Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் - விமர்சனம்.

Featured Replies

அது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்ளிய காலம். நான் அதிகம் பார்த்த தமிழ் படங்களுள் மணிரத்னத்தின் படங்களே டாப் டென்னில் வரும். 

அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம், கதையை அங்கே சுட்டார், இந்தக் கோணம் இங்கே சுட்டார் என்று, ஆனால் அதை எல்லாம் மீறி அவர் படங்களின் மீதான ஈர்ப்பு என்பது குறையவே இல்லாத காலம் அது. முதலில் அது உடைந்து சுக்குநூறாகிப்போனது திருடா திருடா படத்தில்தான், கிட்டத்தட்ட அதே மனநிலையில் இன்று முதல் காட்சி பார்த்த இந்தக் கடல் படமும்.

என்ன ஆயிற்று அவரின் மேஜிக் மேக்கிங்கிற்கு? நல்ல மியூஸிக் டைரக்டர், நல்ல கேமரா மேன், அருமையான பாடல்கள், அழகான இரண்டு புதுமுகங்கள், நல்ல ஒரு கதை சொல்லியான ஜெமோ, ட்ரைவிங் சீட்டில் மணிரத்னம் தி க்ரேட், எப்படி வந்திருக்கவேண்டிய படம்???

அதென்னமோ நல்ல லைட்டிங்கில் படம் எடுக்கக்கூடாது என்று எதாவது வாக்கு குடுத்துவிட்டார்களா? ஏதோ அலை அடிப்பதால் அங்கொன்று இங்கொன்று சீன்கள் வெளிச்சத்தில் வருவதால் அது கடல் என்று தெரிகிறது. ஏன்? கடலை அதன் ஆத்மார்த்தமான நீலப் ப்ரதிபலிப்பில் காண்பிக்க என்ன தயக்கமோ? 

ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல, கண்ணு வலிக்கிது மக்கா :(

-0-

குழந்தையாக, சிறுவனாக, ஹீரோவாக வரும் நாயகன் கேரக்டர்கள் எல்லாமே நல்ல தேர்வு. நாயகி பல்லைப் பார்த்த உடனே தெரிந்துவிட்டது ஏதோ மனநிலை சரியில்லாத கதாபாத்திரம் என்று, ஆனால் அவருக்கான உடையில் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்று குழம்பி கடைசியில் நர்சாக அல்லது டாக்டராக அல்லது டெலிவரி ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார் என்று கண்டுகொள்கிறோம். அவருக்கு ஒரு நாலு வெள்ளை கவுன், ஹீரோவுக்கு பட்டனில்லாத சட்டை நாலு, படம் பூராவும் பீச் பக்கமும், கடலிலும் ஷூட்டிங், அதிகபட்ச செலவே சர்ச் செட்டுக்கும், அர்ஜுன் ட்ரெஸ்ஸிற்கும், அரவிந்சாமியின் புல்லட் பெட்ரோலுக்கும்தான் ஆகி இருக்கும். 

அய்யா சாமி, தூத்துக்குடிப் பக்கம் இந்தமாதிரித்தான் தமிழ் பேசுவார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் மணிரத்னம் படம் என்றால் இப்படித்தான் தமிழ் பேசுவார்கள் என்பது இப்பொழுது தெரிந்துவிட்டது. சரி அதையாவது படம் முழுக்க ஒழுங்காகப் பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, ஏதோ குறியீடு போல என்று ஃபாலோ பண்ணாமல் விட்டுவிட்டேன்.

முழுக்க கிருத்துவர்களைக் கொண்ட ஒரு கடற்கரைக் கிராமத்தின் ஒரு நல்ல கிருத்துவ பாதிரிக்கும், ஒரு கெட்ட மனிதருக்கும் (அவரும் பைபிளைக் கரைத்துக்குடித்த கிருத்துவர்தான், ஆனால் தன்னை சாத்தானாகப் பிரகடனப் படுத்திக்கொள்கிறார்) நடக்கும் கதை. நிச்சயம் போராட்டம் தடை எல்லாம் கொண்டுவந்து விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

வழக்கமான எரப்பாளி டயலாக்கிலிருந்து துவங்குகிறது ஜெமோ டச், ஆங்காங்கே ’பேயோட்ட 15 ரூவா, பாவமன்னிப்புக்கு 10 ரூவா’ என்ற முத்திரை வசனங்களோடு நகர்கிறது வசனங்கள். பாடல்கள் படத்தில் ஒன்றவே ஒன்றாது என்று முடிவெடுத்து பாவமன்னிப்பாக கடைசி பாட்டை இறுதியில் டைட்டிலோடு ஓட்டிவிடுகிறார்கள், மக்களும் விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்கள்.

