Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது'

Featured Replies

பெற்றோரே அதை மறந்து அடுத்த பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பி தாங்களும் சுகமாக வந்து விட்டார்கள் அப்படி பட்ட இனத்தில்    இப்படியான இறப்புக்களுக்கு கனக்கு கேட்டுக் கொண்டு இருக்க முடியாது :lol:

  • Replies 71
  • Views 4.9k
  • Created
  • Last Reply
ரிசானாவின் மரணத்தை கண்டிப்பதில்லை என்று அவரது ஊரில் கூடிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது   ரிசானா மரண தண்டனையும் முஸ்லிம்களும்
 
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜனவரி, 2013 - 17:34 ஜிஎம்டி
 
130109171900_rizana_home_336x189_bbc_noc

 

சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நஃபீக்கின் மரணத்தை அடுத்து அவரது சொந்த ஊரான மூதூரில் பெரும் சோகம் காணப்பட்டது.

 

ஆனால், அங்கு நடந்த ஒரு சமூக முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் அந்த மரணத்தை கண்டிப்பதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

 

குறிப்பாக அந்த மரண தண்டனை முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்தச் சட்டத்தை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டுள்ளதால், அதனைக் கண்டிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அப்பிரதேசத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான முஹமட் ராஜீஸ் தெரிவித்தார்.

முஹமட் ராஜீஸ் செவ்வி
 

'ரிசானாவின் மரண தண்டனையை கண்டிப்பதில்லை'

 

ரிசானாவின் மரண தண்டனையை கண்டிப்பதில்லை என்று அவரது சொந்த ஊரில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகரான முகமட் ராஜிஸ்.

 

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.அந்தச் சம்பவத்தில் குழந்தை இறந்திருக்கின்ற போதிலும், அதனை ரிசானாதான் கொலை செய்தார் என்பது நிருபணமாகவில்லை என்று தாம் கருதுவதாக கூறும் அவர், அந்தச் சம்பவம் நடந்தபோது ரிசானா சட்டப்படி சிறுமி என்றும் கூறினார்.ஆனாலும், அந்த மரண தண்டனைக்காக சவுதி அரேபியாவையோ அல்லது அந்தச் சட்டத்தையோ தாம் கண்டிக்க முடியாது என்றும், ஆனால் அந்த இறந்த குழந்தையின் தாய், ரிசானாவை மன்னித்திருக்க வேண்டும் என்றும் ராஜிஸ் கூறினார்.


 
 

'ரிசானாவுக்கு நேர்ந்த அநீதியை கேள்வி கேட்க மறுப்பது முட்டாள் தனம்'

 

ஷரியா சட்டத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ரிசானாவுக்கு நேர்ந்த அநீதியை கேள்வி கேட்க மறுப்பது முட்டாள்தனம் என்று இலங்கையின் பெண்கள் செயற்பாட்டுவலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர் கூறுகிறார்.

 

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.சவுதி அரேபியாவின் உள்நாட்டுச் சட்டங்களில் தாம் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார்.

 

முஸ்லிம்களின் பங்களிப்பு போதாது

 

அதேவேளை, ரிசானா விவகாரத்தில் ஆரம்பம் முதலே இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தின் பங்களிப்பு போதுமானதாக இருக்கவில்லை என்று இலங்கையின் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர் கூறுகிறார்.

 

மூதூர் மக்கள் சில முயற்சிகளை செய்தாலும் அவர்களால் உயர் மட்டம் வரை செல்ல முடியவில்லை என்றும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இலங்கை அரசாங்கமும் இந்த விடயத்தில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

 

அத்துடன், இந்த விவகாரத்தில் எதுவும் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நடக்கவில்லை என்றும், அந்தச் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ளாமல், அந்தச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் என்றும் அவர் கூறுகிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130110_lankamuslimstand.shtml

ரிசானாவிற்கு எனது அஞ்சலிகள் .

