Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீதரன் எம்.பியின் அலுவலகத்திலிருந்து வெடிமருந்து மீட்பு

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரனர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலிருந்து சீ - 4 ரக வெடிமருந்து இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/56793-2013-01-12-12-29-36.html

  • தொடங்கியவர்

நேற்று, சிங்கள அரசும் ஒட்டுக்குழுக்களுக்கும் சிரிடெலோ அலுவலகத்தினுள் குண்டெறிந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைத்து செய்து 'புனர்வாழ்வு' அளிக்கின்றனர்.

 

இன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரனர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்துள் சீ - 4 ரக வெடிமருந்தை வைத்து அவரை புலியாக சித்தரிக்க முனைகின்றது.


நாளை???

தாயகத்தில் மக்களுக்காக கடைசியாக குரல் கொடுத்து இருக்கும் மீதி அரசியல்வாதிகளையும் முழுமையாக ஒடுக்கி விட சிங்கள இனவாத அரசு எடுக்கும் நடவடிக்கைகள்,அண்மையில் திரு கஜேந்திரன் பொன்னம்பலம் அவர்களை 4ம மாடி விசாரணைக்கு வரும்படி அழைக்கப்பட்டது.அடுத்து இந் நடவடிக்கை.
இது நன்கு திட்டமிடப்பட்ட சதி.
த.தே .கூ. பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் அண்மைக்காலமாக அரசு,இராணுவம்,மற்றும் புலனாய்வுப்பிரிவினரால் குறிவைக்கப்பட்டிருந்தார்.
தமிழ் மக்கள் நிலை பற்றி  சர்வதேச ஊடகப்பரப்பில் துணிச்சலாக அவர் வெளியிட்டிருந்த கருத்துகள் சம்பந்தமாக 2-3 தடவைகள் 4ம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
கூடவே அவருக்கு வழங்கப்பட்டிருந்த அரச பாதுகாப்பு விலக்கப்பட்டிருந்தது. எங்களால்  என்ன முடியுமோ அதை நாம் செய்ய வேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் திட்டமிட்ட தொடர் சதியின் உச்சமாக சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வெடி பொருள் மீட்பை  அரசாங்க புலனாய்வுப் பிரிவு பொலிஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.. இதனை அடுத்து அங்கு அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்த வேளமாலிகிதன் கைது செய்யப்பட்டு வாகனத்தில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின்  விசேட செய்தியாளர் கிளிநொச்சியில் இருந்து தெரிவித்துள்ளார்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனை சிக்க வைப்பதற்கு பல வழிகளில் அரசாங்கம் முயன்று வந்தது. ஈழப் போராட்டத்தை ஆதரத்து தனிநாட்டுக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்து இந்தியாவில் சிறீதரன் பேசினார் என முதலில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து சிக்க வைக்க முயன்றனர்.

பின்னர் அண்மையில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் குறித்து ஊடகங்களுக்கு செவ்வி வழங்கினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து உள்ளே போட முயன்றனர்.

 

 இவை தவிர அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசினதும் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் இயங்கும் சில இணையங்களும் சிறீதரனை இலக்கு வைத்து தொடர்ச்சியான சேறடிக்கும் பிரச்சாரங்களை நடத்தி வந்தன.

 

அதில் குறிப்பாக அண்மையில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தன. கிளிநொச்சியில் 15 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்களை வெளியிட்டு இருந்தன. எனினும் இது தொடர்பில் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை என்பதனை கூட்டமைப்பு உறுதி செய்திருந்தது.

 

இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்த அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அவர்களின் பாதுகாப்பு படைகள் புலனாய்வு கட்டமைப்புகள் இறுதியில் அலுவலகத்தில் வெடிபொருட்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

 

முன்னர் தேர்தல் காலத்தில் தமக்கு ஆதரவாகத் தொழிற்பட்ட 2 பிள்ளைகளின் தந்தையான வசந்தன் என்பவர் நீண்டகாலம் தம்முடன் தொடர்பற்று இருந்ததாகவும் திடிரென இன்று அவரை விலங்கிட்டு அழைத்துச் சென்ற புலனாய்வுப் பொலிசார் அவரிடம் இருந்து சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் முன்னர் இவர் சிறீதரனுடன் வேலைசெய்ததாகவும் குறிப்பிட்டு அலுவலகத்தை சோதனையிட போவதாக  தெரிவித்தனர் என

சிறீதரன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். 

