Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால் வேறு மாநிலம் அல்லது வெளிநாட்டில் குடியேறுவேன்- கமல்

Featured Replies

30-kamal-press-meet2-300.jpg

எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எங்கு போனாலும் தமிழனாகவே இருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் ச்ந்தித்த கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், கோர்ட் வழக்கு குறித்தும் பேசினார். அவர் பேசுகையில்,விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை. தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. எனக்கு தாமதமான நீதியே கிடைத்துள்ளது. இருப்பினும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. இன்று எனக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால் இப்போது நான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த வீடு எனக்கு இல்லை. இதை நான் விற்க வேண்டும். இங்கு எத்தனையோ பிரஸ் மீட் வைத்துள்ளேன், நடனமாடியுள்ளேன், ஓடியாடியுள்ளேன். ஆனால் இதை இழக்கவும் இப்போது தயாராகி விட்டேன். அதனால்தான் கடைசி முறையாக இந்த வீட்டில் ஒருபிரஸ் மீட் வைக்க விரும்பி உங்களை அழைத்தேன். என்னடா சிரித்துக் கொண்டே சொல்கிறானே என்று பார்ககிறீர்களா.. என் வீடே அப்படித்தான், குடும்பமே அப்படித்தான். பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னது போல தனி நபரின் சொத்து முக்கியமா, நாடு முக்கியமா என்று.நான் அதை ஏற்கிறேன். நாட்டுக்கா, எனது அத்தனை சொத்துக்களையும் இழக்க நான் தயார். தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை.எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான்.இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும். எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபாரிர், ஹைதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. இந்தப்படத்திற்காக எனது அத்தனை சொத்துக்களையும் இழந்திருக்கிறேன். இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுமானால் மீதமுள்ள சொத்துக்களையும் நான் இழக்க நேரிடும். எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்.

http://tamil.oneindia.in

  • கருத்துக்கள உறவுகள்

போறது எண்டு முடிவெடுத்துவிட்டால், இந்து ராமையும், சோவன்னா ராமசாமியையும் கூட்டிக்கொண்டு போகவும்!  :icon_mrgreen:

வெளிநாட்டிற்கு வாங்கோ, நாங்களும் அகதியாக வாழமுடியாமல் வந்தவர்கள் தான்  :o

 

நாம் சொந்த நாட்டை விட்டு போவதற்கு என்ன அடிப்படை காரணம் என ஆராயவேண்டாம்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை.. பங்களாதேசை பிரிக்கேக்க காணப்படாத இந்திய ஒருமைப்பாட்டை தமிழீழத்திலும்.. தமிழகத்திலும் திணிக்க விரும்புவதன் விளைவே கமல் அகதியாகவும் காரணம்.

 

இதற்கு முஸ்லீம் மதத் தீவிரவாதத்தை ஹிந்தியம் தனக்குச் சார்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறது..! ஹிந்தியம்... இன்று தமிழகத்தில் தூண்டிவிட்டு.. கமலை அகதியாக்கி மகிழும்.. இதே முஸ்லீம் மதத் தீவிரவாதம் ஒரு நாள் அதன் உயிர் குடிக்கும் போது.. வலியில் துடிக்கும். இந்திய ஒருமைப்பாடு சின்னாபின்னமாகி.. சுக்கு நூறாகி இருக்கும்..!

 

தமிழகத் தமிழர்கள் எனியாவது சிந்திக்க வேண்டும்.. ஹிந்தியன்.. ஹிந்தியா.. ஹிந்திய ஒருமைப்பாடு என்பவை.. அவைக்கு அவசியமான்னு..! அதனால் அவர்கள் அடையும் நன்மைகள் என்ன என்று...???! தனித் தமிழக சுதந்திர தேசம் குறித்து தமிழக மக்கள் சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும். ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) உள்ள ஸ்காட்லண்ட் தனிநாடாக ஒரு வாக்கெடுப்போடு பிரிந்து சுதந்திர நாடாகப் போக முடியும் என்ற ஜனநாயகம் உலகில் இருக்கென்றால்.. ஏன் இந்தியா என்ற யூனியனில் இருந்து தமிழகம் பிரிந்து செல்ல முடியாது. இலங்கை என்ற தீவில் தமிழீழம் பிரிந்து சொல்ல முடியாது..???!!! அப்படிப் பிரிந்து செல்வதன் மூலமே தமிழர்களின் உரிமைகளை ஹிந்திய மேலாதிக்கத்திடம் இருந்தும்.. முஸ்லீம் மதத் தீவிரவாதம்..சிங்களப் பேரினவாதத்திடம் இருந்தும்..  காக்க முடியும். இது நடந்தால் மட்டுமே.. உருப்படியாக தமிழர்களின் கலையை.. பண்பாட்டை.. கலாசாரத்தை.. விழுமியங்களை.. திறமைகளையும் காக்க வளர்க்க முடியும்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நீதித்துறை என்பது ஹிந்திய வல்லாதிக்க நலனைப் பேணும் அமைப்பு முறை. அங்கு நீதி கிட்டாது கமலஹாசன். நீங்க பேசாம அமெரிக்கா போயிடுங்க. அங்க உங்கள் கலைத்திறமையையாவது மதிப்பார்கள்..!

