Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு டெசோ அமைப்பு சென்றதால் தள்ளுமுள்ளு கைகலப்பு. [ Video & Photo ]

Featured Replies

மாணவர்கள் உண்ணாவிரத  மேடைக்கு டெசோ அமைப்பு  சென்றதால் தள்ளுமுள்ளு கைகலப்பு. [ Video & Photo ]

hot_1.JPGஇலங்கை

இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது

வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும்

காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக தொடர்கிறது   இன்று சற்று சோர்வடைந்த

நிலையில் மாணவர்கள் உள்ளனர்.

இன்று பல்லயிரக்கனக்கான மக்கள்

மாணவர்கள் , தொழில்சங்கங்கள்   அங்கு சென்று தங்கள் ஆதரவினை தெரிவித்து

கொண்டுள்ளனர் . மேலும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.

ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர்

ஆர். நல்லகண்ணு ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின்

துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் , காந்திய மக்கள் இயக்க தமிழருவி

மணியன் , இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் அங்கு  சென்று ஆதரவுகளை

தெரிவித்துள்ளனர் .

இதனை அடுத்து  டெசோ அமைப்பின் உறுபினர்களான 

விடுதலை சிறுத்தைகள் , திருமாவளவன் , வன்னி அரசு ,சு.ப .வீரபாண்டியன்

,திமுக இளங்கோவன்  மற்றும் உறுப்பினர்கள் அங்கு சென்றனர்.

 மாணவர்கள்

இருக்கும் மேடைக்கு சென்ற   சு.ப .வீரபாண்டியன் அவர்கள் மாணவர்களிடத்தில் 

கேரிக்கையை மாற்றி அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் . இதனை அறிந்த

உணர்வாளர்கள் கோசங்களை எழுப்பினர் .

இந்தியாவின் கை கூலிகளே வெளியேறு , தமிழ் இனத் துரோகிகளே  வெளியேறு , சோனியாவின் கைபொம்மைகளே வெளியேறு என்று  கோசங்களை எழுப்பினர்.

இதனால்

ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தை மற்றும் திமுக வினர் யினர் அங்கிருந்த

உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடிக்கச்   சென்றதால்  கைகலப்பு

ஏற்பட்டது .

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13263:dmk-vck&catid=36:tamilnadu&Itemid=102

 

 

 

hotnews.JPG

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், சின்னவன்!

 

டெசொவின் உண்மையான முகமூடி  இந்த மாணவர்களின் போராட்டத்தின் மூலம் கிழித்தெறியப் பட்டுள்ளது!

 

போராட்டத்தை தொடரும் மாணவர்களுக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் உண்ணாவிரத இடத்திற்கு சென்று, கோரிக்கையை மாற்றியமைக்குமாறு கூற, டெசோ அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை. நிச்சயமாக... அங்கு சென்று கைகலப்பை ஏற்படுத்தி, அவர்களின் உண்ணாவிரதத்தை குழப்பவே முயற்சி செய்துள்ளார்கள் என நினைக்கத் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களின் போராட்டங்களுக்கு பின்னால் எப்பொழுதும் வலுவான கட்சிகள், இயக்கங்கள் இருந்து வந்தன. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் திமுக, திக போன்றவைகள் மாணவர்களோடு நின்றன. இன்றைக்கு இவர்கள் தனியாக நிற்கிறார்கள் போல் இருக்கிறது. எல்லோரும் வந்து வாழ்த்தி விட்டு போகின்றார்களே தவிர, அதைத் தாண்டி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை.

இந்த நேரத்தில் பலம் மிக்க டெசோ போன்ற அமைப்புக்களுடன் மாணவர்களை சிலர் முரண்பட வைப்பது நல்லதாக படவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை தொடரும் மாணவர்களுக்கு நன்றிகள்

மாணவர் போராடினால் நிட்சயம் மாற்றம் வரும் உங்கள் போராடம் தொடரட்டும் .வாழ்த்துக்கள் .