சவூதி தனக்கென்று தனி சட்டம் வைத்திருக்கின்றது ,அங்கு பிரிட்டிஷ் மகாராணியார் போனாலும் குனிந்துகொண்டுதான் போவார். மனித உரிமை மீறல் பற்றி யாரும் அவர்களை கேட்க கூடாது என அமேரிக்கா விரும்புகின்றது .உலகம் இந்த அடிப்படையில் தான் இயங்குகின்றது .இதன் பின் வறுமையின் பிடியில் இருக்கும் ஒருவர் நியாயம் நீதி கேட்பது முடியாத ஒன்று .மூதூர் மக்களே எதிர்ப்பு தெரிவிக்க பயப்பிடுகின்றார்கள் ,கேள்விப்பட்டால் சவுதியில் இருக்கும் தமது உறவினர்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்ற பயம் தான் .இதே பயம் தான் ராஜபக்சாவிற்கும் .

 

எனது நண்பன் சவுதியில்உள்ள  அமெரிக்கன்  பேசில் நீச்சல் தடாகத்தில் பதினைந்து வருடங்கள்  லைப் கார்டாக இருந்தவர். பார்பர் மசூதி உடைப்பை கேள்விப்பட்டு எதுவித சம்பளமும் கொடுக்காமல் ,எதுவித பொருட்களும் எடுக்கவிடாமல் இந்து என்ற காரணத்தால் இலங்கைக்கு அனுப்பிவிட்டார்கள் .

இதுதான் சவூதி .அமெரிக்கன் அவர்களுக்கு சலுயுட் அடிக்குமட்டும் அவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் .

இவருடன் அடிக்கடி இராணுவத்தாலும் ஒட்டுக்குழுக்களாலும் கொலைக்கு உள்ளாகும் ஈழ சிறுமிகளுக்கும் உறவுகளுக்கும் எனது அஞ்சலிகள்.

அவரது வீட்டின் படத்தை பார்த்தாலே  புரிகிறது

அவரது பெற்றோர் எதற்காக அனுப்பி  வைத்தார்கள் என்று.

இதுவும் ஒரு தியாகம்தான்.

ஒரு பலி தான்

படத்தை பாருங்கள் கலைஞன்.

 

பெற்றோர் மீது எனக்கு எதுவித அனுதாபமும் ஏற்படவில்லை. பிள்ளைகளின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்து அவர்களை வளர்க்கமுடியாது என்றால் எதற்கு கலியாணம் கட்டுகின்றார்கள்? ஒன்றுக்கு மேலாக அடுத்தடுத்து ஏன் பிள்ளை பெறுகின்றார்கள்?? இதற்கு காரணம் வறுமை, படிப்பறிவின்மை என்று சாக்குப்போக்கு கூறவேண்டாம். மொத்த சுயநலமும், சுய இன்பம் பெறுதலும், முட்டாள்தனமுமே இதற்கு காரணம்.

 

ரிசானா பதினேழு வயதில் பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டபோது ரிசானாவின் தாயாரும், தந்தையும் படுக்கையில் புணர்ந்து மகிழ்ந்துகொண்டு இருந்தார்களா? ஏன் அவர்களில் ஒருவர் சவூதிக்கு வேலை செய்வதற்கு சென்று இருக்கலாமே? அவர்களுக்கு சுகமில்லை, ரிசானாவின் சகோதரிகளை வளர்க்கவேண்டும்... இப்படியெல்லாம் ஆயிரத்தெட்டு சாக்குப்போக்கு கூறலாம்.

 

ஆனால், ரிசானாவின் படுகொலையின் பின்னால் அடிப்படை சூத்திரதாரிகளாக அவரது பெற்றோரே எனது கண்களிற்கு தெரிகின்றார்கள். தமது சுய இன்பத்திற்காக தமது புதல்வியை இவர்கள் விற்றுள்ளார்கள்.

 

நீங்களும் ஓர் தந்தைதானே? வீட்டில் கஸ்டம் வந்தால் உங்கள் சின்னமகளை கண்காணாத தேசத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக அனுப்புவீர்களா என்று ஓர் கணம் சிந்தித்துப்பாருங்கள்.

 

ரிசானா எனும் பாத்திரம் சுயநலமும், பகட்டும், வறட்டு கெளரவமும், பேராசையும் நிறைந்த சமுதாயத்தின் ஓர் அங்கமாக விளங்குகின்றது. ஓர் ரிசானா அநியாயமாகப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்னும் லட்சோபலட்சம் ரிசானாக்கள் கேள்விக்குறியுடனான எதிர்காலத்தில் தொடர்ந்து பயணிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
ரிஸானாவின் மரண தண்டனை 'ஷரீஆ' சட்டத்தின் படி நிறைவேற்றப்பட்டது: - எதிர்க்க மாட்டோம் என்கின்றனர் மூதூர் மக்கள். 
[Friday, 2013-01-11 12:11:54]
 
ரிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை ஒருபோதும் கண்டிப்பதில்லை என ரிஸானாவின் சொந்த ஊரில் முடிவு எடுக்கப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகரான முகமட் ராஜிஸ் தெரிவித்துள்ளார். மூதூரைச் சேர்ந்த முகமட் ராஜிஸ் பீபீசிக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
உலக முஸ்லீம்கள் ஷரீஆ சட்டத்தையே பின்பற்றி வருகின்றோம். இந்த சட்டம் முஸ்லீம்களும் ஏனைய மதத்தவர்களும் வாழும் நாடுகளில் கடைப்பிடிக்க முடியாவிடினும், முஸ்லீம்கள் மட்டும் வாழும் நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் இந்தச் சட்டம் தற்போதும் உள்ளது.
 
  
இந்த சட்டத்தின் படி, இஸ்லாமிய சட்டத்தின் படி கொலை செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை என்பது உறுதி. ரிஸானா கொலை செய்தாரா ? இல்லையா ? என்பதில் உறுதியான முடிவு ஏதும் இல்லை. எங்கள் ஊரைப் பொறுத்தவரையில் உயிரிழந்த குழந்தை ரிஸானா பால் பருகும் வேளையில் குழந்தையில் கழுத்தில் சிக்கி உயிரிழந்ததாக கருதப்படுகிறது. ஆனால் ரிஸானாவும் ஒரு குழந்தை என்பதை பார்க்க வேண்டும். இங்கே அந்த கைக்குழந்தை உயிரிழந்தது உறுதி.
 
உயிரழந்த குழந்தையின் தாய் ரிஸானா கொலை செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார். அதன்படி அவருக்கான தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. ஆகவே இந்த தண்டனை ஷரீஆ சட்டத்தின் படி நிறைவேற்றப்பட்டது என்பதில் எமது ஊரைப் பொறுத்தவரையில் எந்தவித எதிர்ப்புகளும் இல்லை.
 
ஆனால் அந்தப் பிள்ளை வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதால், குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும் என எமது ஊர் எப்போதும் பிரார்த்தித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கொலையானவரின் நெருங்கிய உறவுகள், தண்டனை விதிக்கப்பட்டவரை மன்னிப்பார்களாயின் குற்றவாளி தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார் ஷரீஆ சட்டத்தின் நிபந்தனையாகும்.
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-2(32).jpg

வார வெல்லிக்கிலமை செய்வாங்க அப்ப பாருங்க.......

 

அண்ணா நீங்கள் பகிடியாக எழுதினாலும் இந்த திரியை இங்கு இணைக்க வேண்டும் போலிருக்கு. :D

ரிசானா நபீக்கு ஜனாஸாத் தொழுகை, விசேட துஆப்பிரார்த்தனை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114739

அந்த பெண் உயிருடன் இருக்கும் போது விடுவிக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேன்முறையீடு செய்வதற்கு பணமும் கொடுக்கவில்லை. மரணதண்டனை நிறைவேற்றப்போகிறோம் என்று சொன்ன போது அந்த பெண் கொலை செய்தாரா இல்லையா என்பது தெரியாமலேயே கொலை தான் என்று முடிவெடுத்து ஷரியா சட்டத்திற்கு எதிராக கதைக்க கூடாது என்றும் முடிவெடுத்தார்கள்.

அந்த பெண்ணுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியும் விட்டார்கள். உடலையாவது இலங்கைக்கு கொண்டு செல்ல அனுமதிப்பார்கள் என்றால் அதுவும் இல்லை. சவூதியில் வைத்து அடக்கம் செய்து விட்டார்கள். ஏனைய பெரும்பாலான மக்களும் ஷரியா சட்டத்தின் படி நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை என்பதால் அதை மறுத்துரைக்க முடியாது என்று கூறியுள்ளார்கள்.

இப்ப வெள்ளிக்கிழமை விசேட பிரார்த்தனை செய்கிறார்களாம். அது தான் மிகப்பெரிய பகிடி.

