Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்துக்குமாரில் தொடங்கி இல.மணி வரை

Featured Replies

165992_10200981008953986_709271100_n.jpg

முத்துக்குமாரில் தொடங்கி இல.மணி வரை உன்னதமான உயிரை ஆயுதமாக்கி நீதிகேட்டார்கள்..

 

உயிராயுதம் ஏந்திய உங்கள் தியாகத்தையும் வன்முறை என்கிறது இந்த மனசாட்சியற்ற சர்வதேசம்..உணர்வுள்ள உங்களையெல்லாம் இழந்துவிட்டு நாம் யாரை வைத்துப் போராட்டம் நடத்துவது என்று எண்ணி உங்கள் உன்னத உயிர்களைக் ஈகம் செய்கிறீர்கள்?..உணர்வுள்ள நீங்களில்லாமல் நமக்காக யார் போராடுவார்கள்?.கருணாநிதியா?..அவர் போராட்டம் நடத்துவாரா அல்லது கொலையாட்டம் நடத்துவாரா?..

 

உங்கள் உணர்வுடன் உங்கள் உயிரும் நமக்குத் தேவை..உயிரைக் கொடுப்பதன்மூலம் மனச்சாட்சியற்ற சர்வதேசத்திடம் எதையும் கேட்டுப் பெறமுடியாது சகோதரனே!. ...

 

உணர்வுள்ள தமிழன் உயிருடன் இருக்கவேண்டும்...

 

கொலைகாரனெல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும்பொழுது நாம் ஏன் சாக வேண்டும்..நீ எதற்காக உன்னுயிரை ஈந்தாயோ அது விரைவில் நடந்தேறும்..சென்றுவா சகோதரா! தலை சாய்த்து வணங்குகிறோம்!!!!

 

-முகநூல்

பேச வார்த்தைகள் எதுவும் இல்லை.. -

 

485115_4629485975451_149980757_n.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மனசுக்கு பாரமாருக்கு, இப்படிப்பட்ட உணர்வாளர்கள் வாழவேண்டுமே தவிர சாகக்கூடாது. இவர்கள் தங்கள் குடும்ப உறவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்

 

.நன்றியுடன் கண்ணீர் வணக்கங்கள்!

தலையங்கத்தில் ஒரு தவறு உள்ளதாக சிலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முத்துக்குமாருக்கு முன்னரே ஈழத்தமிழர்களுக்காக 1995-12-15 அன்று தீக்குளித்து தற்கொடை செய்தவர்  'அப்துல் ரவூப்' ஆகும்.

 

பார்க்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=78974

 

  • கருத்துக்கள உறவுகள்

பிறர்வாழத் தாம் வீழ்ந்த உறவுகளுக்கு நினைவு அகவணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்

2003இல்  அப்துல் ரவூப் நினைவாய் எழுதிய கவியிணைப்பு.


http://www.yarl.com/...p?showtopic=813

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் ரவூப் முதல் இல.மணி வரை ஈழத்தமிழருக்காய் மரணித்த அனைத்து ஈகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

sympathy11.gif

Edited by யாயினி

  • தொடங்கியவர்

சகோதரன் மணிக்கு எழுதும் கண்ணீா் கடிதம்

 

அன்புக்குரிய சகோதரன் மணிக்கு ஈழத் திருநாட்டிலிருந்து அபலைத்தமிழன் எழுதும் கண்ணீர்க் கடிதம் இது.

 

முகம்அறியா ஈழத்தமிழர்களுக்காக, உன் உடலை அக்கினி யாகத்தில் ஆகுதியாக்கிய செய்தியை அறிந்து அலறிப்போனோம். எங்கள் வாழ்வுக்காக, எங்கள் உரிமைக்காக உன் உடலை பற்ற வைத்த தியாகம் இருக்கிறதே அதனை வீம்புக்கேனும் யாரும் விலை மதித்துவிட முடியாது. சகோதரன் முத்துக்குமாரனின் தீக்குளிப்பின் சோகங்கள் ஆறாத வடுக்களாக எங்கள் உள் ளங்களை வாட்டி வதைக்கின்ற வேளையில், மணியும் எங்களுக்காய் தன் உடலை எரியூட்டிக் கொண்டான் என்ற செய்தி கேட்டுப் பதறிப்போனோம்.

 

 

சோதரா! உன் உடலை எரியூட்டி ஈழத்தமி ழர்களின் அவலத்தை உலகறியச் செய்து உன் மரணத்தினாலேனும் ஈழத்தமிழர் அவலம் நீங்க வேண்டும். தமிழ்ச் சகோதரர்களுக்கு வலி கொடுத்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று நீ செய்த தியாகத்தை உச்சி மேல் கைவைத்து போற்றித் துதிக்கின்றோம்.

 

அதேவேளை, எங்களுக்காக தன் உடலையே தீயிட்டுக் கொளுத்தக்கூடிய உயர்ந்த சகோதரர் களை இழந்த இழப்பு இருக்கின்றதே, அது என்றும் ஈடுசெய்ய முடியாதது. உன் போன்ற சோதரர்கள் உயிரோடு இருப்ப தால்தான் நாங்கள் உயிர் வாழ்கின்றோம்.


எனவே அன்புச் சகோதரா! மணி உன் உடல் தீயுடன் கருகியபோது எங்கள் இதயம் வெந்து கொண்டது. ஈனச்செயல்கள் எங்களை மட்டுமல்ல, கடல் கடந்து இந்திய தேசத்தில் வாழும் எங்கள் தமிழகத் சகோதரர்களையும் எரியூட்டச் செய்கிறதே என்று நினைக்கும்போது எங்கள் நெஞ்சு நீறாகிறது. இன்று; நேற்று மட்டும் அல்ல, ஈழத்தமிழர்கள் இலங்கை மண்ணில் காலாகாலமாக வதைக் கப்பட்ட போதெல்லம் தமிழகத்தில் வாழும் எங்கள் உடன்பிறப்புக்கள் தங்கள் சோகத்தை - துன்பத்தை அடக்க முடியாமல் அக்கினிக் குண்டத்தில் குதித்து, ஓ! உலகமே இதோ! எங்கள் உடல் பற்றி எரிவதனைப் பார்த்தேனும் ஈழத் தமிழர்களுக்கு உதவுங்கள் என்று இரக்கமாக குரல் எழுப்பினர்.

 

 

இந்த இனத்துவ பாசத்தை உலகில் வேறு எங்கும் காண்பது முடியாத காரியமே. என்ன செய்வது? அக்கிரமங்களுக்கு ஆலாத்தி எடுக்கின்ற இந்த உலகில் எங்களுக்கு உதவ எவரும் முன்வராமல் இருக்கலாம்.   ஆனாலும் அதுபற்றிய கவலைகளை விட, உங்கள் உடல்கள் எரிவதுதான் எங்கள் இத யங்களை எரிக்கின்றன.  மணிக்கு எழுதும் இந்தக் கண்ணீர்க் கடிதம் எங்கள் உயிரினும் மேலான தமிழகச் சகோதரர் களின் இத்தகைய முடிபுகளுக்கு முடிபு கட்டட்டும். ஈழத்தமிழர்களுக்கான உங்கள் அர்ப்பணிப் புக்களை - தியாகங்களை பாதை மாற்றிப் பார்ப்போம். அது நிச்சயம் வெற்றி தரும்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=654:2013-03-07-08-38-17&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.