 

அதன் பின் அலுவலகத்தை சோதனையிட்டு சமையல் அறையில் சிறு பொதி ஒன்றை மீட்டு உள்ளதுடன் அவரது ஊடகச் செயலாளர் பொன்காந்தன் உள்ளிட்டவர்களை தடுத்து வைத்து விசாரனை செய்வதுடன் வேளமாலிகிதனை வாகனத்துள் வைத்து விசாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தற்போதும் இலங்கை நேரம் மலை 6 மணிவரை (12.01.13) சிறீதரனின் அலுவலகத்தில் தேடுதல் தொடர்கிறது.

 

ஏற்கனவே கடந்த பல வாரங்களுக்கு முதல் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி தனது  கிளிநொச்சி அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த பொலிஸ்பாதுகாப்பு விலக்கப்பட்டதாக சிறீதரன் தெரிவித்தார்.

 

இது குறித்து சபாநாயகர், பொலிஸ்மா அதிபர், வடக்கின் பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய கட்டமைப்புகளுக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை பொலிஸ் பாதுகாப்பை மீள வழங்கவில்லை என எமக்கு தெரிவித்த சிறீதரன், தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அலுவலகம் திறந்து செயற்பட்ட 3 வருடங்களாக கொடுக்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடிரென காரணம் இன்றி வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்தார். அந்த 3 வருடங்கள் அலுவலகத்தில் இல்லாத வெடிபொருள் திடிரென சமையலறைக்குள் இப்போ வந்துள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிடம் சுட்டிக் காட்டினார்.

 

இதேவேளை வன்னியில் தமது அரசியல் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்காக தவிக்கும் பல அரச சார்பு கட்சிகளுக்கு சிறீதரனின் அரசியல் நடவடிக்கைகள் பெரும் தடையாக இருப்பதாகவும் அதனால் வன்னியில் குறிப்பாக கிளிநொச்சியில் தமது அரசியலை நிலை நிறுத்துவதாயின் சிறீதரனை முடக்க வேண்டும் என பலர் அரசாங்கத்துடன் இணைந்து முழு மூச்சாக தொழிற்பட்டதாகவும் கிளிநொச்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87505/language/ta-IN/article.aspx

அதை வைத்தவர் வசந்தன் போலிருக்கு. ஒரு காலத்தில் உண்மையாக வேலை செய்த வசந்தனை பாதுகாப்பு படை கனகரத்தினமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கு. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து ஆணுறைகள் மீட்பு

 

 

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர்.

 

இன்று சிறீதரனின் பத்திரிகை அலுவலகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின் போது எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் கிளிநொச்சி பெண் செய்தியாளரும் முள்ளிவாய்க்காலின் பின் ஞானஸ்தானம் பெற்று ஊடகவியல் தெரிந்த ஒரே பிரபல ஊடக ஜாம்பவான் தானே என தனக்கு பட்டம் சூட்டியவருமான ஒருவருமே தேடுதலின் போது படைப் புலனாய்வாளர்களால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரபல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே சிறீதரனின் அலுவலகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் யுத்த வரலாற்றில் வடகிழக்கில் நடத்தப்பட்ட புலனாய்வாளர்களின் தேடுதலின் போது தமிழ்ப் பத்திரிகையாளர்களையும் அனுமதித்து அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் என்றால் சிறீதரனின் அலுவலகத் தேடுதலாகவே இருக்க முடியும் என கொழும்பின் ஊடகவியலாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

 

இதே வேளை யாழ்ப்பாணத்திலேயே இருந்து தனது கடமைகளை ஆற்றும் இந்தப் பிரபல பத்திரிகையாளருக்கு இப்படி ஒரு தேடுதல் நடக்கப் போவதாக முன்னமே தகவல் தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் உள்ளகத் தகவல் ஒன்று  அவர் ஏற்கனவே கிளிநொச்சிக்கு சென்று காத்திருந்ததாகவும் தெரிவிக்கிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87505/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் சதி.

  • தொடங்கியவர்

தமிழர்களுக்காக அவர்களின் நலன்களுக்காக செயல்படும் உறுப்பினராக இவர் உள்ளார் என்பதை சிங்களம் கூறியுள்ளது.

