Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது

Featured Replies

அஜீவன் யாழ்கோட்டை பிடிக்கப்பட்டது ஈழப்போர்-2 காலப்பகுதியில். அதாவது இந்திய இராணுவம் வெளியேறி பிரேமதாசவோடு போச்சுக்கள் முறிவடைந்து ஆரம்பமான யுத்தத்தில். ஒபரேசன் லிபரேசன் காலத்திலேயே (அதாவது இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளிற்கு வரும் முன்னரே) மாற்று இயக்கங்கள் எல்லாம் யாழ்பாணத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்ட

  • Replies 105
  • Views 12.4k
  • Created
  • Last Reply

உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.அஜீவன். ஒரு தடவை ஜெனிவா ஊர்வலத்தில் தெரிந்தவர் ஒருவரை கண்டேன். அவர் முன்பு ஈ.பீஆர் எல்.எவ் இயக்கத்தில் இருந்தவர்.அவர் என்னைக்கண்டதும் பேச அச்சப்பட்டார். அவர் மனதில்கனம் இல்லையென்றால் பயம் கொள்ளத்தேவையில்லை.

உங்கள் நண்பரைப்போல சில விதிவிலக்குகளை நாம் புறம் தள்ள முடியாது. உங்கள் நண்பர் புளொட்டில் மாணிக்கதாசனால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் கட்ட ஈழப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் 1990ம் ஆண்டு கோட்டை தமிழீழ விடுதலைப்புலிகளால் மீட்டகப்பட்டது. இராணுவம் கிட்டத்தட்ட 3மாதகாலப்பகுதி உணவு முதல் தண்ணீர் வரை விமானத்தையே நம்பியிருந்தன. அப்போது விமானம்கூட தரையிறங்கி உணவு விநியோகம் செய்யவில்லை. மேலால்தான் உணவுப்பொட்டலங்களை போட்டது. இந்தச் சமயத்தில் திருமலையைச் தமிழ் இளைஞர் ஒருவரும் கோட்டையில் பொலிஸாக இருந்து புலிகளின் கோட்டை மீட்பில் உயிர் தப்பியவர்.

கோட்டை மீட்கப்பட்ட நாள் தியாகி திலீபனின் 3ம் ஆண்டு நிகழ்வு நிறைவும் இடம்பெற்றது.

அஜீவன் அவர்கள் குறிப்பிடுவது போல வேறு இயக்கம் கோட்டையை மீட்கவில்லை.

அஜீவன் அவர்கள் குறிப்பிடுவது போல வேறு இயக்கம் கோட்டையை மீட்கவில்லை.

தவகவலுக்கு நன்றி சாந்தியக்கா.

நான் வேறு இயக்கங்கள் கோட்டையை மீட்டதாகச் சொல்லவில்லை.

விடுதலைப் புலிகள் கோட்டையை மீட்டார்கள்.

அடுத்த இயக்கங்கள் ஏதோ ஒரு வகையில் உதவின என்றே கூறியிருக்கிறேன்.

நான் அப்போது பெங்களூரில் இயக்க தொடர்புகளை விட்டு விலகி இருந்த காலம்.

எனவே கீழே குறுக்ஸ் சொல்வது போல

எங்கோ குளம்பியிருக்கலாம்.

உவர் சாத்திரியார் திருப்பி பொய்சொல்லுறார்.

யாழ்கோட்டையை ENDLF தான் பிடிச்சது என்று உலகப்பிரசித்தி பெற்ற இந்துவின் ஆசிரியர் ராமே எழுதியிருக்கிறார்.

அதை விட அறளைபெயர்ந்த சங்கரி வேறை TBC அடசி BBC தமிழ் ஓசைக்கு ஒரு நீண்ட செவ்வியிலை விளங்கப்படுத்திறார்.

வேணும் எண்டா சொல்லுங்கோ லிங் தாறன்

இந்த லிங்கை இப்ப தாறீங்களோ?

சும்மா பார்க்கத்தான்?

அட்வான்ஸாக நன்றி........ :P

உந்த சம்பவங்கள் நடந்தபோதெல்லாம் நான் சிறியவன். ஆனால் கோட்டை பிடிக்கப்பட்ட போது எல்லோரும் வெடி கொழுத்தி கொண்டாடியது ஞாபகம் இருக்கு.

திலீபன் இறுதி ஊர்வலமும் ஞாபகத்தில் பதிந்த ஒன்று.