ரீ ரெக்கார்டிங் - அழுத்தமான காட்சிகளில் கூட டிங் டிங் லோ வால்யூமில் வைத்த செல்போன் ரிங் போல தடுமாறுகிறது. பாவம் அவரும்தான் என்ன செய்வார்?

-0-

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது, போலவே பழைய மணிரத்னம் படங்கள் நினைவில் உள்ள ரசிகனை இது போன்ற படங்கள் கொடுத்து திருப்திப்படுத்தவும் முடியாது. 


மீண்டும் ஒழிமுறியை ஜெமோவுக்காகவும், விண்ணைத்தாண்டி வருவாயாவை ரஹ்மானுக்காகவும், இதயத்தைத் திருடாதேவை மணிரத்னத்திற்காகவும்,  மின்சாரக் கனவை ராஜீவ் மேனனுக்காகவும் பார்த்து என்னுடைய ஆதங்கத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும்.

 

 

http://palaapattarai.blogspot.com/2013/02/blog-post.html

  • தொடங்கியவர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கி, ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கடல். ஓர் கடல்சார் பகுதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம், கிறிஸ்துவ வாழ்வியலைச் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. மீனவ கிராமத்தில் இருக்கின்ற சிறுவன் தொம்பை. அவன் சிறுவயதிலேயே தன் தாயை இழக்கின்றான். சிறு வயதில் தனிமைப்படுத்தப்பட்டு, அவன் சிறிது சிறிதாக தன்னைச் சுற்றியுள்ளவர்களை வெறுக்கின்றான். அந்த ஊருக்கு புதிய பாதிரியராக வரும் அரவிந்தசாமி. அவனை மாற்ற முயற்சி செய்கிறார். அவன், அவர் வளர்ப்பிலேயே வளர்ந்து இளைஞன் ஆகின்றான். (அவர்தான் ஹீரோ) இளைஞனை இயேசு கிறிஸ்துவுக்கு கட்டுப்பட்டவனாக வாழ வலியுறுத்துகிறார். அந்த நேரத்தில் அவன் பியா எனும் பெண்ணைச் சந்திக்கிறான். (அதாவது ஹீரோயின்) அவள் மேல் ஈர்ப்பு எற்ப்பட்டு அவள் மேல் காதலும் கொள்கின்றான்.

 

இந்த நேரத்தில் திடீரென மேசைக்காரர் எனப்படும் அர்ஜூன் (இவர்தான் வில்லன்) குண்டடிபட்டு அரவிந்த சாமியிடன் அடைக்கலம் ஆகிறார். தொடர்ந்து அர்ஜூனுக்கும், பாதிரியரான சாமுக்கும் ஏற்கனவே இருந்த முன்பகை காரணமாக பாதிரியரான அரவிந்தசாமி, மேசைக்காரரான அர்ஜூனால் பழிவாங்கப்பட்டு, ஊர் மக்கள் போலிச் சாமியார் என அரவிந்தசாமியை அடித்து காவல் துறையில் ஒப்படைத்து,  அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். தொம்பை எனப்படும் கவுதம் யாருமற்று, அனாதரவாக்கப்பட்டு, பாதிரியாரை அடித்த மக்களை பழிவாங்க எண்ணுகின்றான். அதன்படி அர்ஜூனிடம் அடியாளாக சேருகிறான். எக்கச்சக்கமாக கொலைகளும் பண்ணுகிறார். ஜெயிலில் இருந்து வெளியே வருகின்ற அரவிந்தசாமி அர்ஜுனிடம் இருந்து வெளி வரவேண்டும் என மன்றாடுகிறார்.2b076630d8c675743d77d245338c292d.jpg

 

இந்த நேரத்தில் காதலியிடம் தான் யார் என்பதைக் கூறுகிறான் தொம்பை. அவள் பரவாயில்லை. இனிமேல் எந்த தவறும் செய்யாதே என்கிறாள். இறுதியில், மேசைக்காரர் பழிவாங்கப்பட்டாரா? தொம்பையும், பியாவும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது படத்தின் உச்சநிலை.