அந்த பெண் இறந்த பின் என்னத்தை செய்து என்ன நடக்கப்போகிறது. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்
பெற்றோர் மீது எனக்கு எதுவித அனுதாபமும் ஏற்படவில்லை. பிள்ளைகளின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்து அவர்களை வளர்க்கமுடியாது என்றால் எதற்கு கலியாணம் கட்டுகின்றார்கள்? ஒன்றுக்கு மேலாக அடுத்தடுத்து ஏன் பிள்ளை பெறுகின்றார்கள்?? இதற்கு காரணம் வறுமை, படிப்பறிவின்மை என்று சாக்குப்போக்கு கூறவேண்டாம். மொத்த சுயநலமும், சுய இன்பம் பெறுதலும், முட்டாள்தனமுமே இதற்கு காரணம்.

 

ரிசானா பதினேழு வயதில் பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டபோது ரிசானாவின் தாயாரும், தந்தையும் படுக்கையில் புணர்ந்து மகிழ்ந்துகொண்டு இருந்தார்களா? ஏன் அவர்களில் ஒருவர் சவூதிக்கு வேலை செய்வதற்கு சென்று இருக்கலாமே? அவர்களுக்கு சுகமில்லை, ரிசானாவின் சகோதரிகளை வளர்க்கவேண்டும்... இப்படியெல்லாம் ஆயிரத்தெட்டு சாக்குப்போக்கு கூறலாம்.

 

ஆனால், ரிசானாவின் படுகொலையின் பின்னால் அடிப்படை சூத்திரதாரிகளாக அவரது பெற்றோரே எனது கண்களிற்கு தெரிகின்றார்கள். தமது சுய இன்பத்திற்காக தமது புதல்வியை இவர்கள் விற்றுள்ளார்கள்.

 

நீங்களும் ஓர் தந்தைதானே? வீட்டில் கஸ்டம் வந்தால் உங்கள் சின்னமகளை கண்காணாத தேசத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக அனுப்புவீர்களா என்று ஓர் கணம் சிந்தித்துப்பாருங்கள்.

 

ரிசானா எனும் பாத்திரம் சுயநலமும், பகட்டும், வறட்டு கெளரவமும், பேராசையும் நிறைந்த சமுதாயத்தின் ஓர் அங்கமாக விளங்குகின்றது. ஓர் ரிசானா அநியாயமாகப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்னும் லட்சோபலட்சம் ரிசானாக்கள் கேள்விக்குறியுடனான எதிர்காலத்தில் தொடர்ந்து பயணிக்கின்றார்கள்.

 

கலைஞனின் இந்தக் கருத்தை ஆமோதிக்கிறேன்.

 

எங்களது தமிழ் இளைஞர்களும் வெளிநாடு வந்து சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க ஓடாகத் தேய்கிறார்கள். சமூகவியல் அடிப்படையில், இவர்களும் ரிசானாவுக்கு ஒப்பான நிலையிலேயே உள்ளார்கள்.

கலைஞன் ,உலகில் சேரிகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறை இதுதான் .அது மூதூர் என்றாலும் தாராவி என்றாலும் பிரேசில் என்றாலும் ஒன்றுதான் .

சொந்த பிள்ளைகளை விபச்சாரம் செய்யவைக்கும் பெற்றோரே பலர் இருக்கின்றார்கள் .

ரிசானிவிற்கு மரணதண்டனை கொடுத்த சவுதியின் நிலைப்பாடு பற்றித்தான் நாம் பார்க்க வேண்டுமே ஒழிய அவரின் பெற்றோரை இங்கு இழுப்பது சரியாக படவில்லை ,வறுமை என்று ஒன்று இருக்கும் வரை இந்நிலை தொடரத்தான் போகுது .

அவரது வீட்டின் படத்தை பார்த்தாலே  புரிகிறது

அவரது பெற்றோர் எதற்காக அனுப்பி  வைத்தார்கள் என்று.

இதுவும் ஒரு தியாகம்தான்.

ஒரு பலி தான்

படத்தை பாருங்கள் கலைஞன்.