இந்தியன் ஆமி வந்த புதிதில் ரோந்து போகும் போது பிஸ்கட் தருவது. சில காலங்களின் பின் அவர்களே அடிக்கடி வீட்டிலுள்ள எல்லாரையும் வெளியில் இழுத்து வந்து தண்டவாளத்தில் இருத்தி, காலால் உதைத்ததும் துப்பாக்கிபிடியால் நெஞ்சில் இடித்ததும்

சிறு வயதில் நடந்த சம்பவல்களில் மறக்கமுடியாதவை.

இதில் கோட்டை கைப்பற்றல் பற்றிய கருத்தாடல் வருவதால் எழுதுகிறேன்.

இந்திய இராணுவம் வருவதற்கு முன்பதான ஈழப்போரின் போது கோட்டையை கைப்பற்ற யார் யார் முயன்றார்கள் என்பது தெரியாது. அதை அறியும் வயதும் இல்லை.

ஆனால் கோட்டையை கைப்பற்றியது ஈழப்போர் 2 இல், அப்போது வேறு எந்த இயக்கங்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. விடுதலைப்புலிகளுடைய கட்டுப்பாடு மட்டுமே இருந்த நேரம். நாமும் வெடிக்கொழுத்தி வெற்றியை கொண்டாடிய நினைவு.

சுபித்திரன் - குளக்காடன்

தங்கள் தகவலுக்கு நன்றி!

தவறாய் குறிப்பிட்டிருந்தால் வருந்துகிறேன்.

ஆனால் கோட்டையை கைப்பற்றியது ஈழப்போர் 2 இல், அப்போது வேறு எந்த இயக்கங்களும் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. விடுதலைப்புலிகளுடைய கட்டுப்பாடு மட்டுமே இருந்த நேரம். நாமும் வெடிக்கொழுத்தி வெற்றியை கொண்டாடிய நினைவு

கோட்டையை ஈழப்போர் 1க்கு பிறகு 2ண்டுக்கு முதல் சில இயக்கங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் எண்று நினைக்கிறன்....!

முதலாம் ஈழப்போரின் போது கிட்டண்ணா தலைமையில் கோட்டை இராணுவத்தை முடக்குதல்தான் நடந்தது.....! கைப்பற்ற முயலவில்லை... அதுவே திலீபன் அண்ணாவின் கனவுக்கான அடித்தளம் ஆகியது...

அதிலையும் கோட்டைக்கு அருகின் "ரெலிகொமினிகேசன்" தாக்குதல் புலிகள் திட்டமிட்ட போது அதைக்குளப்ப மற்றவை(இயக்கங்கள்) பட்ட பாடு கேள்விப்பட்டிருக்கிறேன்..... மாலைவேளை கோட்டைக்குள் 2மில்லிமீற்றர் பீரங்கியால் தாக்கி பெரிய போர்நடப்பதுபோல ஆட்டம் எல்லாம் போட்டார்கள்.... புலிகள் அனுப்பிய சக்கைவண்டி சரியான இடத்தில் வெடித்ததால் சண்டை சச்சரவில்லாமல் முடிந்தது...! சக்கை கொண்டுபோனவர் சரியான இடத்தில் அதை விட்டு விட்டு கிணத்தில பாய்ந்ததால் உயிர் தப்பினார்...!

அதுக்கும்முன்னமே யாழ் பொலீஸ் நிலையம் தாக்கி அளிக்கப்பட்டு இருந்தது....!

மேலதிக தகவைகளை சின்னப்பூட்ட கேளுங்கோ அவரும் யாழ் மத்திய கல்லூரியில படிச்சவர்....!

விடுதலைப்புலிகளின் தற்போதைய மட்டு தளபதி கேணல் பானு தலைமையில் தான் யாழ் கோட்டை 26.09.1990 அன்று கைப்பற்றப்பட்டது. ஏதோ ஒருவழியில் நானும் பங்களிப்பு செய்தேன்.

இங்கே சென்று பாருங்கள் உங்களது சந்தேகங்கள் பூர்த்தியாகும்

http://www.viduthalaipulikal.com/file/docs...05/08/17-07.pdf

http://www.viduthalaipulikal.com/file/docs...05/08/17-08.pdf

http://www.viduthalaipulikal.com/file/docs...05/07/17-10.pdf

http://www.viduthalaipulikal.com/file/docs...05/07/17-12.pdf

கோட்டையை ஈழப்போர் 1க்கு பிறகு 2ண்டுக்கு முதல் சில இயக்கங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் எண்று நினைக்கிறன்....!

