Jump to content

மைத்திரேயியின் சமையல்கட்டு 01


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளிக் குழம்பு

 

dsc033691.jpg

 

 

என்னவேணும் ???

 

உள்ளி 6 பிடி

உரிச்ச சின்னவெங்காயம் 5

பச்சைமிளகாய் 3

கறிவேப்பமிலை ( தேவையான அளவு )

தனி மிளகாய் தூள் 2 தே கறண்டி

பழப்புளி ( தேவையான அளவு )

மிளகு தூள் அரை தேக்கறண்டி

முதல் தேங்காய் பால் 1 அரைக் கப்

நல்லெண்ணை தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

 

கூட்டல் :

 

உள்ளியை உடைச்சு முழுசாய் ஒரு பாத்திரத்திலை சேருங்கோ . வெங்காயம் பச்சை மிளகாயை வெட்டி வையுங்கோ . ஒரு மண்சட்டியிலை நல்லெண்ணை விட்டு எண்ணை கொதித்த உடனை வெட்டின சின்னவெங்காயத்தை போடுங்கோ . வெங்காயம் பொன்னிறமாய் வர பச்சைமிளகாய் கறிவேப்பிலையை போடுங்கோ . கொஞ்ச நேரத்தாலை தனிமிளகாய்த் தூள் மிளகு தூள் எல்லாவற்றையும் போடுங்கோ . கரைச்ச பழப்புளியைவிட்டு கொஞ்ச தண்ணி சேருங்கோ . தூள் மணம் எடுபட கொதிக்க விட்டு , துப்பரவாக்கின முழு உள்ளியை போடுங்கோ . முதல் தேங்காய்ப் பாலையும் சேருங்கோ குழம்பு தடிக்கமட்டும் மெதுவான வெக்கையிலை வேகவையுங்கோ .

 

பிகு : மண்சட்டி இல்லாதவை நோர்மல் சட்டியிலை செய்யலாம் . ஆனால் ரேஸ்ற்ரிலை கொஞ்சம் வித்தாயாசப்படும் .

 

இந்த உள்ளி குழம்பு உடம்புக்கு நல்லது . வாயுத்தொல்லைக்கு நல்லது . பக்கவிளைவுகள் இல்லாதது .

 

மைத்திரேயி

21/02/2013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாளைக்கே செய்திட்டாப் போச்சு. போன கிழமை தான் ஒரு சட்டி வாங்கினனான். நல்லதாப்போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ்! இவ்வளவு உள்ளியா?

 

அடுத்தநாள், ஆளைச்சுத்தி அஞ்சு மீட்டர் வட்டத்துக்குள்ள ஒருத்தரும் வரேலாது போல! :o

Link to comment
Share on other sites

உள்ளி இருதய வருத்தங்களுக்கு சிறந்தது ..


 

பகிர்வுக்கு நன்றி மைத்திரே.


 


 

Link to comment
Share on other sites

நன்றி, நீங்கள் வித்தியாசமான குழம்போடு வாறியள் மைத்திரேயி. உங்கள் சமையல் பிடிச்சுதோ இல்லையோ உங்கள் பெயர் பிடிச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ்! இவ்வளவு உள்ளியா?

 

அடுத்தநாள், ஆளைச்சுத்தி அஞ்சு மீட்டர் வட்டத்துக்குள்ள ஒருத்தரும் வரேலாது போல! :o

 

 

டிக்கற்றைப்போட்டு ஊருக்கு போங்கோ புங்கை

அது தான் இதுக்கு சரியான காற்றோட்டமான இடம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நாளைக்கே செய்திட்டாப் போச்சு. போன கிழமை தான் ஒரு சட்டி வாங்கினனான். நல்லதாப்போச்சு.

 

நன்றி உங்கடை கருத்துக்கு . உள்ளிக் குழம்பு செய்த பாத்தனிங்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாடியோவ்! இவ்வளவு உள்ளியா?

 

அடுத்தநாள், ஆளைச்சுத்தி அஞ்சு மீட்டர் வட்டத்துக்குள்ள ஒருத்தரும் வரேலாது போல! :o

 

நீங்கள் சாப்பிட்டு பாருங்கு உங்களிட்டை இருக்கிற வருத்தங்களிலை முக்கால்வாசி போயே போச்சு .

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்ம்ம்... ஒருக்கால் செய்து பார்த்துட்டாப் போச்சு...  செய்வதை சனி, ஞாயிறுகளில் செய்தால் நல்லம் என்று நினைக்கின்றன்.,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்... ஒருக்கால் செய்து பார்த்துட்டாப் போச்சு...  செய்வதை சனி, ஞாயிறுகளில் செய்தால் நல்லம் என்று நினைக்கின்றன்.,

திண்டு துலையுங்கோ..எதைத்தான் மிச்சம் விட்டியள்... :D

எதுக்கும் வேலையிடத்தில பக்கத்து மேசைக்காரனை ரெண்டுநாள் கொலிடேயிலை போகச்சொல்லுங்கோ...

Link to comment
Share on other sites

இதை அதிகம் சிங்கள வீடுகளில் செய்கின்றவர்கள். நான் இருந்த வீட்டில் அடிக்கடி செய்வார்கள் நல்ல சுவை & உடம்புக்கும் ஆரோக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளி இருதய வருத்தங்களுக்கு சிறந்தது ..

 

பகிர்வுக்கு நன்றி மைத்திரே.

 

 

 

உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லுறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, நீங்கள் வித்தியாசமான குழம்போடு வாறியள் மைத்திரேயி. உங்கள் சமையல் பிடிச்சுதோ இல்லையோ உங்கள் பெயர் பிடிச்சுது.

 

ஏன் உங்கடை பேரும் நல்லபேர் தானே அலைமகள் . உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துகளை சொன்ன விசுகு , நிழலி , சுபேஸ் , வந்தியதேவன் எல்லாருக்கும் நன்றி சொல்லிறன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.