 

மும்பையில்.. தாக்குதல் நடத்தியதற்காக.. கசாப் போன்றவர்களை தூக்கிலிடும்.. ஹிந்தியம்.. தமிழகத்தில் தமிழனை அடிக்க.. அடக்க.. கலைக்க.. அதே முஸ்லீம் மதத் தீவிரவாதத்தை வளர்த்தெடுக்கிறது.

 

இதையே தான் சிங்களமும் ஈழத்தில் தமிழர்கள் மீது.. செய்கிறது. அனுராதபுரத்தில் முஸ்லீம் பள்ளிவாசலை அழிக்கும் சிங்களம்.. அம்பாறையில்.. மட்டக்களப்பில்.. மன்னாரில்.. யாழ்ப்பாணத்தில்.. கிளிநொச்சியில்.. எந்தக் கேட்டுக் கேள்வியும் இன்றி.. அவற்றைப் புதிது புதிதாக அமைத்துக் கொடுப்பதோடு.. முஸ்லீம் மதத் தீவிரவாதம் மற்றும் அவர்களின் கடுபோக்குகள் குறித்து மெளனமும் சாதிக்கிறது..!

 

அடிப்படையில்.. ஹிந்தியமும் சிங்களமும்.. தமிழர் விரோத செயற்பாடுகளில்.. முஸ்லீம் மதத் தீவிரவாதத்தையும் இன்னொரு ஆயுதமாகப்... பயன்படுத்திக் கொள்கின்றனர். :icon_idea:

Edited by nedukkalapoovan

விஸ்வரூபம் படத்தை நான் பார்த்துவிட்டேன் . அந்தப்படத்தில் முஸ்லீமை புண்படுத்தும் படியாக எதுவுமில்லை.ஆப்கானிஸ்தானை மையப்படுத்துமிடத்து அங்கு யதார்த்தமான சில உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளது.கமலஹா சன் நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்தால் அவரை கனடாவுக்கு வரும்படி  வரவேற்கிறோம் .ஒபாமா ,கமலஹாசன் பிரபாகரன் போன்றவர்கள் உலகத்தி லேயேபொக்கிசப்படுத்தப்படவேண்டியவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
ஜெயலலிதா தனக்கு கமலஹாசன் தந்த தொலைக்காட்சி உரிமத்தை விஜய் தொலைகாட்சிக்கு கொடுத்தது ஜெயலலிதாவுக்கு உள்ளூர கோவம் உள்ளது என சொல்லப்படுகிறது.
 
உத்தரப்பிரதேசத்தில் விஸ்வரூபம் வெளியிடப்பட உள்ளதாகவும் படம் வன்முறையை தூண்டாதவரை படம் பார்க்க அனுமதிக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.


விஸ்வரூபம் வெளியிட்டிருந்தால் மிகப் பெரிய வன்முறை வெடித்திருக்கும் - ஜெ. விளக்கம்

 

images51.jpgசட்ட ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் கடமை. அதை தமிழக அரசு செய்து வருகிறது. இந்தப் படம் 524 திரையரங்களில் திரையிட இருந்தது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இந்தப் படத்தை தடை செய்யக் கோரினர். அவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் படத்துக்கு அனுமதி அளித்திருந்தால் பெருமளவில் வன்முறை வெடித்திருக்கக் கூடும்.

உளவுத் துறை மூலம் கிடைத்தத் தகவல்படி, அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு உரிய பொலிஸார் எண்ணிக்கை இல்லை.

ஒவ்வொரு திரையரங்குக்கும் தினமும் மூன்று வேளைக்கு தலா 60 பொலிஸார் தேவை. ஆனால், அதற்கு உரிய எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடியாது.

மொத்த பாதுகாப்புக்கு 56,440 பொலிஸார் தேவை. இது சாத்தியம் இல்லை. எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவே விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்க வேண்டியதாகவிட்டது.”

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

558460_278114678983793_2011805572_n.jpg

 

Stupidity of a single man would be wrong to impose on the community - VJ


விஸ்வரூபம் பிரச்சினை...நான் தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ வசிக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டியுள்ளது என்று கூறும் மரியாதைக்குரிய கமலஹாசன் அவர்களுக்கு...