யோ தலா எனக்கு இது விளங்கவில்லை?

இந்திய இராணுவத்தோடு திரிஞ்சவைய கோட்டைக்குள் போய்வர விட்டிருப்பங்கள். அதை நீர் அவர்கள் கோட்டை கட்டுப்பாட்டுக்குள்ளை வைச்சிருந்தவை என்று சொல்லுறீரோ? உம்மடை "சில இயக்கங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவை" என்றதற்கு விளக்கம் தாரும் பாப்பம்?

வேறை ஒண்டுமில் அஜீவன் மாறிக்கீறி மாற்றியக்கங்களும் கோட்டை கட்டுப்பாட்டில் வைச்சிருந்தது என்று குறும்படம் எடுத்துப்போடுவர். பிறகு கேட்டா சொல்லுவர் "தவறாய் குறிப்பிட்டிருந்தால் வருந்துகிறேன்" :roll:

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் இயக்கம் தோழர் சுந்தரம் என்பவரது தலைமையில் ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுமுழுதாக தாக்கி அழித்ததே! :roll: நான் நினைக்கிறேன்.. தோழர் சுந்தரத்தின் மறைவுக்குப் பின்னர் யாழில் புளொட் வாகனங்களை கடத்துவதும் சாப்பாட்டுப் பார்சல்கள் சேகரித்து சுவைப்பதுமாகத்தான் இருந்தது என.. :P

பஸ்தியாம்பிள்ளைக்குப் பின்னர் முக்கியமாகத் தேடப்பட்ட பொலிஸ் அதிகாரி 'சந்திரசேகரா" ஆனால் அங்கு சந்திரசேகரா இருக்கவில்லை. அந்த பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த தேனீர்கடையில் தேனீர் குடித்துக்கொண்டிருந்த தமிழ் பொலிஸ் (இவரது பெயர் நினைவில்லை தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்) பொலிஸ் நிலையத்திற்குள் ஆட்கள் யாரோ போகிறார்கள் என்பதை பார்க்கச் சென்றபோது அந்தப்பொலிஸ் புதியபாதை சுந்தரம் கண்ணன் ஆகியோரினால் சுட்டுக்கொல்லப்பட்டு ஆயுதங்களையும் எடுத்துச் சென்றார்கள். ஆனால் பெரிதாக செய்தி வெளியானது ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் தாக்கியழிப்பென. அது ஒரு சம்பவமே தவிர. ஒரு தாக்கியழிப்பு அல்ல.

ஒரு பொலிஸ் நிலையம் அல்லது இராணுவ முகாம் தாக்கியழிப்பைச் செய்வதற்கு அந்த இடம் தொடர்பான புலானய்வுத் தகவல்கள் மற்றும் அங்குள்ளவர்களின் நடமாட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் அவதானிக்கப்பட்டு திட்டமிடப்பட்டு தாக்குதலானது நெறிப்படுத்தப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு அதன் பின்னாலே தாக்குதல் நடாத்தப்படும். ஆனால் ஆனைக்கோட்டையில் அப்படி எதுவித முன்னெடுப்பும் செயயப்படாது ஒருவரைத் தேடிப்போய் இன்னொருவரைச் சுட்டுவிட்டு வந்து சொல்லப்பட்ட கதையே புளொட் ஆனைக்கோட்டையைத் தாக்கியதான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சுப்ரமணியம் பூங்காவில் புளொட் அமைப்பு நின்றதும்இ அவர்கள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டதும் மிக மிக மிக உண்மையான நிகழ்வு.

ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் அந்தக் காலகட்டத்தில் பலம்பொருந்தியதான காவல்நிலையம் அல்லதான்.. எனினும் புலனாய்வு இல்லையென கூறுவதற்கில்லை.

தோழர் சுந்தரம் ஒரு பழைய கறள்பிடித்த சைக்கிளில்தான் பல மைல் தூரங்களுக்கு போய்வந்தார். அவர் இருக்கும் காலத்தில் புளொட் அமைப்பானது வாகனங்களை கடத்தியதோ அல்லது உணவு சேகரித்ததோ இல்லை. இதுவும் உண்மை.

