Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு?

 

மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல.  சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் பிள்ளையார் சிலைகள் ‘பால் குடிப்பதாக’ மக்கள் கூட்டம் நம்பிய நிகழ்வுமாகும். இது அறிவியலாளர்கள் சிந்தனையையும் முட்டத் தவறவில்லை.

 

பலரால் நோக்கப்பட்ட இந்தக் கருத்தாக்கத்திற்குத் தெளிவான விளக்கம் உண்டு. நீரோ, பாலோ வேறெந்த நீர்மமோ ஒரு கரண்டியிலோ சிறிய கிண்ணத்திலோ எடுத்துக்கொள்ளப்படும்போது அதன் புறப்பரப்பு தட்டையாக இல்லாமல் சிறிது வளைந்திருக்கும் என்பது நன்கு அறியப்பட்ட விடயம். புறப்பரப்பு விசையால் (‘surface tension’) நீர்மம் தனது மேற்பரப்பைச் சுருக்கிக்கொள்ள முனையும் தன்மையே இதன் காரணம் ஆகும். நீரோ பாலோ நிரப்பப்பட்ட ஒரு கரண்டியைச் சிலையின் வாய்க்கருகில் கொண்டு செல்லும்போது நீர்மத்தின் மேற்பரப்பைச் சிலையின் மேலுதடு தொடுவது இயல்பு. உதடில்லாத பிள்ளையார் சிலையாக இருப்பின் துதிக்கையின் கீழ்ப்பகுதிக்கும் முகத்திற்கும் உள்ள இடைவெளியில் கரண்டியைக் காட்டுவோம். இங்கும் நீர்மத்தின் மேற்பரப்பை சிலையின் ஒரு பகுதியைத் தொடும். இதனால் நீர்மம் வெளிப்புறம் வழிந்தோட வாய்ப்பு உண்டு.

இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது மற்ற நிலைகளைச் சார்ந்துள்ளது. சிலை ஈரமாக உள்ளபோது அதிலுள்ள நீரும் கரண்டியின் பாலும் சேர்ந்து ஒரு நீர்மமாக நீரின் தடம் வழியே வெளியில் வழிந்தோடும். இவ்வாறு பால் சிலையின் மீது சிந்தும்.

சிலை உலர்ந்திருக்கும்போது கரண்டியிலிருந்து சிலையின் உதடுகளிலுள்ள விரிசலுக்கிடையே (ஒரு சிறு துளையாக இருந்தாலும்) வழிந்து கீழே சிந்திவிடும். கரண்டியின் மேற்பரப்பிலுள்ள பால் மட்டுமே இவ்வாறு வழிந்தோடுகிறது. நீர்மங்களின் புறப்பரப்பு விசை இயல்பினால் ஏற்படும் நுண்புழை செயற்பாடும் இதற்கு உதவுகிறது. சிலை உதடுகளுக்கிடையே உள்ள விரிசலானது நுண்புழைக்குழாயாகச் செயல்பட்டு பால் வழிந்தோடச் செய்கிறது. இவ்வாறு முதல் கரண்டி பாலில் உதடு ஈரமடைந்துவிடும். இரண்டாம் கரண்டி பாலில் இன்னும் எளிதாக வழிந்தோடும். ஏனெனில், நுண்புழைக்குழாய் (சிலை உதடுகளின் விரிசல்) முன்னமே முதல் கரண்டி பாலில் நிரம்பிவிட்டது. இவ்விளக்கம் குறிப்பிட்ட சூழலுக்கேற்ப சிறிது திரிந்தமையும். ஆனால், இதன் அடிப்படை ஒன்று தான்.

இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது பால் கரண்டியிலிருந்து படிப்படியாகக் குறையும்போது அது சிலைக்குள் சென்று மறையவில்லை; மாறாகச் சிலையின் அடித்தளத்தில் படிந்து கிடக்கும்.