 

இருக்கையின் பின் ஒரு பெண்குரல் கேட்டது. கவுதமின் நடிப்பு முதல் படத்திற்கு எவ்வளவு இருக்கவேண்டுமோ,  அந்த அளவிற்கே தன் நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். துளசி பெரிதும் கவர்கிற மாதிரியோ அல்லது நடிக்கின்ற மாதிரியோ இல்லை. அர்ஜூன் மட்டுமே படத்தை தாங்கி நிற்கிறார். அப்பொழுது கவுதமும், அரவிந்தசாமியும் உதவி செய்கிறார்கள்.

 

ஆரம்பத்தில் சிறுவனான தொம்பைக்கும், பாதிரியாரான சாமுக்கும் இடையிலான உறவுமுறை அவ்வளவு, கவித்துவமாகவும், தரமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதன் பின்னான காட்சியமைப்புகளும் சரி, அரசியல் பார்வைகளுமே சரி மிக மலிவான சினிமா ரசனையோடு காட்சியமைப்புகள் நகரும். கிறிஸ்தவ மத நம்பிக்கைகளையும் அந்த மக்களையும் தனிப்பட்ட (கதை உருவாக்குகிற? திரைக்கதை உருவாக்குகிற) காரணங்களுக்காக ஆட்டு மந்தைகள் எனக் குறிப்பிடும்  விமர்சனப் பார்வை (வசனமே வருகிறது) படத்தில் தானாக மையம்கொள்கிறது.

 

f4d4ca9f468916b2c7b0ae35afe6145b.jpgஒரு கட்டத்தில் பொன்வண்ணனை அர்ஜூன் கொலை செய்கிறார். பின் அந்த கொலையைச் செய்தது அயல் நாட்டு இராணுவம் எனவும் கூறி மிக இலகுவாக சில விடயங்களைக் கடந்து செல்கிறார். மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது இலங்கை இராணுவமும், இந்திய அரசும் மாற்றான் பிள்ளை உணர்வுடன் செயல்படுவது போல் சினிமா துறையினரின் பார்வையும், பறி போய்க் கொண்டிருப்பதுதான் மிகப் பெரும் சோகம். மேலும் காட்சியமைப்புகள் எங்கேயோ தொடர்ச்சியாய் வெட்டு விழுவதைப் போன்றும், சரியான முடிவுத்தன்மை இல்லாமலும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. ராஜிவ்மேனனின் ஒளிப்பதிவு அந்த நிலம், கடல் சார்ந்த பகுதிகளை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பது திரைப்படத்தின் சிறப்பு. மேலும் பாடல்களின் என்றுமே நாம் பார்க்கின்ற மணிரத்னத்தை நீங்கள் காணலாம்.

 

இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஏதோ தன் பங்கிற்கு மூன்று பாடல்களும், பின்னணி இசையும் அமைத்திருக்கிறார். மிக மெல்லியதான இசைக்கோர்வை,எந்தவித இடர்பாடின்றி இசை மட்டும் மெல்ல நகர்கிறது.. அதே போல், திரைப்படத்தின் வசனம், கிறிஸ்தவ சமுதாய மக்களின் மேல் இருக்கின்ற விமர்சனங்களை அள்ளி வீசியிருக்கிறார்கள். சிறுபான்மையினரின் மேலான கோபம் ஏன் என்று மட்டும்தான் புரியவில்லை. உபயம் ஜெமோ என்றாலும் மணிரத்னம் என்ன பண்ணிக் கொண்டிருந்தார் என்கிற கேள்வியும் எழுகிறது.

 

மணிரத்னம் படங்களில், கட்டுக் கோப்பாக அமைக்கப் பட்டிருக்கும்  கதாபாத்திர வடிவமைப்பு என்பது கூட அவ்வளவு சாதாரணமாகவும், மற்ற கமர்ஷியல் பட இயக்குநர்களின் கதாப்பாத்திரங்கள் போல் மலிந்து கிடக்கின்றது. ஒவ்வொரு காதாப்பாத்திரங்களுக்கு ஓராயிரம் ஓட்டை, பொன்வண்ணன் என் வந்தார்? எதுக்கு செத்தார் என்றே தெரியவில்லை. (நீங்களே யோசிச்சுக்கோங்கன்னு நம்மகிட்ட விட்ருறாரு டைரக்டர்) அதேபோன்று ஓர் திரைப்படத்தின் தன்மையையும் அதன் வண்ணத்தையும் தீர்மானிப்பது கதைக்களனும், அங்கு வாழும் மக்களும் தான். அதிலும், அவர்கள் பேசும் வட்டார வழக்கை வம்படியாக, தமிழ் நடிகர்களை பேச வைத்து ஏதே கர கரவென மண்ணை வாயில் மெல்லும் அனுபவம் தான் மிஞ்சுகிறது.