601417_572346959450225_646784244_n.jpg

  • தொடங்கியவர்

பலம் மிக்க டெசோ  அமைப்பு : சபேசன் அவர்களின்  நல்ல  நகைச்சுவை .
100 க்கும் 150க்கும் ஆக்கள சேர்த்தல் 

பலம் மிக்க அமைப்பை உருவாக்கலாம்.

தற்பொழுது நடக்கும் போராட்டங்களில் மிக அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்ட போராட்டம் டெசோவின் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்மே என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டு நிலைமையை ஈழத் தமிழர்களின் ஊடகங்களினால் மட்டுமே அறிந்து கொண்டால் சில உண்மைகள் நகைச்சுவைகளாகத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள்
இருக்கும் மேடைக்கு சென்ற சு.ப .வீரபாண்டியன் அவர்கள் மாணவர்களிடத்தில்
கேரிக்கையை மாற்றி அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் . இதனை அறிந்த
உணர்வாளர்கள் கோசங்களை எழுப்பினர் .

இந்தியாவின் கை கூலிகளே வெளியேறு , தமிழ் இனத் துரோகிகளே வெளியேறு , சோனியாவின் கைபொம்மைகளே வெளியேறு என்று கோசங்களை எழுப்பினர்.

இதனால்
ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தை மற்றும் திமுக வினர் யினர் அங்கிருந்த
உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடிக்கச் சென்றதால் கைகலப்பு
ஏற்பட்டது .

 

 

 

........................................
 

சரியான நேரத்தில் சொல்லப் பட்ட வார்த்தைகள்...
குள்ள நரிக் கூட்டதை வெளிச்சம் போட்டு காட்டனும்...



 

தற்பொழுது நடக்கும் போராட்டங்களில் மிக அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்ட போராட்டம் டெசோவின் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்மே என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டு நிலைமையை ஈழத் தமிழர்களின் ஊடகங்களினால் மட்டுமே அறிந்து கொண்டால் சில உண்மைகள் நகைச்சுவைகளாகத்தான் தெரியும்.

 

தவறா எடுக்காதீங்க. போன சட்டமன்ற தேர்தலில் வடிவேலு சென்ற இடமெல்லாம் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தார்கள் ஆனால் ...... ?

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் யார் பலமானவர்கள் என்கின்ற கேள்வி இங்கே இல்லை. தமிழ்நாட்டிலே இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கான அமைப்புக்களில் பலம் மிக்கதாக டெசோ திகழ்வதை யாரும் மறுக்க முடியாது.

ஜெயலலிதாவால் டெசோவுக்கு போட்டியாக மேலும் ஒரு பலமான அமைப்பை உருவாக்க முடியும். மதிமு, இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் போன்ற அமைப்புக்களை உள்ளடக்கியதாக மேலும் பலமாக உருவாக்கலாம்.

ஆனால் அப்படி ஒன்றை அதிமுக உருவாக்குமா என்பது சரியாக தெரியவில்லை. அதற்கான அழுத்தங்களோ, ஏக்கங்களோ அதிமுக தொண்டர்களிடம் இருக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு.

மத்த கட்சிக்காரங்க ஆதரிக்குறாங்க இல்லைன்னா ஓரமா ஒதுங்கி நின்னு வேடிக்கைப் பாக்குறாங்க, ஆனா இந்த ஒடம்பொறப்பு கோஷ்டியும் காக்கி டவுசர் கோஷ்டியும் ஒன்னா நின்னு மாணவர்கள் போராட்டத்த கிண்டல் அடிக்குது.

#நீங்க ரெண்டு குரூப்பும்... அப்படியே நிக்கணும், அது தான் எங்களுக்கு வேணும்.

 
சற்றுமுன் லயோலா மாணவர்களின் உண்ணாவிரத பந்தலுக்கு வர முயன்ற கையாலாகாத காங்கிரஸ் தொங்கபாலுவும் வாசனும் செருப்படியோடு விரட்டியடிப்பு -- நன்றி மாணவர்களுக்கு

Thangabalu and GK Vasan sent out by students !! Hail the students power #LoyolaHungerStrike

 
மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதால் டெசோ பீஸ்களுக்கு பீஸ் கழந்து விட்டது போல் இருக்கு.. 

