Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் இனத்தின் சில மனிதங்கள்.....

Featured Replies

  • தொடங்கியவர்
 
580527_486106688119592_1141777108_n.jpg

Edited by யாழ்அன்பு

  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply

ஊரை சுற்றுவது என்றால் என்ன லேசா?

ஊரில் உள்ளவனை உழக்க அவன் கதைவிடுகின்றான் அந்த விளக்கம் எமக்கு இல்லை .

இந்த களத்தில் பலமுறை 'ஊர் அந்தமாதிரி' எனவும் 'போய் பாருங்கள்' எனவும் எழுதியவர் நீங்கள். அதாவது அங்கு நிலைமை எல்லாம் சுமுகம் என எழுதியவர்.

அதை விளங்கும் விளக்கமும் உள்ளது.

உங்கள் சொந்த மகன் சொகுசு கப்பல் பயணம் போன இடத்தில் ஏற்பட்ட சூறாவளி பற்றி ஒரு திரியே திறந்தவர் நீங்கள். ஆனால் தாயகத்தில் சிறுமிகள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்ப்பப்பட்ட பொழுது எந்த அனுதாபத்தையோ இல்லை கருத்தையோ எழுதாதவர் நீங்கள்.

அதை விளங்கும் விளக்கமும் உள்ளது.

Edited by akootha

எங்கே  இருக்கின்றீர்கள் சண்டமாருதன்

இலங்கை பாராளுமன்றத்திலும்

அமைச்சர்களின் பேச்சிலும் இலங்கை தூதரகங்கள் ஊடாவும் பேசும் அத்தனையும் புலம் பெயர் தமிழர் புலம் பெயர் தமிழர் என்பது தானே.  

அண்மையில் நீதிபதியின் பதவி   இறக்கத்திலும்  கூட புலம் பெயர் கைகள் இருப்பதாக சிறீலங்கா வெளிநாடுகளுக்கு புலுடா விட்டதே.....

நீங்கள் பலவற்றிலும் கண்ணை  மூடிவிட்டால் ஒன்றுமில்லை என்றாகுமா???

இதுவும் எமது இனத்தின் பெரும் பலவீனம்

நம்ம அண்ணன் தம்பியின் பலம் எமக்கு தெரிவதில்லை. அல்லது ஒத்துக்கொள்வதில்லை.

புலம்பெயர் தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முற்படுவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறைகூறினார் -

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13617

  • தொடங்கியவர்

எம்மினத்தின் எதிரிகளை விட  துரோகிகளே ஆபத்தானவர்கள் என்று தலைவர் எப்பவோ சொல்லிவிட்டார் நாம்தான் புரியாமல் இருக்குறோம் 

எம்மினத்தின் எதிரிகளை விட  துரோகிகளே ஆபத்தானவர்கள் என்று தலைவர் எப்பவோ சொல்லிவிட்டார் நாம்தான் புரியாமல் இருக்குறோம் 

புலிக்கு மற்ற இயக்கங்கள் துரோகி மற்ற இயக்கங்களுக்கு புலி துரோகி. யாருக்கு யார் துரோகி என்பதே முக்கியம்.

துரோகி துரோகி என்று அரங்கேற்றிய வன்முறைக்கே அரசியல் என்று கற்பித்து கடசியில் இந்த இனம் உலக ஒப்புதலோடு அழிபட்டது.

இந்த மன நிலை தோற்றுவிப்பது ஒன்றுதான் துரோகி என்ற கருத்தை முன் நிறுத்துகின்றவன் எவனுக்கும் நண்பனில்லை.

அழிவுகள் எல்லாம் என்றோ சொல்லப்பட்டுவிட்டது. இந்த அரசியலை உலகின் எந்த ஒருவனும் எந்தக் காலத்திலும் அங்கிகரிக்க மாட்டான். சிங்களவர்களுக்கு ஓய்வு கொடுப்போம் எம்மை நாமே அழித்து சிதைத்துக்கொள்வோம். தமிழரின் தாகம் தமிழரின் ரத்தம். இதுதான் இந்த இனத்துக்கு பொருத்தமான பஞ்ச்.

புலிகளுக்கு ஒட்டுக்குழுக்கள் துரோகிகள் மற்ற ஒட்டுக்குழுக்களுக்கு புலிகள் எதிரிகள்  ஏன் என்றால் புலிகள் அவர்களது மக்கள் போராட்டத்தை எதிரிக்கு காட்டிக் கொடுக்கவில்லை அவர்களது உறுப்பினர்களை ஆதரவாளர்களை இன எதிரியிடம் பிடித்து அல்லது கடத்திக் கொடுக்கவில்லை ஆகவே மற்ற ஒட்டுக்குழுக்கள் புலிகளை துரோகிலா என்று சொல்ல முடியாது அப்பிடி என்றால் எட்டப்பனுக்கு கட்டப்பொம்மன் துரோகியா? காக்கை வன்னியனுக்கு பண்டாரவன்னியன் துரோகியா? ஒட்டுக் குழுக்களுக்கு புலிகள் துரோகியா? ஐயகோ நான் என்ன பண்ணுவேன்  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