ஒரு சிறு கரண்டியில் பால் அளக்கப்பட்டு எடுத்துக்கொண்டு சிலையை ஒரு தட்டில் வைத்துவிடுவோம். இப்போது பாலைச் சிலை உதடுகளில் ஊட்டுவோம். சிறிது நேரம் பொறுத்த பின் கரண்டியில் குறைந்துபோன பாலின் அளவையும் தட்டில் சேர்ந்த பாலின் அளவையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நடப்பது என்னவென்று விளங்கிவிடும். வெள்ளி சிலையாக இருப்பின் இந்தச் செயல்முறை இன்னும் சிறப்பாக விளங்கும். கூர்ந்து நோக்கும்போது பால் சிற்பத்தின் பரப்பில் வழிந்தோடுவது கண்கூடு.

இதைப்போன்று இன்னும் எளிமையான இரண்டு செய்முறைகளைக் காண்போம்.

  1. ஒரு குவளையில் படிப்படியாக நீர் ஊற்றும்போது அதன் விளிம்பளவு நிரம்பியவுடன் நீர் வழியாமல் சிறிது மேல்நோக்கி புடைத்திருப்பதைக் காணலாம். இதன் அடிப்படை நீரின் புறப்பரப்பு விசை இயல்பு.
  2. ஒரு தட்டையான பரப்பில் ஒரு சொட்டு நீர் ஊற்றி அந்த நீர்ச்சொட்டினை நகக்கண்ணால் துளைப்போம். இப்போது நகக்கண்ணில் படிந்த நீரைப் பரப்பின் விளிம்புக்கு அருகில் கோடிடுவோம். நீர் பரவாமல் நகக்கண் நகர்த்திய வழியில் போகும். இவ்வாறு பால், எண்ணெய் என எந்த நீர்மத்தையும் ஆய்ந்து பார்க்கலாம்.

இவ்விளக்கத்தின் அடிப்படைக் கருத்தாக்கம் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் பாடப்பகுதியாகும். இந்த ‘அற்புதத்தின்’ தொலைக்காட்சிப் படங்களைக் கூர்ந்து நோக்குவதே இதனைப் புரிந்து கொள்ளப் போதுமானது.

- சு.உலோகேசுவரன்( lokeshvsn@hotmail.com)

(http://www.imsc.res.in/~jayaram/Articles/milkb.html இணைப்பில் உள்ள ஆங்கிலக் கட்டுரையைத் தழுவியது.)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படி ஆராய்ச்சி செய்தாலும் நாங்கள் நம்பமாட்டோம்

 

பிள்ளை யார் பால் குடித்தது உண்மை அறிவோம் :D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கிளம்பிடாங்கையா, கிளம்பிடாங்க..
 
இந்த பால் விடயம் குறித்து இங்கே பாருங்கள்:
 
 
Click the button in the middle to read the article:  Lord Ganesh - Milk Miracle
 
Select the Language option to Tamil to read it in Tamil.
 
என்ன விடயம் எனில், குறிப்பாக சில இந்திய இந்துகள் தான், ஆதாரம் இல்லாமல், பொதுவான இருக்கும் விஞ்ஞான விளக்கத்தினை, பொருத்தமில்லாமல் தமது வாதத்துக்கு இழுத்துஇதனை பொய் என சொல்ல, இது குறித்து ஆய்வு செய்த வெள்ளை இன விஞ்ஞானிகள் இது பொய்யானது என தெளிவாக நீருபிக்க இல்லை.
 
நான் இதனை உண்மை என்று சொல்ல வரவில்லை, ஆனால் இது குறித்த சரிதான் என சொல்லக் கூடிய விளக்கம் இன்னும் இல்லை. இதனையே மேற்குலக விஞ்ஞானிகள் கூட சொல்கின்றனர்.
 