மற்றும் வட்டுக்கோட்டை முன்னாள் எம்பி தியாராஜாவை சுட்டதும் அவர்தான். :lol:

® À£ ¬÷ ±ø ±ô þÂì¸õ ¸¡¨Ã¿¸÷ ¸¼üÀ¨¼ò¾Çò¨¾ §Á¡ð¼¡÷¸û ¦¸¡ñÎ ¾¡ì¸¢ÂÐ »¡À¸õ ÅÕ¸¢ÈÐ...¬É¡ø «Ð §¾¡øÅ¢Â¢ø ÓÊó¾ ´Õ ÓÂüº¢...±ó¾ ÅÕ¼õ ±ýÚ ºÃ¢Â¡¸ »¡À¸Á¢ø¨Ä...

º¡Å¸î§ºÃ¢ ¦À¡Ä¢Š ¿¢¨ÄÂõ ¾¡ì¸¢ÂÆ¢ò¾ §¿Ãõ ¿¡ý ´Õ ¨Áø àþ'¾¢ø ¯ûÇ ¯ÈÅ¢É÷ Å£ðÊø ¿¢ýÈ¢Õó§¾ý... ±ýÉ «ÊÂö¡ «Ð?.......

ÒÄ¢¸Ç¢ý §Áƒ÷ §¸ÊøŠ »¡À¸õ þÕ츢Ⱦ¡?...º¡Å¸î§ºÃ¢ ¦À¡ÚôÀ¡ÇḠŢÇí¸¢ÂÅ÷.. «¿¢Â¡ÂÁ¡¸ ¾ÅÚ¾Ä¡É ÌñΦÅÊôÀ¢ø Á¡Å£ÃáÉÅ÷..

º¡ó¾¢..¯í¸û ¸Õò¨¾ ÅçÅü¸¢§Èý...¬É¡ø «ó¾§¿Ãõ «§É¸Á¡¸ ±øÄ¡ þÂì¸ §À¡Ã¡Ç¢¸Ùõ ¾Á¢ú Áì¸Ç¢ý Ţξ¨Ä측¸ þ¨½ó¾Å÷¸û...

«Å÷¸Ù¨¼Â «÷ôÀ½¢ôÒì¸Ùõ §À¡üÈò¾ì¸¨Å...

¯¾¡Ã½õ..: ±ÁÐ §¾º¢Â¾¾¨ÄÅ÷ þýÚõ ÌðÊÁ½¢ ¾í¸òШà §À¡ýÈ ÀÄ Á¡üÚþÂì¸ §À¡Ã¡Ç¢¸¨Ç Á¡Å£Ã÷¸Ç¡¸§Å À¡÷ôÀÐ Á¢¸×õ §À¡üÈò¾ì¸Ð..

²¦ÉÉ¢ø Á¡üÚ þÂì¸í¸Ç¢ý ¾¨Ä¨Á¸û ¦ºö¾ À¢¨Æ¸Ç¡ø §À¡Ã¡Ç¢¸û À¢¨ÆÂ¡ ÅÆ¢¿¼ò¾ôÀð¼¡÷¸û.

¬É¡ø ®À¢ÊÀ¢ §À¡ýÚ ¾Á¢Æ÷Å¢§Ã¡¾Á¡¸ ¦ºÂüÀÎõ ¾üºÁÂÓûÇ ¸ûÇìÜð¼íÇ¢ý ¦ºÂüÀ¡Î¸¨Ç «È¢óÐõ «¾¢ø þ¨½§Å¡ÕìÌ ÁýÉ¢ôÀ¢ø¨Ä.

±ÉÐ ¸Õò¨¾ ²üÚ즸¡ûÅ£÷¸û ±É ¿õÒ¸¢§Èý.

¿ýÈ¢...

® À£ ¬÷ ±ø ±ô þÂì¸õ ¸¡¨Ã¿¸÷ ¸¼üÀ¨¼ò¾Çò¨¾ §Á¡ð¼¡÷¸û ¦¸¡ñÎ ¾¡ì¸¢ÂÐ »¡À¸õ ÅÕ¸¢ÈÐ...¬É¡ø «Ð §¾¡øÅ¢Â¢ø ÓÊó¾ ´Õ ÓÂüº¢...±ó¾ ÅÕ¼õ ±ýÚ ºÃ¢Â¡¸ »¡À¸Á¢ø¨Ä....

1984ம் ஆண்டு என நினைக்கிறேன்.. மாலை சூரியன் மறையும் நேரம்.. நண்பன் ஒருவன் ஓடிவந்து செய்தி கூறினான்...