கதை நடக்கும் களம் எதுவென்பதும், அதன் நிலப்பகுதிகள் சார்ந்த தன்மைகள் எதுவும் சொல்லப்படவும் இல்லை,வெளிப்படவும் இல்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியான திரைப்படம், மிக மலிவான திரைப்படமாக வந்திருப்பதென்பது மணிரத்னத்தின் வீழ்ச்சியையே காண்பிக்கிறது.3615202e6f52b030c5060b4beef9f0a4.jpg

 

இது மணிரத்னம் படம் மாதிரியும் இல்லை.நல்ல படமாகவும் இல்லை..

 

கலை வற்றிக் கொண்டிருக்கிற கலைஞனின் கானல் நீர் கடல்.

 

 

 

http://cinemobita.com/cinenews/views/643

  • கருத்துக்கள உறவுகள்

கடலையும் தாண்டி

அடுத்த சர்ச்சை முத்தம்.

இதன் டிரெயிலரும் டேவிட் பட டிரெயிலரும் விஸ்பரூபம் பார்க்கும் போது போட்டார்கள் ,இரண்டும் வெறும் செயற்கையாக இருந்தது .

மணிரத்தினத்தின் சரக்கு வற்றி கனகாலம் அல்லது இராவணன் போலொரு மிக கேவலமான படத்தை எடுப்பாரா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை படிக்கவே தலை சுற்றுகிறது; :blink:

ஆருதலாகா பார்த்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்... :rolleyes:

மணிரத்தினம் எப்போது வீழ்வார் என்று பார்த்து கொண்டே ஒரு கூட்டம் அலையுது, ஆனால் பம்பாய் படத்துக்கு பிறகு அலைபாயுதே ஒரு படத்தை தவிர மணிர்த்தினம் படங்களில் அவரது முத்திரை இல்லை என்பது சோகமான விடயம், அத்தோடு மணிரத்தினம் P.C சிறீராமுடைய ஒளிப்பதிவில் எடுத்த படங்கள் தான் சிறந்தத விமர்சனக்களைப் பெற்றன, ஏனோ தெரியவில்லை திருடா திருடாவுக்குப் பிறகு அலைபாயுதேயில் மட்டும் தான் இருவரும் ஒன்றாக செயற்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடல் படத்திற்கு எதிராக கிருஸ்துவ அமைப்பு போர்கொடி : 

சென்னை கமிஷனரிடம் புகார்

 

 கிறிஸ்தவர்களை அவமதிக்கும் காட்சிகள் 'கடல்' படத்தில் இருப்பதாகவும், அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை கமிஷனரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவை இந்திய கிறிஸ்தவர்கள் ஜனநாயக கட்சி சார் பில் கொடுக்கப்பட்டது. கடல் படத்தில் கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் 7 காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 

படத்தில் கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்தும் அந்த 7 காட்சிக ளை நீக்க தவறினால் போராட்டத்தில் களத்தில் இறங்குவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

கடல் படத்தை தடை செய்ய தடை செய்வதோடு, அந்த படத்தை இயக்கிய மணிரத்னம் மற்றும் படத்தை தணிக்கை செய்த உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சர்ச்சைக்கு உரிய காட்சிகளை ஒரு வார காலத்திற்குள் நீக்கா விட்டால், பெரிய போராட்டம் நடைபெறும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=91547

  • கருத்துக்கள உறவுகள்

கடல் - திரை விமர்சனம்

 

 அதாகப்பட்டது... :

நம்ம கார்த்திக்கு மவனும், ராதா மவளும் சோடி போட்டிருக்கிற படம், அதுவும் மணிரத்னம் டைரக்சன்லன்னா சும்மாவா..ஏலெ, கேட்டதுமே ஜில்லுன்னு இருக்குல்லா? போதாததுக்கு லிப்-கிஸ்ன்னு வேற கிளப்பிவிட்டுட்டாங்க..நம்ம ஜெயமோகன் டயலாக் வேற.(அட, பயப்பாடாதீக பயபுள்ளைகளா..அவரு சினிமாக்கு மட்டும் தமிழ்ல தான் எழுதுவாரு..நம்புங்க!)..கொஞ்சநாளாவே இங்க நல்ல படங்கள்லாம் வர்றதில்லை, இது என்னாகுதோன்னு பயந்துக்கிட்டே இருந்தோம்..’யாரும் பாக்காத’ படமுல்லா..அதான் சட்டுப்புட்டுன்னு ரிலீஸ் பண்ணிப்புட்டாக.