However when questioned by the journalists, they could not offer any explanation as to how it occurred almost simultaneously worldwide and only to the Lord Ganesh idols.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் யேர்மனியில் இருந்தபோதுதான் இந்தப் பால் குடிக்கும் கதை விட்டார்கள். நான் சாதாரணமாகக் கோவிலுக்குச் செல்வதில்லை. புதினம் அறியச் சென்றேன்.
முதலில் கணவர் கொடுத்தார். நான் எட்டிப் பார்த்தேன். உறிஞ்சுவதுபோல் இருந்தது. திரும்ப நான் கொடுத்தபோதும் உறிஞ்சுவதுபோல் இருந்தாலும் வெளியே
வழிவதைக் கவனித்துவிட்டேன். கொஞ்ச நேரம் அந்த இடத்தில் நின்று பார்ப்போம் என்றால் அவர்கள் என்னை விடவில்லை. பார்க்காமல் போவதில்லைஎன்று கங்கணம் கட்டிக்கொண்டு என் 5 வயது மகளைக் கூட்டிப்போய் மகள் பால் பருக்க வேண்டும் பிள்ளையாருக்கு என்று அழுகிறார் என்றேன். என்னை ஒரு மாதிரிப்
பார்த்துவிட்டு கெதியாக் குடுத்துவிட்டு போங்கோ என்றனர் இம்முறை அக்கம் பக்கம் எல்லாம் வடிவாக ஆராய்ந்தேன். பெரிய துணிகள் போட்டிருந்தனர் பிள்ளையாரைச் சுற்றி அவை எல்லாம் நனைந்து சுற்றிவரப்  பாலாறு. மகள் கொடுக்க நான் வடிவாப் பார்த்தேன். என்னை அவர்கள் வெளியே கலைக்காத குறை.

 

பார்த்தவர்கள் பலருக்கு விளங்கியிருந்தாலும் பயத்தில் வெளியே சொல்ல மாட்டார்கள்.பலர் பக்தி முத்தியதால் அக்கம் பக்கமே பாக்கமாட்டார்கள் என்பதனால்
எப்படியெல்லாம் மனிதர்களே மனிதர்களை ஏமாற்றுகின்றனர் என எண்ணி வேதனைப்படத்தான் முடிந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா....நீங்களும் ஜேர்மனியில் குப்பை கொட்டியவரா? Wie geht´s ? :D

தெரிவது எதுவாக இருந்தாலும் அறிவது உண்மையாக இருப்பது அறிவு

கடவுள் என்பதக்கு அப்பால்

இந்தபிள்ளையர் எப்படி இந்துமத கதைகளில் எப்படி உருவானார் என்றால்

பார்வதி படுக்கை அறைக்கு காவலாக நின்ற பிள்ளையார் சிவபெருமான்

பார்வதியுடன் படுக்கைக்கு செல்லவிடாமல் தடுத்ததால் கோபம் அடைந்த

சிவபெருமான் அவரின் தலையை வெட்டினாராம் பின் பார்வதி கோபபட்டதால்

தனக்கு இருந்த அவசரத்தில் பக்கத்தில் இருந்த யானையின் தலையை வெட்டி ஒட்டவைதாராம்

இந்தபிளையர் இன்றுபால்குடிகின்றார்

கேக்கிறவன் கேன்னயன் என்றால் .............................................

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவது எதுவாக இருந்தாலும் அறிவது உண்மையாக இருப்பது அறிவு

கடவுள் என்பதக்கு அப்பால்

இந்தபிள்ளையர் எப்படி இந்துமத கதைகளில் எப்படி உருவானார் என்றால்

பார்வதி படுக்கை அறைக்கு காவலாக நின்ற பிள்ளையார் சிவபெருமான்

பார்வதியுடன் படுக்கைக்கு செல்லவிடாமல் தடுத்ததால் கோபம் அடைந்த

சிவபெருமான் அவரின் தலையை வெட்டினாராம் பின் பார்வதி கோபபட்டதால்

தனக்கு இருந்த அவசரத்தில் பக்கத்தில் இருந்த யானையின் தலையை வெட்டி ஒட்டவைதாராம்

இந்தபிளையர் இன்றுபால்குடிகின்றார்

கேக்கிறவன் கேன்னயன் என்றால் .............................................