இன்று சிறீதரனின் பத்திரிகை அலுவலகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின் போது எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் கிளிநொச்சி பெண் செய்தியாளரும் முள்ளிவாய்க்காலின் பின் ஞானஸ்தானம் பெற்று ஊடகவியல் தெரிந்த ஒரே பிரபல ஊடக ஜாம்பவான் தானே என தனக்கு பட்டம் சூட்டியவருமான ஒருவருமே தேடுதலின் போது படைப் புலனாய்வாளர்களால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

அட பெயரை போட்டுதள்ளுங்கப்பா. இந்த மாதிரி செய்து போடுற உங்களை விட துணிசலாய் போய் ஆணுறை கண்டெடுத்து பொலிசுக்கு கொடுக்கிற அந்த பதிரிகையாளர் தேவலை போலிருக்கு. :D

இவர்தான் வன்னி சீமான் .கொஞ்சம் அதிகமாக கர்ஜித்துவிட்டார் ,புலிகள் பாணியில் நாலு போட வளத்திற்கு வருவார் .

இவர்தான் வன்னி சீமான் .கொஞ்சம் அதிகமாக கர்ஜித்துவிட்டார் ,புலிகள் பாணியில் நாலு போட வளத்திற்கு வருவார் .

 

எல்லாரும் உங்களை மாதிரி எலிக்குஞ்சு எண்டு நினைச்சியளோ...??  பிளான் உங்கட மாதிரி சிலிர்க்கிறீயள்.....??    :icon_mrgreen:

 

ஊரிலை இருந்தும் யாரும் குரல் குடுக்கப்படாது எண்டுறீயள்....! 

 

முந்தி ஒருக்க படிப்பறிவில்லாததுகள் எண்டு சிலரை பாத்து நீங்கள்  சொன்ன ஞாபகம்...  சிறீதரன்  கண்டாவளை மகாவித்தியாலயத்தினதும் பிறகு கிழிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபர்...   கல்வியிலை உங்களை விட அதிகம்...

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல கிளிநொச்சியில் epdp க்கு எதிரா திறமான அரசியல் செய்தவர் செய்பவர்

  • கருத்துக்கள உறவுகள்
இவர்தான் வன்னி சீமான் .கொஞ்சம் அதிகமாக கர்ஜித்துவிட்டார் ,புலிகள் பாணியில் நாலு போட வளத்திற்கு வருவார் .

 

உங்களுக்கு அந்த வாழ்க்கை அமையவில்லை என்ற எரிச்சலாக்கும்  :D

உங்களுக்கு அந்த வாழ்க்கை அமையவில்லை என்ற எரிச்சலாக்கும்  :D

இப்ப தான் விளங்குது உங்களுக்கு எல்லாம் டக்கிலஸ் ,கருணா போன்றவர்களின் வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற எரிச்சல் போல கிடக்கு .

சிறிதரன் சும்மா உசுப்பெத்துகின்ற கோஸ்டி ,இனி அடக்கி வாசிப்பார் .

இவர்தான் வன்னி சீமான் .கொஞ்சம் அதிகமாக கர்ஜித்துவிட்டார் ,புலிகள் பாணியில் நாலு போட வளத்திற்கு வருவார் .

 

இந்த கரிஜிக்கும் புலிக்கு  தமிழரசுக்கட்சி சம்பந்தனின் பேச்சின் கொப்பி இன்னமும் கிடைக்கவில்லை போலும்.  <_<

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வெற்றிகரமா செய்யணும் எண்டாலே அதில கொஞ்சம் உணர்ச்சி கொஞ்சம் உசுப்பேத்தல் என்று எல்லாம் கலந்து இருக்கணும் ஒபாமா தொடக்கம் கருணாநிதி வரை தேர்தல் பிரச்சாரங்களை கேட்டு பாருங்கள் இந்த சின்ன சிம்பிள் தியரி கூட உங்களுக்கு தெரியல்லியே அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதரன் எம்.பியின் அலுவலகத்திலிருந்து வெடிமருந்து மீட்பு//

 

ஆமா..சிறிதரன் வெடி மருந்தைப் பதுக்கி வச்சிருந்து அது விலைஏற வேல்டு மாக்கற்றில டீல் பேசப்போறாரு...ஏண்டா நீ புடிச்சது ஒரு புள்ளைப்பூச்சிய..

இப்ப தான் விளங்குது உங்களுக்கு எல்லாம் டக்கிலஸ் ,கருணா போன்றவர்களின் வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற எரிச்சல் போல கிடக்கு .

