Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை கணணி துறையில் வளர்த்து விட்டவர்கள் விடுதலைப்புலிகள்- செல்வநாயகி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் எறிகணைத்தாக்கதலில் கைகளை இழந்த தமிழ்பெண் கால்களால் கணணிகற்றுக்கொடுக்கம் ஆசானாக திகழ்கின்றார் சிறீலங்காப் படையினரின் போர் நடவடிக்கையின் போது தனது இரண்டு கைகளையும் இழந்த செபஸ்ரியான் செல்வநாயகி என்ற பெண் கால்களால் கணணியினை இயக்கி பலருக்க ஆசானாக திகழ்கின்றார்!

வெற்றிலைக்கேணி முள்ளியானை சொந்த இடமாக கொண்ட இவர் சிறீலங்காப்படையினரின் எறிகணைத்தாக்குதலில் 1990ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22 ஆம் நாள் எனது இரு கைகளையும் இழந்துள்ளேன்.

14 அகவையில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பராமரிப்பில் வளர்ந்தேன்.

பின்னர் என்னை பராமரித்தது படித்து ஆளாக்கியது கணணிதுறையில் சிறப்ப தேர்ச்சி யடைய கற்றுக்கொடுத்ததும் விடுதலைப்புலிகள் தான் இன்றும் அவர்கள் மூலம்தான் நான் இந்த கணணி துறையில் கற்றுக்கொண்டேன்.

தொடக்கத்தில் காலால் வாயால் எழுவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தேன்14அகவை தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் பராமரிப்பின் கீழ்தான் நான் வளர்ந்தேன்

முல்லைத்தீவு மாமூலையில் கணணிநிலையத்தில் நான் ஒரு ஆசானாகவும் பாடசாலை மாணவர்களுக்கும் கற்பிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன்.

இன்று தற்போது கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்கின்றேன் தற்போது புலம்பெயர் தமிழ்மக்களின் உதவியுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் பன்னாட்டு செய்திசேவைக்கு தெரிவித்துள்ளார்.

 

http://www.sankathi24.com/news/26642/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடிகள் வருமெனத் தெரிந்தும் தைரியமாகச் சொல்லியிருக்கிறார்..! பல்லாண்டுகள் வாழ்க..!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி 

நெருக்கடிகள் வருமெனத் தெரிந்தும் தைரியமாகச் சொல்லியிருக்கிறார்..! பல்லாண்டுகள் வாழ்க..!!

 

இது மட்டுமல்ல, அவயங்கள் இழந்தவர்களை பராமரித்து தன்னம்பிக்கையினை ஊட்டி வளர்த்து பல திறமைகளை வளர்ததெடுப்பதில் புலிகளின் பிரிவுகள் மிகவும் திறமையாக இருந்தன. மறுவாழ்வு என்பதன் அர்த்ததினை கொடுத்தவர்கள் அவர்கள். இப்படியான போராளிகள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர் என நினைக்கின்றேன். இறுதி யுத்ததின் பின் காணாமல் போனவர்களில் இவர்களும் பெருமளவில் உள்ளனர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இறுதி யுத்தத்தில் அவையங்களை இழந்த பல்லாயிரக்கணக்கான போராளிகள் காணமல் பொய்யும் உயிர் இழந்தும் இருந்தார்கள் இவர்களின் இழப்புக்களை எல்லாம் தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருவது தான் சோகமான உண்மை

 14 அகவையில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பராமரிப்பில் வளர்ந்தேன்.

பின்னர் என்னை பராமரித்தது படித்து ஆளாக்கியது கணணிதுறையில் சிறப்ப தேர்ச்சி யடைய கற்றுக்கொடுத்ததும் விடுதலைப்புலிகள் தான் இன்றும் அவர்கள் மூலம்தான் நான் இந்த கணணி துறையில் கற்றுக்கொண்டேன்.


தொடக்கத்தில் காலால் வாயால் எழுவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தேன் 14அகவை தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் பராமரிப்பின் கீழ்தான் நான் வளர்ந்தேன்.

 

 

ஒரு நேர்மையான உண்மையான விடுதலை அமைப்பு எதை செய்யவேண்டுமோ அதை செய்தது என்பதற்கு இவரின் கூற்று சான்று! 

 

130206142313_selvanayaki_it_teacher_304x



http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/02/130206_selvanayakiaudio.shtml



அதேவேளை கிழக்கில் வசந்தம் வடக்கில் வெற்றி எனும் அடக்குமுறை ஒட்டுக்குழுக்களும் இராணுவமும் இந்த மூன்று வருட காலத்தில் என்ன செய்கின்றன என்பதும் மக்களுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் துணிச்சலையும், தன்னம்பிக்கையும்.. பாராட்டுகின்றேன்.
இதனைக் கேட்டாவது... ஒட்டுக்குழுக்களும், ஓணான் குழுக்களும் தமது உண்மையான அக்கறையை... பாதிக்கப் பட்ட மக்களுக்கு செய்ய முன் வரவேண்டும்.

மனவுறுதிக்கு பாராட்டுக்கள்

 

இன்னும் எவ்வளவோ மாற்றங்களை செய்திருப்பார்கள், எம்விதி எல்லாவற்றையும் இழந்து அனாதரவாக நிற்கிறோம் இப்ப

செல்வநாயக்கிக்கு வாழ்த்துக்கள்.!

பி.பி.சி.யின் வழமையான நரி வேலை, நடக்கும் அலங்களை இலங்கை அரசுக்கு சாதகமாகக மூடி மறைக்கும் சதிகாரக் கும்பல், மித்திரன் தலையங்கம் போட்டு பிழைக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.