தமிழனை அடகு வைக்க சிங்களவனுக்கு கோவணம் கட்ட இனத்துரோகி எட்டப்பன் ஒட்டுக் குழுத் தலைவன் டக்லஸ் ஜெனிவா புறப்படுவானே 

Edited by Ramanan005

 அருமையான சிந்தனை, துரோகி என்ற கருத்தை முன்னிறுத்துபவன் ...எவனுக்கும் நண்பனில்லை .......வள்ளுவன் ,இளங்கோ பாரதி என்ற வரிசையில் இந்த சிந்தனையையும் சேர்த்துக்கொள்ளல்லாம் ..............ஆனால் போராட்டம் அழிவதற்கு காரணமாய் இருந்த காட்டிக்கொடுத்த ,காட்டிக்கொடுக்கும்,காட்டிக்கொடுக்கப்போகும்  மனிதர்களை, உள்ளிருந்தே முதுகையும், நெஞ்சையும் குத்திய மனிதர்களை , மேலும் இப்படியான செயல்பாடுகலுக்கு வரைவிலக்கணமாய் உள்ள மனிதர்களை எவ்வாறு அழைக்கலாம் .........நீங்கள்தான் ஏதாவது பெயர் சொல்லவேண்டும் ..........

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலைக்கு முன்னோடி ‘இந்திய அமைதிப்படை’யே  

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி-10)

“ஒரு முறை இந்தியப் படை, தளம் 14-ஐ முற்றுகையிட்டு பிரபாகரனை சுற்றி வளைத்தது. அப்பொழுது அவருடைய மெய்க்காப்பாளர்கள் பிரபாகரனுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் இடையே வலிமையான ஒரு சுவரைப் போல நின்றார்கள். இறுதியில் அந்த முகாமை இந்தியத் துருப்புகள் கைப்பற்றின. ஆனால் தளம் 14-ன் 17 மெய்க்காப்பாளர்கள் தங்கள் உயிரைத் துறந்து, பிரபாகரன் வன்னிக் காட்டிற்குள் தப்பிச் செல்ல போதுமான நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதுவே இந்திய அமைதிப்படை முதலும் கடைசியுமாக தளம் 14-ஐ கைப்பற்றிய சம்பவமாகும்.

பிரபாகரனை ஒரு மாபெரும் வாழும் சகாப்தமாக உருவாக்கிய அவரின் சுயநலம், இரக்கமின்மை, ராணுவ செயல் திட்டங்கள், மற்றும் புத்திசாலித் தனமான காய்நகர்த்தல்கள் போன்றவை இந்திய அமைதிப் படைக்கு நிகழ்ந்த சோக முடிவில் தெளிவாக வெளிப்பட்டன” என்று “இந்திய அமைதிப் படை” பற்றி எழுதுகிறார் ராஜிவ் சர்மா!

• பிரபாகரன் சுயநலம்

• இரக்கமற்ற குணம்

• ராணுவ செயல் திட்டங்கள்

இவைகளால் இந்திய அமைதிப்படை மோசமான முடிவை சந்தித்துவிட்டதாக, நூலாசிரியர் மிகவும் கவலைப்பட்டு, தனது தேசபக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். தளம் 14-அய் இந்தியப் படை சுற்றி வளைத்த நிலையில் பிரபாகரன் தப்பி விட்டாரே என்ற கவலையின் ஆதங்கம், அவரது எழுத்தில் பளிச்சென வெளிப்படுகிறது.

‘இந்திய அமைதிப்படை’ ஈழத்தில் நடத்திய அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகள், மக்கள் மீது திணித்த படுகொலைகள் சர்வதேச அரங்கில் ஏராளமான ஆதாரங்களுடன் அம்பலமானது பற்றி எல்லாம் நூலாசிரியருக்கு கவலை இல்லை. ஏதோ, ஈழத் தமிழர்களின் ‘பாதுகாவலர்களாக’ முகமூடி தரித்துக் கொண்டு, இலங்கைக்குப்போய் வடக்கு-கிழக்கு மாநிலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தனக்கு ‘தலையாட்டக் கூடிய’ ஒரு பொம்மை ஆட்சியை துப்பாக்கி முனையில் நடத்திய தேர்தல் வழியாகத் திணித்து, தனது அதிகாரத்துக்குக் கட்டுப்பட மறுத்து, மக்கள் விடுதலையை மட்டுமே முன்னிறுத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தை கூண்டோடு ஒழிக்க சபதமேற்று செயல்பட்டது தான் இந்திய ராணுவம்! இது அமைதிப்படை அல்ல; கொலைக்காரப் படை!