 

 
 
இந்து மத விளக்கங்களில், பிள்ளையார் எவ்வாறு உருவானார் என  அருமையான விளக்கங்கள் இருக்கையில், மூட நம்பிக்கைக்கு  எதிர் எனும் நிலைப்பாட்டில்  திராவிட கழகங்கள் தந்த அருவருக்கத தக்க வியாக்கியனைதினை தருகின்றீர்களே!
 
மூட நம்பிகைக்கு எதிராக என கிளம்பிய பெரியார், சுகவீனமடைந்த போது, ஒரு தீவிர தொண்டர் பணிவிடை செய்ய தனது மகளை அனுப்ப, அந்த இளம் பெண்ணை (கையை பிடித்திருப்பாரோ?), தனது முதுமையில்  கலியாணம் செய்து கேவலமானார்.  
 
கலைஞர் குறித்து சொல்லத் தேவையில்லை. இரு மனைவிகள், பல துணைவிகள். மகளை சிறை அனுப்பும் அளவுக்கு ஒழுக்கம் இழந்து கேவலம் ஆனார். 
 
மனைவியினை, விவாகரத்து செய்ய, பாப்பாண்டவர் அனுமதி தரவில்லை என, ரோமுடன் ஆன, பிரிட்டனின் தொbடர்பினை துண்டித்து, இங்கிலாந்து திருச்சபையினை தொடங்கிய மன்னர் ஹென்றி 6 பெண்களை மணம் செய்தது மட்டும் இல்லாது அவர்களில் மூவரை சிரச் சேதம் செய்வித்தார். 
 
இந்த கூத்தினால் இன்று அவர்களது வழிபாட்டு தளங்கள் இழுத்து மூடப்படுகின்றன.
 
எல்லா மதங்களும், பல குறைகள் இருப்பினும், மக்களை ஒரு ஒழுக்கமான வாழ்வினை வாழ வைக்கின்றன. மன அமைதியினை கொடுப்பதுடன், ஆன்மீக பலத்தினை தேவையானவர்களுக்கு கொடுத்து வாழ்வில் வெற்றியினை உறுதி செய்கின்றன
 
நம்பிக்கை இல்லாவிடில் ஒதுங்கி இருங்கள். உங்கள் கருத்துகளை நாகரிகமாக  வையுங்கள். முக்கியமாக லிங்கம் எனும் உங்கள் பெயர், உங்கள் கருத்துகளுக்கு பொருந்தவில்லையே!!
 
ஆளை பாராமல் அவர் சொல்ல வரும் விடயம் என்ன என்று பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். இது சமயக் கருத்துகளுக்கும் பொருந்தும்.
 
சிறிது common sense உடன் அணுகினால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் படிப்பறிவில்லாத மக்கள் கூட்டத்துக்கு புரிய வைக்க சொல்லப் பட்ட 'கதைகளை' இந்த அறிவியல் காலப் பகுதியில் அலசலுக்கு எடுக்க முடியுமா?
 
பார்வதி.... படுக்கை அறை.... காவல்....
 
இதனை கருத்தில் எடுத்து உங்கள் கருத்தினை வைக்க விரும்புகிறீர்களா?
 
எந்தக் காலத்தில் இருக்கின்றீர்கள்? 
 