 

 நான் இந்த திரியில் என்மனதில் உள்ளது  எழுத வேண்டும் என்ற சிந்தனையோடு திரியை முழுமையாகப்பார்த்தேன். அந்தக்குழந்தையின்,வீட்டையும் ,சூழலையும் பார்த்தபின் எழுத வந்த கருத்துக்கள் அனைத்தையும் .மறந்துவிட்டேன் .மனிதம் என்பது மண்ணோடு மண்ணாய் போய்விட்டது என்று பார்த்தேன்.இப்படி இன்னும் எத்தனையோ எத்தனையோ சோகக்கதைகள் எம்மண்ணில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது .என்பதையும் அறிவேன் .எம் சமூகம் அனுபவிக்கும் இந்த சொல்லணாத்துன்பங்கள் அகலவேண்டுமானால் .சகல கொடியவர்களும் ஒழிக்கப்படவேண்டும் .அல்லது அந்த பூமியை இறைவன் அழித்து விடவேண்டும் என்று நினைத்தேன் ......... :(

சரியா சட்டத்தை காட்டி முஸ்லீம் மந்திரிகள் பொதுமக்களின் வாயை அடைத்துவிட்டார்கள். பிள்ளையின் தாய் சரிய சட்டம் பாவிக்கபட்டதால் சவுதி அரசு தனது பிள்ளையை வஞ்சமாக கொலை செய்வதற்கு உடந்தையா? சித்தப்பன், பெரியப்பன் அந்த பிள்ளை சவுதி அரசால் கொலையுண்டதற்கு ஆதரவா? அந்த பிள்ளையின் சுற்றம் அவள் செய்ததாக நிரூபிக்கப்படாத குற்றதிற்கு சரியா சட்டத்தை பாவித்து தூக்கில் போட்டது சரியாகவா கொள்கிறார்கள். ஊர் பெற்ற பிள்ளையா அல்லது ஒரு தாய் பேற்ற பிளையா அந்த சிறுமி?

 

பிள்ளையின் உடலை இலங்கை கொண்டுவரவிடாமல் இலங்கைதான் சவுதியில் வைத்து அடக்கம் செய்வித்திருக்கிறது. நிச்சயமாக வழமையான குற்றம் ஒன்றுக்கு தூக்கு போட்டால், சவுதியும் உடலை உறவினரிடம் கையளிக்கத்தான் முன் வரும். இதில் இருக்கும் சர்வதேச விதி முறைகளை மீறுவதற்கு சவுதிக்கு எந்த உந்து சக்தியும் இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. இது வெறுமனே இலங்கை அரசினதும், முஸ்லீம் மந்திரிகளினதும் விருப்பத்தின் பேரில் சவுதியில் செய்யப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'கலைஞன்' எழுதிய கருத்தே என் எண்ணத்திலும் உதித்தது. ' பிள்ளைகளை வளர்க்க முடியாவிட்டால் என்ன காரணத்துக்காக ஒன்றுக்கும் மேல் பிள்ளைகளைப் பெறுகின்றார்கள்?!..' என்ற கேள்வியே எனக்குள்ளும் எழுந்தது.

 

'மனிதம் மடிந்து போகின்றது. ' தெரியாமல் அறியாமல் என்ன நேர்ந்தது என்றே தெரியாமல் .....மரண தண்டனைக்கு ஆளான ரிசானாவை நினைத்தால் வேதனை மேலிடுகின்றது. 'ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

'மரணமாயினும் உனக்கு அமைதி தரட்டும் சகோதரியே!............

பெற்றோர் மீது எனக்கு எதுவித அனுதாபமும் ஏற்படவில்லை. பிள்ளைகளின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்து அவர்களை வளர்க்கமுடியாது என்றால் எதற்கு கலியாணம் கட்டுகின்றார்கள்? ஒன்றுக்கு மேலாக அடுத்தடுத்து ஏன் பிள்ளை பெறுகின்றார்கள்?? இதற்கு காரணம் வறுமை, படிப்பறிவின்மை என்று சாக்குப்போக்கு கூறவேண்டாம். மொத்த சுயநலமும், சுய இன்பம் பெறுதலும், முட்டாள்தனமுமே இதற்கு காரணம்.

 

ரிசானா பதினேழு வயதில் பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டபோது ரிசானாவின் தாயாரும், தந்தையும் படுக்கையில் புணர்ந்து மகிழ்ந்துகொண்டு இருந்தார்களா? ஏன் அவர்களில் ஒருவர் சவூதிக்கு வேலை செய்வதற்கு சென்று இருக்கலாமே? அவர்களுக்கு சுகமில்லை, ரிசானாவின் சகோதரிகளை வளர்க்கவேண்டும்... இப்படியெல்லாம் ஆயிரத்தெட்டு சாக்குப்போக்கு கூறலாம்.