எதற்கெடுத்தாலும் வைகோ, சீமான் என்று உளறி கொண்டிருக்கிறார்கள்...

 
  அங்கு சாப்பிடாமல் இருப்பது மாணவர்கள் ...

அனால் வயித்தெறிச்சல் என்னவோ திமுகவுக்குதான்...

ஜெலஸில் குடிங்க சோனியாவின் சொம்புகளே...!!!

 

  இப்போது லயோலா மாணவர்கள் உண்ணாவிரத பந்தலுக்கு வெளியே தங்கபாலுவும் வாசனும் உள்ளே வர அனுமதி கேட்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளது ,இந்த பன்றிகளை உள்ளேவிட வேண்டாம் என்று தோழர்களுக்கு செய்தி அனுப்புங்கள் போராட்ட களம் அருகே இருப்பவர்கள் உடனடியாக தெரிவிக்கவும்.

 

  மத்திய அரசில் இருந்து வெளியே வாருங்கள். அப்புறம் பார்க்கலாம். Khaja Mohideen 
  •   இப்போ எல்லார் மனசுலயும்.. நாமும் அந்த போராட்டத்துல கலந்துக்கனும்னு ஒரு உறுதி நிச்சயமா இருக்கும்..!! ஆனா நாம இருக்குற ஊரு.. குடும்ப சூழல்.. பணி நிமித்தம் இப்படி நிறைய பிரச்சனைகள் நம்ம தடுக்குது..!! 

    ## ஆனா இதெல்லாத்தையும் மீறி நாம எல்லாரும் சேர்ந்து போராடினா.. இந்த அரசியல்வாதிகள் எல்லாம் நடுத்தெருவுக்கு தான் வரணும்..!! 

    ## ஒரு நாள் நிச்சயம் அதுவும் நடக்கும்..!! 

    Good Evening FB :-))

  • தொடங்கியவர்

சபேசன் அவர்களே தவறு : இலங்கை துதரகம் வள்ளுவர்  கோட்டத்தில் அல்ல அது நுங்கபகத்தில் இருக்கிறது. அவர்கள் இலங்கை துதரகத்தை முற்றுகை இடவில்லை. வள்ளுவர் கோட்டத்தை  முற்றுகை இட்டனர்.



டெசோ அமைப்புதான் இண்டைக்கு தனி ஈழ வாக்கு
எடுப்பு தீர்மானத்தை மற்ற சொல்லி மாணவர்களுக்கு சொல்லுகினை .

Edited by chinnavan

இதுவரை நடந்த அனைத்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டத்தைப் போன்றே டெசோவின் போராட்டமும் நடந்தது. தூதரகம் இருப்பதற்கு பல மைல்கள் முன்னமேயே கைதாகி மண்டபத்தில் அடைக்கப்படுவதுதான் முற்றுகைப் போராட்டம். நாங்கள் இங்கே பெல்ஜியத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்னாலும், ஜெனிவாவில் ஐநா சபை முன்னாலும் போராட்டம் நடத்துவது போன்றதுதான் அதுவும்.

இது நிற்க.. இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கின்ற ஒரு மாணவரின் வீட்டிற்கு சென்று காவல்துறை மிரட்டியதாக செய்தி வந்திருக்கிறது. யார் ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டு அரசு இப்படியான போராட்டங்களை ஒரே மாதிரியே எதிர்கொள்ளும்.

இதற்காகவே டெசோ போன்ற அமைப்புக்களோடு மாணவர்கள் முரண்படுவதையோ, முரண்படத் தூண்டுவதையோ தவறான அணுகுமுறை என்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU&feature=player_embedded