 

Edited by Nathamuni

மதங்கள் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உருவானது

அதில் மருத்துவம் சுகாதாரம் வாழ்க்கை ஒழுங்கு நன்னெறி

அவை

அதிகமாகவே இந்துமார்கத்தில் மிக அற்புதமாக ஒழுகமைக்கபடுள்ளது

ஆனால் மிக மூடத்தனமாக கடவுள் கதைகள் புனையப்படு சாமிகளுகெலாம்

பல மனைவிகள் ராமஜன, மகாபாரத கதைகளில் மனிதநேஜத்தை முழுவதும் மறைத்து சண்டை கொலை பாகுபாடுகள் வேறுபாடுகள் இது ஒரு மனித வாழ்க்கைக்கு தேவை தானா ஒவ்வொரு மனிதனும் தான் சிந்திக்க வேண்டும் , அடுத்தவன் பிளையாருக்கு பலூடி

காட்டவேண்டியதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
எந்த மதத்தில் கொலைகள், வன்முறைகள், புனை கதைகள் இல்லை.
 
கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட, ஜேசு நாதர், மூன்றாவது நாளில் உயிர்த்து எழுந்ததாக இன்றும் கொண்டாடுகின்றர்களே, அவர்கள் முட்டாள்களா?
 
நான் சொல்வது என்னவெனில், இந்த பால்குடி விடயம், எமது மத எல்லைகளைத் தாண்டி,  BBC, CNN, ABC மற்றும் உலகின் முன்னணி பத்திரிகைகள், அவற்றின் நிருபர்களினால் நேரடியாக விசாரிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும்.
 
உலகின் தலை சிறந்த பல்கலை கழக பௌதிக துறைசார்ந்தர்வர்களிடம் தொலைக்காட்சிகளின் பிரதான செய்திகளில், அழைக்கப் பட்டு, இது தொடர்பில் கேள்விகள் கேட்க்கப்பட்டன.
 
அவர்கள் நேரம் இல்லா முட்டாள்களா?
 
இதனை சுத்து மாத்து என்று சொல்வது ஓர் 'பெரிய பேஷன்' போலவும் அவ்வாறு சொல்வதால் தாம் அதீத மேதாவிகளாக காட்டிக் கொள்வதும் நடக்கின்றது. இதற்கு பல ஆயிரம் வருடங்கள் முன்னர் சொல்லப் பட்ட 'அபத்தக் கதைகளை' துணைக்கு இழுப்பதும் நடக்கின்றது. 
 
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது என்பதனை கவனத்தில் கொள்ளாது, தமக்கு அண்மையில் உள்ள  கோவிலில் நடந்த நிகழ்வுடன் தமது அனுமானத்தினை இணைக்கின்றனர். 
 
நான் இந்த பால் கொடுக்கப் போனதும் இல்லை, நேரில் சென்று பார்த்ததும் இல்லை. அப்போதே சுத்து என்று தான் நினைத்தேன். ஆனால் இது மத எல்லைகளைக் கடந்த ஒர் உலகளாவிய ஆய்வுக்கு உள்ளான போது, ஆச்சரியமும் ஆர்வமும் கொண்டு தொடர்ந்து கவனித்தேன், வாசித்தேன். 
 
 அந்த மெத்தப் படித்த அறிஞர்கள் சொன்னது போல, இந்த பால் குடித்த நிகழ்வு எவ்வாறு ஒரே நேரத்தில், உலகம் முழுவதும், பிள்ளையார் சிலைகளுக்கு மட்டும் நிகழ்ந்தது?
 
இதற்கு முடிந்தால் விஞ்ஞான விளக்கம் தாருங்கள்.  
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்???

 
இப்போது உலகம் இருக்கும் நிலையில் .... பூமிக்கு பிள்ளையார் வந்து பால் குடித்து விளையாடி விட்டு போனார்?
இப்படியொரு பேமாண்டியை தான் நாம் கடவுள் என்று கும்பிட வேண்டும் என்றால்?
 
ஏன் என்பதற்கும் நீங்கள்தான் பால் பருக்க வேண்டும்.
 