"ஒரு லொறி ஒன்றுக்கு கவச வாகனம் மாதிரி தகதுகள் பொருத்தி, அதில துவக்குகளும் பொருத்தி முன்னால போக.. பின்னால சைக்கிள்ள 'டபிள்'ள பெண்களும் ஆண்களுமா நேவி காம்ப் தாக்க ஆண்களும் பெண்களுமா போறாங்கடா.. வீடியோ கமராவும் கொண்டு போறாங்க.. அவங்களுக்கு பின்னால அவங்க சண்டை பிடிக்கிறதை பாக்க குஞ்சு குறுணி கிடுகள் எண்டு நூறு சனத்துக்கு மேல சைக்கிள்ல போகுதுகள்டா :P "

இப்படி பரகசியமாக சனத்துக்கு அம்பலப்படுத்தியவாறுதான் சென்றார்கள். மறுநாள் காலை செய்தி வந்தது. கவச வாகனம் போல உருவாக்கி கொண்டு சென்ற பார ஊர்தி மணலில் புதைந்துவிட்டதாகவும்.. நேவி காம்பிலிருந்து சுட்டதால போன வேகத்திலேயே எல்லோரும் திரும்பி வந்துவிட்டார்கள் என.

அதைத் தொடர்ந்து, புலிகள் அந்த பாரஊர்தியை மீட்டு வந்து அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் கேள்விப்பட்டேன். :P

யோ தலா எனக்கு இது விளங்கவில்லை?

இந்திய இராணுவத்தோடு திரிஞ்சவைய கோட்டைக்குள் போய்வர விட்டிருப்பங்கள். அதை நீர் அவர்கள் கோட்டை கட்டுப்பாட்டுக்குள்ளை வைச்சிருந்தவை என்று சொல்லுறீரோ? உம்மடை "சில இயக்கங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவை" என்றதற்கு விளக்கம் தாரும் பாப்பம்?

வேறை ஒண்டுமில் அஜீவன் மாறிக்கீறி மாற்றியக்கங்களும் கோட்டை கட்டுப்பாட்டில் வைச்சிருந்தது என்று குறும்படம் எடுத்துப்போடுவர். பிறகு கேட்டா சொல்லுவர் "தவறாய் குறிப்பிட்டிருந்தால் வருந்துகிறேன்"

யாரும் கவலைப்படத் தேவையில்ல.

நான் இப்படியான படங்கள் மட்டுமில்ல.

நாடு கிடைச்சாக் கூட யாரோடும் சேர்ந்து போராட்டம் சம்பந்தமா படம் எடுக்க மாட்டன்.

அப்படியான ஒருவனா நான் இருந்திருந்தா யார் யாரோடயோ சேர்ந்திருப்பேன்.

அவ்வளவு குளறுபடி............................. :D

அற்புதன் நல்லதொரு தொடரை எழுதி வந்தார்.

அவரையும் போட்டு தள்ளினாங்க........

இப்போ எல்லாம்

எனக்கிருக்கிற கவலை

அங்கே வாழ்கிற மக்கள் சுதந்திரமா இருக்க

ஒரு விடிவு வேணும் என்பது மட்டும்தான்.

அது "விடுதலைப் புலிகளால்" மட்டுமே முடியும் என்று நம்புகிறேன்.

அதில் மாற்றான கருத்து கிடையாது.

அப்படி இல்லாமல் போகுமானால்

அது முன்னர் இருந்த தமிழர் நிலையை விட கீழ்த்தரமான

ஒரு அடிமை நிலைக்கு தள்ளும்.

அல்லது

ஒட்டு மொத்த இலங்கையின் சீரழிவுக்கு வித்திடும்.

அதைத்தான் சிங்கள அரசியல்வாதிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அண்மையில் தொலைபேசியில்

"நேரடி யுத்தம் ஒன்று இல்லாத யுத்தமூட்டமாக இடம் பெறும் கொலைத் தொடர்களையும்

முடிவுகளை ஏற்காத புலிகளின் தன்மைகளையும்

தள்ளிப் போகும் சமாதான சூழல்களையும்

தமிழர் தரப்புக்குள் நடக்கும் இழுபறி மற்றும் கொலைகள்

போன்றவைகளையும்

சிங்கள தலைமைகள் எதிர்பார்க்கின்றனர்.

இது எதில் கொண்டு போய் முடியும் என்று நினைக்கிறாய்?"

என்றார் தமிழர் போராட்டத்தை ஆதரிக்கும் ஒரு சிங்கள நண்பர்.

(தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்கின்ற சிங்களவர்களும் இருக்கிறார்கள்.)