இப்போது ஈழத் தமிழர்கள் மீது இழைத்த போர்க் குற்றங்கள் இனப்படுகொலைகளுக்காக உலக அரங்கில் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் இலங்கை அரசுக்கு இந்த “பாடங்களை” நடைமுறையாக கற்றுத் தந்ததே, இந்திய “அமைதிப்படை” தான் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ராஜபக்சேயின் ‘முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைகளுக்கு முன்னோடி வழிகாட்டி இந்திய அரசும் அதன் “அமைதிப்படை”யும் தான்!

இந்திய “அமைதிப்படை” ஈழத்தில் நடத்திய வெறியாட்டங்களை எழுதப் போனால் அது பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கு நீண்டு கொண்டே போகும். அவற்றை இந்தப் பகுதியில் விரித்து எழுத இயலாது. ஆனாலும், இன்று ராஜபக்சே, நடத்திய இனப்படுகொலைகளுக்கு ‘முன்னோடி’ இந்திய ராணுவம் தான் என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதற்காக சில நிகழ்வுகளை மட்டும் முன் வைக்கிறோம்.

• ‘சாட்சிகளற்ற இனப் படுகொலைகளை’ நடத்தியது சிறீலங்கா அரசு. அதற்காக முதலில் ஆட்சிக்கு எதிராக எழுதிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தான் இந்திய ராணுவமும் ஈழத்தில் நடத்தியது.

1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது; அதுமட்டுமல்ல அச்சு எந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர். அதே நாளில் கொக்குவில் என்ற இடத்திலிருந்த விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி சேவையான நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தில் இந்திய ராணுவம் புகுந்து, ஒளிபரப்புக் கருவிகளை பறித்துச் சென்று விட்டது. ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ நாளேடுகள் இலங்கை அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ் நாளேடுகள்; நிதர்சனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை இந்தியாவின் ‘தூர்தர்ஷன்’ அதிகாரிகள் கேட்டுப் பெற்று ஒளிபரப்பிய சம்பவங்களும் உண்டு. முதலில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகங்களை முற்றாக நசுக்கிய பிறகு, இந்திய ராணுவம் மக்களுக்கு எதிரான ராணுவ வேட்டையில் இறங்கியது. இதைத்தான் ராஜபக்சேவும், இறுதி கட்டப் போரில் செய்தார்.

• மருத்துவமனைகளை ராஜபக்சேயின் ராணுவம் குண்டு வீசித் தாக்கி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளையும் மறுத்த ரத்தக் கண்ணீர் வரவழைக்கும் அதிர்ச்சித் தகவல்களை இப்போது அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை கூறுகிறது. அதைத் தான் இந்திய ராணுவமும் செய்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய ராணுவம் 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையைக் குறி வைத்தது. இதுபற்றி ‘நியூ சேட்டர் டே ரெவியூ’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987, நவம்பர் 7)

“அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். ராணுவத்தினர் உடனடியாக 50நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன. அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள் - ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண கோட்டை தலைமை ராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல், அடையாளங்களை காண முடியில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள், அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன. மருத்துவ மனையில் மின்சாரத்தை ராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.

நெல்லிப்பாளையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையும் மூடப்பட்டது. மணிப்பாய் என்ற இடத்தில் இருந்த ‘கிரீன் மெமோரியன்’ என்ற தனியார் மருத்துவமனையையும், ராணுவம் மிரட்டி மூடச் சொல்லி விட்டது” என்று செய்தி வெளியிட்ட அந்த ஏடு, இறந்தவர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ‘போர்க் குற்றம்’ என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் - ஷெல் வீசியது மட்டுமல்ல; எவரும் சிகிச்சை பெறவும் கூடாது என்று செயல்பட்ட வேறு மருத்துவமனைகளையும் மிரட்டி மூடி விட்டார்கள். காந்தி தேசமான இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட ‘அமைதிப்படை’ இந்தப் போர்க் குற்றங்களைத்தான் செய்தது.

• சர்வதேச உதவி அமைப்புகளை போர்ப் பகுதியிலிருந்து ராஜபக்சே வெளியேற்றியதுகூட இந்தியா காட்டிய வழியில்தான்! இந்திய ராணுவம் சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள், இதைக் கண்டித்தன.

• ராணுவத் தாக்குதல் நடக்கும்போது மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் செய்துவிட வேண்டும் என்ற ‘போர்க் குற்றத்தை’ இலங்கை ராணுவத்துக்கு கற்றுக் கொடுத்ததும் இந்திய ராணுவம் தான்.

“வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு, உணவு, மருந்து, பற்றாக்குறை கடுமையாகிவிட்டது. கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்காமல் போய்விட்டது. செஞ்சிலுவை சங்கம் உடனே தலையிட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; தமிழ் மக்கள் மீது இந்திய ராணுவம் ஷெல் வீசிக் கொல்வதை உடன் நிறுத்த வேண்டும்” என்று தொலைபேசி வழியாக அவசர வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாவட்ட ஆட்சித் தலைவர். (தி ஏஜ் ஏடு 16.10.87)

மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் என்றெல்லாம் அய்.நா. குற்றச்சாட்டுகளைக் கூறினாலும் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அணுகுமுறையை இலங்கைக்கு கற்றுக் கொடுத்ததும் இந்தியா தான்! இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி அய்.நா.வில் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987, பிப்.1 மதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்தது; அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்திய அமைதிப் படை!

• விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ, சமாதானப் பிரிவு பொறுப்பாளர் புலித்தேவன், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது சிங்கள ராணுவம் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொன்றது நமக்குத் தெரியும். “வெள்ளைக் கொடியுடன் வந்தாலும் கவலைப்படாதே; சுட்டுத் தள்ளலாம்” என்று இலங்கை ராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய அமைதிப் படைதான். வெள்ளைக் கொடிகளை ரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய ராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987 அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை காரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். காரில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய ராணுவம் நாவலாய் என்ற இடத்தில் காரை நோக்கி சுட்டது. காரில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அய்.நா. பொதுச் செயலாளருக்கு 1987 நவம்பரில் எழுதிய கடிதத்தில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல் போர் நிறுத்தம் அமுலில் இருந்த போது இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்கை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார். அப்படி ‘வெள்ளைக் கொடி’யுடன் பிரபாகரன் பேசவரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுமாறு இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த தீட்சத் என்பவர் ஹர்கிரந்த் சிங்கிடம் கூற, அதற்கு, அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இது டெல்லியிலிருந்து மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று தீட்சத் கூறினார். அப்போதும் அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இதை ஹர்சிரத் சிங் அவர்களே பணி ஓய்வு பெற்ற பிறகு தான் எழுதிய நூலிலும் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.

கேள்வி : விடுதலைப் புலிகளுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சியில், தீட்சித் அணுகுமுறை எப்படி இருந்தது?

பதில் : தீட்சித் ஒரு முறை என்னிடம், பிரபாகரனை சுட்டுவிடு என்றார். மன்னிக்கவும், என்னால் முடியாது என்று நான் கூறி விட்டேன். இது அவரது உத்தரவாகவே இருந்தது. சில பணிகளுக்காக, என்னை சந்திக்க 12 மணிக்குக்கூட, பிரபாகரன் வந்தார். அதைப் பயன்படுத்தி, சுட்டுவிடுமாறு சொன்னார். தனக்கு, மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவைத்தான் கூறுகிறேன் என்றார். ‘உங்களுடைய உத்தரவை நான் செயல்படுத்த முடியாது. நாங்கள் வெள்ளைக் கொடியின் கீழ் சந்தித்துப் பேசுகிறோம்; வெள்ளைக் கொடியின் கீழ் பேசும்போது, யாரையும் சுட முடியாது’ என்று பதில் சொன்னேன்.

Question : What was Dixit’s approach to your attempts to buy peace with LTTE.

Harkirat Singh : Once he (Dixit) said, shoot Prabaharan. I said, Sorry, I don’t do that. When he came to meet me at 120 Clock at night for some work, he said “shoot him. General, I have told you what I have (been) ordered”. I said, I don’t take your orders. And we are meeting under a white flag, you don’t shoot people under white flag” (Rediff.com).

• ‘போரில்லாத பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சுடலாம். ‘போர் நிறுத்தம்’ செய்யப்பட்ட காலத்திலும் மக்களை சுடலாம் என்று இலங்கை ராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய ராணுவம் தான்.

21.11.1987 அன்று இந்திய ராணுவம் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. அந்த 48 மணி நேரத்தில் திரிகோண மலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய ராணுவம் சுட்டது. இதில் இரண்டு பேர் பிணமானார்கள்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16348:-10&catid=1355:2011&Itemid=602

  • கருத்துக்கள உறவுகள்
மக்களை பலோத்காரமாக பிடித்து பயிற்சி கொடுத்த பத்மநாபா கும்பல் இந்திய அடிவருடிகளாக  சேவகம் செய்தவர்கள் எப்படி விடுதலைப்போராளிகள் எனும் பெயரை எடுக்க முடியும்??
 
இவர்களை மக்களே கொன்றிருக்க வேண்டும்.புலிகள் கொண்டது தான் பிழை. அது சரி 2009ற்கு முன் விசிலடித்த கூட்டம் எப்படித்தான் பிளேட்டை மாத்துகிறார்களோ?? அரசியல் ஞானம் என்று மட்டும் சப்பை கட்டு கட்டாதீர்கள்.