K_1.jpeg

 

ஒரு ஊர்ல.....................:

நல்லாக் கேட்டுக்கோங்க..நம்ம அர்ஜீனும், சிவப்ப்பழகன் அர்விந்தசாமியும் ஃபாதர் ஆகறதுக்கு படிக்காக..அய்யய்யோ, பாலியல் கல்வின்னு நினைச்சுப்புடாதீக மக்கா..இது சர்ச்-ல ஃபாதர் ஆகறதுக்கான படிப்பாக்கும்..அர்விந்தசாமி நல்ல புள்ளை, அர்ஜூனு சோக்காளி..படிக்க வந்த இடத்துல படிக்கிற சோலியை மட்டும்தானே பார்க்கணும்? அர்ஜூனு வேறொரு சோலி பாத்துப்புடுதாரு.அதை அர்விந்தசாமி பெரிய்ய ஃபாதர்க கிட்ட போட்டுக்கொடுத்துடுதாரு..அதனால அர்ஜூனு ஃபாதர் ஆக முடியாமப் போகுது..அப்போ அர்ஜூனு தொடைதட்டி சபதம் எடுக்காரு.’ஏலே அர்விந்தசாமி..உன்னையும் டர்ர் ஆக்குவேம்ல’ன்னு.

அப்புறம் பாத்தீகன்னா, அர்ஜூனு டான் ஆகிடுதாரு..அர்விந்தசாமி ஃபாதர் ஆகி(சர்ச்ல தான்), அர்ஜூனு ஊருப்பக்கமே வந்திடுதாரு..அப்புறமென்னலே, அன்புக்கும் வெறுப்புக்கும்-நன்மைக்கும் தீமைக்கும்-அதுக்கும் இதுக்கும் நடக்கிற ஃபைட் தாம்லெ படம்.

உரிச்சா....:

ஏலெ, இது மாதிரி யதார்த்தமா, உக்கிரமா ஒரு படம் பார்த்து எத்தனை நாளாச்சு..அதுவும் முத பாதி பாத்தீகன்னா, சர்ச்ச்ல காளியாத்தா சாமீ வந்த வந்தமாதிரி அப்படி ஒரு ஆக்ரோசம்..இடைவேளை விடற வரைக்கும் ராதா மவளோட லிப்-கிஸ்ஸே ஞாபகம் வரலைன்னா பார்த்துக்கோங்களேன்!

அரவிந்தசாமி ஃபாதரா ஊருக்கு வரும்போது, சர்ச் கிடக்கிற கெதியும், அந்த சனங்க பேசுற பேச்சும் நம்மளை அப்படியே படத்துக்குள்ள இழுத்துறுதுய்யா..என்ன இருந்தாலும் நம்ம பயலுவல்லா..சாமீன்னா பயந்து நடுங்காம, தோள்ல கைபோட்டுல்லா பேசுறாங்க..(இயேசுவையும் சர்ச்சையும் பத்தி ஆரம்பத்துல அந்த சனங்க நக்கலா பேசுறதுக்கு யாரும் பஞ்சாயத்தைக் கூட்டாம இருக்கணும். ஆனா ஒட்டுமொத்தமா ’அன்னை வேளாங்கண்ணி’ படம் தராத பக்தியெல்ல சொல்லுது!)

அந்த ஊருல ஏறக்குறைய அனாதையா சுத்துற பய மேல ஃபாதர் கருணை காட்டுறதும், அன்பாலயே அந்த பயல மாத்தறதும் கவிதை.கவிதை. (ஏ, உங்களுக்கு தனியா வேறெ சொல்லணுமாக்கும், அந்தப் பயதாம்லெ கார்த்திக்கு மவன் கௌதமு!).

அப்புறம் வாராரு அர்ஜூனு..வந்து அவரு பண்ற ஒரு காரியம் இருக்கே..ஏ, அதை வெளில சொல்றது தப்புல்லா..நமக்கே பக்குன்னுல்லா ஆயிடுச்சு..படத்துல ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்குய்யா.அதெல்லாம் சொல்றது நியாயமில்லைல்ல..அரவிந்தசாமி திருத்துன பயலை, அர்ஜூனு திரும்ப ரவுடியா ஆக்க பாக்குதாரு..இன்னொரு பக்கம் ராதா மவளோட வெள்ளந்தியான அன்பு அந்த பையனுக்கு கிடைக்கு..அப்புறமென்ன, ஃபாதர்-மொதலாளி-ஹீரோயின்னு மூணுபேர்ல யாரு அதிக தாக்கத்தை ஹீரோ மேல உண்டாக்குதாங்கன்னு கதை பிச்சுக்கிட்டுப் போகுது.