 

ஆனால், ரிசானாவின் படுகொலையின் பின்னால் அடிப்படை சூத்திரதாரிகளாக அவரது பெற்றோரே எனது கண்களிற்கு தெரிகின்றார்கள். தமது சுய இன்பத்திற்காக தமது புதல்வியை இவர்கள் விற்றுள்ளார்கள்.

 

நீங்களும் ஓர் தந்தைதானே? வீட்டில் கஸ்டம் வந்தால் உங்கள் சின்னமகளை கண்காணாத தேசத்திற்கு பணம் சம்பாதிப்பதற்காக அனுப்புவீர்களா என்று ஓர் கணம் சிந்தித்துப்பாருங்கள்.

 

ரிசானா எனும் பாத்திரம் சுயநலமும், பகட்டும், வறட்டு கெளரவமும், பேராசையும் நிறைந்த சமுதாயத்தின் ஓர் அங்கமாக விளங்குகின்றது. ஓர் ரிசானா அநியாயமாகப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்னும் லட்சோபலட்சம் ரிசானாக்கள் கேள்விக்குறியுடனான எதிர்காலத்தில் தொடர்ந்து பயணிக்கின்றார்கள்.

 

அண்ணா,

குடும்ப வறுமையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை எதற்கு பெறுவான் என்று ஆதங்கப்படுகிறீர்கள்.

 

முஸ்லிம்களை பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியையே கொண்டிருப்பார்கள். அந்த பெண்ணின் தந்தைக்கு எத்தனை மனைவியோ அந்த மனைவிகளுக்கு எத்தனை பிள்ளைகளோ தெரியாது. வேறு மனைவி பிள்ளைகள் இருந்தால் இந்த பிள்ளையின் இறப்பு பற்றி தாய் கவலைப்பட்டாலும் அந்த தந்தை கவலைப்பட மாட்டார். :wub:

முதலில் முஸ்லிம் ஆண்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வதை தவிர்த்தாலே அவர்கள் மத்தியில் கொஞ்சம் வறுமை குறையும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
ரிசானாவை துன்புறுத்தியே குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது; மரண தண்டனையை சவூதி நிறுத்த வேண்டும்! - நவநீதம்பிள்ளை 
[saturday, 2013-01-12 09:30:27]
 
ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார். சவூதி அரேபியாவில் 2005 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சென்ற ரிசானா, ஒரு வாரக்காலத்தில் குறித்த வீட்டின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை இறந்து போனது. இதனையடுத்து அந்தக் குழந்தையை கொலை செய்த குற்றம் ரிசானா மீது சுமத்தப்பட்டது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது ரிசானா 17 வயதை கொண்டிருந்தார். எனினும் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டபோது அதனை சர்வதேச சமூகம் கண்டித்தது.
 
ரிசானா நபீக் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் போது அவருக்கு மொழியாக்கம் உட்பட்ட சட்ட உதவிகள் உரியமுறையில் வழங்கப்படவில்லை. அத்துடன் அவர் உடல் ரீதியாக தாக்கப்பட்டே குற்றப்பத்திரிகையில் கையொப்பமிடச்செய்யப்பட்டார் என்று நவநீதம்பிள்ளையின் பேச்சாளர் ரூபட் கொல்வெலே தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகள் சவூதி அரேபியாவில் அதிகரித்து வருகின்றன. இது கண்டிக்கதக்கது.
 
எனவே சவூதி அரேபியாவும் சர்வதேச நியமங்களை ஏற்று மரண தண்டனை விதிப்பதை நிறுத்தவேண்டும் என்று நவநீதம்பிள்ளை கோரியுள்ளதாக கொல்வேலே தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்
 
By General 
2013-01-12 10:03:49
 
மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப் பறிகொடுத்து விட்டேன். அந்த வேதனை எனக்கு மாத்திரம் தான் தெரியும் என்று ரிஸானாவின் தயார் பரீனா அழுது கொண்டே தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
 
ரிஸானாவின் தாயாரை தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
 
மகளின் செய்தியை அறிந்து கொள்ளும் வரை மகள் வீடு வந்து சேருவாள். அரசாங்கம் இதனைச் செய்யும் என்று நம்பியிருந்தேன். எனது நம்பிக்கை வீணாகி விட்டது. மகளைப் பறிகொடுத்து விட்டேன். மகளுக்காக எல்லோரும் துஆ செய்யுங்கள் என்றார்.
 