டெசோ கூட்டத்துக்கு ஆதரவாய் கதைக்கிற ஆக்கள் இந்த காணொளியை பாக்கவும்....உந்த கூட்டம் அப்ப மனசு வைச்சு இருந்த முள்ளி வாய்க்கால் அவலம் நடந்து இருக்க வாய்ப்பே இல்லை...இம்மட்டு மக்கள் அழிவுக்கும் காரனமாய் இருந்துட்டு..போன தேர்தலில் தோல்வி அடைஞ்ச கூட்டம் இந்த முறை ஈழ மக்களுக்கு நல்லது செய்யிர போல நடிக்குதுவல்...என்ன சின்னக் கவலை இவளவும் நடந்தும் அவன் எப்படி பட்டவன் என்று ஒரு சிலதுவலுக்கு இன்னும் புரிய வில்லை...கருணாநிதி அல்லது அவர்களின் பிள்ளைகள் யார் என்ன தான் செய்தாலும் அவர்கள் மேல் நம்பிக்கை வைக்கும் அலவுக்கு ஈழ தமிழர்கள் இல்லை...தமிழ் நாட்டு தமிழர்கலும் முள்ளி வாய்க்கால் அவல காணொலியை பார்த்து கலைஞர் ஜயா ஆட்ச்சியில் இருக்கும் போது தானே இவளவும் நடந்து இருக்கு என்று இப்ப தெரிந்து கொள்ளுவினம்....ஒரு இனம் அங்கை அழிய தமிழ் நாடு பொங்கி எழ சொனியாட கை பொம்மையாய் இருந்த கலைஞர் தானே அந்த மக்கள் புரட்ச்சியை அண்டைக்கு காவல்துறையை வைத்து அடக்கினார்

இங்கே இருக்கின்ற பலர் கலைஞரை சரியாக புரிந்து கொள்வதற்கு முன்னமேயே அவரை புரிந்து கொண்டு எச்சரித்தவர்களில் ஒருவன் என்கின்ற முறையில் இந்தக் காணொளியை பார்கக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இன்றைக்கு யாருடைய பழைய வரலாறுகளையும் பேசிக் கொண்டிருக்க முடியாது. போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதாவையும், மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று சொன்ன கலைஞரையும் மட்டும் நான் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இன்றைக்கு இவர்களால் எமக்கு என்ன ஆக முடியும் என்பது மட்டுமே நாம் சிந்திக்க வேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தை எக்காரணங்கொண்டும் கலைஞரிடமோ, அவரின் கட்சியிடமோ, டெசோவிடமோ ஒப்படைத்துவிடக் கூடாது.. காங்கிரஸ் அரசை மிரட்டும் ஒரு உத்தியாகத்தான் கலைஞர் இதைப் பார்க்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து திமுகவை காங்கிரஸ் தனது கைப்பாவையாக உபயோகிக்கும் சாத்தியப்பாட்டைக் குறைக்கிறார்.

 

இதற்கு ஒரு போராட்டம் பலியாகவேண்டியதில்லை..

 

நாளையே கலைஞர் அல்கைடாவுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்துக்கு எதிரே ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் என்றால்கூட ஐம்பதாயிரத்துக்குக் குறையாத உடன்பிறப்புகள் வந்து கூடுவார்கள்..! :D

Edited by இசைக்கலைஞன்

சபேசன் : இன்றைக்கு இவர்களால் எமக்கு என்ன ஆக முடியும் என்பது மட்டுமே நாம் சிந்திக்க வேண்டியது

 

இவர்களால் நமக்கு ஒன்றும் கிடைக்கபோவது இல்லை. கடந்த காலங்களை கொஞ்சம் சற்று உற்று நோக்குங்கள் ( கலைஞர் தமிழினத்திற்கு செய்த துரோகத்தைத தவிர்த்து ) கலைஞர் என்ன வீர வசனம் இங்கு பேசினாலும் அடுத்த நாளே காங்கிரெஸ் மேலிட பார்வையாளர் ன்னு ஒருத்தர் வருவார் இல்ல யாராச்சும் ஒருத்தர் வருவார் உடனே தலைவர் தன்னோட வீரவசனத்த அப்படியே திருப்பி போடுவார் அதுதான் 2009 லிருந்து இன்றுவரை நடக்கிறது. இப்படிப்பட்டவரால் நமக்கு என்னவாகப்போகிறது. 2009 ல் மக்கள் அரசியல் வாதிகளைத்தான் இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு நம்பியிருந்தனர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி தமது பிரச்சனைகளுக்கு தாமே போராட முன் வந்திருப்பது பிரகாசமான எதிர்காலத்தை காட்டுகிறது. பிரச்சனை கைமீறிப்போவதை உணர்ந்த கலைஞர் இப்போது தங்கள் சாணக்கிய அரசியலை திரும்ப கையிலேடுத்திருக்கிறார்கள்.