ஆன ஒன்னுய்யா, இந்த மணிரத்னம் ரொம்ப நாளைக்கு அப்புறம் மனுசன் பாக்கும்படியா ஒரு படம் எடுத்துருக்காரு..வழக்கமா அவரு, இந்திக்கும் தமிழுக்கும் பொருந்தற மாதிரி ஒரு ‘ஜந்து’வைல்லா ரெடி பண்ணுவாரு..இது அப்படி இல்லை, படம்யா..படம்...கலக்கிப்புட்டாரு!

அரவிந்தசாமி :

k_a.jpg

 

இவரு சினிமாவே வேணாம்னு போனவருல்ல..ஏந்திடீர்னு வந்திருக்காருன்னு எனக்கு அப்பவே டவுட்ல..படத்தைப் பாக்கவுமில்ல தெரியுது..ஃபாதர்னா ஃபாதர்..அப்படி ஒரு தங்கமான ஃபாதர். ஆத்தீ, இப்படியாப்பட்ட நல்ல மனுசனையா நானா யோசிச்சேன் ல அப்படி எழுதுனோம்..சாமி..சாமி-ன்னு கன்னத்துல போட்டுக்கிட்டேம்லெ..அப்படி ஒரு நடிப்பு. இப்படி ஒரு கேரக்டெரு கொடுத்தா, எவம்தான் நடிக்க மாட்டேன்னு சொல்லுவாம்?. ஏ, இப்பச் சொல்லுதேம்ல..படத்துக்கு ஹீரோவே இந்த ’ஃபாதர் சாம்’ தாம்லெ!

கருணையின் வடிவமா காட்டுறதுக்கு இவரை விடச் சரியான ஆளு வேறெ யாரு இருக்கா? மணிரத்னம் லேசுப்பட்ட ஆளு இல்லவே!..எப்பிடி பிடிச்சாந்திருக்கார்

 பாத்தீகளா?

அர்ஜூன் :

நல்ல நடிப்பு தாம்லெ..ஆனாலும் இந்தாளு இப்படி ஒரு வில்லத்தனமா கேரக்டருக்கு எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தெரியலை..அப்படி ஒன்னும் வயசாகிடலையே..ரசினிக்கு சின்னப்பையன் தானெலெ?..ஆனாலும் அந்தாளு தைரியத்தைப் பாராட்டணும்..மனுசன் கொன்னுட்டாரு!

கௌதம் :

K_G.jpg

இந்தப் பையன் சிம்பு மாதிரி கெக்கெபிக்கேன்னு இருக்காரே..தேறுவாரான்னு நமக்கு டவுட்டாத் தாம்லெ இருந்துச்சு..ஆனாலும் அந்த சின்ன கொள்ளிக்கண்ணை வச்சுக்கிட்டே, பல எக்ஸ்பிரசனல்ல கொடுக்காரு..கண்ணீரே வத்திப்போன ஒரு சீவனாவும், அந்த பிரசவ சீனுல புதுசாப் பிறந்து அழுற மனுசனாவும்..அட, அட! மீனவப் பையன் வேசத்துக்கு ஓகே தாம்லெ..இதே மாதிரி நல்ல படமா நடிச்சா பையன் பொழச்சுக்கிடுவாரு!..ஒரு நடிகனா கார்த்திக்கு பேரை காப்பாத்திட்டாரு!

துளசி :

கொஞ்சம் மூளை வளர்ச்சி நின்னுபோன அல்லது மூளை உறைஞ்சு போன அல்லது லப்பாதிக்காஜக்கோமக்கா-ன்னு என்னமோ ஒரு பிரச்சினை உள்ள பிள்ளையா நடிச்சிருக்கு. ஏ, அதுக்காக கவலைப்பட வேணாம்..நமக்கு கிளிவேஜ் சீன் இருக்கு, கேட்டியளா? ஆனா ஒன்னு, இந்தப் புள்ளை நல்லா நடிக்குது..அக்காக்கு மேலெ,,அம்மாக்கு கீழன்னு வச்சிக்கோங்களேன்..மொத்தத்துல மொத படத்துல ராதா எப்படி இருந்துச்சோ, அப்படியே இருக்கு. இன்னும் ரெண்டு, மூணு படம் பண்ணாத்தான் தெரியும், தேறுதான்னு.

k_h.jpg

ஏ, நாம என்ன பெருசா கேட்கிறோம்? ஒரு ராதா மாதிரி பாக்குறதுக்கு அழகாவும் இருக்கிற, நடிக்கவும் தெரிஞ்ச நடிகை வேணும்னு ஆசைப்படறது தப்பா? ஏசைய்யா கண்ணைத் திறக்க மாட்டேங்கிறாரே? வேற வழியில்லை, பேசாம ராதாவையே டயட் இருக்கச் சொல்ல வேண்டியதாம் போல!