எனக்குப் புரிகிறது அவர்களது ஆதங்கம் என்றேன்.

என்ன? என்றார்.

"ஒன்று பிரபாகரனுக்கு வயதானால் தற்போதைய தமிழீழத்துக்கான வேகம் குறையும் என்று நினைக்கிறார்கள்.

அல்லது பிரபாகரன் இறந்தால் இது இதோடு முடிந்துவிடும் என்று நினைக்கிறார்கள்."

என்று சொல்லி விட்டு மறு முனை பதிலுக்காய் நின்றேன்.

"நான் சொல்லத் தயங்கிதை நீயே சொல்கிறாய்?" என்றார்.

நான் சொன்னேன்." இதுதான் சிங்களவனின் முட்டாள்தனம்.

செல்வநாயகம் கேட்டது நிறைவேறியிருந்தால் இவ்வளவு தூரம் போயிருக்காது.

இப்போ கூட சுயாட்சியை கொடுக்கலாம் அல்லது பிரிந்து போக விடலாம்.

அது பெரிதாய் பாதிப்பை தராது.

ஒன்றுமட்டும் உறுதி.

பிரபாகரன் உயிரோடு இருக்கும் போது ஒரு தீர்வு எட்டப்பட்டாக வேண்டும்.

இல்லாவிட்டால் ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் கட்டுப்பாடற்று செயல்படத் தொடங்குவார்கள்.

புளொட் போன்ற இயக்கங்கள் ஆயுதம் இல்லாத காரணத்தால் வெறுமனே வெளியேறினார்கள்.

இப்போது இருப்பவர்கள் பயிற்சி பெற்ற ஆயுதம் தரித்த சிறந்த இளைஞர்கள்.

இவர்கள் சிதறினால் சிங்களம் தமிழ் அல்ல தான் வாழ பக்கத்து நாடுகளையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

இலங்கை ஒரு பாதாள உலக நாடாகிவிடும்.

பிரபாகரனைத் தவிர கடவுளே வந்தாலும் தமிழரை

அடக்க முடியாது.

இப்போ கிடைக்காத சமாதானம் வந்தால் என்ன?

வராட்டால் என்ன?" என்றேன்.

மறுமுனையிலிருந்து அவர் பேசவேயில்லை.

பழைய பிளாஸ் பேக் முக்கிய நிகழ்வு ஒன்று:-

இது 1985-1986ல்

புளொட்

சென்னை கே.கே.நகர் அம்மன் கோயில்

எம்.ஜீ.ஆர். சத்துணவு திட்ட மண்டபத்தில்

Tamil School of social science (T3S) என்ற பெயரில்

Political science எனும் கல்வியை

ஒரு சில போராளிகளுக்கு வழங்கியது.

அதன் பொறுப்பாளராக லண்டனில் இருந்து வந்த

ராஜா நித்தியன் செயல்பட்டார்.

இவர் ஆரம்பகாலத்தில் உமா மகேஸ்வரன் மற்றும் பிரபாகரனின் நெருங்கிய நண்பர்.

இவர் எப்ப பேசினாலும்

பிரபாவும் உமாவும் சேர வேணும்டா ராசா

என்ற வார்த்தை வாயில் வராத நாளே கிடையாது.

தற்போது இவர் லண்டனில் இருக்கிறார்.

T3S ல் சோவியத் யுனியன் - இந்திய கம்யூனிச கட்சிகள் -

இடதுசாரி அமைப்புகள் - மேற்கத்தைய ராஜதந்திரிகள்

போன்றோர் அரசியல் வகுப்புகளை எடுத்தார்கள்.

அங்கே ஈழப் போராட்டத்தின் தொடக்கம் பற்றிய சரித்திரம்

கூட எதுவித பக்க சார்புமற்று கற்பிக்கப்பட்டது.

அங்கே தோழர்கள் எவரும் பிரபாகரனையோ

அல்லது ஏனைய இயக்க தலைவர்களையோ

கீழ்தரமாக தூற்ற இடமளிக்கப்படவில்லை.

பிரபாகரனும் முகுந்தனும் (உமாவின் இயக்க பெயர்)

இணைந்தால் வெற்றி தூரத்தில் இல்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது.

இது நடந்தால் ஏனைய இயக்கங்கள் துணையாய் நிற்கும்

அவர்களும் எமது மண்ணின் மைந்தர்கள் என்ற

எண்ணம் கொண்டோரே அங்கு இருந்தனர்.