திமுக தொண்டர்களின் ஈழ ஆதரவு என்பது வெறும் கலைஞர் சார்ந்து வருவது இல்லை. அவர் வாய்மூடி இருந்த காலங்களிலும் அவர்கள் ஆதரவாகத்தான் இருந்தார்கள். மற்றைய அமைப்புக்கள் செய்த ஈழ ஆதரவு போராட்டங்களிலும் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இன்றைக்கு தங்களின் தலைவரே ஈழத்திற்கு ஆதரவாக போராட அழைக்கின்றார் என்றதும் மிக உற்சாகமாக புலிக் கொடிகளை எல்லாம் கொண்டு வந்து போராடுகிறார்கள்.

கலைஞருக்கு ஈழத்தின் மீது ஆதரவும் பற்றும் இருக்கிறதோ இல்லையோ, தன்னுடைய தொண்டர்களிடம் அதை சரியாகவே வளர்த்து விட்டிருக்கிறார்.

  • தொடங்கியவர்

வடிவேல் நகைசுவை மாதிரி எலோரும் அவர் எழுதிறதை பார்த்து வாய்விட்டு சிரியுங்கோ ,
தமிழ்
நாட்டில மக்களும் இப்படிதான் கருணாநிதி என்ன சொன்னாலும் அப்படியே என்று
கேட்டு கொண்டு இருகினை இனி கருணாநிதி க்கு ஆமா போடுறவை என்ன சொனாலும் சரி
என்று கேளுங்கோ அத்துடன் நாட்டுக்கு நல்லது,

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டர்கள் சொல்கேட்கும் கட்சியல்ல திமுக.. தலைவரின் சொல்கேட்கும் தொண்டர்கள் உள்ள கட்சிதான் அது.. தலைவர் போலி என்றால் பிறகு அங்கு வேறு எதற்கும் வேலையில்லை..

 

திமுகவிலும் பல உணர்வாளர்கள் இருக்கிறார்கள்..! தங்கள் தலைவர் போலியாகத்தன்னும் ஏதாவது சொல்லிவிடமாட்டாரா என்று ஏங்குகிறார்கள்..! ஆனால் தலைமை போலியானது.. சுயநலம் மிக்கது..

 

நாளையே சிங்கள அரசைப் பாதுகாக்கும் அறிக்கை வரலாம், சூழ்நிலை மாறும் பட்சத்தில்.. அப்போது எல்லாமே கேலிக்கூத்தாகிவிடும்..

 திமுக தொண்டர்களின் ஈழ ஆதரவு என்பது வெறும் கலைஞர் சார்ந்து வருவது இல்லை.

அவர் வாய்மூடி இருந்த காலங்களிலும் அவர்கள் ஆதரவாகத்தான் இருந்தார்கள்.

மற்றைய அமைப்புக்கள் செய்த ஈழ ஆதரவு போராட்டங்களிலும் அவர்கள் கலந்து

கொண்டார்கள்

 

இக்கருத்தை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அது ஒரு கனாக்காலம். இன்று அவர்களின் நிலை அப்படி இல்லவே இல்லை :P தலைவர் அடிக்கும் பல்டிகெல்லாம் இவர்களும் பதில் பல்டி அடிக்கவேண்டிய சூழ்நிலை. 

  • தொடங்கியவர்

ஒரு கை தாட்டின சாத்தம் வரும் என்று நினைக்கிறார் போல   தட்டட்டும்.
தனி மரம் தோப்பாகாது என்று சொல்லுவினை இவர் தனி மரம்
தோப்பாகும் என்று சொலுரர் கேளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணா..உங்களின் கருத்துடன் எனக்கு உடன் பாடு இல்லை....இந்த கயவர் கூட்டத்தை பற்றி எழுதுறது என்றால் நிறைய எழுதாலாம்....அப்படி எழுதினால் கடசியில் நீங்களும் நானும் தான் சண்டைபிடிக்க வேண்டி வரும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.