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- இந்த கதைக்கு தேவையே இல்லாத சில காதல் காட்சிகள் + டூயட்கள்..ஆனாலும் சினிமால்ல..என்ன செய்ய!

- கதாநாயகிக்கு என்ன நோய்(?)ன்னு என்னை மாதிரி ஆளுங்களுக்கும் புரியறமாதிரி சொல்லாம விட்டது.(சொல்லுதாங்கலெ,புரியலைல்ல.)

- ஏ, முடிச்சுப் போடறது ஒரு சுகம்னா முடிச்ச அவுக்கிறது தனி சுகம்னு ஏதோ மலையாள பிட்டு படத்துல சொல்லுவாகல்ல..அது சரி தாம்லெ..படத்துல நிதானமா, வலுவா முடிச்சு போட்டளவுக்கு, நிதானமா புடிச்ச அவுக்கலை பாத்துக்கோ..படத்தை முடிக்கணுமேன்னு, சினிமாத்தனமா ஒரு கிளைமாக்ஸ் ஃபைட் வச்சு, டபக்குன்னு முடிச்சை அவுத்துட்டாக. ஒரு நல்ல நாவலை படக்குன்னு முடிச்ச ஃபீலிங்யா.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- மணிரத்னத்தின் கச்சிதமான திரைக்கதை + இயக்கம்

- ராஜீவ் மேனனின் கேமரா..சும்மாவே மணி படத்துல கலக்குவாங்க..இதுல கடல் வேறெ..கேக்கணுமா? கொள்ளை அழகுல்லா..குறிப்பாக கிளைமேக்ஸ் சீன்..படத்துல ஹீரோயின்னா, அது கடல் தாம்லெ!

- ஏ.ஆர்,ரஹ்மான் இசைன்னா சொல்லவா வேணும்? பாட்டுகளும் பெக்கிரவுண்டு மூசிக்கும் பட்டயக்கிளப்புது. (அந்த டைட்டில் மியூசிக் மட்டும், அந்த சீன்களோட ஒட்டலை!)

- ஜெயமோகனின் கதை-வசனம்-திரைக்கதை : ’கதை வறட்சி, அதனால தான் இங்கிலிபீசு படத்தை சுடுதோம்’ன்னு சொல்றவங்க, கண்டிப்பா இந்தப் படத்தைப் பார்க்கணும். இலக்கியவாதிகளை எப்படி யூஸ் பண்றதுன்னும் மணிரத்னம்கிட்ட கத்துக்கணும். படத்தின் பெரும்பலமே இயல்பான வசனங்கள் தான்..’ஏலெ, மக்கா, நாற முண்டை’ என அப்படியே தெக்குப்பக்கம் போய் வந்த உணர்வைத்தரும் வார்த்தைப் பிரயோகம்..’தப்பு செய்றது நடக்கர மாதிரி, மனுசன்னு தானா வந்திடும்.’ என்பது போன்ற நறுக்கு தெறிச்ச மாதிரி வசனங்கள்.

மணியோ ஒத்தைவரி ஆளு..இவரோ எழுதித் தள்ளுற ஆளு..ரெண்டும் சேர்ந்து என்ன செய்துகளோன்னு ஒரு பயம் இருந்துச்சு. நம்ம தெக்கத்தி ஆளுக ஒத்தை வார்த்தைல பேசுனா நலலவா இருக்கும்..பரவாயில்லைய்யா, மணி நல்லா சுதந்திரம் கொடுத்திருக்காரு. இவரும் அடிச்சு விளையாடி இருக்காரு. (ஆதியில கோவில்பட்டித் தமிழா இருந்த என் தமிழ், அப்புறம் மெட்ராஸ் பாஷை மிக்ஸ் ஆகி, கூடவே கோயம்புத்தூர் ஸ்லாங்கும் கலந்து, இப்போ ஏதோ ஒரு தமிழ் பேசிக்கிட்டு திரியறேன். எனக்கே இந்தப் படம் பார்க்கவும் ஏலெ, மக்கான்னு தான் வருது பார்த்துக்கோங்க!)