நீங்கள் நாளை உங்களுடைய சிற்றியில் உடைகள் இன்றி ஓடி திரிந்தால்..... நாலு மீடிய காரன் வந்தும் ஏன் என்று கேட்பான். ஒரு பெட்டியை எடுப்பான் அதை அவர்களது டிவியிலோ ரேடியோவிலோ போடுவான் .அவர்களுடைய தொழில் அதுதான் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று இந்த உலகிலும் ஒரு கூட்டம் அலைந்தால். அவர்களை பெட்டி எடுப்பது அன்பது இன்றைய உலகில் மிக முக்கியமான  ஒரு விடயம். 
 
அவர்கள் ஆராச்சியில் ஈடுபடவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? அவர்கள் நிச்சயம்  மனிதனாக பிறந்துவிட்டால் ஆறு அறிவும் வேலை செய்யுமா என்ற அரச்சியை தொடங்கியிருப்பார்கள்.


எந்த மதத்தில் கொலைகள், வன்முறைகள், புனை கதைகள் இல்லை.

அப்போ மதம் என்றால் சாதாரண மனிதர்களுக்கு அப்பால் பட்டது ..........

 
அது ரவுடிகளுக்கே உகந்ததது என்று சொல்ல வருகிறீர்களா??
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்???

 

நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்???

 

 

அதைத்தான் நானும் கேட்கின்றேன், மருதர்,
 
நான் கேட்பது விஞ்ஞான விளக்கம். நீங்கள் எங்கோ போகின்றீர்கள்.
 
தண்ணி அடிக்கிறியளோ, பால் அடிக்கிறியளோ, உங்களால் முடிந்தால் உங்கள் சிட்டியில், உடைகள் இன்றி ஓடி திரிந்து, newsworthy ஆகி பிரதான TV main news ல் வரமுடியுமா? அது மட்டும் அல்ல, ஏன் மருதர், உடுப்பில்லாமல் ஓடித் திரிந்தார் என நாலு பேர் வேலை மினக்கெட்டு, ஆய்வு செய்ய வேண்டும்.
 
சவால். $1பில்லியன்.
 
உங்கள் வழியிலேயே வருகின்றேன். இந்த பேமானி பிள்ளையார் கதை எல்லாம் விடுவோம்.
 
உங்களால், உலகளாவிய ரீதியல் ஒரே நாளில், இந்த பால் அடிக்கும் சுத்து மாதத்தினை 'organise' பண்ண முடியுமா?
 
அதுவும் ஒரு குறித்த சிலைகள் மட்டும். கருங்கல் மலைகள், வேறு கருங்கல் சிலைகள் பால் வேண்டும் எண்டு வாய் திறக்கக் கூடாது. மேலும் எல்லா சுத்து மாத்தும் 24 மணிநேரத்தில் முடிய வேண்டும்.
 
மூட நம்பிக்கை வேறு. அதே மூட நம்பிக்கையின் பெயரில், சில ஆய்வுக்கு உரிய விடயங்களை புறம் தள்ளுவது வேறு.
 
அவர்கள் ஆய்வு செய்தனர். நம்மில் சிலர் புறக்கனிக்கின்றோம்.
 
மீண்டும் கேட்கின்றேன். முடிந்தால் விஞ்ஞான விளக்கம் தர பாருங்கள். இல்லாவிடில் எவ்வாறு இப்படி சுத்த முடியும் என சொல்லுங்கள்.