1.குஜராத்தில் இசுலாமிய சகோதரிகளும், சகோதரர்களும் கொல்லப்பட்டபோது உங்களுக்குத் தோன்றவில்லையா வேறு நாட்டிற்கு சென்று விட வேண்டும் என்று...

2. ஈழத்தில் கொத்துக் கொத்தாய் தமிழினம் அழிக்கப்பட்ட போது, குழந்தைகள் கூட கொத்துக் குண்டுகளின் கோரப்பசிக்கு இரையான போது தமிழக அரசும், இந்திய அரசும் அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுத்த போது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று...

3. இறையாண்மை பேசும் இந்தியாவில் டெல்டா விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கும் போது காவிரியில் கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கின்ற பொழுது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று..

4. காதல் திருமணம் செய்த காரணத்திற்காக ஒரு கிராமமே சாதிய வெறியர்களால் சூறையாடப்பட்டபோது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று..

5. பரமக்குடியில் அப்பாவி தலித்துகள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று...

இப்படி இங்கு எத்துனையோ பிரச்சினைகள் இருக்கும் போது உங்கள் திரைப்படம் வெளிவருவதில் பிரச்சினை என்ற உடன் வெளி நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறுவது சுயநலத்தின் உச்சம் என்பதே நிதர்சனம்... (FB)

விஸ்வரூபம் பிரச்சினை...நான் தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ வசிக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டியுள்ளது என்று கூறும் மரியாதைக்குரிய கமலஹாசன் அவர்களுக்கு...

1.குஜராத்தில் இசுலாமிய சகோதரிகளும், சகோதரர்களும் கொல்லப்பட்டபோது உங்களுக்குத் தோன்றவில்லையா வேறு நாட்டிற்கு சென்று விட வேண்டும் என்று...

2. ஈழத்தில் கொத்துக் கொத்தாய் தமிழினம் அழிக்கப்பட்ட போது, குழந்தைகள் கூட கொத்துக் குண்டுகளின் கோரப்பசிக்கு இரையான போது தமிழக அரசும், இந்திய அரசும் அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுத்த போது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று...

3. இறையாண்மை பேசும் இந்தியாவில் டெல்டா விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கும் போது காவிரியில் கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கின்ற பொழுது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று..

4. காதல் திருமணம் செய்த காரணத்திற்காக ஒரு கிராமமே சாதிய வெறியர்களால் சூறையாடப்பட்டபோது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று..

5. பரமக்குடியில் அப்பாவி தலித்துகள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று...

இப்படி இங்கு எத்துனையோ பிரச்சினைகள் இருக்கும் போது உங்கள் திரைப்படம் வெளிவருவதில் பிரச்சினை என்ற உடன் வெளி நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறுவது சுயநலத்தின் உச்சம் என்பதே நிதர்சனம்... (FB)

இதைதான் சொல்வது ஆட்டுக்க மாட்டை விடுவதென்று .

  • கருத்துக்கள உறவுகள்

01022013-md-hr-2%20copy.jpg

  • கருத்துக்கள உறவுகள்
சனிக்கிழமை, 2, பிப்ரவரி 2013 (11:26 IST)
எங்கள் மாநிலத்தில் குடியேறுங்கள் :
கமலுக்கு கர்நாடக துணை முதல்வர் அழைப்பு 
 
 விஸ்வரூபம் படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த படம் வெளியிட தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
விஸ்வரூபம் படத்துக்கு எனது சொத்துக்களை அடகு வைத்து ரூ.90 கோடி முதலீடு செய்து இருப்பதாகவும், அது வெளிவரா விட்டால் எனது வீடு உள்ளிட்ட சொத்து க்களை இழக்க நேரிடும் என்றும், அதனால் தமிழ்நாடடில் இருந்து வெளியேறி மதசார்பற்ற மாநிலத்தில் குடியேறுவேன் என்றும் கமல ஹாசன் உருக்கமாக பேட்டி அளித்தார். 
 
குடியேற எந்த மாநிலமும் கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி மத சார்பற்ற நாட்டில் குடியேறுவேன் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் கமலஹாசன் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம், கர்நாடக மாநிலத்தில் குடியேற வாருங்கள் என்று அம்மாநில துணை முதல்- மந்திரி ஆர்.அசோக் அழைப்பு விடுத்து உள்ளார். 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம்,  ‘’விஸ்வரூபம் படத் துக்கு தடை விதித்து இருப்பது ஏற்புடையது அல்ல. மன வேதனையில்தான் அவர் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியுள்ளார். அவர் எங்கும் செல்ல வேண்டாம். கர்நாடகாவில் குடியேற அவருக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்று கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.