புலிகளுக்கு ஒட்டுக்குழுக்கள் துரோகிகள் மற்ற ஒட்டுக்குழுக்களுக்கு புலிகள் எதிரிகள்  ஏன் என்றால் புலிகள் அவர்களது மக்கள் போராட்டத்தை எதிரிக்கு காட்டிக் கொடுக்கவில்லை அவர்களது உறுப்பினர்களை ஆதரவாளர்களை இன எதிரியிடம் பிடித்து அல்லது கடத்திக் கொடுக்கவில்லை ஆகவே மற்ற ஒட்டுக்குழுக்கள் புலிகளை துரோகிலா என்று சொல்ல முடியாது அப்பிடி என்றால் எட்டப்பனுக்கு கட்டப்பொம்மன் துரோகியா? காக்கை வன்னியனுக்கு பண்டாரவன்னியன் துரோகியா? ஒட்டுக் குழுக்களுக்கு புலிகள் துரோகியா? ஐயகோ நான் என்ன பண்ணுவேன்  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

தமிழனை அடகு வைக்க சிங்களவனுக்கு கோவணம் கட்ட இனத்துரோகி எட்டப்பன் ஒட்டுக் குழுத் தலைவன் டக்லஸ் ஜெனிவா புறப்படுவானே 

பண்டார வன்னியன் காக்கை வன்னியனை ஓட ஓட விரட்டி சுட்டானா? கட்பொம்மன் எட்டப்பனை ஒட ஒட விரட்டி சுட்டானா? அதன் பின்னர் அவர்கள் போய் எதிரியுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்தார்களா?

ஏன் இயக்கத்தலமைகள் ஒன்றுபட முடியவில்லை என்ற கேள்விக்கு இவ்வளவு அழிவுக்குப் பின்னும் விடை தேடும் முயற்சியில்லை. துரோகிகள் தன்னில் உருவாது சூழ்நிலை சார்ந்து உருவாவது மேலும் உருவாக்குவது என்ற அடிப்படையில் இந்த இனத்தில் தன்னில் உருவாகும் துரோகிகள் என்பது பேசுகின்றளவுக்கு அதிகப்படியாக இல்லை. ஆனால் உருவாக்கப்படுகின்றார்கள். எப்படி சாதியக் கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்றதோ அப்படியே இது உருவாக்கப்படுகின்றது.இதுவே புறநிலை எதிரியை விட ஆபத்தான விசயம்.

தமிழர்கள் மதம் சமயம் சார்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள் பல்வேறு நிலப்பரப்புகளுடன் கூடிய பெருநில குறுநில மன்னர்கள் சார்ந்து வாழ்திருக்கின்றார்கள். இவற்றுள் இருந்த கட்டமைப்பு அனைத்தும் சாதிய ஏற்றதாழ்வு நிறைந்த ஆண்டான அடிமை கட்டமைப்பே தவிர வரலாற்றில் இன்றுவரை தமிழர்கள் ஒரு மொழிவாரியான இனவாரியான தேசீய இனமாக வாழவில்லை. எந்த மன்னனும் தமிழ் மொழி பண்பாடு கலாச்சாரம் தேசீயம் என்று அதைக்காக்க யாருடனும் சண்டையிட்டதில்லை. தத்தம் நிலங்களை உடமைகளை காக்கவும் அடுத்தவன் நிலங்களை உடமைகளை அபகரிக்கவுமே சண்டையிட்டிருகின்றார்கள். பெரும்பான்மையான அனைத்துச் சண்டைகளும் தமிழர்களுக்குள்ளகவே நடந்திருக்கி்ன்றது. எம்மை முதன் முதலில் ஒரு தேசீய இனம் என்று எமக்கே சொன்னது சிங்களவர்களே. அவர்களே முதன் முதலில் சாதி மத பிரதேச வேறுபாடுகள் இன்றி எம்மை தமிழர்கள் என்று கொன்றார்கள். எம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாம் அவ்வாறு எந்தக் காலத்திலும் வாழ்ந்ததில்லை. புறநானூறு அகநானூறு எல்லாம் தமிழர்களுக்குள் தமிழர்கள் அடிபட்ட வரலாறுகள்.சேரனும் பண்டியனும் சோழனும் மாறி மாறி குத்துப்பட்ட கதைகள். அவர்கள் தம்மை தமிழ்த்தேசீயவாதிகள் என்றுணர்ந்திருந்தால் எமது கதை வேறு. புலி ரெலொ புளட் ஈபி எல்லாத்தின்ர கதையும் இப்படித்தான். பின்னர் பிள்ளையான் கருணா மத்தயா கேபியின் கதையும் இப்படித்தான். எமக்குள் துரோகம் என்பது சிங்களப் பேரினவாதத்தை விட பன்மடங்கு ஆபத்தானது. அதனாலேயே துரோகம் என்ற கருத்தியலை முன்நிறுத்தும் போது அதற்கு கருத்திடுகின்றேன்.

சேரனும் பண்டியனும் சோழனும் மாறி மாறி குத்துப்பட்ட கதைகள். அவர்கள் தம்மை தமிழ்த்தேசீயவாதிகள் என்றுணர்ந்திருந்தால் எமது கதை வேறு. புலி ரெலொ புளட் ஈபி எல்லாத்தின்ர கதையும் இப்படித்தான். பின்னர் பிள்ளையான் கருணா மத்தயா கேபியின் கதையும் இப்படித்தான். எமக்குள் துரோகம் என்பது சிங்களப் பேரினவாதத்தை விட பன்மடங்கு ஆபத்தானது. அதனாலேயே துரோகம் என்ற கருத்தியலை முன்நிறுத்தும் போது அதற்கு கருத்திடுகின்றேன்.

