுகின்றேன். 

துரதிஸ்டவசமாக G.G., S.J.V போன்றவர்களுக்கு   பக்கத்து மக்கள் சிங்களவர்களாக இருக்காமல் விட்டுவிட்டார்கள்.  இருந்திருந்தால், போராடாமல் சுதந்திரம் பெற, பார்த்து கற்றுக்கொள்ள தெரிந்திருந்திருக்கும்.

அது சரி யாரைப் பார்த்து இவர்கள் பக்கத்து வீட்டை பார்க்கத்தொடங்கினார்களோ? ஒருவேளை  இவர்களை Favorite Minority ஆக வைத்திருந்த வெள்ளைக்காரரிடம் இருந்து என்றால் சரியாகுமா?

அது சரியாக இருக்காது.  ஏன் எனில் வெள்ளைகாரர் நாட்டுப்பற்று மிக்கவர்கள். தம் இனம் மீது மதிப்புள்ளவர்கள்.  உயிரை கொடுத்து இங்கிலாந்தை காப்பவர்கள் என்றுதானெ சொல்லப்படுகிறது. அவர்களிடம் இருந்து அதை கற்க தெரிந்திருந்தால் இன்ன்றும் பக்கத்துவீட்டு வெள்ளைகளை பார்த்து பலவற்றை கற்றிருப்பார்கள்.

சற்று குழப்பமாக இருக்கிறது.

மேற்கு நாடுகளுக்கு வந்துவிட்ட யாழ்ப்பாணத்தவர் அவர்களை பார்த்து தங்கள் பெற்றொர்களை நாடில் இருந்து கொண்டவந்தபின் நேசரிக்கு அனுபுகிறார்கள் என்று ஒரு அருமையான கதைக்கு அடித்தளம் போட்டு வைத்திருந்தனான். இப்ப சாடையாய் தள்ளாடுது.

கதையில் வந்த தம்பதியினர் தாயகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது கதையில் சரியாகக் காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஆங்கிலேயர்கள் இருந்திருக்கமாட்டார்கள்.

என்னுடைய கருத்தை வாசித்த பின்னர் உங்கள் மனதில் தோன்றிய எண்ணம் வார்த்தைகளில் வரவில்லை என்று நினைக்கின்றேன். <_<   எதற்கும் குழப்பம் இல்லாமல் தெளிவாக நினைத்த விடயத்தை பதிந்த பின்னர், அது விளங்கியிருந்தால் பதிலுக்கு ஒரு பதிவு வைக்கின்றேன் :)

கதையில் வந்த தம்பதியினர் தாயகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது கதையில் சரியாகக் காட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஆங்கிலேயர்கள் இருந்திருக்கமாட்டார்கள்.

கதை புரிந்ததுதோ இல்லையோ(after all it is only a story; and it is worth enough only to read, enjoy and forget about it at that point)  நீங்கள் தமிழருக்கு மட்டும் பொதுப்படையாக  சொல்லும் தத்துவங்களை விளங்கிகொள்ள முயல்வதுண்டு.

கீழே இருப்பதை நீங்கள் தமிழருக்கு மட்டும்தான் பொருந்தும் என்று கருத்துகிறீர்கள் என்றுதான் நினக்கிறேன்.  இல்லையேல் அது எல்ல மக்களுக்கும் பொதுவாகி வேறு சிலர் சொல்லிருப்பது போல எல்லா மக்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மையாக மாறலாம்.

பிச்சைக்காரர்களுக்கு பணக்காரர்களைப் பார்த்துப் பொறாமை வருவதில்லை. தம்மைவிட வசதியான பிச்சைக்காரர்களைப் பார்த்துத்தான் பொறாமைகொள்வார்களாம்.

பக்கத்து வீட்டுப் பொண்ணு டொக்ராக வந்தால் நம்ம பொண்ணும் டொக்ராக வேண்டும், பக்கத்து வீட்டுப் பையன் என்ஜினீயர் என்றால் நம்ம பையனும் என்ஜீனியராக வரவேண்டும் என்ற சிந்தனையோடு வளர்ந்தவர்கள்.

அப்படி இல்லையேல் பிள்ளைகளில் பெரிய முன்னேற்றம் இல்லை."ஆனால் பிள்ளைகள் அதைப் பின்பற்றி வளரவில்லை என்ற நல்ல விடயத்தைக் காட்டிய புத்தனைப் பாராட்டுகின்றேன்." அதாவது இவர்களும் பார்த்து செய்வதை தான் செய்கிறார்கள், அதாவது பாரமல் செய்கிறார்கள் போல தெரிந்தாலும், அடிப்படையில் பாரமல் செய்வதைதான் பார்த்து செய்கிறார்கள். இவர்களின் ஒப்பிடப்படும் பிச்சைக்கார கூட்டம் பாராமல் செய்ய்யும் கூட்டம். அவ்வளவுதான். 

"யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் பக்கத்து வீட்டை பார்ப்பார்கள். அதிலும் பக்கத்து வீட்டு தமிழரை மட்டும் பார்ப்பார்கள். அதிலும் பிள்ளைகளின் முன்னேற்றம் ஒன்றுக்குதான் பார்பார்களா? ஊரில் இருந்து அழைத்து வந்த தாய் தந்தையை இவர்கள் நேசரிக்கு அனுப்புகிறார்கள் என்று ஒருவர் கதை எழுதினால் பிழையாக இருக்கும்" என்று நான் சொல்ல வந்தால் நீங்கள் அதை ஆதரிபீர்களா ?

ஆனால் நான் போட்ட கேள்வியாகிய 1956 வரையில் இலனகையில் 65% அரசாங்க உத்தியோகத்தை தமிழர் வைத்திருந்ததற்கு வெள்ளையர்கள் அவர்களை favorite minority ஆக வைத்திருந்தது தான் காரணம் என்றது்தான் விளக்கமாக யாழில் சிலர் எழுதியிருக்கும் கருதுக்களுடன் நீங்கள் ஒத்து போவீர்களா என்றதற்கு நீங்கள் உங்கள் பதிலை போடவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரப்படுத்தலும் ஆமிக்காரரும் இல்லாவிட்டால் நம்மை மாதிரி ஆட்கள் பிள்ளைகளிடமிருந்து தப்பிக்கிறது ரொம்ப கஸ்டம்.

நன்றிகள் ஈழப்பிரியன்...சரியாக சொன்னீர்கள்... மகள்: "அப்பா நீங்கள் ஏன் டாக்டர் ஆக வரவில்லை" அப்பா:"!!!!!!!!!!!!!!!எங்கன்ட நாட்டில தரப்படுத்தல் இருந்தது அதனால் என்னால் வரமுடியவில்லை" மகள்:"அப்படியென்றால் உன்கன்ட பிரண்ட் எப்படி டாக்டர் ஆக வந்தவர்" அம்மா: "சும்மா அப்பாவுக்கு வாய் காட்டாமல் போய்படி" :D :D

வழக்கத்தை விட‌ தூக்கலான புத்தனது கதை...வழமையை விட‌ ஆங்கில சொற்கள் அதிகம் அவுசில் கதை நட‌க்குது என்பதை காட்டுவதற்காக இருக்குமோ...புத்தன்ட‌ சொந்த அனுபவமாகவும் இருக்கும் :lol:

நன்றிகள் ரதி ...அனுபவங்கள் தானே கதைகள்...சில கற்பனைகளும் உண்டு

கதை, மிகவும் அழகு,புத்தன்!

எனக்கென்னவோ, எல்லோரும் ஒரு ஓட்டப் போட்டியில் ஓடிக்கொண்டிருப்பது போலத் தான் தெரிகின்றது!

பொதுவாகத் தனி மனிதர்களின், செயல்கள் தான் சமூகமாக விரிகின்றன!

எமது இனம் மட்டும், வயலை உழுகின்ற மாடுகள் போல, உழுது கொண்டே வாழ்க்கையை முடித்து விடுகின்றது!

உலகம் எவ்வளவு விரிந்து போன ஒரு வெளி!

ஏனோ எமது மாடுகள் மட்டும், ஒரு குறுகிய நிலப்பரப்பிலேயே திரும்பத் திரும்ப உழுது கொண்டு, ஒரே விதமான தானியத்தையே திரும்பத் திரும்ப விதைத்துக் கொண்டிருக்கின்றன!

சுதந்திரமாக, தான் விரும்பிய புல்லை மட்டும் மேய்வதற்கு, அதற்கு அனுமதி கிடைப்பதில்லை! 

நன்றிகள் புங்கையூரன்...இன்னும் ஒரு தலைமுறை சென்ற பின்பு சில நேரம் சுதந்திரமாக புல்லு மேயக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்..

நல்லதொரு பகிர்வு

நன்றி லியோ

புத்தன் நீங்கள் கலக்கிட்டீங்கள்    

நன்றிகள் பகலவன்

புத்தன் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது இன்றைய பெற்றோராக இருக்கும் பலரின் குறுகிய மனவெளி. இது யாழ்ப்பாணத்தாருக்கும் மாத்திரமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னொரு பிள்ளையைக் காட்டி தம் பிள்ளைகளை கடிந்து கொள்ளும் பொற்றோரே 90 வீதமானர்வள். தமிழ்சமூகத்தில் அதிகம் இத்தகைய நிலைகள் இன்னும் அதிகமாக இருக்கிறது. எங்களுடைய எண்ணங்களை அவர்களுக்குள் திணிப்பதில் இருந்து நாங்கள் விடுபடும்போது எங்களுக்குள் பிரமிக்கத்தக்க அறிவாளிகள் தோன்றுவார்கள்.