இதேவேளை சுகயீனமுற்று வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று விடுதலையாகி தனது வீட்டிலிருந்து ஒருமைல் தூரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த ரிஸானாவின் தந்தை நபீக்கிடம் இத்துயரச் செய்தி வியாழக்கிழமையே சொல்லப்பட்டது தற்போது அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
 
அவர் ஒரு இருதய நோயாளி என்பதால் இச் செய்தி மிகவும் நிதானமாகவே தெரிவிக்கப்பட்டது என ரிஸானாவின் தயாரின் சகோதரர் எ.எம்.லரீப் தெரிவித்தார்.
 
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளைமறுதினம் ரிஸானாவின் வீட்டுக்கு சமூகமளிப்பதாக தகவல் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
இன்று வெள்ளிக்கிழமை மூதூரிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்தும் ரிஸானாவின் வீட்டை நோக்கி பெரும் திரளான மக்கள் சமூகமளித்து ஆறுதல் வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  
 
(விடிவெள்ளி)
  • கருத்துக்கள உறவுகள்

ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட காணொளி வெளியிடப்பட்டமைக்கு மனிதஉரிமை அமைப்புகள் கண்டனம்!  

 

 Rizhana-srilanka-150.jpg

இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் கழுத்து அறுத்துக் கொல்லப்படும் காட்சி அடங்கிய காணொளி உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை றியாத்தில் பொது இடமொன்றில் வைத்து, றிசானாவுக்கு சவூதி அரேபிய அதிகாரிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் சுற்றிவர நிற்க, தலைகுனிய முழங்காலில் நிறுத்தப்பட்ட ரிசானாவின் கழுத்தை, ஒருவர் வாளால் வெட்டித் துண்டாடும் அதிர்ச்சியளிக்கும் காட்சியை சவூதி அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இதனை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  

அனைத்துலக அளவில் இந்தச் சம்பவம் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஆகியோரும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளட்ட பல நாடுகளும், அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளும், அனைத்துலகச் சட்டங்களை மீறும் இந்தப் படுகொலையை வன்மையாக கண்டித்துள்ளன.

 

ரிசானாவின் மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சி மிகக் கொரூரமானது என்பதால், பல இணையத்தளங்களில் இருந்து இந்தக் காணொளி நீக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dKlgxrZj7yQ[/xml]

 

http://www.seithy.com/breifNews.php?newsID=73708&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
'கலைஞன்' எழுதிய கருத்தே என் எண்ணத்திலும் உதித்தது. ' பிள்ளைகளை வளர்க்க முடியாவிட்டால் என்ன காரணத்துக்காக ஒன்றுக்கும் மேல் பிள்ளைகளைப் பெறுகின்றார்கள்?!..' என்ற கேள்வியே எனக்குள்ளும் எழுந்தது.

 

'மனிதம் மடிந்து போகின்றது. ' தெரியாமல் அறியாமல் என்ன நேர்ந்தது என்றே தெரியாமல் .....மரண தண்டனைக்கு ஆளான ரிசானாவை நினைத்தால் வேதனை மேலிடுகின்றது. 'ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

'மரணமாயினும் உனக்கு அமைதி தரட்டும் சகோதரியே!............

 

ஒரு மனிதன் தன்வாழ்க்கையில் வரப்போகும் கவலைகளையும்,கஸ்டங்களையும் முன்னோக்கி பார்த்தால் வாழவே முடியாது. பிள்ளைகுட்டிகளையும் பெற்றெடுக்கவே முடியாது.

சவுதியில் நடந்தது ஒன்றும் தில்லுமுல்லல்ல. 

 

இலங்கையில் நடந்ததுதான் தில்லு முல்லு. இதைத்தான் நிசா வரி நியுயோர்க்கிலிருந்து சொல்கிறார். ரஜிவ வியசிங்கா தடுமாறி தடுமாறி சடைய முயல்கிறார்.

 

http://www.aljazeera.com/programmes/insidestory/2013/01/201311116530348352.html#disqus_thread

  • கருத்துக்கள உறவுகள்
ரிசானாவின் குடும்பத்திற்கு சவூதி இளவரசியின் சட்ட ஆலோசகர் நிதியுதவி
ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2013 10:31 0 COMMENTS
(எம்.சுக்ரி, ஜிப்ரான்)
 
மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் நிதியுதவி வழங்கியுள்ளார்.
 