சிறிதரன் சும்மா உசுப்பெத்துகின்ற கோஸ்டி ,இனி அடக்கி வாசிப்பார் .

 

போரட்டம் என்பது அடக்கி வாசித்தல் என்றால் அவர் அதை செய்வார். ஜெனிவா வரை வந்த ஆள். அது சும்மா உசுப்பேத்துதல் என்றால் அவர் அதையும் தொடர்ந்து செய்ய போகிறார்.

 

தமிழர் போராட்டங்களை தொடருவதில்லை என்று எக்கொனொமிஸ்ட் கூறியிருக்கிறது. இது மேற்கு நாடுகளின் உசுபேத்தல் என்றால் அவருக்கு இன்னொரு சகதோழன் உசுபேத்தலுக்கு கிடைத்திருக்கிறார்.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் சதி முயற்சியை கண்டிக்க வல்லமை இல்லாத சம்பந்தன்.

 

இதிலிருந்து சிங்கள - இந்திய அரச காட்டுமிராண்டிகளுக்கு கிலியை ஏற்படுத்துபவர்கள் ஸ்ரீதரன், பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் போன்றவர்களே என்பது தெளிவாகிறது.

அரசியல் வெற்றிகரமா செய்யணும் எண்டாலே அதில கொஞ்சம் உணர்ச்சி கொஞ்சம் உசுப்பேத்தல் என்று எல்லாம் கலந்து இருக்கணும் ஒபாமா தொடக்கம் கருணாநிதி வரை தேர்தல் பிரச்சாரங்களை கேட்டு பாருங்கள் இந்த சின்ன சிம்பிள் தியரி கூட உங்களுக்கு தெரியல்லியே அண்ணா

ஒபாமாவும் சீமானும் ஒரே மாதிரித்தான் பேசுகின்றவர்கள் என்றால் உங்களுக்கு வெற்றியை வைத்துக்கொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல்: சிறிதரனின் எம்.பி.
 
By M.D.Lucias 
2013-01-13 12:22:56
 
கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவ்வாறானதொரு பையையோ, ஆயுத ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான பொருட்கள் எதுவும் அலுவலகத்தில் இருந்து மீட்டிருக்க முடியாது, இது அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு சதிச் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 
 
 
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று (13) 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளரும் சிறிதரன் எம்.பி.யின் பிரத்தியே செயலாளருமான சந்தேகத்தின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்தனர்.
 
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சிறிதரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
 
நாம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். மேலும் அண்மையில் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதற்கு எதிராக நாம் செயற்பட்டோம். இவ்வாறு இடம்பெற்ற அநீதியான விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுச் சென்றோம். 
 
இந்நிலையில் கடந்த டிசம்பர் நான்காம் திகதியிலிருந்து என்னுடைய பாதுகாப்பிற்கு இருந்த பொலிஸாரும் விலக்கிகொள்ளப்பட்டனர். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்~வின் கட்டளைக்கு அமைவாக இந்து பாதுகாப்பு விலக்கிகொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பில் பல உயர்மட்டங்களுக்கு அறிவித்த போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
 
இந்நிலையிலே தனது அலுவலகத்தில் இருந்து இவ்வாறான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இராணுவத்தினர், பொலிஸார், குற்றப்புலனாய்வினர் என சுமார் 55 பேர் ஏழு வாகனங்களில் வந்து தனது அலுவலகத்தை சோதனையிட்டு பல பொருட்களை கைப்பற்றியதாக கூறியுள்ளனர்.
 
இது தமிழர் பிரதிநிதித்துவத்தில் இருந்து என்னை விலக்கி கொள்வதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதியாகும் என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்
ஊடகங்கள் மறுக்கப்பட்டு சிறீதரனின் அலுவலகத்தில் இராணுவத்தினர் அரங்கேற்றிய நாடகம்!   
[sunday, 2013-01-13 09:06:31]
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வினோதமான விசாரணை நடவடிக்கையொன்றினை நேற்று இராணுவத்தினரும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரும் நடத்தியிருக்கின்றனர். அதாவது இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு ஊடகத்தை மட்டுமே வைத்துக் கொண்டு நடத்தப்பட்ட முதலாவது சோதனை நடவடிக்கை இதுவாகவே இருக்கும் என அரசியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினரிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் திடீரென இராணுவத்தினரும், பொலிஸாரும் வீட்டினுள் புகுந்து சோதனை நடத்தியதுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரையும் கைதுசெய்திருக்கின்றனர்.
  