நன்றி புத்தன்.

நன்றிகள் வல்வை சகாறா...இதிலிருந்து அடுத்த தலை முறை விடுபடும் என நம்புவோம்

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் மனநிலைகேற்ற வகையில் கதையை நகத்தியுள்ளீர்கள்.

இது எல்லா சமூகத்திலும் இருக்கின்றது.

நன்றிகள் வந்தியதேவன் ....ஒம் இது எல்லா சமுகத்திலும் உண்டு...

கிட்டடியிலை புத்தனுக்கு இருட்டடி இருக்கு :lol: .
எண்டாலும் புத்தன்! கதை எழுதுறதுக்கும் ஒரு ரலண்ட் வேணும் அது உங்களிட்டை நிறைய இருக்கு.....உண்மைக்கதையை வாசிச்ச திருப்தியோடை என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :)

உடம்பு தாங்காது கு.சா....வயசு போய்விட்டது :D, நீங்கள் ரலண்டை பற்றி சொல்லிப்போட்டியள் இனி ஒரே எழுத்துதான்....சனம் வாசிக்கினமோ இல்லையோ நான் எழுதப்போறன்...:D:D

 இதே மாதிரி பல நகைச்சுவைப் பதில்கள் உந்த சமயப் போட்டியில் பிள்ளைகள் பதில் அளித்திருக்கிறார்கள்

கேள்வி : கோயிலுக்கு முன்பே இருப்பது என்ன?

 பதில்1 : கார் பார்க்(வாகன தரிப்பிடம்)

 பதில்2 : செருப்புக்கள், சாப்பத்துக்கள்

அப்பு நன்றிகள் நீங்களும் ஒரு கதையை எழுத வேண்டியது....

இந்த நிலை தாண்டி பலர் எங்கேயோ போய்விட்டார்கள் .இப்பவும் சிலர் இல்லையென்றும்  இல்லை .

சிலர்  இன்னமும் பழையதையே கட்டி பிடித்துக்கொண்டு நிற்கின்றார்கள்  போலிருக்கு.

நன்றிகள் அர்ஜூன்....எந்த நிலை ?யாழ்ப்பாணத்தார் என்ற நிலையா?

வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கதை பிடித்து இருக்கு.

இன்றைய தலைமுறையில் இப்படியான அநாவசியமான போட்டிகளைக் காண்பது குறைவாக இருப்பது நல்ல விடயம்.

நன்றி புத்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நான் போட்ட கேள்வியாகிய 1956 வரையில் இலனகையில் 65% அரசாங்க உத்தியோகத்தை தமிழர் வைத்திருந்ததற்கு வெள்ளையர்கள் அவர்களை favorite minority ஆக வைத்திருந்தது தான் காரணம் என்றது்தான் விளக்கமாக யாழில் சிலர் எழுதியிருக்கும் கருதுக்களுடன் நீங்கள் ஒத்து போவீர்களா என்றதற்கு நீங்கள் உங்கள் பதிலை போடவில்லை.

நன்றிகள் மல்லையூரான் ,தமிழ்சமுகம் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்திருக்ககூடும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கதை பிடித்து இருக்கு.

இன்றைய தலைமுறையில் இப்படியான அநாவசியமான போட்டிகளைக் காண்பது குறைவாக இருப்பது நல்ல விடயம்.

நன்றி புத்தன்

நன்றிகள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
கதை புரிந்ததுதோ இல்லையோ(after all it is only a story; and it is worth enough only to read, enjoy and forget about it at that point)  நீங்கள் தமிழருக்கு மட்டும் பொதுப்படையாக  சொல்லும் தத்துவங்களை விளங்கிகொள்ள முயல்வதுண்டு.

கீழே இருப்பதை நீங்கள் தமிழருக்கு மட்டும்தான் பொருந்தும் என்று கருத்துகிறீர்கள் என்றுதான் நினக்கிறேன்.  இல்லையேல் அது எல்ல மக்களுக்கும் பொதுவாகி வேறு சிலர் சொல்லிருப்பது போல எல்லா மக்களும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மையாக மாறலாம்.