காத்தான்குடிக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் தனது சொந்த நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிம் கையளித்துள்ளார்.
 
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் மசூர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  • கருத்துக்கள உறவுகள்
மரண தண்டனை நிறைவேற்றிய தினம் வரை, தனக்கான தண்டனையை அறிந்திருக்காத றிஸானா! 
[Tuesday, 2013-01-15 09:11:19]
 
ரிஸானா நபீக்கிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு விசாரணை அடங்கலான சகல செயற்பாடுகளிலும் குறைபாடு காணப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஆர். ஹம்ஸா தெரிவித்தார். தண்டனை நிறைவேற்றும் தினம் வரை ரிஸானா தனது தண்டனை குறித்து அறிந்திருக்கவில்லை என்று கூறிய அவர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
  
ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:-
 
ரிஸானா 6 வாரங்கள் தான் சவூதியில் பணி புரிந்தார். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரிந்திருக்கவில்லை. குழந்தைகளை பராமரிக்கும் பயிற்சியும் அவருக்கு இருக்கவில்லை. அவர் தினமும் 3 தடவை குழந்தைக்கு பாலூட்டி வந்துள்ளார். சம்பவ தினம் 2 தடவை பாலூட்டிய போதும் எதுவித பிரச்சினையும் எழவில்லை. மூன்றாவது தடவையே குழந்தை மூச்சுத்திணறி இறந்துள்ளது.
 
பக்கத்துவீட்டிலுள்ள தெலுங்கு பெண்ணே ரிஸானாவுக்கு மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டார். சரியாக தகவல் பரிமாறப்படாததாலும் ரிசானா கொலை குற்றவாளியாக்கப்பட்டார்.
 
மருத்துவத்தின் அறிக்கையிலும் கொலைக்கான ஆதார மெதுவும் இருக்கவில்லை எனவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.
 
இந்த நிலையிலே மேன்முறையீடு செய்யப்பட்டதோடு மேன்முறையீட்டு நீதிபதிகளாகவும் முதலில் விசாரணை நடத்திய நீதிபதிகளே நியமிக்கப்பட்டி ருந்தனர். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ புதிய சாட்சிகளை அழைக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய அவர் சந்தேகத்திற்கிடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாமலே ரிஸானாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
 
ரிஸானாவிற்கு மரண தண்னை விதிக்கப்பட்டது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வில்லை. அவரை சென்று சந்தித்து வந்த மருத்துவர் ஊடாகவே எமக்குத் தகவல் கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். ரிஸானாவின் ஜனாஸாவை ஒப்படைக்குமாறு தூதரகத்தினூடாக அறிவித்திருந்த போதும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இஸ்லாம் மக்களுக்காகவே வாழ்கிறோம் என்று போட்டி போட்டுக் கொண்டு எத்தனை ஆளும் கட்சி எம் பி மார் இருக்கிறார்கள் .அதுவும்

நீதியமைச்சராக ரவூப் ஹக்கீம் அவர்கள்,

ரிசாத் பதியுதீன் ,மற்றும்

மகிந்த அவர்களின் நிழலையே தொடர்ந்து கொண்டிருக்கும் அஸ்வர் அவர்கள்,

கிழக்கிலங்கை முதலமைச்சர், இப்படி எவ்வளவோ பேர்.

ரிசானா ஒன்றும் அநாதை இல்லை.இவ்வளவு பெரும் நினைத்திருந்தால் கடைசி அந்தப் பிள்ளைக்கு தன்னுடைய நியாத்தை எடுத்துச் சொல்லவாவது உதவி செய்திருக்கலாம்.குர் ஆனை அராபிய மொழியில் படித்து என்ன பிரயோசனம்.உலகமே அந்த பிள்ளைக்காக குரல் கொடுத்திருந்த போது அதன் நாட்டில் இருந்தும் ,சொந்த இனத்தில் இருந்தும் ஒரு ஆதரவுக் கரம் நீட்டப்படவில்லை இவர்கள் எல்லாம் எங்கே மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்கள்.சிங்கள இனத்தோடு சேர்ந்த காலம் முழுக்க இதே வேலையை  செய்ய வேண்டியது தான்.ரிசானாவும் முஸ்லிம் மக்களும்  இவர்களை மன்னிக்கட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.