அப்புறம்...:

எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மணிரத்னம் படம் பார்த்து? அந்த மனுசனை எல்லாரும் தலையில வச்சு ஆடுறதுலயும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யுது.

மணி படம்னா சர்ச்சை இல்லாமலா?..ஆரம்ப காட்சிகளை மட்டும் பார்க்கிற மீனவ அமைப்புகளோ,சர்ச்களோ பஞ்சாயத்து கூட்ட வாய்ப்பு இருக்கு.அப்புறம் நம்ம இணைய புர்ச்சியாளர்கள் படத்தை நுணுக்கமா ஆராய்ச்சி, இதுவும் பார்ப்பனீய படமேன்னு சொல்லத்தான் போறாங்க.சரி, நமக்கும் பொழுதுபோகணுமில்லை..

பார்க்கலாமா? :

-  ஒரு கிறிஸ்தவ கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த உணர்வைத் தருவதாலும், அன்பையே போதிக்கும் கிறிஸ்தவத்தை முன்னிறுத்துவதாலும், அதன் பிரதிநிதிகளான ஃபாதர்கள்/ஸிஸ்டர்களின் தியாகத்தை, அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக நமக்கு உணர்த்துவதாலும்,அன்பு-அஹிம்சை-அறம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை நமக்குள் எழுப்புவதாலும்........

                     கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

http://sengovi.blogspot.co.uk/2013/02/blog-post.html

கடல் - திரை விமர்சனம்

 

பார்க்கலாமா? :

-  ஒரு கிறிஸ்தவ கிராமத்திலேயே பிறந்து வளர்ந்த உணர்வைத் தருவதாலும், அன்பையே போதிக்கும் கிறிஸ்தவத்தை முன்னிறுத்துவதாலும், அதன் பிரதிநிதிகளான ஃபாதர்கள்/ஸிஸ்டர்களின் தியாகத்தை, அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக நமக்கு உணர்த்துவதாலும்,அன்பு-அஹிம்சை-அறம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை நமக்குள் எழுப்புவதாலும்........

                     கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

http://sengovi.blogspot.co.uk/2013/02/blog-post.html

அந்த பந்திக்கு  :D .

 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமும் இல்லை.

 

கடல் படத்தை 5 டொலருக்கு கனேடிய தியட்டரில் பார்த்தேன்.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தியட்டரில் பார்த்த தமிழ் படம்.

 

படம் சொல்லி கொள்ளும் படி இல்லை. இழுபட்ட படம், அதற்காக படு கேவலம் என்றும் சொல்ல முடியாத இரண்டும் கேட்டன்.

 

ஆனால் பின்னணி காட்சிகள் பல நன்றக இருந்தன.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கார்த்திக்

அவருடைய முகத்திற்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம் என இருக்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

Ai Du by Ali Farka Toure with Ry Cooder (Talking Timbuktu)

 

 

 

 

 
ரகுமானுமா??
 

http://www.youtube.com/watch?v=8JtmDgz7rsA     :o  :o

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கார்த்திக்

அவருடைய முகத்திற்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம் என இருக்கின்றேன் 

 

ஆகா கார்த்திக்கின் மகன் தான் நடித்தது. கார்த்திக் அல்ல. அப்பாவின் முகத்திற்காக மகனின் படம் பார்ப்பீர்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா கார்த்திக்கின் மகன் தான் நடித்தது. கார்த்திக் அல்ல. அப்பாவின் முகத்திற்காக மகனின் படம் பார்ப்பீர்களா? :D

கார்த்திக் நல்ல நடிகர் எனக்கு மிகவும் பிடித்த அதிகம் அலாட்டாத நடிகர்

அவருடைய மகன் முதன் முதலாக நடிக்கும் போது நல்லதோ கெட்டதோ அவருக்கு ஆதரவு வழங்கி ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்

 

அவருடைய பேரன் முத்துராமன் மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியும் ஆனால் அவரைச் சரியான இடத்தில் நீந்த விட்டால் நீந்துவார்

கார்த்திக்கை எனக்குப் பிடிப்பதால் அவருடைய மகனுக்கு எனது ஆதரவை வழங்குகின்றேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

Ai Du by Ali Farka Toure with Ry Cooder (Talking Timbuktu)

 

 

 

 
ரகுமானுமா??
     :o  :o

 

இதுதான் கனகாலமா நடக்குது.. அதிர்ச்சி வேண்டாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா தப்பிட்டன்    :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் தியேட்டர்ல படம் பாத்தே கனகாலமாகுது . இணையமே துணை  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.