அங்கேதான் புளொட் செய்த உட் கொலைகள் பற்றிய தகவல்கள் வகுப்புகளுக்கு வந்த தோழர்கள் வழி கசிந்தது.

அதுபற்றி கதை கதையாய் கூறும் போது ஒரு தோழன்

என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அலறியதை

என் வாழ்நாளில் மறக்க முடியாது.

அவன் கூறும்போதே வலிப்பு வந்தவன் போல ஆனான். அந்த மிலேச்சத்தனமான காட்டுமிரான்டி செயல் என்னை உலுக்கி எடுத்தது.

பல மாதங்கள் தூக்கத்தை கெடுத்தது.

மக்கள் மேல் பாசம் கொள்ள வைக்க வேண்டிய

இவர்களா இப்படி?

நம்மோடு இருப்பவர்களையே புரிந்து கொள்ள முடியாத

இவர்களா ஒரு நாட்டை ஆளப் போகிறார்கள்?

இப்படி என்னுள் தோன்றாத கேள்விகளே இல்லை எனலாம்.

கேட்ட என்னாலேயே தூங்க முடியவில்லை.

பார்த்து அனுபவித்த அவர்களின் நிலை?

தனது நாட்டுக்காக உயிர் கொடுக்க வந்த போராளிகளின்

அவலச் சாவுகளுக்கு தண்டனை தாமதமாகவேனும் அவர்களுக்கு கிடைத்தது.

அது எவராக இருந்தாலும் இயற்கை நிச்சயம் தண்டிக்கவே செய்யும்.

அதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான்.

நான் இவை பற்றி பகிரங்க வினாக்களை எழுப்ப முயன்ற

ஆரம்ப காலத்தில்

"வேண்டாம் அண்ணா உங்களையும் இழந்திடுவோம்" என்று என் வாயை மூடிய தோழர்கள் இன்று எங்கே என்பது தெரியாது.

அதிகமானவர்கள் என்னை ஒரு போதும் தோழர் என்று அழைத்ததில்லை அண்ணா அல்லது பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.

அது என் விருப்பமாக இருந்தது.

அதில் மட்டுமல்ல உமாவின் படங்களை கழுத்தில் தொங்க வைத்துக் கொண்ட முட்டாள் திட்டங்களையும் எதிர்த்தேன்.

இவை எனக்கு அப்போது நடிப்பாகவே பட்டது.

அது நிஜமாகி இருக்கிறது.

இக்கால கட்டத்தில்தான்

அனைத்து தலைவர்களும் கலந்து கொண்ட ஈழப் புரட்சி அமைப்பின், மாணவர் அமைப்பினால் அனைத்து இயக்கங்களினதும் மாணவர் அமைப்புக்களையும் ஒருங்கு படுத்தி உலக பல்கலைக் கழக மண்டபத்திலும் ,எக்மூரிலும் நடந்த மாநாட்டில் உட் கொலை பற்றி உமாவிடம் பகிரங்கமாக கேள்வி எழுப்பப்பட்டது.

"போராட்டத்தில் இது சர்வசாதாரணமான ஒரு நிகழ்வு" என்று

பதிலளித்தார்.

மேடையில் அவருக்கு பக்கத்திலிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

நான் உமாவுக்கும் ரத்னசபாபதிக்கும் நடுவே அமர்ந்திருந்தேன்.

நான் இருக்க முடியாமல் எழும்ப முயன்ற போது

என்ன என்று கேட்டார்.

நான் மழுப்பலாக "ஏதோ பக்கத்தில் மணக்குது..........." என்றேன் சிங்களத்தில்.

அதற்கு உமா " ஊ பீலா அத்தி" (அவன் குடித்து இருப்பான்....) என்றார்.

(நாங்கள் இருவரும் யாருக்கும்புரியாமல் இருக்க சிங்களத்தில் பேசிக் கொள்வது வழக்கம்.)

அது நண்பர்கள் சொன்னதை உண்மையாக்கியது.

அன்றுதான் நான் இயக்கத்தை விட்டு வெளியேற

முடிவெடுத்தேன்.

இக் கால கட்டத்தில் ராஜா நித்தியன் யாழ் சென்று வந்து

ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதில் அவர் குறிப்பிட்டார்.

" தம்பிளா......... புலிகளைத் தவிர ஒரு இயக்கமும் நாட்டில மிஞ்சாது................"

என்று ஒரு பெரிய உபதேசமே செய்தார்.

அப்ப அடுத்த பொங்கலுக்கு பொங்கல்தான் கிடைக்கும் என்றான் ஒருவன்.