இந்தச் சம்பவம் நேற்று மாலை 3மணிக்கு இடம்பெற்றிருந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள எந்தவொரு ஊடகங்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் தினமுரசு பத்திரிகையாளர்களும், ஈ.பி.டி.பி அங்கத்தவர் றுசாங்கனும் உள்ளேயே இருந்துள்ளதுடன், உள்ளேயிருந்த ஆபாச பட இறுவெட்டுக்களையும், ஆணுறைகளையும் தாம் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் தனது செய்தி தளத்தில் பரபரப்புச் செய்தியினை வெளியிட்டிருக்கின்றார். நேற்று மாலை 3மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் நுழைந்து சில நிமிடங்களிலேயே அலுவலகத்திற்குள் றுசாங்கன் சிறப்பு அனுமதியுடன் நுழைந்திருக்கின்றார்.
 

மேலும் புகைப்படங்களை கூட தான் எடுத்திருப்பதாக அவர் செய்தி வெளியிட்டிருக்கின்றார். எனவே பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் திடீர் சோதனையொன்று நடத்தப்படவுள்ள விடயம் றுசாங்கனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது. இதேபோல் ஏனைய ஊடகங்களுக்கு வழங்கப்படாத அனுமதி றுசாங்கனுக்கு மட்டும் வழங்கப்பட்டது எவ்வாறு? யாழ்ப்பாணத்திலுள்ள உதயன், தினக்குரல், வலம்புரி பத்திரிகைகளை ஏற்கனவே அரச தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியில் எள்ளி நகையாடும் றுசாங்கன் யாழில் ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பலவற்றுக்கு காரணகர்த்தாவாக இருந்து வருகின்றார் என்ற விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

புலிகளுடைய காலத்தில் புலிகளின் அதி தீவிர ஆதரவாளராக இருந்து றுசாங்கன், 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் அதி தீவிர விசுவாசியாக மாறியிருக்கின்றார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு மாவட்டத்திலிருக்கும் நற்பெயரை சிதைக்கும் நோக்கில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரினால் இவர் களமிறக்கப்பட்டிருக்கின்றார். மேலும், மீட்கப்பட்டதாக கூறப்படும் ஆணுறைகளும், ஆபாசப் பட சீடிகளும் எங்கிருந்து எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினரோ அவ்வாறான இடங்களே அலுவலகத்தில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையும், மாவட்ட அமைப்பாளர் வேளமாலிகிதனின் கைதும், சீடி மீட்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளும் நன்கு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது வெளிப்பட்டிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனை சிக்க வைப்பதற்கு பல வழிகளில் முயன்று வரும் இலங்கை அரசாங்கம் ஈழப் போராட்டத்தை ஆதரித்து தனிநாட்டுக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்து இந்தியா பெங்களூரில் சிறீதரன் உரையாற்றினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து சிக்க வைக்க முயன்றனர்.

பின்னர் அண்மையில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் குறித்து ஊடகங்களுக்கு செவ்வி வழங்கினார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 4ம் மாடிவரை அழைத்து விசாரணை செய்து சிக்க வைக்க முயன்றனர்.

இவை தவிர அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசினதும் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் இயங்கும் சில இணையங்களும் சிறீதரனை இலக்கு வைத்து தொடர்ச்சியான சேறடிக்கும் பிரச்சாரங்களை நடத்தி வந்தன.

அதில் குறிப்பாக அண்மையில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தன. கிளிநொச்சியில் 15 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்களை வெளியிட்டு இருந்தன. எனினும் இது தொடர்பில் கூட்டமைப்பின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை என்பதனை கூட்டமைப்பு உறுதி செய்திருந்தது.

இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்த அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அவர்களின் பாதுகாப்பு படைகள் புலனாய்வு கட்டமைப்புகள் இறுதியில் அலுவலகத்தில் திடீரென புகுந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இது தொடர்பில் சி.சிறிதரன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டவேளை, கிளிநொச்சியில் இருக்கும் தமது அலுவலகத்தில் இருந்து பயங்கரவாதத் தடுப்பு பொலிசார் ஒரு பாலிதீன் பையை எடுத்துச் சென்றுள்ளனர் என கொழும்பில் இருக்கும் அவருக்கு ,அவரது கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறானதொரு பையையோ, ஆயுத ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான பொருட்கள் எதுவும் அலுவலகத்தில் இருந்து மீட்டிருக்க முடியாது, இது ஒரு சதிச் செயல் என்றும் சிறீதரன் கூறினார்.