டக்ளசும் ஆயுதம் ஏந்தியும் பின்னர் சனநாயாக நீரோட்டத்தில் கலந்தும் மக்கள் விடுதலைக்காக போராடி பாடுபடுகின்றார் என்பதை வேண்டுமென்றே விட்டுவிட்டீர்கள்.

துரோகங்களுக்கு அடிப்படையே சுய இலாபம், தனது சொந்த இனத்தை பலமான எதிரியிடம் அற்ப சொற்பங்களுக்கு காட்டிக்கொடுத்து வாழுவது.

போராட்டத்திற்கு என்ற சோர்த்த காசை சுருட்டுவதும் சுயலாபம். அடுத்தவன் நடத்த முற்படும் நிகழ்வுகளை தேசியத்தின் பெயரால் தடுப்பதும் சுயலாபம். தேசீயத்தை சொல்லி தத்தம் அடயாளங்களை முன்நிறுத்துவதும் சுயலாபம். பங்குகள் பிரிப்பதில் சுடுபடுவதும் சுயலாபம். அடுத்தவனை குற்றவாளி துரோகி என்று தன்னை சுற்றவாளி என்பதும் சுயலாபம்.

சுப்பிரமணிய சாமிக்கும் துக்ளக் சோவுக்கும் புலி என்ற நாமம் காணும் அரசியல் நடத்தவதுக்கு உங்களுக்கு டக்ளஸ் என்ற நாமம் காணும் தேசீயம் பேசுவதற்கு என்பதுதான் எனது ஆரம்பக்கருத்து. அதைக் கடந்து உங்களால் செல்ல முடியாது. அதற்கான அவசியமும் உங்களுக்கு இல்லை என்பதே துரதிஸ்டம். அனைத்துக் கருத்துக்களுக்கும் ஏற்கனவே உங்களிடம் பதிலிருக்கின்ற படியால் உங்களுக்க யோசிக்கும் நேரமும் மிச்சம்.

இது விடுதலைக்காக தனது உயிரை அர்ப்பணித்த மாவீரர்களோடு ஒப்பிடும் போது சிறிய குழுவினரே நீங்கள் சொல்லும் அருவருக்க தக்க செயலை செய்து தமது இனத்தை காட்டிக்கொடுத்தார்கள்.
 
டக்ளஸ் அப்படி அல்லவே. டக்ளஸ் குலத்தை கெடுக்க வந்த கோடரிக் காம்பு.வேண்டுமானல் உங்களுக்கு ஈழத்து எம்.ஜி.ஆராக இருக்கலாம்.

சிறிய குழுவினரோ பெரிய குழுவினரோ விழைவு பெரியது. டக்ளஸால் ஏற்பட்ட பாதிப்பை விட கருணாவல் எற்பட்ட பாதிப்பே அதிகம். நியாயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை.

இதற்கு முதல் காரணம் நாமும் தானே.

தேசியச்செயற்பாட்டாளர்களை  கள்ளர்கள் வியாபாரிகள் நடிகர்கள் சுயநலவாதிகள் என்ற போது ஒருவர் இருவரைத்தானே குறிப்பிடுகிறார்கள் என்று மௌனமாக இருந்து ஒத்துக்கொள்ளும்போதே எழுதினேன்.

இவர்களின் நோக்கம் அதுவல்ல

ஒட்டு மொத்த செயற்பாட்டாளர்களையும்  இதற்குள் வைத்தே அவர்கள் எழுதுகிறார்கள் பேசுகிறார்கள்.  அவர்களுடன் நேரடியாக மோதி  தோற்று இங்கு வந்து வஞ்சகமாக வீழ்த்தப்பார்க்கிறார்கள். கவனம் கவனம் என. இதற்கு வேறு பலர் ஆமாப்போட்டனர்.

இன்று நான் சொன்னது போலவே  எல்லோரையும் கள்ளர்  என்ற நிலைக்கு கொண்டுவந்தாச்சு. 

என்னையே  அப்படித்தான் இங்கு எழுதுகிறார்கள் என்பதை வைத்தே நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.  இது  தொடரும்போது நான் விலகுவதும் அதைத்தொடர்ந்து எனது வாரிசுகள் விலகுவதும் நடக்கும். அதுவே இவர்களின் நோக்கம்.

தமிழனுக்கு ஏதாவது கிடைக்கணும் என்று இவர்களுக்கு எந்தவித நோக்கமும் குறிக்கோளுமில்லை.

அதைவிட முக்கியம் எதுவுமே புலிகளால் கிடைத்ததாக இருக்கக்கூடாது. போர்க்குற்றங்களுக்கு கூட இவர்களின் எதிர்ப்பு இருப்பது இதனால்தான்.