Edited by Nathamuni

மதம் என்பது என்ன புரிஜாமலே பலர் மதபிடித்து கதைப்பதை காண்கிறோம்

மதம் என்பது வேறு கடவுள் என்று பலர் நம்புவது வேறு

இதை புரிந்ந்து கொள்ள

சற்று அறிவு தேவை கடவுள் பூமிக்கு வந்தார் வாழ்ந்தார் என்று இந்துமதம்

சொலுகிறது என்று ஆனால் மற்ற மதங்கள் கடவுளினின் அறிவுறுத்தல்களை

மக்களுக்கு சொனவர்கள் (தூதர்கள் ) என்கின்றன

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆராய்ச்சியாளர்கள் அப்படி ஒருவரும் இல்ல

அறிவிலும் விஞ்ஜானத்திலும் வளர்ச்சியடைந்த ஒரு உஜிரினம் வேருகிரகத்திளிருந்து

இங்கு வந்து போகிருக்கிறார்கள் அவர்களின் அறிவின் வளர்ச்சியைத்தான் இங்கு காட்டுவிலங்குபோல் வாழ்ந்த இந்த மனிதனுக்கு பல அறிவு சார்ந்த வாழ்க்கை

முறைகளை ஒரு சிலர் மூலம் சொலியிருகிறரர்கள் அப்படி வந்தவர் களை அறிவு குறைந்த மனிதஇனம் கடவுள் என்று சொல்ல ஆரம்பித்தது இன்றும் இந்தியா போன்ற

நாடுகளில் பல பின்தங்கிய கிராமங்களில் படியாத மக்கள் அதிகாரம் படைத்தவர்களை

கடவுள் போல்தானே நடத்துகிறார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்???

 

 

அதைத்தான் நானும் கேட்கின்றேன், மருதர்,
 
நான் கேட்பது விஞ்ஞான விளக்கம். நீங்கள் எங்கோ போகின்றீர்கள்.
 
தண்ணி அடிக்கிறியளோ, பால் அடிக்கிறியளோ, உங்களால் முடிந்தால் உங்கள் சிட்டியில், உடைகள் இன்றி ஓடி திரிந்து, newsworthy ஆகி பிரதான TV main news ல் வரமுடியுமா? அது மட்டும் அல்ல, ஏன் மருதர், உடுப்பில்லாமல் ஓடித் திரிந்தார் என நாலு பேர் வேலை மினக்கெட்டு, ஆய்வு செய்ய வேண்டும்.
 
சவால். $1பில்லியன்.
 
உங்கள் வழியிலேயே வருகின்றேன். இந்த பேமானி பிள்ளையார் கதை எல்லாம் விடுவோம்.
 
உங்களால், உலகளாவிய ரீதியல் ஒரே நாளில், இந்த பால் அடிக்கும் சுத்து மாதத்தினை 'organise' பண்ண முடியுமா?
 
அதுவும் ஒரு குறித்த சிலைகள் மட்டும். கருங்கல் மலைகள், வேறு கருங்கல் சிலைகள் பால் வேண்டும் எண்டு வாய் திறக்கக் கூடாது. மேலும் எல்லா சுத்து மாத்தும் 24 மணிநேரத்தில் முடிய வேண்டும்.
 
மூட நம்பிக்கை வேறு. அதே மூட நம்பிக்கையின் பெயரில், சில ஆய்வுக்கு உரிய விடயங்களை புறம் தள்ளுவது வேறு.
 
அவர்கள் ஆய்வு செய்தனர். நம்மில் சிலர் புறக்கனிக்கின்றோம்.
 
மீண்டும் கேட்கின்றேன். முடிந்தால் விஞ்ஞான விளக்கம் தர பாருங்கள். இல்லாவிடில் எவ்வாறு இப்படி சுத்த முடியும் என சொல்லுங்கள்.

உலகம் முழுக்க பிள்ளையாருக்கு பால் கொடுத்தார்கள் என்ற உண்மையை.

உலகம் முழுக்க பிள்ளையார் பால் குடித்தார் என்று திரித்துவிட்டு . அதை ஆய்வுக்கு உட்படுத்துங்கள் என்றால். அப்படி எந்த வேலையும் இல்லாத ஒருவனை நாம் முதலில் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

இல்லையேல் வரிசை கட்டி பிள்ளையாருக்கு பால் பருக்கியவர்கள் அளவிற்கு இறங்கவேண்டும். அந்த இறங்கு நிலையில் இருந்து கொண்டு ஆய்வதற்கு என்ன இருக்கபோகிறது?