ஏன்டா? என்றார்.

பொங்கலுக்கு புதுச்சட்டை வாங்கித் தாரண்டு சொல்ற மாதிரி

பொங்கல் தமிழீழம் இல்லை எண்டு சொல்லுங்கோ?

அண்ண

எதுக்கும் எங்கள பொங்காம பாத்துக்கோங்கொ என்றான்.

" தம்பிளா......... புலிகளைத் தவிர ஒரு இயக்கமும் நாட்டில மிஞ்சாது................"

என்ற பிறகு பிரச்சனை ஆரம்பமாக

ராஜாநித்தியனும் தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்

என்று தப்பி ஓடிட்டார். :P

அவர் இறுதியா என்னிடம் சொன்ன வார்த்தை

"குஞ்சு இவங்கள் எல்லாரையும்

நடுத் தெருவில விட்டுட்டாங்கள்" என்பதுவே.

தலைப்பு என்னவெண்டு நினைவூட்டலாமெண்டு வந்திருக்கிறன்.. இதுதான் தலைப்பாம்..

"ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது"

தலைப்புக்கு உரமா அமெரிக்கா புலியளை பயங்கரவாதியள் பட்டியலிலையிருந்து நீக்கினதா அறிக்கை விடட்டும்.. அதுக்குப்பிறகுவந்து தலைப்புக்கேற்ற கருத்து எழுதிறன்..

:P

அப்பு அவன் எடுக்குற நேரம் எடுக்கட்டும் தலைப்பிக்கு ஏற்ற மாதிரி கருத்து எழுது பாக்கலாம் உம்மால் முடியுமா :?:

தலைப்பு என்னவெண்டு நினைவூட்டலாமெண்டு வந்திருக்கிறன்.. இதுதான் தலைப்பாம்..

"ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது"

தலைப்புக்கு உரமா அமெரிக்கா புலியளை பயங்கரவாதியள் பட்டியலிலையிருந்து நீக்கினதா அறிக்கை விடட்டும்.. அதுக்குப்பிறகுவந்து தலைப்புக்கேற்ற கருத்து எழுதிறன்..

:P

தலைப்பு என்னவெண்டு நினைவூட்டலாமெண்டு வந்திருக்கிறன்.. இதுதான் தலைப்பாம்..

"ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது"

தலைப்புக்கு உரமா அமெரிக்கா புலியளை பயங்கரவாதியள் பட்டியலிலையிருந்து நீக்கினதா அறிக்கை விடட்டும்.. அதுக்குப்பிறகுவந்து தலைப்புக்கேற்ற கருத்து எழுதிறன்..

:P

கோட்டையில யார் கொடி ஏற்றினதெண்ட பிரச்சனையே முடியல்ல

அதுக்குள்ள எப்பிடி அமெரிக்கா போறது? :P

தலைமைகளின் தவறான வழிநடத்தலால், மாற்று இயக்கங்கள் தடைசெய்யும்வரை, ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு மாகாமுக்கு ஒவ்வொரு பக்கத்தி காவல்காத்தது உண்மைதான், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை,தொண்டமனாறு, முகாம்களை சுற்றி இவர்கள் காவலுக்கு நின்றதை நான் கன்னிருக்கிறேன். எல்லோரும் நாட்டின் விடுதலைக்காகத்தான் போராட வந்தார்கள், அஜீவன் கூறுவது போன்று தலைமையின் பிழையான வழிநடத்தலினாலும், உள்கொலைகளினாலும்தான் சிதறி சின்னாபின்னமாகிம்போனார்கள். இன்று நல்லொதொரு தலைமை கிடைத்திருக்கிறது, அதன் பின் அணிதிரள்வதுதான் எமது மக்களின் விடுதலையை நேசிக்கும் ஒவ்வொருத்ரின் கடமையும். கூட்டத்தில் இருந்து வழிதவறிய ஆடுகள் மீண்டும் திருந்தி இணைந்து கொண்டால், மேய்ப்பன் அவர்களை என்றும் மன்னித்து ஏற்றுக்கொள்வான்.

எல்லோருக்கும் எல்லாமும் அல்லது

கடந்த காலம் தெரியாது.

உண்மைகளை பேசுவதாலும் ஏற்றுக் கொள்வதாலும்

சந்தேகத்துடன் இருக்கும் பலர்

இணையாவிடினும்

உபத்திரமாவது பண்ணாமல் இருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.