சுப்பிரமணிய சாமிக்கும் துக்ளக் சோவுக்கும் புலி என்ற நாமம் காணும் அரசியல் நடத்தவதுக்கு உங்களுக்கு டக்ளஸ் என்ற நாமம் காணும் தேசீயம் பேசுவதற்கு என்பதுதான் எனது ஆரம்பக்கருத்து. அதைக் கடந்து உங்களால் செல்ல முடியாது. அதற்கான அவசியமும் உங்களுக்கு இல்லை என்பதே துரதிஸ்டம். அனைத்துக் கருத்துக்களுக்கும் ஏற்கனவே உங்களிடம் பதிலிருக்கின்ற படியால் உங்களுக்க யோசிக்கும் நேரமும் மிச்சம்.

டக்லசும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நீங்களும் சரி மக்கள் பணத்தில், அதிலும் வறியவர் பணத்தில் உயிரில் கொள்ளையடிப்பதை ஆதரிக்கின்றீர்கள்.

இந்த கேவலமான நிலையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள், பின்னர் மற்றையவர்கள் என்ன யோசிக்கவேண்டும் என கவலைப்படுங்கள்.

சிறிய குழுவினரோ பெரிய குழுவினரோ விழைவு பெரியது. டக்ளஸால் ஏற்பட்ட பாதிப்பை விட கருணாவல் எற்பட்ட பாதிப்பே அதிகம். நியாயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை.

மிகவும் தவறான கருத்து மட்டுமல்ல ஒரு சனநாயக வேடம் பூண்ட மிருகத்தை ஆதரிக்கும் கருத்து.

இதற்கு முதல் காரணம் நாமும் தானே.

தேசியச்செயற்பாட்டாளர்களை  கள்ளர்கள் வியாபாரிகள் நடிகர்கள் சுயநலவாதிகள் என்ற போது ஒருவர் இருவரைத்தானே குறிப்பிடுகிறார்கள் என்று மௌனமாக இருந்து ஒத்துக்கொள்ளும்போதே எழுதினேன்.

இவர்களின் நோக்கம் அதுவல்ல

ஒட்டு மொத்த செயற்பாட்டாளர்களையும்  இதற்குள் வைத்தே அவர்கள் எழுதுகிறார்கள் பேசுகிறார்கள்.  அவர்களுடன் நேரடியாக மோதி  தோற்று இங்கு வந்து வஞ்சகமாக வீழ்த்தப்பார்க்கிறார்கள். கவனம் கவனம் என. இதற்கு வேறு பலர் ஆமாப்போட்டனர்.

இன்று நான் சொன்னது போலவே  எல்லோரையும் கள்ளர்  என்ற நிலைக்கு கொண்டுவந்தாச்சு. 

என்னையே  அப்படித்தான் இங்கு எழுதுகிறார்கள் என்பதை வைத்தே நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.  இது  தொடரும்போது நான் விலகுவதும் அதைத்தொடர்ந்து எனது வாரிசுகள் விலகுவதும் நடக்கும். அதுவே இவர்களின் நோக்கம்.

தமிழனுக்கு ஏதாவது கிடைக்கணும் என்று இவர்களுக்கு எந்தவித நோக்கமும் குறிக்கோளுமில்லை.

அதைவிட முக்கியம் எதுவுமே புலிகளால் கிடைத்ததாக இருக்கக்கூடாது. போர்க்குற்றங்களுக்கு கூட இவர்களின் எதிர்ப்பு இருப்பது இதனால்தான்.

 ஆம் அத்தனையும் உண்மை .உண்மை........

.இவர்கள் பிழைகளை சுட்டிக்காட்டுவதை பிழை என்று கூறவில்லை.... .அந்தப்பிழைகளை கொண்டு  ஒட்டுமொத்த போராட்ட  செயல்வடிவங்களையும் முடக்குமுகமாகவேஅண்மைக்காலத்தில்...................சீர் திருத்தவாதிகள் என்னும் போர்வையில்  சிலரது கருத்துக்கள அமைந்து வருவதை அவதானிக்கமுடிகிறது........... சந்தேகம் கொள்ளவைக்கிறது .....ஏனனில் உண்மையான ,விடுதலை மேல் அக்கறை இருந்தால் பிழைகளை சுட்டிக்காட்டுவதுமன்றி .அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதையும் சுட்டிக்காட்டி நகர்த்திச்செல்ல முயற்சித்திருக்கவேண்டும். ஆனால் நடப்பது என்ன என்று நன்றாகவே புரிகிறது . இங்கே கூட நான் யாரையும் துரோகி என்றோ .விரோதி என்றோ கருத்தாடவில்லை .அந்த சொற்களை வைத்து உளவியல்  ரீதியாகவும் ,வாதிடல் திறமையூடாகவும் ......குழப்பநிலை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது

என்பதையே  கூறவருகிறேன்  .

என் இனத்தின் சில மனிதங்கள்.....