 

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று செய்தி பரவியதும்.... ஏற்கனவே பிள்ளையாரை வைத்து அங்காங்கே கோவில் கட்டி வியாபாரம் செய்தவர்கள். தமது வியாபார நிறுவனத்திலும் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று விளம்பரம் செய்தார்கள். வியாபாரிகள் விளம்பரம் செய்வதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? வியாபாரிகளின் தந்திரங்களில் ஏற்கனவே ஏமாந்த கூட்டம் வரிசை கட்டி சென்று பால் பருக்கியது பிள்ளையாருக்கு ஊற்றிய அவளவு பாலும் கொஞ்சம் சுத்தி கட்டிய சிலைகில் ஊற மீதி கீழே ஓடியது அதை கண்ணால் கண்டுகொண்டும் பிள்ளையார் பால்குடிக்கிறார். என்று சொல்லுவோருக்கு இல்லை இலை என்று உண்மையை சொல்ல மனிதர்களால் முடியுமா?

 

செவ்வாயில் தண்ணி நிற்குதாம் என்று நாசா காரன் ஓடி திரியிறான் அது முடிய இந்த பால் குடி பற்றிதான் அடுத்த ராக்கெட் அனுப்புவான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் யேர்மனியில் இருந்தபோதுதான் இந்தப் பால் குடிக்கும் கதை விட்டார்கள். நான் சாதாரணமாகக் கோவிலுக்குச் செல்வதில்லை. புதினம் அறியச் சென்றேன்.

முதலில் கணவர் கொடுத்தார். நான் எட்டிப் பார்த்தேன். உறிஞ்சுவதுபோல் இருந்தது. திரும்ப நான் கொடுத்தபோதும் உறிஞ்சுவதுபோல் இருந்தாலும் வெளியே

வழிவதைக் கவனித்துவிட்டேன். கொஞ்ச நேரம் அந்த இடத்தில் நின்று பார்ப்போம் என்றால் அவர்கள் என்னை விடவில்லை. பார்க்காமல் போவதில்லைஎன்று கங்கணம் கட்டிக்கொண்டு என் 5 வயது மகளைக் கூட்டிப்போய் மகள் பால் பருக்க வேண்டும் பிள்ளையாருக்கு என்று அழுகிறார் என்றேன். என்னை ஒரு மாதிரிப்

பார்த்துவிட்டு கெதியாக் குடுத்துவிட்டு போங்கோ என்றனர் இம்முறை அக்கம் பக்கம் எல்லாம் வடிவாக ஆராய்ந்தேன். பெரிய துணிகள் போட்டிருந்தனர் பிள்ளையாரைச் சுற்றி அவை எல்லாம் நனைந்து சுற்றிவரப்  பாலாறு. மகள் கொடுக்க நான் வடிவாப் பார்த்தேன். என்னை அவர்கள் வெளியே கலைக்காத குறை.

 

பார்த்தவர்கள் பலருக்கு விளங்கியிருந்தாலும் பயத்தில் வெளியே சொல்ல மாட்டார்கள்.பலர் பக்தி முத்தியதால் அக்கம் பக்கமே பாக்கமாட்டார்கள் என்பதனால்

எப்படியெல்லாம் மனிதர்களே மனிதர்களை ஏமாற்றுகின்றனர் என எண்ணி வேதனைப்படத்தான் முடிந்தது.

பிள்ளையார், மான நஷ்ட வழக்குப் போடுவதற்காக, சுமோவைத் தேடுகிறார் எண்டு எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்! :o

 

உங்கள் மின்னஞ்சலும், உங்கட யாழ் களப் பேர் மாதிரித் தான் நீளமாய் இருக்காம்! அது தான் என்னைத்தேடிப் பிடிச்சிருக்கிறார்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.