 

kili_sritharan-office-seithy-1-20130113-

 

 

kili_sritharan-office-seithy-2-20130113-
 
ஒபாமாவும் சீமானும் ஒரே மாதிரித்தான் பேசுகின்றவர்கள் என்றால் உங்களுக்கு வெற்றியை வைத்துக்கொள்ளுங்கள் .

 

இந்த ஆதங்கதை படித்தால், விவாதத்தில் சுண்டல் நன்றாக விழுத்திவிட்டார் போலிருக்கு. இருந்தாலும் தங்கள் பெரிய மனது  சுண்டலுக்கு வெற்றியை கையளித்து குனிந்த தலையுடன் ஒதுங்குவதை பார்க்க எந்த கல்மனதும் ஒருதடவை வெதும்பும்.

 

எந்தனையாவது தடவை, எத்தனை மூலத்திலிருந்து, யார்யார் எந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து காட்டினாலும், சளைக்காமல், நையாண்டி, மொக்கை, குயக்கம், கோமாளித்தனம் எல்லாம் எழுத்தி யாழில் சந்தோசமாகவும் இன்பமாகவும் பொழுத்து போக்கும் தங்களின் சோர்ந்து போவிட்ட மனதை காணும் போது சுண்டல் தங்களுக்கு இதை செய்யவேண்டிய வன்மத்தை எங்கிருந்து பெற்றிருந்தார் என்பது ஆராயப்படவேண்டிய விடையம் போலத்தோன்றுகிறது.

 

ஒருவன் ஒரு சிறு தெருவில் போகும் போது 10 தடவைகள் நாய்கள் துரத்த 10 தடவை கல்லெறிந்து அவற்றை விரட்ட்டினான்; அதே ஆள் மறு நாள் இன்னொரு நீண்ட தெருவில் போகும் போது ஒரு தடவை மட்டும் நாய் துரத்த ஒருதடவை கல்லெறிந்து விரட்டினான்.அப்போது நீங்கள் அவன் முன் சென்று "நீ நன்றாக மாறிவிட்டாய், இப்போதெல்லம் கல்லெறிவதில்லை" என்று சான்றிதள் கொடுப்பீர்கள்.(ஜனநாயக கட்சி பெங்காசி விசையத்தில் பொய் சொல்லி தேர்தல் விவாதத்தை வென்றார்கள் என்ற குடியரசுக்கட்சியின் குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் சுசான் ரைசின் நியமனத்தை நிராகரித்ததை நீங்கள் படித்திருக்க சந்தர்ப்பம் இல்லை).    

 

இப்படி அரசியல் வாதிகளை தரம் பிரிப்பதில் மகா பண்டிதரான நீங்கள் எப்படி சிறீதரனின் அலுவலகத்தை அரசு முறையில்லாமல் சோதித்து பொய்கள் கூறியதை திறந்த மனதுடன் எதிர்த்து எப்படி எழுத முடியும்.

 

நீங்கள் 2009 ல் புலிகளை தோற்கடித்து தமிழர் போராட்டங்களை இனி நசுக்கிவிடலாம் என்று நினைத்தால் இத்தோடு சிறிதரனை மடக்கி இனி தமிழரை மடக்கிவிடாலம் என்று நினத்தால், அல்லது குயக்கம் எழுதுவதால் யாழில் நியாயம் எழுதுவோரை தளர வைத்துவிடலாம் மனதில் நினைத்தால் அந்த வெற்றியை நீங்கள் வைத்திருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்கள் நிச்சயம் சரியை, பிழையை ஒப்பிட்டு பார்க்க சந்தர்ப்பம் கிடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் நிம்மதியாக தமது உரிமைகள் சுதந்திரவாழ்வு பற்றி இதே வழியில் போகமுடியாது என்று உலகுக்கு சொல்லும் செய்தி  இது. :(

 

சிறிதரன் ஆரம்பத்தில் அடக்கித்தான் வாசித்தார்.

ஆனால் போகப்போக

எதுவித முன்னேற்றமுமற்றநிலையில்தான் தனது பேச்சுக்களை கடுமையாக்கினார்.

அவரது எதிரிகள் பல பக்கமுமுள்ளனர்.

அரசு

எதிரணியினர் டக்லசு உட்பட

கூட்டமைப்பு............???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.