இந்த திரியின் தலைப்பு சிலரைப்பற்றியது, தமிழர்களுக்குள் நெட்டை நோடாலம் குற்றம் குறை சொல்வது பற்றியது, சிறு துளி பெருவெள்ளம் போல் அவனவனுக்கு சில மனிதங்கள் பற்றி பேசுவோம். டக்ளஸ் பற்றி கொஞ்சபேர் பேசட்ட்டும் காசு சுருட்டினவன் பற்ற பேசட்டும் காட்டிக்கொடுத்தவன் பற்றிப் பேசட்டும். பேசுவது அவனவன் சனநாயக உரிமை. எனக்கு நீ உனக்கு நான் துரோகி. இதை நாம் நிலை நிறுத்துவதன் ஊடாகவே இந்த உலகமயமாக்கல் காலத்தில் விடுதலை நோக்கி நகரமுடியும். அந்தவகையில் எல்லோரும் ஒற்றுமையாக அடிபடாமல் குறை கூறுவோம். இதில் மனவருத்தப்பட எதுவம் இல்லை.

புலிகளால் இனியும் எதுவும் கிடைக்கும் என்று சொல்லுவதே சுத்த தானே ?

இதை கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு கூறுங்கள் இல்லை உதயன் / வலம்புரி பத்திரிகைக்கு கூறுங்கள். அவர்கள் ஏற்றால் உங்கள் கருத்தில் நியாயம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் இனியும் எதுவும் கிடைக்கும் என்று சொல்லுவதே சுத்த தானே ?

அப்படி யார் சொன்னார்கள்???

இந்த மூன்று வருடத்தில் எதையாவது மக்களுக்கு செய்து காட்டினீர்களா?

உங்கள் கொள்கைகள்

நடவடிக்கைகள்

தொழிற்பாடுகள்

எதற்காவது மக்களால்  ஏதாவது முன்னேற்றகரமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்களா?

அதற்கான அறிகுறி  ஏதாவது தெரிகிறதா?

ஆகக்குறைந்தது

 கூட்டமைப்பு தங்களுடன் சேரும்படி பல கோரிக்கைகள் விட்டதே

அதற்காவது ஏதாவது  நம்பும்படியாக பதிலளித்தீர்களா?

எனக்கு புலி அது இது என்று எதுவும் கிடையாது

புலிகள் தியாகிகள்

அவ்வளவே.

அதைக்கொச்சைப்படுத்தக்கூடாது.

மக்களுக்கு

அவர்களது அபிலாசைகளுக்கு எவர் உதவினாலும் அவர்களை ஆதரிப்பேன்.

யார் குத்தியாகினும் அரிசியானால் சரி  என்பதே எனது நிலை.

இதை கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு கூறுங்கள் இல்லை உதயன் / வலம்புரி பத்திரிகைக்கு கூறுங்கள். அவர்கள் ஏற்றால் உங்கள் கருத்தில் நியாயம் இருக்கும்.

எந்தச் சிறுமிக்கு ? மேற்குலக ஆதரவோடு விடிவு கிடைக்கும் என்றும் இடப்பெயர்வெல்லாம் தமிழீழம் என்ற பிரசவத்துக்கான வலி என்றும் மக்களை கொலைக்களம் நோக்கி நகர்த்தி நகர்த்தி முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கா? இல்லை போருக்கென்று சேர்த்த காசிலும் மாவீரர் தின வருமானத்திலும் சிறைப்பட்ட மக்களுக்கு துளியும் கொடுக்க மறுத்து பட்டிணியால் செத்த சிறுமிகளுக்கா? கொஞ்சம் விபரமாகத்தான் சொல்லுறது

புலிகள் இல்லாவிட்டால் நாட்டில் நிம்மதியும் மக்களாட்சியும் பூத்து கொலுங்கும் என்றவர்களுக்கு விளக்கம் தந்தாலும் பயன் இருக்காது.

மக்களுக்காக நியாயத்திற்காக குரல் கொடுத்தால் புலிகளை இழுப்பதே இவர்கள் வேலை.

எந்தச் சிறுமிக்கு ? மேற்குலக ஆதரவோடு விடிவு கிடைக்கும் என்றும் இடப்பெயர்வெல்லாம் தமிழீழம் என்ற பிரசவத்துக்கான வலி என்றும் மக்களை கொலைக்களம் நோக்கி நகர்த்தி நகர்த்தி முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கா?

உலக சரித்திரத்தில் போராட்டமே நடக்கவில்லையாம் ...........எந்த மக்களும் இடம்பெயரவில்லையாம்.மக்கள் இடம்பெயரவில்லையாம் . விடுதலைப்போராட்ட அமைப்புக்கள் அழிக்கப்படவில்லையாம் .ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டம் மட்டுமே இந்த உலகில் நடந்தது .அதனாலேயே இவ்வளவு துன்பங்களும்..................ஆனால் ..............

உலகில் யாருமே இப்படி தெளிவாய் சிந்திக்க மாட்டாங்க..................சில வேளை

Spoiler

ஆபிரிக்காவில் வாழும் குரங்கினம் .சிந்திக்கலாம்.....

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.