அப்படி இல்லையேல் பிள்ளைகளில் பெரிய முன்னேற்றம் இல்லை."ஆனால் பிள்ளைகள் அதைப் பின்பற்றி வளரவில்லை என்ற நல்ல விடயத்தைக் காட்டிய புத்தனைப் பாராட்டுகின்றேன்." அதாவது இவர்களும் பார்த்து செய்வதை தான் செய்கிறார்கள், அதாவது பாரமல் செய்கிறார்கள் போல தெரிந்தாலும், அடிப்படையில் பாரமல் செய்வதைதான் பார்த்து செய்கிறார்கள். இவர்களின் ஒப்பிடப்படும் பிச்சைக்கார கூட்டம் பாராமல் செய்ய்யும் கூட்டம். அவ்வளவுதான். 

"யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் பக்கத்து வீட்டை பார்ப்பார்கள். அதிலும் பக்கத்து வீட்டு தமிழரை மட்டும் பார்ப்பார்கள். அதிலும் பிள்ளைகளின் முன்னேற்றம் ஒன்றுக்குதான் பார்பார்களா? ஊரில் இருந்து அழைத்து வந்த தாய் தந்தையை இவர்கள் நேசரிக்கு அனுப்புகிறார்கள் என்று ஒருவர் கதை எழுதினால் பிழையாக இருக்கும்" என்று நான் சொல்ல வந்தால் நீங்கள் அதை ஆதரிபீர்களா ?

ஆனால் நான் போட்ட கேள்வியாகிய 1956 வரையில் இலனகையில் 65% அரசாங்க உத்தியோகத்தை தமிழர் வைத்திருந்ததற்கு வெள்ளையர்கள் அவர்களை favorite minority ஆக வைத்திருந்தது தான் காரணம் என்றது்தான் விளக்கமாக யாழில் சிலர் எழுதியிருக்கும் கருதுக்களுடன் நீங்கள் ஒத்து போவீர்களா என்றதற்கு நீங்கள் உங்கள் பதிலை போடவில்லை.

நான் முதலில் வைத்த கருத்து தமிழர்களை (குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களை) மனதில்கொண்டுதான் வைத்தேன். எனினும் எனது கருத்தில் கவனமாக யாழ்ப்பாணம் என்ற சொல்லைத் தவிர்த்திருந்தேன் :)

பல்கலைக் கழகப் படிப்பு, அரசாங்க உத்தியோகம் (வெள்ளைக் கொலர் உத்தியோகம்) வாழ்வில் முன்னேற முக்கியமாக இருந்தாலும், வெட்டுப் புள்ளிகள் காரணமாக பலர் தொடர்ந்தும் தமது நண்பர்களுக்கிடையே போட்டி போட்டு படிக்கவேண்டிய சூழல் இருந்ததால் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களுக்கு போட்டி மனப்பான்மை அதிகம். ஆனால் போட்டி பொறாமையாக மாறுவதற்கு அதிக நேரம் எடுக்காது!

எனினும் மேற்கு நாடுகளில் வளர்கின்றவர்கள் ஆரோக்கியமான போட்டியை தமது முன்னேற்றத்திற்காகப் பாவித்தாலும், தோல்வி வரும்போது வாழ்க்கையே தொலைந்து போய்விட்டது என்று துவண்டுவிடுவதில்லை. அதற்கு பல்வேறு வகையிலும் முன்னுக்க வர வழி வகைகள் இருப்பதுதான் காரணம். இலங்கையில் இருப்பது போல முதன்மை மாணவர்கள் என்ஜினியர், டொக்ராக வர அடுத்த நிலையில் உள்ளவர்கள் கணக்காளர்களாக வரவேண்டியதில்லை. உண்மையில் என்ஜினியர், டொக்ரர்களை விட கணக்கியல், பொருளியல் துறைகளில் இருப்போர் அதிக சம்பளம் பெற்று பெரும் பணக்காரர்களாக ஆகின்றனர். எனினும் பெற்றோர் இப்போதும் பிள்ளைகளை என்ஜினியர், டொக்ராக வரவேண்டுமென்றே ஆசைப்படுகின்றனர்.

அடுத்ததாக, தமிழர்கள் வெள்ளைக்காரர்களினால் காலனித்துவக் காலத்தில் விரும்பப்பட்டமைக்கு தமிழர்களின் கல்வி மீதான நாட்டமும், விசுவாசமும், கடின உழைப்பும், மேலதிகாரிகளை சவால் விடுக்காத தன்மையும் காரணங்களாக இருக்கலாம். இத்தகைய மனப்பாங்கால்தான் பலரிடம் போர்க்குணம் இல்லாமல் போனது.

என்றாலும் போராட்ட காலத்தில் போர்க்குணமும், ஓர்மமும், எதையும் செய்து முன்னுக்கு வரலாம் என்ற தன்னம்பிக்கையும் வளர்ந்திருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.